நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
என்னென்ன தேவை? வாழைப்பூ - (ஆய்ந்து சுத்தம் செய்து நரம்பு நீக்கியது) - 1 கப், சாம்பார் வெங்காயம் - அரை கிலோ, தக்காளி - அரை கிலோ, புளி - ஒரு எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - 4 டீஸ்பூன். தாளிப்பதற்கு... எண்ணெய் - கால் கப், பட்டை - 3, கிராம்பு - 3, மராட்டி மொக்கு - 2, அன்னாசிப்பூ - 1, கடுகு - 1 டீஸ்பூன், சோம்பு- 1 டீஸ்பூன். எண்ணெயில் வறுத்து அரைக்க... கசகசா - 1 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - அரை கப், தேங்காய் - 1 மூடி (துருவியது), சோம்பு- 1 டீஸ்பூன், அனைத்தையும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சியுடன் 8 பல் பூண்டு சேர்த்து…
-
- 0 replies
- 704 views
-
-
நான் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கப்போகும் போது ....... கடையில் அரிசி மா என்று நினைத்து , ஐந்து கிலோ ஆட்டா மாவை தெரியாத்தனமாக வாங்கிவிட்டேன் . அதனை வீட்டிற்கு கொண்டுவந்தவுடன் ....... என்ரை மனிசி அதனை பார்த்து , அது அரிசி மா இல்லை , ஆட்டா மா என்று கண்டு பிடித்து விட்டா ..... எங்களுக்கு முன் , பின் ஆட்டாமாவில் சமைத்து பழக்கம் இல்லை . அதன் பெறுமதி குறைவு என்றாலும் உணவுப் பொருட்களை வீணாக்க விரும்பாத கொள்கை உடையவர்கள் நாங்கள் . அதனை வாங்கிய கடையில் திருப்பிக் கொடுக்கலாம் என்றால் ......, வாங்கிய உணவுப் பொருட்களை திரும்ப எடுக்க கூடாதென்பது கடையின் சட்டம் . இப்போ பிரச்சினை என்னவென்றால் ......... அரிசி மாவுக்கும் , ஆட்டா மாவுக்கும் வித்தியாசம் தெரியா…
-
- 67 replies
- 34.6k views
-
-
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வெங்காய பாகற்காய் பொரியல் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய், வெங்காயம் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு உளுந்து சீரகம் கடலைபருப்பு கறிவேப்பிலை வரவிளகாய் - 7 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாகற்காயின் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கி விட்டு நீரில் சுத்தம் செய்த உடனேயே உப்பு சேர்த்து மூடி வை…
-
- 0 replies
- 1.7k views
-
-
பருத்தித்துறை வடை . இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் . தேவையான பொருட்கள்: கோதுமை மா 1 கிலோ . *****உளுத்தம்பருப்பு 500 கிறாம் . உப்பு 2 மேசைக்கறண்டி . பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி . மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) . கறிவேப்பமிலை 30 - 35 இலை . எண்ணை ஒரு போத்தில் . பக்குவம் : உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன…
-
- 42 replies
- 5.2k views
-
-
மட்டர் பூரி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோதுமை - 2 கப் ரவை – 1 கரண்டி ப.பட்டாணி – 1 கப் கொத்தமல்லி தழை – கொஞ்சம் உப்பு – தேவைக்கேற்ப ஓமம்– 1 கரண்டி பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – ஒரு சிறு துண்டு எண்ணெய் – பொரிக்க செய்முறை : பச்சைப்பட்டாணி, ஓமம், இஞ்சி, கொத்தமல்லி தழை, பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வேண்டும். மைதா/கோதுமை மாவினை தேவையான உப்பு, இரண்டு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி ரவை [பூரி மொறுமொறுவென இருக்க] ஆகியவற்றை தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு பிசைந்து கொள்ளவும். அரைத்து வைத்த விழுதினை மாவிலேயே போட…
-
- 4 replies
- 1k views
-
-
மட்டன் முகலாய் மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ எண்ணெய் - 4 மேசைக்கரண்டி நெய் - 4 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி வெங்காயம் - 250 - 400 கிராம் பச்சை மிளகாய் - 3 காஷ்மீரி சில்லி - 4 - 5 பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 3 மல்லி - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தயிர் - ஒரு கப் புதினா, கொத்தமல்லித் தழை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்யும் முறை : தேவையான பொருட்கள…
-
- 2 replies
- 689 views
-
-
நண்டு தொக்கு மசாலா விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், நன்கு கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றையும் ருசித்துப் பாருங்கள். எனவே இந்த வாரம் நீங்கள் நண்டு தொக்கு மசாலாவை செய்து சுவைத்து மகிழுங்கள். இங்கு நண்டு தொக்கு மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நண்டு - 5-6 (பெரியது) வெங்காயம் - 1 தக்காளி - 2 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை தாளிப்பதற்கு... நல்லெண்ணெய் - 1 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது …
