கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அவளுக்கு ஒரு "வாரிசு " .......... அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல் ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவை களின் ஆர்ப்பரிபுகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நரகத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது . செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் . ஏன் எனில் இவள் செல்லம்…
-
- 11 replies
- 1.6k views
-
-
நெஞ்சின் ஆசை நனவாக... செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும் அடங்களாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது. முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது. வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அ…
-
- 4 replies
- 1.6k views
-
-
வெறிகாரர்களும், வெறிகாறிகளும் ஒரு கதைசொல்லியும் நானும் எத்தனையோ குடிகாரர்கள், வெறிகாரர்கள், வெறிகாறிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். 1980ல் செங்கலடியில் முதலாவது அனுபவம் கிடைத்தது. அன்று அந்த நண்பன் குடித்தது பிளேன் டீ நிறத்தில் இருந்த தென்னஞ்சாராயம். ஆனால் எடுத்த வாந்தியோ ஈஸ்மன்கலர் சித்திரமாய் இருந்தது. பின்பு 1986 இல் இந்தியாவில் இரண்டு, முன்று புதிய குடிகாரர்களுடன் தினமும் இரவில் மொட்டைமாடியில் பெரும்பாடுபட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவன் எனது மடியில் படுத்திருந்தே குடித்தான். சிரித்தான். காதலில் உருகினான், அழுதான். வாந்தியெடுத்தான். நான் தினமும் அவனையும் கழுவி, மொட்டைமாடியையும் கழுவிய நாட்கள் அவை. பின்பு நோர்வே வந்தபின்னும் …
-
- 3 replies
- 1.6k views
-
-
வேட்டையில் கிடைத்தது வேறொன்று! கோடையின் வெம்மையில் தகித்த இரவும், உளைச்சலில் தவித்த மனமும் அவனை ஒரு வழியாக்கியிருந்தன. ''இன்னிக்கு ரெண்டு இடம் போகணும்ன்னு சொன்னேல்ல...'' என்றபடி காபி கோப்பையை நீட்டினாள், அம்மா. அமைதியாக அதை வாங்கிக் கொண்டான். அப்பா குளித்து முடித்து, தினசரியை வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் பார்வையின் குறிப்பை அறிந்து, ''சுமதி வரன் விஷயமா, அயனாவரம் வரை போயிட்டு அப்படியே வேலைக்கு போறேன்னு சொன்னாரு உங்கப்பா...'' என்றாள். ''வரனா... நம்ம சுமதிக்கா... அதுக்குள்ள என்னம்மா...'' என்ற…
-
- 0 replies
- 1.6k views
-
-
இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வ…
-
- 1 reply
- 1.6k views
-
-
பாஸ்வேர்டு சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்காகப…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=4]இன்று காலை தொலைபேசி அடித்தது. என் அம்மம்மா [/size] [size=4]இறந்துவிட்டாவாம்.அம்மம்மாவிற்கு தொண்ணூறு வயது.[/size] [size=4]சில நாட்களாய் கடும் சுகயீனம் உற்றிருந்தா. நேற்றும் அம்மம்மாவுடன் தொலைபேசியில் [/size] [size=4]கதைத்தேன்.என்னால தொடர்ந்து கதைக்கேலாமல் [/size] [size=4]கிடக்கு ராசா என்று தொலைபேசியை அம்மாவிட்ட [/size] [size=4]குடுத்திட்டா.இறப்புகளைக்கண்டு பழகிப்பழகி வெறும் மரமாய்ப்போன [/size] [size=4]வாழ்க்கையில் எங்கிருந்தோ கண்ணீர்த்துளிகள் வருகின்றன.[/size] [size=4]நான் பிறந்ததிலிருந்து இன்றுவரை எனக்கு அம்மம்மாவைத்தெரியும்.[/size] [size=4]நாங்கள் பிஞ்சுகளாய் இருக்கைக்க அம்மம்மா [/size] [size=4]நிலாக்காட்டி சோறு ஊட்டுவா.நிறைய கதைகள் சொல்லுவா.[/s…
