Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. சீனாவில் அந்த ஏழு நாட்கள் லியோ நிரோச தர்ஷன் இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்தது. இதனை கொழும்பில் உள்ள சீன தூதரகம் ஒழுங்குபடுத்தியிருந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழல், உணவு மற்றும் மனிதர்கள் என பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இந்த விஜயம் அமைந்திருந்தது. குறிப்பாக உணவு விடயத்தில் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகவே அங்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்டது. எவ்வாறாயினும் சீன அரசின் நோக்கம் அந்த நாட்டின் பல்துறைசார் வளர்ச்சியை எமக்கு காண்பிப்பதாகும். அதனடிப்படையில் மெய்சிலிர்க்க கூடிய பல கட்டுமானங்கள் எம்மை ஆச்சரியப்படுத்தியது மாத்திரமல்லாது தனது த…

  2. ஃபைவ் ஸ்டார் துரோகம்... க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் அதிரடி அரசியல் த்ரில்லர்! கடந்த ஓராண்டு காலமாக ஒன்இந்தியா தமிழில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் க்ரைம் த்ரில்லர் தொடரான ஒன்+ஒன்=ஜீரோ தொடர் இடம் பெற்றது. லட்சக்கணக்கான வாசகர்களால் ரசிக்கப்பட்ட தொடர் இது. அந்தத் தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒரு புதிய தொடரை ராஜேஷ்குமார் ஒன்இந்தியா தமிழில் எழுதுகிறார். இந்தத் தொடருக்கு தனது பாணியில் 'ஃபைவ் ஸ்டார் துரோகம்' என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பே, தொடருக்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறதல்லவா? ரொம்ப நாள் காத்திருக்கத் தேவையில்லை... ஜஸ்ட் 24 மணி நேரம்தான். நாளை இதே நேரம் ஃபைவ் ஸ்டார் து…

    • 32 replies
    • 13.1k views
  3. April 23rd, 2011 நேற்று என்னுடைய பிறந்தநாள். அரைநூற்றாண்டை நெருங்குகிறேன், [22-4-1962] , கருவிவிலே திரு என்று சொல்லி அரைநூற்றாண்டு இலக்கியவாழ்க்கை என்று உரிமைகோரரலாம்தான். ஒருசில நண்பர்கள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள். அருண்மொழி காலையிலேயே கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னாள். இங்கே எலமஞ்சிலி லங்காவில் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து வெறுமே பனிவெளியில் வரையப்பட்டதுபோல வெளியே விரிந்துகிடக்கும் கோதாவரியின் பெருந்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படிகத்தின் மென்மையான உள்ளொளி போன்று ஒரு வெளிச்சம். பின்பு காலைச்சூரியனின் கதிர்களில் நீர்ப்பரப்பு உருகிய வெள்ளியாக ஒளிவிட ஆரம்பித்தது. நீரில் படகுகள் மெல்ல நகர்ந்துசெல்லும்போது நதி மௌனமாக உதடுவிரியப் புன்னகைத்து அடங்குவதுபோல் இருந்…

    • 60 replies
    • 6.4k views
  4. விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து… (இவ்விடயம் ஊர்ப்புதினம் பகுதியில் இணைத்தேன். ஆனால் கதைப்பகுதியில் இந்தக் கைதியின் விடயம் கடந்த வருடம் பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணியிருந்தது. கடந்தவருடம் கதையில் வந்து கருத்தாடிய இதயங்கள் மனமிரங்கி இவனுக்காக உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு இணைக்கிறேன்.) சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான். இந்தக் கைதியின் கைதுபற்றி 200…

    • 7 replies
    • 2.3k views
  5. என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன். தாமதமாக சென்றேன்.மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்."இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு வாங்க"மாடியை காட்டினார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோக்கு நின்றுவிட்டு படி ஏறிச்சென்றேன். வரிசைகள் காலியாக இருந்தது. கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்."சும்மா வெக்கப்படாம வாடா "ஒரு சிறுவனை அழைத்தார்கள். அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான்.அவன் வய…

