கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மீச - சிறுகதை தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம் வானம் இன்னும் அடைசலாகத்தான் இருந்தது. சில நேரம் மனதின் நிறங்களுக்குத் தக்க, சூழலின் நிறங்கள் மாறும் என இவள் திண்ணமாக எண்ணினாள். புதிதாக அரைத்த காபித்தூள் வாங்கி வந்து மணத்துடன் கொதிக்க வைக்கும்போது ஒரு ப்ரவுன் கலர் பூனை ஜன்னலில் கடக்கும். அது ஏன் ஒரு வெள்ளைப் பூனையாக இல்லாமல், காபி நிறத்திலான பூனையாக இருக்க வேண்டும். அப்படியானால் அந்த காபி நிறப் பூனைதான் கடவுளா? ஒருமுறை இதை செபாஸ்டியனிடம் சொன்ன போது அவன், அவள் நெற்றி முடியை ஒதுக்கியவாறு ``கர்த்தாவே... உனக்கு மட்டும் எப்படித் தோன்றுகிறது இப்படி. கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைச்சிருக்கார் கர்த்தர் ஒன்ன படைக்கிறப்ப'' என்றான். அவன் நக்கல் அவளுக்கு விருப்பமாயில்லை. ஒ…
-
- 0 replies
- 3.9k views
-
-
அது ஒரு மீன் பிடிக்கிராமம் எனைய எழுத்தாளர்கள் போல அழகிய மீன்பிடிகிராமம் என்று புகழமாட்டேன்,மீன் மணமும்,காகங்கள் மீன்களின் குடல்களை கொத்தி திண்றுகொண்டிருக்கும்,படகுகள் ,இயந்திர படகுகள் நிறைந்த அந்த கிராமம் .அதில் நானும் வாழ வேண்டிய சூழ்நிலை ,காரணம் அந்த மீன்பிடி வாசிகள் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு தங்களது கல்லால் கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள்,எனது உறவுகாரர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவர் கொழும்பில் பணிபுரிந்தாலும் அங்கு வீட்டு வாடகை அதிகம் என்ற படியால் நீர்கொழும்பை தெரிவு செய்தார் ,மற்றும் அங்கு தமிழ் பேசக்கூடியவர்கள் வாழ்ந்தமை .அந்த கிராமத்தில் பெற்றோர்கள் தமிழில் பேசுவார்கள் ஆனால் பிள்ளைகள் சிங்களத்தில் பேசுவார்கள் ,சிங்கள பாடசாலையில் கல்வி கற்…
-
- 21 replies
- 3.9k views
-
-
பகுதி ....1 என்ன இவள் இப்படிச் சொல்லிக் கொண்டு வாறள் எண்டு எல்லாரும் நினைக்கிறது எனக்கு விளங்குது..என்ன செய்யிறது..?நானும் எனது ஆக்கத்துக்கு பல தரப் பட்ட பெயர்களை வைத்துப் பார்த்தேன் இது தான் தற்போதைய நிலையில் புலம் பெயர்ந்து இருக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பொருந்தும் போல இருந்துச்சு "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" எண்ட பெயரை வைச்சுட்டன்..எனது எழுதுக்கு பச்சை புள்ளி தராட்டிக்கும் பறவாயில்லை...சிவப்பு மட்டும் குத்திப் போடாதியள்..எனக்கு சிவப்பை கண்டாலே அலர்ஜி..எனது முன்னேற்றத்துக்கு தட்டிக் கொடுப்பதும் தள்ளி விழுத்துவதும் உங்கள் கைகளில் தான் இருக்கு.இனி விடயத்துக் வாறன்.. எல்லோரும் அறிந்த விடயம் பெருவாரியாக 1983,1984 ஆண்டுப் பகுதியிலிருந்து வெளிநாடுகள…
-
- 15 replies
- 3.9k views
-
-