-
- 20 replies
- 1.6k views
-
-
மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 8:37 AM | வகை: கதைகள், பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
சிதறல்கள் சொற்களால் கட்டிய புஸ்பக விமானம் ----- கவிதை அகிலத்தை வாழ்த்தும் ஆனந்தக் கண்ணீர் ----- மழை மனதுக்குள் பூப்பூக்கும் நந்தவனம் -----அன்பு காதலுக்கும் கனவுக்கும் பிறப்பிடம் -----விழி கண்ணுக்குப் புலப்படாத காந்தர்வ சக்தி -----கடவுள் நாதியற்றுப்போன நம்மில் ஒருவன் ----- அநாதை கதியற்றுப் போன காற்றுப் பைகள் ----- அகதி இறையுணர்வால் உடலுணர்வை வென்றவர்கள் ----- துறவி உயிரின் வருகைக்காய் உண்டான பூகம்பம் ----- பிரசவம் அணைக்க அணைக்க அத்துமீறும் காட்டுத்தீ -----ஆசை பாதிநாள் நோயாளி மீதிநாள் சுகவாசி ----- நிலவு உணர்வுகளின் கனவுத் தொழிற்சாலை ----- நினைவு அவனாக அவளாக இப்போ அதுவாக ----- பிணம் உறவுகளை உடைத்துவிடும…
-
- 5 replies
- 1.6k views
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
தலை நகரத்து வாழ்வுக்குக் காலத்தைப் பின்னோக்கி நகர்த்தல்- டி.சே தமிழன் கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு, பாடாசாலை, ரியூசன், சில உறவினர் வீடுகள் என்று ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சுழன்றபடி இருந்தது. முக்கியமாய் கொழும்பில் எனது எல்லைகளை விரிவாக்கிப் பார்க்காமையிற்கு சிறிலங்கா பொலிசும், ஆமியும் பிடித்து உள்ளே போட்டுவிடுவான் என்ற பயத்தோடு என…
-
- 0 replies
- 1.6k views
-
-
மயூரி அவளின் பெயர். பெயரே இவ்வளவு அழக இருக்கே அவள் எப்படி இருப்பாள்.அவளை பார்த்தால் யாருக்கும் புடிக்கும்.அவள் பணகாற விட்டு பொண்ணாய் இருந்தலும் நல்ல குணம் உள்ள பொண்ணு. யாரும் உதவி என்று கேட்டாள் இல்லை என்னு சொல்லமல் பண்ணுவள் அவளின் அம்மா ஒரு ஆசிரியர் அப்பா ஒரு தொழில் வத்து பெரிய அளவில் ஆக்களை வத்து நடத்தி வருகுறார்.மீனாட்சி நம்மளுக்கு ஒரு பொண்ணு மட்டும்தான் நமக்கு அப்புறம் அவள் தனிக்க போறாள் என்று அவள் அப்பா கவலை பட்டார்.மீனாட்சி நம்ம பொண்ணை வெகு விரைவில் கல்யாணம் பண்ணி குடுக்கணும்..சரியுங்க அதுக்கு என்ன மாப்பிளை பார்த்து விட்டிர்களா? மீனாட்சி நம்மளட்ட வேலை செய்யுறனே ரவி அவனை நம்ம பொண்ணுக்கு கேட்பமா?. அவன் நல்ல பெடியன்ந்தான் ஆனாள் ரவி ஒம் என்று சொல்லணுமே. நான்…
-
- 2 replies
- 1.6k views
-
-
தெளிவு பிறந்தது ................. அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடும…
-
- 9 replies
- 1.6k views
-
-
அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு துர்சகுனமாகவோ அல்லது விபத்தாகவோதான் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும், அம்மா அவரை நேசித்தாள். …
-
- 1 reply
- 1.6k views
-
-
