நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு. பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம். நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன்…
-
- 3 replies
- 1.5k views
-
-
பெரிய வெள்ளி இன்று – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு! உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள், இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூருகின்ற இந்தவிழாவின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதற்கமைய, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 209 views
-
-
18 APR, 2025 | 06:03 PM இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினத்தை (18) பெரிய வெள்ளியாக உலகெங்கும் கிறித்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர். தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்றையதினம் நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை யாத்திரைகள் பக்திபூர்வமாக நடைபெறுகின்றன. கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா தேவாலயம் பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயத்தில் யேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நடைபெற்றது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) மட்டக்களப்பு - மரியாள் தேவாலயம் அதன்படி, கிழக்க…
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
பெருமளவான மக்கள் கலந்து கொண்ட மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு,மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பண்டைய கால முறையின் படி இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல், ஆறு பகுதியாகப் பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காம பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்களாகத் தங்கியதாக கர்ணபரம்பரை கதைகளில் தெரிவிக்கப்படுகின்றன.அத்துடன் சீர்பாத பரம்பரையுடன் தொடர்புபட்டதாகவும் ஆலய வரலாறுகள் கூறுகின்றன. கதிர…
-
- 0 replies
- 332 views
-
-
உரும்பிராய் இந்துக்கல்லூரி உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா பல கலைநிகழ்சிகளும் நடைபெறுகின்றது. 07-தை-2006 stephen Leacock C.I 2450 Birchmount Rd. Scarborough மேலதிக விபரங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம் ***
-
- 25 replies
- 5.1k views
-
-
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024] [அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நிலனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ] "நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் நான் யாரென்று உணரும் நாளிது! நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" "இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" "நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!" "அச்சம் தவிர்த்து துணிந…
-
-
- 16 replies
- 948 views
- 2 followers
-
-
இதன் உண்மை தன்மை தெரியா, Google group இல் இருந்தது, இதை இங்கு இணைக்கிறேன் (http://groups.google...8ed666bf0d8661#) பேரன்புசால் தமிழினப் பற்றாளர்களே! மனித நேயர்களே! மூவர் விடுதலை குறித்துப் பொதுவான கையெழுத்து வேட்டையை விடத் தனித்தனி முறை யீடாக இருத்தல் நன்று என்பதாலும் மொழி இனத் தொடர்பான செய்திகள் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்படுவதால் இலக்கியப் பதிவை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் *மூவர் உயிரைக் காத்திடுக ! மூவாப்புகழைப் பெற்றிடுக !* என்னும் தலைப்பில் கவிதை/ கட்டுரைப் போட்டிகளை த் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. *ஊடகங்களில் வந்த செய்திகளைத் தொகுத்தும் தரலாம். மரபுக் கவிதையாகவோ புதுக்கவிதையாகவோ இருக்கலாம்*. தங்கள் படைப்புகளை…
-
- 0 replies
- 646 views
-
-
பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன. அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் அடியார்கள் ஈடுபட்டனர். https://newuthayan.com/story/15/பொங்கல்-பானைகளால்-நிரம்ப.html
-
- 0 replies
- 635 views
-
-
-
[size=4]ஐக்கியா நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கெடுத்து கொள்ள அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.[/size] [size=4]பொங்குதமிழ் எனச் சங்கே முழங்கென்ற கொட்டொலியுடன் பொங்குதமிழ் எனும் கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வினை மேற்கொள்ளவுள்ளனர்.[/size] [size=4]செப்ரெம்பர் 26ம் புதன்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நிலையில் அதே நாளில் நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது.[/size] [size=4]அன்று தமிழீழத் தாயக மக்கள் எழுர்ச்சியி…
-
- 0 replies
- 940 views
-
-
March 21, 2015 - கனடா, பிரதான செய்திகள் - no comments தள்ளிப் போடப்பட்ட திரு ம.ஏ.சுமந்திரன், நா.உ அவர்களோடான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடைபெறும். இடம் – No. 64, Fishery Road (Morningside/Ellesmere) Scarborough நேரம் – மாலை 4.00 மணி எம்மால் அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களே சந்திப்பில் கலந்து கொள்ளலாம். வே.தங்கவேலு ததேகூ (கனடா) தொடர்பு: தொபே. 416 281 1165, 416 264 8591 http://seithy.com/breifNews.php?newsID=128757&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 628 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள் 32 Views ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 502 views
