கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
ஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு பொம்மி கேட்டைப் பிடித்துக்கொண்டு நின்றாள். உடையில் மிகக் குறைவாக மூன்று நான்கு சிறிய மற்றும் சற்றே பெரிய கிழிசல்கள் மிக நேர்த்தியாகப் 'பின்' போட்டு மூடப்பட்டிருந்தது . எண்ணெய் சீப்பைக் காணாத முடி, சிக்குப்பிடித்து உருட்டையாக மேலே தூக்கி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தக் கோலத்தில் கூட அழகான உருண்டைக் கண்கள் பளிச்சிட்டு ஏதோ ஒரு வசீகரத்தைச் சொன்னது. "பாப்பா....யாரு ரத்தினத்தோடு பொண்ணா? வா, கிட்ட வந்து குந்து....தாத்தா புல் புடிங்கித்தாரேன்...ஓரமா எடுத்துப் போடு...வா...." முண்டாசு கட்டிய தோட்டக்காரக் கிழவன் வேலைக்கு ஆள் தேடினான். …
-
- 1 reply
- 1k views
-
-
செவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை ஏக்நாத் - ஓவியங்கள்: ரமணன் மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக்கொண்டார். தூரத்…
-
- 1 reply
- 2.8k views
-
-
'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்..... அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், ’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்? உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!! மிருதுளன் மீண்டும் அபையோர் வணக்கம் சொல்லி, காதல் எனும் தலைப்பில் பேச வந்திருப்பதாகத் தொடர்ந்தான். காதல், கேட்கும் போதே உணர்வுகளைக் கட்டிப் போடக் கூடிய சொல். பசிக்கும் …
-
- 1 reply
- 1.3k views
-
-
"அன்பின் வெகுமதி" இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில் 'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் …
-
- 0 replies
- 345 views
-
-
யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக…
-
- 1 reply
- 1.2k views
-
-
போராளிக் கணவனோடு மகளையும் பிரிந்த அவலம் **பிரபாஅன்பு** அக்கா என்ன சொன்னாலும் ஓம் என்று கேட்டு மறுப்பு சொல்லாது கேட்டுக்கொண்டிருப்பவள்தான் நான்,போராட்டமும் அழிஞ்சு போச்சுது கட்டிய கணவனும் இல்லை. சிறு பிள்ளைகளோடு நான் கஸ்ரப்படுகிறேன் என்றுதான் அக்கா இப்படியொரு முடிவெடுத்தா என்பது புரிகிறது.ஆனால் பெண் பிள்ளைகள் இருவரை வைச்சிருக்கிற நான் இப்படிஒரு முடிவெடுத்தது சரியா..? பிழையா என்பதற்கு அப்பால் என் கணவனோடு நான்வாழ்ந்த நினைவுகள் இன்னும் ஈரம் உலராமலே பசுந்தளிராக இருக்கும்போது எப்படி இன்னொரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியும்..? உடலும் உள்ளமும் ஒருவனுக்கு என்று மட்டும் நினைத்து வாழ்பவள்தான் நான்,அதுவும் போராடப்போய் மண்ணின் விடிவிற்காக இலட்சியத்தோடு இறுத…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும். நாங்கள் திரும்பிப் பார்க்கிறனாங்கள் தான். பின்னையென்ன? இஞ்சை கவனிங்கோடா தம்பியவை என்று ஒரு குரல் சொல்லேக்கை கழுத்தை திருப்பி பார்க்காட்டா அவன் மனிசன் இல்லை கண்டியளோ! அனேகமாய் அது எங்கடை பக்கத்து வகுப்புத்தான். நாங்கள் உயிரியல். அந்த வகுப்பு மற்ஸ் காரரின்ரை. ஏல் ரியுசனெண்டா அப்பிடித்தான். ஒரு சின்னத்தட்டியாலைதான் வகுப்பு பிரிபட்டிருக்கும். அதாலைதான் எங்கடை காலத்திலை ரியுசனுக்கு கொட்டில்கள் என்ற பெயரும் இருந்தது. பழையாக்கள் சிலவேளை குழம்பிப் போவினம். அவையளுக்கு கொட்டில் என்றா கள்ளுக் கொட்டில்தான் விளங்கும். வேலாயுதம் எண்ட பெயர் கொமனோ தெரியாது. மணி ரியுசன் வேலாயுதம் மாஸ்டர் ( கனபேருக்கு அவரை கிளி மூக்கு எண்டாத் தான் தெரி…
