கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
வனாந்திர ராஜா மிகைய்ல் பிரிஸ்வின் (ருஷ்யா) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ஒரு கோடைநாளில் நடந்தது இது! மழைக்கு முந்தைய வனாந்திரம் பற்றி இப்போது சொல்கிறேன்! ஒவ்வொரு சின்ன இலையும், பைன்மரத்தின் ஒவ்வொரு ஊசியும் முதல்மழையின் முதல்துளியை அனுபவிக்க ஆவேசப் பட்டன. ஒவ்வொரு சிற்றுயிரும்கூட மழை பற்றிய சுத்த சுயமான பிரக்ஞையில் உறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி நான் போனேன். எல்லாமே, மனிதர்களைப் போலவே, என்னைத் திரும்பிப் பார்த்தன, ஏதோ நான்தான் கடவுள்போல!.... மழையை அனுப்பச் சொல்லி என்னிடம் அவை கெஞ்சுவதாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! "வாங்க பெரியவரே...." நான் மழையிடம் பிரார்த்தனை செய்தேன். "நாங்க காத்துக் காத்து அலுத்துப் போனம்யா. எப்பிடிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன். "மானத்தின் திருநாள் கார்த்திகையே! மாவீரத்தின் பெரு நாள் கார்த்திகையே! கார்த்திகை மாதம் கறுப்பு. இந்த கார்த்திகை மாதம் நெருப்பு! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்! அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்!" என மாவீரர் பெருமை சொல்லும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை தன் சிறப்புரைக்கு வலுச் சேர்க்கும் வகையில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வாங்கோ அண்ணா.. அழைக்கும் குரலைக் கேட்டு ஓர் அதிர்ச்சி.. என்ன அழகா தமிழ் கதைக்கிறான்.. தமிழ் ஸ்கூல் போறவரோ.. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தந்தையை பார்த்து எனது வினவல் எழுந்தது.. தமிழ் பள்ளிக்கூடம் போறனான்... ஞாயிற்றுக்கிழமைகளில. கேம்பிரிஷ் ஜீ சி ஈ தமிழ் சோதனை எடுத்து "ஏ" சித்தி வைச்சிருக்கிறன்..... தந்தையை பார்த்துக் கேட்ட கேள்விக்கு மகன் பதில் தந்தான். அப்ப.. வீட்டில தமிழ் தான் மகனோட கதைக்கிறனீங்களோ.. அப்பவும் அவனே குறுக்கிட்டு.. அப்பா அம்மாவோட தமிழ் தான். தங்கச்சிகளோட தான் ஆங்கிலம் கதைக்கிறனான். நான் லண்டனில பிறந்திருந்தாலும் வாழ்ந்தாலும்.. சின்னனில இருந்தே தமிழ் படிக்கிறன். அவனின் பதில்களை செவிகளூடே வாங்கிக் கொண்டு.. தந்தையை நோக்கியே எனது அடுத…
-
- 26 replies
- 2.9k views
-
-
வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.! பெரிய பரந்தன் கதை இந்த வரலாற்றை ஏற்கனவே நான் எழுதி வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வந்தது. அதனை லண்டனில் இருந்து வெளிவரும் “ஒரு பேப்பர்” பத்திரிகை தொடர்ந்து பிரசுரித்தது. வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் வந்ததை வாசித்து அதனை ரசித்த அப்போதைய “சுடரொளி வாரமலர்” ஆசிரியர் மூன்று கிராமங்களின் கதை என்ற தலையங்கத்தை “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்ற பெயரில் மாற்றி தொடராக வெளியிட்டார். எனது தந்தையும் நானும் பிறந்து தவழ்ந்து வளர்ந்த ” பெரிய பரந்தன்” கிராமத்தைத் பற்றி முழுமையாக எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு இருந்தது. எனவே பெரிய பரந்தன் வரலாற்றை ஒரு கதை வடிவில் எழுதி மூன்று கிராம…
-
- 42 replies
- 10.2k views
-
-
