நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
`தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி' - 10.03.2014. இன்றைய காலத்தின் தேவை கருதி இது கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்ல நாம் - கைகோர்த்து நீதிகேட்போம் வாரீர்.......! ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபை முன்றல் வரை.... எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கம் வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வாருங்கள் முகப்புப் புத்தகங்களின் ஊடக உலகம் முழுவதும் பகிர்ந்துகொண்டு. மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் . நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வி.ரகுபதி
-
- 0 replies
- 836 views
-
-
நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எழுதப்பட்ட இச்சிறப்புக் கட்டுரை. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் ஆன்மீகக் குறியீடாக பல்வேறு நிலைகளிலும் பார்க்கப்படுகின்ற நல்லூர் குறித்த வரலாற்றுத் தகவல்கள், மற்றும் சமகாலப் பார்வை கொண்டதாக அமைகிறது இச் சிறப்புக் கட்டுரை. கந்தனின் கதையை இசையோடு மேலும் படிக்க http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=340
-
- 1 reply
- 1.6k views
-
-
வியாழக்கிழமை, 7, ஜூலை 2011 (9:18 IST) சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் கூறியதாவது, சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அக்டோபர் 22ம் தேதி முதல் 30ம் தேதிவரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு' சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. "தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்' என்பதே இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பிரிட்டன், மலேசியா, …
-
- 2 replies
- 1.4k views
-
-
தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை! உலக தாய்மொழி தினம் இன்று! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம…
-
- 0 replies
- 1.6k views
-
-
திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு! திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்பாணக் கிளை ஏற்பாட்டில், பேராசிரியர் சுபதினி ரமேஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பரமேஸ்வரா கல்லூரி நூற்றாண்டு வ…
-
- 0 replies
- 473 views
-
-
"பத்து வயதில் பிரகாசிக்கும் எங்கள் நட்சத்திரம், திரெனுக்கு" [18 / 07/ 2025] பத்து அகவையில் காலெடுத்து வைப்பவனே பக்குவமாய் பழகும் பண்பாட்டு நட்சத்திரமே பரந்த இங்கிலாந்தில் பிறந்த திரனே [Dhiran] பந்தாடும் அழகில் பரவசம் அடைகிறேனே! ஆர்சனல் வீரன்போல் ஆட்டத்தில் ஆடுபவனே ஆர்வமாய் பாய்ந்து தடுக்கும் புலியே ஆகாயத்தை ஒளிரவைக்கு மைக்கல் ஜாக்சனே ஆச்சரியம் கொள்கிறேன் உன் திறமையிலே! இனிய தம்பிகள் நிலன் மற்றும் ஆரினுடன் இரவியின் மூன்று குதிரைகளாக பயணிப்பவனே இன்றும் என்றும் பெற்றோரின் ஆசிகளுடன் இல்லமும் நாடும் மகிழ வாழ்கவாழ்கவே! தேர்வுகள் கடந்து வலிமைகளை பெற்று தேசத்தின் வீரனாய் எழுந்து வருபவனே தேவதை ஆன அம்மம்மாவின் வாழ்த்து தேய்ந்து போகாமல் உன்னை வழிநடத்துமே! மே…
-
- 0 replies
- 105 views
-
-
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவேந்தல். மண்டைதீவு கடலில் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://jaffnazone.com/news/18408
-
- 0 replies
- 646 views
-
-
யாழிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை மாலை "Croydon" பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் யாழிலுள்ள பாடசாலைகளில் அழகிய கட்டடங்கள், பாரிய மண்டபங்கள், பாரிய விவசாய/கால்நடை பீடம், விளையாட்டு ஸ்ரேடியம் என்று எல்லாவாற்றையும் ஒருங்கே கொண்டிருந்த கல்லூரியாகும். பின் இலங்கைப்படைகளின் முகாமாக்கப்பட்டு சிதைவுற்ற இக்கல்லூரி, கப்ரன் மில்லரின் வரலாற்றுடன் மீட்டெடுக்கப்பட்டதும், இன்று அரச உதவிகள் பாரியளவில் இல்லாதிருந்தும் மீண்டும் எழ முற்படுகிறது. வடமராட்சிப் பகுதியிலுள்ள ஏனைய பிரபல பாடசாலைகளான "காட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் கல்லூரி, சிதம்பராக் கல்லூரி" போன்றன இ…
-
- 6 replies
- 2.1k views
-
-
இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய வல்வெட்டித்துறை புகைக்குண்டு! JULY 27, 2015 COMMENTS OFF வல்வெட்டித்துறையில் நெடியகாடு இளைஞர்களால் காலம்காலமாக கோவில் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளிலும்… பல ஊர்களில் பல வகையான நிகழ்வுகளிலும் பல வகையான அளவுகளில் உருவாக்கி நெருப்பின் மூலம் வருகின்ற புகையின் சூடான காற்றினை நிரப்பி வானில் பறக்க விடுகின்ற காகிதத்தில் உருவான ஒரு பெரிய Baloon புகைக்குண்டு அல்லது புகைக்கூடு என்று அழைக்கப்படும். விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வன்னியில் பல இடங்களிலும் நெடியகாட்டு இளைஞர்களின் புகைக்குண்டு அடி வானம் தொட்டு மாவீரர்களுக்காக அஞ்சலிகள் செலுத்திய பல வரலாறுகளும் உண்டு. இந்தியா இராணுவம் வல்வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
