Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by putthan,

    அவனின் வீடு மதவிற்கு பக்கத்தில் உள்ள ஒழுங்கையினுள் இருந்தது.அந்த மதவடி வீதியில் ஒரு பிலாமரம் அதில் பல பிலாக்காய்கள் காய்த்திருக்கும் இதனால் அந்த இடம் ஆயிரம் காச்சி பிலாவடி என்று ஊரார் அழைத்தனர்.அதற்கு அருகில் வாழும் மக்களையும் ஆயிரம்காய்ச்சி பிலாவடியார் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டபடியால் இவனையும் அந்த அடையாளம் தானாகவே ஓட்டி கொண்டது. பாடசாலையில் படிக்கும் பொழுது "டே பிலாவடி இங்கே வாடா" என்று வாத்தியார் கூப்பிடுவார் அதை இவன் பெரிதாக கண்டு கொள்வதில்லை,கண்டு கொள்வதிற்கு ஏற்ற மனபக்குவம் அப்போது அவனிற்கு இருக்கவில்லை. உயர்தர பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது பல பாடசாலைகளிளும் இருந்து மாணவர்கள் வந்து பங்குபற்றினார்கள் இவனுக்கு அருகில் இருந்த யாழகி (யாழ்பாணத்த…

  2. 1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலை கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும…

    • 1 reply
    • 5.9k views
  3. அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக படித்து படமும் பெற்று க்கொண்டால். தந்தை க்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்க…

    • 8 replies
    • 2.1k views
  4. ஈழமும் புலமும்(புலம்பெயர் வாழ்வும்) | ஈழத்தில் வாழ்ந்த கோ(கா)லம் பகுதி 01: http://karumpu.com/archives/217 பகுதி 02: http://karumpu.com/archives/212 பகுதி 03: http://karumpu.com/archives/206 பகுதி 04: http://karumpu.com/archives/199 பகுதி 05: http://karumpu.com/archives/194 பகுதி 06: http://karumpu.com/archives/178 பகுதி 07: http://karumpu.com/archives/173 பகுதி 08: http://karumpu.com/archives/170 பகுதி 09: http://karumpu.com/archives/166 பகுதி 10: http://karumpu.com/archives/161 பகுதி 11: http://karumpu.com/archives/154 பகுதி 12: http://karumpu.com/archives/149 பகுதி 13: http://karumpu.com/archives/307 பகுதி 14: http://karumpu.com/archives/…

  5. மலரும் நினைவுகள்.. கதை - இளங்கவி... பகுதி 1 சயிக்கிள் மணிச் சத்தத்தில் அட இவன் வந்திட்டான்.... என்று தனக்குள் பேசிக்கொண்டு அம்மாவுடன் எரிஞ்சு விழுந்தான் ரவி.....' உனக்கு நேற்றே சொன்னனான் இண்டைக்கு காசு வேனும் முதல் முதல் வகுப்பு அந்த மனுசன் காசில் சரியான கறார் என்று சொல்லுறாங்கள் நீ நேற்றெ வாங்கி வைத்திருக்கலாம் தானே... ஏன் செய்யவில்லையென்று தாயைப் பேசிவிட்டு...' சரி அடுத்த வகுப்புக்கு காசு இல்லாட்டி நான் போக மாட்டன் பிறகு இங்கிலீஸில் ஓ லெவெல் ஃபெயிலென்றால் என்னைப் பேசவேண்டாம் சரியா...'' என்று விட்டு போட்டுவாறன் அம்மா.... என்றுவிட்டு வாசலை நோக்கி ஓடினான் ரவி..... நேரம் போட்டுது கெதியென்று ஏறு என்ற ரவியின் சினேகிதன் சந்திரன் ஒரே சயிக்கிளில் ரவி பெடல் போட்ட…

