கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3076 topics in this forum
-
வழமையை விட இந்தமுறை கூட நாட்கள் எடுத்துவிட்டது. எல்லாம் அந்த தர்மகத்தாவால வந்தது நானும் கொஞ்சம் உணர்சிவசப்படாமல் மற்றவர்களைபோல காலை கீலை பிடிச்சிருக்கலாமொ? இவ்வளவு காசையும்,சொத்துப்பத்தையும் வைத்துக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில அதுவும் தற்காலிகமாக ஒரு 20 குடிசைகளை போடுவமென்றால் குடிசை போட நட்டுவைத்த அத்தனை மரங்களையும் வெட்டி வைத்திருக்கின்றாங்கள் பாவிகள்.வந்த கோபத்தில தர்மகத்தாவின்ர தலையை போட்டிருக்க வேண்டும்.ஏதோ அவன் செய்த புண்ணியம் வாய்ப்பேச்சோட நிப்பாட்டியது.பாவம் எங்கட அகதிகள் தான் சரியாக பயந்து போச்சுதுகள்.இவன் வந்து உள்ளதையும் குழப்பிவிட்டு போகப்போறான் என்று.நாளைக்கு வேலைக்கும் அந்த தர்மகத்தாவை தேடித்தானே அவர்கள் போகவேண்டும்.எதோ கடைசியில் ஒரு பிரச்சனையுமில்லாம…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை பார்ட்டிக்குப் பாட்டியா? பார்ட்டிக்குப் பாட்டியா? ‘‘என்னங்க, சொன்னா கேளுங்க. நாளைக்கு நியூ இயர் பார்ட்டிக்கு உங்கம்மாவையெல்லாம் கூட்டிட்டுப் போக வேணாம். அவங்களும், அவங்க கண்டாங்கிப் புடவையும், தொளதொள ரவிக்கையும், இழுத்து இழுத்துப் பேசும் கிராமத்துத் தமிழும்... நம்ம மானமே போயிடும்!’’ …
-
- 1 reply
- 1k views
-
-
ஆத்மார்த்தியின் ஆன்மா! ஜெரா படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம். ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை சுகப் பிரசவம் என்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றே கட்டிலுக்கு கீழே படுத்திருக்கும் அவளின் அம்மா நினைத்துக் கொண்டிருப்பார். அங்குள்ளவர்களும் அப்படித்தான் நினைத்திருக்க வாய்ப்புண்டு. திடகாத்திரமான உடல் அவளுக்கு சுகப்பிரசவம் என்பதை உறுதிப்படுத்தியும் இருந்தது. “இன்டைக்கு கொஞ்சமாவது நித்திர கொள்ளவேணும்” என்ற எ…
-
- 0 replies
- 632 views
-
-
ONE WAY – ஷோபாசக்தி அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி,…
-
- 2 replies
- 1.4k views
-
-
அப்புக்குட்டி முன்பொரு காலத்தில் ஒரு புல்லாங்குழல் தயாரிப்பவர் தன் மனைவியுடனும், தனது ஏழு மகன்களுடனும் வாழ்ந்து வந்தார். அவ்வேழு மகன்களில் முதல் மகனுக்குப் பத்து வயது, கடைசி மகனுக்கு 7 வயது. அந்தக் குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்து வந்தது. அதனால் அந்த ஏழு மகன்களுக்கும் உணவளிப்பது கடினமாக இருந்தது. கடைசி மகன் மிகவும் பலவீனமாக இருந்தான். அவனால் சரியாகப் பேசவும் முடியாது. அதனால் அவனை அனைவரும் கேலி செய்து மகிழ்ந்தனர். அவன் பிறந்த பொழுது மிகவும் சிறியவனாக, அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அப்பு கமலைவிட குள்ளமாக ஒருவருடைய கட்டைவிரல் அளவிற்குதான் இருந்தான். அதனால் அவனை அனைவரும் அப்புக்குட்டி என்றே அழைத்தனர். அதனையும் சுருக்கி அப்பு என்றே அழைத்தனர். அப்புவை அனை…
-
- 0 replies
- 782 views
-
-