-
- 0 replies
- 2.1k views
-
-
ஆந்திர மசாலா மீன் குழம்பு என்னென்ன தேவை? மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/2 கப் கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு தக்காளி - 1 மல்லி தூள் - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எப்படி செய்வது? ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு பொறிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு…
-
- 1 reply
- 776 views
-
-
அதிசய உணவுகள் 7 - புழுக்களைத் தின்னும் பழங்குடியினர்! ’யனோமாமி’ பழங்குடியினருடன் சாந்தகுமாரி குடும்பத்தினர். ’யனோமாமி’ பழங்குடியினரின் கலை நிகழ்ச்சி. ‘நாங்கள் எங்கள் சுற்றுச்சூழலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல; அது எங்களை உருவாக்குகிறது. நாங்கள் அதை உருவாக்குகிறோம்!’ - யனோமாமி அமேசான் காடுகளில் வாழ்கிற பழங்குடிகள்தான் இந்த ‘யனோ மாமி’ இனத்தவர்கள். அவர்கள் காடுகள் கொடுப்பதை உண்டு, அவற்றை அழிக்காமல் வாழும் தேவதைகள். வெனி சுலா, பிரேசில் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் அமேசான் காட்டுப் பகுதிகளில் இருநூ…
-
- 0 replies
- 1k views
-
-
வாழையிலை மசாலா மீன் கேரள உணவான வாழையிலை மசாலா மீனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு புளி - கொட்டைப்பாக்கு அளவு தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு வாழை இலை - 2 துண்டுகள் செய்முறை: * மீனை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து …
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
மருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு! கட்டுரை, படங்கள்: கே.குணசீலன் இன்று பலரும் தங்கள் சமையலறையை மாடுலர் கிச்சன் என்ற பெயரில் பிரமாண்டமாக வடிவமைக்கிறார்கள். ஆனாலும்கூட, மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகளுக்கு மவுசு கூடிக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், விறகு அடுப்பில் மண்பானை, மண்சட்டி வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் எல்லையற்ற சுவையுடன் இருப்பதுடன், ஆரோக்கியத் தையும் அள்ளிக்கொடுப்பது தான். தஞ்சாவூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நடுவூர் கிராமம். விவசாயம்தான் முக்கியத் தொழில். ‘`வாங்க வாங்க...’’ என்று கிராமத்து நேசத்துடன் வாய்நிறைய வரவேற்கிறார் அறுபது வயதாகும் மலர்க்கொடி. ‘`எங்க காலத்துல சமைக்கிறதுக்கு ஸ்டவ், காஸ் …
-
- 0 replies
- 1.7k views
-
-
சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் பக்கோடா வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு மட்டன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் மட்டன் - 200 கிராம் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - தேவைக்கு ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு, …
-
- 2 replies
- 738 views
-
-
-
- 16 replies
- 7.6k views
-
-
முருங்கைக்காய் குழம்பு யாழ்ப்பாண முறையில்
-
- 0 replies
- 976 views
-
-
முக்கிய குறிப்பு: இது என்னால் இணைக்கப்படுகிறதே தவிர இந்தச் சமையல் முறைக்கு நான் பொறுப்பல்ல!! தேவையன பொருட்கள் வெள்ளை ரவை - 500 கிராம் பெரிய வெங்காயம் - 3 கேரட் - 1 இஞ்சி - சிறிதளவு பச்சைமிளகாய் - 4 கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு எண்ணெய் – தேவையான அளவு நெய் - 3 தேக்கரண்டி தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை தாச்சியில் சிறிது நெய் விட்டு ரவையை குறைந்த சூட்டில் சாதுவாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளப்பாடாக வெட்டிக் கொள்ளவும். கரட்டை தூள்களாக வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளப்பாடாக இரண்டாக வெட்டி அதனை 2 – 3 துண்டுகளா வெட்டிக்…
-
- 0 replies
- 855 views
-
-
நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM 2 மார்ச் 2024 முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது. அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன. அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்ப…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
உழுந்துமா பிடிக்கொழுக்கட்டை தேவையான பொருட்கள் வறுத்த அரிசிமா – 1 கப் வறுத்த உழுந்துமா – ½ கப் வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன் வெல்லம் – ¼ கப் வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் – ¼ கப் உப்பு சிறிதளவு செய்முறை பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள். மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள். மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள். ஸ்டீமர் அல்லது இட்…
