கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
குஞ்சுகள் இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது. "எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன். "இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன். "ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் …
-
- 5 replies
- 867 views
- 1 follower
-
-
குடை - க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது சொன்னால் அன்று குளிர். அது குளிர் என்றால் சூடு. இந்த நிழல் தோற்றம் கூட சுவையானது. மனதை மப்பும் மந்தாரமுமான ஓர் வெளிக்குள் இழுத்துச் சென்றுவிடும். மனித நடமாட்டங்களை இருள் நிறத்துள் பார்க்கும்போது ஓர் மத்திய காலச் சுவாசிப்புக்குள் நான் நுழைந்துவிடுவதுண்டு. என்றும்போல வீதியில் நிறைய அசைவுகள். திடீரென மழை பெய்யத்தொடங்கியது. "அசிங்கமான காலம்" என மழையைத் திட்டியபடி பலர் என்னைக் கடந்து …
-
- 0 replies
- 1.7k views
-
-
குட்டான் டானியல் ஜீவா விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள். நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேலோங்கும். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது . என்னுடைய வீட்டுக்காரர் இருவீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். ஸ்காபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன். அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம் பார்த்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் தன…
-
- 1 reply
- 872 views
-
-
காட்டில் புலி ஒன்று கழுதையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தது: “நீ சொல்றது பொய். புல் எப்பவுமே பச்சை நிறம்தான்.” “இல்லவே இல்லை புல்லின் நிறம் நீலம” என்றது கழுதை. விவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில்.. தீவிரமாகி, “சரி.. நாம அரண்மணைக்குப் போய் சிங்கராஜாட்ட கேட்கலாம்” என்று முடிவானது. கழுதையும் புலியும் அரண்மணைக்குள் சென்று சிங்கராஜா முன் நின்றனர். புலி பேசத்துவங்குமுன், கழுதை “ராஜா.. புல்லின் நிறம் நீலம்தானே.. இந்தப் புலி பச்சைனு சொல்லுது” என்றது. உடனே ராஜா.. “ஆமாம்.. புல்லின் நிறம் நீலம்தான். தவறாகச் சொன்ன இந்தப் புலிக்குத் தண்டனை.. ஓராண்டு காவல்” என்றது. கழுதை மகிழ்ச்சியாக வெளியேற, காவலர்கள் புலியை கைது செய்தனர். புலி பரிதாபமாக சிங்கராஜாவைப் பார்த்துக் கேட்டது. “யோவ…
-
- 7 replies
- 2.5k views
-
-
ஒரு காட்டில் வாத்து குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது. பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப் பாகவும் இருந்தன. ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. உடன் பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக் குஞ்சைக் கண்டாலே பிடிக்க வில்லை. ஒரு கட்டத்தில் அதன் தாய் வாத்தே கூட அதை வெறுத்து, அதை மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது. அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது. நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமா…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பே…
-
- 2 replies
- 667 views
-
-
1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது . இலேசான மார்கழி மாதத்து குளிரும் , பிள்ளையார் கோயிலடி மணியோசையும் , அம்மாவின் அடுப்படிச் சண்டை ஒலியும் , மாட்டுக் கொட்டிலில் நந்தினியிடம் இருந்து அண்ணை பித்தளைச் செம்பில் பால்கறக்கும் சர்..... என்ற ஒலியும் படுக்கையில் கிடந்த சிறுவனான வர்ணனுக்கு இதமாகவே இருந்தன . அப்பொழுது அவனிடம் சிறு வயதுக் குழப்படியும் கற்பனைகளுமே அதிகம் . தும்பிக்கு வாலில் கயிறு கட்டி பறக்க விடுவதும் , கோயில் கேணியடியில் பேத்தை மீன்கள் பிடிப்பதும் , தரவைக்குள் மாடுகள் மேயப் புதினம் பார்ப்பதும் அவனின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன . இன்று என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணியவாறே மீண்டும் போர்வையைக் குளிருக்கு இதமாகப் போர்த்தியவாறே படுக்கையில் குப்பறக் கவிண்டு பட…