இந்த வாரம் ஒரு பேப்பரில் யாழ் பிரிய சகி எழுதிய கதைஇது ஒரு தேர் நாள் இரவு 8 மணி போல மாமா டெலிபோன் அடிச்சார். " என்ன மாதிரி நாளைக்கு கோயில் வாற பிளான் ஏதும்?" எண்டு கேட்க நானும் உடனே " ஓமோம்..வாறம் வாறம்" எண்டு துள்ளினன். எங்க, எத்தினை மணிக்கு சந்திக்கிறதெண்டு கதைச்சு வைச்சதும் தான் எனக்கு கவலை வந்திச்சு. " இப்ப எந்த உடுப்பு போடுறது?" முதலே தெரிஞ்சிருந்தா 4,5 நாளுக்கு முதலே ரெடியா எடுத்து வைச்சிருக்கலாம் இப்ப என்னத்த போட எண்டு இரவிரவா ஒரே யோசனையில நித்திரையும் சரியா வரேல்ல. காலேல தான் அம்மா சொன்னதை எடுத்துப்போட்டுக்கொண்டு அண்ணரோட கிளம்பிட்டன். ஹை வே ஆல இறங்கினதுமே ட்ரஃபிக்! இந்த ட்ரஃபிக்கில விசேசம் என்னவெண்டால் எல்லாம் நம்ம தமிழ் ஆக்களோட வாகனங்கள் …
-
- 7 replies
- 2.2k views
-
-
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ? என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு. ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே! ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார். என்ன செந்தோழன், வழமையா ட்ரெயினிங்கிற்கு நீர் தான் முன்னுக்கு நிற்கிறனீர். இன்னைக்கு மட்டும் எழும்ப(எந்திருக்க) லேட்டாகிட்டு. என்ன காரணம்? "ஓ...அது வந்தண்ணை, இன்னைக்கும் வழமையான நேரத்திற்கு தான் எழும்பினேன். திடீரென என்ர அம்மாவின் நின…
-
- 9 replies
- 2k views
-
-
இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்..... (இந்தவார ஒருபேப்பரிற்க்காக எழுதியது) பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது தனிமையையும் ஊரையும் உறவுகளையும் பிரிந்து வந்த சோகங்களையும் சுமந்து சென்று மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் நிறைந்த அமைதியைப் பரப்பிக்கொண்டிருக்கும் அந்தப்பூங்க…
-
- 10 replies
- 2.4k views
-
-
உறவும் வரும் பகையும் .வரும் ..... பூமிப்பந்து தன் வேலையை செவனே செய்து கொண்டு இருக்க மணித்துளிகள் நாட்களாகி அவை வாரந் களாகி மாதங்களாகி வருடங்களும் பதினைந்தை தாண்டி விட்டது .ஈழத்தின் ஒரு தீவகதொகுதியில் ஆசைகொரு மகனும் ஆசைகொரு மகளுமாக சின்னையா குடும்பம் வாழ்ந்து வந்தது காலம் கடமையை செய்ய மகள் நிதிலாவும் மகன் நிரோஷனும் பருவ வயதை அடைந்தனர் .மகன் பட்ட படிப்புக்காக தலைநகரம் செல்ல மகள் நித்திலா தையல் ,சமையல் டிப்ளோமா ,என்று ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வளர்ந்து கொண்டு வந்தாள் .தையல் வகுப்புக்கு போகும் வழியில் ரேடியோ கடை . அதில் போவோர் வருவோரை கவரும் பாடல் இசைத்து கொண்டே இருக்கும் . அதன் சொந்த காரன் தான் ஆதவன் . இளைஞனுக்கு உரிய அத்தனை அம்சங்களு…
-
- 8 replies
- 1.8k views
-
-
அபிதேமி ஆபிரிக்காவிலிருந்து எனக்குப் பின்னதாகவே வந்திருக்க வேண்டும். அப்படியில்லையாயினும் இரண்டொரு மாதங்களே முன்னராயிருக்கும். கரித்தாஸ் நிறுவனம் அகதிகளுக்கென ஒழுங்குபடுத்தியிருந்த ஜெர்மன் மொழி வகுப்பின் முதல் நாள் மழையில் நனைந்து சுவரோரம் ஒதுங்கிய ஒரு கோழிக்குஞ்சினைப் போல சுவரின் அருகே அவள் ஒடுங்கியிருந்ததைக் கண்டேன். நான் நுழைந்தபோது பதினைந்து பதினாறு பேரளவில் அங்கிருந்தார்கள். ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டார்கள். சூடானியர்கள், எரித்திரியர்கள், ஈராக்கியர்கள், சேர்பியர்கள் என அவர்களிருந்தாலும் என்னால் அடையாளப்படுத்த முடிந்தவர்கள் இரண்டேயிரண்டு பேர்தான். கறுப்பர்கள் மற்றும் வெள்ளையர்கள். உண்மையைச் சொல்வதெனில் அப்படியும் அல்ல, காப்பிலிகள…
