கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
திருடன் – ஜினிசிரோ தனிஜகியின் ஜப்பானிய சிறுகதை ஜப்பானியச் சிறுகதை மூலம் : ஜினிசிரோ தனிஜகி ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா ஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜகி [ 1886 – 1965 ] நவீன எழுத்தாளர் வரிசையில் அடங்குபவர். சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல் என்று பல்வடிவ படைப்பாளி வரிசையில் ஒருவர். புகழ் பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் சோசகிக்குப் பின் அம்மொழியின் சிறந்த நாவலாசிரியர் என்ற போற்றுதலுக்கு உரியவர். 20-ம் நூற்றாண்டில் மாறிவரும் ஜப்பானிய சமூகவாழ்வின் போக்கைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். சிறந்த சமகால எழுத்தாளர் என்று பாராட்டப்படும் இவர் ஜப்பானிய அரசின் ’அஸகி’ விருது பெற்றவர். திருடன் பல வரு…
-
- 4 replies
- 2.3k views
-
-
அவளது கண்கள் அழுது அழுது இரத்த சிவப்பாயிட்டுது. இன்னும் கண்ணீர் வடித்து கொண்டே அழுது களைத்து சிணுங்கலாகி சிணுங்கி கொண்டே இருக்கிறாள். சிணுங்கல் தொந்தரவு தாங்க மாட்டாமால் கொடியில் உடுப்பு காய போட்டு கொண்டிருந்த அவளது அம்மா சனியனே உனக்கு இவ்வளவு http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post_11.html
-
- 11 replies
- 2.3k views
-
-
கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தின் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள் 0 0 0 சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம். சட்டெனச் சந்தித்து வி…
-
- 8 replies
- 2.3k views
-
-
அன்று வெள்ளிகிழமை கனகர் அடுத்த நாள் வேலைக்கு போக தேவையில்லை என்ற சந்தோசத்தில் உற்சாக பானத்துடன் உறவை வளர்த்து கொண்டி இருக்கும் போது தான் தொலை பேசி மணி அடித்தது,யாராவது அறுக்க போகிறார்கள் என்று யோசித்து கொண்டு தொலைபேசியை எடுத்தார்,அது அவரின் நண்பர் கந்தர் மறுமுனையில் இருந்து என்ன நாளை "உக்கிரேனியன்" மண்டபதிற்கு வாறீர் தானே என்றார்.என்ன விசயம் எப்ப என்று கேட்க கந்தரும் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு கோபத்துடன் கேட்டார் என்ன போட தொடங்கிட்டீரோ. நாளை எங்களுடைய தமிழ் ஆட்களின் ஒன்று கூடல் இருக்குது வரவில்லையோ அப்பொழுது தான் கனகருக்கு ஞாபகம் வந்தது தமிழர்களின் ஒன்று கூடல் பற்றி இது என்ன இப்படி கேட்டு போட்டீர் நான் இல்லாமல் தமிழர் ஒன்றுகூடல் சிட்னியில நடைபெறுமா? கட்டாயம் வருவ…
-
- 10 replies
- 2.3k views
-
-
காதல் சொல்ல… வா… – சிறுகதை கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டில்தான் சந்தித்தான் வளவன். வழக்கமாய் சினிமாக்களிலும், கதைகளிலும் வருவது போல் மோதல் இல்லை. அந்த மழை நாளில், நனைந்து விடாமலிருக்க கல்லூரி பேருந்துக்குள்ளே நெருக்கியடித்து ஏறிக் கொண்டிருந்தனர் மாணவர்களும் மாணவிகளும். கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் நின்று கொண்டிருந்தாள் குழலி. மழைத்தண்ணீரின் ஈரத்தில் செருப்பு நழுவ, கீழே விழவிருந்தவளை, பின்னால் நின்று கொண்டிருந்த வளவன்தான் கைகொடுத்து நிலை நிறுத்தினான். உடனே, பாரதிராஜா படத்தில் வருவது போல் தேவதைகள் புடைசூழ “தந்தன.. தந்தன தாளம் வரும் வரும்..” என்றெல்லாம அவன் மனம் பாட்டு படிக்கவில்லை. அவளைத் தேடி அலையவில்லை. நண்பர்கள் மூலம் இருப்பிடம் அறிய முய…
