கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
இந்திய மனைவி திவ்யமதி. ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்.... எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'என…
-
- 13 replies
- 3k views
-
-
------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ---------------------------------------------------- தொடரும்...........................
-
- 0 replies
- 851 views
-
-
அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாத…
-
- 43 replies
- 6.1k views
-
-
தெளிவு பிறந்தது ................. அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடும…
-
- 9 replies
- 1.5k views
-
-
ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவர…
-
- 37 replies
- 4.2k views
-
-
வாழ்க்கை - 1 தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம். ம…
-
- 6 replies
- 1.1k views
-
-
நேற்று பார்க் ஒன்றின் அருகில் இருக்கும் மர நிழழின் கீழ் அமைதியாக படுத்து கண்கள் மூடிய போது.....கல்யாண வயசின் கற்பனைகளினூடு என் எதிர்கால உறவை நினைத்தபோது.....இதோ....நீங்களே பாருங்கள்.....என்ன தோன்றியது என்மனதில் என்று..... அவள்....... கண்கள் ஆயிரம் கவிதை சொல்லும்...... ஆனந்த கூத்தாடி மின்னும்....... புருவம் வேலை வெல்லும்..... புன்னகை என்மனதை கொல்லும்.... ஆறடிக் கூந்தல் தழுவ........ ஆசையில் விரல்கள் துடிக்கும்..... அவளை கொள்ளை கொள்ள என் உயிரே இன்று தகிக்க தினமும் அவளின் நினைவில்.... விடியும் எந்தன் நாட்கள்.... என் விடலை பருவ உணர்வை.... தீண்டி விட்டு இரசிக்கும்.... விழியாலே கொள்ளும் என்.... கிளியே...... உன்னை எந்தன் விழிக்குள்ளே மெதுவாய் …
-
- 8 replies
- 1.9k views
-
-
வரட்டுச்சித்தாந்த வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலும்! இதற்கு சபா நாவலன் ஒரு குறியீடு!…. கால் வைத்து நிற்பதற்கு கடுகு நிலம் கூட இல்லை. உலகப்புரட்சி பற்றி கனவு காண்கிறார்கள் வரட்டுச்சித்தாந்த வாதிகள். ஆளுக்கொரு கணணியும் இணையத்தளமும் இருந்தால் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு எதையும் எவரும் எழுதலாம். இது சுலபமான அரசியல். திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் கேள்வியைப்போல் பாட்டெழுதிப்புகழ் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். கேள்வி கேட்டு புகழ் வாங்க முயற்சிக்கும் புலவர்களும் இருக்கின்றார்கள். இதில் சபா நாவலன் போன்றவர்கள் எந்த ரகம் என்பதை யாரும் இனங்கண்டு கொள்ள முடியும். கடந்த சனியன்று ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் டான் தமிழலை வானொலியில் செவ்வி வழ…
-
- 9 replies
- 2.5k views
-
-
அவன் அரை மயக்கத்தில் கட்டிலில் கட்டுண்டு கிடந்தான். அவனக்கு முன்னால் அவள் கையில் குழவிக்கல்லோடு நின்றாள். ................................... அவளுக்கு காதலிக்கும் உரிமை இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். அவளுக்கு அவளுடைய கணவனை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அவர்களே அவளுக்கான காளையை தேடினார்கள். கட்டியும் வைத்தார்கள். அவளும் அவனும் முதன் முறையாக எத்தனை மணிக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே சொன்னார்கள். இதுவரை அறிமுகம் இல்லாது அவனுடன் வாழ்ந்து, இதுவரை அறிமுகம் இல்லாத அவனுடைய சொந்தங்களையும் அனுசரித்து, பிள்ளைகள் பெற்று, வரவு செலவுக்குள் வாழ்க்கையை நடத்தி, சண்டை சச்சரவுகளை சமாளித்து, குழந்தைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில்…
