கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்டாங்களே! அதனா…
-
- 1 reply
- 1.6k views
-
-
அலுவலக வேலையெல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் வீடு திரும்பிய தனா என விளிக்கப்படும்..தனசேகரனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். அவனால் நம்பவே முடியவில்லை..இன்முகங்கொண்டு வாசலிலே காத்திருப்பது வேறு யாருமல்ல..அவனுடைய அழகு மனைவி அருந்ததியேதான். "ஏன்பா இவ்வளவு நேரம்.." கேட்டுக்கொண்டே அவன் கையிலிருந்த சூட்கேசை வாங்கிக்கொண்டு..உரசி உரசி நடக்க தனாக்கு சோர்வெல்லாம் பஞ்சுபஞ்சாய் பறந்து போனது. வீட்டினுள் வந்து.. இராமயணம் படித்துக்கொண்டிருந்த தாயி;டம் குசலம் விசாரித்து..அவரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மாடிப்படி ஏறினான். அருந்ததி அவனுக்கு முன்னால் படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள்.இவ்வளவு அழகானவள்... அவன் மாமா மகள் என்பதால்தான் திருமண…
-
- 28 replies
- 4.7k views
-
-
சொர்க்கத்தின் பாவிகள் -நிரூபா நாகலிங்கம் உயிரைக் கையில் ஏந்தியவாறு மண்டியிட்டிருந்தான் அந்தோணியோ. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் அளவிடமுடியாத உயரத்திலும் அகலத்திலும் எழுந்து நின்றது அந்த சுவர். அவன் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்த சுவரைப் பார்த்தவாறு இருந்தனர். அந்த சுவருக்கு ஒரு கதவும் இருந்தது. அது எப்போது திறக்குமென்றுதான் அவர்கள் காத்திருந்தனர். அந்தோணியோ வருடக் கணக்கில் இங்கு காத்திருக்கின்றான். சுவருக்கு மறுபக்கம் சொர்க்க பூமி இருக்கின்றதென்று அந்தோணியோவும் பல ஏழை மக்களும், யுத்தநாடுகளின் பல அப்பாவி மக்களும் நம்பிக்கொண்டிருந்தனர். அந்தோனியோவைப்பொறுத்தவரையில் அவன் தாங்கிப் பிடித்திருக்கும் அவன் நேசிக்கும் உ…
-
- 0 replies
- 772 views
-
-
சொர்க்கமும், நரகமும்! காலேஜுக்கு கிளம்பிய மகனுக்கு மதிய சாப்பாட்டை கட்டிக் கொடுத்தாள், சாரதா. பின், கணவனுக்கு கேரியரிலும், மாமியாருக்கு டேபிளில், ஹாட் - பேக்கிலும் சாப்பாடு எடுத்து வைத்து, குளித்து முடித்து, காட்டன் புடவையில் எளிமையாக வந்தவளைப் பார்த்து, ''என்ன... மகாராணி வெளியே கிளம்பியாச்சா...'' என்றான், கணவன், மாதவன். ''என் பிரண்டோட மாமியாருக்கு ஆபரேஷன் ஆகி, ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அவ கணவர், துபாயில இருக்குறதால, உதவிக்கு ஆள் இல்ல. ஆஸ்பத்திரியில் துணைக்கு இருக்க கூப்பிட்டா; சாயந்திரம், நீங்க ஆபீஸ் முடிஞ்சு வர்றதுக்குள் வந்துடுவேன்,'' என்றாள். ''முதல்ல, அவளோட மாமியாரை பாக்கச் சொல்லு; அப்ப…
-
- 0 replies
- 864 views
-
-
அன்று சாய்சுரேசுக்கு தூக்கமே வரவில்லை காரணம் தாத்தாவினதும் அம்மாவினதும் ஊருக்கு போற சந்தோசத்தில்.தாத்தாவும் அம்மாவும் அவர்களின் ஊரை பற்றி அதிகமாகவேசொல்லி இருந்தார்கள்.தாத்தா சொன்னவைகளை சாய் நினைத்து பார்கிறான்,தாத்தாவின் ஊர் கிணற்று தண்ணியை குடித்தால் இனிக்கும் அதில் குளித்தால் அரைவாசி வருத்தம் போய் விடும் என்று கூறியவை,கருத்தக் கொழும்பான் மாம்பழமும் புட்டும் சாப்பிட வேண்டும்,இங்கத்தய அப்பிள் அதுக்கு பிச்சை வாங்க வேண்டும்,வீட்டில் அடி வளவில் இருக்கிற பிலாபழம் பழுத்தால் வீட்டுகுள்ளேயே வாசம் வரும் என்று கூறியவை,கொழும்பு யாழ் ரயில் பயணத்தை பற்றி கூறியவை தாத்தாவின் வாகனத்தை கூறியவைகள் எல்லாம் அவனுக்கு தாத்தாவின் ஊரை பற்றி அதிக கற்பனைகளை உருவாக்கி விட்டது. …