• "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடுநான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் எதிர்வரும் 21.09.2015யன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாம் கொடுமைகளை இந் நூல் விபரிக்கிறது. சிறப்புமுகாமை மூடுவதற்கும் அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெறுவதற்கும் இந் நூல் உதவிட வேண்டும் என விரும்புகிறேன். சிறப்புமுகாம் கொடுமைகளை விபரிக்கும் முதலாவது நூலாக இது இருக்கிறது. சிறப்புமுகாம் பற்றி மேலும் பல நூல்கள் வெளிவருவதற்கு இது வழி சமைக்கும் என நம்புகிறேன். ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்தேச மக்கள் கட்சியினர் இந் நூலை வெளியிடுகின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பாராட்டுவதோடு விழா வ…
-
- 1 reply
- 786 views
-
-
ஆனந்தி சூர்யபிரகாசம் தலைமையில் சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் [புதன்கிழமை, 19 ஏப்ரல் 2006, 01:06 ஈழம்] [ம.சேரமான்] இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கடந்த 9ஆம் நாள் உதயமாகியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஓன்றியம் விடுத்துள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் தமிழ் செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு இலண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து …
-
- 4 replies
- 2k views
-
-
மாந்தை மேற்கில் இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா- 8 கலைஞர்களுக்கு விருதுகள் : November 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய ‘பிரதேச இலக்கிய விழா’ நேற்று (2) வெள்ளிக்கிழமை மாலை மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. யேசுதாசன் சாரா நீராஜா(சித்திரக்கலை),சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை),எ.டெலிஸ்ரன் நிஸாந்(மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது …
-
- 0 replies
- 457 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ரக்ஷனா.ரா பதவி, பிபிசி தமிழுக்காக 11 பிப்ரவரி 2025, 08:47 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் காதல்.... உலகெங்கும் உள்ள புராண, இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்களில் வெவ்வேறு பெயர்களில் விரவிக் கிடக்கிறது. காதலின் தொடக்கம் என்னவென்பதை அறுதியிட்டு கூற முடியாது. சங்க கால 'தலைவன் தலைவிக்கு விடும் தூது' முதல் இந்த காதல் கதைகள் காலத்திற்கேற்ப புது வடிவம் பெற்றுள்ளன. ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் இந்த அளப்பரிய அன்பை அங்கீகரிக்கும் வகையிலும் அதை போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் ஒவ்வோர்…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு! நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், தற்போது நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://new…
-
- 1 reply
- 576 views
-
-
புங்குடுதீவை பிறப்பிடமாகக்கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களது இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று (11-08-2016) நடாத்தப்பட்டது. புலத்தில் உறவுகள் யாருமற்றநிலையில் இவரது இறப்பு சம்பந்தமாக FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அது சம்பந்தமான அரச மற்றும் சட்ட நிர்வாகம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தததும் FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அவரது இறுதி அடக்கம் சம்பந்தமான சகல விடயங்களையும் ஒழுங்கு செய்திருந்தது. ஊரவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. எமது சகோதரர் ஒருவருக்கு செய்யவேண்டிய அத்தனை கிரிகைகளும் முறைப்படி செய்யப்பட்டு வந்திருந்தவர்…
-
- 1 reply
- 676 views
-
-
தமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள் இன்று ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் பிறந்தநாள் இன்றாகும். பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். ஈழத்தைப் பிறப்பிடமாக் கொண்டபோதும் தமிழகத்தின் முன்னணிக் கவிஞராக திகழ்ந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவ…
-
- 0 replies
- 445 views
-
-
