கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
நாங்கள் விடும்பிழையால் மற்றவர்கள் பாதிக்கபட கூடாது... இதில் நாங்கள் கண்டிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்... உங்கள் கருமங்களை, செயற்றிட்டங்களை செய்யும் போது இவர்கள் எப்பவும் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரவேண்டும். இளம் இராணுவ பொறியியலாலருக்கான அந்த வகுப்பில் தளபதி அறிவுச்செல்வன் பேசிக்கொண்டிருந்தான். கடந்த காலங்களில் அவசரம், நிதானமின்மை, வெடிபொருள்களின் காலாவதி, வெடிபொருள் இணைப்புகளின் தவறுகள், போன்ற பல்வேறு காரணங்களால்.. எதிரியின் எல்லைகோட்டுக்கு அருகில், எதிரியின் உள்வரவை தாமதபடுத்தும் நோக்கில், கண்ணிவெடிகளை விதைத்து கொண்டிருக்கும் போது தவறுதலாக வெடித்து கைகள், கால்கள், கண்கள், என முக அழகையும் இழந்து நிற்கும் பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவு பெண் …
-
- 10 replies
- 2.2k views
-
-
முதலே சொல்லிட்டன் இது கதையில்லை. இதை எங்கை இணைப்பது என்று தெரியாதபடியால் கதைப்பகுதியில் இணைத்துள்ளேன். பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந…
-
- 6 replies
- 1.4k views
-
-
இறந்து விடுவது இயல்பு... அது முடிவானது . யாராலுமே தவிர்க்க முடியாதது. இது இயல்பாய் நடந்துவிட வேண்டுமா ? எல்லோருக்கும் நிகழ்ந்து விடுவது போல உங்களுக்கும். நீங்கள் யார் ? எல்லோரையும் போலசா..தா..ர..ண..மா..ன..வ..ர்..க..ளா ? நீங்கள் சாதாரணமாக இறந்து போகலாமா ? இறந்தும் வாழ வேண்டும் . இறப்பு அதன் பின்பே உன்னத வாழ்க்கை இறந்தும் நீங்கள் எல்லோரும் வாழ்வீர்கள் . திட்டுக்கிட்டு விழித்தான் அவன். அன்று தத்துவ உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்தும் அவன் நினைவுகளிலும் கண்களை மூட கனவுகளிலும் " இறத்தல் " பற்றி விளக்கமளித்து கொண்டிருந்தார். பக்கத்தில் அதனை அணைத்தபடி படுத்திருந்தான் இரண்டு நாள் நண்பன். அவனும் வெறித்த பார்வையுடன் இருந்தான். நேற்று இவனுக்கும் உரை நிகழ்த்தி இருப்பார்க…
-
- 3 replies
- 958 views
-
-
பிரிந்தது ஓர் உயிர் அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன். காலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது. நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம். நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று …
-
- 12 replies
- 1.4k views
-
-
இன்னமும் வலிக்கின்றது இந்தவருடம் எனது தாயார் ஊரிலிருந்து என்னிடம் வந்திருந்தார்.இதுதான் அவர் ஜரோப்பா வருவது முதற்தடைவை. பத்து ஆண்டுகளிற்குமுன்னர் இந்தியாவில் சந்தித்த பின்னர் மீண்டும் இப்பொழுதுதான் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தசந்தோசம். அதைவிட எனது மனைவி மகளையும் அவர் நேரில் சந்தித்த சந்தோசம்அவரிற்கு. தற்சமயம் நத்தார் பண்டிகை காலமாகையால் எனது நகரமெங்கும் அமைத்திருந்து மின்விளக்கு தோரணங்களை அம்மாவிற்கு காட்டலாமென நினைத்து அவரை காரில் ஏற்றிக்கொண்டு ""அம்மா அங்கை பாருங்கோ ஒரே நீலக்கலரிலை பல்ப்பு பூட்டியிருக்கிறாங்கள் வடிவாயிருக்கெல்லோ ?? இஞ்சாலை இந்த றோட்டை பாருங்கோ என்று காட்டியவாறே நகரத்தை சுற்றிவந்திருந்துகொண்டிரு
