கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
இது யார் தப்பு?? சிட்னி முருகன் கோவில்! எம்மில் பலருக்கு வாழ்வோடு ஒன்றின போன ஒரு விடயம். பலருக்கு இது ஒரு ஒன்றுகூடி பேசுமிடம். பலருக்கு இது வாங்கிய புடவையையும், நகைகளையும் போட்டு மினுக்குமிடம். சிலருக்கு இது வியாபார ஸ்தாபனம். சிலருக்கு இது வருங்கால துணையை கண்டுபிடித்த இடம். நூற்றில் ஒருவருக்கு இது இறைவனை துதிக்கும் இடம். அந்த நூற்றில் ஒருவரின் கதை...ஒருத்தியின் கதை. இன்றிலிருந்து 30 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய மாணிக்கம், சகுந்தலா தம்பதியினரின் ஒரே மகள் சரண்யாவின் வாழ்க்கை கதை. 2002 ஆம் ஆண்டு சிட்னி முருகன் வருடாந்த தேர்த்திருவிழா. புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய வந்த தமிழர்களுக்கு முதன் முதலில் ஒரு முழ…
-
- 44 replies
- 6.8k views
-
-
இதுதான் காதல் என்பதா? செகந்த்ராபாத் ரயில்வே ஸ்டேஷன். ஆட்டோ வந்து நிற்க, அருணும், கோபியும் இறங்கிக் கொண்டார்கள். மீட்டர் பார்த்து பணம் கொடுத்து விட்டு, உள்ளே வந்து, ஐந்தாம் நம்பர் பிளாட்ஃபாமிற்கு வந்து சேர்ந்தார்கள். சென்னை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. எஸ் - 7 கோச்சைத் தேடி ஏறி, தங்களது சீட் நம்பரை பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். ரயில் புறப்படுவதற்கு பத்து நிமிஷங்கள் இருந்தது. அங்கும் இங்குமாக தமிழும் தெலுங்கும் கலந்த குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அருண், அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு பெண், இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தையை…
-
- 0 replies
- 794 views
-
-
இது தமிழ்நதி எழுதிய கவிதைக்கதை. http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post.html நிர்வாகத்துக்கு! தமிழ்நதிக்கு படைப்புக்களத்தில் அவரது படைப்புகளை பதிவு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவன்: நீ ஒரு ராட்சசி! அவள்: உனது தேவதை எங்குதானிருக்கிறாள்? அவன்: எனக்குள் இருக்கிறாள். அவள் எனது இனிய கனவு! பால்யத்தைப் பசுமை செய்தவள்…! கிராமத்தின் பின்புறமாய் பாசிப்பச்சை நிறத்தில் துவைத்துப் போடப்பட்ட சேலையைப் போல ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் கரையோரம் அவளை முதன்முதலில் சந்தித்தேன். தோழிமாரெல்லாம் வீதியை ஒட்டிய உயரமான பாலத்திலிருந்து குதிக்கஇ இவள் மட்டும் விழிகளில் ஆசையும் பயமும் கலந்திருக்க தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிருக்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
இதுவும் ஒரு காதல் கதை! நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், அவரவர் குடும்பம் அவரவருக்கு! அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், 'என்ன பாரதி..…
-
- 0 replies
- 1.2k views
-
-
