கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மலரே மௌனமா? வசந்தகால ஆரம்பத்தின் இதமான குளிர்காற்று உடம்பைத் தழுவ புரண்டு படுத்த பிரியாவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. இதுவரை தூங்கியது கூட கோழித் தூக்கம்தான். மனதில் விவரிக்க முடியாத விநோதமான உணர்வுகளின் சங்கமம். இன்று தன் மனதுக்கினியவனுக்கு இன்ரவியூ நடக்க இருக்கிறது. அதனால்தான் அவள் மனதுக்குள் பயம் கலந்த மகிழ்ச்சி. காரணம் தன் பெற்றவருக்தும் உடன் பிறப்புகளுக்கும் தெரியாமலே தன் மனம் கவர்ந்த பிரசாந்தை பொன்சர் செய்திருந்தாள்;. இச் செய்தி வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும் என்று மிகக் கவனமாகவே செயற்பட்டாள்;. தனது வீட்டிலிருந்து போன் எடுக்காமல் தன் நண்பியின்; வீட்டிலிருந்துதான் பிரசாந்திற்கு போன் எடுப்பது கடிதத் தொடர்புகூட நண்பியின் வீட்டிற்கு வரு…
-
- 7 replies
- 2.2k views
-
-
மலரின் மலரும் கதைகள் வரிசையில் 2 வது கதை. தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம் இது. பெற்றோரும், பேரர்களும் தொலைக்காட்சிகளின் முன்னே தொலைந்துவிட, செல்போன்களில் சிக்கிக்கொண்ட சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. இவ்வாறான நிலையில் புதியகதை சொல்லியாக வருகிறாள் மலர்.
-
- 0 replies
- 535 views
-
-
மலர்களை அணைத்து... மன்மதி காலையில் ஆபீசுக்கு பத்து நிமிடம் லேட். லிஃப்ட் கதவைத் திறந்து வைத்து, ஸ்டூலில் ஆபரேட்டர் சித்திரக் கதை படித்தான். அவள் லிஃப்டினுள் நுழைந்து "5' என ஒரு கதவு மூடி, இன்னொன்றும் மூட இருந்தது. வியூ ஃபைண்டரில் பார்த்து, கதவுகளைத் திறந்து ஓர் ஆளை அனுமதித்தான் ஆபரேட்டர். வந்த ஆள் "3' என்றான். லிஃப்ட் ஏறியது. அவனின் இடதுகை சரியாகத் தொங்கவில்லை என்பதை மன்மதி கவனித்தாள். புஜம் அருகிலேயே விரல்கள் முளைத்திருந்தன. அவன் மன்மதியைப் பார்த்து, ""எக்ஸ்கியூஸ் மி'' என்றான். ஒரு கடிதம் தந்தான். அதற்குள் லிஃப்ட் மூன்றாவது மாடியில் பொருந்தி நின்றது. "" ஸீ யூ'' என்று அவன் புன்னகைய…
-
- 0 replies
- 853 views
-
-
மலர்விழியும் புது சுடிதாரும்! ஓவியம்:ஸ்யாம் மலர்விழியின் அம்மா அந்த அலமாரியைத் திறந்து, அடுக்கியிருந்த துணிகளில் இருந்து மலர்விழியின் துணிகளை எடுத்துக் கொடுத்தார். ‘‘மலர், ஸ்கூலுக்குப் போகிறப்ப துணிகளை அயர்ன் பண்ணக் கொடுத்துரு. ரெண்டு டவலா எடுத்துக்கோ.’’ ‘‘அம்மா, இதையே ரெண்டு நாளா சொல்லிட்டிருக்கே. நான் சின்னப் பொண்ணு இல்லை, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். சரியா செஞ்சுப்பேன். நீங்க கவலைப்படாதீங்க’’ என்றாள் மலர்விழி. “இப்பவும் சொல்றேன். ஜெயிச்சுட்டு வரணும்னு மனஅழுத்தத்தோட போக வேண்டாம். ரிலாக்ஸா விளையாடு. வீட்டையே நினைச்சுட்டு இருக்காதே’’ என்றார் அம்மா. சதுரங்கம் விளையாடுவதில் மலர்விழி கெட்டிக்காரி. மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றவள், இப்போது …
-
- 0 replies
- 1.2k views
-
-