-
- 5 replies
- 2.3k views
-
-
நான் தூங்கப்போவதற்கு முன் என்னைக் கட்டிக்கொண்டுப் படுத்து இருந்தவள், விடியற்காலையில் அடுத்த அறையில் இருந்த சோஃபாவில் சுருட்டிக்கொண்டுப் படுத்திருந்தாள். எனக்கு இது புதிதில்லை. இரவில் இந்தக் கட்டிலில் படுக்கும் பெண்கள், விடியலில் அடுத்த அறையில்தான் விழிப்பார்கள். அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி . போட்டு எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினேன். படுத்தோம் எழுந்தோம் என்றில்லாமல் , என் வீட்டிற்கு வருபவர்களை, அவர்கள் ஒரு நாள் இருந்தாலும், ஒரு வாரம் இருந்தாலும் இளவரசிக்களைப் போலக் கவனித்துக் கொள்வேன். பெண்கள் உறங்கும்பொழுதும் கூட தேவதைகளாகத்தான் தெரிகிறார்கள். தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்தபின் பத்ரகாளியைப்போல என்னை முறைத்தாள். வெடுக்கென காப்பி கோப்பையை …
-
- 3 replies
- 1.2k views
-
-
லண்டனில் ஹாட்லி கல்லூரிபழைய மாணவர்களின் வருடா வருடம் நடைபெறுகின்ற இராப்போசன விருந்தும் வருடாந்த கூட்டமும் போன சனிக்கிழமை நடைபெற்றது. நாமள் இந்த இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு போவதில்லை என்றாலும் இம்முறைதான் முதல் முறை போய் வந்தேன் ..போய் வந்ததுக்கு முக்கிய காரணம் ............. http://sinnakuddy.blogspot.com/2008/11/blog-post.html
-
- 23 replies
- 3.9k views
-
-
கமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம் செய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள். பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள். இருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி விளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள். ஒரு அதிகாலைப்பொழுதில் அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள். தம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும் இயக்கத்திற்கு போனான்.கமலம்…
-
- 7 replies
- 883 views
-
-
படையல் - சிறுகதை லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: மருது இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒவ்வா மலையை ஒட்டியிருந்த குடிசைகளை `காலி செய்ய வேண்டும்’ என முரட்டு ஆட்கள் சிலர் சொல்லிவிட்டுப் போனார்கள். இத்தனை வருடங்களாக இல்லாமல், புதிதாக வந்த தொல்லையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியவில்லை. வெறும் மலை... புல் பூண்டுகூட இல்லாத வறண்ட மலை. நாக்கு தள்ள ஒன்றரை மைல் மலை ஏறினால், சின்னதாக ஒரு குட்டை உண்டு. எத்தனை வெயிலிலும் நீர் வற்றாது. மலை அடிவாரத்தில் பெரிய குளம். நான்கு திசைகளிலும் பருத்த ஆலமரங்களை, காவலுக்கு நிறுத்திய கம்பீரமான குளம். அதன் மேற்கு எல்லையில் பல தசம வருடங்களுக்கு முன்பாக, வெட்ட வெளியில் ஊர்க் காவலுக்கு நின்றிருந்த அய்யனார்சாமி கோயிலுக்கு, ஒரு கூ…
-
- 0 replies
