கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கதையும் கவிதையும்... தமிழீழத்தில் விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட தமிழீழ அரசு வெளிநாட்டவர்கள் பாராட்டும்படி நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இக் காலகட்டத்தில், இங்குள்ள செயற்பாட்டாளர்கள் போராளிகளின் கட்டளைக்கு அமைவாக, அவர்கள் குறிப்பிட்ட பொருட்களை பல கஸ்டங்களுக்கு மத்தியில் அங்கு கொண்டுசென்று, போராளிகளுக்கு கொடுத்துக் கொண்டாடினார்கள். போராளிகளுடன் கைகுலுக்கி, போட்டோ எடுத்து, இதனை இங்கு கொண்டுவந்து மற்றவர்களுக்கு காட்டி பெருமைப்பட்டுக் கொண்டார்கள். தலைவருடன் சேர்ந்து நின்று, புகைப்படம் எடுத்தவர்கள் தங்கள் வீட்டு வரவேற்பறையில் அதனை மாட்டி வைத்து, வீட்டுக்கு வந்தவர்களுக்கு, தங்களின் செல்வாக்கினை பறைசாற்றி புகழ்ந்து திரிந்தார்கள். இவற்றைக் கேட்டும், பார்த்தும் எ…
-
- 4 replies
- 1.3k views
-
-
என்னால் நம்பவே முடியவில்லை. என் எதிரில் நின்று பேசுகிறவர் போன யுகத்தைச் சேர்ந்தவராம். தற்செயலாகத்தான் அவரைக் கடை வீதியில் பார்த்தேன். நல்ல பசி. 'டிபன் எதுவும் செய்யலியா?' என்றேன் மனைவியிடம். 'எது பண்ணாலும் குறை சொல்றீங்க. என்னதான் டிபன் செய்யிறது?' என்று சலித்துக் கொண்டாள். பசியில் கோபமும் சேர்ந்தது. வெங்கடேச பவனில் சுடச்சுட ரவா தோசை கிடைக்கும் என்று மெயின் பஜாருக்கு வந்தேன். யார் மீதோ இடித்துக் கொண்டதும் நிதானித்து 'ஸாரி' சொன்னேன். ஆனாலும் படு குள்ளம். தோற்றம் மட்டும் விசித்திரம். சர்க்கஸ் கோமாளி மாதிரி. பதிலுக்கு அவர் சொன்னது புரியவில்லை. நிச்சயம் தமிழ் இல்லை. என் முகம் போன போக்கைப் பார்த்து அவராகவே சொன்னார். "உங்கள் மொழியிலேயே பேசுகிறேன்" "நீங்க எங்கேர்ந…
-
- 4 replies
- 960 views
-
-
ஊருக்குப் போனேன்- பாகம் 3. வாளியில் முகர்ந்திருந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும் , இருளில் நின்ற பசுவில் எல்லை கெட்ட நேரத்தில் கறந்து காய்ச்சிய பால் கைக்கெட்டியது. அம்மாவின் கையால் சமைத்ததினால் அறுசுவைபெற்ற உணவை உண்டதும் ஆறுதல் உண்டாகியது. தூய இருளில் நட்சத்திரங்கள் கவிந்த வானம் முன்னைய நாட்களை முன் நிறுத்தி மாய வித்தை காட்டியது. மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பார்த்தவாறே நட்சத்திரங்களை விசாரம் செய்யும் இளமைக்காலப் பொழுதுகள் ஐரோப்பிய வெளிச்சம் நிறைந்த நகர இரவுகளில் காணக்கிடைப்பதில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செய்த பயணமல்ல இது, ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு நடத்திய பாய்ச்சல் என உள்மனம் கூறியது. ஒரு லாம்பின் உருண்ட கண்ணாடிச் சு…
-
- 4 replies
- 1.7k views
-
-
சாக்கடலில் சேற்றுக்குளியல் ஜோர்தானுக்கான சுற்றுப் பயணத்திப்போது மத்தியகிழக்கு பிராந்தியத்தில் உல்லாசப் பயணிகளின் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றதான நாடுகளின் வரிசையில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டமைந்துள்ள நாடாக ஜோர்தான் திகழ்கின்றது. சம்பிரதாயபூர்வமான பாராளுமன்றக் கட்டமைப்பைக் கொண்டு மன்னர் ஆட்சியின் கீழான இயக்கத்திலுள்ள ஜோர்தான் அம்மான் எனும் பெயரை தலைநகராகக் கொண்டுள்ளது. மிகப் பிரமாண்டமானதும் எழில்மிக்கதும் அதேநேரம் கண்கவர் கட்டட அமைப்புகளை கொண்டமைந்துள்ள ஜோர்தான் நாட்டின் பிரதம அமைச்சராக ஹனி அல்– முல்கி காணப்படுகிறார். கீழ்சபை, மே…
