கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை: மதிப்பெண் பாஸ்கரின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ராகவன் கிளம்பிச் சென்றதும், மனைவி ரோகிணியிடம் வந்தார் பாஸ்கர். “பக்கத்து வீட்டுக்காரரான ராக வனோட நாம நல்லாத்தான் பழகு றோம். ஆனாலும் அவருக்கு நம்ம மேல அசூயையும் பொறா மையும்தான் இருக்குபோல!” சொன்னார் பாஸ்கர். “ஏன் அப்படி சொல்றீங்க? இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டுப் போனார்” நிதானமாகக் கேட்டாள் ரோகிணி. “நல்லா பேசிட்டிருந்தாரா? இவ் வளவு நேரம் தன்னைப் பற்றியும் தன் தம்பிகளைப் பற்றியுமே கர்வமா பேசிட்டிருந்தாரு. கவ னிச்சல்ல?” “ஆமா கேட்டுட்டுத்தான் இருந் தேன். அவர் எப்படி மளிகை கடை நடத்தி முன்னுக…
-
- 1 reply
- 2.8k views
-
-
அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும். ஒரு பேப்பரிற்காக நினைவுப்பதிவு சாத்திரி இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்…
-
- 16 replies
- 2.8k views
-
-
கேசம் - நரன் ஓவியங்கள் : ரமணன் 1972 பங்குனி ஆத்தியப்பனுக்கு உடலில் எறும்புகள் ஊர்வதுபோல் உணர்வு. காலையிலிருந்தே அப்படித்தான் இருந்தது. இப்படியான உணர்வுகள் வரும்போது அவர் மனதில் இனம்புரியாத சந்தோஷம் கொப்பளிக்கும். ஆண் யானைகளின் காதில் நீர் வடியும் மத்துக்காலத்துக்கு ஒப்பானது அது. ஆனால், இவ்வளவு நாட்களாக இல்லாமல் இன்று திடீரென ஏன் இப்படி என்று தெரியவில்லை. அவருக்கு 59 வயதாகிறது. வேம்பாரிலிருந்து வறுமையான தன் பதின்ம வயதில் விருதுநகருக்குப் பிழைக்க வந்தவர். பஞ்சுப்பேட்டையில் எடுபிடி பையனாக வேலையில் சேர்ந்து அங்கேயே பஞ்சுத் தரகராக மாறி, குறைந்த லாபத்துக்கு சரக்கைக் கைமாற்றிவிட்டு, கொள்முதல் செய்யத் தொடங்கி என இன்று பேட்டையின் பெரிய வியாபாரம் அவருட…
-
- 0 replies
- 2.8k views
-
-
நட்சத்திரா - சிறுகதை 1 `பயணிகளின் கனிவான கவனத்திற்கு... வண்டி எண் ஒன்று ஆறு ஏழு இரண்டு மூன்று... சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி வழியாகத் திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், தடம் எண் ஐந்திலிருந்து சரியாக மணி ஏழு ஐம்பதுக்குப் புறப்படும்’ பதிவு செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் குரலில் இருந்த கம்பீரத்தை ஒரு நொடி நின்று மூளையில் சேமித்துப் பின் கடந்தான். ‘ரெய்ரே ரெய்ரே ரெய்ரே ரெய்ரே...’ என்னவென்றே புரியாத ஒலியை எழுப்பியபடி கையேந்தியிருந்த யாசகனின் தலைக்குப் பின்புறம் இவன் பார்த்த பார்வையில் ஒரு வெற்றுத் தண்டவாளமும் அருகில் ஒரு ரயிலும் நின்றிருந்தன. ரயிலற்ற தண்டவாளம் தாள முடியாத மன முறிவை ஏற்படுத்தியது. கடந்தான். பத்தாவது பிளாட்…
-
- 0 replies
- 2.8k views
-
-
அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும் அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார். சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டத…
-
- 26 replies
- 2.8k views
-
-
