கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கம்பமதயானை* ‘எத்தனையளவு உள்ளே போகிறேனோ அத்தனை பசுமை மலைகள்.’ டானடா சண்டூகா (ஜென் கவிதைகள்) – தமிழில்: ஷங்கரராமசுப்பிரமணியன் கண்ணுக்கெட்டிய உயரம் வரை மலையை இருள் சூழ்ந்திருந்தது. பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தைக் குடித்துக்கிறங்கிப்போயிருந்த மந்தமான இருள். வண்டாரி, பழையூ, செம்பட்டி, அத்திபட்டி ஊர்களிலிருந்து துணைக்கு வந்திருந்த ஆள்களுடன் செல்வராஜும் ஜோதியும் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். மஹாலிங்கத்தின் தரிசனத்துக்காகச் சாரை சாரையாக மக்கள் தாணிப்பாறை வழியாய் வந்துகொண்டிருந்தாலும் சாப்டூர் சுற்றின கிராமத்து மக்களுக்கு இன்னும் இதுதான் குறுக்குப் பாதை. தாணிப்பாறையிலிருந்து செல்வதைவிடவும் தூரம் குறைவுதான். ஆனால், ஏறி இறங்கக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ? சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோட…
-
- 67 replies
- 8k views
-
-
அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழி…
-
- 18 replies
- 3.3k views
-
-
சாதல் என்பது... பொ. கருணாகரமூர்த்தி ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின்பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும் தொய்வானதுமான, ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும் குதிரைகளில் சவாரி செய்பவர்களுக்குமாக உள்ளவை. காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக் ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்தும் முகாமிடுவர், கிறில் போடுவர், நீச்சலடிப்பர். காட்டினுள் இருந்து இரவில் …
-
- 0 replies
- 672 views
-
-
மொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் – குமாரி (தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்) ரிஷான் ஷெரீப் ஒவ்வொரு விதமாக வேண்டுகோள்களை முன் வைக்க முடியும். அவற்றுக்கான மறுமொழிகள் – அவை மிகவும் மாறுபட்டதாகவும் அமையலாம் இல்லையா? வேண்டுமென்றால் கைவிட்டுவிடவும், கண்டு கொள்ளாமலிருக்கவும் கூட முடியும். இவை மூன்று தாய்மார்களின் வேண்டுகோள்கள்… I என்டயா? என்ட பேர் ஸ்ரீநாச்சி. காவன்னா ஸ்ரீநாச்சி. என்ட பேர்ல என்ன இருக்கப் போகுது? மனுஷனா வாழச்சுதந்திரம் இல்லண்டா பேருல மட்டும் என்ன பயனிருக்கப் போகுது? மண்ணோட முட்டி மோதி ஏலுமான விதத்தில எதையாவது வேக வச்சுத் திண்டுபோட்டு யாருக்கும் எந்தத் தீங்குமில்லாம சீவிச்சு வந்த சனங்கள் நாங்கள். தெரிஞ்ச காலத்து…
-
- 1 reply
- 847 views
-
-
கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் காலில் முள் குத்தியிருக்கிறது; கல் குத்தியிருக்கிறது; துரு பிடித்த ஆணி,குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. மனுசனாய் பிறந்தவன்வாழ்வதற்காக அனுபவிக்கிற தொந்தரவுகளில் இதுவும் ஒன்று. பிறந்ததில்இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப்பனுக்கு அவையெல்லாம்ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவனுக்குவருத்தமாகிவிட்டது. மனுசனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிடஆடு மாடாக பிறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் அவன்.எருமையாகப் பிறந்திருந்தால் குறைந்தபட்சம் செருப்பு வாங்கும்தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்கும். நாலு கால் எருமைக்குமுரட்டுக் குளம்பு இருக்கிறத…
-
- 1 reply
- 1.2k views
-
-