-
- 1 reply
- 746 views
-
-
தேவையான பொருட்கள் ; ஏதாவது ஆற்று மீன் அல்லது கடல் மீன் - அரை கிலோ. எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -100 கிராம், பூண்டு - 50 அல்லது 75 கிராம் (சுவைக்கு ஏற்ப) தக்காளி - 200 கிராம், மிளகாய் - 4, மல்லி கருவேப் பிலை -சிறிது, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை ஸ்பூன், சீரகத் தூள் -அரை ஸ்பூன், மல்லித் தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை : வெங்காயம், தக்காளி,பூண்டு நறுக்கி எடுத்து வ…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுமுறை நாளில் வித்தியாசமான சாப்பாட்டை சமைத்து உண்டு மகிழுங்கள்...இதோ உங்களுக்காக யெலோ ரைஸ்[மஞ்சல் சோறு] அதோடு தொட்டுக் கொள்ள கத்தரிக்காய் பாகி,கோழிக்கறி,அவித்த முட்டை செய்யத் தேவையான பொருட்கள்; அரிசி[பாசுமதி] வெங்காயம் கறுவா,ஏலக்காய்.கிராம்பு உள்ளி மஞ்சல் கருவேப்பிலை,றம்பை எண்ணெய் உப்பு வெஜிடபிள் stock அல்லது கோழி stock இனி செய்முறையைப் பார்ப்போம்; பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் விடவும்... சூடானதும் வெட்டிய வெங்காயம்,உள்ளி போட்டு வதக்கவும்...வதங்கி பொன்னிறமாக வந்ததும் வாசனைத் திரவியங்களைப் போடவும் அத்தோடு கருவேப்பிலை,றம்பையை சேர்க்கவும் பின்னர் அரிசியையும்,மஞ்சலையும் போட்டு வெஜிடபிள் அல்லது கோழி அளவாக விட்டு பதமாக எடுக்கவும். இதற்கு தொ…
-
- 2 replies
- 1.6k views
-
-
பாலாகொட்டை துவையல் செய்வது எப்படி என்று சொல்வீர்களா உறவுகளே?
-
- 3 replies
- 938 views
-
-
-
நான் கடந்த வருடம் ஊருக்கு போனபோது, எனது நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி வல்வெட்டிதுறையில் உள்ள ஒரு கொத்து ரொட்டி கடைக்கு இரவு சாப்பிட போனோம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது. மிக சிறிய கடைதான் ஆனாலும் எமக்கு இடம் கிடைக்க ஒரு 20 நிமிடம் காத்து இருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டம். சிக்கன் கொத்து, முட்டை கொத்து மற்றும் மரக்கறி கொத்து மட்டும் தான் கிடைக்கும். வேறு ஒரு சாப்பாடும் இல்லை. இங்கை ஒரு விசேடம் என்னவென்றல், மரக்கறி கொத்து தனி அடுப்பு வைத்துதான் போ…
-
- 29 replies
- 4.6k views
-
-
தினை லாடு (தினம் ஒரு சிறுதானியம்-17) உலகிலேயே அதிகம் பயிரிடப்படுகிற இரண்டாவது வகை தானியம் தினை. இதற்கு இறடி, ஏளல், கங்கு எனப் பல பெயர்கள் உள்ளன. நம் முன்னோர்கள், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை என நம் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட்டு, உடலை திடகாத்திரமாக வைத்திருந்தனர். ஆனால், இன்றோ தவிடு நீக்கி, பாலீஷ் செய்த அரிசியை மட்டுமே சாப்பிட்டுவருவதால், உடலில் போதிய வலுவின்றி, நோய்களுக்கு ஆளாகித் தவிக்கிறோம். தெவிட்டாத தேனும் தினை மாவும் கலந்து செய்யும் இந்த லாடுவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்; ஆரோக்கியம் கூடும். பலன்கள் அதிக அளவு புரதச் சத்து கிடைக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச்சத்துக்கள் நிறைந்தது. தினமும் குழந்த…
-
- 1 reply
- 979 views
-
-
தக்காளி ரசம் தேவையான பொருட்கள்: தக்காளி: 250 கிராம் எண்ணெய்: 2 தேக்கரண்டி கறிவேப்பிலை: ஒரு கொத்து பூண்டு: 4 துண்டு மிளகு: அரை தேக்கரண்டி சீரகம்: அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய்: 3 கடுகு: அரைத் தேக்கரண்டி கொத்துமல்லி இலை: அரை கட்டு ரசப்பொடி: ஒரு தேக்கரண்டி செய்முறை: தக்காளியை நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு, பூண்டு, மிளகாய், சீரகம் ஆகியவற்றை பச்சையாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தக்காளி சாறுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டிவிடவும். பின்பு பாத்திரத்தை…
-
- 5 replies
- 3.5k views
-
-
வேர்க்கடலை வெண் சுண்டல் என்னென்ன தேவை? வேர்க்கடலை - அரை கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் உளுந்து - ஒரு டீஸ்பூன் பெருங்காயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கேரட், குடை மிளகாய்- தலா ஒன்று இஞ்சி - சிறு துண்டு தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? வேர்க்கடலையை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். இதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். ஆறியதும் திறந்து தண்ணீரை வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளியுங்கள். கடுகு போட்டு வறுபட்டதும் உளுந்து, பெருங்காயம் சேர்த்து வறுத்தெடுங்கள். கறிவேப்பிலை, கேரட் துண்டுகள்…
-
- 2 replies
- 601 views
-