Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. (ஏற்கெனவே 2005 மாசியில் எழுதிய சிறுகதை. இறுதியாக எழுதிய கதையும்கூட. சுனாமியின் நினைவாக மீண்டும் இங்கே..) அது ஒரு 'சொக்கலேற்' தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை 'சொக்கலேற்' வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளால் சுற்றி பெட்டிகளில் அடைக்கும் பகுதி களஞ்சியப் பகுதி விநிய…

    • 2 replies
    • 1.1k views
  2. பாடசாலை விட்டு வந்த சுஜீவன் அறையின் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார்க்கிறான். இது அண்ணன் கையெழுத்தாச்சே என்று எதிர்பார்ப்பை வளர்த்தபடி அவசர அவசரமாக கடிதத்தை பிரித்துப் படிக்கிறான். படித்தவன் கண்களில் நீர் வடிய மூலையில் சாய்கிறான். சுஜீவன் 12 வயசுச் சிறுவன். போரின் விளைவால் அனாதையாகிவிட்டவன். உறவினரோடு தங்கித்தான் வாழ்கிறான். எதிர்காலம் என்பது அவனைப் பொறுத்தவரை நிச்சயமில்லாததாகி விட்டது. சசி சுஜீவனின் அண்ணன். அவர்கள் இருவருமே குடும்பத்தில் மிஞ்சி உள்ளனர். தாயும் தகப்பனும் சில ஆண்டுகள் முன்னர், யாழ் குடாவில் கிளாலிக் கடற்பரப்பில் பயணிக்கும் போது, சிங்களக் கடற்படை பயணிகள் படகுமீது நடத்திய தாக்குதலில் படகோடு காணாமல் போனவர்கள் தான். இன்று வரை அவர்களின் கதி என்னவென்று யாருக…

  3. சின்னத்துரையரிண்ட கொம்பனிக்கு நியூ யோற்கில இருக்கிற ஒரு நாலு பில்லியன் டாலர் நிறுவனத்தில ஒரு இருபது மில்லியன் பவுண்ட்ஸ் கொன்ராட் பிடிக்கவேண்டும். சின்னத்துரையிரிண்ட பாஸ் நாலு பேரை இந்த முக்கிய வியாபர குழுவில் போட்டுவிட்டார். மற்றைய மூன்று பேரும் இந்த டீலை தவறவிட்டால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சின்னத்துரையரை முன்னுக்கு தள்ளிவிட்டார்கள். பாஸ் வேற சின்னா குழறுபடி செய்துபோடாதை என்று சொல்லி வெருட்டிப்போட்டார். நியூ யோற்க்கில சின்னத்துரையர் இறங்கியவுடனேயே கையில் ஏனோ ஒரு சிறு நடுக்கம். ரூபன்ஸ்டைன்: வெல்கம் சின்னா. சின்னா: நன்றி திருவாளர் ரூபன்ஸ்டைன். ரூபன்ஸ்டைன்: நான் நினைத்தேன், இலண்டனில் இருந்து ஒரு பெரிய குழுவே வரும் என்று. சின்னா: ஒ அதுவா…

    • 2 replies
    • 890 views
  4. ‘சாத்தானின் மைந்தன்’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. பங்கரின் குறுகிய பாதைகளில் அங்குமிங்குமாகத்தெரியும் சின்ன வெளிச்சங்கள் ஏதோ ஒரு குகையில் இருட்டில் அகப்பட்ட உணர்வையே கொடுப்பதால் அந்த அல்ஸேஸியன் நாய் என்னேரமும் ஏதோ ஒரு பயத்தில் மனமுடைந்து போயிருக்கிறது. வெளிச்சமற்ற சவப்பெட்டியில் வாழ்வது போலிருப்பதாக அந்த நாய் உணர்கிறது. வெள…

    • 2 replies
    • 1.4k views
  5. கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது பெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன் பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண…

    • 2 replies
    • 943 views
  6. Started by akootha,

    வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான். எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி! அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம். நான் குடியிருக்கும் மிச்சிகன் மாகாண…

    • 2 replies
    • 648 views
  7. Started by cawthaman,

    தவறிய முத்தங்கள் இலக்குத் தவறிய முத்தத்தால் அவள் கண்ணத்தில் உதித்த புன்சிரிப்பு இலக்கு தவறா முத்தம் தறும் இன்பபத்தை இலுத்து வைது கேள்வி கேட்ட்கிறது ************* இமைய மலை உச்சி கொண்டு சென்றது, நீ அருகில் இருந்தபோது. சிறு தோழ்விகளும் ஆழ்கடலின் இருளை காட்டியது நீ இல்லாதபோது. சேரும்போது கண்ட மகிழ்ச்சியும் பிரியும்போது கண்ட உணர்ச்சியும் வாழும்போது சாவின் காட்சி