-
- 4 replies
- 1.3k views
-
-
மார்கழியில் ஒரு காலை.... -------------------------------------------------------------------------------- மார்கழியின் காலை பொழுதை ரசித்தவரா நீங்கள். இப்போது அதை பார்க்காமல் ஏங்குபவரா நீங்கள்.......... கட்டாயம் படியுங்கள். நன்றாக கம்பளியை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது அப்பா எழுப்பி “போய் பால் வாங்கிட்டு வா” என்று மார்கழியில் ஒரு காலையில் எழுப்ப மார்கழியின் காலை எத்தனை ரம்மியமானது என்று உணர ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எழுந்திரிக்க மனம் இல்லாமல் குளிருக்கு இதமாக போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றும். இத்தனை ரம்மியமான அழகான உணர்ச்சிப் பூர்வமான மார்கழியை இத்தனை ஆண்டுகாலமாக ரசிக்காமல் விட்டுவிட்ட இந்த சோம்…
-
- 4 replies
- 2.6k views
-
-
இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 [ஒரு புது முயற்சி] “கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு எனக்கு அகாது என்னைக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே." கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்து போகும் பசுவின் பாலைப் போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் என் மாந்தளிர் மேனியும் விணாகிக் கொண்டிருக்கின்றதே -- இப்படி ஏங்கி தவித்து இருந்தவளுக்கு இன்று ஒரு பௌர்ணமி. ".... திங்கள் நாள் நிறை மதியத்து அனையை; இருள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
என் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்! தேதி : ஆகஸ்ட் 15, 1977 நேரம் : இரவு 9.00 மணி இடம் : நுகேகொட பக்கத்துவீட்டு செனவிரத்ன உள்ளே நுழைகிறார். வந்த வேகத்தில் அவசரமும் படபடப்பும். கால்கள் நடுங்குகின்றன. சிங்களத்தில் சொல்லும்போதே வாய் குழறுகிறது சந்திரா … மோடயங்கள் ஒவ்வொரு தமிழர் வீடாய் வந்துகொண்டு இருக்கிறாங்கள். எல்லா இடமும் அடியும், கொள்ளையும். நீங்க உடனடியாக இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள் எங்க போவம் செனவி? இங்க தானே பத்து வருஷமா இருக்கிறோம், இப்ப போகச்சொன்னா? போலீசில் போய் ஒரு என்ட்ரி போடுவோமே? ஓஐசியை எனக்கு தெரியும் நோ யூஸ், நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. செய்வது எல்லாமே அரசாங்கத்து ஆட்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
கலந்துரையாடல் - சுரேஷ்குமார இந்திரஜித் என் பெரியப்பா தா. ச. மயில்வாகனன் தீவிர சைவர். ‘நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க’ என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். “ராமன் வழிபட்ட தெய்வம் அவன்” என்பார். “சிவன் தப்பு செய்துவிட்டு முழிக்கும்போது பெருமாள்தானே அவரைக் காப்பாற்றினார்” என்பார் பெரியம்மா. பெரியப்பா என்றால் என் தாயாரின் உடன்பிறந்த அக்காவின் கணவர். தாயாரின் குடும்பம் சைவ சமய இலக்கியங்களில் பரிச்சயம் உடைய சிவவழிபாட்டுக் குடும்பம். வைணவக் கடவுள் படங்கள் எதையும் நான் அவர்கள் வீடுகளில் பார்த்ததில் லை. தந்தையின் குடும்பம் நாத்திகக் குடும்பம். சாமி படங்களே கிடையாது. பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஓரளவு நவீன இலக்கியங்களிலும் பரிச்சயம் உட…
