கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
திருச்சி நகரத்தை தன் கைக்குள் வைத்திருந்த ரவி என்னும் முட்டை ரவி. கபடி விளையாட்டில் தொடங்கிய சண்டை வளர்ந்து முக்கிய ரவுடியாக மாறிய ரவி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அவர் போலீசாரின் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்கப்பட காரணம் யார்?
-
- 0 replies
- 1.6k views
-
-
மலர்விழியும் புது சுடிதாரும்! ஓவியம்:ஸ்யாம் மலர்விழியின் அம்மா அந்த அலமாரியைத் திறந்து, அடுக்கியிருந்த துணிகளில் இருந்து மலர்விழியின் துணிகளை எடுத்துக் கொடுத்தார். ‘‘மலர், ஸ்கூலுக்குப் போகிறப்ப துணிகளை அயர்ன் பண்ணக் கொடுத்துரு. ரெண்டு டவலா எடுத்துக்கோ.’’ ‘‘அம்மா, இதையே ரெண்டு நாளா சொல்லிட்டிருக்கே. நான் சின்னப் பொண்ணு இல்லை, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். சரியா செஞ்சுப்பேன். நீங்க கவலைப்படாதீங்க’’ என்றாள் மலர்விழி. “இப்பவும் சொல்றேன். ஜெயிச்சுட்டு வரணும்னு மனஅழுத்தத்தோட போக வேண்டாம். ரிலாக்ஸா விளையாடு. வீட்டையே நினைச்சுட்டு இருக்காதே’’ என்றார் அம்மா. சதுரங்கம் விளையாடுவதில் மலர்விழி கெட்டிக்காரி. மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றவள், இப்போது …
-
- 0 replies
- 1.2k views
-
-
மச்சான் சுமதி வீட்டு வாசலில நிக்கிறாடா.. என்ற தகவலோடு MB5 மோட்டார் சைக்கிளில் பறந்து வந்திருந்தான் ரங்கன். பதிலுக்கு.. பொறுடா மச்சான்.. இப்பவே வெளிக்கிட்டு வாறன்டா.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று அறைக்குள் நம்பர் 11 ஐ கொழுவிக் கொண்டே சவுண்டு விட்டான் சங்கர். 1986 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத யாழ் நகரத்து குடிமக்கள் மாலை நேரங்களில் வீட்டு முற்றத்துக்கு தண்ணீர் தெளித்துவிட்டு வீட்டுக்கு முன் கேற்றடியில் காத்து வாங்கிறம் என்று சொல்லி கூடி நிற்பது வழமை. அதேபோல் அன்றும் சுமதி வீட்டின் முன்னும் பெண்கள் கூடி இருந்தனர். சுமதி வீட்டில் கண்டிப்பான தகப்பன், தாய் மற்றும் 3 இளம் பெண் பிள்ளைகள், அவர்களின் நண்பிகள் என்று எப்போதுமே இளம் பெண்களின் நடமாட்டம் அதிகம். சுமதிக்கு…
-
- 15 replies
- 2.9k views
-
-
சிறகுகள் வேண்டும் எனக்கு என் மேசையில் இருந்த கடிகாரம் மணி 7 என காட்டியது. வேலைக்கு காலை 6 மணிக்கு வந்தேன். வேலையும் இன்று அதிகம் தான். இப்பொழுது வேலை அனைத்தும் முடிந்தும் வீடு செல்ல மனம் வரவில்லை. போனால் என்ன புதிதாக நடக்கும்? வழமையான புராணம். அதே கேள்விகள். அதே சந்தேகங்கள். இந்த 2 வருடத்தில் நடந்த விடயங்கள் "இப்படி ஒரு வாழ்க்கையா?" என சலித்துக்கொள்ள வைத்துவிட்டது. பெரியம்மா, மாமா, மாமி , சித்தப்பா, சித்தி என்று குடும்பத்தில் அனைவருமே என்னை தான் குறை சொல்கின்றார்கள். அம்மா அப்பா சொல் கேட்பது இல்லையாம்! இவர்கள் கேட்டார்களா என அப்பப்பாவிடம் கேட்க வேண்டும். நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு யோசிக்கும் சக்தி கூட இல்லையா? இத்தனை வருடங்களில் ந…
-
- 30 replies
- 8.1k views
-
-