NH - 79 - ஐந்து கிலோ மீட்டர் - சிறுகதை எல்லா நாளையும்போல கார்த்திக் அதிகாலையில் தனது காக்கி நிற கிளாசிக் ராயல் என்பீல்ட் புல்லெட்டில் நந்தனம் ஒய். எம். சி. ஏ. மைதானத்திற்குள் நுழைந்தான். முந்தைய நாள் இரவு மழை பெய்திருந்ததால் நிலம் முழுக்கக் குளுமை அடைந்து நெகிழ்ந்திருந்தது. நவம்பர் மாத இறுதி என்பதால் கொஞ்சம் குளிரும் பனி மூட்டமுமாயிருந்தது. அந்த நேரத்திலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தெளிவற்ற பனிமூட்டத்திற்கு நடுவிலிருந்து ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது உத்தேசமாய் தெரிந்தது. பொதுவாய் காலையில் இங்கே மூன்றுவகையான மனிதர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் மைதானத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் விருப்பமும் , ஆர்வமு…
-
- 3 replies
- 3.9k views
-
-
ஆரம்ப உரை;- முதலிலே சொல்லி விடுகிறேன் நான் எந்த வித அரசியல் கட்சியிலோ அரசியல் இயக்கங்களிலோ அங்கத்தவனாக இருக்கவில்லை.ஆனால் நான் கடந்த வந்த வாழ்வின் பாதையில் சந்தித்த பார்த்த கேட்ட அறிந்த அரசியல் நிகழ்வுகளை தொகுத்து எழுதுவுது தான் நோக்கம் .இதன் நம்பக தன்மை அல்லது சரியானது பிழையானது என்ற விமர்சனம் இருக்குமாயின் அவர் அவர்களின் கருத்து என்று நினைத்து அதை தாண்டி எனக்கு பட்டதை எழுத முனைகிறேன் .பெரும்பாலும் இத் தொடரை புனைவாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது தகவலகளின் தொகுப்பாகவும் எடுத்து கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ எனக்கு நினைவு தெரிந்த…
-
- 24 replies
- 3.9k views
-
-
கே.பி , கருணான்ரை ஆளை கலியாணம் கட்டாதை…! அவன் ஒரு நாத்திகன். கடவுளை நம்பாதவன். இயல்பிலேயே சம்பிரதாயம் , சாத்திரம் , சாதி , வேற்றுமை எல்லாவற்றிற்கும் எதிரானவன். வீட்டில் வணங்கும் சாமிகளின் உருவங்களை இவன் கண்ணிலிருந்து மறைத்து வைத்தது ஒருகாலம். 9பிள்ளைகளிலும் அம்மா அப்பாவிற்கும் அண்ணன் அக்காக்களுக்கும் வில்லங்கம் பிடித்த இளைய பிள்ளையவன். இயல்பிலேயே அவன் வாசிப்புப்பழக்கம் மொழிகளைக் கற்றுக்கொள்தல் அவனுக்குக் கொடையாயிருந்தது. பைபிள் , பகவத்கீதை , குரான் அடங்கலாக இராமாயணம் முதல் உலகப்புரட்சியாளர்கள் வரை படித்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் அவனிடம் மாற்றுக்கருத்து இருந்து கொண்டேயிருக்கும். வீட்டில் எல்லாரும் சொல்வார்கள் “அவன் ஒரு கலகக்காரன்“ என்று. 1984ம் …
-
- 12 replies
- 3.9k views
-
-
அன்று சாய்சுரேசுக்கு தூக்கமே வரவில்லை காரணம் தாத்தாவினதும் அம்மாவினதும் ஊருக்கு போற சந்தோசத்தில்.தாத்தாவும் அம்மாவும் அவர்களின் ஊரை பற்றி அதிகமாகவேசொல்லி இருந்தார்கள்.தாத்தா சொன்னவைகளை சாய் நினைத்து பார்கிறான்,தாத்தாவின் ஊர் கிணற்று தண்ணியை குடித்தால் இனிக்கும் அதில் குளித்தால் அரைவாசி வருத்தம் போய் விடும் என்று கூறியவை,கருத்தக் கொழும்பான் மாம்பழமும் புட்டும் சாப்பிட வேண்டும்,இங்கத்தய அப்பிள் அதுக்கு பிச்சை வாங்க வேண்டும்,வீட்டில் அடி வளவில் இருக்கிற பிலாபழம் பழுத்தால் வீட்டுகுள்ளேயே வாசம் வரும் என்று கூறியவை,கொழும்பு யாழ் ரயில் பயணத்தை பற்றி கூறியவை தாத்தாவின் வாகனத்தை கூறியவைகள் எல்லாம் அவனுக்கு தாத்தாவின் ஊரை பற்றி அதிக கற்பனைகளை உருவாக்கி விட்டது. …