  6. பயணம்: கேரளா/தமிழகம் சில தெறிப்புகள் இளங்கோ-டிசே கொச்சியில் இருக்கும் கலைக்கூடங்கள் என்னை எப்போதும் வசீகரிப்பவை. கடந்தமுறை கொச்சியிற்குச் சென்றபோது Kochi-Muziris Biennale நடைபெற்ற காலம் என்பதால் கலைகளின் கொண்டாட்டமாக இருந்தது. இம்முறை அந்தக் காலம் இல்லாதபடியால் நிரந்தரமாக அங்கே இருக்கும் கலைக்கூடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒருநாள் முழுதும் அவற்றைத் தேடித் தேடிப் பார்த்தேன். இந்தக் கலைக்கூடங்களில் பொதுவாக முன்பக்கத்தில் இவ்வாறான ஓவியங்கள் பார்ப்பதற்கும்/ (சிலவேளைகளில்)விற்பதற்கும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதைத்தாண்டிச் சென்றால் cafeக்கள் உள்ளே இருக்கும். இந்த இடங்களில் தனியே ஓவியங்கள் என்றில்லாது இசை, இன்னபிற விடயங்களும் நிகழ்ந்தபடி இருக்கும்…

    • 2 replies
    • 1.4k views
  7. Started by nunavilan,

    கனவு மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். இடது மார்புக்கு மிக நடுவே சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான் குறிக்கோளில் என்னால் உணர முடிந்தது. தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது. டேய்..! எந்திரி..மணி எட்டாகுது சே..! பயங்கரமான கனவு. என்னடா இ…

    • 0 replies
    • 862 views
  8. ஆவி எதை தேடியது ? - நடேசன் நத்தை தனது ஓட்டையும் பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று, அவுஸ்திரேலியர்களும் தாங்கள் வாழும் வீட்டை ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த வீடுகள் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும். வயதானவர்கள் பெரிய வீட்டை விற்றுவிட்டு, மற்றும் ஒரு சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி, குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இங்கு வாழ வந்தவர்களால் அவுஸ்திரேலியர்களின் இந்த மனப்பான்மையை நம்ப முடியாது. நமது நாடுகளில் நூறு வருட வீடுகள் இடிந்து உடையும்வரை, பல தலைமுறைகளாக வாழ்வார்கள். அப்படிப் பல த…

  9. க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் ஏகாந்தன் ஃபிடெல் காஸ்ட்ரோ, தற்போதைய அதிபர் ராவ்ல் காஸ்ட்ரோவுடன் க்யூபா. லத்தீன் அமெரிக்காவில், கரீபியன் பகுதியில் ஒரு சிறு நாடு. ஸ்பானிஷ் மொழியில் கூபா. க்யூபன் என்பதாக தங்களை அந்நாட்டவர்கள் குபானோ (Cubano) என்று அழைத்துக்கொள்வார்கள். அவர்களின் கூப-ஸ்பானிஷில் அது `குவானோ` என்று ஒலிக்கும். கூபா என்றதும் மனதில் ஃபிடெல் காஸ்ட்ரோ (Fidel Castro), சே குவாரா (Che Guevera) என்றெல்லாம் உலகின் மகாபுரட்சிக்காரர்களின் பிம்பங்கள் பாயும், குறிப்பாக T-ஷர்ட்டுகளில் சே-யின் படத்தோடு அலைவதை வீரதீரச் செயல் எனக் கருதும் இந்திய இளைஞர்களுக்கு. ஓரளவு சமகால சரித்திரம் தெரிந்தோருக்கு, பனிப்போர் (Cold war) காலத்திய, அதாவது சோவியத் யூனியனின் …