-
- 4 replies
- 788 views
-
-
பிரியம் சமைக்கும் கூடு... உலகின் மிகத்தொன்மையான முதலாவது மனித நாகரீகத்தில் இருந்து இன்றுவரை வீடென்பது மனிதர்களிடமிருந்து இணைபிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மூத்த நாகரீகங்களில் தழைத்திருந்த மனிதர்களிடமும் சொந்தமாக வீடுகள் இருந்திருக்கின்றன.அந்தவீடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்க்காக அவர்களில் பலர் போர்க்களங்களில் போராடி வீழ்ந்திருக்கிறார்கள்.வீடுகளுக்காக உயிர்களைக்கூடக் கொடுக்குமளவிற்க்கு வீடுகள் மனிதர்களின் வாழ்வுடன் மிகமுக்கியமானவையாகப் பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. அப்படித்தான் அவர்களின் உயிரோடும் உணர்வோடும் பின்னிப்பிணைந்திருந்தது அவர்களின் அந்த வீடு… பல ஆண்டுகளின் பின்னர் இப்பொழுதுதான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
கற்பு!… ( சிறுகதை ) வரதர். July 03, 2018 சிறப்புச் சிறுகதைகள் (6) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தி.ச.வரதராசன் எழுதிய ‘கற்பு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள். ”மாஸ்டர், நீங்கள் ‘கலைச்செல்வி’யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?” என்று கேட்டார் ஐயர். ”ஓமோம், ஆரப்பத்திலிருந்தே ‘பார்த்து’ வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏ…
-
- 4 replies
- 1.8k views
-
-
உடைவு – போகன் சங்கர் ‘’சார் ஒரு ரிக்வஸ்ட். இவரு இந்த ஒரு நாள் மட்டும் இங்கே தங்கிக்கட்டுமா? இவரோட ரூம்ல திடீர்னு பியூஸ் போயிடிச்சி. எலெக்ட்ரிசியனை காலைல தான் கூப்பிட முடியும். நல்ல மள பார்த்திகளா? கீழே விகெ புரத்தில இருந்து தான் வரணும்.’’ நான் அந்த நபரைப் பார்த்தேன். நல்ல சிகப்பாக, உடம்புக்குப் பொருத்தமில்லாத சற்றே சிறிய முகத்தோடு, அந்தச் சிறிய முகத்துக்குப் பொருந்தாத சற்றே பெரிய தும்பு மீசையோடு இருந்தார். ‘’நான் டாக்டர் ராமேந்திரன். திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில சைக்யாற்றிஸ்ட்டா இருக்கேன்‘’ என்றார். ’’I’m not mad.’’ நான் சிரித்தேன். ’’நான் ஒரு எழுத்தாளன், கவிஞன்” என்றேன். ’’நானும் பைத்தியமில்லை.’’ அவர் சிரித்தார். ’’காலையில் ரிஷப்ஷனில்…
-
- 4 replies
- 2.2k views
-
-
அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள். அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே …
-
- 4 replies
- 869 views
-
-
ஒரு ”கட்டை” பிரம்மச்சாரி பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது மேனகைகள் புண்ணியத்தால் அவரது பிரம்மச்சரிய விரதத்துக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினார். ”இவ்வளவு கடுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?” என்றொரு இயல்பான சந்தேகம் அவருக்கு எழுந்தது. அகிலம் புகழும் ரிஷியான தன் குருவிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள சென்றார். “குருவே! வணக்கம். உலகிலேயே பாபமான செயல் எது?” “பெண் தொடர்பு!” “புரியவில்லை?” “ஒரு பெண்ணை கூட தொடாமல் வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் ஒன்றில் ராஜமரியாதையோடு …
-
- 4 replies
- 5.3k views
-
-