வராத பதில்! வராத பதில்! வாஸந்தி வா க்கியத்தை முடிப்பதற்கு முன் அப்பாவின் உயிர் போய்விட்டது. ‘ஓ’ என்கிற அட்சரத்துக்குக் குவிந்தாற் போல் உதடுகள் வட்டமாக நிற்க, கண்கள் அவரது சுபாவமான உத்வேகத்துடன் விரிந்திருக்க, நாடக ஒத்திகையில் இயக்குநர் ‘யீக்ஷீமீமீக்ஷ்மீ!’ என்ற அதட்டலுக்குப் பணிந்து உறைந்தது போல முகம் உறைந்தது. முதலில், அது ஏதோ வேடிக்கை போல் இருந்தது அவளுக்கு. அது ஒ…
-
- 0 replies
- 1.6k views
-
-
நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலால் வளர்ந்து நிற்கும் மரத்தை ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொப்பை வளைக்கும் போது யாழ்ப்பாணத்து காலை பனி தலையில் கொட்டும்….. ப்ச்ச்… ஒரு சின்ன ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவை புடுங்கி போட்டுக்கொண்டு அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகை பூக்கள்? அம்மா இந்த செம்பரத்தை “ஒட்டில்” FRCS செய்தவர்! அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஓடித்து போட்டுக்கொண்டு; தோட்டத்தில் நின்ற கனகாம்பரம், ரோசா, கடதாசிப்பூவில் கை வைப்பதில்லை. பேப்பர் பூ எல்லாம் சாமிக்கு வைக்க கூடாதாம். கனகாம்பரம் கலியாண வீடு, சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்கு வைக்க தேவை. ரோசா விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்…
-
- 6 replies
- 1.6k views
-
-
ரொறொன்ரோ பெண் - அ.முத்துலிங்கம் முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம். கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.) ‘நான் வசிக்கும் சிறிய வீடு. ஒரு முற்றமும், பூட்டக்கூடிய சாமான் அறையும், வெளியே சமைக்கவும் குளிக்கவும் வசதிகள் கொண்டது. வெள்ளையடித்த உள் சுவருக்கு மேல் சாய்ந்து கிடக்கும் கூரை மழைத் தண்ணீரை முற்றத்தில் கொட்டும். வீட்டின் முழுப்பரப்பும் 18 X 30 அடி இருக்கலாம். தெற்குப…
-
- 1 reply
- 1.6k views
-
-
குசலாம்பாள் என்னும் செயின் புளொக் யதார்த்தன் Yulanie ஆயிரத்தித்தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி, “நடுவில்” என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி, கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ எப்போதும் நிறையப்பக்கங்களைச் செலவழித்து வெய்யோன் எழுதிக்குவிப்பதை அம்மான் …
-
- 1 reply
- 1.6k views
-
-
வாங்கிய பொருட்கள் யாவும் சரியாக வாங்கினேனா? என மீண்டும் சரிபார்த்துக் கொண்ட சிவா பொருட்கள் எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான். நாளைய பொழுதும் விடிந்தால் முதலாளியின் மகள் ராதாவின் நிச்சயதார்த்தம். அந்த வீடே குதூகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதலாளியின் இரண்டு ஆண் பிள்ளைகளும் தங்கை ராதாவின் நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள். பெண் பிள்ளை இல்லையென்று பல வருடங்கள் தவமாய்த் தவமிருந்து அதன் பின் பிறந்தவளே ராதா. ம் அந்த வீட்டு குலவிளக்கான அழகும், அறிவுமுடைய ராதாவின் நிச்சயதார்த்தம் என்றால் சும்மாவா என்ன? ம் ஒரே கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டில் மட்டுமா கொண்டாட்டம்? இல்லை இல்லை. …
-
- 2 replies
- 1.6k views
-
-
கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை : நவின். எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! …
-
- 3 replies
- 1.6k views
-
-
-
புகைகளை கக்கி கொண்டு உறுமியபடி இருந்தன அந்த உந்துருளிகள். ஓட்டிகள் அனைவரின் முகத்திலும் வெல்லவேண்டும் என்ற வெறி அப்பட்டமாக தெரிந்தன. விசிலை வாயிலே வைத்தபடி அரவிந்தன் வாத்தி எந்த நேரமும் ஊதுவதற்கான ஆயத்த நிலையில் இருந்தார். இயக்கச்சி சந்தியில் ஆரம்பம். முடிவு கோடு பரந்தன் உப்பு உற்பத்தி நிலையம். எப்படியும் ரகுவை வென்றிட வேண்டும் இது மட்டும் தான் குகனின் மனதில் ஒலித்த வார்த்தைகள். எல்லாரிடமும் ஒரே மாதிரியான உந்துருளிகள். அன்றைய வன்னி இளைஞர்களின் கனவு உந்துருளிகள். குகன் மறுபடியும் வேக அழுத்தி, தடை அழுத்திகளை சரிபார்த்து கொண்டான். 1 ... 2 ... 3 ... ஊ ஊ ..ஊ .. வாத்தியின் விசில் சத்தம் கேட்டது தான் தாமதம்..புகை மட்டும் சூழ்ந்த அந்த …
-
- 9 replies
- 1.5k views
-
-
நான் கொஞ்சம் படபடப்பாக படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியது. ´´ஏன்ரா ஓடுறாய்´´ என வழியில் கேட்ட சுதனண்ணைக்கு, கடைசி விரலைத் தூக்கிக் காட்டி விட்டு வந்ததை நினைக்க சிரிப்பா இருந்தது. பள்ளிக் குடத்தில் இருக்கும் போதே சுற்றிவர நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது. அப்போதிருந்தே துருதுருவென இருந்தேன். அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்ப்பதை மனோன்மணி ரீச்சர் (டீச்சர்) வேறு கண்டு விட்டா. ´´என்ன பிரச்சனை உனக்கு.. அடிவாங்கப் போறியோ´´ ´´இல்லை ரீச்சர் வெளியில ஆமிக் காரர்´´ ´´அதுக்கென்ன.. உன்னையோ தேடி வந்தவங்கள்? பேசாமல் படத்தைக் கீறு பாப்பம்´´ நான் கடற்கரை என்று தலைப்பிட்டு விட்டு கீழே கொஞ்சம் நீலம், மேலே கொஞ்சம், நீலம் நடுவில் மண்ணிறமென …
-
- 6 replies
- 1.5k views
-
-
அந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன். தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார். வரப்போகும் பொழுதுகள் மனக்கண்ணிலே வந்து நின்று பயமுறுத்த, எதுவுமே சிந்திக்கத் திராணியற்றவராய் மூளையே விறைத்து மரத்தாற்போன்ற உணர்வுடன் முன்னால் நீண்டு விரிந்துசெல்லும் வீதியைப் பார்த்தார். வாகனங்கள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. வீதியின் அருகால் பரபரப்பாகச் செல்லும் மக்கள் கூட்டம் கைகளில் பொருட்கள் நிறைந்த 'பிளாஸ்ரிக்' பைகள…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_5401.html லொக் லொக் என்று சதா இருமியபடி கொண்டிருந்தது உந்த அப்பம்மா. சாடையாய் வந்த தூக்கத்தை கெடுத்து போட்டுது என்று மனதிலை பொருமி என்று படுக்க . அதைவிட வெளியே வேலிக்கு போட்ட சொத்தி பூவரசு மரத்திலிருந்து அண்ட காகம் ஒன்று தலையை குத்தி குத்தி கரைந்து கொண்டிருந்தது. வராத ஆக்கள் தூரத்திலிருந்து வர போயினோமோ .அல்லாட்டி மண்டையை போட்டினமோ.காகத்தின் பாசையை தெரிந்த மாதிரி மொழி பெயர்த்து கிழவி தன் பாட்டில் புறு புறுத்து கொண்டிருந்தது. வாசலில் சைக்கிள் மணி அடிக்க தந்தியோடாய் மோனை திடுக்கிட்டு பட படக்க. இல்லை இவன் மூர்த்தியணை என்று கொண்டு படலைக்கு போக அவன் பட படத்துக்கொண்டு பேய் அறைஞ்சவன் மாதிரி நின்று
-
- 1 reply
- 1.5k views
-