கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
முகம் - போகன் சங்கர் நான் அவளை உணர்வதற்குள் மிக நெருங்கியிருந்தேன். சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு, மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்து கொண்டு நேராகப் பார்க்கையில், ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாகத் துலங்கினாள். தெருவில் அவ்வப்போது யாராவது எச்சரிப்பது உண்டுதான். “சார் ராத்திரியில அந்தியில சூச்சிச்சிப் போணும். அந்தப் பாலத்துலே ஒரு சூலி வாதை உண்டாக்கும்.’’ “சூலி வாதைன்னா?” “நிறைகர்ப்பத்துல செத்துப்போன பொண்ணு.” “செத்தா போனா? கொன்னு தாழ்த்தியது” என்பார் ஒருவர். “யார் கொன்னது?” “யாரு கொல்வா?அவளோட தந்தையோ உடம்பிறந்தானோ பர்த்தாவோ காமுகனோ அரசனோ...” “எப்போ ந…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஒரு மூன்றுவருடங்கள் இருக்கும். இருள் கெளவ்விய மாலைப் பொழுதில் ஆயிரக் கணக்கானவர் மத்தியில் ஒழுங்காகக் அடுக்கப்பட்டிருந்தன அவை. சாம்பலும், கறுப்புடன் இடையிடையே வெள்ளையும் கொண்டு பூசப்பட்ட கல்லறைகள். ஒவ்வொரு கல்லறையின் தலையிலும் மண்ணுக்காக மரித்துப் போன தெய்வங்களின் திருவுருவப் படங்கள். நானும் மாவீரர் குடும்பம்தான், ஆனால் எதற்கு முன்னால் போய் நிற்பது?அங்கிருந்த எல்லோருக்கும் மலர்தூவ எனக்கு ஆசைதான், ஆனால் ஒவ்வொரு படத்தினதும் முன்னால் அந்ததந்தக் குடும்பங்கள் அழுதுகொண்டிருக்க நான் எப்படி...........முடியவில்லை. முகவரி தெரியாத கல்லறை தேடிக் கண்களும், கூடவே கால்களும் சேர்ந்துகொள்ள அடுக்கப்பட்டிருந்த கல்லறைகளிலே அதனைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஓரத்தில் அது இருந்தது. படம…
-
- 6 replies
- 1.4k views
-
-
முகவரி தொலைத்த முகங்கள். மலைகள் இதளிற்காக.. சாத்திரி..பிரான்ஸ் ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள் பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு இறந்து போயிருந்தாள். இப்போ இந்த வீட்டில் வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை வரதன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது மகள் ரைகர் என்று வைப்போம் என…
-
- 26 replies
- 3.4k views
-
-
காதலென்னும் கற்பிதம்.... அன்புள்ள ...... ( உன்னை மறந்து போனதற்கான கடைசி சாட்சியாய் இந்தக் கடிதம்.) தெரிந்தோ தெரியாமலோ காதல் ஒரு முடிவற்ற வேரைப் போல் உடல் முழுக்க சுற்றிப் படர்ந்திருக்கும் மரம் நான். என்னால் யாரையும் வெறுக்க முடியாது, காயப்படுத்துகிறவர்களையும் சேர்த்து காதலிக்கும் சாபம் பெற்றவன் நான். காதலின் மகத்துவம் காயப்படுதலில்தான் இருக்கிறதென நம்புகிறவன். அதனாலேயே நீ தந்த எந்தவொரு காயமும் எனக்கு பிரதானமாய் தெரிந்திருக்கவில்லை. நமக்கிடையிலான காதல் விளையாட்டுத் தனமாய் துவங்கி முடிந்ததில் நம்மைத் தவிர அதிகமும் வியப்பு கொண்டது வேறு யாராகவும் இருக்க முடியாது. அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில் எப்படி வாழக் கூடாதென்பதற்கு உதாரணமாய் சில விசயங்களை நீ கற்றுக் கொள்வாய் என…
-
- 3 replies
- 2.3k views
-
-