உடற்றும் பிணி – அருணா சிற்றரசு சிறுகதை | வாசகசாலை வாசகசாலைJanuary 5, 20240 1,060 7 நிமிடம் படிக்க Facebook X Share via Email Print “ உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?” இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை. “வேறொரு பிள்ளை இருக்கிறதா?! மனதைத் தேற்றிக்கொள். உன் மகனுக்கு நாள்பட்ட நோய் ஒன்று உறுதியாகிவிட்டது” என்பதைச் சொல்வதற்கான முன்னோட்டமாகத்தான் அவர் அப்படிக் கேட்டிருப்பார் என்ற உறுதிக்கு மிக அருகில் இருந்தாள். “இந்த மருந்துகளைக் …
-
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
மற்றுமொரு பழைய கதையைத் தேடிப்பிடிச்சு இணைத்திருக்கிறன் கிட்டத்தட்ட 7- 8 வருடங்களுக்கு முன் எழுதினது. படிச்சுப் பார்த்திட்டு பிடிச்சிருந்தால் சொல்லுங்கோ பிடிக்காட்டிலும் எட்டி உதைச்சுப்போடாதையுங்கோ கிழவன் பாவம் படக்கூடாத இடங்களிலை பட்டு இசகுபிசகாகிவிடும். பக்குவமாச் சொல்லுங்கோ கேட்கிறன். கொம்பியூட்டர் விற்பனைக்கு இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன். என்ரை அவகொஞ்ச நாளா ‘இஞ்சாருங்கோ எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம் சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
அவளைக் கொன்றவர்கள் அகரமுதல்வன் 1 பண்டைய எகிப்திய மக்கள் பூனைகளை வணங்கினர் என்கிற வரலாற்றை இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்டேன். நிர்வாக மோசடிக் குற்றச்சாட்டில் தண்டனைக்காலம் முடிவடைந்து வெளியே வந்திருந்த அந்த பொறுப்பாளர் பூனைகள் இரண்டினை வளர்க்கத் தொடங்கியிருந்தார். அதன் நிமித்தம் எழுந்த உரையாடலில்தான் எகிப்தில் பூனைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தெய்வ அந்தஸ்து குறித்தெல்லாம் கதைத்தோம். அந்தச் சந்திப்பிற்கு பிறகு பூனைகள் மீதும் ஒரு மரியாதை. எகிப்தியர்களின் கடவுளாவது எங்களை இந்த யுத்தத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று பூனைகளைப் பார்த்து கும்பிடவெல்லாம் தோன்றியது. ஆனால் எந்தக்கடவுளாலும் காப்பாற்றமுடியாதென்கிற உண்மையை அதே பொறுப்பாளர் சொல்லி…
-
- 4 replies
- 1.3k views
-
-
விதியை வென்ற மதி! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலி…
-
- 4 replies
- 1.3k views
-
-
.கவலை இல்லாத மனிதன் ........... வாழ்கையிலே கவலை இல்லாத மனிதனை காட்ட அழைத்து செல்கிறேன். அவர் எண்பத்து மூன்று வயது வரை வாழ்ந்தது இது தான் காரணமோ ? வாசித்து பாருங்கள் . . .........இவர் ந்ம்ம பக்கத்து வீடு . அதனால் இன்னும் மறக்க முடியவில்லை ...........செல்லத்தம்பிக்கு வாய்த்த மனைவி குணமணி ........பெயருக்கேற்ற குணமான மணி தான் ,சரி ந்ம்ம கதைக்கு வருவோம் .செல்ல தம்பியர் தலை நகரிலே ஒரு வீதி கண்காணிப்பு கந்தொரிலெ வேலை பார்த்தார் மூன்று மாதமொரு முறை தன் வீடுக்கு வருவார். அழகிய அமைதியான சிறு ஊர் . .நாடு இரவில் யாழ் பட பஸ் மூலம் வீட்டு வாயில் கேற் கொழுவி சத்தம் கேட்டும் . நாய் குரைத்து பின் நட்பாக ஒலி எழுப்பும் , கிணற்றடியில் முகம் கழுவி காறித்துப்பி சத்தம்…
-
- 4 replies
- 2.1k views
-
-