-
- 18 replies
- 3.9k views
-
-
வசந்தத்திற்கும் கோடைக்கிற்கும் இடைப்பட்ட குழப்பகரமான காலநிலை. கருக்கற் பொழுதின் குறைந்த ஒளி, இரைச்சல்கள் இல்லை, புத்துணர்ச்சி நிறைந்த மனநிலை. ஆங்காங்கே சில பனித்துளிகளும் விழுந்தவண்ணம் காத்து நின்ற இரயில் நிலையத்தில் இரயில் வந்து நின்றது. வழக்கமான இருக்கை, வழக்கமான முகபாவங்கள், பழகிப்போன செயற்கைத் தனம். மூடிக்கொண்ட கதவுகளைத் தொடர்ந்து அடுத்த நிலையம் நோக்கிய இரயிலின் நகர்வு. கண்கள் இரயில் பெட்டிக்குள் உலாவிக்கொண்டிருந்தன. பிற கண்களைக் காண்பதைச் சாலைவிபத்துக்கள் போல்த் தவிர்த்;து, தாழ்த்தியும் உயர்த்தியும் முகங்கள் கண்களை உருட்டிக்கொணடிருந்தன. நடனம் தெரியாத முகங்கள் உறங்கின. சில உறங்குவதாய்ப் பாசாங்கு செய்தன. உண்மையில் உறங்கும் முகங்களில் எத்தனை அமைதி. ஓவ்வொரு மனிதனிலும் பி…
-
- 34 replies
- 3.9k views
-
-
சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள்! - சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம் ``உலகத்துல இருக்கிற பூவுலேயே எதும்மா பெருசு?'' என, அடுப்படிக்குள் நுழைந்த ரம்யா கேட்டாள். முகத்தில் வெக்கை வீசக் கடுகைத் தாளித்துக் கொண்டிருந்த பார்வதி, எரிச்சலான குரலில் சொன்னாள்... ``தாமரை.'' ``இல்லம்மா. `சூரியகாந்திப் பூ'னு கிருஷ்ணவேணி சொல்றா'' என்றாள் ரம்யா. ``அதுக்கு என்னடி இப்போ?'' எனச் சலிப்புடன் கேட்டாள் பார்வதி. ``ஏன்மா, சூரியன் பின்னாடியே சூரியகாந்திப் பூ போய்க்கிட்டே இருக்கு?'' ``அது சூரியனோட பொண்டாட்டி. அதான் பின்னாடியே போய்க்கிட்டு இருக்கு, போதுமா?'' என்றபடியே அடுப்பைத் தணித்தாள். அம்மாவின் சிடுசிடுத்த பதிலில் வருத்தம் அடைந்தவள்போல ர…
-
- 1 reply
- 3.9k views
-
-
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான். “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி, “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்…
-
- 1 reply
- 3.9k views
-
-
மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்! - சிறுகதை நரன் சிறுகதை: நரன், ஓவியங்கள்: செந்தில் பழனி, சிறு வயது முதலே பெரியாண்டவர் சைக்கிள் கடையில் வேலை செய்தான். அவன் கொஞ்சம் கெந்திக் கெந்தி நடப்பான். காலையில் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கடையின் சாவியை வாங்கிவந்து கடையைத் திறப்பது முதல் கடை முன் இருக்கும் மண்ணைச் சுத்தம் செய்து நீர் தெளித்து, முந்தைய நாளில் குறை வேலையாகவிட்ட சைக்கிள்களை மீண்டும் வெளியே எடுத்து வைப்பதுவரை எல்லாமே இவன்தான் செய்வான். காலை 8 மணிக்கு முன்பே, வேலை செய்வதற்கு ஏற்ப கடையைத் தயார்செய்துவிட வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் சில சைக்கிள்கள் காற்று நிரப்பிக்கொள்ள வரும். ஆண்களின் சைக்கிள் என்றால், அவர்களையே நிர…