முக்குளி வாத்துகளின் கதை சிறுகதை: மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சின்ன முட்டிகளின் மீது நெற்றியை வைத்துக்கொண்டு ஒரு நத்தை ஊர்வதைப் போல மெள்ள நகர்ந்துகொண்டிருக்கும் இந்தத் தினங்களின்மீது, குட்டி முயல் பார்வைகொண்ட தேவதையாகக் காத்திருக்கும் என் பரிபூரணமான ஸ்ரீ குட்டியே... நீ என் வேர்களுக்கு இடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நம் மண் எத்தனை செழிப்பானது என்பதற்கு, நம் முற்றத்தில் திடீரென முளைத்திருக்கும் இந்த மாமரமே சாட்சி. நீ கொஞ்சம் அப்படியே இரு. அதோ மெள்ள ஊர்ந்துபோகும் அந்த நத்தையைப் பார்த்துக்கொண்டே இரு. அது தன் கூடு அடைவதற்குள், நான் உனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். பதற்றப்படாதே... கதை என்றதும்…
-
- 0 replies
- 5.6k views
-
-
முக்தி பவனம்... சிறுகதை: போகன் சங்கர், ஓவியங்கள்: செந்தில் முக்தி பவனம்... அகோபிலத்தில் வைத்துதான் இந்தப் பெயரை நான் முதன்முறையாகக் கேள்விப்பட்டேன்.அகோபிலத்துக்கு மழைக்காலத்தில் போவது அவ்வளவு உசிதமானது அல்ல. ஆனால், நான் என் வாழ்க்கையில் எது உசிதமானது... எது உசிதமற்றது என்று எல்லாம், நின்று யோசிக்கிற மனநிலையில் இல்லை. எனக்கு எல்லாவற்றிலும் இருந்து எங்கேயாவது தப்பித்துப்போக வேண்டும்போல இருந்தது. கொஞ்ச நாட்கள் கேரளத்தில் சுற்றினேன். நாராயணகுருவின் ஆசிரமம் இருக்கும் வர்க்கலையில் ஒரு மாதம் இருந்தேன். மனம் கொஞ்சம் அமைதியானதுபோல இருந்தது. அங்கே உள்ள கடற்கரையில் நடுவெயிலில் தோல் பொரிய நிற்பேன். மாலை நேரங்களில் கடலில் குளிப்பேன். அந்த உப்பு நீர் பட்டு …
-
- 0 replies
- 733 views
-
-
முடியாட்டம் அஜிதன் கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில் அது வெறும் ’பிராந்தங்கடவு’ என்றானது. இப்போது அதை யாரும் எப்படியும் அழைக்க வேண்டியத் தேவை இல்லை. கொல்லத்தில் படகுச் சேவை நிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அருகிலேயே ஐந்து கோடி செலவில் அரசாங்கம் நிர்மானித்த மாபெரும் கான்கிரீட் பாலம் ஒன்று இடைவெளிகள் விழுந்த தன் ராட்சதப் பற்களால் காயலைக் கவ்விப்பிடித்தது போல் குறுக்கே சென்றது. அதில் விரையும் வாகனங்களுக்கும் அவற்றின் பரபரப்புக்கும் தொடர்பே இல்லாதது போல நண்பகலிலும் இறுக்கமான அமைதியில் பிராந்தங்கடவு மூழ…
-
- 0 replies
- 700 views
-
-
முடிவற்ற கண் – ஜிஃப்ரி ஹாசன் அதிகாலை ஆரவாரங்களுக்கிடையே மனிதக் குரல் போல ஒரு சத்தம் தொனித்தது. அந்தரித்து வெளியேறும் ஈனக் குரல் போன்ற ஒலி. வாசலில் ஒரு சிறுமி பிளாஸ்டிக் வாளியுடன் நின்றிருந்தாள். அவளது ஒருபக்க கன்னம் தீயில் வெந்து சதைகள் உருக்கி வார்த்த ஈயக்குழம்பாட்டம் பொத்தென்று நின்றது. ஒரு கண் இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாக உற்றுப் பார்த்தால்தான் விளங்கும் போல் இருந்தது. அந்தப் பக்கப் புருவமும் சீரின்றி தழும்பு போல தெரிந்தது. இலேசாக தலை ஆடிக் கொண்டிருந்தது. அது ஒரு சீரற்ற அசைவு போலிருந்தது. பேசும் போது எதையோ மென்று முழுங்குவது போல தொண்டை அசைந்தது. சில கணங்கள் திடுக்கிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பஷீர். வீட்டுக்கூரையில் காகங்கள் எழுப்பும் சன்னத ஒலியை…
-
- 0 replies
- 458 views
-
-