-
- 26 replies
- 3.8k views
-
-
மதுரை, கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பாண்டி-ராமாயி ஆகியோருடைய மகன் ராஜேஷ்கண்ணன். பி.காம். பட்டதாரி. அதே கூடல்நகர் புதூர் பகுதியில் வசித்து வரும் ஜெயராமன்-முத்தலட்சுமி தம்பதியினரின் மகள் வைதேகி. இவரும் ராஜேஷ் கண்ணனும் தீவிரமாக காதலித்து வந்தனர். காதலிக்கும்போதே இருவரும் சேர்ந்தும் விட்டனர். இதனால் கர்ப்பமானார் வைதேகி. அப்போது அவருக்கு 18 வயது கூட நிறைவடையவில்லை. மகள் கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமானதால் பதறிப் போனார்கள் வைதேகியின் பெற்றோர். இதையடுத்து தங்களது மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி ராஜேஷ் கண்ணனிடம் வற்புறுத்தினர். அவரும் விருப்பத்துடன்தான் இருந்தார். ஆனால் ராஜேஷ் கண்ணனின் பெற்றோர் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர். திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரி…
-
- 4 replies
- 906 views
-
-
பீஃப் பிரியாணி சிறுகதை: தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான். எங்கள் கம்பெனியின் போர்டு மீட்டீங் சைதாப்பேட்டை ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட இருந்ததால் வந்தோம். கிண்டியில் ஒரு லாட்ஜில் எங்களுக்கு இரண்டு அறைகள் போடப்பட்டிருந்தன. மூட்டைப்பூச்சி நசுக்கிய சுவடுகளோடு, ஓர் அழுக்குப் போர்வையும் மாடிப்படி முக்கில் துப்பிய எச்சில் கறைகளுமாக இருந்த லாட்ஜ். குடிக்கும் தண்ணீரில் செத்து மிதந்த பூச்சியைப் பார்த்து லோகநாதன் டென்ஷன் ஆனான். “என்னய்யா இது... நல்லா வாயில வருது. எதுனாச்சும் ஒண்ணுத்துலயா…
-
- 1 reply
- 2.1k views
-
-
நாயும் நானும்: க.கலாமோகன் இது எனது நாய். என்னுடன்தான் இருக்கும். ஒருபோதுமே என்னை விட்டு ஓடாது. நாயின் பெயர்? தெரியாது. 20 வருடங்களுக்கு மேலாக என்னுடன். ஆம், நாம் வீதியில். நான் அதனை நாய் என அழைப்பதில்லை. எந்தப் பெயர் எனக்கு நினைவில் வருகின்றதோ அந்தப் பெயரால் அழைப்பேன். உண்மையிலேயே எனக்கு எனது பெயரும் தெரியாது. ஆனால் எம் முன் சில சில்லறைகள், சாப்பாடுகள் வைப்போரது பெயர்கள் அவ்வப்போது எனது நினைவுக்கு வரும். நான் எங்கு பிறந்தேன்? நினைவே இல்லை. நீண்ட ஆண்டுகளாகப் பிரான்சில். விசா? நிச்சயமாக இல்லை. பொலிஸார் என்னைப் பிடிப்பார்களா? அதுவும் தெரியாது. அவர்களே என் முன் சிகரெட்டுகளைப் போடுபவர்கள். எனது இடம் ஓர் வீதி. எனக்குத் தொழிலும் இல்லை, சம்பளமும் இல்லை. “வணக்க…
-
- 2 replies
- 808 views
-
-