மலரும் நினைவுகள்.. கதை - இளங்கவி... பகுதி 1 சயிக்கிள் மணிச் சத்தத்தில் அட இவன் வந்திட்டான்.... என்று தனக்குள் பேசிக்கொண்டு அம்மாவுடன் எரிஞ்சு விழுந்தான் ரவி.....' உனக்கு நேற்றே சொன்னனான் இண்டைக்கு காசு வேனும் முதல் முதல் வகுப்பு அந்த மனுசன் காசில் சரியான கறார் என்று சொல்லுறாங்கள் நீ நேற்றெ வாங்கி வைத்திருக்கலாம் தானே... ஏன் செய்யவில்லையென்று தாயைப் பேசிவிட்டு...' சரி அடுத்த வகுப்புக்கு காசு இல்லாட்டி நான் போக மாட்டன் பிறகு இங்கிலீஸில் ஓ லெவெல் ஃபெயிலென்றால் என்னைப் பேசவேண்டாம் சரியா...'' என்று விட்டு போட்டுவாறன் அம்மா.... என்றுவிட்டு வாசலை நோக்கி ஓடினான் ரவி..... நேரம் போட்டுது கெதியென்று ஏறு என்ற ரவியின் சினேகிதன் சந்திரன் ஒரே சயிக்கிளில் ரவி பெடல் போட்ட…
-
- 4 replies
- 802 views
-
-
ஆசை ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்…
-
- 4 replies
- 1.5k views
-
-
Thursday August 2, 2007 கௌசல்யா மட்டுவில் ஞானக்குமாரன் அவள் ...! இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ? இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும். எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும் என் கவனக் குளத்திலே அவள் ஏற்ப்படுத்தவில்லை ஆனால் பின்னொரு நாளிலே இந்தக் குளத்திலேயே சுனாமியை வரவளைத்தவள். ஆனாலும் இவள் வித்தியாசமானவள். யாராவது அவளுக்காக பரிந்து பேசினால்க் கூட அதைப்பற்றி எள்ளளவும் அக்கறையும் பட மாட்டாள.; அதே போல சினம் வந்து அவள் மீது யாராயினும் சுடு சொல் கொண்டு திட்டினாலும் கூட எக் குறையும் படமாட்டாள். என்னடா இவள் பாலுக்கும் கள்ளுக்கும் பாகுபாடு தெரியாமல் எல்லோரையும் நம்ப…
-
- 4 replies
- 1.6k views
-
-
கெளுத்தி மீனும் கெப்பர்த் தவளையும் காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்! சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. கரையோரமாக நீரில் மிதந்தபடி, தினவெடுத்த தோள்களுடன் தண்டால் எடுப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்த தவளையை, கெளுத்தி மீனொன்று எதேச்சையாகக் கண்டது. “பெரியவர் தேகாப்பியாசம் செய்கிறார் போலும்.” பேச்சுக் கொடுத்தது, கெளுத்தி. “நானென்ன மாமரத்திலிருந்து மாங்காயா பிடுங்குகிறேன்? பார்த்தாலே தெரியவில்லை?” செருக்குடன் உரத்த குரலில் உறுமியது, தவளை. “தெரியுது தெரியுது …….. பெரியவரின் புஜபல …
-
- 4 replies
- 942 views
-
-
பிறந்த மண் அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன. இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை. மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான். …
-
- 4 replies
- 1.6k views
-
-
வீட்டுப்பாடம் அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக்கத்தில் இயல்பாகத் திரும்பியது. அவளில்லாத வெற்றிடக் காட்சி முகத்திலறைந்தாற்போல் இருக்கவே ஒரு கணம் திடுக்கிட்டவன், தன்னிலை திரும்பி அந்த வெற்றிடத்தைப் பார்வையால் மெல்ல வருடிக் கொடுத்தான். அவனையறியாமல் ஒரு மெல்லிய பெருமூச்சு எழுந்தடங்கியது. “அவ இல்லாம இந்தக் குழந்தைகளை எப்படித்தான் சமாளிக்கப்போறேனோ!!” என்று தனக்குள் புலம்பியவன் குழந்தைகளின் அறையை நோக்கி நடந்தான். குழந்தைகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென்ற ஜாக்கிரதையுணர்வுடன் மெல்ல எட்டிப்பார்த்தவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது. மூத்தவள் பத்து வயதுத் தாரிணி பாதங்கள் மட்டும் வெளித்தெரிய தலை…
-
- 4 replies
- 3.7k views
-
-
முகவுரை! இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் …
-
- 4 replies
- 2.1k views
-