  6. "உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். " என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு பேருக்குச் சொல்லாமலும் விடமாட்டார். அப்பிடியாப்பட்ட ஒவ்வொருக்காவும் "எப்பிடித்தெரியும்?" என்று நானும் கேட்காமல் விடுவதில்லை. எனக்குத் …

  7. Started by உமை,

    திரை மறைவில் ! அம்மா இதுதானா அப்பா படிக்கும் பள்ளிக்கூடம்? தோளில் சால்வை சாரம் சண்டிக்கட்டு சவரம் செய்யாத முகம். அருணன் கூடாரத்தின் முன் நிற்கிறான். பின்புறமாக கைக்குள் மேல் கைவைத்து ஆழ்ந்து யோசனை கதிரவன் கண்திறந்து இரு மணித்தியாலம். செங்கதிர்கள் சுடத்தொடங்கின. "எட்டு மணியாச்சு வேலைக்கு போக இல்லையே..? " மனைவி மதியின் குரல். 'ம்.. போகத்தான் வேணும்" தொடராமல் முடித்துவிட்டான். அருணன் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயர் பதவி வகித்தவன். இப்போ ச.தொ.ச வியாபார நிலையத்தின் விற்பனையாளர். ஜுன்ஸ் அணிந்து கீரோ கொண்டாவில் அலுவலகம் சென்றவன் இன்று மரக்கறி, மா மூடைகள் சுமக்கிறான். வெற்றிலை சுவை தெரியாதவன் இன்று அது இல்லாமல் இருக்கமாட்டான். சிகரட் வாசம் அறியாதவன் இப்போ அதற்க…

    • 0 replies
    • 961 views
  8. நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்? அவன் ஒரு ஞானி நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்? கதிர்கள் அறுத்த வயல்வெளி,தேங்கி நிற்கும் மழைதுளிகளில் தெரிகிறது வானம். நாரைகள் நடைபயில காளைகள் வீறு நடைபோட்டன. கலப்பையும் கையுமாக வயலில் பிரசாத். தம்பி டேய் .. உன்ட தங்கச்சி பெரியபிள்ளையாயிட்டாளாம். வரம்பில் நின்று பசுபதி உரத்து சொன்னார். அப்பிடியா ..? பிரசாத்துக்கு மகிழ்ச்சி. டே...சிவலை நீதான் குழப்படி. நான் வரும் வரை இதிலே நிற்கவேணும். என்ன கறுப்பா பார்க்கிறாய்? நீ நல்ல பெடியன். அண்ண போயிட்டு வாறன். இரு மாடுகளையும் பார்த்து சொல்லிவிட்டு வீடு செல்கிறான். தந்தை குடிகாரன். தாய் இல்லை.ஆனாலும் அம்மாவி்ன் இடத்தை நிரப்ப அங்கே பலர் இருந்தனர். மல்லாவி மலர் …

    • 1 reply
    • 1.3k views
  9. கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்.... "கண்மணி...கண்மணி...எடி பிள்ள கண்மணி..." வீர மரத்தின் கீழ் இருந்த முருகேசர் பேத்தியை அழைத்தார். "எடி மோனை...சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டு..." மீண்டும் அவரது குரல். கண்மணிக்கு கோபம், அழுகையும் கூட. "எத்தனை தடவை சொல்லுறனான், என்னை கண்மணி எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு டச்சுக்காலப்பெயர். அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் கேலி செய்யிறதுகள்..." சொல்லியவாறு கிண்ணம் எடுத்தாள். அவள் வாய் மூடவில்லை. "கண்மணியே...கண்மணியே...சொல்லுவ தைக்கேளு..." முன் தறப்பாளுக்குள் இருந்து சிறிரங்கன் பாடினான். "செருப்பு பிய்யும்..." பல்லை நெருமிக்கொண்டு கண்மணி சொன்னாள். "என் கண்மணிக்கு கோபம் வந்தால்..." மேலும் பாட, "பாருங்கோ அம்மா !...…

  10. Thanks for the 2000 people who have red my novel. Thanks for the 4 people who have sent 10$ each (amoung them 2 are Indian Tamils). I made myself fool again. Its OK. My short novels will be available at Chennai Bookfair 2010.