நானும் பில்லாவும். சாத்திரி ஒரு பேப்பர். நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால் ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு வாற ஞாயிற்று கிழைமை படம் நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன் இந்தியாவ…
-
- 17 replies
- 2.8k views
-
-
மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும் ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் இரண்டு புத்தகங்கள் மலையாள மூலம் : அசோகன் செருவில் தமிழில் : சுகானா மறுநாள் இரவு தான் கொ…
-
- 4 replies
- 2.8k views
-
-
சங்கு மீன் 'கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு உண்டான கோபத்தில் கடிதத்தைக் கிழித்துப்போட்டுவிட வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவளால் கிழிக்க முடியவில்லை. கோமதியின் கடிதம் அவளுக்குப் பதற்றத்தை உண்டாக்கியது. தன் கணவன் சண்முகத்திடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டாள். கடிதத்தில் இருந்த விலாசத்தைப் பார்த்தார் சண்முகம். அவரது தங்கை கோமதியின் கையெழுத்துதான். அவளின் கையெழுத்து அவருக்கு நன்றாகவே தெரியும். கோமதி, 10 வருடங்களுக்கு முன்னர், தேர்த் திருவிழாவின்போது சரஸ்வதியிடம் இருந்து தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு போனாள். மீனாட்சி திருக்கல்யாணம் அன்று…
-
- 0 replies
- 2.8k views
-
-
லிவிங் டு கெதர் ..............திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல் .படித்ததில் பகிர்ந்தது. கடவுள் என்ற மூட நம்பிக்கையில் உங்கள் காலத்தைவீணடிக்காதீர்கள்.நமக்கெல்லாம் பகுத்தறிவு எதற்கு இருக்கிறது.அதை கொஞ்சமாவது உபயோகப்படுத்திவாழுங்கள் .கடவுளை விட உங்களுக்கு அதிகம் சக்தி கிடைக்கும்...` பலத்த கரகோசத்துடன் பேசி முடித்தான் ஆகாஷ். ஆகாஷ் இன்றையத் தேதியில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவன்.அவனது பகுத்தறிவுக் கொள்கை மற்றும் பின்னவீனத்துவமான எழுத்துக்களில் கிறங்கிப்போய் அவனுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.அவனது புகழ் பெருகக் காரணம் அவனது பேச்சுத் திறனும் எழுத்து நடையும் மட்டுமல்ல.நிஜ வாழ்க்கையில் கூட அவன் பகுத்தறிவுவாதியாக தனக்குப் …
-
- 9 replies
- 2.8k views
-
-
எஞ்சிக்கிடப்பது ஞாபகங்கள் மட்டுமே... - சாந்தி ரமேஷ் வவுனியன் - நேற்று முதல் ஒரு தொலைபேசியழைப்பு வந்து வந்து துண்டிக்கப்படுகிறது. யாரென்று அறிய முடியாமல் அந்த அழைப்பு மனதைக் கலவரப்படுத்துகிறது. 'please call me' என வந்த அந்த எஸ்எம்எஸ் யாரென்பதை இனங்காண முடியாமல் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அது யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அழைப்பு. 19வருடத்துக்குப் பின்னான தொடர்பாக அழைத்த அந்த அழைப்பு, ஒருபுறம் மகிழ்வும் இன்னொருபுறம் துயருமாக இருந்தது. 21வருடம் முதல் இறந்து போன சித்தப்பாவின் மகன் அவன். உறவுகளிடம் தேடி என்னை அழைத்திருந்தான். இந்திய இராணுவம் கொன்ற எனது சித்தப்பாவும் 5வயதில் நான் கண்ட என் சித்தப்பாவின் மகனும் நினைவில் வந்தார்கள். 1987 மழைக்கால நாளொன்றி…