-
- 32 replies
- 4.4k views
-
-
நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன். தமிழில்: ஆர்.சிவகுமார் கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒரு ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்ணைச் சுழட்டிக்கொண்டு வந்தது. மூன்று நாளாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமில்லை. ஒழுங்கான குளிப்பு முழுக்கு கக்கூசு என்று ஒன்றுமில்லை. ரவியண்ணை வீட்டு விறாந்தையில் கிழங்கு அடுக்கின மாதிரி படுக்கிற இருபது இருகைத்தந்து பேர்களில் போன இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவணைக் கண்ணயரவே விடுவதில்லை என்று பிளான் பண்ணியிருந்தார்கள். க்ர்.. புர்.. என்ற அவர்களின் குறட்டைக்கு கவிண்டு படுப்பதும் காதுகளைப்பொத்திப்படுப்பதும் என்று இவனும் உள்ளநாட்டு ட்ரிக்சுகளைப் பாவித்துப்பார்த்தான். தீபன் அப்பப்ப தன் காலைத்தூக்கி இவனின் தொடைக்குமேல போட்டு அவ்..உவ்.. என்று புரியாத ஏதோ மொழியில் …
-
- 4 replies
- 1.4k views
-
-
துணையானாள் எஸ். கருணானந்தராஜா தமிழ்நாடு காவியன் இலக்கியப் பரிசுத்திட்டத்தில் தெரிவான சிறுகதை இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முத…
-
- 1 reply
- 1.3k views
-
-
திசை மாறிய பறவை! அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?' 'வீட்டை வித்துட்டீங்களா?' 'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர். தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை. பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை. குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம
-
- 4 replies
- 1.8k views
-
-
முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன் இயக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலியடைக்கப்பட்ட முகாமிலேயே முத்தப்பாவை முதன்முதலாகக் காண நேர்ந்தது. அதற்கு சிலமணி நேரங்களின் முன்பாகக் கீழ்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. நான் காட்டின் ஒற்றையடிப் பாதையிலிருந்து வெளியேறி கிரவல் தெருவிற்கு வந்திருந்தேன். அப்பொழுது நள்ளிரவு தாண்டியிருந்தது. பகலென்றால் புழுதி பறக்க இரைச்சலில் அலறும் தெரு இரவில் முகக்குப்புற கவிழ்ந்ததைப் போல அடங்கிக் கிடந்ததைப் பரிதாபத்துடன் பார்த்தேன். கலங்கலான நிலவின் வெளிச்சம் அந்தரமான ஓர் உணர்வை ஏற்படுத்திற்று. இங்கிருந்து இடது புறத்திலிருக்கிற மாங்குளம் சந்திக்கு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் நடந்து…
-
- 7 replies
- 1.8k views
-
-
வணக்கம் என்னினிய உறவுகளே சுமார் ஜந்து வருடங்களுக்கு பின் நான் வன்னிபெருநிலப்பரப்பின் மையமாக விளங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்க்கு பயணித்தபோது என் மனதில் அழியாது சுழன்று கொண்டு இருக்கும் சிங்களஅரசின்வலிந்த போரின் கொடுரங்களை யாழ் உறவுகளுக்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன்................