  11. "அம்மா என்னையும் அழைத்துச் செல்லுங்கள்" அன்பின் அம்மாவுக்கு, சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் குலதெய்வம் உங்களின் நலன் காக்கட்டும். நிற்க: நீங்கள் குவைத் சென்று ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டு வருடங்களில் வருவதாக சொல்லிச்சென்றீர்கள். ஒன்றும் அறியாத எட்டுவயது சிறுமியாய் இருந்தபோது நீங்கள், கடைசியாய் தந்த அன்பு முத்தம் இன்னும் இனிக்கிறது அம்மா. ஆனாலும் பல விடயங்களை பரிமாறி துன்பங்களைச் சொல்லி அழ எ…

  12. மொழி உணர்ச்சி இல்லாதவனுக்கு நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததிக்காவது சிறிது நாட்டுணர்ச்சி ஏற்பட செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். நன்றி: கொளத்தூர் மணி - பெரியாரும் தனித் தமிழ்நாடும்

  13. அத்தை மகளே ...போய் வரவா ? மேகங்களுள் நீந்தி வந்த விமானம் தரை தட்ட ஆயத்தமாக விமானப்பணிப்பெண் இருக்கை பட்டிகளை சரி செய்யும் படி சைகை மூலம் காட்டினாள் கனவி லிருந்து விடுபட்டவன் போன்று பாஸ்கரன் தன பட்டியை சரி செய்து கொண்டான். விமானம் மத்திய கிழக்கு நாடொன்றில் தரை இறங்கியது. எல்லாம் கனவு போலானது அவனுக்கு. தன தாய் நாட்டை விட்டு புறப்பட்டு கிட்ட தட்ட பதினொரு மணித்தியாலங்கள் ஆகி விட்டன. இங்கு ஒரு கம்பனியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட நிர்மாணம் ச ம்பந்தமாக வேலை செய்வதற்கு அனுமதி கிடைத்து வந்திருந்தான். முகவரின் , வரவுக்காக காத்திருந்தவனின் சிந்தனை தாயகம் நோக்கி ............ கொழும்பிலே ஒரு பிரபல கட்டிட நிர்மாண காரியாலயத்தில் வேலையில் இருந்த போது அன்றாட தேவைகளுக்கு…

  14. வாசலில் புத்தம் புதிய ரொயாட்டா கார் வந்து நின்றதும்.. ஓடிச் சென்று.. வாங்கோ.. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம் என்றபடி காரின் கதவுகளை திறந்துவிட்டார் மணப்பெண்ணின் அப்பா சுந்தரேசன். வேளைக்கு வருவம் என்று தான் வெளிக்கிட்டம் சம்பந்தி ஆனால் ரபிக் ஜாமில சிக்கிக்கிட்டம் அதுதான் லேட்டாப் போச்சு என்றார் மாப்பிள்ளையின் அப்பா சந்திரகாசன். அது பறுவாயில்லை.. லேட்டா என்றாலும் வந்து சேர்ந்தீங்களே. அது சந்தோசம். எங்க மாப்பிள்ளைத் தம்பியைக் காணேல்ல.. கனடாவில இருந்து லண்டன் வந்ததும் களைச்சுப் போட்டாரோ..?! இல்ல அவன் இரண்டு கிழமை லீவில தான் வந்தவன். அதுக்குள்ள ஒரு கிழமை ஓடிப் போச்சே என்ற கவலையில இருக்கிறான். அந்தா பின் சீற்றில இருந்து இறங்கி வாறான்.. நீங்கள் காணேல்லைப…

  15. நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும், இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ் குடியிருப்பில் வாழ்க்கையை தொடங்கினர். சுகந்தன் …