-
- 18 replies
- 3.9k views
-
-
சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. தவறான எண்ணத்துடனான தொடுகை நேரடியான பாலியல் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியிலான கி;ண்டல் கதைகள் என்பனவாகவும் இன்னும் விரிவாகவும் சொல்லிச் செல்லலாம். மேலும் அவர்களின் வறுமையைப் பயன்படுத்திச் சமூகத்தால் பாலியற் தொழிலாளர்களாக்கப்படுவதும் கூட ஒரு வகையில் வன்முறைதான். பாலியல் ரீதியான பேச்சுக்கள் அச்சிறார்களின் மனதில் என்றும் நிலைக்கும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. அவை மனதைத் துன்புறுத்தி வெறுப்புணர்வுடன் தங்கிவிடுகின்றன. அவர்களைச் சுற்றியுள்ள உறவு நட்பு அயல் பாடசாலை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிலிருந்து இவை நிகழ்த்தப்படுகின்றன. பாதுகாக்க வேண்டியவர்களும் அரவணைப்புக்கும் ஆறுதலுக்குமானவர்களே அவற்றைச்…
-
- 3 replies
- 1.1k views
-
-
சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும் ஆர்.அஜய் சிறுகதையோ, நாவலோ அது தான் வெளிப்படையாக சொல்லும் விஷயங்களோடு, நேரடியாகச் சொல்லாமல் வாசகனின் கற்பனையையும் நுண்ணுணர்வையும் செயலிறங்கக் கோருகிற சில விஷயங்களையும், அவற்றுக்கான மௌனங்களையும் இடைவெளிகளையும் தன்னுள் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது, இது நல்ல படைப்பின் ஒரு அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது. சிறுகதையை எடுத்தால், அதன் நீளமும் காலமும் குறுகியவை என்று துவக்கத்திலேயே வரையறுக்கப் பட்டுவிடுவதால் அது பல பாதைகளில் கிளைக்கும் சாத்தியத்தை தன்னுள் இயல்பாகவே கொண்டுள்ளது. ஆலிஸ் மன்றோ முதலானவர்கள் எழுதும் நெடுங்கதைகளைத் தவிர்த்து, பொதுவாக ஒரு சிறுகதையின் நீளம் ஐந்து முதல் பத்து பக்கங்கள் கொண்டதாகவும…
-
- 2 replies
- 1.1k views
-
-
சொல்லியழுதிட்டன். - சாந்தி ரமேஸ் வவுனியன் - சிலநேரம் செத்துப்போக வேணுமெண்டு கூட நினைக்கிறனான்...ஆனால் பிள்ளையளையும் வீட்டுக்காறரையும் நினைச்சுப்போட்டு விட்டிடுவன்...அடிச்சாக்கூடப் பறவாயில்ல அவனென்னை அடிச்சதைவிட வாயாலை காயப்படுத்தின காயங்கள்தான் அதிகம்....சற்று மூச்சை உள்ளிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஏனப்ப அவனோடை இருக்கிறியள் ? பிடிக்காட்டி விட வேண்டியதுதானே ? இது நான். அதுவும் ஏலாமலிருக்கு....என்னை வெளிநாட்டுக்கு கூப்பிட்டுவிட்டவன் என்ரை குடும்பத்துக்கு காசனுப்ப விட்டவன் இப்பிடி சிலதுகள் அவனை விட்டிட்டுப்போகவோ இல்லாட்டி போடாவெண்டு தூக்கியெறியவோ முடியேல்ல... சொல்லிக் கொண்டு அழுதாள்;. ஊரிலை நானும் அவனும் ஓரே ஊர். …
-
- 28 replies
- 4.3k views
-
-