-
- 15 replies
- 2.8k views
-
-
பொலிஸ் பரிசோதனையும் அடையாள அட்டையும் சற்று கிராமச்சூழலை அண்டிய பகுதியில் வாழும் மீனா ரொம்ப அழகானவள். பெற்றோருக்கு ஒரேயொரு செல்லமகளான மீனா பருவமடைந்தாலும் இன்னும் செல்லப்பிள்ளையாகவே வீட்டில் வலம் வந்தாள். படிப்பில் கெட்டிக்காரியான அவளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்ட போதிலும் படுக்கையை பெற்றோரோடு பங்கிட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரம் உறங்கும் பழக்கம் கொண்ட மீனா கட்டிலில் பூனைகுட்டி போல மென்மையாக ஆனால் கடுமையான உறக்கத்தில் இருந்தவளை தாய் உலுப்பி எழுப்பியதால் திடுக்கிட்டு எழும்பி சிணுங்கியபடி எழுந்து "என்னம்மா இப்படி அவசரபடுத்தி எழுப்புறீங்க" என்ற முனங்கலோடு கண்ணைக் கசக்கியவண்ணம் குளியலறையை நோக்கிச் சென்றவள் வீட்டினுள் துப்பாக்கியோடு இருந்த இராணுவத்த…
-
- 17 replies
- 2.8k views
-
-
அவன் கோமாவில் என்று அறிந்தது இப்போ தான் ,ஆனால் ஒரு வருடமாக இருக்கிறானாம் ...அதை ஒரு செய்தியாக மட்டும் கேட்டு விட்டு செல்லமுடியாமல் என்னுள் ஏதோ...இன்னும்... .அவனை எனக்கு பாலியல் காலத்திலிருந்தே தெரியும் ......என்ன பாலியல் காலம் ...மீசை அரும்பி குரல் தடிக்கும் காலத்துக்கு முன்பே தெரியும்....ஓடிப் பிடித்து ...கல்லு குத்தி அடிச்சு பிடிச்சு ...கிந்தி தொட்டு ...என...விளையாடிய காலத்திலிருந்தே தெரியும் ...எங்களை போல இருக்கும் சராசரிகளை விட ....கொஞ்சம் ...வசதி ....கொஞ்சம் ....சொத்தின் செழிப்பு அவனில் தெரியும் .. அடிக்கடி மாற்றும் டெரிலின் சேட்டும் .....அந்த சேட்டு பொக்கற்றுக்குள்ளை தெரியும் பொக்கற் மணியும் .....அதாவது ...எங்களுக்கு ...சில்லறைகள் கிடைப்பதே கனவுகளாக இருக்கும்…
-
- 15 replies
- 2.8k views
-
-
TN 00 E - 1111 குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! - ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி யில் அவனை இறக்கி விட்டுவிட்டு, இவன் தன் பள்ளிக்குப் புறப்பட்டுப் போவான். இன்றுவரை மகனது நம்பிக்கையில் இவனும் ஒரு மாணவன்தான். தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ’ செக்ஷன் படிக்கிறான். அதுவும் பல வருடங்கள் அதே தேர்ட் ஸ்டாண்டர்டில் ஃபெயிலாகி ஃபெயிலாகி 'கே’ செக்ஷனில் இருந்து இப்போதுதான் 'எ’ செக்ஷன் வந்திருக்கிறான். பள்ளிக்குச் செல்லும் வழியில் இவர் களது உரையாடல் இப்படித் தொடங்கும். 'அப்பா... ஹோம்வொர்க் பண்ணிட் டீங்களா?’ 'அய்யோ மறந்திட்டேன் ராஜா!’ 'போச்சு. நல்லா மாட்டிக்…
-
- 0 replies
- 2.8k views
-
-
இலையுதிர் காலம் - சிறுகதை சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் இலையுதிர்காலம் ஆரம்பமாயிருந்தது, சாலையெங்கும் சருகுகள் உதிர்ந்திருந்தன. அந்த மளிகைக் கடைவாசல் முழுவதும் பாதாம் இலைகள் உதிர்ந்திருந்தன. மளிகைக் கடையின் ஷட்டரைத் திறந்துகொண்டு வெளிவந்தான் கதிர். குளிர் பட்டவுடன் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டான். என்றைக்காவது லோடு வரும் நாள்கள் இப்படிக் கடையிலேயே தங்குவதுண்டு. வாசல் முன் விரவியிருந்த சருகுகளைப் பெருக்க முனைந்தான். இரவின் பனியினால் சருகுகள் நமத்துப்போயிருந்தன. இதுவே மாலையாக இருந்தால் பகல் வெயிலால் காய்ந்த சருகுகள் மொறுமொறுவென இருக்கும். அதன் மீது அங்குமிங்கும் சரக் சரக்கென்று நடப்பான். இலைகள்…