  16. விலங்குடைப்போம் சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ... கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்... என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, அலரிகளால் எல்லை போட்டு அழகாய் அமைந்திருக்கும் ஆத்தியடிப் பிள்ளையார் கோவில்... என்று எமது மண்ணுக்குரிய வாசனைகளும், அழகுகளும் ஒரு புறமும், கடந்த சில வருடங்களாக இராணுவமும், ஷெல்களும், கிபீர்களும் அக்கிரமங்களும், தமிழர்கள் மீது பொழியப்படும் அநியாங்களும்… என்று போரின் கோலங்கள் இன்னொரு புறமுமாய் பழக்கப்பட்டு விட்ட சங்கவிக்கு ஜேர்மனியின் மார்கழி மாதப் பனியும் அழகாகத்தான் தெரிந்தது. அந்த …

  17. அவளுக்குள் ஒரு மனம் .... கடிகாரம் மணி ஆறு அடிக்க ...நித்திரையில் நின்று எழுந்த மாதவி , காலைகடனை முடித்து அடுப்பை பற்ற வைத்து தேநீர் போட தயாரானாள். ராசா என்றும் ராசமாணிக்கம் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். மகள் மேகலா காலையில் படிக்க எழுப்பி விடும் படி கேட்டிருந்தாள். தேநீரை ஆற்றி இளம் சூடாக எடுத்து கொண்டு மகளை எழுப்பினாள். அவளும் எழுந்து காலைக்கடனை முடித்து தேநீருடன் பாடங்களை படிக்க தொடங்கினாள். மகன் சின்னவன் ஐந்து வயது. மகளுக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க காலை உணவை தயாரித்து முடித்து கணவன் ராசாவை எழுப்பினாள். மணி எழு ஆகி விட்டது . வாசலில் அவன் செல்லும் வண்டி தயாராக நின்றது . .மதிய உணவையும் சிற்றுண்டி களையும் கொடுத…

  18. Started by சுமங்களா,

    படித்ததில் பிடித்திருந்த கதை. தமிழ்நதி எழுதியிருந்தார்..அதனை இங்கு இணைக்கிறேன்.http://tamilnathy.blogspot.com/2009_07_01_archive.html மாபெரிய பால்வெளி. அதில் சூரியனைச் சுற்றியும் சுழன்றும் செல்லும் பூமியென்ற சிறு கிரகம். அகன்ற நிலப்பரப்பில் ஒரு நாடு. அதிலொரு நகரம். அங்கே குட்டியூண்டு பகுதி. அந்தக் குட்டியூண்டு பகுதியிலொரு குட்டியூண்டு அறையில் ஒரு சதுர அடிக்கும் குறைவான ஒரு பெட்டியின் முன்னமர்ந்து நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறோம். பால்வெளியையும் இந்தப் பெட்டியையும் இணைத்தும் நினைத்தும் பார்க்க கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது. வேலிச்சண்டை, கோழிச்சண்டையிலிருந்து இணையச் சண்டைக்கு நாங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதை எண்ணித் திருப்தியுற வேண்டியதுதான். களைப…

    • 2 replies
    • 935 views
  19. இஞ்சாருங்கோ என்ன நித்திரையோ அல்லது மெடிட்சேசன் செய்றியகளோ என்று கேட்டபடியே மனைவி சூடான தேத்தனியுடன் சுரேசிற்கு அருகில் வந்து அமர்ந்தாள்.ஒருத்தன் கண்ணை மூடி கொண்டு ஏதாவது பற்றிய் யோசித்து கொண்டு இருந்தாள் உடனே மெடிட்சேசன் என்று நீங்கள் முடிவெடுத்து என்னுடைய "கஸ்பன்ட்" மெடிடேட் பண்ணி கொண்டிருக்கிறார் என்று நாலு பேருக்கு சொல்லுறது இப்ப ஒரு பஷனா போச்சு. உமக்கு தெரியும் எனக்கு உந்த மெடிட்சேசன்,தியானம்,யோகம்,ஞா