மலை சாயும்போது! மாலை நேரம் - ஏரிக்கரை சாலை வழியாக, நானும், சந்திரனும், நிதானமாக நடந்து கொண்டிருந்தோம். வீட்டு மனை ஒன்றை பதிவு செய்வது சம்பந்தமாக, சென்னை வந்திருந்தேன்; வந்த வேலை, நண்பர் சந்திரன் உதவியுடன் முடிந்தது. மறுநாள் காலையில் தான் ஊருக்கு, பஸ். அதனால், சந்திரன் வீட்டில் இரவு தங்குவது என்று முடிவாகி, பையை அவர்கள் வீட்டில் வைத்து, டிபன் சாப்பிட்டு, வெளியில் காலாற நடந்து கொண்டிருந்தோம். பல விஷயங்கள் பேசிக்கொண்டு நடந்த போது, சட்டென, கந்தசாமி நினைவு வர, ''கந்தசாமிய பாக்கிறதுண்டா... இந்த பக்கத்தில்தானே அவர் இருந்தார்,'' என்று சந்திரனிடம் கேட்டேன். '…
-
- 0 replies
- 1.1k views
-
-
மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -1 ) இந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். அது ஏன்? அறிந்து கொள்ள ஆழ்கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்... கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் 'இல்லை' என்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
மழலை தெளிவத்தை ஜோசப் திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா, பெரியப்பா, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக் கொண்டு அது நடந்துதான் இருக்கிறது. அதுவும் திடீரென்று யாருமே எதிர் பார்த்திராத விதத்தில். இரண்டு வயதுப் பெண் பிஞ்சின் குஞ்சு விரல்களுக்கு எட்டும் உயரத்தில் குள…
-
- 0 replies
- 735 views
-
-
மழை நண்பன் - சிறுகதை ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப் போவது? சத்யாவிடம் சொன்னால் கோபித்துக்கொள்வான். 'ஏன் நான் வரலையா? நீயெல்லாம் அவ்ளோதான்!’ என்பான். ''15 நாள் இம்ப்ளிமென்ட் புரொகிராம். பெங்களூர் வர்றேன். உன் அட்ரஸ் சொல்லு'' - மாலை வேளை ஒன்றில் அலைபேசியில் அழைத்தான். ''முதல்ல உன் ஆபீஸ் எங்கேனு சொல்லு!'' ''பெலந்தூர்ல!'' ''அய்யோ நான் ஒயிட் ஃபீல்ட்ல இருக்கேன். அது ரொம்பத் தூரம். நீ அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஒரு காமன் பிளேஸ்ல மீட் பண்ணலாமா?'' பெங்களூர் வந்ததும் சத்யா திரும்பவும் அழ…
-
- 0 replies
- 2.7k views
-
-
மழை நின்ற காலத்தில்... குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு. யாரோ என் தோளைத் தொட திரும்பினேன். "நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...'' அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்…
-
- 3 replies
- 1.5k views
-
-
மழை வரும் காலம்-தாமரைச்செல்வி இப்போது நேரம் ஆறு பத்து. ஆறுமணிக்கு வருகிறேன் என்று சொன்னவள் இன்னமும் வரவில்லை. நேரத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது எனக்கு மதிப்பு இருந்ததில்லை. ஆனாலும் ஒருநாள் கூட சந்தித்திருக்காத பெண் மீது எந்த அபிப்பிராயமும் கொள்ள முடியாது என்பதால் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த தாமதத்திற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். புறப்படும் நேரத்தில் யாராவது விருந்தினர்கள் வந்திருக்கலாம். அல்லது அவசர தொலைபேசி அழைப்புக்கள் உரையாடல்கள் நேரத்தை விழுங்கியிருக்கலாம். அல்லது காரில் வரும் போது போக்குவரத்து நெரிசல் காரணமாய் தாமதமாகியிருக்கலாம். எதுவோ…. அந்தப் பெண் இன்னமும் வரவில்லை. படத்தில் பார்த்ததை வைத்துத்தான் ஒருவருக்கொருவர் அறி…