-
- 25 replies
- 2.9k views
-
-
இது நகைச்சுவை பகுதிக்கு உரியது என்று நினைக்கிறன் எனினும் குட்டி கதை என்று..share பண்ணுபட்டிருந்ததால்..கதை பகுதியில் இணைக்கிறேன்.. from .... facebook அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத்தில் புலி ஒன்றின் அட்டகாசம் இருந்தது.என்ன செய்வது அந்த புலியைப் பிடிக்க முடியவில்லை .அமெரிக்காவில் முப்படைகளாலும் அந்தப் புலியை பிடிக்க முடியாத நிலையில் வேறு நாடுகளிடம் உதவி கோரியது லண்டன், கனடா,பிரான்ஸ் ,யப்பான் இவை யாராலும் முடியவில்லை எங்களை கேட்கலையே நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்குறோம் இதைப் பிடிக்க மாட்டோமா ? என்று ஒரு குரல் . யார் ? இலங்கை அரசுதான்............. இலங்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது இலங்கை படை காட்டுக்குள்போய் பல மாதங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
பள்ளிக்குப்; போவதற்காய் புறப்பட்டுச் சென்ற செந்தூரன் அன்றைக்கும் அழுது கொண்டே திரும்பி வந்து விட்டான். அன்று தான் வேலை விடயமாக வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்திருந்த தகப்பன் “ஏன் தம்பி பள்ளிக்கூடம் போகாமல் திரும்பிட்டாய். என்ன பிரச்சினை’’ என்று ஆச்சரியத்துடனும் கவலையுடனும் கேட்டார். “மூலைவீட்டிலை இருக்கிற அந்தக் கொழுத்த நாய் நான் பள்ளிக்கூடம் போகும் போது கத்திக் கத்திக் குலைக்குது அப்பா. இப்ப ஒரு கிழமையா நான் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போறதும் திரும்பி வாறதுமா இருக்கிறன்" கவலையுடன் சொன்னான் செந்தூரன். சின்னப்பிள்ளைக்கு விளங்கும் விதமாகத் தகப்பன் சொன்னார் “தம்பி அந்த நாய் படிக்க இல்லை எல்லோ. அதாலை ஆக்கள் படிக்கப் போறதைப் பாத்தால் அந்த நாய்க்குப…
-
- 9 replies
- 2.9k views
-
-
கிஷோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், ஆளாளுக்கு பிலுபிலு என்று பிடித்துக் கொண்டனர். “டேய், அங்கேயே நில்லு, குழாய் பக்கத்துல ஹேண்ட் வாஷ் வெச்சிருக்கேன், மொதல்ல அதைத் தடவி கைகளை நல்லாத் தேய்ச்சிக் கழுவிட்டு அப்பறம் உள்ள வா” என்றார் அம்மா. “கைகள் மட்டும் இல்லப்பா , கால்களையும் நல்லா கழுவிகிட்டு வா” என்றார் அப்பா. “உள்ள வந்ததும் மொதல்ல நீ போட்டுட்டு இருக்கற எல்லா துணிகளையும் சோப் தண்ணியில ஊறவை” என்றாள் அக்கா. ‘என்ன கொடுமை கிஷோரு இது’ என்று தனக்குத் தானே கூறி தலையில் அடித்துக் கொண்டே, “டேய், உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்றது தானே?” என்று தம்பியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர். “யார் என்ன சொன்னாலும்…
-
- 0 replies
- 375 views
-
-
இணையத்தில், ரசித்த... குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.. வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்…
-
-
- 313 replies
- 64k views
- 1 follower
-
-
-
ஈசாப் கதைகள் என்ற நூலில் இருந்து .... கழுதை வீரம் பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற குட்டிக்கதைகள்.
-
- 2 replies
- 5.6k views
-
-
குட்டிப்பூனை அயர்லாந்து – நாட்டுப்புறக் கதை முன்பொரு காலத்தில், பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு ஒன்று இருந்தது. அதில் ஒரு பெரிய கோட்டையும், கோட்டையைச் சுற்றி அழகிய மரங்களும், செடிகளும் இருந்தன. அக்கோட்டையில் ஒரு பெரிய அரக்கன் வசித்து வந்தான். அந்தக் கோட்டைக்கு நூறு வாசல்கள். ஒவ்வொரு வாசலிலும் பெரிய பெரிய நாய்களைக் காவலுக்கு வைத்திருந்தான் அந்த அரக்கன். அந்த நாய்களின் நாக்குகள் அனைத்தும் தீயினும் கொடியவை, பற்கள் ஒவ்வொன்றும் பாறையையும் உடைக்கக் கூடியவை, நகங்கள் அனைத்தும் இரும்பால் செய்த ஈட்டி போன்றவை. அந்த நாய்களிடம் மனிதர்கள் யாராவது மாட்டிவிட்டால் ஒரு எலும்புத்துண்டு கூட மிஞ்சாது. ஒரு நாள், அந்த அரக்கன் பக்கத்து நாட்டில் இருந்த ஒரு அரசருடன் சண்டையிட்டு, அ…