வயது பதிமூன்று -வேதா கோபாலன் பதிமூன்று வயது தாமினி கர்ப்பமா..? டாக்டர் ரேவதி அதிர்ந்து நிமிர்ந்தாள். தலை சுற்றியது போன்ற உணர்வில் அப்படியே ரிவால்விங் நாற்காலியில் படிந்தாள். “தாமினி...’’ சட்டென்று தழுதழுத்த உணர்வு. இவளை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி நான்தான் முந்தி என்று ஒரு காரணம் நின்றது. இது இவளின் பேஷன்ட் இல்லை. “இந்த ரெண்டு வாரம் நீ ஓ.பி பார்த்துடுடீ ரேவ்ஸ்...” என்று கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சிவிட்டு டார்ஜிலிங்குக்கு புருஷன் திலீபனுடன் நாலாவது தேனிலவுக்கு ஓடினாளே அந்த அல்பனாவின் வழக்கமான பேஷன்ட் இவள். ஆதர்ச தம்பதி அல்பனாவும் திலீபனும். அன்யோன்யத்…
-
- 0 replies
- 2.3k views
-
-
முழுவதும் ஆண்களே உள்ள ஊருக்கு சென்ற பெரியவருக்கு ஒரே ஆச்சரியம்!! அந்த ஊரில் உள்ள ஆண்கள் எவ்வாறு தங்கள் காமப்பசியை தீர்த்து கொள்வார்கள்? என்று. பொறுமையாக இருந்த பெரியவர் அங்குள்ள ஆண்களிடம் நீங்கள் அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்களே உங்கள் காம பசியை எப்படி தீர்த்துக்கொள்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஆண்கள், நாளை காலை பக்கத்தில் இருக்கும் ஆற்றின் அருகில் வந்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும் என்றனர். அடுத்த நாள் காலை ஆவலுடன் நதிக்கரைக்கு சென்ற பெரியவர் அங்கிருந்த ஆண்கள் ஒரு பெரிய கழுதையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டார். அதில் ஒரு ஆண் பெரியவரிடம் சொன்னார், 'நீங்கள் எங்க விருந்தாளி, முதலில் நீங்கள் …
-
- 13 replies
- 2.3k views
-
-
வயலும் வைரவரும். இந்தவார ஒரு பேப்பரில் வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரே…
-
- 31 replies
- 6.1k views
-
-
வரகு மான்மியம் ஆசி கந்தராஜா 1 கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்! 'வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்..., கோயில் விஷயமப்பா..., சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ...' மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்...? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு! கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
எனது கிறுக்கல் –( facebook இல் லொள்ளு விடும் ஆண்களுக்கு சமர்ப்பணம்) வரதட்சனைக்கு முன் வரையறைகள் ராத்திரி நான் படுக்க போக முதல் "நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள் " எண்டு facebook இல message ஒண்டு போட்டிட்டுத்தான் படுத்தனான் , என்ன காரணம் என்று போட நிறையத்தயக்கம் அது என்னவாயிருக்கும் எண்டது உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் , சும்மா சொல்லகூடாது பாருங்கோ நான் “இனிய காலை வணக்கம்” எண்டு ஒரு மெசேஜ் போட்டாலே அதுக்கு குறைஞ்சது நூ று லைக்ஸ் உம் ஒரு பத்து comments உமாவது வரும் , இன்றைய நாள் இனிய நாளாகட்டும் எண்ணுவினம் , ரண்டு வரிலை கவிதை எழுதுவினம் , சினிமப்பாட்டில இருந்து சில வரிகளை எடுத்து விடுவினம் ...அதுவும் இரவில ‘குட் நைட்’ எண…
-
- 0 replies
- 970 views
-
-