அந்தி நேரம் இது தான் என்று சொல்ற மாதிரி மரங்கள் நிறைந்த பகுதியினூடாக சிறிது வந்த வெளிச்சம் கூட மங்கி கொண்டு செல்கிறது . பண்ணை கடலில் சூரியன் சங்கமாகி கொண்டிருக்கிறது. மைதானத்தில் சில மாணவர்கள் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்கள் .அதை கவனிக்கிற மாதிரி கொஞ்சமும் அரட்டை பாதி கொஞ்சமுமாக குழுமியிருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் மெல்ல மெல்ல விலகி கொண்டிருந்தார்கள் சுப்பிரமணியம் பூங்காவில் உள்ள லவுட்ஸீபிக்கரிலிருந்து இலங்கை வானொலியில் இருந்து வரும் இன்றைய நேயர் நிகழ்ச்சிக்கு போடும் இசை. நேரம் ஐந்து என http://sinnakuddy.blogspot.com/2007/06/blog-post.html
-
- 1 reply
- 1.3k views
-
-
முதற்காதல் வ.ந.கிரிதரன் - நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முன் தன் டெம்போவை நிறுத்தினான் குணா. 'பரவாயில்லையே குணா சீக்கிரத்திலேயே வந்திட்டியே!" சொல்லியவாறே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, குணாவின் தோளைத் தட்டிக் கொடுத்த செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி முருகேசன், அத்தோடு நில்லாது கடைக்குள் திரும்பி, 'டேய்..நம்ம குணாவுக்கு ஒரு கூல் டிரிங்ஸ் உடைச்சுக் குடுடா!" ஆணையிட்டார். பையன் கொண்டு வந்து கொடுத்த கூல் டிரிங்ஸை வாங்கி தானே தன் கையால் குணாவிற்கு கொடுத்து விட்டு, 'நீ குடி குணா…நான் போய் மூட்டைகளை இறக்க ஏற்பாடு பண்றேன்!" சொல்லிவிட்டு நகர்ந்த அந்த முதலாளியைப். பார்க்கப் பெருமிதமாயிருந்தது குணாவிற்கு. அதே நேரம் உள்ளே, 'ஹூம் டெம்போக்காரனையெல்லாம் உபசரிக்க வேண்டியிருக்கு, இல்லாட்டி வர்ற வழில மூட்டைக…
-
- 0 replies
- 664 views
-
-
கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’ அதிகமான சமூக அக்கறை காரணமாகவோ, இந்த சமூகக்கட்டமைப்பின் மீதான திருப்தியீனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமோ தெரியவில்லை, சரவணன் பேச்சில் எப்போதும் இப்படியான ஒருவித கோபம் தெரியும். இரண்டுமே மணல்தான் என்றாலும் வடமராட்சி கிழக்கின் சிலிக்கா வெண்மணலுக்கும் புல்மோட்டை இல்மனைற் கருமணலுக்கும் எவ்வாறு ஒத்த இயல்புகள் எவையும் இல்லையோ அது…
-
- 1 reply
- 1.3k views
-
-
முதலிரவு கலா பால் சொம்பை ஸ்டூல் மீது வைத்துவிட்டு, கணவன் சிவாவின் காலில் விழப்போனாள். பதறித் தடுத்தான் சிவா! ‘‘வேண்டாம் கலா... எந்தத் தப்புமே செய்யாம நீ ஏன் என் கால்ல விழணும்?’’ கலாவுக்குப் புரியவில்லை!‘‘இனிமே எனக்கு எல்லாமே நீங்கதான். உங்க கால்ல விழறது தப்பில்லைனு எங்க அம்மா அப்பாதான் சொன்னாங்க!’’ - கலா சொல்ல, ‘‘சரி, உங்க அம்மா, அப்பா என்னவெல்லாம் சொல்லி அனுப்பினாங்க?’’ எனக் கேட்டான் சிவா. ‘‘உங்களை அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்... பொறுமையா, விட்டுக் கொடுத்து நடந்துக்கணும்... அப்புறம்...’’ - தொடர்ந்த கலாவைத் தடுத்தான் சிவா. ‘‘என்கிட்ட உண்மையா இருக்கச் சொல்லலியா?’’ ‘‘சொன்னாங்க. எப்பவும் உங்ககிட்ட உண்மையச் சொல்லணும்னு...’’ ‘‘உண்மையச் சொல்றதில்ல... உண்மைய…
-
- 4 replies
- 5.3k views
-
-
:P அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தேன். என் நேரம், கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்க... கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை; பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ, தெரியாது. அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா? திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம். அவளைப் பற்றி எனக்…