இதோ எனது சரீரம் - நரன் ஓவியங்கள் : செந்தில் பாரிஸில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்திலிருந்து நேர்க்கோட்டில் தொடங்கி இரண்டாகப் பிளவுறும் சர்ப்பத்தின் நாவைப் போன்ற வீதி அது. இடது பக்கமாகப் பிரியும் 7-ம் அவென்யுவில் சாலையோர உணவகம் ஓன்று இருக்கிறது. சமதளத்தில் இற்றுப்போன மரஉணவு மேசைகளும், இருக்கைகளும், கால் உடைந்த மர பெஞ்சுகளும் பழமையும், அழுக்கும், தூசியும் படிந்த மலிவான உணவகம். அந்த உணவகத்தைப்போன்றே கால்கள் அற்ற, அழுக்குப் படிந்த, மிகுக் கசப்பும், மலிவான விலையும் கொண்ட மதுவை அருந்துவதில் விரு ப்பம் கொண்டவர்களும், கடன் சொல்லி உணவு உண்பவர்களும்தான் பெருமளவு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஏழைக் குடிகாரர் களிடையும், மூப்பிலும் வேலை தேடும் ஆண்களிட…
-
- 0 replies
- 3.2k views
-
-
இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றாக உற்றுப் பாருங்கள். தரையில் விரிக்கப்படும் ஒரு கம்பளம் (Carpet) என்று இதை நீங்கள் நினைத்தால், இனி நான் எழுதப் போவதை நிச்சயம் படிக்க வேண்டிய ஒருவராக நீங்கள் இருப்பீர்கள். கம்பளம் போல, அச்சு அசலாக இருக்கும் இது கம்பளமே அல்ல. 'சரி, கம்பளம் இல்லை. அப்படியென்றால் காகிதம் ஒன்றில் வரையப்பட்ட ஒரு சித்திரம்' என்று மறுபடி நீங்கள் நினைக்கலாம். அப்படி நினைத்தாலும், நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள். கம்பளமும் இல்லை. காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் இல்லை. அப்படியென்றால் இது என்ன? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிய ஆய்வுடன்தான், நம் பயணம் இந்தத் தொடரில் ஆரம்பமாகப் போகின்றது. இந்தத் தொடர், நான் இதற்கு முன்னர் எழுதிய 'மாயா மக்கள்' பற்றிய தொடரைப் போல, மர…
-
- 27 replies
- 34k views
- 1 follower
-
-
இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்..(முழுவதுமாகப் படிக்கவும் ) சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது. ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ? சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோட…
-
- 67 replies
- 8k views
-
-
இந்தச் சுவடுகளின் பின்னால் - அல்லையூர்சி.விஜயன் (இத்தாலி) அவளைப் பார்த்தால் யாரெனத் தோன்றும்! அவளுக்கு வயது பத்து. பார்த்தால் கண்கள் ஏமாந்துதான் விடுகின்றது! உணர்ச்சிகளின் கூட்டு மனித வடிவம். அப்படியாயின் அவள் யார்? வண்ணத்துப் பூச்சியின் காலங்கள் போலவே வாழவேண்டிய வயது! இந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? வீதியிலுள்ள குப்பை கூளங்களையெல்லாம்...... துருவித் துருவி பார்க்கிறாளே! இவள் மனதை யார் துருவுவார்? இவளின்று சோகங்களுக்குச் சொந்தக்காரி...... ஏக்கங்களுக்கு எஜமானி. இவள் வெளிச்சங்களை நிராகரித்தவள் அல்ல...... வெளிச்சம்தான் இவளை நிராகரித்தது! 'மனதுக்கும், நினைவுக்கும் ஒரே பாதை!" நம்புகின்றீர்களா? காற்று வழி வரும் வாசம் மாதிரி..... கால் தூண்டும் இடமெல்லாம் இவளைக் காணலாம். பசிய…
-
- 0 replies
- 1k views
-
-
வங்கியில் இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட அவனுக்கு விருப்பமாகவும் பெருமையாகவும் இருந்தது. கனடாவுக்கு வந்தநாள் தொடங்கி வந்த எத்தனையோ கடிதங்களை எல்லாம் கீழ்வீட்டுச் சிற்றம்பல வாத்தியாரிடம் காட்டி விபரம் கேட்பதற்காக நாய்போல அவர்கள் வீட்டு வாசலிலே காத்திருந்ததும் வாழ்க்கை இரகசியங்களை ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஒரே ஒரு காரணத்துக்காக அவர்களோடு பங்கு போட்டுக்கொள்ள நேர்ந்ததும் போன்ற அவலங்கள் இப்பொழுது சண்முகத்துக்கு இல்லை. சண்முகம் படித்தவன்;. கணக்கிலும் உலக அறிவிலும் அவனும் கெட்டிக்காரன் தான். ஆங்கிலம் மட்டும் தான் அவனுக்கு தெரியாது. ஆனால் கனடாவைப் பொறுத்தவரை அதுவே அவனுக்கு பெரிய தலை வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்திய மனைவி திவ்யமதி. ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்.... எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'என…