-
-
மட்டக்களப்பு... ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய, வருடாந்த மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதியால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நேற்று காலை மட்டக்களப்பு அரசடியில் உள்ள சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினை வந்தடைந்ததும் விசேட யாக பூசைகள் இடம்பெற்றுன. ஆலயத்தில் மூலமூர்த்திக்கு அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று, விசேட ஆராதனைகள் மற்றும் கொட…
-
- 2 replies
- 338 views
-
-
மட்டக்களப்புஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது. கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது. வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகினறன. இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப…
-
- 0 replies
- 493 views
-
-
மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம். இதிகாச சிறப்பு பெற்ற கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக மக்கள் அலைக்கு மத்தியில், அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத…
-
- 1 reply
- 352 views
-
-
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவேந்தல். மண்டைதீவு கடலில் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 8 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://jaffnazone.com/news/18408
-
- 0 replies
- 646 views
-
-
கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில்போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு,சிறியோர், முதியோர் காப்பகங்களுக்கான உதவி இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின்பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம்செய்யப்பட்டுள்ள எம் தாயக உறவுகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுநாமறிந்த உண்மை. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான வாள்வாதரத்தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியதேவைகளைப் பூர்த்தி செய்த…
-
- 0 replies
- 725 views
-
-
மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி adminMarch 13, 2025 இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை( 13)மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி இடம்பெறும். மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைப்படைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே குறித்த கண்காட்சி யை அனைவரும் வருக…
-
- 0 replies
- 175 views
-
-
மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு! மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹாதர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்த மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெவுள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்திய எழுச்சிப் பேரணி, மன்னார் பிரதான பாலத்திலிருந்து ஆரம்பமாகி மன்னார் நகர மண்டபத்தை சென்றடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சைவ எழுச்சி மாநாடு இடம்பெறும். குறித்த மாநாட்டில் ஈழத்தின் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்…
-
- 0 replies
- 485 views
-
-
மன்னார் - கொக்குப்படையானில் புனித யாகப்பர் ஆலயம் திறப்பு மன்னார் மறைமாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை (7) மாலை மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறித்த ஆலயத்தை ஆசிர்வதித்து திறந்து வைத்து அபிஷேகம் செய்துவைத்தார். குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் என பலர் கலந்துக் கொண்டனர…
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா! பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றன. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது. அதனைத் …
-
- 0 replies
- 448 views
-
-
-
- 22 replies
- 3k views
-
-
இலன்டன் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள (tube eastham அருகில்) தமிழ் முன்னேற்றக் கழக மண்டபத்தில் மரணம் இழப்பு மலர்தல் நூல் வெளியீடு ஐப்பசி (அக்டோபர்) 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்கள் விரைவில். இந்த நிகழ்வில் பின்வரும் தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர்களை பரிந்துரை செய்ய முடியுமா... அல்லது உரையாற்ற விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளமுடியுமா? மூவரைத் தெரிவு செய்துவிட்டேன். குழந்தைகள் பெண்கள் தொடர்பாக உரையாற்ற ஒரு பெண் பேச்சாளரைத் தேடுகின்றேன். மரணம்: இழப்பும் வலியூம் மரணம்: இழப்பும் பாதிப்பும் - பெண்களும் குழந்தைகளும். மரணம்: அஞ்சலியூம் அரசியலும் மரணம்: இழப்பும் ஆற்றுப்படுத்தல் மலர்தல் - உளவியல் பார்வை இந்த நூல் மரண…
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
மருதனார்மடம் ஆஞ்சநேயர் தேர்த்திருவிழா! யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. https://athavannews.com/2022/1316687
-
- 1 reply
- 648 views
-