-
- 0 replies
- 3.9k views
-
-
கண்ணாடி ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைமை உதவி ஆசிரியரும், சினிமா ஆர்வலருமான `கே.கே.எம்’ என்று அழைக்கப்படும் கவுண்டனூர் கே.மூர்த்தி (55), முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை இன்று காலை உடைத்துவிட்டார். ஆனால், அவரோ இதை மறுக்கிறார். அதை அவர் உடைக்கவில்லை என்றும், கண்ணாடியே தானாகக் கீழே விழுந்து உடைந்துவிட்டதாகவும் சொல்கிறார். வீட்டில் யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. அவர் பத்திரிகையாளர் என்றாலும் இந்தச் சின்ன விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார் என்றே நம்பப்படுகிறது. சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சுதா. இவர்களது உறவினர்தான் மூர்…
-
- 1 reply
- 3.9k views
-
-
சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் by RV மேல் நவம்பர் 4, 2010 இது ஒரு மீள்பதிவு, சில அப்டேட்களுடன். என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். படித்தவை: புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் :கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம். கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிற…
-
- 2 replies
- 3.9k views
-
-
எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பழைய கதை தான் இது ஒரு ஆற்றம் கரையோரமாக ஒரு விறகு வெட்டி மரம் ஒன்றை வெட்டி கொண்டிருந்தான் எதிர்பாராத விதமாக அவனுடைய கோடாரி தவறி ஆற்றினுள் விழுந்து விட்டது தன்னுடைய கோடாரி விழுந்து விட்டதை நினைச்சு ஆற்றோரமாக இருந்து அழுது கொண்டிருந்தான் இவனை பார்த்து இரக்கப்பட்ட வனதேவதை ஒன்று அவனுக்கு உதவி செய்ய வந்தது அவனிடம் ஏன் அழுகிறாய் என கேட்க அவனும் தான் அழும் காரணத்தை சொன்னான் உடனே ஆற்றில் மூழ்கிய தேவதை கையில் பொன்னாலான கோடரியுடன் வந்து இதுவா உனது என்று கேட்டது விறகு வெட்டியும் இல்லை என்று தலை ஆட்டினான் பிறகு மூழ்கிய தேவதை வெள்ளி கோடரியுடன் வந்தது இதுவா என கேட்டிச்சு அவனும் இல்லை என தலை ஆட்டினான் பிறகு அவனின் இரும்பு கோடரியுடன் வந்த தே…
-
- 12 replies
- 3.8k views
-
-
நெடுநல்வாடை வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோ ளழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெய…
-
- 3 replies
- 3.8k views
-
-
கோத்தபாயவும் நானும் விமானத்தில் இருந்து இறங்கிப் பதட்டத்துடன் பயணிகளுடன் பயணிகளாக விமான நிலையத்தின் உள்ளே காலடி வைத்தேன் .அடுத்த வருவது பயணிகளைச் சோதிக்கும் இடமென்பதால் பதட்டம் இன்னும் அதிகரித்தது. எதற்காக இந்த்தப் பதட்டம் "நீ என்ன கொள்ளையடித்தாயா கொலை செய்தாயா எதற்காகப்பயப்படுகின்றாய் " என் உள்மனம் சொல்லிக் கொண்டாலும் பதட்டம் தீர்ந்த பாடில்லை. ஒருமாதிரி சிங்கள அதிகாரி கேட்ட கேள்விகளுக்கும் முறைத்த முறைப்புகளுக்கும் பதில் அளித்துவிட்டு வெளிவாசலை நோக்கி என் கால்கள் விரைகின்றன. வெளி வாசலை அடைந்ததும் என் கண்கள் வாடகை வண்டிகள் நிற்கும் இடத்தைத் தேடின. தூரத்தில் அவைகள் நிறுத்தப் பட்டிருந்ததை அடையாளம் கண்டுகொண்டு நடந்து கொண்டிருந்தேன் திடீரெனப் பல இரு…