டிஜிட்டல் டிராவல்! ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லலாம்; பைக்கில், பஸ்ஸில், விமானத்தில், கப்பலில் என்று பயணிக்கலாம். செல்லும் விதம் மற்றும் தூரத்திற்குத் தகுந்தவாறு பயண நேரம் மாறுபடும். இந்த பயண நேரத்தை மிச்சப்படுத்தவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்காக, நொடியில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் பயணம் செய்வதை சாத்தியமாக்கும் அற்புதக் கண்டுபிடிப்பாக அது பேசப்பட்டது. ஒரு கேமராவும், கொஞ்சம் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் சேர்த்து அந்தக் கண்டுபிடிப்பு உருவாகியிருந்தது. ‘டிஜிட்டல் டிராவலிங்’ என்பது இந்தக் கண்டுபிடிப்பு! அவர்களிடம் இருக்கும் ஒரு விசேஷ கேமராவால், பயணம் செய்யும் நபரையோ அல்லது பொருளையோ ஒரு போட்டோ எடுப்பார்கள், அவ்வளவுதான்! அவ்வளவ…
-
- 0 replies
- 1k views
-
-
எத்தியோப்பிய எலியும் நானும் எனது எத்தியோப்பிய வதிவிடத்தில் நீண்ட காலம் எலிகளும் இல்லை அவற்றின் தொல்லையும் இல்லை. சமீபத்தில் அவனோ அவளோ தெரியாது இந்துவோ கிறிஸ்தவமோ தெரியாது எலி ஒன்று வந்து சேர்ந்தது. நிச்சயமாய் நாலுகால் எலிதான். பைட் பைப்பர் என்னும் குழலூதிக் கலைஞன் போல் எலிகளை இசையால் வசியம் பண்ணும் இசையாற்றல் எனக்கில்லை. ஜெர்மனியின் கீழச் சக்சோனியில் 13 ம் நூற்றாண்டில் தோன்றிய கிராமியக் கதையின் கதாபாத்திரமே பைட் பைப்பர். எலியை விவசாயிகளின் நண்பன் என்பார்கள். அதனாற்தான் என்னவோ பின்னே வந்த ஆரியக் கடவுள் பிள்ளையாரின் வாகனமாயும் வலம் வருகிறது. “யானை” முகக் கடவுளுக்கு எலி வாகனம் என்று சில வட இந்தியர்கள் எத்தியோப்பியர்களுக்கு “அறிவியல்” விளக்கம் கொடுக்கும் போது …
-
- 6 replies
- 752 views
-
-
அன்புள்ள அப்பாவிற்கு, தேவா எழுதிக்கொள்வது... செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி இருப்பார்கள். நீங்கள் தாத்தாவிற்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மரியாதைக்குரிய மகாகனம் பொருந்திய ராஜராஜஸ்ஸ்ரீ தகப்பனார் அவர்களுக்கு சுப்பையா எழுதிக் கொள்வது யாதெனில் என்று தொடங்குவீர்கள். என் வார்த்தைகள் அன்புள்ள அப்பா என்ற எட்டு எழுத்துகளுக்குள்ளும் நாம் தலைமுறைக் காதலை, அன்பை நேசத்தை தாங்கி வருவதாக நான் உங்களிடம் பல முறை கூறி இருக்கிறேன்...இப்போதும் அப்படித்தான்... நிற்க....!!!! நலமா அப்பா? நாங்கள் நலமாயிருக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் இல்லாமல் எப்படி அப்பா நாங்கள் நலமாயிருக்க முடியும்? எ…
-
- 0 replies
- 1.9k views
-
-
நிலவிலே பேசுவோம்!… என்.கே.ரகுநாதன். சிறப்புச் சிறுகதைகள் (1) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – என்.கே.ரகுநாதன் எழுதிய ‘நிலவிலே பேசுவோம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலையிலே மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள்திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி,மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டியஅவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையேகாந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான்வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள். அப்பொழுது மணி எட்டு இருக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