  10. Started by கிருபன்,

    சகபயணி இரவி அருணாசலம் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். பதினெட்டு! கணக்கும் வழக்கும் சொல்ல வாழ்க்கை என்ன வகுப்பறையா? அம்மா இல்லாத எங்கள் குடும்பத்தின் நால்வரும் தேவாலயத்தில் தஞ்சமானோம். அப்படி நின்ற ஒரு நூறு பேருக்குப் பாணும் தேநீரும் கிடைத்தன. தாடிவளர்த்த அருட் தந்தையின் ஆறுதல் வார்த்தையும் கடற்கரை வெக்கையை மேவிக் குளிர்வித்தது. “ஓடு ஓடு” என்று மனம் சொன்னது. அப்பாவையும், தம்பி, தங்கைகளையும் விட்டுவிட்டு எப்…

    • 5 replies
    • 1.2k views
  11. பஸ் பயணம் என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான் எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும் என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக ப…

  12. நிலமதி - சிறுகதை சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ஸ்யாம் நெடுநேரம் அவளோடு இருந்த நாளாக நேற்று இருந்தது. பருவத்தின் வசந்த நடை காற்றில் இருந்து கழன்று, எம் இருவரிலும் விழித்துக்கொண்டதாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். தான்தோன்றியாகவே மழைத்தூறலில் நனைவதைப்போல அவளது கண்கள் அசைந்தன. அவளின் ஜீவ ஆற்றல்மிக்க விரல்களை அளந்து கொண்டிருந்தேன். அந்தக் கணங்கள், என்னை இப்போதும் திகைக்கச் செய்கின்றன. அலங்கோலமான வாழ்வில் அசையும் ஆகாயத்தில் எழுந்து பறக்கும் சாம்பல் நிறப் புறாக்களைப்போல் அல்லவா இருந்திருக்கிறோம். கடைசிச் சந்திப்பின் இறுதியில், நிலமதி தந்த பொதிக்குள் பலகாரங்களும் இரண்டு ஷேர்ட்களும் இருந்தன. இருவரின் பிரிவுக் களைப்பு, அந்தப் பொதியில் அரூபமாகக் கனத்துக…

  13. வாசலில் புத்தம் புதிய ரொயாட்டா கார் வந்து நின்றதும்.. ஓடிச் சென்று.. வாங்கோ.. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம் என்றபடி காரின் கதவுகளை திறந்துவிட்டார் மணப்பெண்ணின் அப்பா சுந்தரேசன். வேளைக்கு வருவம் என்று தான் வெளிக்கிட்டம் சம்பந்தி ஆனால் ரபிக் ஜாமில சிக்கிக்கிட்டம் அதுதான் லேட்டாப் போச்சு என்றார் மாப்பிள்ளையின் அப்பா சந்திரகாசன். அது பறுவாயில்லை.. லேட்டா என்றாலும் வந்து சேர்ந்தீங்களே. அது சந்தோசம். எங்க மாப்பிள்ளைத் தம்பியைக் காணேல்ல.. கனடாவில இருந்து லண்டன் வந்ததும் களைச்சுப் போட்டாரோ..?! இல்ல அவன் இரண்டு கிழமை லீவில தான் வந்தவன். அதுக்குள்ள ஒரு கிழமை ஓடிப் போச்சே என்ற கவலையில இருக்கிறான். அந்தா பின் சீற்றில இருந்து இறங்கி வாறான்.. நீங்கள் காணேல்லைப…

  14. பயணங்களின் முடிவில்! சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன. உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று! உண்மை தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன், குருட்டு தைரியத்தில், 'சுமி ஸ்டிச்சஸ்' என்று ஆரம்பித்தது, இன்று பெயர் விளங்கும் கடையாக வளர்ந்து வருவதில் பெருமை தான். மகன் மழலையாக மடியில் இருக்க, கண…