ஒருபோதும் தேயாத பென்சில் - சிறுகதை வண்ணதாசன் “வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு'' - உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ''கீச்சுன்னு கதவு திறந்து மூடின சத்தம்கூட நிக்கலை. அதுக்குள்ள எப்படி ராஜி வீடு பிடிச்சுப்போச்சு?'' என்று அவளை உட்காரவைக்கப் போவதுபோல், தன் பக்கம் இழுத்துச் சேர்த்துக்கொண்டு சந்திரா நின்றாள். சந்திராவுக்கு ஏற்கெனவே பெரிய கண்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாகி அவை ராஜியை அகலமாகப் பார்த்தன. ''பாருங்க அணில் குஞ்சு மாதிரியே தோள்ல தொத்த ஆரம்பிச்சுட்டா'' என்று ராஜி என்னிடம் சொன்னபோது பிடித்து இருந்தது. ஓர் அணிலாக சந்திராவை நினைத்துப்பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. நரை விழ ஆரம்பித்து இருந்த 60 வயது அணி…
-
- 0 replies
- 2.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் கடன் ``அக்கா, உன் புதுப் புடைவையைப் பத்து நிமிஷம் கடன் கொடுக்கா... புரொஃபைல் போட்டோ எடுத்துட்டு திருப்பிக் கொடுத்துடுறேன்'' என்றாள் தங்கை. - நந்தகுமார் மனசு 'என்னமோ.. தெரியல... ரிசார்ட்ல தங்கினா தேவலாம்ன்னு மனசு அடிச்சிக்குது' என்றார், ஆளுங்கட்சி எம்எல்ஏ. - வி.வெற்றிச்செல்வி தீர்ப்பு நண்பர்களின் சண்டையைச் சுமுகமாக்க ஐடியா கொடுத்தார் அப்பா, “பிரகாஷ் ஃபேஸ்புக் ஐ.டிக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!” - விகடபாரதி புரிதல் கையில் பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்ததும் ``அப்பா, குடிச்சுட்டு வந்திருக்கார்'' என்றது குழந்தை. - வேம்பார் மு.க.இப்ராஹிம் பேய…
-
- 0 replies
- 1.7k views
-
-
தந்திரம் ‘‘மாப்பிள்ளையோட லேட்டஸ்ட் தனி போட்டோ இல்லையாம். ஃபிரண்ட்ஸோட இருக்கிற குரூப் போட்டோதான் இருக்காம். கொடுத்தாங்க. இதுல நடுவில இருக்கிறவர்தான் மாப்பிள்ளை... ஓகேயானு சொல்லுங்க!’’ என்று தரகர் நீட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்தார் வெங்கட். நண்பர்கள் மத்தியில் பார்க்கிறார் போல் இருந்தார் மாப்பிள்ளை. ஓகே சொல்லி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. உள்ளேயிருந்து ‘விர்’ரென வந்த ஜா போட்டோவை வெடுக்கெனப் பிடுங்கிப் பார்த்தாள். அவள் உதடு பிதுங்கியது. ‘‘இது ஒரு தந்திரம் டாட்! ரொம்ப குள்ளமா வத்தலும் தொத்தலுமா கன்னம் ஒட்டி இருக்கிறவங்க மத்தியில நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா, சுமார் மூஞ்சி குமாருகூட பார்க்கிறாப்புலதான் தெரிவான்! அதான் தனி போட்டோ தராம, இப்பிடி ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
மழை நண்பன் - சிறுகதை ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப் போவது? சத்யாவிடம் சொன்னால் கோபித்துக்கொள்வான். 'ஏன் நான் வரலையா? நீயெல்லாம் அவ்ளோதான்!’ என்பான். ''15 நாள் இம்ப்ளிமென்ட் புரொகிராம். பெங்களூர் வர்றேன். உன் அட்ரஸ் சொல்லு'' - மாலை வேளை ஒன்றில் அலைபேசியில் அழைத்தான். ''முதல்ல உன் ஆபீஸ் எங்கேனு சொல்லு!'' ''பெலந்தூர்ல!'' ''அய்யோ நான் ஒயிட் ஃபீல்ட்ல இருக்கேன். அது ரொம்பத் தூரம். நீ அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஒரு காமன் பிளேஸ்ல மீட் பண்ணலாமா?'' பெங்களூர் வந்ததும் சத்யா திரும்பவும் அழ…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் ஃபிகராம் ஃபீகர்! ப் ளஸ் டூ படிக்கிற தன் மகன் சுரேஷ§க்கு டெர்ம் ஃபீஸ் கட்டிவிட்டு வெளியே வந்தார் பாஸ்கரன். மாணவி கள் மார்போடு ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெ…
-
- 1 reply
- 1.3k views
-
-
கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம் அப்படியொரு ராட்சச ஜந்துவை இதுவரை அவன் பார்த்ததில்லை. அதன் பிளந்த வாயில் இருந்து கூரிய பற்கள் நீட்டிக் கொண்டு இருந்தன. சற்றுமுன் அதன் வாய்க்குள் விழுந்த இரையைக் கடித்து விழுங்கியதற்கான ரத்த வாடை அவனைச் சுற்றி பரவிக் கொண்டிருந்தது. ஆனாலும் பசி தாளாமல் இவனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது, அந்த ஜந்து. "நிச்சயமாக இந்த ஜந்துவுக்கு இரையாகிவிடுவோம்' என்றதொரு பயம் இவனை முழுமையாகப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஜந்துவிடமிருந்து தப்பிக்கும் லாவகம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அதை அவன் விரும்பவில்லை. அதே சமயம் மாட்டிக்கொள்ளவும் விருப்பமில்லை. இன்னத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த வாரம் 'ஒரு பேப்பரில்" பிரசுரமான சிறுகதைக்கும், குறுங்கதைக்கும் இடைப்பட்ட ஓர் வடிவம் மர்ம மயானம். எங்கள் எட்டுப்பேர்களுக்குள்ளும் இன்னும் கருத்தாடல்களும், கலக்கங்களும், கடந்த கால ஏக்கங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருந்தன. அந்த வேர் முட்டிய இலுப்பை மரம் நூற்றாண்டு தாண்டிய முதிர்ச்சியுற்றிருந்தாலும் அந்தக் கானல் பிரதேசத்தில் வேரூன்றிய காரணத்தால் வளர்ச்சியில் செழுமை குன்றி குற்றவாளியைப்போல் குறுகி நின்றது. அதன் அடிப்பரப்பு வேர்த்திட்டுக்களில் அமர்ந்தபடி அலறலாய் வெளிவந்த எங்கள் புலம்பல்களை இந்த மரம் எத்தனையோ தடவைகள் கேட்டாயிற்று. இருந்தாலும் மனதிற்குள் வெம்பியபடி இன்னும் மௌனமாகவே நிற்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. 'ஏய் மரமே! உனக்குக் கூடவா…
-
- 8 replies
- 2.7k views
-
-
குடை - க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது சொன்னால் அன்று குளிர். அது குளிர் என்றால் சூடு. இந்த நிழல் தோற்றம் கூட சுவையானது. மனதை மப்பும் மந்தாரமுமான ஓர் வெளிக்குள் இழுத்துச் சென்றுவிடும். மனித நடமாட்டங்களை இருள் நிறத்துள் பார்க்கும்போது ஓர் மத்திய காலச் சுவாசிப்புக்குள் நான் நுழைந்துவிடுவதுண்டு. என்றும்போல வீதியில் நிறைய அசைவுகள். திடீரென மழை பெய்யத்தொடங்கியது. "அசிங்கமான காலம்" என மழையைத் திட்டியபடி பலர் என்னைக் கடந்து …
-
- 0 replies
- 1.7k views
-
-