-
- 0 replies
- 1k views
-
-
மீண்டும் ஒரு தொலைபேசி மணி அடித்து நல்ல நித்திரையை குழப்பியது .கதைத்து கேட்கிறது .ஏதோ பதட்டம் .தெரிகிறது.. அவர்களின் வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தில். சந்தோச செய்தியோ துக்க செய்தியோ .என்னவோ என்று ஏக்கம் என்னுள்.இப்படித்தான் ஒரு முறை நடு இராத்திரி தாண்டி ஒரு விடியலில் இலங்கைக்குள் கடல் புகுந்து விட்டதாம்.அது ஏதோ புதிதாக சுனாமியாம் என்னவாமோ என்று ....செய்தி வந்தது .அது போல இப்பவும் வெள்ளம் மழை காற்று புயல் சனம் என்ற சொற்கள் அங்கு அடுக்கப்பட ..என்னையும் மீறி என்னை அமிழ்த்தி வைத்திருக்கும் போர்வையை விலக்கிக் http://sinnakuddy.blogspot.com/2008/12/blog-post.html
-
- 5 replies
- 1.4k views
-
-
மழைக்கால இரவு. - தமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான 'மழைக்கால இரவு' இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். - பதிவுகள் - அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிரு…
-
- 11 replies
- 2.9k views
-
-
இந்த பக்கத்தில் இன்னது என்று இல்லாமல், நாளாந்தம் நடக்கும், மனசுக்குள் எழும், கேட்கும் விடயங்களை எழுதலாம் என்று ஆரம்பிக்கின்றேன். தினசரி குறிப்புகள் போல்..... வழக்கம் போல இடையில் விட்டு விடுவேனோ என்றும் தெரியாது *********************** என் மகள் தன் தொட்டிலில் இருந்து (crib) பால் குடிப்பதற்காக தாயிடம் வந்தவள், பாலைக் குடித்த பின் சும்மா இருக்காமல் பக்கத்தில் படுத்து கொண்டு குறட்டை விட்டு இருந்த என் மூக்கின் இரு துவாரங்களிலும் தன் பிஞ்சு விரல்களை நுழைத்த போது வந்த தும்மலில் தான் என் காலை விடிந்தது. மிகவும் வித்தியாசமாக விடிந்த போதே இன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அவளை முத்தமிட்ட பின் (வாய் கழுவாமல் தான்) எழும்பி குளித்து TTC b…
-
- 44 replies
- 4.7k views
-
-
முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம். 3 வயதில் என்ற என்னுடைய பதிலுக்கு வேறு என்ன செய்ய முடியும் ? நினைவுக்கே வராத அந்த வயதில் நான் பார்த்தாக இரண்டு பேர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். ஒன்று. அழ அழ அம்மாவிடம் என்னை விட்டு சென்ற அம்மாச்சி. மற்றொன்று, இலங்கை பயங்கரம் பற்றிய கண்காட்சி ஒன்றில் அப்பா கை நீட்டி சுட்டி காண்பித்த புலியுடன் நின்று கொண்டிருந்த இளம் வயது பிரபாகரன். பார்த்தவுடன் என்ன தோன்றியது என்று ஞாபகம் இல்லை. ஆனால் ஞாபகம் தெரிந்த முதல் நாளில் அன்பையும் தோன்ற வைத்த முதல் மனிதர். வயதானவர்கள் கூடி நிற்கும் கூட்டத்தில் வேடிக்கை பொருளாக என்னை வைத்து விளையாடும் சிறு வ…
-
- 0 replies
- 1k views
-
-
[size=6]மழையின் கொலை....[/size] [size=5]- மாறணி[/size] [size=4]வானுக்கு பூமியிடம் என்ன கோபமோ தெரியவில்லை. அதிகாலை 3மணிக்கு பெய்யத் தொடங்கிவிட்டது மழை. இடியும் மின்னலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்க அந்த சத்தத்தால் வந்த தூக்கமும் பறந்து போனது. தூக்கம் வரவில்லை. பலயோசனைகள் எழ கண்ணை மூடியும் உறங்காது விழித்திருந்தேன். அப்போதுதான் ஆற்றோரம் வாழும் லலிதாப் பாட்டியின் ஞாபகம் மூளைக்குள் தட்டியது. ஐயோ அந்தப் பாட்டி பாவம். பெய்த மழைக்கு வெள்ளம் பாறைகளையும் புரட்டிக்கொண்டல்லவா போகும். இந்த முறை நிச்சயம் லலிதா பாட்டியின் வீடு வெள்ளத்துக்குள் அகப்பட்டுப்போயிருக்கும். அவளால் ஓடவும் முடியாதே. கடவுளே லலிதா பாட்டியைக் காப்பாற்று என்று கடவுளை வேண்டியவாறு அருகில் படுத்திருந்த …
