கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
என் தந்தை ஒரு போஜனப்பிரியர், அதனால் எனக்கு காதல் தோல்விகள் என்றால் உங்களுக்கு சிரிப்பாய்த்தான் இருக்கும். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் ரெங்க விலாஸ் என்னும் உணவகம் இருந்தது. அங்கே சாம்பார் வடை பேமஸ். இரண்டு சாம்பார் வடை வாங்கினால் ஒரு லிட்டர் சாம்பாரை வாளியில் ஊற்றி தருவார்கள். வாரத்தில் மூன்று நாட்களாவது அந்த கடை சாம்பார் வேண்டும் என் தந்தைக்கு. அது வந்தவுடன் அவர் இட்லி சாப்பிட ஆரம்பிப்பார். துணைக்கு அப்பொழுது அரைத்த தேங்காய் சட்னி, இரவு மீதமான தக்காளி கார சட்னி, எப்பொழுதும் வீட்டில் இருக்கும் எண்ணெய் மிளகாய்ப் பொடி.இரவுகளில் ராஜு ஆப்பக்கடையிலோ, குதிரை மார்க் புரோட்டா ஸ்டாலிலோ வாங்கப்படும் வீச்சு புரோட்டா, வெங்காய கறி. நான் வாங்கி வந்த உடன் என் தாயார் ஆம்லேட் சுட ஆரம்பிப்…
-
- 2 replies
- 1.5k views
-
-
அவனும் அனுபவித்தான் நான் சொல்லும் இந்த கதை உன்மை முல்லை தீவு மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியா அகதிமுகாமில் உள்ள ஒரு சகோதரியின் இந்த கதை அண்மையில் சுடர் ஒளி பத்திரிகையில் வெளி வந்தது அது அவர்தான் எழுதியது அது உங்களுக்காக என்ன சண்முகம் பிள்ளைக்கு கல்யாணம் போல .ஓம் சுந்தரன் ஞானவிக்கு கல்யாணம் கட்டி கொடுக்க போறம் மப்பிள்ளை நம்ம சிவனின் மகன் தான். யாரு சிவாவா . ஓம் அவனும் நல்ல பையன் தான் நல்ல படுபாட்டுக்காரன் எல்லா வேலையும் செய்வான் நல்லா படித்திருக்கிறான் ஆனால் வேலைதான் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு சுந்தரத்தார் வீட்டுக்கு வந்தார் எங்க ஞானவி என்று மனைவியை கேட்ட அவள் இப்பதான் குளிக்க போகிறாள் .சரி போன விசயம என்ன ஆச்சு என கேட்க சண்முகத்தாரும் எந்த …
-
- 5 replies
- 1.5k views
-
-
குயில் கூவும் நகரம்... _தர்மினி_ அ[size=4]ந்த வயோதிபப் பெண் சில மாதங்களின் முன் இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பிள்ளைகள் எல்லோரும் அகதிகளாக வந்த பின் அவர் தனித்திருக்க முடியாமல் இலண்டனுக்கு வந்து வாழ்பவர்.இப்போது நாட்டில் சண்டையில்லை. போக்குவரத்துப் பாதை பிரச்சனையில்லை.பலரும் விடுமுறைக் காலங்களைக் கழித்துவிட்டு வருகிறார்கள்.ஊரையும் வீட்டையும் சகோதரிகளையும் பார்த்துவிட்டு வருவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த மனிசி பல ஆண்டுகளிற்குப் பிறகு வந்திறங்கினார் யாழ்ப்பாணம்.[/size] [size=4]‘லண்டனிலை பூட்டின சூட்கேஸை யாழ்ப்பாணத்தில அக்கா வீட்டில போய்த்தான் திறந்தனான்’ என அதை ஒரு ஆச்சரியமாக நினைத்தார்.முன்னரெல்லாம் கொண்டு போற பொருட்களைக் கொட்டிக்…
-
- 10 replies
- 1.5k views
-
-
தம்பியவ.... கோட்டைப் பக்கம் வெடி கேட்குது.. ஆமிக்காரன் வெளிக்கிடுறான் போல.. பங்கருக்குள்ள ஓடுங்கோ.... செல்லடிக்கப் போறாங்கள். அம்மாவின் குரல்.. யாழ் மணிக்கூட்டு வீதியில்.. எங்கள் வீட்டு வளவினில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை விரட்ட.. நாங்களோ.. வழமை போல.. அதைப் புறக்கணிக்கிறம். கிட்டு மாமா இருக்கும் வரை ஆமியாவது வாறதாவது. ஷெல்.. ஆஸ்பத்திரி தாண்டி வராது. கிட்டு மாமா.. செஞ்சிலுவையோட கதைச்சிருப்பார். சும்மா இருங்கோம்மா. பதிலுக்கு நானும் நண்பர்களும் சேர்ந்து.. குரல் கொடுத்திட்டு.. அடுத்த ஓவரைப் போட நான் தயாராக... வாகனங்கள் எங்கள் வீதியால ஓடும் சத்தம் கேட்டிச்சுது. ஓடிப் போய் கேற்றடில நின்று பார்த்தால்.. இலை குழையெல்லாம் கட்டிக் கொண்டு.. 50 கலிபர் பூட்டின …
-