காளீஸ்வரன் “அக்கா… அக்கோவ்” சற்றே தயக்கம் தொனித்தாலும் வலுவாக எழுப்பப்பட்ட குரல் குமரேசனின் தூக்கத்தைக் கலைத்தது. அவிழ்ந்து கிடந்த லுங்கியை சரிப்படுத்திக்கொண்டு, படுத்தவாறே அண்ணாந்து கெடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு. கிழக்கு பார்த்த தலைவாசல் கொண்ட அந்த வீட்டில் நுழைந்தவுடன் தெரிவது பூஜையறை. தலைவாசல் நெலவும் பூஜையறை நெலவும் கிட்டத்தட்ட ஒரே அகலம். வீட்டுக்குள் நுழையும்போதே பூஜையறையும் அதன் மையமாய் ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனி முருகன் படமும் கூடவே குமரேசனின் குலதெய்வம் படமும் தென்படும். பூஜையறையை ஒட்டியபடி அகன்ற ஆசாரம். எப்போதுமே ஆசாரத்தில் படுப்பதுதான் குமரேசனின் விருப்பம். குமரேசன் எழுந்து தூக்கக் கலக்கத்துடன் பார்த்தான். சாமியறை முன்பாக அம்மிணியக்கா ந…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
"காதல் அழிவதில்லை" யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில் சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்ப…
-
- 0 replies
- 466 views
-
-
"வறுமையின் நிறம் சிவப்பு" கொழும்பு, காலி முக திடலில், வறுமையை ஒழிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்து ஐம்பது நாள் தாண்டியும் மக்களின் போராட்டம் முடிவற்று இன்னும் தொடர்கிறது. சிவப்பு கொடிகள், கருப்பு கொடிகள் பல அங்கு மக்கள் ஏந்தி அமைதியான ஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) செய்கிறார்கள். கருப்பு கொடி துக்கத்தை குறிக்கும் என்றாலும், சிவப்பு கொடி எதற்க்காக ?. கூட்டத்தில் நானும் ஒருவனாக இன்றுதான் இணைந்தேன். என் மனதில் முதல் தோன்றியது அது தான். ஏன் சிவப்பு ? எல்லோரையும் பார்க்கிறேன், அவர்களின் வறுமை எல்லையை தாண்டி இருப்பதை அவர்களின் கண் காட்டுகிறது. கோப ஆவேசத்தில் அது சிவந்து இருப்பதை காண்கிறேன்! மா சே துங் [M…
-
- 0 replies
- 584 views
-
-
மேன்மலும் பிடிக்காதவை.......கோவில்கள்.....கள்வர்....ராணுவம் . யாழ்ப்பாணத்தில் பல கோவில்கள் தமது தனித்தன்மையை இழந்துவிட்டது என்பது என் அப்பிப்பிராயம்....நல்லூர் கோவிலில்... கோவிலுக்கும் கேணிக்கும் இடையில் இருந்தபாதை இப்போ இல்லை, கேணியை கோவிலுடன் சேர்த்துக்கட்டியுள்ளார்கள், இதனால் உட்பிரகாரம் நீண்டு பிரமாண்டமாக இருக்கிறது....என்ன நோக்கம் என தெரியவில்லை....கீழே Terrazzo போட்டும், மேலே அழகான Chandelier lights போட்டு பயங்கர சோடனைகள் செய்திருக்கிறார்கள், வெளியே சுற்றுவட்டமாக கூப்பிடு தூரத்தில் Gate போட்டிருக்கிறார்கள்......மேலும் கோபுரங்களிற்கு சந்தனகலரில் வண்ணமடித்திருக்கிரார்கள்.... முன்பு திருவிழாவின்போது கால் புதைய நடந்த இடமெங்கே....கோபுரங்களில் பச்ச…
-
- 1 reply
- 2.1k views
-
-
குட்டான் டானியல் ஜீவா விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள். நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேலோங்கும். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது . என்னுடைய வீட்டுக்காரர் இருவீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். ஸ்காபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன். அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம் பார்த்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் தன…