சோதனை மாலதி தன் வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். கண்களை மூடியபடி இறைவனிடம் பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினாள். பொதுவான வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் சார்பிலுமான வேண்டுதலைத் துவங்கினாள். ‘‘அம்மாவுக்கு மூட்டு வலி தொடங்கி இருக்கு. அது அதிகமாகாமல் சரியாயிடணும். இதற்கு உன் அருள் வேண்டும்...’’ கூடத்தில் அம்மா வாய்விட்டு எதையோ அரற்றிக் கொண்டிருந்தாள். ‘‘இப்ப பார்த்து இந்த மாலதிக்கு நொய்டாவுக்கு மாற்றலாகியிருக்கே. அது எங்கேயோ தில்லியைத் தாண்டி இருக்காமே. பதவி உயர்வு இப்ப ரொம்ப அவசியமா? சோதனைகளைத்தான் வேண்டிய மட்டும் அனுபவிச்சாச்சே...’’ கூடத்தில் அம்மா இப்படி தனக்குத்தானே அடிக்கடி உரத்துப் பேசிக் கொண்டிருப்பதும் அதனால் பூஜை அறையில் மாலதிய…
-
- 0 replies
- 841 views
-
-
சோதனைச்சாவடி - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் கோடை வெயில், பெட்ரோல் விலையைப் போன்று விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்தது. வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் சிதம்பரத்தின் நடு உச்சிக்கு மேல் கொதித்துக்கொண்டிருந்தான் சூரியன். இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்த வயதான ஒரு புளியமரம், சிதம்பரத்தின் வலதுபுறம் ஒற்றைக் கிளையுடன் நின்றிருந்தது. அதன் வெக்கை, அங்கே மேலும் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. தலைமைக் காவலர் இருவர், சாலையில் வரும் கார்களை நிறுத்தி அதன் டிக்கிகளைத் திறந்து காட்ட, தலையைச் சாய்த்து சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு எரிச்சலாக இருந்தது. சவுக்குத்தோப்புபோல …
-
- 1 reply
- 1.9k views
-
-
சோபாசக்தி வர்றார்; சொம்பைத் தூக்கி உள்ள வை இந்திய பொதுவுடமை இயக்கத்தின் விடிவெள்ளி அன்புத்தோழர் சாரு மசூம்தார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு ஆவணங்களில் அதிலும் 1965ஆம் ஆண்டு 28 ஜனவரியில் “தற்போதைய சூழலில் நமது கடமைகள்“ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் ஆவணத்தில் ஒரு பொதுவுடமை கட்சி கமுக்க (ரகசியம் அல்லது தலைமறைவு) கட்சியாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் அப்பொதுவுடமைக்கட்சியின் உறுப்பினர்கள் தலைமறைவு ஊழியர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்து விளக்குவார். அதிலும் அவர் அதை “நமது அமைப்பின் முழக்கங்கள்“ என்ற தலைப்பின்கீழ் ஏழு முக்கிய குறிப்புகளாக வலியுறுத்துவார். நீண்டகால மக்கள் யுத்தமே இனிமேல் இந்த இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு பலனளி…
-
- 17 replies
- 2.2k views
-
-
சோபாசக்தியின் 'கப்டன்' சிறுகதையினை இப்போது படித்துமுடித்தபோது, ஒரு சிறு குறிப்போடு பதிவிடத் தோன்றியதால் இப்பதிவு. எனது பதிவைப் படிக்கு முன் கதையைப் படியுங்கள்: http://www.shobasakt...basakthi/?p=936 பிரபஞ்சம் எங்கிருந்து எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பில் 'எவ்வாறு' என்பதற்கான வியாக்கியானங்கள் இருப்பினும், எதிலிருந்து என்பது விடைகாணமுடியாத கேள்வியாகவே இருக்கின்றது. இது தான் பிரபஞ்சம் தோன்றிய மூலப்பொருள் என ஒன்றைக் குறிப்பிட்டால், அந்த மூலப்பொருளின் மூலம் என்ன என்ற கேள்வி உடனே பிறந்துவிடும். அந்த வகையில் எது தொடக்கம் என்பது வரையறுக்கப்படமுடியாதது. ஆனால் தொடங்கி விட்ட உலகில் ஒவ்வொரு கதைகள் தொடங்குவதுபோலவும் முடிவதுபோலவும் தோன்றி வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. என்…