-
- 15 replies
- 12.3k views
-
-
வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது. "வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை. அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான். ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும…
-
- 52 replies
- 17.4k views
-
-
அன்று: மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா? ங்... ஒன்று ஆயிரம் ரூபாய்... வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே? இன்று: மச்சி என்ன சோகமா இருக்கெ? ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா? என்னடா.... வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லேமேன் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை. ங்... ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும். * * * ஒரு …
-
- 0 replies
- 758 views
-
-
எனக்கு அப்போ பதினைஞ்சு வயசு தான் இருக்கும். பூனை மீசை இடைக்கிடை அரும்பி இருந்தாலும், தலைவர் பிரபாகரன் மாதிரி பொட்டு அம்மான் மாதிரி (அந்த காலத்தில் மீசை என்றால் அவர்களது மீசை தான் அழகு) மீசை வர வேண்டும் என்று, அப்பாவின் முகச்சவரஅலகை (சேவிங் பிளேடு தானுங்க ..சும்மா தமிழ்ல சொல்லி பார்த்தேன் ) கள்ளமாக எடுத்து வழிச்சும் பார்த்தாச்சு மீசை வளர்ந்த பாடு இல்லை. எங்கட ஊர் பிள்ளையார் கோவிலில் ஐயருக்கு எல்லாமே நாங்க தான், மணி அடிக்கிறது, மடப்பள்ளி கழுவிறது, சாமி தூக்கிறது, மாலை கட்டுறது ஏன் மேளகாறார் வராவிட்டால் மேளம் அடிக்கிறதும் நாங்கள் தான். அதுக்கு லஞ்சமாக பிள்ளையாருக்கு வைச்ச பொரிச்ச மோதகம் கருவறையின் பின் வாசல் வழியாக எங்களுக்கு எப்பவுமே வந்து சேரும். அண்டைக்கும் அப்படி த…
-
- 111 replies
- 15.4k views
- 1 follower
-
-
அப்போ எனக்கு பதினாலு வயசு தான் இருக்கும். வயசுக்கு ஏத்த மிடுக்கும், பருவ வளர்ச்சியும் என்னையும் ஒரு சினிமா கதாநாயகியுடன் ஒப்பிடும் அளவு மனபக்குவத்தை எனக்குள் வளர்த்து இருந்தது. பூப்படைதலுக்கு பின்னான பெண்களின் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்கு புரியவைக்க முடியாது. என்ர முகவெட்டு கொஞ்சம் நடிகை கௌசல்யாவை ஒத்திருந்தமையால் நானும் அவவை போல முடி வெட்டை மாற்றி கொண்டேன். ரோட்டாலே போகும்போது பெடியங்கள் என்னை கௌசல்யா என்று கூப்பிடும்போது, அவங்களை பார்த்து முறைச்சாலும், மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோசம். வீட்டை வந்தவுடனே ஓடி சென்று கண்ணாடிக்கு முன்னாலே நிண்டு தலையை ஒரு கோணலாய் சாய்ச்சு, இடுப்பை வளைச்சு, கண்ணை சிமிட்டி, உதட்டை கடிச்சு எல்லாம் போஸ் குடுத்து பாப்பன். பெடியள் ரோட…
-
- 39 replies
- 4.7k views
-
-
முதல் மனைவி - சுஜாதா சுஜாதா கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. மேனகா சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். பூட்டின வீட்டுக்குள் டெலிபோன் பிடிவாதமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கோபம் இப்போது அவள் பார்வையை மறைத்தது. கைகளை இறுக்க அழுத்திக்கொண்டதால், ரத்தம் செத்து மணிக்கட்டு வெளுப்பாகி இருந்தது. ராஜலட்சுமி, கோபத்தைக் குறை. கோபத்தைக் குறைத்தால்தான் பிளட் பிரஷர் விலகும். பால் வராவிட்டால் என்ன? மேனகா …