சென்ற மாதத்தில் ஒரு வாரம் பானுமதி யின் அம்மவும் அப்பாவும் ...ஒரு விசேடத்துக்காக அயல் ஊர் சென்று இருந்தார்கள். போக முன்னமே மகன் கார்த்திக்கும் மகள் பானுவும் மகிழ்வாக் தான் அனுப்பி வைத்தார்கள். வளர்ப்பு நாய் லூனாமட்டும் எந்நேரமும் முகத்தை தொங்க .வைத்து இருந்தது ... .பாரும்மா அதற்கு கூட விளங்கி விட்டது போலும் ..... இவர்களுக்கும் ஒரு படிபினையாக் இருக்கட்டும் என் அப்பா சொல்லிக் கொண்டார் . பானு இளம் வயதுப் பெண் என்றாலும் .. சமையல் ..வீடுபரமரிப்பு என்பவற்றில் கள்ளம் ..ஏதாவது சாட்டு சொல்லி தப்பி கொள்வாள். அக்கா தம்பி இருவ்ரும் பொறு ப்பு எடுத்து கொண்டனர் ... உறவினர் வீடு அயலில் இருந்ததால் கவனித்து கொள்ளும்படி சொல்லி சென்றாரக கள் அம்மாவும் அப்பாவும். …
-
- 4 replies
- 3.5k views
-
-
புத்தா சயந்தன் ஸ்ரீபெரும்புத்தூரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்டுச் சரியாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தக் கதை ஆரம்பிக்கின்ற கும்மிருட்டில் தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டு நரம்பை நசித்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். மேடும் பள்ளமுமான பழங்காலத்துத் தரையில் நீர்வீழ்ச்சியிலிருந்து கிளைபிரிகிற அருவியென மூத்திரம் மற்றுமொரு பாதையில் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். நீரில் மெதுவாக முங்குவதைப்போல புலன்கள் வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர…
-
- 15 replies
- 2.7k views
-
-
என்ர ராசாவுக்கு கிறிஸ்டி நல்லரெத்தினம் யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர். ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்! அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக…
-
- 1 reply
- 915 views
-
-
அவளது கண்கள் அழுது அழுது இரத்த சிவப்பாயிட்டுது. இன்னும் கண்ணீர் வடித்து கொண்டே அழுது களைத்து சிணுங்கலாகி சிணுங்கி கொண்டே இருக்கிறாள். சிணுங்கல் தொந்தரவு தாங்க மாட்டாமால் கொடியில் உடுப்பு காய போட்டு கொண்டிருந்த அவளது அம்மா சனியனே உனக்கு இவ்வளவு http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post_11.html
-
- 11 replies
- 2.3k views
-
-
அன்புடையீர் வணக்கம், வரும் புத்தாண்டு ஜனவரியில் எனது நாவலான ஆறா வடு - தமிழினி பதிப்பக வெளியீடாக சென்னையில் வெளியாகிறது. கடந்த 2 வருடமாக பையப் பையவும் போன ஆறேழு மாதமாக ஓவர் ஸ்பீட்டிலும் அதனோடு மெனக்கெட்டிருந்தேன். அத்தருணத்தில் புத்தகத்தில் வராத முன்னுரை என்றொரு குறிப்பை பேஸ்புக்கில் சிறு சிறு குறிப்புக்களாக எழுதினேன். அவையாவன.. த.பிரபாகரன் என்றொரு நண்பர் இருந்தார். (பின்னாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான அம்பலம் இதழின் ஆசிரியர்) நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது அவர் நான்காம் வகுப்பிலிருந்தார். அப்பொழுது நம்மிருவருக்கும் இடையில் ஒரு சவால் எழுந்தது. யார் அதிக பக்கங்களுடைய நாவலை எழுதுவது என்பதே அது.. ஒவ்வொரு காலையும் வகுப்புக்கள…
-
- 15 replies
- 2.2k views
-
-
கமக்காரன் நட்சத்திரன் செவ்விந்தியன் தைப் பொங்கலுக்கு முதல்நாள் காலையில் கொடிகாமம் வீதியில் நெல்லியடிச்சந்தை நோக்கி மடித்துக் கட்டிய சாரம் மட்டுமே கட்டியிருந்த ஒல்லியன் ஒருத்தன் தோளில் அரைச்சாக்கு நிறைந்த பயறோடு போய்க்கொண்டிருந்தான். ஆயம் என்ற சிற்றூரில் வசிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக உவர் ஏறி தரிசாக மாறிவரும் தன்னுடைய சிறு தோட்டத்தில் கடுமையாக மாரடித்து அறுவடை செய்தது அந்தளவுதான். வீட்டில் கொஞ்சம் பழஞ்சோற்றை மனுசிக்கு ஆரோ கொடுத்தது என்ற அருமையான பச்சை மிளகாய்த் துண்டுகளோடும் வழமையான வெங்காயத்தோடும் சாப்பிட்டிருந்தான். மனுசி இஞ்சி போட்டுத்தந்த பிளேன் டீயையும் உள்ளங்கையில் போட்ட ஒரு சொட்டு சீனியில் நக்கி நக்கிக் குடித்திருந்தான். நெல்லு வெட்டிய வெற்று வயல்…