-
- 27 replies
- 3.8k views
-
-
தொழுவத்திலிருந்து கட்டியிருந்த மாட்டின் அழுகுரல் கேட்டு நினைவு திரும்பினார் கந்தர். எண்ணக்கோவைகள் எங்கொங்கோ சுழன்று சம்பந்தம் சம்பந்தமில்லாத இடத்துக்கு சென்று திரும்பவும் தொடங்கிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தன. யோசிச்சு யோசிச்சு மண்டையை உடைச்சாலும் தீர்வில்லாமல் தவித்தார். இறந்த போன மனிசியையும் நினைத்து http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post_21.html
-
- 22 replies
- 3.8k views
-
-
சாலமன் சபைக்கு வந்த விசித்திர வழக்கு - கறுப்பி அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில் ஒரு விசித்திரமான வழக்கு வந்தது ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள் இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால் யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை ஆகவே … காவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப் பாதியாகக் கொடு என்றான்.. 1 “மிஸ்ரிமோஃபோர்பியாதான் சந்தேகமில்லை”. பெரியக்கா என்னை ஆச்சரியமாகப் பார்த்து “என்ன பெயர் சொன்னனீ?” என்றாள். நான் முகத்தை வலு சீரியஸாக வைத்துக்கொண்டு, “மிஸ்ரிமோஃபோர்பியா, எல்லா அறிகுறிகளும் அது போலதான் கிடக்குது. நான் கூகிளில தேடியும்; பார்த்தனான். இப்படித்தான் விளக்கம் கிடந்தது” என்று கையில் மடித்து வைத்திருந்த வெள்ளைப்பேப்பர் ஒன்றை விரித்துப் படித்துக்காட்டத…
-
- 11 replies
- 3.8k views
-
-
மங்கள இசை முழங்க புரோகிதர் தனது பணிகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார் திருமண பந்தத்தில் இணையும் ஒரு உள்ளங்களுக்கு இறைவனிடம் அனுமதி கேட்டு.அவர் அனுமதி கொடுக்கும்படி புரோகிதருக்கு சொல்ல தம்பதிகளும் இணைந்துவிடுவார்கள் அந்த அக்கறையாக புரோகிதர் இருந்தார்.அத்துடன் தனது அன்பளிப்புகளையும் தயார்படுத்தி கொண்டு இருந்தார் வீட்டிற்கு எடுத்து செல்வதிற்கு. அலங்கரிக்கபட்ட மேசைகள் மற்றும் கதிரைகளும் மண்டபத்தின் அழகை இன்னும் மெருகூட்டிய வண்ணம இருந்தது.அந்த மேசைகள் அலங்கரிக்கபட்ட விததிற்கேற்ப அந்த மேசைகளின் மேல் பலகாரங்கள் மற்றும் குளிர்பானங்களும் பார்க்கும் கண்களை கவர்ந்திழுக்கும் வகையில் அடுக்கபட்டிருந்தது. சுரேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களின் மேசைக்கு போய் அவர்களுக்கு சலாம் போட்ட…
-
- 22 replies
- 3.8k views
-
-
மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன். ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள். அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த த…