-
- 0 replies
- 2.8k views
-
-
அலைகள் மணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். மணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர…
-
- 19 replies
- 2.8k views
-
-
வணக்கம்! நானும் தங்கையும் சேர்ந்து எனது "இல்வாழ்வு தந்த இயலாமை" என்ற கதையை "கானமும் கதையும்" ஆகச் சொல்கிறோம் கேட்டுப்பார்த்திட்டுச் சொல்லுங்கோ. கானமும் கதையும் I
-
- 16 replies
- 2.7k views
-
-
மூன்றாவது பாகத்தை எழுத முதல், என்னை எழுத ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. புலத்தில் தமிழ் கற்ற எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை தூக்கி எறிய வைத்து, தொடர்ந்து "நீங்க எழுதுங்க பபா" என சொல்லும் உறவுகளுக்கு என் அன்பு எப்பொழுதும் உண்டு. முதல் இரண்டு தொடரும் எழுதும் போது, நினைவுகள் பல மனதில் வர கண்ணீருடன் தான் எழுதினேன். இந்த பாகத்தில் எமை காக்க களத்தில் நிற்கும் போராளிகளை பற்றியதாக இருக்கும். அவர்களுடான என் உறவு, அவர்களை பற்றி என் மனதில் இருப்பவை. ஊரில் எங்கட வீட்டுக்கு முன்னால போராளிகளின் வீடு. எங்கள் வீடு அவர்கள் வீடு என பிரிப்பது பாவம் என்பேன். காலையில் கண் முழித்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை "அண்ணாக்கள்" என்று அவர்கள் பின்னாலே…
-
- 16 replies
- 2.7k views
-
-
ஒய்வு நாட்களில் கணனிக்கு முன்னால் இருந்து, இணையத்தளத்தில் செய்திகளை படிப்பதுதான் கனகரின் பொழுது போக்கு. அன்றும் அவர் கணனிக்கு முன்னால் இருந்து செய்திகளை மிகவும் ஆர்வத்துடன் படித்துக்கொண்டு இருக்கும் பொழுது, உள்ளே வந்த மனைவி கீதா , நான் நினைச்சன் நீங்கள் இதில் தான் இருப்பீங்கள் நினைத்தது சரிதான். அப்பா ஒரு கொம்புயுட்டர் மகள் ஒருகொம்புயுட்டரில் தட்டிக்கொண்டு இருங்கோ, நான் மட்டும் குசினிக்குள்ள இருந்து வெந்து போறன் என்று புறு புறுத்தபடியே கனகருக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். மனைவி கொஞ்சம் சுடாகத்தான் இருக்கிறா என்று அறிந்த கனகர், மனைவியை சமாதானப்படுத்த(ஜஸ் வைக்க)சமைக்க கஸ்டமாய் இருந்தால் வாரும் எல்லோரும் ரெஸ்ரொரன்டில் போய் சாப்பிடுவம் என்றார். நான் அடுத…
-
- 18 replies
- 2.7k views
-
-
படையல் - சிறுகதை லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: மருது இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒவ்வா மலையை ஒட்டியிருந்த குடிசைகளை `காலி செய்ய வேண்டும்’ என முரட்டு ஆட்கள் சிலர் சொல்லிவிட்டுப் போனார்கள். இத்தனை வருடங்களாக இல்லாமல், புதிதாக வந்த தொல்லையை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியவில்லை. வெறும் மலை... புல் பூண்டுகூட இல்லாத வறண்ட மலை. நாக்கு தள்ள ஒன்றரை மைல் மலை ஏறினால், சின்னதாக ஒரு குட்டை உண்டு. எத்தனை வெயிலிலும் நீர் வற்றாது. மலை அடிவாரத்தில் பெரிய குளம். நான்கு திசைகளிலும் பருத்த ஆலமரங்களை, காவலுக்கு நிறுத்திய கம்பீரமான குளம். அதன் மேற்கு எல்லையில் பல தசம வருடங்களுக்கு முன்பாக, வெட்ட வெளியில் ஊர்க் காவலுக்கு நின்றிருந்த அய்யனார்சாமி கோயிலுக்கு, ஒரு கூ…