-
- 20 replies
- 10.2k views
-
-
சிறுகதை - இளங்கவி தந்தையை 5 வயதிலேயே இழந்த குடும்பச்சுமை, திருமணமாகத மூன்று சகோதரிகள், ஊரெல்லாம் கடன்பட்டு வளர்த்தெடுத்த அம்மா இப்படிச் சொல்லொண்ணாத் துயரங்களை புலம்பெயர்தேசத்திலே வந்த புதிதில் அனுபவித்துக்கொண்டிருந்தான் கணேஸ். வேலையும் பல மாதங்களாய்க் கிடைக்காமல் இருந்த கஸ்ரத்திலிருந்தவனுக்கு ஓர் வேலை கிடைத்தது ஏதோ கடவுள் செயல் போல இருந்தது... எப்ப முதல் சம்பளம் வரும், கொஞ்சமென்றாலும் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சம்பளமும் வர அதை எவரெவருக்கு எப்படிப் பிரிக்கலாம் என்று கணக்குப் பார்த்து முடிந்து தூக்கத்துக்குப் போனவனுக்கு அதிகாலை வேளை ஓர் தொலைபேசி அழைப்பு. அதிகாலை தொலைபேசியென்றாலே அது இலங்கையில் இருந்துதான் என்று நினைத்து பதறியட…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஒரே ஒரு கணம் .......... நகரத்தின் ஒதுக்கு புரமான் தொரு கிராமத்தில் , ஆச்சி யம்மாள் தன் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். அவளது நான்கு பிள்ளைகளில் கோவாலு தான் ஆண் மகன். கணவன் ஒரு பிரச்சினை காரணமாக் ஊருக்கு வருவதே இல்லை. கிட்ட தட்ட கைம்பெண் நிலையிலே இருந்தாள் ஆச்சியம்மாள். காலம் கடந்து போக பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். மூத்தவள் காயத்திரி ...மணப்பருவம் எய்தினாள் . ஆச்சியம்மாள் வாயை கட்டி வயிற்றைகட்டி சேமித்த பணத்தை எண்ணி சரிபார்த்து விட்டு . ஒரு கலியாண தரகரை பார்க்க போனாள். மறுவாரமே கலியாணமும் சரி வந்தது ........மாபிள்ளை ...பெண் பார்த்தபின் அடிக்கடி வரதொடங்கினார். வரும் கார்த்திகை மாதம் கலியாணம் என நிச்சயமாகியது . மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் சந…
-
- 3 replies
- 1.1k views
-
-
*அப்பாப் பூனை* வேர்கள் துளிர்க்கும் தமிழீழப்பெண் சிறுகதைத் தொகுதியிலிருந்து....ஒலிவடிவி
-
- 1 reply
- 742 views
-
-
-
அவளுக்கு ஒரு "வாரிசு " .......... அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல் ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவை களின் ஆர்ப்பரிபுகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நரகத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது . செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் . ஏன் எனில் இவள் செல்லம்…
-
- 11 replies
- 1.6k views
-
-
அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான் .வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று. இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன். அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்ட…
-
- 13 replies
- 6.6k views
-
-