-
- 0 replies
- 2.3k views
-
-
வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை லைலா எக்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம் 1 அந்த அமைதியான மாலைப் பொழுதில் கழிவறைக்குள் தென்னை விளக்குமாற்றால் சரசரவெனக் கூட்டிக் கழுவும் சத்தம், பள்ளியின் வராந்தா முழுவதும் ஒலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கேட்ட சத்தம், முழுவதுமாக நின்றுபோன சற்றுநேரத்தில் வெறும் பக்கெட்டை ஒரு கையிலும், பொருள்கள் நிறைந்திருந்த பக்கெட்டை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் வித்யா. அந்த பக்கெட்களிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட, அவள் நடந்துவந்த வராந்தாவில் சிந்தவில்லை. இத்தனைக்கும் அவள் கைகளிலிருந்த அழுத்தமான பிளாஸ்ட்டிக் பக்கெட்டின் விளிம்பு பிளந்துகொண்டிருந்தது. அதில் சிறிய விரிசல் ஒன்றும் இருந்தது. அதன் …
-
- 0 replies
- 2.3k views
-
-
வயது பதிமூன்று -வேதா கோபாலன் பதிமூன்று வயது தாமினி கர்ப்பமா..? டாக்டர் ரேவதி அதிர்ந்து நிமிர்ந்தாள். தலை சுற்றியது போன்ற உணர்வில் அப்படியே ரிவால்விங் நாற்காலியில் படிந்தாள். “தாமினி...’’ சட்டென்று தழுதழுத்த உணர்வு. இவளை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி நான்தான் முந்தி என்று ஒரு காரணம் நின்றது. இது இவளின் பேஷன்ட் இல்லை. “இந்த ரெண்டு வாரம் நீ ஓ.பி பார்த்துடுடீ ரேவ்ஸ்...” என்று கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சிவிட்டு டார்ஜிலிங்குக்கு புருஷன் திலீபனுடன் நாலாவது தேனிலவுக்கு ஓடினாளே அந்த அல்பனாவின் வழக்கமான பேஷன்ட் இவள். ஆதர்ச தம்பதி அல்பனாவும் திலீபனும். அன்யோன்யத்…
-
- 0 replies
- 2.3k views
-
-
சைக்கிள் -தர்மினி- மூன்று பக்கங்களும் கடல்களும் ஒரு பக்கம் மணற் கும்பிகளும் என எங்கள் ஊர் ஒடுங்கியதும் சிறியதும். ஆகவே, பள்ளிக்கூடம், லைப்ரரி, ஞாயிறு தேவாலயம் என எங்கே போவதென்றாலும் (இந்த இடங்கள் தவிர வேறெங்கும் போறதேயில்லை) கால்நடை தான். போற-வாற வழிகளில் தெரிந்தவர்களுடன் கதைத்துக்கொண்டே நடப்பது. வழியில் எங்கேயாவது மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய் கண்டால் கல்லெறிவதோடு சரி. சைக்கிள் ஓடும் யாரைப்பார்த்தும் ஆசையே வரவில்லை. எப்பிடித்தான் ஓடுறார்களோ? என ஆச்சரியம் தான். பக்கத்து ஊரிலிருந்து விஞ்ஞானம் படிப்பிக்க வரும் ரீச்சர் தங்களைத் திட்டுவதைக் காரணமாகக் கொண்டு ரீச்சரின் சைக்கிளை என் வகுப்புப் பொடியங்கள் சிலர் ரயறை வட்டாரிக் கூரால் குத்திக் காற்றை …
-
- 1 reply
- 2.3k views
-
-
மௌனத்தின் எல்லையிலே வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக…
-
- 2 replies
- 2.3k views
-
-