துறவு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பொழுது விடிந்து பொழுது போனால் தொல்லை... தொல்லை... தொல்லைதான்... என்ன சுகம் வேண்டிக் கிடக்குது? பேசாமல் சந்நியாசம் கொள்ளப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவா உண்மையிலேயே சந்நியாசி ஆகிவிட்டார். காவியுடை தரித்து, வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்தாயிற்று... பிரசங்கங்கள் செய்ய அவை பயன்பட்டனவே தவிர, அவர் உண்மையில் தேடிய உள்ளத் தெளிவோ, சந்தோஷமோ, ஆத்ம திருப்தியோ கிடைக்கவேயில்லை. ஆரம்பத்தில் அவர் காசிக்குப் போனார். பின், திருக்கயிலாய மலை யாத்திரை செல்லும் வடஇந்திய யாத்திரிகர்களோடு சேர்ந்து இமயமலை ஏறினார். வழியிலி…
-
- 3 replies
- 1.2k views
-
-
நளாயினி – ஜி.விஜயபத்மா நளாயினி .. பொன்னிற மேனியும், பார்ப்பவரை வசீகரம் செய்யும் அழகானவள். அவள் அழகுக்கு சற்றும் பொருத்தமே இல்லாத மௌத்கல்ய முனிவருக்கு மனைவியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் மனைவியாகி இல்வாழ்வை மனமகிழ்வுடன் துவங்க இசைகிறாள். ஆனால் மௌத்கல்யர் இயல்பிலேயே சந்தேக குணமும், முன் கோபமும் கொண்டவர். அவரால் நளாயினி தன்னை கணவனாக ஏற்றுகொள்ளத்தயாரானதை ஒத்துக்கொள்ளவே இயலவில்லை. குள்ளமாக, கருப்பாக அவலட்சணத்துடன் இருக்கும் தன்னுடன் நளாயினி நிச்சயம் மனமொத்து வாழ இயலாது என்று அவருக்கு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. இதனால் தன் மனைவி நளாயினியின் அன்பை சோதித்து அவள் அதில் தேர்வு பெற்றாள் மட்டுமே அவளுடன் இல்லறவாழ்வை துவங்குவது என்று முடிவு செய்தார். தன் தவவலிமையால் பெற்ற யோக சக்த…
-
- 0 replies
- 9.1k views
-
-
நட்பும் காதலும் அது ஓர் அழகிய காலைப்பொழுது. படுக்கையை விட்டெழுந்த நிஷா நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டாள். "8 மணி ஆகிவிட்டதே 9 மணிக்கு வகுப்பு ஆரம்பம். அதுவும் புதிய விரிவுரையாளர் வருவதாக சொன்னார்களே" என முணுமுணுத்தபடி குளியலறை நோக்கி விரைகின்றாள். இதமான குளியலை முடித்து தன்னை தயார்ப்படுத்தி தெருமுனைக்கு வந்தபோது 8 40 ஆகிவிட்டது. வீதியில் ஒரு முச்சக்கரவண்டியும் இல்லாதிருப்பதைக் கண்ட நிஷாவோ சினம்கொண்ட முகத்தோடு விரைந்து நடந்தே சென்றாள். எவ்வளவோ வேகமாக நடந்தும் அவளால் 9 10 க்கு தான் கல்லூரியை அடைய முடிந்தது.. பெருமூச்சு விட்டு அழகிய பிறைபோன்ற நெற்றியில் துளிர்த்த வியர்வைத்துளிகளை அற்புதமான திருக்கரங்களால் ஒற்றி துடைத்துவிட்டு விரிவுரையாளர்கள்; தங்கும் அற…
-
- 27 replies
- 6k views
-
-
ஏப்ரல் 1994 இல் இந்தியா டுடேயில் வெளிவந்த ஈழத்து சிறந்த எழுத்தாளர் 'உமா வரதராஜன்' அவர்களால் எழுதப்பட்ட பலரால் வாசிக்கப்பட்டு வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதை. கதையின் பின்புலம் பிரேமதாசா காலத்தை போன்று தோற்றினும் இன்றைய காலத்தையும் வென்ற சிறு கதை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அரசனின் வருகை உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை …
-
- 2 replies
- 2k views
-
-
1966 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் நான் முதல் காலடி எடுத்து வைத்தேன்.எனது ஆரம்ப கல்வியை அந்த கிராமப்பாடசாலையில்தான் ஆரம்பித்தேன். தற்பொழுது அது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அன்று மகாவித்தியாலயமாக இருந்த பாடசாலை இப்பொழுது பல்கலைகழகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான் ஆரம்ப கல்வி பயிலும் பொழுது நாலு சிறிய கட்டிடம்தான் இருத்தது.எனது தந்தையார் அரச திணைக்களத்தில் தொழில் புரிந்தார்.அந்த கிராமத்தில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வேறு அரச சார்பு திணைக்களமும் இருந்தன.அநேகமான அரச உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தனர்.இது சில ஊர்வாசிகளுக்கு எரிச்சலை கொடுத்திருக்கும். முக்கியமாக படித்த சமுகத்தினரிடையே, எங்களுடைய வேலைஎல்லாம் வெளிமாவட்டத்தான் எடுக்கிறான் என்ற எண்ணம் இருந்தப…