-
- 13 replies
- 3k views
-
-
இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது! "முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே. அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே" இந்திய தமிழரான யுகபாரதி என்னும் கவிஞர் ராஜபாட்டை என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடலின் சரணத்தில் வரும் வரிகள் இவை. வாசிக்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வந்ததாக நண்பன் சொன்னான். எனக்கு வரவில்லை. இப்போதெல்லாம் கோபம் ஏனோ வருவதில்லை. அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய்விட்டது. சின்னவயதில் ஆகாயத்தால் வந்து எங்களுக்கு பருப்பு போட்டீர்கள். எடுத்து தின்றோம். ருசியாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏழைக்குசேலர்கள் நாங்கள். அவல் தானே தரமுடியும். எடுத்து கொள்ளுங்கள். அட ஒருவர் செய்…
-
- 2 replies
- 996 views
-
-
இனி, மின்மினி -புதிய க்ரைம் தொடர் ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம் நியூயார்க் நியூயார்க் விமான நிலையத்தில் விமானம் இறங்கிக்கொண்டு இருந்தபோது காலை 7 மணி. சூரியன் பனிப் போர்வைக்குள் சிக்கி, பட்டர் தாளில் சுற்றப்பட்ட ஆப்பிள் போலத் தெரிய... கோலப் பொ…
-
- 15 replies
- 5.4k views
-
-
இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்.. சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொ…
-
- 49 replies
- 11k views
-
-
இனிமேல் என்பது இதில் இருந்து... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வண்ணதாசன், ஓவியங்கள்: ஸ்யாம் மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை. கரன்ட் போயிருந்தது. நனைந்த செருப்பில் இருந்து தோல் வாடை அடிப்பதாக, எப்போதோ நுகர்ந்த வாசனை அவள் முகத்துக்குள் வந்தது. புளியங்கொட்டை அளவுகூட இராது... ஒன்றை அடுத்து இன்னொன்றாக குட்டிக்குட்டித் தவளைகள் தெருவில் இருந்து வாசல் பக்கம் குதித்து நகர்ந்து வந்தன. கோமு இதுவரை அசையாமல், தந்தி போஸ்ட் பக்கம் கெட்டுக்கிடையாகத் தேங்கியிருக்கும் தண்ணீரில் மழைப்புள்ளி விழுவதையே பார்த்துக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்றொரு நாள்... சண்டிலிப்பாயில் இருந்த காலம்... கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில படிச்சனான் ..ஆறு தலை முறை வீடு..வீட்டில இருந்து பள்ளிக்கூடம் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும்...இடையில வயல் வெளி.. வீட்டில இருந்து பள்ளிக்கூடம் வெளிக்கிட்டம் என்றால்... அப்பிடியே பின்னால பையைக் கொழுவிக்கொன்டு சைக்கிள்ளை கந்தரோடை வயல் வெளியைத் தாண்டி காற்று தள்ள தள்ள ஓடுறது ஒரு சுகம்தான்...வீட்டில இருந்து வரேக்கை.... வலப்புறவயலில கண்ணகை அம்மன் கோவில்.. இடப்புற வயலில அளவெட்டி மாரி அம்மன் கோவில், நடுவில தவறனை ஒண்டு வேறை... கார்த்திகை, மார்கழியில.. வழுக்கை ஆற்றின் படுக்கயில இரண்டு பக்கமும் வயல் பச்சைப்பசேல் எண்டு இருக்கும்.. மார்கழி,தை மாதம் எண்டா அதால நடந்து வரும் எங்கடை மட்டங்களுக்க…