    • 2 replies
    • 1.5k views
  8. அழகான வயல் வெளிகளும் உயர்ந்த மரங்களும் நிழல் பரப்பி நிற்க ,சிறு நீரோடைகளும் , விவசாயத்தை நம்பி வாழும் மக்களும் கொண்ட அந்தக்குக் கிராமம். சொக்கனும் அவன் மனைவியும் ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான். அவ்வூர் மக்கள் மிகுந்த முயற்சி உள்ளவர்கள். ஆடு மாடுகள் மேய்ப்பதும் , தென்னையின் ஓலைகள் பின்னி வியாபாரத்துக்கு அனுப்புவதும் , சிலர் குளங்குட்டை களில் மீன் பிடிப்பதையும் கொண்டவர்கள். சொக்கனும் நெற்பயிர்ச்செய்கையில் மிகுந்த அனுபவமும் ஆர்வமும் உள்ளவன். ஓலையால் வேயப்படட ஒரு வீடும் , சில மாடு கன்றுகளும் தான் அவனுக்கு சொந்தம். அவ்வூரில் சற்று வசதிபடைத்த ஒரு நிலச்சொந்தக் காரரிடம் நாலு வயல் காணிகளை குத்தகைக்கு எடுத்து அவனும் மனைவியும் நெற்பயிர…

  9. இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது! "முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே. அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே" இந்திய தமிழரான யுகபாரதி என்னும் கவிஞர் ராஜபாட்டை என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடலின் சரணத்தில் வரும் வரிகள் இவை. வாசிக்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வந்ததாக நண்பன் சொன்னான். எனக்கு வரவில்லை. இப்போதெல்லாம் கோபம் ஏனோ வருவதில்லை. அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய்விட்டது. சின்னவயதில் ஆகாயத்தால் வந்து எங்களுக்கு பருப்பு போட்டீர்கள். எடுத்து தின்றோம். ருசியாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏழைக்குசேலர்கள் நாங்கள். அவல் தானே தரமுடியும். எடுத்து கொள்ளுங்கள். அட ஒருவர் செய்…

    • 2 replies
    • 995 views
  10. அப்பாவைப் பார்க்கணும்! அருண் வயசு 27. சிவந்த நிறம். எடுப்பான மூக்கு. அழகான உருண்டை முகம். இன்றைய இளைய தலைமுறை இளைஞன். ஒரே ஒரு சின்ன விசயம் இடறல். இன்றைய இளைஞர்கள் விருப்பம் போல் கொஞ்சமாய் முடி உள்ள தாடி வைத்துக் கொள்ளப் பிடிக்காது. ஒரு நாள் விட்டு மறுநாள் முகச் சவரம் செய்து கொள்வான். மீசையும் அளவாய் அழகாய் இருக்கும். இவனைக் கடக்கும் எந்தப் பெண்ணும் ஓரக் கண்ணாலோ, அடிக்கண்ணாலோ பார்க்காமல் போகமாட்டார்கள். அந்த அளவிற்கு இவனுக்கு உடல்மொழி, முக வசீகரம், கண்கள் கவர்ச்சி. அம்மாவுடன் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மணி 10. 10 நேரம் வசதியாக அமைந்தது. அம்மா …

    • 2 replies
    • 1.9k views
  11. அன்ரி எங்க சேன்ஸ்பரில இருந்தோ வாறீங்கள். என்ன ஒபர் (Offer) போட்டிருக்காங்கள்...?! என்ன வழமை போல.. வாழைப்பழமும்.. ஒரேஜ்சும்.. அப்பிள் பையும் தான்.. பை வன் கெட் வன் பிறி என்று போட்டிருக்கிறாங்கள். அவ்வளவு தானா. அது சரி அன்ரி.. இன்றைக்கு இரவு சனல் 4 இல ஊரைப் பற்றி வீடியோ காட்டப் போகினமாம்.. பார்க்கல்லையோ..??! பார்த்து என்னத்த தம்பி ஆகப் போகுது. அவங்களும் காட்டிறதை காட்டிறாங்கள்.. உலகம் ஒன்றும் உருப்படியா செய்யுதுல்லையே. இப்படியே இவன் காட்ட பதிலுக்கு அவன் தான் ஒன்றைக் காட்ட..எண்டு எங்கட பிரச்சனை இழுபட்டுக் கொண்டெல்லோ போகுது. நாங்கள் அவசரப்படுறது போல.. உலகம் ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவுத்தன் என்று ஒன்றும் செய்யேலாது தானே அன்ரி. இந்தியா.. சீனா.. ரஷ்சியா என்ற…