(கிட்டத்தட்ட முடியக்காத்திருக்கிற எழுதிக்கொண்டிருக்கிற என் நாவலொன்றிலிருந்து சில குறிப்புக்கள் ) ஆபிரிக்கா ஒரு இருண்டகண்டமென்று தனபாலன் வாத்தி படிப்பித்தபோது அந்தக்கண்டத்திலேயே தானும் வந்து இருண்டுகிடக்க வேண்டுமென்று நிமலன் நினைச்சுக்கூடப் பாத்திருக்கமாட்டான். ஆபிரிக்காவில்த்தான் இருக்கிறது என அறிந்தேயிராத ஸ்நேகலில் அவன் வந்து விழுந்து ஒரு வருசமும் சொச்ச மாதங்களுமாகிவிட்டது. ஸ்நேகலை வெளிநாடு என்று இவன் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டான். வெளிநாடென்றால் சிங்கப்பூர்மாதிரி இருக்கோணும், ஓம் இவன் சிங்கப்பூரிலும் ஆறுமாசம் அடைபட்டுக்கிடைந்த கதையும் உள்ளது. ஸ்நேகலில் வீடென்ற பெயரில் ஒரு மரக்கூட்டுக்கை நிமலனும் இன்னும் பதினாறு பேரும் அடைந்து கிடைந்தார்கள். உண்மையைச் சொ…
-
- 2 replies
- 956 views
-
-
அதிகாலை நேரம்.. சிறைக்கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டு கண்விழித்தான் குட்டிமணி. சிறைவாழ்க்கையில் சிறைக்கதவுகள் தட்டப்படுவதும் திட்டு விழுவதும் ஒன்றும் புதியவை அல்ல. ஆனால் அன்று அது வழமைக்கு மாறாக இருப்பதை குட்டிமணி உள்ளுணர்வால் உணர்ந்திருந்த போதிலும் வழமை என்றே எண்ணிக்கொண்டான். "அடோ.. பறத் தெமழ.. தம்ச ஒயா ஒக்கம கொட்டி நெய்த.." என்று சிங்களத்தில் திட்டிக்கொண்டு முகமூடிக் கும்பல் ஒன்று கொழும்பு வெலிகடையில் இருக்கும் சிறையின் சிறைக் கதவுகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு உட்புகுந்து கொண்டனர். "இங்க யாரடா குட்டிமணி" என்று ஒருவன் சிங்களத்தில் கத்த.. மாத்தையா.. "எயா மேக்க இன்னே.." என்று காவலுக்கு நின்ற சிங்களச் சிறைக்காவலன் காட்டிக் கொடுக்க குட்டிமணி, கொலைவெறியோடு அவனை தேட…
-
- 8 replies
- 2.9k views
-
-
அந்த மாலைப்பொழுதில்........... மாலைநேரம். பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே யாழ்களம், திண்ணைபக்கம் வந்தும் பார்த்தேன். அங்கேயும் இருக்க பிடிக்காமல், வெளியே சென்று கொஞ்சம் ஓடிவிட்டு வரலாமோ என்று யோசித்துவிட்டு, அதற்கான கால்சட்டை, டிசோ்ட்,சப்பாத்து எல்லாம் டிப்டப்பாக போட்டு ஓடத்தொடங்கினேன். குறிப்பிட்ட தூரம் ஓடிவிட்டு திரும்ப வீட்டை நோக்கி ஒடிக்கொண்டிருந்தபோதுதான் கவனிச்சன் சோடி சோடியாய் வெள்ளைகள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததை. பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது. என் ஒட்டத்தின் வேகமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. முத்தம் அதுதரும் சொர்க்கம். எனக்கும் ஒண்ணு மாட்டுப்படட்டும் இதையே மிஞ்சுடுறேனா இல்லையா என் பார்ப்போம் என மனசுக்குள் வைராக்…
-
- 20 replies
- 2.9k views
-
-
சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” அட்ரஸை கேட்டு வாங்கினேன். சயந்தன், c/o கே ஆர் வாணிபம், உடையார்கட்டு, முல்லைத்தீவு என்ற அதே பழைய முகவரி. கே. ஆர் வாணிபம், கடை அவனது கொட்டிலிலிரு…
-
- 1 reply
- 837 views
-
-
சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக…
-
- 23 replies
- 4.8k views
-
-
எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய் (2000ம் ஆண்டில் இந்த ஞாபகம் எழுதப்பட்டது. ஏற்கனவே பத்திரிகையொன்றிலும் வெளியாகியது. தூசுதட்டப்போனதில் கிடைத்தவற்றிலிருந்து ஒரு ஞாபகக்கதையிது) 1985ம் ஆண்டு. புண்ணியன் சித்தப்பா சந்திராச்சித்தியின் ஊரான கோண்டாவில் அந்நொங்கைக்குப் போய்விட ராசையாப்புவின் கேணியடிக் கடைக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம். கேணியடியிலிருந்துதான் அப்பா புன்னாலைக்கட்டுவன் சங்கத்துக்குப் போய் வரத்தொடங்கினார். புன்னாலைக்கட்டுவனிலிருந்து பல இளைஞர்கள் புலிகளாகி இந்தியாவிலிருந்து திரும்பி ஊருக்குள் வந்தார்கள். ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஆமிக்கு அது பயத்தைக் கொடுத்தது. அப்பாவின் நண்பர்களாக எங்கள் வீட்டுக்கு இரவில் வந்து போகும் அந்த மாம…