வழமையை விட இந்தமுறை கூட நாட்கள் எடுத்துவிட்டது. எல்லாம் அந்த தர்மகத்தாவால வந்தது நானும் கொஞ்சம் உணர்சிவசப்படாமல் மற்றவர்களைபோல காலை கீலை பிடிச்சிருக்கலாமொ? இவ்வளவு காசையும்,சொத்துப்பத்தையும் வைத்துக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில அதுவும் தற்காலிகமாக ஒரு 20 குடிசைகளை போடுவமென்றால் குடிசை போட நட்டுவைத்த அத்தனை மரங்களையும் வெட்டி வைத்திருக்கின்றாங்கள் பாவிகள்.வந்த கோபத்தில தர்மகத்தாவின்ர தலையை போட்டிருக்க வேண்டும்.ஏதோ அவன் செய்த புண்ணியம் வாய்ப்பேச்சோட நிப்பாட்டியது.பாவம் எங்கட அகதிகள் தான் சரியாக பயந்து போச்சுதுகள்.இவன் வந்து உள்ளதையும் குழப்பிவிட்டு போகப்போறான் என்று.நாளைக்கு வேலைக்கும் அந்த தர்மகத்தாவை தேடித்தானே அவர்கள் போகவேண்டும்.எதோ கடைசியில் ஒரு பிரச்சனையுமில்லாம…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்.. புளொட்டின்.. பாசிசம்..! தொடர்ந்து வாசிக்க: http://kuruvikal1.we...3543/v_p_01.pdf [பக்கம் 10 தொடங்கி 12 வரை] நன்றி விடுதலைப்புலிகள் ஏடு.
-
- 2 replies
- 772 views
-
-
ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக குறையவில்லை. மேலும் கூடியது, உடனே குழந்தைகள் வேண்டாமென்று செய்த முடிவினால். கணவன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவந்தான். ஏற்கனவே லோன் வாங்கி வீட்டையும் கட்டி முடித்து விட்டார்கள். அழகான வீடு. முன்னால் சின்ன ரோஜா தோட்டம். வராண்டாவுக்கு வலதுபுறம் தனியாக ஒரு அறை. வீட்டை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வது ராதாவின் தனித்தன்மை. கணவன் அலுவலகம் சென்ற பிறகு வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு ஏதாவது பத்திரிகையை படித்துக்கொண்டு கட்டிலில் படுத்திருப்பாள். கொஞ்ச நேரம் ரேடியோ கேட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வராத பதில்! வராத பதில்! வாஸந்தி வா க்கியத்தை முடிப்பதற்கு முன் அப்பாவின் உயிர் போய்விட்டது. ‘ஓ’ என்கிற அட்சரத்துக்குக் குவிந்தாற் போல் உதடுகள் வட்டமாக நிற்க, கண்கள் அவரது சுபாவமான உத்வேகத்துடன் விரிந்திருக்க, நாடக ஒத்திகையில் இயக்குநர் ‘யீக்ஷீமீமீக்ஷ்மீ!’ என்ற அதட்டலுக்குப் பணிந்து உறைந்தது போல முகம் உறைந்தது. முதலில், அது ஏதோ வேடிக்கை போல் இருந்தது அவளுக்கு. அது ஒ…
-
- 0 replies
- 1.6k views
-
-
வருகை கே.ஜே.அசோக்குமார் புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிக கவனமாக கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்த கவலையும் இன்றி தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்து. தான் குறட்டை விட்டிருந்தால் அது அறிந்திருக்க வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகமும் பயமாகவும் …
-
- 0 replies
- 762 views
-
-
வர்ணகலா by ஷோபாசக்தி இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டே பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய கா…
-
- 4 replies
- 1.1k views
-
-
வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன் நாங்கள் இந்த அப்பார்ட்மண்ட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பூரணிக்கு ஃபிளைட் டிக்கெட் உறுதியானவுடன் முதல் காரியமாக வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிட்னியில் நினைத்தவுடன் வீடு அமைவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஹோம்புஷ் போன்று இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடங்களில் கிடைப்பது இன்னுமே கடினம். இந்தப் பகுதியைச் சுற்றி ஈழத் தமிழர்களும் வசிக்கிறார்கள். இந்த அப்பார்ட்மண்ட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் ஒரு இந்தியன் ஸ்டோர் இருக்கிறது. இந்தியச் சமையலுக்குஉகந்த அத்தனை மளிகைப் பொருட்களும் அங்கே கிடைக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரையிலிருந்து குங்குமம்,சந்தனம் பத்தி முதலான பக்திப் பொருட்கள் உட்பட எல்லாமும் கிடைக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