-
- 47 replies
- 10.1k views
-
-
' காற்றோடு போன கனவுகள்’ விமர்சன உரையில் கவிஞர் கு.கிலேசன் நாவிதன்வெளி இளம் எழுத்தாளர் வை.கே.ராஜீ எழுதிய காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா நாவிதன்வெளியில் கவிமணி கௌரிதாசன் தலைமையில் நடைபெற்றது. நூல் அறிமுக உரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.விஜயராஜாவும் நூல் விமர்சன உரையை கவிஞர் கு.கிலசனும் நூல் ஆய்வுரையினை கலைஞர் ஏ.ஓ.இ.அனல் ஆகியோரும் நிகழ்த்தினார்கள். நூல் விமர்சன உரை நிகழ்த்திய கவிஞர் கு.கிலேசன் தமதுரையில்: சிறுகதை என்பது ஒரு சம்பவத்தையோ ஒரு கருத்தையோ தெளிவாக ஒருவர் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு கூட்டத்துடன் தொடர்புபடுத்தியோ முழுமையாக் கூறுதலே அன்றி நாவலின் ஒரு பகுதியைத் தருதல் சிறுகதையல்ல. காற்றோடு போன கனவுகள் ஒரு காதல் ஊற்றாக மலர்ந…
-
- 0 replies
- 970 views
-
-
அனைவருக்கும் இனிய திருட்டு வணக்கங்கள், இண்டைக்கு (நேற்று) நான் பள்ளிக்கூடம் போனால் என்ன நடந்திச்சிது தெரியுமோ? ரெண்டு அதிர்ச்சிகள் எனக்கு காத்து இருந்திச்சிது. ஒண்டு எனக்கு படிப்பிக்கிற வாத்திக்கு மாரடைப்பு. இனி அவர் படிப்பிக்க மாட்டாராம். புது வாத்தி ஒருத்தர பள்ளிக்கூடம் தேடிப்பிடிக்கவேணும். மற்றது, என்னோட படிக்கிற சக மாணவியிண்ட காரை உடைச்சு களவு. இதில ரெண்டாவது கதைய மாத்திரம் சொல்லிறன் சுருக்கமா. நேற்று என்னோட படிக்கிற சக மாணவி ஒருத்தி தன்ர காரை (car - மகிழூர்தி?) பள்ளிக்கூடத்திற்கு அருகில இருக்கிற ஒரு தெருவில விட்டுப்போட்டு அங்கால எங்கையோ போட்டு வாறதுக்கு இடையில யாரோ ரெண்டு திருட்டுப் பசங்கள் கார் கண்ணாடிய கல்லால குத்தி உடைச்சு காருக்க இருந்த பொருட்கள த…
-
- 20 replies
- 4k views
-
-
இந்த அப்பன் மவனே சிங்கன்டா என்ற பதிவு தொடங்கி இரண்டு வருடங்கள் நிறைவாகி விட்டது என்பதை பதிவுலக நண்பர்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்..அத்துடன் இன்னொரு மகிழ்ச்சி இப்ப இந்த பதிவு ஒரு லட்சம் ஹிட்டுகளை தாண்டி விட்டது என்பது இந்த ஹிட்டை வைத்து என்ன செய்யலாம் என்கிறீங்க? ஒன்னுமே செய்ய இயாலாது தானே ...எனது சக பதிவனா ஊர் உளவாரத்தில் இருக்கும் பதிவுகளை குரல் பதிவாக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ...ஆனால் காலம் நேரம் வரவில்லை.. இப்ப அந்த ஊர் உளவரா பதிவில் ஒன்றான அந்த மழை நாள் என்ற பதிவை குரல் பதிவாக்கி சிறப்பு பதிவாக தந்திருக்கிறேன் ....கேட்டு பாருங்களேன்.... http://sinnakuddy1.blogspot.com/2008/10/blog-post_28.html
-
- 14 replies
- 2.2k views
-
-