-
- 2 replies
- 939 views
-
-
எனக்கு பெண் பார்கிறாங்களங்கோ....... ஆமா....வயசு வந்திடிச்சு......(வயசுக்கு வந்து நீண்ட காலம் ஆயிட்டுது...அது வேற கதை)அது தானுங்கோ கல்யாண வயசு....... காதலின் விண்ணப்பங்கள் எல்லாத்தையும் ஒருபடி சமாளிச்சு அந்த வலையில மாட்டுப்பட்டு எனது கற்பை(?) கரைச்சிடாமல் ஒருவாறு நெளிஞ்சு.... சுளிஞ்சு.... இந்தளவிற்கும் வந்தாச்சு..... இப்போ பெண் பார்க்கிறாங்களங்கோ......பெரியவ
-
- 25 replies
- 4k views
-
-
என்னவளே .....அடி என்னவளே .............. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ......சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு .......தொலை பேசியின் கிணு கிணுப்பு ...விழித்து எழ வைத்தது ,,,,,,சுதா ,,எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ..........கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .......பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம். அவன் .சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் ............சுதா என்னை மறந்து விடாயா ? .நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் .........நீண்ட காலத்தி…
-
- 5 replies
- 3.1k views
-
-
பரிசு .............. அந்த சிறு கிராமத்தில் . வாழ வந்தவள் தான் , சாவித்திரி . தபாற்காரன் சோமுவுக்கு மனைவியாக , இனிதே இல்லறம் நடத்தி வந்தாள் . மூத் தவள் , .சோபனா , சுதா ..இருவரும் படிப்பில் கெட்டிகாரி கள். . கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து . தானும் தன பாடுமாக வாழ்ந்து வந்தாள் . சோமுவும் கம்பீரமான தோற்றம் கொண்டவள். அந்த ஊர் மக்களால் மிகவும் விரும்ப பட்டவன் . காதலர்களுக்கு தெய்வமானவன். வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில் அந்த ஊர் இளையவர்கள் பலே கிலாடிகள். வீடில் வந்து எதுவுமே சொல்ல மாட்டான் தபால் அதிபர் இருவருடதுக்கு ஒரு முறை மாற்றம் பெறுவார்கள். இடையில் அவர்களது குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கவும் அனுப்ப படுவான் . காலையில் , காக்கி சட்டையுடன…
-
- 3 replies
- 1.1k views
-
-
முன்னுரை ....இது ஒரு பயணக் கட்டுரை அல்ல. ..ஏனெனில் பயணம் என்றால் ஒரு வாரம் அல்லது இரு வாரம் மட்டும் ஒரு ஊருக்கு அல்லது நாட்டிற்கு போய் அது பற்றி எழுதுவார்கள். ஆனால் நான் 5 வருடங்களுக்கும் மேலாக வசித்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். அதில் டுபாய் எனும் மற்றவர்களால் சொர்க்கபுரி என கருதப் பட்டு என்னால் பாதி நரகமாகவும் பாதி சொர்க்கமாகவும் உணரப் பட்ட ஒரு ஊரிலும் பக்கத்தில் உள்ள சார்ஜா ஊரிலும் (உண்மையில் இவை மாநிலங்கள்: UAE: Semi federal country ) நான் வாழ்ந்த கதை. சின்ன புள்ளைகள் இதனை வாசித்தால் கெட்டுப் போயிடும் என நினைக்கும் அப்பாமார், அம்மாமார் இந்த தொடரை இரவில் யாருக்கும் தெரியாமல் வாசிக்கவும் (செம build up அப்பு) இதனை வாசிக்க முன் உங்களுக்கு நிச்சயம் தெர…
-
- 72 replies
- 22.9k views
-