வலி நேற்று இரவு முதலே கொஞ்சம் படபடப்புதான். சரியான தூக்கம் கூட இல்லை. காலையில் எழுந்ததில் இருந்து இருப்புக்கொள்ளவில்லை. டிபன் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வந்தது. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் சாப்பிட்டேன். ஆட்டோவில்தான் கிளம்பினோம். அம்மா நிமிஷத்திற்கொரு முறை ஆட்டோக்காரரிடம் மெதுவாகப் போகும்படி கேட்டுக்கொண்டார். வேகத்தடை வரும் இடங்களில் எல்லாம் நான் என் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டேன். ஆம். 15 நாட்களுக்கு முன்தான் அதை உறுதிப்படுத்தினார்கள். அன்று அம்மா எல்லாருக்கும் இனிப்பு வாங்கிக் கொடுத்தாள். இந்த சந்தோஷத்திற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அவர் வற்புறுத்தவில்லை எனினும் ‘என் ஆபீஸ் டிரைவருக்குக் குழந்தை பிறந்திருக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
வலி தெரியாக் காயங்கள்.... முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம். அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொ…
-
- 120 replies
- 14.7k views
-
-
வலிமை (கலைமகளில் வெளியான முத்திரைச் சிறுகதை) நேரம் கிடைக்கும் போது படியுங்கள். வீடு முழுக்க அம்மாவின் வாசனை நிறைந்திருந்தது. காற்று, தண்ணீர், தோட்டத்து மண், அடுப்பில் எரியும் நெருப்பு, முற்றத்து ஆகாசம் எல்லாவற்றிலும் அவளது மணமும், ஓசையும், வெம்மையும், குளுமையும் நிறைந்திருந்தது. அம்மாதான் அமிர்தாவின் வாழ்க்கை. அவள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் வேறு எப்படியோ இருந்திருக்கும். அம்மாவின் திடமும், மன உறுதியும், எண்ணங்களும், துணிச்சலும் காலத்தைக் கடந்தவை. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்தவள். தனக்கென்று சீரிய சிந்தனைகள் கொண்டவள். தன் நியாயமான தீர்மானங்களிலிருந்து அவள் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. அம்மா தன் வாசத்தை வீட்டில் நிரப்பி விட்டு ஊருக்குச் சென்றிரு…
-
- 2 replies
- 867 views
-
-
காட்சி 1 ஒரு நாள் இரவு மனைவி காதுக்குள் கதைக்கத்தொடங்கினாள். (முன்பெல்லாம் இந்த தலையணி மந்திரத்துக்கு காது கொடுப்பதில்லை. அனுபவத்தால் அவளது சில தகவல்களைக்கேட்காது விட்டு வாழ்வில் சில விடயங்களில் வாங்கிக்கட்டியதாலும் மக்களது நலன் சார்ந்தும் தற்பொழுது காது திறந்து விடப்பட்டுள்ளது) மனைவி : அப்பா இவன் பெரியவன் அடிக்கடி வெளியில் போகின்றான். இரவு நேரம் சென்றுதான் வீட்டுக்கு வருகின்றான். எனக்கு கொஞ்சம் பயமாக்கிடக்கு. (தற்பொழுது அவர்கள் குழுவாக படிக்கும் காலம். அடிக்கடி பரீட்சைகளும் இருக்கு. இது எல்லோருக்கும் தெரியும்) எனக்கு தாயின் கவலையைப்புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் இதை தொடரவிடக்கூடாது. அது இருவருக்கும் நல்லதல்ல. நான் : அவனுக்கு இப்ப எத்தனை வயசு? மனைவி : …
-
- 62 replies
- 6.3k views
-
-
வழி (தமிழீழப் பெண்களின் சிறுகதைகள்) e-book வடிவில் http://www.padippakam.com/document/ltte/Book/book00042.pdf