-
- 26 replies
- 4.9k views
-
-
இனிய நினைவுகளின் வாசம். நன்றி - தமிழமுதம் - http://tamilamutham.net/amutham/index.php?...id=245&Itemid=1
-
- 5 replies
- 2k views
-
-
இனியாவின் தவிப்பு பாகம் 1 செவ்வானம் சிவந்து! கதிரவன் வரும்போது இவள் ..... யாருக்காக காத்திருந்தாள்?.....அப்படி என்னதான் நோக்கிறாள் ! காலை முதல் மாலை வரை, யார் இந்த பெண் ! இவள்தான் ..... இனியா. இவள் ஏக்கம் எல்லாம் ஒரே ஒரு ஓசைக்காக அதுதான் தொலைபேசியின் ஓசை ...... அது அவளுக்கு இதயத்தை மெல்ல மெல்ல தட்டி வருடி எழுப்பும் இனிய சுவாசக்காற்று காற்று மட்டும் தானா உலகில் உள்ள அத்தனை வாசமலர்கள் எல்லாவற்றையும் ஒன்றாய் வருடகூட்டினால் எப்படி வாசம் வீசுமோ அவ்வளவு ஒரு புன்சிரிப்பின் உதடுகள் ...... உதடுகள் மட்டும்தானா ! .....? வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் கண்கள் கூட அவள் கண்ணின்மேல் காதல் கொள்ளும் அவளின் அழகு இவளின் மனதோ சமுத்திரம் போல் பரந்து வழைந…
-
- 35 replies
- 8.8k views
-
-
இனியாவின் தவிப்பு ...... (பாகம் 6 ) (மறுநாள் காலை) தாயார் : இனியா ..... இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மாச்சி ..... அம்மா அப்பா என்னை ஆசிர்வதியுங்கோ ..... எங்கள் ஆசிர்வாதம் எப்போதுமே உங்களுக்கு உண்டு .... (இனியாவை கட்டித்தழுவிய படி கூறினார்கள்) நாங்கள் எல்லோரும் கோவிலுக்கு போவோம் வெளிக்கிடுங்கள் கெதியாக அபிஷேகத்துக்கு முன் போகவேணும் ''இனியா தளயத்தளைய நடை பயின்று பூமியை தட்டி எழுப்பும் விதத்தில் அவளின் சேலையும் அவள் தோட்டத்தில் உள்ள தேன்வண்டுகளை கொட்டி கூப்பிடும் அளவுக்கு அவள் தலையில் மல்லிகை பூவும் முகத்தில் புன்னகை என்னும் பூக்கள் வடிய சிந்து பாடும் நடையோடு மனதில் அலைபோல் கற்பனைகளை சுமந்து அவள் மனதுக்குள் ஒரு சுயம்பரமே நடத்துகின்…
-
- 37 replies
- 5.3k views
-
-
இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12) ஏன் அண்ணாவையும் புகழையும் கடத்தி வைத்திருக்கினம், என்ன பிரச்சனை? எனக்கு ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கோ.... இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துவிட்டோம் இனிமேலும் எங்களுக்கு பிரச்சனை என்றால் அதை தாங்கும் மன வலிமையையும் உண்டு .... சொல்லுங்கோ மச்சாள். வழமைபோல் காடையர்கள் அட்டூழியமும் அவர்களின் பணம் என்கின்ற பிணம் தின்னும் ஆசையும்தான் காரணம், ஒரு கோடிரூபா கேட்க்கின்றாங்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாம் அவங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது !அவங்களிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு. ஆனால் எங்களுக்கு மச்சாள் அண்ணாவையும் புகழையும் முதலில் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யவேண்டும்,…
-
- 40 replies
- 6k views
-
-