  12. சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து ...... மாலை வெயில் இரவை நோக்கி சென்று கொண்டு இறந்தது ...என் வீட்டு முற்றத்தில் அழகான இரு குருவிகள் அருகில் அமர்ந்து .ஒன்றை ஒன்று பார்த்து கொண்டு இருந்தன .மரக்கிளை காட்டில் ஆட அவையும் ஆடிய படியே .....சற்று செல்ல ... ஒன்றையொன்று உதடுகளால் உரசிகொன்டனே ...ஒன்று சற்று பெரிதாக இருந்தது . கழுத்லே கருமையாக ...,மத்தது ..சிறிதாக சிறு புள்ளிகளுடன் ....சிறிது நேரம் செல்ல ..ஒன்று சிறு குச்சிகளை ஒவொன்றாக கொண்டு வந்து சேர்த்து ..மற்றயது அருகிலிருந்த காய்ந்த இல்லை சருகுகளை கொண்டு வந்தது .நானும் ஜன்னலோரம் பார்த்து கொண்டு இருந்தேன் ........... மாலை பசுக்கள் வந்து மாட்டு கொட்டில் அடைவதற்காக அழும் சத்த…

  13. Thu, 10 Sept. at 16:41 நெஞ்சில் பதிந்த நிலவு – சித்தி கருணானந்தராஜா டியர் கண்ணன், உங்கள் மெயில் கிடைத்தது. நான் தடுமாறிப்போய் நிற்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வருவீர்கள்? வீட்டில் ஏதோ கசமுசாவென்று அம்மாவும் அப்பாவும் பேசுகிறார்கள். எனக்குக் கலியாணம் பேசுகிறார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் இதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை. கடைசியாகத்தான் என்னிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கிடையில் நான் என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல் குறுக்கே விழுந்து எதையாவது கேட்டால் வெட…

    • 2 replies
    • 875 views
  14. தேர்!…. எஸ்.பொ. சிறப்புச் சிறுகதைகள் (8) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – எஸ்.பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும் . முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்குவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் ‘சுத்து’ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். ‘சுத்தை’ நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம்…

  15. காளிமுத்துவின் பிரஜாஉரிமை அ-செ-முருகானந்தன் இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்தவில்லை. அதனால் இலங்கையின் கௌரவப் பிரஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான். காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையல்ல, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மலைநாட்டை வாழவைத்தது. அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத்தோற்றங்கொண்டு குளு குளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னாலென்ன, மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப்பாட்டாளிகளின் உழைப்பின்மீதுதான். பிரிட்டிஷ்காரன் இலங்கையில் …

  16. எதுவரை சஞ்சிகையில் இருந்து நன்றியுடன் கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன் தோழர் சான் சடாட்சரத்தை நான் முதன்முதலாக சந்தித்த பொழுது எனக்குச் சரியாக இருபது வயதும் நாற்பத்தியெட்டு நாட்களும் சில மணித்துளிகளும் ஆகியிருந்தன. அப்பொழுது நான் விடுமுறையில் வந்திருந்தேன். நான் இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த ஒரே ஒரு விடுமுறை அதுவாகத்தானிருந்தது. எனக்கு அப்பொழுது வன்னியில் போவதற்கு ஒரு வீடும் இல்லாதிருந்தது. கதிர் தனது வீட்டிற்கு வரச் சொன்னான். அவன் திருகோணமலைப் பொடியன். அவனது வீட்டுக்காரர்கள் கன வருசத்துக்கு முதலே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவிலிருந்தனர். சரி. ஏன் அபூர்வமாகக் கிடைக்கிற விடுமுறையை …

  17. சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் by RV மேல் நவம்பர் 4, 2010 இது ஒரு மீள்பதிவு, சில அப்டேட்களுடன். என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். படித்தவை: புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் :கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம். கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிற…

    • 2 replies
    • 3.8k views
  18. துணிச்சல் நாங்கள் நான்கு பேர்... மூர்த்தி, வாசு, ராஜேந்திரன் மற்றும் நான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தினம் மாலை கடற்கரையில் சந்திப்போம். மூர்த்தி நான்கு நாட்களாக வரவில்லை. அவருடைய அண்ணன் மகன் மரணத்துக்குப் போயிருந்தவர் இன்றுதான் வந்தார்.‘‘ப்ச்... 35 வயசுதான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு படுத்ததும் இல்லை. ஆனாலும் திடீர் ஹார்ட் அட்டாக். பாவம், மூணு பொட்டப் புள்ளைங்க, பொண்டாட்டி எல்லாரையும் அம்போனு விட்டுட்டுப் போயிட்டான்!’’ - அவர் சொன்னதும் சாவின் நிதர்சனம் எங்களுக்கும் உறைக்க, நிசப்தம் நிலவியது. நான் மௌனம் கலைத்து, ‘‘ஓகே... என்னுடைய எல்லா கடமைகளும் முடிஞ்சுடுச்சு. நான் ரெடியாயிட்டேன். எ…