வங்கி முறிந்துவிட்டது என்ற செய்திகேட்ட மஞ்சுளா உண்மையில் அதிர்ச்சிஅடைந்துவிட்டாள். அவள் அப்பா குருவி சேர்த்ததுபோல சேர்த்துவைத்த பணம் அந்த வங்கியல்தான் உள்ளது. இந்தச்செய்தியை தந்தையிடம் சொல்லத்தான் முடியுமா? அவருக்கு கேட்டால் நோய்முற்றிவிடலாம். எதுவும் சொல்லாமல் வங்கிக்கு சென்று கிடைக்கின்ற பணத்தை முதலில் எடுத்துவந்துவிடுவதுதான் நல்லது என்று தோன்றிது. கோவில் சென்று வருவதாக சொல்லிவிட்டு வங்கிநோக்கி நடையைக்கட்டினாள். தெருவில் இராணுவத்தினரும் பொலிசாரும் காவலில் ஈடுபட்டிருந்தனர். மங்சுளா கலவரமாக நடந்துசெல்வது அவர்களுக்கு சந்தேகத்தை வரவளைத்திருக்கவேண்டும். அழைத்து அடையாள அட்டையை பரிசோதித்து கொழும்பு முகவரி இருக்கவும் விட்டுவிட்டார்கள். பஸ்ஸில் ஏறி வேர்வையைத்துடைத்தபோதுதான் தான…
-
- 7 replies
- 6.9k views
-
-
“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உக்காந்திருக்கானுங்க பாரு போக்கத்தவனுங்களா, வாங்கடா தட்டைத் தூக்கிக்கிட்டு...” வெற்றிலை எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு அவ்வா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதன் கண்களில் தெரிந்த வெறி, ஆயிரம் ஆண்டுகளாகத் தன் கண்முன்னால் சிறிது சிறிதாக வளர்ந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு நிமிடத்தில் அணுகுண்டு போட்டு இல்லாமல் செய்துவிடும் நிகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பது போலிருந்தது. அதுவரை என் வாழ்நாளில் நான் அவ்வாவை அத்தனைக் கோபமாகப் பார்த்ததேயில்லை, நைனா மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து சொந்தக்காரர்களையும் கூட்டிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் நிச்சயத்தார்த…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒரு நிமிடக் கதை: சொத்து ஒரேயொரு சிறிய வீட்டை வைத்துக் கொண்டு எட்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தன் அப்பா மீது இனம்புரியாத கோபம் கோபாலுக்கு. பொதுச் சொத்தாய் இருந்த பூர்வீக வீட்டை விற்று கிடைத்த பணத்தை தன் சகோதர, சகோதரிகள் ஏழு பேருடன் பங்கு பிரித்ததில் கோபாலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் கிடைத்தது. தன் நண்பன் சுரேஷை நினைத்துப் பார்த்தான்… ‘சுரேஷ் ஒரே பிள்ளை என்பதால் வெகு சுலபமாக எந்த முயற்சியும் இன்றி தன் அப்பாவின் எழுபது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகிவிட்டான். நான்? ஒரு சிறிய ஃபிளாட் வாங்குவதற்கு லோன் வாங்கி இன்னும் வட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறேன்…’ யோசிக்க யோசி…
-
- 2 replies
- 1k views
-
-
ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவர…
-
- 37 replies
- 4.2k views
-
-
நிலம் (பாரதிபாலன்) நிலம் பாரதிபாலன் மா சானமுத்துவுக்கு நிற்க முடியவில்லை. வெயில் வெள்ளையாக எரிந்துகொண்டு இருந்தது. ஊமை வெயில். உடம்பெல்லாம் ஊறியது. உடல் இடுக்குகளில் எல்லாம் ஈரம் மிதந்தது. கால் கடுக்கும்போது, காலை மாற்றிப்போட்டு நிற்பான். அடிக்கொரு தரம் உடலைச் சற்று இப்பாலும் அப்பாலும் நீட்டி, வளைத்துச் சோம்பல் முறிப்பான். காலை நீட்டி உதற வேண்டும் போல் இருக்கும். வெகு நேரம் இந்த வரிசையில் நின்றிருப்பதால், சற்று விலகி எங்காவது போய் உட்…
-
- 0 replies
- 949 views
-
-
திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின் அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்துப் பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழு…
-
- 0 replies
- 910 views
-
-