- 6 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன் இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான். “எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு. “அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.” “அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வேட்டையன்– சித்தாந்தன் ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’ இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு. காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். ஆனால் சில நேரங்களில் இந்த வழக்கத்தை மறுதலிப்பது போலவும் அமைந்து விடுவதுண்டு. இரவு முழுக்கவும் தன்னுடைய பண்ணையின் கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் படுத்தான். இரண்டோ அல்லது ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
சுலாப் இன்டர்நேஷனல் - பாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: செந்தில் சின்னாரு, தன் அடிவயிறு கனத்திருந்ததை உணர்ந்தாலும், தூக்கத்தில் இருந்து விடுபட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் புரண்டு படுத்தான். ஆனாலும், அடிவயிற்றின் அலப்பறை தூக்கத்தைக் கலைத்துப்போட்டது. இனியும் தாமதித்தால், டவுசரிலேயே பேர்வாதி முடிந்துவிடும் அபாயத்தை உணர்ந்தவனாக ஓட்டம் பிடித்தான். விவரம் தெரிந்ததில் இருந்து சின்னாருக்கு எப்போது எல்லாம் அடிவயிறு கனத்துவிடுகிறதோ, அப்போது எல்லாம் இப்படித்தான் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கும் சுலாப் இன்டர்நேஷனலுக்கும் டவுசரைப் பிடித்தபடி ஓடுவான். இப்போதும் அப்படித்தான். வீட்டில் இருந்து இருநூறு அடி தூரத்தில் பொதுக் கழிப்பிடம் இருக்கிறது. தன் ஜோட்டுக்காரன்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
கனா கண்டேனடி..! - சிறுகதை ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஹாசிப்கான் அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் 'பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் கூட்டமாக வந்து பொரிகளைத் தின்னும் காட்சி அற்புதமாக இருந்தது. 'உன் பேர் என்ன?' என்றபடி ஜெமினி பொரி உருண்டை ஒன்றை என்னிடம் நீட்டுகிறார். நான், ''ஸ்ரீராம்' என்றபடி வேகமாகப் பொரி உருண்டையை வாங்கி வாயில் வைத்துக் கடிக்கிறேன். ''நீ திங்கிறதுக்கு இல்லை. மீனுக்குப் போட…
-
- 0 replies
- 1.5k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பால் ``இந்தப் பால்காரன், `பசும்பால்’னு சொல்லி எந்தப் பாலைக் கொடுக்கிறானோ தெரியலை?’’ என்று சொல்லிக்கொண்டே தன் குழந்தையின் ஃபீடிங் பாட்டிலில் பாலை ஊற்றினாள்... சமீபத்தில் அம்மாவாகியிருந்த கோமதி! - நெய்வேலி தேன்ராஜா படிந்த பேரம் நாற்பதில் இருந்து ஐம்பது தொகுதிகளாக உயர்த்தியும் படியாத கூட்டணி பேரம், நான்கே பெட்டிகளில் படிந்தது! - அஜித் ஸ்டார்நைட் ``ரஷ்யாவுல ஒரு பாட்டுக்கு நயனோடு டான்ஸ் ஆடுறேன்” - சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் மனைவியிடம், ஹீரோவாக நடிக்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காமல் குரூப் டான்ஸரான கோவிந்த்! - பெ.பாண்டியன் முள் ``கால்ல சின்னதா ஒரு முள்ளு கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
அவள் என் பார்வையில் பட்டிருக்ககூடாது. ச்சே. ஏன் அவள் என் பார்வையில் விழுந்தாள் என்பது இன்றுமட்டும் புதிராகவே உள்ளது. அவளை காண்பதற்கு முன்னர் அவளை விட அழகான எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறேன். ஏன் கதைத்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவள் என்னை என்னவோ செய்தாள். திரும்ப திரும்ப பார்க்க வைத்தாள். காயத்திரி.. பெயரை போலவே அழகானவள். வட்ட முகம் எடுப்பான உயரம். சுடிதாரில் மிக அழகாக தெரிந்தாள். முதல் சந்திப்பே பல்கலைகல்லூரியில், எனக்கு கனிஷ்ட மாணவியாக... பகிடிவதையில், கம்பன் சொன்ன ராவணன் நிராயுதபாணியாக நின்றதை போல, எனக்கு முன்னால் நிலத்தை பெருவிரலால் கீறியபடி, தமிழ் பெண்களுக்கே உரித்தான நாணத்துடன்... நான் பாதி குடித்துவிட்டு கொடுத்த அந்த தேநீரை பருகவேண்டும் இத…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஜெயகாந்தனின் இந்த கதையை கன காலத்துக்கு முந்தி வாசித்து இருக்கிறேன் ..