-
- 0 replies
- 691 views
-
-
வழிகாட்டிய வா(ரி)சு அது ஒரு தனியார் தொழிலகம். அந்த நிறுவனத்தில் பேண்ட் ஜிப், லெதர் பேக் ஜிப் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. சிப்காட் தொழில் வளாகத்தில் இந்த நிறுவனம் இயங்குகிறது. ஐநூறு தொழிலாளர்கள் ஜிப் ஆலையில் வேலை பார்க்கிறார்கள். ஐம்பது பேர் நிர்வாகப் பிரிவில் மேனேஜர், உதவி மேனேஜர், உதவி அலுவலர், உதவியாட்கள், கணக்காளர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் அலுவலர்களில் முக்கியமானவர்களை அழைத்து தலைமை அலுவலகம் அவ்வப்போது பயிற்சிகள் தரும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா..? என்று எல்லோருமே ஆவலாய் எதிர்பார்ப்பார்கள். "ஆபீஸில் உள்ள உதவி மேன…
-
- 1 reply
- 678 views
-
-
வழித்துணை நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிக்கொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்க்கு காரணமாக இருக்கும் குடிசைகள், குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்ன சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட், அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர் பைக்கில் வந்த இருவரும். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே தாயபாஸ் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு கும்பலில் இருந்து இரண்டு பேர் இவர்களை நோக்கி வந்தனர், வேகமாக வண்டியில் வருபவார்களை நிறுத்துவது போல கையை அசைத்தனர். “சார் நிற…
-
- 5 replies
- 1.4k views
-
-
வஸ்திராபகரணம் - ரா. செந்தில்குமார் ரயில் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. வார விடுமுறைக்கு ஊருக்கு வந்து, சென்னைக்குத் திரும்பும் இளைஞர்கள் சிலர், பிளாட்பார்மில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மிளகாய்ப்பொடி தூவிக் கொண்டுவந்திருந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவனிடம் கொடுத்தார். அதிலிருந்து மிளகாய் காரத்துடன் கலந்த நல்லெண்ணெய் வாடை வீசியது. பின்புறம் நிற்கும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறுவதற்கு ஒரு வயதான அம்மா வேகமாக நடக்க முயன்று, மூச்சு வாங்கினார். அவருக்குச் சிறிது தூரம் முன்பு சென்ற அந்தம்மாவின் கணவர், அவ்வபோது நின்று, பின்பக்கம் திரும்பி, ”வேகமா வாங்குறேன்.. ஆடி அசைஞ்சு வந்த…
-
- 1 reply
- 588 views
-
-
வாக்குறுதி : அகரன் ஓவியம்: செயற்கை நுண்ணறிவு 1 கனடா, யூகொன். மாயோன், மயூரன் என்னும் பெயரில் தனது இரண்டு வயதில் கனடாவில் உள்ள மொன்றியல் என்ற நகரத்தில் தன் கால்களை ஊன்றியவன். இப்போது தனது முப்பத்தி ஏழாவது வயதில் கனடாவின் மேற்கு பாகத்தில் அலாஸ்காவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் யூகொன் (yukon) என்ற மாநிலத்தில் அமெரிக்க-கனடிய விஞ்ஞானிகள் குழுவில் ஒருவனாக போராடுகிறான். தனக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வங்கிக்கு வருகிறது ? என்பது அவனுக்கு தெரியாது. அதைப்பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. ஆனால் உலகின் பல நாட்டு அதிபர்களை விட அவனுடைய மாத கொடுப்பனவை கனடிய அரசு உயரமாக கொடுப்பதில் கவனமாக இருக்கிறது. மாயோன் பூமிக்காக போராடுகிறான் என்பதுதான் அதற்குக்காரணம். ‘யூகொன்’ ஆண்டின் அதி…
-
- 1 reply
- 521 views
- 1 follower
-