‘ தம்பி! இனியும் பிரிவினையும் வேற்றுமையும் பேசித்திரிஞ்சு பிரயோசனமில்லை. அவங்கள் மட்டும் இனவாதம் பேசயில்லை. அவங்கள் மொழிச்சட்டம் கொண்டு வந்து இனவாதம் பேசின மாதிரி எங்கடை ஆக்களும் நாட்டைப்பிரிப்பம், எல்லை போடக் கிளுவங்கதியால் தாருங்கோ எண்டு பேசி சனத்தை உசார்படுத்தி விட்டதின்ரை பலன்தான் எங்களை இண்டைக்கு சாம்பல் மேட்டிலை கொண்டுவந்து விட்டிருக்குது . இனியெண்டாலும் இந்தக் கதையளை விட்டிட்டு சேர்ந்து போனாத்தான் எங்கடை சனத்துக்கு ஏதாவது கிடைக்கும். வாய்ப்புக்கிடைச்சால் நில்லும். அதாலை நாலு சனத்துக்கு நல்லது செய்யமுடிஞ்சால் செய்யும். இதிலை சரி பிழை யோசிக்கிறதுக்கு ஒண்டும் இல்லை.’ என்ற குலசேகரத்தாரின் பேச்சில் யதார்த்தம் இருப்பதாகப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சரியென்றும் பிழ…
-
- 4 replies
- 1.3k views
-
-
இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு.....! (குறிப்பு :- இவ்வாக்கம் சுயசரிதமில்லை. விடுதலைக்காக வாழ்ந்த ஒருவரின் நிலமையைப் புரிந்து கொள்ளாமல் கிடைக்கவிருந்த உதவியைத் தடுத்தாட்கொண்ட ஒரு குழுவின் போக்கினைப் பதியவும் , தனித்தே இயங்குகிற நேசக்கரம் அமைப்பினை எவரோ இயக்குவதாக பொய்யுரைக்கும் பொய்யர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கவுமே எழுதியுள்ளேன். ஸ்கைப்பிலும் தொலைபேசியிலும் சிலருக்குள் நடைபெறுகிற உரையாடல் பக்கசார்பற்ற உதவிகளையும் கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பொய்யான நம்பிக்கைகளையும் விதைத்துவிடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் பேசி பெரிய தலைகளின் விமர்சனத்தை வாங்குவதிலும் பார்க்க பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களின் வாழ்வுக்கு உதவிபுரிகிற மனிதநேயர்களும் உண்மையைப் புரிந்…
-
- 16 replies
- 1.7k views
-
-
இனுமு கொறடு... ‘‘ஒரேய் ஸ்ரீதர்! தோ ஒஸ்தானு. எக்கட... ஆ விசறக்கோலு! (விசிறிக்கம்பு) அப்படியே மண்டைல போட்டேனா பாரு...’’ அடிக்க வரும் சின்ன அம்மம்மாவிடமிருந்து தப்பித்து ஓடுவோம் நானும் தம்பி விஜயராகவனும். அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். எங்கள் பாட்டியின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் ரயில்வேயில் இருந்த கணவர் அப்பாய் நாயுடு மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்னமும் வலிக்கின்றது இந்தவருடம் எனது தாயார் ஊரிலிருந்து என்னிடம் வந்திருந்தார்.இதுதான் அவர் ஜரோப்பா வருவது முதற்தடைவை. பத்து ஆண்டுகளிற்குமுன்னர் இந்தியாவில் சந்தித்த பின்னர் மீண்டும் இப்பொழுதுதான் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தசந்தோசம். அதைவிட எனது மனைவி மகளையும் அவர் நேரில் சந்தித்த சந்தோசம்அவரிற்கு. தற்சமயம் நத்தார் பண்டிகை காலமாகையால் எனது நகரமெங்கும் அமைத்திருந்து மின்விளக்கு தோரணங்களை அம்மாவிற்கு காட்டலாமென நினைத்து அவரை காரில் ஏற்றிக்கொண்டு ""அம்மா அங்கை பாருங்கோ ஒரே நீலக்கலரிலை பல்ப்பு பூட்டியிருக்கிறாங்கள் வடிவாயிருக்கெல்லோ ?? இஞ்சாலை இந்த றோட்டை பாருங்கோ என்று காட்டியவாறே நகரத்தை சுற்றிவந்திருந்துகொண்டிரு
-
- 26 replies
- 3.8k views
-
-
இன்னா செய்தாரை ஒருத்தல்! ‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான். “நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-