-
- 3 replies
- 1.4k views
-
-
அதிகாலை நேரம்.. சிறைக்கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டு கண்விழித்தான் குட்டிமணி. சிறைவாழ்க்கையில் சிறைக்கதவுகள் தட்டப்படுவதும் திட்டு விழுவதும் ஒன்றும் புதியவை அல்ல. ஆனால் அன்று அது வழமைக்கு மாறாக இருப்பதை குட்டிமணி உள்ளுணர்வால் உணர்ந்திருந்த போதிலும் வழமை என்றே எண்ணிக்கொண்டான். "அடோ.. பறத் தெமழ.. தம்ச ஒயா ஒக்கம கொட்டி நெய்த.." என்று சிங்களத்தில் திட்டிக்கொண்டு முகமூடிக் கும்பல் ஒன்று கொழும்பு வெலிகடையில் இருக்கும் சிறையின் சிறைக் கதவுகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு உட்புகுந்து கொண்டனர். "இங்க யாரடா குட்டிமணி" என்று ஒருவன் சிங்களத்தில் கத்த.. மாத்தையா.. "எயா மேக்க இன்னே.." என்று காவலுக்கு நின்ற சிங்களச் சிறைக்காவலன் காட்டிக் கொடுக்க குட்டிமணி, கொலைவெறியோடு அவனை தேட…
-
- 8 replies
- 2.9k views
-
-
குணவேறுபாடு சிறுகதை: மேலாண்மை பொன்னுச்சாமி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான். கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு. `கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்... இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்…
-
- 0 replies
- 3.9k views
-
-
குணா “அந்த பொறுக்கிப் பசங்களோட சேர்றத எப்ப நிப்பாட்டுறியோ அன்னிக்கிதான்டா நாம ஒரு வேளையாவது சாப்ட முடியும். உங்கப்பன் குடிச்சே செத்தான். நீ பள்ளிக்கூடம் போவுறதயும் நிறுத்திட்டே. எங்கனயாவது வேலைக்கிப் போயி நாலு காசு கொண்டு வந்து குடுத்து பாப்பாவையாவது படிக்க வெச்சி கரை சேர்க்கலாம்னு பாத்தா... நீ தெனம் அந்த நாய்ங்க பின்னாடியே சுத்தறே. ஏதாவது உருப்புடியாப் பண்றா...” காலையிலேயே குணாவின் அம்மா ஆரம்பித்து விட்டாள். கயிற்றுக் கட்டிலிலிருந்து பொறுமையாய் எழுந்து உட்கார யத்தனித்தபோது அவன் பின்னந்தலையில் நொங்கென்று ஒரு வெளிர் மஞ்சள் பிளாஸ்டிக் குடம் பட்டு உருண்டு ஓடியது. அவன் திரும்பவேயில்லை. நிச்சயம் அவன் தங்கை வேணிதான். ஸ்கூல் கிளம்புவதற்கு முன் அவள் இந்தச் செய்கை…
-
- 1 reply
- 1.7k views
-
-
குண்டுமணி மாலை அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது. நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன். எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கி…
-
- 2 replies
- 1.8k views
-
-
குண்டுமழைக்குள்ளிருந்து... (நினைவேட்டின் அழிக்கமுடியாத பக்கங்கள்) வழங்கியவர் - எஸ்.பி.ஜெ.கேதரன் சொந்தங்களே... இறுதி யுத்தகாலப்பகுதியில் என்னைச்சூழ நடந்தவற்றை அப்படியே மற்றவர்களும் அறியும்படி எழுதவேண்டுமென்று எனக்கிருந்த நோக்கத்தின் பயனாக நான் கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேனல்லவா.அப்படி எழுதியதுவும்,எழுதப்போவதுவும் உங்களால் பொறுமையாகப் படிக்க முடிகிறதா? அல்லது உங்களது நிதானத்தை சோதிக்கிறதா? தொடர்ந்து எழுதலாமா? எழுதியதை அப்படியே நிறுத்திவிடவா? என்ற கேள்விகள் மனதில் எழுந்ததன் விளைவாக... நான் எழுதியவற்றிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இந்தப்பதிவினூடாக உங்களுடன் பகிர்ந்து,உங்கள் கருத்தையறியலாமென்று நினைத்தேன்.இந்தப் பகுதி அடுத்த ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