2010 ஆம் ஆண்டின் பிற்பகுதி ஒரு சனிக்கிழமை காலை நேரம் வேலையில் நிண்டு கொண்டிருந்த எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு "ஹலோ நான் ஜொனிகதைக்கிறன் உங்க university க்கு முன்னால தான் நிக்கிறன்" " நான் u .k la இருந்து விடுமுறைல இங்க வந்திருக்கன் என் நண்பன் ஒருவனை தேடி வந்தன் இப்போது அவனின்ட தொடர்பும் அட்ரஸ் ம் இல்லை எனக்கு தங்குவதற்கு கூட இடம் இல்லை நடுதெருவில நிக்கிறன்" என்ன செய்கிறதெண்டு தெரியல எண்டு அழுவாரை போல சொல்லி கொண்டே போனது மறுமுனை எனக்கோ யோசனை லண்டன்ல இருந்து ஒருத்தன் வாரான் இவ்வளவு தூரம் அட்ரஸ் போன் நம்பர் ஏதும் இல்லாமலா ஒருவரை தேடி வருவான் சரி எதற்கும் வேலை முடிச்சு போய் கதைப்பம் எண்டிட்டு அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டு அவனின் சொந்த இடங்களை பற்றி விசாரிச்சன்…
-
- 2 replies
- 2.3k views
-
-
அவை ஊளையிடுகின்றன - கலைச்செல்வி ஓவியங்கள் : ரமணன் சுவரின் மறுபக்கம் அவை உறுமத் தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால், அந்த ஒலியே அவளை மருளவைத்தது. கைகள் இரண்டையும் மடித்து, உடலைக் குறுக்கிச் சுவரோரமாகப் பம்மிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்றுவிடலாம். ஆனால், அது வெகுசில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறிவிடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பதுபோலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கும்போது, ஏதும் தட்டுப்படுவதில்லை. ஆனால், அதுகூட வெகுசில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படித்தானோ... சுவரோடு காதை நெருக்கிவைத்துக்கொண்டாள். இல்லை... அவை நடமாடுகின்றன. அவளைக் கண்காணிப்பதற்குத் தோதான இடத்தைத…
-
- 1 reply
- 2.3k views
-
-
இது மிஷின் யுகம் - புதுமைபித்தன் சிறுகதை நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே - ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு. போய் உட்கார்ந்தேன். "ஸார், என்ன வேண்டும்?" "என்ன இருக்கிறது?" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன். அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன. "சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங…
-
- 0 replies
- 2.3k views
-
-
-
"அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா" "கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே" "அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா." "சொன்னா கேட்க மாட்டே. டாடி வந்தா அடிச்சுடுவார். போயி தூங்குடா" ------------------------------------------------------------------------------------------------ "சார் பையன் மேத்ஸ், சயின்ஸ் ரெண்டுத்தேலேயும் நைண்டி பர்சண்ட் ஸ்கோர் பண்ணியிருக்கான் சார். தயவுசெஞ்சி பர்ஸ்ட் குரூப்பே கொடுத்துடுங்க" "இல்லே சார். பர்ஸ்ட் குரூப்லே மொத்தம் 24 வேகன்ஸி தான் இருக்கு. அதுலே நாலு ஏரியா கவுன்சிலர் ஆக்குபை …
-
- 11 replies
- 2.3k views
-
-
மிகவும் அருமையான எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கதை ,இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை .யாராவது முடிந்தால் இணைத்து விடவும் . . அம்ருதா யூன் இதழில் வெளிவந்த கதை இது .