தாய் மண்ணிலே பிறந்து... தாய் மண்ணிலே மடிவது, ஒரு வரம். அதைப் பெறுவதற்கு, நாங்கள்... தவம் செய்யவில்லையோ.... - சிவா தருஸ். -
-
- 0 replies
- 349 views
-
-
-
- 0 replies
- 626 views
-
-
"மே தினம் / தொழிலாளர் தினம்" / "May Day"/ "International Workers' Day" [01/05/2024] "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்."[குறள் 1034 ] பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் பெரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவர்.அந்த காலத்தில் உளவு தொழிலே முக்கிய மான முதன்மையான தொழில் என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக, உலகின் முதலாவது நாகரிகம் என கருதப் படும் சுமேரிய நாகரிகம் உருப்பெறு வதற்கு உழவர் தொழிலாளரே முக்கிய காரண மானவர்கள் ஆகும்.இவர்கள் கால்நடை வளர்ப்பிலும் வயல்வெளியில் விவசாயத்திலும் ஈடுபட்டு,சுமேரிய …
-
- 0 replies
- 219 views
-
-
இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போர் புரிந்து விதையாகிப்போன தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் சிறீலங்கா இந்திய அரசுகளின் கூட்டுத் சதிக்குப் பலியான லெப்.கேணல் குமரப்பா, லெப்,கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் முதல் களப்பலியான பெண்போராளி 2வது லெப். மாலதி ஆகியோரின் நினைவுதாங்கிய 26 வது ஆண்டு http://www.sankathi24.com/news/33288/64//d,fullart.aspx
-
- 0 replies
- 507 views
-
-
யாழில் இரு நூல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும் மரணம் இழப்பு மலர்தல் & பிரக்ஞை ஒரு அறிமுகம் தலைமை - யாழ் பல்கலைக்கழ நூலகர் - சிறிஅருள் உரையாற்றுபவர்கள் படைப்பாளரும் விமர்சகரும் - தமிழ் கவி எழுத்தாளரும் விமர்சகரும் - கருணாகரன் --------------------------------------------- - நிலாந்தன் மனநல வைத்திய நிபுணர் - சிவயோகன் இடம் - தியாகி அறக்கட்டளை மண்டபம் (TCT) (நாவலர் மண்டபத்திற்கு முன்பாக) நாவலர் வீதி - யாழ்ப்பாணம் திகதி - 08.12.2013 நாள் - ஞாயிற்றுக் கிழமை நேரம் - மாலை 4.00 மணி வழமையாக தாமதாமாக வருகின்றவர்களுக்கு மாலை 4.00 மணி வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 4.30 மணி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
-
- 4 replies
- 1.1k views
-
-
புலம் பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்களது மன உணர்வுகளையும் பேசும்-திரைப்படங்கள் வழி மனித மனங்களுக்குள் சங்கமிக்க முயலும் ஓர் திரைப்பட விழா 12.01.2007 முதல் 14.01.2007 வரை Cinema Querfeld Festival Basel Switzerland மேலதிக விபரங்களுக்கு: http://ajeevan.blogspot.com/ அல்லது http://www.querfeld-basel.ch/programm.php
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் அனலைதீவு ஸ்ரீ ஹரிகரபுத்திர ஐயனார் ஆலயத் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/story/16/அனலைதீவு-ஐயனார்-ஆலய-தேர்.html
-
- 0 replies
- 491 views
-
-
"இந்த சுதந்திர தினத்தன்று (04/02/2025)" காலைக் கதிரவன் பொற் கதிரில் உண்மைச் சுதந்திரம் தேடிச் சென்றேன் வெளிச்சத்தில் மிளிரும் இலங்கை மண்ணில் விடுதலையின் முகம் நான் கண்டேனா? உண்மைச் சுதந்திரம் நியாயமாக இல்லையே தன்னாட்சி தன்னிறைவு கொண்ட நாட்டில் விடுதலை ஓங்கும் சுதந்திரம் மலருமென்று அமைதியான காற்றில் எதிரொலி கேட்கிறதே? காலனித்துவ சங்கிலிகளை அறுத்து எறிந்து எழுபத்தேழு நீண்ட ஆண்டுகள் இன்று நீதியின் வெளிச்சம் சமமாக வீசுகிறதா பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வது எப்போ? மழலைகள் சிரித்து ஓடி விளையாட ஆபத்து நிழல்கள் மறைய வேண்டுமே அறிவியல் சிறகுகளால் எதிர்காலம் உறுதியாக சமத்துவ கல்விவாய்ப்பு என்று வருமோ? சாத…
-
- 0 replies
- 197 views
-
-
33 வருடங்களின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைப் பலியெடுத்தும்த மிழரின் பல கோடிக்கணக்கான உடைமைகளை சூறையாடி தமிழ் மக்களை இலங்கைத் தீவின் தென் பகுதியிலிருந்து துரத்தியடித்த சிங்கள இனவாதம் காலத்திற்கு காலம் தன்வடிவங்களையும் வியூகங்களையும் மாற்றிக் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுக்கின்றது. சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றங்கள் வராத வரை 1956, 1958, 1977, 1983, 2009 இற்குப் பின்னும் இன அழிப்பு தொடரத்தான் போகின்றது. 1983 இல் தமிழருக்கான சரியான பாதுகாப்புப் பொறிமுறை, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த பல ஆயிரம் தமிழரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். "NEVER AGAIN" என்று அடிக்கடி கூறும் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினைக் கையாள்வதில் ம…
-
- 0 replies
- 619 views
-