-
- 15 replies
- 3.8k views
-
-
நான் அவனில்லை... (நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... ) இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன். சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும…
-
- 33 replies
- 3.8k views
-
-
குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது. அவளின் பிரச்சினை (சிறுகதை) -ஆனதி- தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்க…
-
- 20 replies
- 3.8k views
- 1 follower
-
-
உயிர் சோறு - சிறுகதை சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம் சரவணனிடம் தலையசைத்து விடைபெற்று வீதியில் இறங்கினேன். நல்ல வெயில். இப்படிப் பெரு வெளிச்சமாய் மட்டும் வந்து நம் உடல் முழுவதும் தழுவும் வெயிலை நல்ல வெயில் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் சுள்ளென்று தோல் சுட்டு எரிக்கும் வெயிலுக்கும் நாம் நல்ல வெயில் என்றுதான் சொல்கிறோம். நல்ல என்ற சொல்லுக்குத் தரும் அழுத்தத்தில் அர்த்தமே மாறிப்போய்விடுகிறதுதானே. வெயிலில் ஏது கெட்ட வெயில். கையில் விஜி கொடுத்தனுப்பிய நகைகள் அடங்கிய பை அப்படியே எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சரவணனுக்குத் தெரியும். நகைகளை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். பணம் தருகிறேன்; பின்பு உனக…
-
- 0 replies
- 3.8k views
-
-
பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம் அடிக்கும். வீட்டுக்கு முன்பாக ஆலமர விஸ்தீரணத்தில் மிகப்பெரிய வேப்பமரம் ஒன்றிருக்கும். எங்கள் தெருவாசிகளின் வேடந்தாங்கல் அது. அம்மரத்தில் பொன்னியம்மன் இறங்கியிருப்பதாக பூசாரி தாத்தா சொல்வார். இரவு வேளைகளில் உச்சா போவதற்காக அப்பாவை துணைக்கழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது, இருளில் அந்த மரம் மினுக் மினுக் என ஒளிருவதை கண்டிருக்கிறேன். மின்மினிப் பூச்சிகள் அதற்கு காரணமாய் இருந்திருக்கலாம். மரத்தின் பிரம்மாண்டமும் ஒரு மாதிரியான அடர்த்தி தோற்…
-
- 4 replies
- 3.8k views
-
-
கந்தர் என்ன கடைக்கோ என்று சுரேஷ் கேட்டது தான் தாமதம் கந்தர் கடுப்பாகி இல்லை படம் பார்க்க வந்தனான் என்றார்.கந்தர் கோபபட்டதிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே அவர் அருகில் வந்து உன்னட்ட எத்தனை தரம் சொல்லுறது கந்தர் என்று கூப்பிடாதே என்னுடைய பெயர் "ஸ்கந்தா" எங்களுடைய தமிழ் சனம் எவ்வளவோ நிற்குது இங்கே,அவையளுக்கு என்னுடைய பெயர் கந்தர் என்று தெரிந்தால் என்னுடைய "இமேஜ்" என்னாகும் மச்சான் என்றவர் கடையில் வாங்கிய பொருட்களை காருகுள் கொண்டு போய் வைத்துவிட்டு சுரேஷிடம் இருந்து விடைபெற்றார். காரில் வீடு செல்லும் போது கந்தருக்கு மனசு ஏதோ போல் இருந்தது சுரேஷுடன் அப்படி பேசி இருக்க கூடாது என்று மனதில் எண்ணியவர் வீட்டை போய் அவனுடன் தொலைபேசியில் கதைக்கவேண்டும் என்று க…
-
- 24 replies
- 3.8k views
-