-
- 13 replies
- 2.3k views
-
-
பர்மா ராணி சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் 2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம். வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மூடிக்கிடந்த கடந்த காலத்தின் ரகசியப் பக்கங்கள், இந்தத் தேடலின் ஒவ்வொரு தருணத்திலும் திறந்துசெல்வதைக் கண்கூடாகப் பார்த்தான். அவன் தேடும் தனியொரு மனிதராக அல்லாமல், ஒரு நூற்றாண்டின் ரகசியமாகவே மாறியிருந்தார் ஜாவேத். புதிய புதிய சுவாரஸ்யங்களைத் தந்த அந்த ரகசியத்தின் எழுதப்படாத, விநோதமான பாத்திரம் இவன். `தமிழ் சினிமா – நேற்றின் நிழல்’ என்னும் பெயரில், சினிமாவின் கடந்த காலத்தைக் கொண்டாடும்விதமாக நடக்கும் நிகழ்வின் அபூர்வமான ஒரு தருணத்தில்தான், ஜாவேதைப் பற்றி முதலில் தெரிந்துகொண…
-
- 1 reply
- 2.3k views
-
-
பித்தளை நாகம் - சிறுகதை இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள். இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்…
-
- 0 replies
- 2.3k views
-
-
எனது வீட்டு டெக், அந்த மேல் இருக்கையில் இருந்து மக்கோவன் வீதியை பார்த்தபடி குமார் என்னை கட்டி பிடிக்கின்றான் .அவனது மூன்று பெண்பிள்ளைகளும் முந்திரிகை பந்தலுக்கு பின் ஓடி ஒளிக்க பெடியன் கண்ணை கட்டியபடி பிடிக்கப்போகின்றான் .எனது சின்னவருக்கு நம்பவே முடியால் இருக்கின்றது .மூன்று பெட்டைகளும் ஒரே மாதிரி, ஒரே உடுப்பு வேறு.ஆனால் பெடிக்கு வித்தியாசம் தெரியுது.நான் குமாரை கேட்கின்றேன் "உனக்காவது வித்தியாசம் தெரியுமா" சிரித்தபடி குமாரின் மனைவி சொன்னா இவருக்கென்ன வீட்டில் நிற்பதில்லை நான் படும்பாடு சொல்லி மாளாது.ஆனால் அதுகள் மாத்திரம் ஆளை ஆள் அந்தமாதிரி அடையாளம் பிடிக்கும்.கலிபோணியாவில் இருந்து காரில் வந்தனியா என்று கேட்க, எல்லாம் தமிழ்நாட்டில் மொட்டர்சைக்கில் கொடுத்த கெப்பு என சி…
-
- 9 replies
- 2.3k views
-
-
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த பதிவை நீக்க வேண்டி உள்ளது சிரமத்துக்கு மன்னிக்கவும்-சின்னக்குட்டி
-
- 21 replies
- 2.3k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/06/nr-750.html அப்பம்மா உந்த றோட்டாலை போற பஸை பார்த்து நேரம் சொல்லும்... உந்தா மெயில் பஸ் போகுது.... ஐந்தரை எண்டு சொல்லும் . மணிக்கூட்டை உடனை பார்த்தாலும் சரியாக தான் இருக்கும்...... பஸ்காரங்களும் உதுகளின்ரை நம்பிக்கையை வீணாக்காமால் சரியான நேரத்திலை போய்க்கீய் வந்திருக்கிறான்கள் . இப்ப உப்பிடி இல்லைத்தானே... அவங்களிலையும் குறை சொல்லேலாது.. இழவு விழுந்த ஆமி பொலிஸ்காரன்கள் பத்து இடத்திலை செக்கிங் வைத்தால் எனனயிறது கிழவி இண்டைக்கு அடுக்கு எடுத்தண்டு நிக்குது...யாழ்ப்பாண பெரியாஸ்பத்திருக்கு போறதுக்கு...பக்கத்து வீட்டு பவளக்கான்ரை பொடியை
-
- 7 replies
- 2.3k views
-
-
படித்ததில் பிடித்தது👌👌 ‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ ‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். ‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார். பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார். …