  15. காதலென்னும் கற்பிதம்.... அன்புள்ள ...... ( உன்னை மறந்து போனதற்கான கடைசி சாட்சியாய் இந்தக் கடிதம்.) தெரிந்தோ தெரியாமலோ காதல் ஒரு முடிவற்ற வேரைப் போல் உடல் முழுக்க சுற்றிப் படர்ந்திருக்கும் மரம் நான். என்னால் யாரையும் வெறுக்க முடியாது, காயப்படுத்துகிறவர்களையும் சேர்த்து காதலிக்கும் சாபம் பெற்றவன் நான். காதலின் மகத்துவம் காயப்படுதலில்தான் இருக்கிறதென நம்புகிறவன். அதனாலேயே நீ தந்த எந்தவொரு காயமும் எனக்கு பிரதானமாய் தெரிந்திருக்கவில்லை. நமக்கிடையிலான காதல் விளையாட்டுத் தனமாய் துவங்கி முடிந்ததில் நம்மைத் தவிர அதிகமும் வியப்பு கொண்டது வேறு யாராகவும் இருக்க முடியாது. அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில் எப்படி வாழக் கூடாதென்பதற்கு உதாரணமாய் சில விசயங்களை நீ கற்றுக் கொள்வாய் என…

  16. அந்தரங்கம் புனிதமானது கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். “ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்: “நான் – அவர் மகன் வேணு!”சற்றுக் கழித்து அவனது தந்தையின் குரல் போனில் ஒலித்தது. “ஹலோ! நான் தான் சுந்தரம் …”- அதுவரை இருந்த தைரியம், ஆத்திரம், வெறுப்பு யாவும் குழம்பி வேணுவுக்கு உதடுகளும் நெஞ்சும் துடித்தன. அவனது பேச்சு குழறிற்று; இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்: “நான் வேணு பேசறேன்… நான் உங்களோடு கொஞ்சம் பேசணும்… ம் … தனியாப் பேசணும்.”“சரி… இன்னும் கொஞ்ச நாழிலே நான் வீட்டுக்கு வந்துடுவேன்…”“இல்லே… அதைப்பத்தி… வ…

  17. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்! கம்பார்ட்மென்ட் முழுக்க நிலக்கடலைத் தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்குப் பீலியும் தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பியிருப்பார். சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா ரயிகளிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று பொருந்தினால் போதும் என்பது பயணிப்பவர்களின் பொது அபிப்பிராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்ற தில்லை. ‘‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயிக் கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடு…

  18. நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…

  19. ஒரு பயணப்பொழுது - ஆதிலட்சுமி சிவகுமார் பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு...” ஓட்டுநருக்கு எங்களோடு வந்தவர் சொன்னார். “ஏன் அப்பிடிச் சொல்லுறியள்...” “;அப்பாவித்தனமாகக் கேட்ட என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார்.”இந்தப்பக்கம் எல்லாம் ஆமி இருந்தவன்... ஏராளமான புதைவெடிகளட இருக்கும்... பாரத்துக்கு ஏற்றமாதிரி வெடிக்கிறதுக்கு வைச்சிருப்பான்” கண்ணாடியூடாக வெளியே பார்த்தான். எங்கும் பனைமரங்கள் காயப்பட்டவை. கருகியவை, கழுத்துமுறிந்தவை.. போரின் வடுக்களை அவையும் சுமந்திருந்தன. வீடுகள் அதிகமாய் இல்லை.... இருந்தவைகளும் கற்குவியல்களால் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து இந்தப்ப…

  20. முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உ…

  21. இது முற்று முழுதாக ஒரு அரசியல் தொடர் அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்-1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந…

  22. விளையும் பயிர்... லா சப்பலிலிருந்து கடைக்கு வருவதற்காக Bus க்காக காத்திருந்தேன். நான் எடுக்கவேண்டிய Bus வந்து பயணிகள் ஏறக்கூடியவாறு வந்து திரும்பியது அம்மா பாருங்கள் முன் சில்லுகள் திரும்ப மட்டுமே பின் சில்லுகள் தான் Bus யை தள்ளும் என்று ஒரு சிறு குரல் கேட்டது ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்தேன். சொன்னவருக்கு ஆகக்கூடியது 6 வயதிருக்கலாம். அவரது தாயார் இவருடன் இன்னும் ஒரு ஆண்பிள்ளை மற்றும் தள்ளுவண்டியில் ஒரு பெண்பிள்ளை அவர்களுக்கு முறையே நாலு மற்றும் 2 வயதிருக்கலாம். எனக்கே பல வண்டிகளை ஓட்டியும் பல காலம்வரை தெரியாத இந்த விடயத்தை இந்த வயதில் புரிய ஆரம்பித்திருக்கும் அவனை வாழ்த்தவேண்டும் என்று நினைத்தேன். அவனது இ…