-
- 0 replies
- 588 views
-
-
மழையே... மழையே... உச்சி வெயில் நெருப்பாய் சுட்டெரித்தது. கையில் பூக்கூடையுடன், காலை இழுத்து இழுத்து நடந்தபடி, மரத்தடி நிழலில் ஒதுங்கினாள், பொன்னம்மா. அவளின் ஒரு கால் பிறவி ஊனமாகவும், ஒரு கண், மாறு கண்ணாக இருந்ததாலும், அவளின் இயக்கம் மந்தமாகவே இருந்தது. அத்துடன், மன வளர்ச்சி கூட சிறிது குறைவு தான். ஆனாலும், தினந்தோறும், பூ மார்க்கெட் சென்று, பூ வாங்கி, கட்டி, தெருத் தெருவாய் விற்று, அந்த பணத்தில், சமைத்து சாப்பிடுவாள். இரக்கப்பட்டு யாராவது எதையாவது தந்தால் வாங்க மாட்டாள். எப்போதும், வெயிலிலும், மழையிலும் போராடுபவளாயிருந்தும், இந்த ஆண்டு வெயிலை, எல்லாரையும் போல் அவளாலும் தாங்க முடியவில்லை. காடு, கழனிகள் காய்ந்து விட…
-
- 0 replies
- 863 views
-
-
மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?' இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அ…
-
- 1 reply
- 1k views
-
-
ஒரு விபத்து போலதான் அது நடந்தது. செல்வநாயகம் மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது. அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப் புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும். ஜோர்ஜ் மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில் இருந்து வந்தவர். அவர் கழுத்தினால் மட்டுமே கழற்றக்கூடிய மூன்று பொத்தான் வைத்த முழங்கை முட்டும் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய முகம் பள்ளி ஆசிரியருக்கு ஏற்றதாக இல்லை. வாய்க்கோடு மேலே வளைந்து எப்போதும் …
-
- 0 replies
- 656 views
-
-
மாகாளி ”முனி மொட்டைப் பனையில உக்கிரமா இருக்கு” என்றார் பேயோட்டி. ராமசாமி திடுக்கிட்டு, ஆட்டோவில் இருந்தபடியே மொட்டை மரத்தைப் பார்த்தார். பொட்டல்வெளியில் பனைமரம் ஒன்று, வெயிலில் காய்ந்துகொண்டிருந்தது. மற்ற நேரமாக இருந்தால், ராமசாமி பேயோட்டியை கிண்டல் செய்தே ஓட வைத்திருப்பார். இப்போது ஒன்றும் சொல்ல முடியாமல் மென்மையாக “ஒன்னும் எனக்குத் தெரியலியே” என்றார். பேயோட்டி சிரித்தபடியே “ஒருவகையில பேயும் சாமியும் ஒன்னுதான்..ஒரு சின்ன திரை தான் நமக்கும் அவங்களுக்கும் இடையில!....இருக்குன்னு முழுசா நம்புனீருன்னா, திரை விலகிடும்” என்றார். ஆட்டோ ஊரை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லையில் இருக்கும் காலனிப் பகுதி கண்ணிற்குத் தெரிந்தது. ராமசாமிக்கு பேயோட்டி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மாங்குடி மைனர் - சிறுகதை சிறுகதை: பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம் `மாங்குடி மைனர் இறந்துவிட்டார்' என்றது பேட்டை வாழ் பெருமக்களுக்கு அத்தனை மகிழ்வானதொரு செய்தியாகத்தான் இருந்தது. முக்கியமாக