  19. வேலைக்காரி – சிறுகதை அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது. `உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன் `கோகிலம்` என்றாள் `கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன். `இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன். `எந்த ஊர…

    • 2 replies
    • 15.8k views
  20. சுரேன் முற்றத்தில் இருந்து சட்டி பானைகளை கழுவிக் கொண்டிருந்;தான். அந்த சட்டி பானைகள் அழகை இழந்து போயிருந்தன. கறுத்து ஊத்தை பிடித்திருந்தது. தம்பி அந்தத் தாச்சிய எடுக்குக் கொண்டு வாடா கழுவுறதுக்கு... என்று தன் தம்பியை அழைத்துக் கொண்டிருந்தான் சுரேன். இதே முற்றத்தில் வசந்தாக்கா இருந்து கொண்டு சட்டி பானைகைள அழகாக கழுவும் காட்சிகள் என் கண்ணுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தன. கிழிந்த பாதிச் சரத்தைக் கட்டிக் கொண்டு குனித்திருந்தபடி கழுவிக் கொண்டிருந்தான். அவனின் தம்பி விதுசாந்தன் கூரையில்லாத வீட்டுக்குள் இருந்தான். வசந்தாக்காவின் சொந்த இடம் பழைய முறிகண்டி. றோசா அண்ணன் அவரை திருமணம் முடிந்த காலத்தில் சிறுவனாக இருந்த என்னை தன் சைக்கிளில் ஏற்றி பழைய முறிண்டிக்கு கூட்டிக் கொண்ட…

  21. விக்டர்ஹியூகோ சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன் | கனலி http://kanali.in/wp-content/uploads/2021/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B-1-1300x769.jpg “ரஷோந்தி மூசு” என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர். நிமிர்ந்த உருவம். பழுப்பு நிறம். கல்லூரிக்கால குத்துச்சண்டை சாம்பியன். நடக்கும்போது ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிரிக்கும்போது கண்களிலொன்று இறுக மூடியும், மற்றையது அரைவா…

  22. குருவின் சதி! … தாழையடி சபாரத்தினம். September 23, 2018 சிறப்புச் சிறுகதைகள் (12) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தாழையடி க.சபாரத்தினம் எழுதிய ‘குருவின் சதி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன். திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல;…

  23. அன்பார்ந்த தமிழீழ மக்களே அருளினியன் [சற்றே பெரிய சிறுகதை இது தயவு செய்து பொறுமையாக வாசியுங்கள்] நான் சின்னப்பிள்ளையா முதலாம் ஆண்டு படிக்கேக்க எங்கட ஊருக்கு பக்கத்து ஊரில ஒரு ஐயா இருந்தவர் நெட்டையா ஒற்றை பனை மரம் போல இருக்கும் அவரோட ஒரிஜினல் பெயர் வந்து பரமேஸ்வரன்,ஆனா பரமேஸ்வரன் எண்டு சொன்னா யாருக்கும் தெரியாது.நெட்டை பரமர் எண்டோ அல்லது,நெட்டை ஐயா எண்டா யாழ்ப்பாணத்திற்கே தெரியும்,ஏன் ஐயா எண்டா எங்கட ஊரச் சுத்தி இருக்கிற பெரும்பாலான ஊருக்கு தெரியும். மனிசன் பழைய கம்யூனிசக்காரன் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை போட்டு அவர் நடந்து வாரத பார்த்தா அச் சொட்டா MGR மாதிரி இருக்கும்,எம் சி ஆர் போல மனிசனும் சும்மா தகதக எண்டு பொன் நிறத்தில மின்னுவார்,ஆளிண்ட தோற்றமே பாக்கி…

  24. கீதையடி நீயெனக்கு… (குறுநாவல்) மீண்டும் விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான் சந்திரன். சரிகைக் குஞ்சமெல்லாம் வைத்து அந்த அழைப்பிதழ் வெகு ஆடம்பரமாகவே அமைக்கப் பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தபால்காரருக்கு அழைப்பிதழ் விசித்திரமாகத் தெரியக்கூடும். அது தவறாமல் அந்த விலாசத்துக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே, தெருவோரமுள்ள தபால்பெட்டி ஒன்றிலே போடாது, வடபழனி தபால் நிலயத்துக்கு அவன் வந்திருக்கிறான். அவுஸ்திரேலிய தொடர் மாடிக் குடியிருப்புகளின் முன்னால் வீதி ஓரமாக, தபால் பெட்டிகள் புறாக் கூண்டுகள் போன்று அமைந்திருக்கும். வீதியில் வலம் வரும் விடலைகள் அதன் மினுமினுப்பில் கவர்ந்து அழைப்பிதழை உருவி எடுக்கலாம். இதனால் பாதுகாப்பாக அதனை வேறொரு தடித்த தபாலுறையில் வைத்திருந்தான். த…

  25. எதிர்ப்பு "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு மரத்தின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.