  23. ஒரு நிமிடக் கதை: பெண் புத்தி "கதவைப்பூட்டிக்கொள். ராத்திரி சமையல் போனிலே சொல்றேன். எங்கேயும் வெளியே போகாதே " சாந்தி அலுவலகம் கிளம்பிய பத்தாவது நிமிடம் ராஜி பக்கத்துவீட்டுக்குக் குதித்தபடி சென்றாள். * மாமி, சமையல் முடிச்சுட்டீங்களா....ஓ.. ஆரம்பிக்கிறீங்களா...கொடுங்க நான் காய் வெட்டித்தரேன்.... குழம்புக்கா..." கேட்டபடி வேலை செய்யத்தொடங்கினாள். " என்ன ராஜி...நேத்து என்ன ஏதாவது முக்கியமா நடந்துதா?" வம்பு கேட்கத்தொடங்கினாள் மாமி. இது அன்றாடம் நடப்பது தான். ராஜியை சாந்தி வீட்டில் முழு நேர வேலைக்கு வைத்திருந்தாள். வீட்டில் யாரும் இல்லாதபோது, ராஜி பக்கத்துவீட்டுக்கு…

  24. http://sinnakuddy1.blogspot.com/2007/06/nr-750.html அப்பம்மா உந்த றோட்டாலை போற பஸை பார்த்து நேரம் சொல்லும்... உந்தா மெயில் பஸ் போகுது.... ஐந்தரை எண்டு சொல்லும் . மணிக்கூட்டை உடனை பார்த்தாலும் சரியாக தான் இருக்கும்...... பஸ்காரங்களும் உதுகளின்ரை நம்பிக்கையை வீணாக்காமால் சரியான நேரத்திலை போய்க்கீய் வந்திருக்கிறான்கள் . இப்ப உப்பிடி இல்லைத்தானே... அவங்களிலையும் குறை சொல்லேலாது.. இழவு விழுந்த ஆமி பொலிஸ்காரன்கள் பத்து இடத்திலை செக்கிங் வைத்தால் எனனயிறது கிழவி இண்டைக்கு அடுக்கு எடுத்தண்டு நிக்குது...யாழ்ப்பாண பெரியாஸ்பத்திருக்கு போறதுக்கு...பக்கத்து வீட்டு பவளக்கான்ரை பொடியை

    • 7 replies
    • 2.3k views
  25. பெண் பாவம் வேண்டாம்! கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத இடைப்பட்ட ஊரில் திருமணம் ஒன்றுக்கு நானும் என் தோழியும் கிளம்பினோம். பெண்ணின் தாயார் எங்களின் தோழி. திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. வரவேற்பு இனிதாக நடந்து முடிந்தது. மறுநாள் விடிந்ததும் திருமணம். எல்லோரும் உற்சாகமாகப் பேசிவிட்டுப் படுத்தோம். விடிகாலை மாப்பிள்ளை வீட்டார் இருந்த பகுதியில் ஒரே களேபரம். மாப்பிள்ளையின் தாய் மாமா இரவு படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. மாஸிவ் ஹார்ட் அட்டாக். தூக்கத்திலேயே உயிர் போய்விட்டது. மணப்பெண் குளித்து பாதி அலங்காரத்தில் இருக்கிறாள். சமையல் வேறு பாதியில் நிற்கிறது. அரசல் புரசலாக பெண்ணின் ராசி பற்றி விமர்சனம் எழுகிறது. என் தோழியின் குடும்பத்தினர் கையைப் பிசைந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.