தற்செயலாக இப்ப வாசிக்க கிடைத்தது ...இப்பவும் நல்லாய் தான் இருக்குது வாசிக்கும் பொழுது அவர் கதை சொல்லும் பாணி ...அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் . நீங்களும் வாசி்த்து பாருங்களேன் நான் ஒண்ணும் 'லூஸ்' இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா... எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அதான் ஸார்... நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்... பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கி…
-
- 0 replies
- 1.5k views
-
-
பாதி – ஷக்திக சத்குமார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் பிக்கு ஹல்வெல்ல கஸ்ஸப ஹிமி, கஸான் பலிஹவடனவாக மாறியது சமூக வாழ்க்கையின் மீதிருந்த பற்றினால் அல்ல. தவிரவும் அவருக்கு துறவு வாழ்க்கையிலும் பற்றேதுமிருக்கவில்லை. துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பிறகு தொடர்ந்தும் அப் பல்கலைக்கழகத்தின் பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருக்க அவர் விரும்பவில்லை. பல்கலைக்கழகத்துக்குள் பிக்குவாகப் பிரவேசித்து துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பலரும் அப்போதும் கூட பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருந்தார்கள். பிக்கு தம்மஸ்ஸர ஹிமி, கஸான் அருகில் வரும்போது அவர் பழைய குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். “தப்பிச்சுட்டான்… தப்பிச்சுட்டான்… கஸான் என்றால் தப்பிச்சுட்டான். நீ விடுதியில் தொட…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஓர் ஊரின் கதை ஊருல தெருக்கள் இருக்கும். ஆனா, ஒரு தெருவே ஊராய் இருக்குமா? இருக்கே! நம்பிக்குறிச்சிங்கிற ஊர், அப்படி ஒரு தெருதானே! ஒரு காலத்துல ஓகோன்னு இருந்த ஊர். இப்ப, வெற்று அடையாளங்களோட, கட்டட மண்ணும் குட்டிச் சுவருமாக் கிடக்கு. சோலைவனம் போலப் பூத்துச் செழிச்சிருந்த ஊராக்கும் இது! இப்ப கரடு தட்டிப் போன காட்டுப் பகுதி மாதிரில்ல காணப்படுது. ஓ! எப்பேர்ப்பட்ட மனுசங்க நடமாடின மண் இது! இங்க மொதல் வீடே தபால் பண்ணைத் தாத்தா வீடுதான். கறுப்பா இருந்தாலும் கம்பீரமா, லெட்சணமா இருப்பாங்க. வெள்ளை மீசையைக் கெத்தா முறுக்கி விட்ருப்பாக. அவுக ஊர்வழி போறப்ப தூள் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஃபர்ஸ்ட் ரேங்க்- சிறுகதை சிறுகதை: மாதவன் ஓவியங்கள்: செந்தில் விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின் போன்தான் அழைத்தது. எடுத்தார். ``யாரு?’’ ``எப்போ?’’ ``சரி இந்தா வரேன்.’’ போன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்” என்று பெருமூச்சு விட்டார். ``ஐயோ! எப்போ?’’ பதறினாள் அம்மா. ``காலைல மூணு மணிக்காம். வேட்டியை எடு, கிளம்பணும்.’’ வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை. மார்கழி மாதக் குளிர்காற்று காதுக்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் ஐயர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர். பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