-
- 0 replies
- 2.7k views
-
-
அம்மா என்னும் தெய்வம் கஜன் எண்பது வயதாகியும் ,இருபது வயது குமரி போல் ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கும் எனது அம்மா , பாத்ரூமில் சறுக்கி விழுந்ததிலிருந்து ,கடந்த இரண்டு மாதகாலமாக படுத்த படுக்கையாய் மட்டுமே இருக்கின்றார்.விழுந்த வலியை விட இயங்காமல் இருப்பதே அந்தக்கிழவிக்கு மேலும்மேலும் வலியைக் கொடுத்தது, அந்தக் கால கிழவி அல்லவா , சோம்பல் என்றாலே என்னவென்று அறியாத கிழவி அவள். திடீரென்று மூச்சு வாங்கியது கிழவிக்கு , பயந்து போன நான் இன்றுதான் வைத்திய சாலைக்கு கொண்டு வந்தேன்.அம்மா என்னை விட்டுபோய் விடுவாளோ என்ற ஏக்கம் திடீரென்று என்னைப்பற்றிக்கொண்டது என்றுமில்லாதவாறு இன்றைக்கு. கணவன் என்னை விட்டு பிரிந்து வேறோத்தியுடன் சென்ற பின், இருந்த ஒரு மகளும் தான் பாய் பிரண்டுடன் சென…
-
- 2 replies
- 2.7k views
-
-
"வெடி தியபங் ,ஒக்கம கொட்டியா,காண்டா...." என்று 2ஆம் லெப்டினட் பண்டாவின் குரல் கேட்க அவனின் கட்டளையை மதித்து கீழ் பணிபுரியும் சிப்பாய்கள் துப்பாக்கியால் சாரமாரியாக் சுட்டார்கள்.மக்கள் பதட்டத்தால் நாலாபக்கமும் சிதறிஅடித்து கொண்டு ஒடினார்கள்.ஒடமுடியாதவர்கள் அந்த இடத்திலயே வீழ்ந்து மடிந்தார்கள். பண்டா தனது மேல் அதிகாரிக்கு 6 புலிகளை சுட்டு கொண்று விட்டதாக தகவல் அனுப்பினான்.அவனை பாராட்டிய மேல் அதிகாரி ,இறந்தவர்களின் உடம்பை பெற்றொல் ஊத்தி எரித்துவிடும்படி கட்டளை இட்டான். "மாத்தையா மே ஒக்கம நாக்கிய மினிசு பவ்"(இவர்கள் எல்லாம் வயசு போன கிழடுகள் பாவம்)ஒட முடியாமல் வீழ்ந்து செத்துபோட்டுதுகள் என்றான் ஒரு சிப்பாய்.2ஆம் லெப்டினட் பண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது,இவன்கள்தான் அந்த கொட்ட…
-
- 18 replies
- 2.7k views
-
-
கிளி அம்மான் -கோமகன் இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூட…
-
- 20 replies
- 2.7k views
-
-
சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ் என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க. இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ…
-
- 5 replies
- 2.7k views
-
-
செவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை ஏக்நாத் - ஓவியங்கள்: ரமணன் மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக்கொண்டார். தூரத்…
-
- 1 reply
- 2.7k views
-
-
இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை. நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம். மதியம் பன்னிரண்டு மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை.அங்கிருந்து ஜொகன்னஸ்பர்க். அங்கிருந்…
-
- 14 replies
- 2.7k views
-