-
- 24 replies
- 3.4k views
-
-
இசையும் கதையுமாய் இணைந்து வரும் ஓர் தொடர்!. காதல்" சொல்லிய காதல் - 1 என்றென்றும் என்னை நேசிப்பவனே, நலமா நீங்கள் என்று கேட்க முடியவில்லை என்னால் அதற்குரிய தகுதி எனக்கு இருக்கிறதா என்று புரியவில்லை. என்னை நேசித்த நெஞ்சம் இன்று என் தாயக மண்ணை நேசித்து; மண் மீட்பிற்காய் தன்னை அர்பணித்துக்கொண்டதாய் என்று கேள்விப்பட்டேனோ அன்றே என்னை நினைந்து வெட்கம் கொள்கின்றேன். முதல் முதலாய் என்னை நேசித்தவனை என்னால் நேசிக்க முடியவில்லை; ம்ஹீம் 'காதல்' படம் பார்த்த பின்னர் தான் அதன் காரணம் நான் என்று அறிய முடிந்தது என்னால். எத்தனையோ காயங்கள் என்னை காய வைத்த போதெல்லாம் உங்களின் ஈர நினைவுகள் தான் மருந்தெனக்கு. "அவ சிரிச்சா இன்னும் ரொம்ப அழகா இருக்காடா" அ…
-
- 88 replies
- 9.3k views
-
-
கூடுகள் சிதைந்தபோது......... ---------------------- கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்க…
-
- 6 replies
- 4.2k views
-
-
பேரூந்து தரிப்பிடத்தில் நின்றது. சாளரம் வழி தற்செயலாக அவளைக் காண்கிறேன். அழகிய, விரிந்த நீண்ட கருங் கூந்தல் காற்றில் பறக்க அவள் நின்று கொண்டிருந்தாள். காற்றில் பறந்த ஒற்றை முடி அவள் கன்னங்களில் படர்ந்து கதை பேசி கொண்டிருந்தது. காதில் தொங்கிய தூக்கணங்கள்.. ஆடி ஆடி அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன. என்ன ஒரு அழகு. நாள் முழுதும் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. அவளைக் கண்டது முதலாய் ஜொள்ளு வடித்துக் கொண்டே இருந்தேன். என்னை ஒரு தடவை நோக்காளா என்று என் கண்கள் அவள் பார்வைக்காய் ஏங்க.. அவளோ பார்வையால் வேறு எங்கோ குறியாய் இருந்தாள். சா.. அவள்..இந்தப் பேரூந்தில் ஏறி என் அருகில் வந்து அமரமாட்டாளா என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்க, ஏக்கம் தணிப்பவளாய்…
-
- 46 replies
- 6.3k views
- 1 follower
-
-
பிரிவு எப்போதும் பிளவு அல்ல .................. கண் நிறைந்த கண் அவனுக்கு (கணவனுக்கு ).......நீ சில நாட்களாக தொடர்பு கொள்ளாத் போதும், எனது தொலைவில் நின்று பேசாத போதும் உன்னை நான் மறக்கவில்லை. மறக்க கூடிய உறவா அது ...பள்ளி பருவத்திலே விழியில் விழுந்து ... இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவல்லவா? ...காலம் உருண்டு ஓடினாலும் கரையாத உறவல்லவா? எத்தனையோ எதிர்ப்பு வந்த போதும் , எதிர் நீச்சல் போட்டு ..உயிரோடு கலந்த உறவல்லவா? வேலை பளுவா? கடன் சுமையா? உடல் நலமின்மையா?...... கண்ணா ஓர் வார்த்தை பேசு ... கண்மணிகள் போல இரு செல்வங்கள் ..கண் அயரும் பொது அப்பா எங்கே என்று ... மனைவீ மக்களுடன் வாழ்ந்து விடுவாள் ... ஆனால் கணவனால் அது முடியாது. இதை உணர்ந்து இருப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற கடவுளே, இன்னைக்காவது வேலை கிடைக்கணும்...' மனதுக்குள் உருக்கமான வேதனையுடன் அவன் வேண்டுதல்.. அது கடவுளை சென்றடைந்ததா என்று காத்திருந்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. இடது கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் மேலும் அவசர அவசரமாக .. நடக்கலானான்.. கோயில் வாசல்.. கழற்றிவைத்த பாதணிகளை பெறுவதற்கு அந்தப் பையனை வேறு காணவில்லை.. 'எங்க போனான் இவன்?' என்று யோசித்துக்கொண்டிருந்தவனி
-
- 6 replies
- 1.6k views
-
-