நானே கொல்லப்பட்டேன்!(நிமிடக்கதை) மட்டக்களப்பு நகரமே அன்றுகாலைப் பொழுதைப் பறிகொடுத்திருந்தது. காந்தியின் சிலை வெண்துணியால் மறைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் கட்சித்தலைவர் பேச்சாளர் என அனைவரையும் நித்திரைத் தூக்கத்திலே இருந்து எழுப்பிக்கொண்டுவந்ததுபோல் தோன்றியது. காந்தி இன்றுதான் இறந்தாரோ என்ற ஐயம் ஏற்படுமளவில் அவர்களது முகம் சோகமே உருவாகக் காட்சியளித்தது. அவர்களின் முன்னால் சில காவல்துறையினரும் இந்தியத்துணைத்தூதர் பாதுகாப்பு அதிகாரிகளென நின்றுகொண்டிருந்தனர். காவல்துறை ஆய்வாளர்களால், பலமணிநேரமாகியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை காந்தியின்கண்ணிலிருந்து வழியும் குருதிக்கான கரணியத்தை. மோப்பநாயொன்று குருதிபடிந்த இலையொன்றோடு வந்தது.எந்த மரத்து இலை என்று பார்த்த எங்…
-
- 8 replies
- 1.5k views
-
-
ஆமையும் எருதும் அல்லது நீருக்கும் நிலத்துக்கும் நாமே ராசா வ. ஐ. ச. ஜெயபாலன் முன்னொரு காலத்தில் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் தேவதைகள் வாழும் காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு ஆமையும் எருதும் தங்கள் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தன. ஆமை தேவதைகளுக்குப் படகு ஓட்டியது . எருது தேவதைகளுக்கு வண்டி ஓட்டியது. ஆமையும் எருதும் ஏனென்று காரணம் தெரியாமல் ஒன்றோடு ஒன்று பகமை பாராட்டுவதைப் பார்த்து தேவதைகள் ஆச்சரியப் பட்டன. அந்த ஆமையிடன் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதேபோல எருதும் ஒரு பெரிய புத்தகத்தை வைத்திருந்தது. ஆமை தனது பரம்பரை புத்தகமே உலகத்திலேயே பழமையானதும் உண்மையானதும் என்று காண்கிற தேவதைகளிடம் எல்லாம் சொல்லும். அதனால் உலகத்தில் ஆமைகள்தான் உசத்தி என்று அந்த ஆமை சொல்லிவந்தது. இ…
-
- 3 replies
- 1.5k views
-
-
என் அரூயிர் நண்பனுக்கு, நான் நலம். உன் நலம அறிய ஆவல் இருந்தாலும், இங்க நடக்கிற இளுபடியாளால், நீண்ட நாட்களாக கடிதம் போட முடியவில்லை. மன்னிக்கவும். வளத்த கடா எல்லாம் முட்ட வருகுது. இரத்தத்தில் சீனியும், கொளுப்பும் வேண்டா விருத்தாளிகளாக வந்து குடியெறிவிட்டுது. சமைக்கிற பஞ்சியில உங்களுக்கு சுகர், உந்த பாணை போட்டு சாப்பிடுங்கோ, என்ற குரல் சுப்பிரபாதம் ஆகிவிட்டது. துரித உணவுகள், அன்றடா அத்தியவாசியம் ஆகிவிட்டது. அவசர வாழ்க்கையில், பிள்ளைகளின் குறும் செய்தி மட்டுமே கிடைக்கிறது. எனிந்த வாழ்க்கை என்று எண்ணும் போதெல்லாம், நாமடித்த லூட்டிகள் கொஞ்சம் மனசை பலமூட்டுகிறது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஜயர் வீட்டுக்கு புது மீன் காரனை அனுப்பினோம். அம்மா மீன் கொண்டராட்டாம், நான் கா…
-
- 1 reply
- 1.5k views
-
-
கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது. விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந…
-
- 0 replies
- 1.5k views
-
-
சீனிவாசன் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்! அவர் கடையில்... தொட்டுக் கொள்ள சீனி கொடுப்பார்கள்! . ஆனால் சீனி விலை உயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை! . ஒரு போர்டு எழுதி போட்டார்! "இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது" . கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்! சாப்பிட போனார் ! முதலில் ஒரு தோசை வாங்கினார்! . இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்! சீனி கேட்டார்! . முதலாளி சொன்னார்! சீனி கிடையாது! . கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் " முதல் தோசைக்கு மட்டும் கிடையாது! . இது இரண்டாவது தோசை! முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார்! . அடுத்த நாள் போர்டு ஐ மாற்றி எழுதினார் "இனி மேல் தோசைக்கு சீனி கிடை…
-
- 0 replies
- 1.5k views
-
-