புது நாத்து நம்மூர்ல இப்ப மயிலுங்க நடமாட்டம் அதிகமாயிடுச்சுடி. மொதல்ல ரெண்டு மயிலு வந்திருக்குன்னு கோதை சொன்னா. நான் நம்பவேயில்ல. நாலுநாளு கழிச்சு நம்ம கொல்லை மூங்கிகுத்து பக்கம் ரெண்டு நின்னத நானே என் கண்ணால பாத்தேன். ரெண்டும் அம்புட்டு அழகு. மயிலு இங்க நின்னா தோகைங்க அங்க கெடக்கு. அம்மாம் பெரிசு. அதுங்க கழுத்தை பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு. பளபளன்னு அப்புடி ஒரு நெறம். திருபுவனம் பட்டை வெட்டி தச்சு விட்டது மாதிரி அப்படியொரு நெகுநெகுப்பு. அடுத்த ஒருவாரத்துல ஏகப்பட்ட மயிலுங்க வந்துடுச்சு.'' லட்சுமி போனில் கதையளக்க, பவித்ரா ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தாள். …
-
- 0 replies
- 692 views
-
-
வலைபதிவர் தமிழ்நதி சென்னை தமிழில் கதை எழுதி இருக்கார். அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வே…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவ மனசு அப்படி! புயலுக்குப் பின் அமைதி என்பார்களே... அப்படி இருந்தது வீடு. மேஜை மேல் இருக்கும் டிபன் பாக்சையும், குடையையும் எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பினாள், சாதனா. உடம்பெல்லாம் ஆத்திரத்தில் அதிர, அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் விவேக். 'இவளை என்ன செய்தால் தகும்' என்பது மாதிரி அவன் மனசு தகித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவளை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டான். எதிர்த்து பேசாதது, பெரியவர்களுக்கு மரியாதை தருவது, என்ன கோபம் வந்தாலும் அதிர்ந்து கத்தாமல…
-
- 0 replies
- 734 views
-
-
சுருக்குப் பை By சிந்துஜன் நமஷி ஒரு கார்காலத்தின் இரவில் இடி, மழை, மின்னலொடு என் வாழ்க்கைக்குள் வந்தவன் காந்தன் அண்ணா. காட்டாறு தாண்டிப் போன நிலம் போல என் தளத்தின் நியாயங்களை எல்லாம் கலைத்துவிட்டு போனவன் . ஒரு கள ஆய்விற்காக அப்போது நான் பியகமவில் இருந்தேன். அழகான மலையடி வார கிராமம் அது. ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம் என்ற பெயரில் பல தொழில்சாலைகள் அந்தக் கிராமத்தைச் சுற்றி இருந்ததால் தூர இடங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்குவது பெரும் வியாபாரமாக மாறிப்போய் இருந்தது. ஆட்டோக்காரன் தான் என்னை ‘மெனிக்கே’ வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். சிங்களத்தில் ‘மெனிக்’ என்றால் மாணிக்கம் தவிர அவளுக்கும் பெயருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…
-
- 1 reply
- 758 views
-
-
மாதவி தன் போட் காரை அந்த பசன் டிசைனிங் நிறுவனத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு தனது வகுப்பை நோக்கிப் போனாள்...அது ஒரு தனியார் நிறுவனம் அதில் படிப்பது என்றாலே அதிக காசு செலவாகும். மாதவி அந் நிறுவனத்தில் சுமார் ஆறு மாதமாக நவீன ரக ஆடை வடிவமைப்பு,மேக்கப் போடுதல்,தலை முடியை எப்படி எல்லாம் ஸ்டைலாக்கலாம் போன்றவற்றை படித்து வருகிறாள். இவள் இப்படி எல்லாம் வந்து படிக்கிறதாலே அவளை வசதியான வீட்டு செல்லப் பிள்ளை என நினைக்க வேண்டாம்.அவளுக்கு வேலையும் இல்லை, காதலனும் இல்லை,இப்ப காதலிக்கிற வயசும் இல்லை அவளுக்கு நாற்பது வயது[நாற்பது வயதில் காதலிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.] கல்யாணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.கணவன் ஒரு வியாபாரி,வியாபாரத்திற்காக ஊர்,ஊராக சுற…
-
- 109 replies
- 27.3k views
-