காலரா காலத்துக் காதல்: ஒரு கரோனா கால வாசிப்பு! கரோனா காலகட்டத்தில் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் புத்தகம் படிக்க கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் பலரும் கொள்ளைநோய்கள் தொடர்பான நூல்கள், குறிப்பாக நாவல்கள் படிப்பதாகத் தெரிகிறது. இவற்றில் முன்னணி இடம் வகிப்பது ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்). இந்தக் கொள்ளைநோய் நாவல்கள் பெரும்பாலும் துயரகரமானவை. ஏற்கெனவே, கரோனாவின் கொடும் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமக்கு இத்தகைய நாவல்கள் மேலும் மன உளைச்சல் தரக்கூடும். கொள்ளைநோய் பின்னணியில் அமைந்த, ஆனால் வாசிப்பதற்கு சுகமான நாவல் என்றால் அது காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘காலரா காலத்துக் காதல்’ (லவ் இன் தி டைம் ஆஃப் காலரா) நாவலாகத்தான் இர…
-
- 0 replies
- 546 views
-
-
மான்டேஜ் மனசு 13 - தொட்டு தொட்டு போகும் 'காதல்' கணேசகுமாரனின் 'மிஷன் காம்பவுண்ட்' நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது. வலி, அழுகை, வன்முறை, மரணம், தற்கொலை, கொலை என்ற சொல்லாட்சிகளுடனும், உள்ளடக்கத்துடனும் சிறுகதைகள் எழுதும் கணேசகுமாரன், காதலர் தினத்தில் தொகுப்பை வெளியிட்டது நகை முரண்தான். ஆனால், கணேசகுமாரன் அன்பைதான் வெவ்வேறு வடிவங்களில் கதாபாத்திரங்களின் வழியாக சொல்கிறார் என்பதை மறுக்க முடியாது. கணேசகுமாரனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு அரங்கத்தில் இருந்து நகர்ந்தேன். விழாவில் சாரு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் பேசியதோடு, சில காதல் கதைகளையும் சொன்னார். அப்போதுதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
பெருமாள் உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது, அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது. மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது, அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது. அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது…
-
- 1 reply
- 736 views
-
-
அன்று கடும் வெக்கையாக இருந்ததால் மாலைக் காற்றின் ஈரலிப்பில் களித்திருக்க வீட்டுத்தோட்டத்துக்கு வந்த நந்தினி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கூலா ஒரு கோலா குடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்போது அவள் அருகே இருந்த செவ்வரத்தையில் இரண்டு சிட்டுக்குருவிகள் அருகருகே இருந்து அலகுகளால் ஒன்றை ஒன்று கோதியபடி காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து வியந்து கொண்டே ஆகாயத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டாள். அப்போது வீட்டு கேற்றடியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஓ.. சங்கர் வந்திட்டார் போல. அவருக்கும் ஒரு கோலா எடுத்துக் கொண்டு வந்து வைப்பம்.. களைச்சு விழுந்து வந்திருப்பார் என்று எழுந்து நடக்க முயன்றவளுக்கு சங்கரின் அவசரத்துடன் கூடிய அதட்டல் காதில் விழுந்தது. நந்தின…
-
- 26 replies
- 2.4k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், முன்பு எழுந்தமானமாக எழுதத்தோன்றும் போதெல்லாம் எழுதமுடிந்தது. இப்போது காலம், சூழ்நிலை பார்த்தே எழுதவேண்டியுள்ளது. இதனால் முன்புபோல் நம்மால் அடிக்கடி அங்கும் இங்குமாக ஆக்கங்களை படைக்க முடியவில்லை. ஆயினும்.. யாழ் இணையத்துடன் - நம்மைப்போன்ற வலைத்தள கருத்தாளர்களுடன் நீண்டதூரம் பயணம் செய்து அண்மையில் அமரத்துவம் அடைந்த 'வசம்பு' என அழைக்கப்படும் மதிப்புக்குரிய ‘சிவஞானசுந்தரம் கிருபானந்தன்’ அவர்களை நினைவுகூர்ந்து ஓர் ஆக்கத்தை படைக்கவேண்டிய கட்டாயத்தை எனது உள்ளம் கடந்த சில நாட்களாக வலியுறுத்தியது. ஆரம்பத்தில் இரண்டு வரிகளாயினும் ஓர் கவிதையாக - அஞ்சலிப்பா எழுதலாம் என்று பார்த்தேன். கவிதை எழுதுவதற்குரிய உளநிலை எனக்குள் ஏற்படவில்லை. எனினும்.. …
-
- 46 replies
- 5.8k views
-