    • 30 replies
    • 3.6k views
  20. பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............ அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை. பண்ணை வீட்டுக்கு போகும் பிரதான நீர் வழங்கல் குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை …

  21. நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள். ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். "நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா…

  22. இத்தாலிய சியாமா செட்டி குண்டு வீச்சு விமானங்கள் குத்தியடிச்சு குண்டு போட்ட காலமெல்லாம்.. போய் ரஷ்சிய மிக்-27 லேசர் வழி பாதை காட்ட உயர இருந்தபடி குண்டு வீசும் காலமெல்லாம் கண்ட அந்தக் கவிஞனின் ரங்குப்பெட்டியும் முள்ளிவாய்க்கால் மணல்களிடை அநாதை பிணங்களோடு பிணமாய்க் கிடந்திருக்க வேண்டும். அதற்குச் சாட்சியாய் இரத்தக் கறைகளோடு கறள் கட்டி இருந்தது அது. காலில் தட்டுப்பட்டதற்காய் அதன் கவனம் என்னைக் கவர... திறந்து பார்த்தேன்.. செக் குடியரசின் மல்ரி பரல்கள் வீசிய எரிகுண்டுகளின் கந்தக வாசம் மூக்கை எரித்தது. இத்தாலிய தயாரிப்பில் ராஜீவின் ஊழலில் கிடைத்த போர்பஸ் பீரங்கிகள் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் வெடித்துத் தள்ளிய எறிகணைகளின் சிதறல்கள் பட்டு ஏற்பட்டிருந்த துவாரங்கள் வழி ம…

  23. என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில…. அம்மா….அம்மா…அம்மா….எனக்கு அம்மாட்:டைப் போகவேணும்….. அவள் கதறக்கதற கொடிய கரங்கள் அவளை இழுத்துக் கொண்டு போகின்றன……என்ர பிள்ளை….என்ரை பிள்ளையை விடுங்கோ……என்ற அவளது கதறலையும் கேட்காமல் கார்த்தினி இழுபட்டுக் கொண்டு போனாள்….அவள் நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும் உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிற அவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்து நொருங்குகிறது. கமலினி…கமலினி….என்ன….பக்கத்த ில் படுத்திருந்த கணவனின் குரல் அவளை மீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவான அணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை….. என்ர பிள்ளையப்ப…

    • 5 replies
    • 1.6k views
  24. இஞ்சருங்கோ.. எங்கட வீட்டுச் சேவல் அடுத்த வளவுக்க போய் அவையின்ர பேட்டோட கலைபடுகுது.. ஒருக்கா சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்திக் கொண்டு வாங்கோப்பா. அங்க போய் பழகிட்டு என்றால் பிறகு அங்கையே தங்கிடும் அப்பா. இந்த முறை எங்கட புள்ளிக் கோழிக்கு அடை வைக்கலாம் என்றிருக்கிறன். ஓமடியப்பா.. நானும் கவனிச்சனான். அவர் இப்ப கொஞ்ச நாளா அங்கதான் அதிகம் மிணக்கடுறார். உந்த ஊரல்லாம் திரிஞ்சு சாவகச்சேரி சந்தையில வேண்டி வந்த வெள்ளைடையன் சேவல் என்று வளர்த்தா.. அவர் எனக்கு உச்சிக் கொண்டு திரியுறார். ஆக மிஞ்சிப் போனா காலை முறிச்சு கறிச் சட்டிக்க போட வேண்டியதுதான். இல்லையப்பா.. அது நல்ல சாதிச் சேவல். எங்கட கோழிக்கு விட்டு அந்த முட்டையில அடை வைச்சா நல்ல குஞ்சுகள் வருமப்பா. சும்மா கற…

    • 14 replies
    • 3.6k views
  25. இந்திய மனைவி திவ்யமதி. ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்.... எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.