-
- 4 replies
- 2.3k views
- 1 follower
-
-
அகல்யா ஆர். அபிலாஷ் நானும் சில நண்பர்களும் கருத்தரங்குக்கு முந்தின நாளே சென்றுடைந்த போது விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு நாய் உடலை குறுக்கி புட்டத்தை லேசாய் தூக்கி ஒரு குட்டை அருகே மலம் கழிக்க முயன்று கொண்டிருந்தது. நீராய் கழிந்த மஞ்சள் மலம் மெல்ல அந்த குட்டையின் கறுப்புநீரில் ஓவியனின் தூரிகையை முக்கும் போது கரையும் சாயம் போல் கலந்து ஓடத் தொடங்கியது. தன் அவஸ்தை முடிந்து நாய் எங்களை தலைதூக்கிப் பார்த்தது. சந்தீப்பும் பார்த்திவ் ஷர்மாவும் என்னை நோக்கி சிரித்தனர். நாங்கள் அப்பகுதியில் பார்த்த நாய்களை கணக்கெடுத்து வந்தோம். அதன் செவியின் நுனி கத்தரிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் எ.பி.சி எனும் கருத்தடை செய்யப்படாத ஒன்று என குறித்துக் கொண்டோம…
-
- 0 replies
- 2.3k views
-
-
வாய் அந்த இளைஞனை நெடுநேரமாய் கூர்ந்து பார்த்தேன்.... எங்கேயோ பார்த்த முகம்... நன்கு தெரிந்த ஒரு முகத்தின் அச்சு மின்னி மின்னி மறைந்தது... யாராக இருக்கலாம் ... கேட்க வேண்டும்போல மயிர்க் கூச்செறிந்தது... திகைத்து நின்றேன்... கழுத்தில் சுருட்டிவிட்ட நேர்த்தியான இளம் கம்பளிச் சட்டை, உடம்போடு அளவாகப் பிறந்ததுபோல நேர்த்தியான லோங்ஸ்... அவனுடைய சப்பாத்தின் கூரிய முனையின் பளபளப்பில் என் முகம் தெரிந்தது... அருகில் சென்றேன்... மேலும் ஒரு அடுக்கு கூர்மையாகப் பார்த்தேன்... களிம்பு போட்டு சுருள விட்ட கேசம்...அரும்பாத புதிய மீசை.. உயரம் போலவும், திடகாத்திரம் போலவும் ஒரு காந்தத் தோற்றம்.. கதைப்பதற்கு ஆயத்தமானேன்.. அதற்குள் யாரோ ஒருவர் கைகாட்ட ஓடிப்போய் காரில…
-
- 10 replies
- 2.3k views
-
-
குழைத்த சாதம் ......... ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன. அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு மத்தியில் வாழ முடியாதென்று முடிவெடுத்து . வீட்டையும் நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம் செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் பட…
-
- 15 replies
- 2.3k views
-
-
மாதுமை - கோமகன் ராகவனின் சொந்த மண் கோண்டாவிலாக இருந்தது. அவன் அவனது மச்சாள் மகேஸ்வரியை கலியாணம் செய்து மாதுமை என்ற பெண் குழந்தைக்கும் அப்பாவாக இருந்தான் .நாட்டு நடப்புகள் அவனை சிப்பிலி ஆட்டின. ரெண்டு பக்கத்து சீருடைகளுக்கும் இடையில் அவனது உயிர் மங்காத்தா விளையாடியது .கோண்டாவில் இந்து கலவன் பாடசாலையில் அதிபராக பேராய் புகழாய் ராஜகுமாரன் போல் இருந்த ராகவன், ஒருநாள் பல தேசங்கள் கடந்து நொந்த குமாரானாய் ஓர் இலையுதிர் காலமொன்றில் பாரிஸுக்கு என்றியானான். அவனுடன் படித்த குணாவின் அறையில் எட்டுடன் ஒன்பதானான். முப்பது மீற்ரர் பரப்பளவை கொண்ட ரகுவின் அறையில் ராகவனுக்கு நிலத்திலேயே படுக்க இடம் கிடைத்தது. அந்த அறை ஒன்றும் பெரிய மாளிகை இல்லை. அந்த அறைக்குள்ளேயே குசினி இருந்தது. ஒரு…
-
- 0 replies
- 2.3k views
-