- 2.8k views
-
-
சலனம்! - சிறுகதை கமலி பன்னீர்செல்வம், ஓவியம்: பிரேம் டாவின்ஸி மணி ஐந்தைத் தொட மூன்று நிமிடம் இருந்தது. கம்ப்யூட்டர் திரையைச் சுருக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள் மேரி. மீண்டும் தன் இருக்கைக்கு வரவும், மணி ஐந்தாகவும் சரியாக இருந்தது. ``மணி அஞ்சாய்டுச்சுனா டான்னு கிளம்பிடுங்க” என்று சற்றே நக்கல் கலந்த தொனியில் மேனேஜர் கோவிந்தராஜ் சொல்ல, மேரி பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். கோப்புகளில் இல்லாத பிழைகளை அவர் பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். கோவிந்தராஜுக்கு வயது 63. பிள்ளைகள் இருவரும் மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கி இருக்க, மனைவி வேறு ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். மனைவி வீடு திரு…
-
- 2 replies
- 2.5k views
-
-
தனுமை – வண்ணதாசன் இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயேவீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள். ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து …
-
- 0 replies
- 718 views
-
-
ஜல்லிக்கட்டு... (1)... எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. 10 மணிக்கே ரோடு வெறிச்சோடிப் போயிருந்தது, ராக்காயியின் இட்லிக் கடையில் மட்டும் கொஞ்சம் கூட்டம் சொச்சமிருந்தது. தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரையின் தெருக்களில் வண்டிகள் தங்கள் டயர்களை செலுத்தி ஒவ்வொரு வீட்டு வாயிலில் போட்ட கோலத்திற்குள் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. பிள்ளைகள் ரோட்டில் ரெயில் வண்டி விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருமுனையில் இளைஞர் சங்கத்தில் தனுஷ் கொலைவெறிப்பாடலை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார். ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லை பூச்சாண்டிகிட்டே பிடிச்சிக்கொடுத்திடவா என்று குழந்தையிடம் போரா…
-
- 4 replies
- 1.9k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் மன்னிப்பு நேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்! - கிருஷ்ணகுமார் புகார் “நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா. - விகடபாரதி ஹவுஸ்மேட்ஸ் ``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’ - ரியாஸ் முதலும் முடிவும் “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான். - விகடபாரதி என்னாச்சு? பைக்கில…
-
- 0 replies
- 2.4k views
-
-
-
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த நரக வாழ்க்கையோ என்று..மனம் சலித்து விட்டது.....நான் இனி வெளியில் வந்து வெளி உலகத்தை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை அவனிடமிருந்து மெல்ல மெல்ல போகத்தொடங்கி விட்டது....கடவுள் தான் இனி துணை தனக்கு மட்டும் அல்ல அங்கு சிறை வைக்கபட்டிருக்கும்..எல்லாருக்கும்....கந்த சஷ்டி கவசம் படித்ததில இந்த இரண்டு வருடம்களில் அது பாடமாகியே விட்டது....