-
- 1 reply
- 870 views
-
-
சுடும் நிலவு சுடாத சூரியன் “இன்று சனிக்கிழமை காலநிலை பூச்சியத்துக்குக் கீழே பத்துப் பாகை என்று வானிலை அவதானநிலைய அறிவிப்பைக் கேட்ட வண்ணம் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி வீட்டைப் பூட்டியபின் தன் குளிருடைகளை எல்லாம் சரிபார்த்தபடி காரை வீதியில் இறக்கினாள் மனோகரி. வீதி ஓரம் எங்கும் பனிக்குவியல். இந்தக் குளிரிலும் வீதியில் ஆள் நடமாட்டத்துக்கு குறைவில்லை. அவரவர் தத்தமது கடமைகளைச் செய்வதற்கு குளிரோ மழையோ இங்கு ஒரு தடையாக இல்லை. காரை வெகு கவனமாகச் செலுத்திய மனோகரி பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு பாடசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது நேரம் ஒன்பது மணி. தமிழ் வகுப்புகள் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. பெற்றோர் தமது பிள்ளைகள் தாய் மொழியைப் …
-
- 10 replies
- 2.4k views
-
-
அன்று வெள்ளிகிழமை கனகர் அடுத்த நாள் வேலைக்கு போக தேவையில்லை என்ற சந்தோசத்தில் உற்சாக பானத்துடன் உறவை வளர்த்து கொண்டி இருக்கும் போது தான் தொலை பேசி மணி அடித்தது,யாராவது அறுக்க போகிறார்கள் என்று யோசித்து கொண்டு தொலைபேசியை எடுத்தார்,அது அவரின் நண்பர் கந்தர் மறுமுனையில் இருந்து என்ன நாளை "உக்கிரேனியன்" மண்டபதிற்கு வாறீர் தானே என்றார்.என்ன விசயம் எப்ப என்று கேட்க கந்தரும் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு கோபத்துடன் கேட்டார் என்ன போட தொடங்கிட்டீரோ. நாளை எங்களுடைய தமிழ் ஆட்களின் ஒன்று கூடல் இருக்குது வரவில்லையோ அப்பொழுது தான் கனகருக்கு ஞாபகம் வந்தது தமிழர்களின் ஒன்று கூடல் பற்றி இது என்ன இப்படி கேட்டு போட்டீர் நான் இல்லாமல் தமிழர் ஒன்றுகூடல் சிட்னியில நடைபெறுமா? கட்டாயம் வருவ…
-
- 10 replies
- 2.3k views
-
-
”படிக்கத் தூண்டாத” பெருங் கதை – யுத்தம் சிறு கிழவியொருத்தியின் பத்தோ என்னவோ மகன்களில் இளையவன், தனது 39-ஆவது வயதில், அகாலமாய் இறந்து போனான். யுத்தமல்ல, அது ஒரு அகால மரணம். இறக்கும் போது, மனைவி மற்றும் நாலோ ஐந்தோ பிள்ளைகள் கூட இருந்தன. லெளகீக வாழ்வின் இன்பங்களனைத்தையும் அனுபவித்தே போனது அவனது உடல். விட்டுச் சென்ற 28 வயதேயான ஒரு இள மனைவியின் உணர்ச்சிகள் சாகடிக்கபடும் நெடுந்தூரத் தனிமையும், மறுமணம் என்பதே சிந்திக்கப்படா குழந்தைகளின் எண்ணிக்கையும் சமூகமும் தவிர – காலம் மூடிவிடக் கூடியது அந்த மரணம். ஆனால் அந்த இள மனைவியின் துயரத்தை இளமையை அரித்துக் கொண்டு காலம் போன போக்கின் பின்னும், மேலும் ஒன்பது பிள்ளைகளை உடையவரான அந்தக் கிழவி, பல காலமாக குங்குமமும் சரிகைச் சேலையும் கட்ட…
-
- 6 replies
- 1.2k views
-