-
- 21 replies
- 2.7k views
-
-
சோமசுந்தரம் செய்த கொலைகள் - சிறுகதை சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ரமணன் ``நீங்க ஏங்க அக்யூஸ்ட் மாதிரி கை கட்டிக்கிட்டு ஓரமா நிக்கிறீங்க? இங்க வந்து ஒக்காருங்க.’’ சோமசுந்தரம் அங்கு இருந்த நாற்காலியில் அமரும் முன், தான் குற்றவாளி அல்ல என்பதிலிருந்த மன நெருடலைத் தீர்க்க முனைந்தான். இரண்டு போலீஸ்காரர்களுடன் இந்தக் கிராமத்துக்கு வரும் முன்னரே மனதுக்குள் ஊனச்சந்தேகம் நகர்ந்தபடியிருந்தது. அவர்கள் மூவரும் காத்திருந்த அந்த வீட்டுவாசலில், மரம் ஒன்று வெள்ளைப் பூக்களை உதிர்த்திருந்தது. மரத்தின் பெயர் தெரியவில்லை. வெயில் தன் கொதிப்பை இளஞ்சூடாக மாற்றியிருக்க, ஒரு காகம் வெயில் நனைத்தபடி பறந்தது. சோமசுந்தரத்துக்கு, தன்னை யாரும் `டிரைவர்’ எனச் சொல்வது பிடி…
-
- 1 reply
- 3.1k views
-
-
யாழ்பாணத்தில் பெரும்பாலும் எல்லோர் வீட்டுவளவுகளும் சோலையாக இருந்தது……..நிலம் கண்ட இடமெல்லாம் மரங்களும், பூமரங்களும் கண்டமேனிக்கு செழித்து வளர்ந்திருந்தன…….முன்பெல்லாம் ஒரு பூச்செடியை நட்டுவிட்டு அடிக்கடி தண்ணீர் ஊற்றி...ஊற்றி...அதிக கவனம் எடுத்து வளர்த்தாலும் வளராத பூமரங்கள்…….நன்றாக செழித்து வளர்ந்திருந்தன……...மல்லிகை, அடுக்கு மல்லி, முல்லை, பாரிஜாதம், மந்தாரை (இந்த பூவை இம்முறை தான் முதல் தடவை கண்ணால் பார்த்தேன்), மயிர் கொன்றை சிவப்பு,றோஸ் வர்ணங்களில், முசண்டாஸ், பாதிரிப்பு மஞ்சள், பிங்க், வெள்ளை...எக்சோறாவில்...சிகப்பு., றோஸ், மஞ்சள் நிறங்களில்…..நீலபூக்கொடி, கறுத்தபூக்கொடி (இது violet color), மஞ்சள், வெள்ளை நந்தியாவட்டை, திருவாத்தி…..(இதன் மஞ்சள்..வெள்ளை பூக்களை பார்த…
-
- 3 replies
- 4.1k views
-
-
“ச்சீய்..” ஜனனியை அடையாளம் கண்டு கொள்ள இரண்டு விஷயங்கள். சுலபத்தில் விட்டுத் தர மாட்டாள். அவள் பக்க நியாயங்களைப் பட்டியலிட்டு.. குரலெழுப்பாமல்தான்.. கைகட்டி காத்திருப்பாள் பதிலுக்கு. உண்மையை ஒப்புக் கொண்டால் பிழைத்தோம். இல்லையேல் தொலைந்தோம். அடுத்தது 'ச்சீய்'.. செல்லமாய். கலாய்த்தால் ரசிப்பதுடன் அவளின் ஃபேவரிட் வார்த்தையைச் சொல்லி விடுவாள். உதடு சுழித்து இமைகள் சிறகடிக்க ச்சீய் சொல்லும் அழகிற்கே.. 1000 மார்க் தரலாம். இன்றைய சண்டை எதிர்பாரா தருணத்தில் ஆரம்பித்தது. 'பூக்கள் பூக்கும் தருணம்' ரிங் டோன் ஒலித்தால் அவள். எனக்கோ மீட்டிங். பாஸ் பேச்சின் நடுவில் முறைத்து விட்டு (ஏன்.. ஆஃப் பண்ணல) அவர் உரையைத் தொடர்ந்தார். மெசேஜ் அனுப்பினேன். 'கால் யூ லேட்டர்'. …
-
- 0 replies
- 963 views
-
-
ஜனனம்! “பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். ‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார். http://www.eegarai.net