-
- 22 replies
- 2.3k views
-
-
டிட்வாலின் நாய் சாதத் ஹசன் மண்ட்டோ ஆங்கிலத்தில்- காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர் ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன. ஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
எனது பாடசாலை நண்பன் ஒருவன் நீண்ட நாட்கள் மத்திய கிழக்கில் வேலை செய்தான். இரு பிள்ளைகள், பெண் மணமுடித்து தாயுடன் கொழும்பில்- மகன் மணமுடித்து லண்டனில். பாடசாலை நண்பன் பலவருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் விபத்தொன்றில் அகப்பட்டு நரம்புத் தொகுதி பாதிக்கப் பட்டு தனியே பருத்தித்துறையில் இருக்கிறான். இரண்டு விடயங்களை ஒன்றாக சிந்திக்க முடியாது அவனால். உதாரணமாக மந்திகைக்கு சைக்கிளில் போனேன் என்று அவனால் ஒரேயடியாக சொல்ல முடியாது. மந்திகைக்கு போனதையும் சைக்கிளில் போனதையும் தனித்தனியே தான் அவனால் சொல்ல முடியும். இரண்டையும் சேர்க்க வெளிக்கிட்டால் ஒரேயடியாக குழம்பி விடுவான். அத்துடன் அவனால் எழுத முடியாது, ஆனால் வாசிப்பான்; கதைப்பான். சொல்ல வந்த விடயம் என்னவென்றா…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
சுந்தரேசன் வீடு கலகலப்பாக இருந்தது. அவரது ஒரே பெண்ணான ஹரிணிக்கு அன்று, பெண் பார்க்கும் வைபவம். "அப்பா, ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டு போறதுக்கு, நான் ஒண்ணும் பொருட்காட்சி இல்ல. ஒரு பையன பாருங்க, குடும்பத்த விசாரிங்க; என் போட்டோவ காட்டுங்க. எல்லாம் புடிச்சிருந்தா... பெண் பார்க்க வரட்டும்...' என்று, ஹரிணி கறாராக சொல்லியிருந்தாள், அதன்படியே, அவரது மருமகளின், தூரத்து உறவினரான ரமேஷ் பற்றி, சுந்தரேசனுக்கு தெரிந்தது. கொஞ்சம் தெரிந்த இடம் என்பதால், மருமகள் மூலமாகவே விசாரித்து, மற்ற விவரங்களை சேகரித்து, கடைசியில் ரமேஷையும் நேரில் பார்த்தார். பையன் களையாக இருந்தான். அப்பா இல்லை; அம்மா மட்டும். சொந்த வீடு, கை நிறைய சம்பளம்; அதுவும், ஒரு பெரிய நிறுவனத்தில். ஹரிணியின் போட்டோவைப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
நான் உள்ளே போக சரியாக மட்டு மட்டாக அந்த நிலக்கீழ் ரயிலின் கதவு சாத்த பட்டது ..ஓடி வந்து ஏறிய பின் இன்னும் பதட்டம் தணியவில்லை .இது தான் இந்த இரவின் கடைசி ரயில் .இதை விட்டிருந்தால் இந்த குளிருக்குள் விடியும் மட்டும் இந்த வெறியுடன் தள்ளாடி திரிய வேண்டி இருக்கும். நினைத்து பார்க்கவே குளிரில் துடிக்குது தேகம்.இது ஒரு சனி இரவு .அதனால் நடுநிசி தாண்டியும் கூட்டமும் கூச்சலும் அதிகமாக காணபட்டது தள்ளாடி தள்ளாடி இருக்க இடம் தேடி கொண்டிருந்தேன் .எனது நிலைமையை பார்த்து எனக்கே ஒரு வெட்கம் வந்தாலும் என்னைப்போல் பல பேர் வெட்கமில்லாமால் அப்படி அப்படி ஆண்களும் பெண்களும் அங்கங்கே .எப்படி குடித்தாலும் நான் நிதானம் தவறுவதில்லை ஆனால் இன்று என்னை அறியாமால் வாய் உளறியது. வேண்டாம் வேண்டாம் …
-
- 6 replies
- 1.3k views
-
-
எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்…… “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட முடிவுகள் வர பத்து நாள் ஆகும். அது மட்டும் நல்ல விதமா வந்துச்சுன்னா அந்த மருந்த வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எமன வெரட்டீரலாம்” என்றார். அந்த ஒற்றை நம்பிக்கைக் கீற்றைப் பற்றிக் கொண்டிருந்தோம் அனைவரும். “எங்க …
-
- 4 replies
- 5.9k views
- 1 follower
-
-
எனது மூன்றாம் படிக்கட்டு எல்லோரும் காதல் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் நான் இறங்குகிறேன். என் கதையை என் வருங்கால மனைவிக்குச் சொல்வதுபோல் ஒரு மாறுதலுக்காக அமைத்துள்ளேன் அப்படியே பிரிண்ட் எடுத்து அவரிடம் கொடுத்தால் அவருக்கு நான் என் காதல் கதைகளைச் சொல்லத்தேவயில்லை. இனி என் மூன்றாம் படிக்கட்டு இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் ஏன் தெரியுமா இன்றுதான் எனக்கு திருமணம் நடந்தது. காலையில் இருந்து மாலை வரை ஹோமப்புகையினாலும் வீடியோக்காரர்களின் 1000 வாட்ஸ் பல்புகளினாலும் அதை விட திருமணம் செய்யும் டென்ஸனினாலும் களைத்துப்போய் கட்டிலில் கொஞ்சம் ரிலாக்சாக அமர்ந்திருந்தேன். அப்படியே என் வாழ்க்கையின் முன்பாதிகளை நினைத்துப்பார்க்கிறேன். என் கல்லூரி நண்பர்கள் நாம் அடித்த லூட்டிகள…
-
- 2 replies
- 1.9k views
-
-
கார்பொரேட் அலுவலகத்தில் காட்டுப்புலி! காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. நாலாவது நாள்... பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆமையும் எருதும் அல்லது நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா வ. ஐ. ச. ஜெயபாலன் முன்னொரு காலத்தில் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் தேவதைகள் வாழும் காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு ஆமையும் எருதும் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தன. ஆமை தேவதைகளுக்குப் படகு ஓட்டியது . எருது தேவதைகளுக்கு வண்டி ஓட்டியது. ஆமையும் எருதும் ஏனென்று காரணம் தெரியாமல் ஒன்றோடு ஒன்று பகமை பாராட்டுவதைப் பார்த்து தேவதைகள் ஆச்சரியப் பட்டன. அந்த ஆமையிடன் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதேபோல எருதும் ஒரு பெரிய புத்தகத்தை வைத்திருந்தது. ஆமை தனது பரம்பரை புத்தகமே உலகத்திலேயே பழமையானதும் உண்மையானதும் என்று காண்கிற தேவதைகளிடம் எல்லாம் சொல்லும். அதனால் உலகத்தில் ஆமைகள்தான் உசத்தி என்று அந்த ஆமை சொல்லிவந்தது. இ…
-
- 3 replies
- 1.5k views
-
-
குண்டுமணி மாலை அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது. நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன். எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கி…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரியாவின் கன்னத்தில் பளார்...பளார் என்று அறைகிறார் அவள் அம்மா லட்சுமி ஏண்டி இப்படி குத்துக்கல்லாய் நிக்கிறாய் எத்தனை மாப்பிள்ளையை பார்த்தாச்சு வேண்டாம் என்றாய் இந்தப்பொடியன் நல்ல பொடியனடி நல்ல குணம்,நடை அதோடை சீதனம் ஒன்றும் வேண்டாமாம் நல்ல சம்பந்தம் வரும்போது ஏனடி மறுக்கிறாய்? நீ கட்டினால் தானேடி அவள் இளையவளையும் கட்டிக்கொடுக்கலாம். அப்பா இருந்தாலும் பரவாயில்லை அவரும் போய்ச் சேர்ந்திட்டார் நானும் சாகிறதுக்குள்ளை உங்களைக் கரையேத்திட்டுப் போவம் என்றால் ஏனடடி அடம்பிடிக்கிறாய்? உன் மனசிலை யாராவது காதலிக்கிறியா அதையாவது சொல்லேண்டி? கண்ணீரைத்துடைத்தவாறே தன் கதையை சொல்கிறாள் பிரியா... பிரியா உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது அதே கலைப்பிரிவில் தான் மயூரனும் படி…
-
- 0 replies
- 975 views
-