குதிரை வண்டி! சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் - பிரதான நடைமேடையில் காத்திருந்தேன். இரவு, 8:15 மணிக்கு, செந்துார் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. எனக்கான பெட்டியில் ஏறி, என் இருக்கையை தேடி, பக்கவாட்டு கீழ் படுக்கையில் போய் அமர்ந்தேன். எப்போது ரயில் பயணம் என்றாலும், பக்கவாட்டு கீழ் படுக்கையை முன்பதிவு செய்வது வழக்கம். காரணம், சரிவாய் அமர்ந்து குளிர் காற்று முகத்தில் அறைய, இரவு வானத்தை ரசிப்பேன். சக பயணியரின் நடை, உடை பாவனை, பேச்சுகளை ஆராய்வேன். டிக்கெட் பரிசோதகர் வந்தார்; பயணச் சீட்டையும், ஆதார் அட்டையையும் ஒரு சேர நீட்டினேன். பயணம் செய்வோர் பட்டியலில் என் பெயரை, 'ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னன் ஒருவன் தன் அரண்மனைக் குதிரைகளைக் காவல் செய்வதற்காக சேவகன் ஒரு வனை நியமித்தான். விழித்திருந்து குதிரைகளைக் காவல் செய்யாவிடில் குதிரைகள் ஓடிச் சென்று விடும். எனவே குறித்த சேவகன் உறங்காது விழித்திருப்பதற்கு வழி தேடினான். தன் தலைவனாக இருக்கக்கூடிய மன்னனிடம், அரசே! குதிரைக் காவலின்போது உறக்கம் மேலிட்டுக் கொள்கிறது. உறங்காது விழித்திருக்க ஏதேனும் வழி சொல்லுங்கள் என்றான். இரவுவேளை, வானத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே இரு. இதுதான் பொருத்தமான வழி என்றான் மன்னன். மன்னனின் ஆலோசனைப்படி சேவகன் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே இருந்தான். விடியற்காலைப் பொழுதில் நட்சத்திரங்கள் எண்ணுவதை விடுத்து குதிரைகளைப் பார்த்த போது அங்கு எந்தக் குதிரைகளு…
-
- 1 reply
- 535 views
-
-
குந்திதேவி விஜயபத்மா மனம் நிலை கொள்ளாமல் தவித்தது குந்திக்கு! பருவத்தின் மொத்த செழுமையையும் சுமந்திருக்கும் குந்தியின் உடலை வெம்மை சூழ்ந்தது போல் உணர்ந்தாள் !பதினெட்டு வயதில், உள்ள இளம்பெண்ணுக்கு இயல்பாகவே காமத்தின் மேல் மோகம் மனதிற்குள் ரகசிய உணர்வாக தளும்பிக்கொண்டிருக்கும் ..சரி தவறு எதுவும் சரியாக புரிபடாத அப்பருவத்தில் அவளுக்கு ஒரு ஆணின் அருகாமை என்பது உலகின் மிகப்பெரிய சுகம். . தன் அந்தரங்க பணிப்பெண்ணை அழைத்து ,” ஏய் நான் செய்வது சரியா தவறா என்று புரியவில்லை .. ஆனால் என் உடல் என்னை மீறி தகிக்க துவங்கி விட்டது என்ன செய்ய ?” என்று கேட்கும்போதே குந்தியின் குரல் சன்னமாகி, யாசிக்கும் பாவனையில் அப்பாவியாக பணிப்பெண்ணை நோக்கினாள். பணிப்பெண் வாசனை தைலத்தினை கு…
-
- 12 replies
- 11.5k views
-
-
'என் ஞாபகப் பதிவிலிருந்து' என்ற தலைப்பில் 'சுதந்திரா' ஒரு பேப்பருக்கு வழங்கிய உண்மைச்சம்பவம். குப்பிளானில் இலங்கை அரஜகாத்தினால் 86ல் நடந்த உண்மைச் சம்பவம். http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_34.pdf
-
- 28 replies
- 7.6k views
-
-
குமர்ப்பிள்ளை - சிறுகதை அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை; நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து, நான் நிறைய சம்பாதித்தேன். மனைவி போன பிறகு நான்கு பிள்ளைகளும் நான்கு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. போர் முடிந்ததும் யாழ்ப்பாணத்துக்குப் போய், நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் திருத்தி எடுத்துத் தங்கினேன். இருபது வருடங்களுக்குப் பிறகு என் சொந்த ஊரைப் பார்க்கிறேன். உடையாத ஒரு வீட்டைக்கூடக் காண முடியவில்லை. கோயில்க…
-
- 1 reply
- 2.8k views
-
-
குமாரசாமியின் பகல் பொழுது பிரபஞ்சன் குமாரசாமி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தெருவில் நின்றார். அவர் ஆச்சரியப்பட்டுப் போகும்படியாக இருந்தது, அந்தப் பகல் பதினொரு மணிப் பொழுது. தெருவில் அரக்கப்பரக்க அடித்துக் கொண்டு ஓடும் மனிதர்களைக் காணோம். எல்லோரும் அலுவலகக் கூண்டுக்குள் போய் முடங்கிக்கொண்டார்கள் போலும். அதிர்ஷ்டவசமாக வானம் மந்தாரமிட்டுக் கிடந்தது. மாலை நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் மட்டும் கிடைக்கும் தண்ணீர்க் காற்று அப்போது வந்து அவரைக் குளிப்பாட்டிற்று. உலகம் ரொம்பப் புதுசாய் இருந்தது குமாரசாமிக்கு. அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையைப் போல. அடைக்கலசாமி நேற்று இறந்து விட்டாராம். சுமார் முப்பது வருஷங்களாகக் குமாரசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை பார…
-
- 2 replies
- 5.4k views
- 1 follower
-