-
- 0 replies
- 1.7k views
-
-
முதன்முறை எப்போது.. ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது. அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலைக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு. மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்து போனதற்…
-
- 0 replies
- 2.1k views
-
-
எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர். அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தா…
-
-
- 3 replies
- 578 views
-
-
முதுமைப்பசி! காலையில் எழுந்ததும், மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் அலமேலுவின் முதல் வேலை. காய்கறி செடி, பூச்செடி என்று ஒவ்வொரு செடிக்கும் பார்த்து பார்த்து, பக்குவமாக தண்ணீர் ஊற்றுவாள். அவரைக் கொடி படர்ந்திருந்த பந்தலின் ஓரத்தில் கட்டி விடப்பட்டிருந்த கூண்டில், இரண்டு தேன் சிட்டுகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் பார்த்தாள். தன் குடும்பத்திற்காக உழைத்து, பிள்ளைகளுக்காக வளைந்து, தேவையற்ற பொருளாக தனிமைப்படுத்தப்பட்ட அலமேலுவுக்கு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், தேன் சிட்டுகளை பார்த்து ரசிப்பது மட்டுமே ஆனந்தம். அலமேலுவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
போனவாரம் அப்பாவிடம் தொலைபேசி அழைப்பு . "வாற சனி ஒரு முதியோர் நிகழ்வு இருக்கு நேரம் இருந்தா வா தம்பி " சனி வெளிக்கிட்டு போனேன் ,மண்டபம் நிரம்பிய சனம் .முக்கால்வாசி முதியோர்கள் .மிகுதி அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் .ராதிகா சிற்சபேசன் பிரதம விருந்தினர் ,அதைவிட வேறு சில அரசியல் பிரமுகர்கள் . பேச்சு ,நடனம் ,பாட்டு ,வில்லுபாட்டு ,நாடகம் என்று நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது .முதலில் சிற்றுண்டியும் தேநீரும் தந்தார்கள் .பின்னர் இரவு உணவும் பரிமாறினார்கள் .மிக சிறப்பாக முதியோர்கள் இந்த நிகழ்த்தியதை பார்க்க மிக சந்தோசமாக இருந்தது . அங்கு பேசியவர்களின் உரையை கேட்க எனது அப்பாவை பற்றியும் பெருமையாக இருந்தது . முதியவர்கள் தங்கள் பொழுதை கழிக்க mall இல் பின்னேரம் கூடும் போது அதன் …
-
- 5 replies
- 1.6k views
-
-
முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன் இயக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலியடைக்கப்பட்ட முகாமிலேயே முத்தப்பாவை முதன்முதலாகக் காண நேர்ந்தது. அதற்கு சிலமணி நேரங்களின் முன்பாகக் கீழ்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன. நான் காட்டின் ஒற்றையடிப் பாதையிலிருந்து வெளியேறி கிரவல் தெருவிற்கு வந்திருந்தேன். அப்பொழுது நள்ளிரவு தாண்டியிருந்தது. பகலென்றால் புழுதி பறக்க இரைச்சலில் அலறும் தெரு இரவில் முகக்குப்புற கவிழ்ந்ததைப் போல அடங்கிக் கிடந்ததைப் பரிதாபத்துடன் பார்த்தேன். கலங்கலான நிலவின் வெளிச்சம் அந்தரமான ஓர் உணர்வை ஏற்படுத்திற்று. இங்கிருந்து இடது புறத்திலிருக்கிற மாங்குளம் சந்திக்கு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் நடந்து…
-
- 7 replies
- 1.8k views
-
-
அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது. மிகுதி நாளை எதிர்பாருங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-