அவர்களின் அன்றாட வேலைகளில் கந்த சஷ்டி கவசம் படிப்பதும் ஒரு வேலை ஆகி போனது.. இதிலும் அவனை நம்பி இரு உயிர்கள் இந்த உலகத்தில் இருப்பதும் தனக்குரிய தண்டனைகளில் எதுமே அறியா அப்பாவிகளான அவர்கள் சிக்கு பட்டு... தண்டனை அனுபவிப்பதும்..அவனை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கி கொண்டு இருக்கிறது..இது தனக்கு மட்டும் அல்ல அங்கு இரு…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஓத்துழைக்க மறுக்கும் கணணியுடன் மல்லுக்கட்டியபடியே எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்கு ரெலிக்கொம்மை திட்டிக்கொண்டிருந்தேன் இணையத்தொடர்புக்கான வசதிகளில் அவர்கள் குளறுபடிகளுக்கு அவர்கள் இடம் கொடுத்திருந்தனர் அதுவும் வேலையை முடித்து வீடுதிரும்பும் நேரத்தில்! நேரம் அபாயக்கட்டத்தினை தாண்டியிருந்தாலும் அப்படியே விட்டு விட்டுப்போகமுடியாது. அலுவலகத்தில் இரவுப்பணியாளர்கள் போட்டுத்தாக்கி விடுவார்கள்! dOWNLOAD1 dOWNLOAD2
-
- 2 replies
- 1.9k views
-
-
நான் +2 படித்துக் கொண்டிருந்தபோது என் வீட்டுக்கும், பள்ளிக்கும் சுமார் 5 கி.மீ தூரம் இருக்கும். லஞ்ச் அவரில் வீட்டுக்கு வந்தே சுடச்சுட சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போகும் வாய்ப்பிருந்தது. 1 to 2 லஞ்ச் அவர் என்பதால் கால்மணிநேரத்தில் சைக்கிளை மிதித்து வீட்டுக்கு வந்து கால் மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு உடனே பள்ளிக்கு திரும்ப முடிந்தது. இந்த மாதிரியான லஞ்ச் அவர் ட்ராவலில் எனக்கு அறிமுகமானவர்கள் தான் மூர்த்தியும், சண்முகமும். இருவரும் என் வகுப்புத் தோழர்கள் என்றாலும் அவர்கள் வேறு "தாதா" குரூப், நான் வேறு "மாபியா" குரூப். அவ்வளவாக டச்சப் ஆரம்பத்தில் இல்லை. எனினும் மூவரும் ஒரே வழியில் தான் வீட்டுக்கு வந்தாக வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பேச்சுத்துணை நண்பர்கள…
-
- 1 reply
- 1.3k views
-
-
மகவு பொண்ணோட அம்மாவும் பையனோட அம்மாவும் சேர்ந்து நடத்துற திருமணம்ன்னாலும் எந்தக் குறையும் யாரும் காண முடியாத அளவுக்கு மூணுநாள் சடங்குகள் எல்லாத்தையும் சிறப்பா செய்து ஊரு, உறவெல்லாம் மெச்சும்படியா நடத்தி வெச்ச கல்யாணம் சங்கரன், பார்வதி கல்யாணம். வந்தவங்களெல்லாம் வாயார வாழ்த்தினர். தெய்வ சங்கல்பம் என்றே புகழ்ந்தனர். அந்த பரமசிவனும் பார்வதியும் கண்ணுக்கு காட்சி தருவதுபோல தம்பதிகள் இருந்ததா நெகிழ்ந்து புகழ்ந்தனர். பொருத்தமின்னா அப்படி ஒரு பொருத்தம். உறவினர்களிலும், நண்பர்களிலுமாக ஒருவர், "டேய் சங்கரா நல்லா ஷேமமா, அந்நியோன்யமா இருக்கணும்டா. சீக்கிரமா புதுவரவு இருக்கட்டும்டா'' லேசான வெட்கத்துடன் சங்கரனும…
-
- 0 replies
- 788 views
-
-
மழை பெய்து வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும். வெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவத…
-
- 2 replies
- 1.1k views
-
-
மழைக்கால இரவு. - தமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான 'மழைக்கால இரவு' இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். - பதிவுகள் - அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிரு…
-
- 11 replies
- 2.9k views
-