மைனரின் மூன்று மனைவிகளுக்கும் நெஞ்சம் குளிர்ந்து, முகம் ஒருவிதப் பூரிப்படைந்திருந்தது. தனது எண்பத்திரெண்டு வயதில் இத்தனை ஆன்மாக்களை சந்தோஷமடையச்செய்த மாங்குடி மைனர், பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தபடி முறுக்கிய மீசையில் ஜபர்தஸ்தாக காட்சியளித்்தார், அகன்று விரிந்த முகத்தில் பட்டையைப் போட்டு நடுவில் வட்டமாகப் பொட்டு வைத்திருந்தனர். டுப்பு டுப்பு என்று ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த மைனரின் புல்லட்டை பேரன்களும் பேத்திகளும் ஏறிக்கொண்டு ஓட்டுவதாகப் பாவனை செய்து கொண்டிருந…
-
- 1 reply
- 4k views
-
-
மாசு எனக்கு இன்றைக்கு பள்ளிக்குக் கிளம்பவே மனம் இல்லை. என்னமோ மிகவும் பாரமாகத்தான் இருந்தது. நினைவெல்லாம் மதுவைச் சுற்றியே இருந்தது. ஆனால் கால்கள் மட்டும் பழக்க தோஷத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றன. இன்று உடலுறுப்பு பற்றி ஸ்கூலில், பாடம் நடத்த வேண்டும். எந்த மெட்டீரியலும் தயார் செய்து கொள்ளவில்லை. பஸ் வந்து நின்றது. அவசர அவசரமாய் ஏறிய எனக்கு நல்ல வேளை உட்கார இடம் கிடைத்தது. கொஞ்ச நேரம் டெக்ஸ்ட் புக்கைப் புரட்டினால், இன்று எடுக்கப் போகும் புது பாடத்தின் மெட்டிரியல்களைக் கொஞ்சம் சேகரித்துக் கொள்ளலாம். புத்தகத்தைப் புரட்டி, அதற்கான பக்கத்தையும் எடுத்துப் பிரித்துக் கொண…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆறாயிரம் சதுர அடியில் அமைந்த தனது பிரமாண்ட பங்களாவின் போர்ட்டிகோவில் சாய்மர நாற்காலியில் அமர்ந்து இங்கிலீஷ் பேப்பரை வரி விடாமல் மேய்ந்துகொண்டிருந்தார் ராஜமன்னார். பக்கத்து காலி இடத்தில் புது பங்களா உருவாகிக் கொண்டிருந்தது. ஏழடி மட்டம் கட்டிடம் உயர்ந்திருக்க, லிண்டல் கான்க்ரீட் போட்டுக் கொண்டிருந்தார்கள். பணியாட்களின் சத்தம், மேஸ்திரியின் புலம்பல்... இதற்கு நடுவே சித்தாள்களின் பீடி புகை நாற்றம்... வாடை குமட்டியது ராஜமன்னாருக்கு. ‘கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்கிறானே! கூப்பிட்டுக் கண்டித்துவிட வேண்டியதுதான்’ - தீர்மானத்தோடு அவர் எழுந்திருக்க, அப்போது அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்ட்டிகோவில் வந்து நின்றது அரசு அலுவலக கார் ஒன்று. …
-
- 1 reply
- 1.5k views
-
-
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது. அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார். பக்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவ…
-
- 0 replies
- 768 views
-
-
மாடும் மனிதனும் விந்தன் மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமா என்று கேள்விப் பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர். "என்னடா பயல்களா, என்ன சேதி?'' "பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்...!'' "வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!'' "முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்...!'' "ஆமாம், அதற்கென்ன இப்போது?'' "அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்...!'' …
-
- 0 replies
- 1.2k views
-