F இயக்கம் நான் இந்தக் கதைக்கு முதலில் ‘X இயக்கம்’ என்றுதான் பெயரிட்டிருந்தேன். இந்தக் கதை இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைப் பற்றியது. இவர்கள் இருவருமே பல வருடங்களிற்கு முன்பே அரசியல் அகதிகளாக அய்ரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களா போன்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது. கதையின் எந்த இடத்திலும் இவர்கள் எந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என வாசகர்கள் ஊகம் செய்யப் பிடிகொடுக்காதவாறு கதையை நகர்த்திச் செல்வதும் அதைக் கதை முடிந்த பின்பும் காப்பாற்றுவதும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் முக்கியமான உத்திகள். எனவே அறியப்படாத ஒன்றை குறிப்பதற்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
தங்கள் குடிலுக்கு.. அருகில் வந்தவிட்ட பொன் மானை கண்டுவிட்டாள் சீதா. அதன் வழுவழுப்பான தசைப்பிடிப்பான ஹன்சிகா போன்ற மொழுமொழு உடலும் வெண் புள்ளிகள் போட்ட அழகு ரோமமும் அவளைக் கவர்ந்துவிட.... தன் அடிமையான கணவனை நோக்கி.. டேய் அந்தப் பொன் மானைப் பிடித்து வந்து வெட்டி.. நல்லா உப்பும் மிளகாய்த் தூளும் போட்டு.. பொரியல் செய்து தா. மிச்சத்தை அவிச்சு வத்தல் போடு.. இங்கு தங்கி இருக்கும் காலம் வரை நான் அதைச் சுவைத்துச் சாப்பிட வேண்டும்.. என்று கட்டளை இட்டாள்..! சீதாவின் குரலைக் கேட்ட தொடை நடுங்கிக் கணவன் இராமன்.. குரலால் குழைந்தபடி.. ஓமம்மா.. இந்தா முடிச்சிடுறன். நீங்க சொன்னா.. எள்ளென்றால் நான் எண்ணெய்யா நிப்பன். ஏய் ஏய்.. வீண் பேச்சு வேணாம். நீ.. எள்ளாவும் நிற்க வேணாம்.. எண்…
-
- 1 reply
- 1.5k views
-
-
'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது. 'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும். இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது. கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில்…
-
-
- 3 replies
- 1.5k views
-
-
"அது ஒரு வசந்த காலம் .............". துள்ளித்திரிந்த பருவம் ...கொஞ்சம் அடங்கி ..... பத்தாம் வகுப்பு இறுதி வருட சோதினைக்கு தயார் படுத்தும் காலம். பாட சாலை முடிந்து (துஷன்) பிரத்தியேக வகுப்புக்கு போவதுண்டு . முதல் தடவை ஏழு பாடம் ,கணிதம் தவிர சித்தியடைந்தேன் .கணிதம் கோட்டை விட்டதால் ,வீட்டில் அனுமதி பெற்று , அயல் கிராமத்துக்கு படிக்க போவதுண்டு . காலை ஏழு மணிக்கு ஒரு வகுப்பு... .மாலையில் எட்டரைக்கு பாடசாலை ..பின் ஐந்து மணிக்கு மறு துஷன் வகுப்பு . இப்படியாக பாடசாலையும் டுஷன் வகுப்புமாக இருந்த காலம் . .காலை பரபரப்பில் ஒரு பாண் துண்டு கடியுடன் போவதுண்டு . மதிய " சாப்பாடு " அமுதம் போல் இருக்கும் . நான் மாமிச பிரியன் (சை…
-
- 1 reply
- 1.5k views
-
-
கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம் ``சார், சொல்லச் சொல்லக் கேட்காம வெளியே அருணகிரி உங்க காரைக் கழுவிக்கிட்டு இருக்காரு. என்ன செய்றதுனு தெரியலை’’ என்றான் உதவி இயக்குநர் ஸ்ரீ. மகேந்திர குமாருக்கு ஆத்திரமாக வந்தது. ``அந்த ஆள் என்ன எழவுக்கு இங்கே வந்து உசுரை எடுக்கிறான். அவனை யாரு கார் கழுவச் சொன்னது?’’ எனக் கத்தினான். ``ஆளு செம போதை. சட்டைகூடப் போடலை. வெறும் பனியனோட வந்திருக்கார்’’ என்றான் சேகர். ``இருக்கிற இம்சை போதாதுனு இது வேறயா?’’ - சலிப்புடன் அறைக் கதவைத் திறந்து படி இறங்கி கிழே வரத் தொடங்கினான் மகேந்திர குமார். அவன் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து ஆறு வெற்றிப் படங்களைத் தந்த உச்ச இயக்குநர். கீழே அவனது காரைத் துடைத்துக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
கச்சாமி கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எ…
-
- 8 replies
- 1.5k views
-