-
- 0 replies
- 627 views
-
-
ஜன்னல் திட்டில் சில காக்கைகள் சமையலறையில் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். காலை நேரத்தில் யார் வந்திருப்பார்கள்? அனு யோசித்தாள். அவள் கணவன் அரவிந்த் வேலை விஷயமாக தில்லி போயிருந்தான். அஞ்சு, ஆதித்யா இருவரையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, தெருக்கோடியிலிருந்த தன் சிநேகிதி சுபஸ்ஸ்ரீயின் வீட்டில் நடந்த யோகா வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பிய அனு, தன் தாயைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் உடன் கொண்டு வந்திருந்த வீட்டுச்சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது. அனு சப்தம் செய்யாமல் எட்டிப் பார்த்தாள். அம்மாவின் கையில் கரண்டித…
-
- 0 replies
- 846 views
-
-
ஜல்லிக்கட்டு... (1)... எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. 10 மணிக்கே ரோடு வெறிச்சோடிப் போயிருந்தது, ராக்காயியின் இட்லிக் கடையில் மட்டும் கொஞ்சம் கூட்டம் சொச்சமிருந்தது. தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரையின் தெருக்களில் வண்டிகள் தங்கள் டயர்களை செலுத்தி ஒவ்வொரு வீட்டு வாயிலில் போட்ட கோலத்திற்குள் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. பிள்ளைகள் ரோட்டில் ரெயில் வண்டி விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருமுனையில் இளைஞர் சங்கத்தில் தனுஷ் கொலைவெறிப்பாடலை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார். ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லை பூச்சாண்டிகிட்டே பிடிச்சிக்கொடுத்திடவா என்று குழந்தையிடம் போரா…
-
- 4 replies
- 1.9k views
-
-
உள்ளங் கவர் கதை . இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது. "நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்று எப்போது நம்மால் உணரமுடியவில்லையோ, அப்போது நாம் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டும்' என்று ஒருவாறு விளக்கம் சொல்லிக்கொண்டான். இறந்துவிட்டபின் எப்படி நினைத்துக் கொள்ளமுடியும்? என்று திருப்பிக்கேட்டது அவன் மனம். 'சே' என்று அலுத்துக்கொண்டு, விரல்களால் பவுடரைத் தொட்டு கண்ணாடிக்குள் ஊடுருவிப் பார்த்து முகத்தில் பூசினான். கருப்பாக இருந்தாலும் சதைப்பிடிப்பான முகம் அழகாகவே தெரிந்தது. தலைமுடியைச் சீவி, கிருதாவை வருடியபோதுதான் கவனித்தான். இடது கிருதாவில் ஒரு வெள…
-
- 1 reply
- 746 views
-
-
ஜான்சிராணியை பின்தொடரும் காதல் காந்திமதி காற்றில் சிக்கிய பலூன் போல் வெடவெடத்தாள். உள்ளங்கைகள் பிசுபிசுத்திருந்தன. பிடி கிடைக்காமல் அந்தரத்தில் தொங்கிய கால்களின் கனம் அவளைக் கீழ் நோக்கி இழுப்பது போலிருந்தது. ‘‘காந்தி பயமா இருந்தா கண்ண மூடிக்கோ. ரொம்ப பயமா இருந்தா வாயத் தொறந்து கத்திருடி. எல்லாரும் அப்படித்தான் சத்தம் போடுவாவோ!” என்றாள் அருகில் அமர்ந்திருந்த ராதா. காந்திமதி கண்களை மூடிப் பார்த்தாள். தலை மட்டும் தனியாகச் சுழன்றது. உடனேயே கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டாள். ராட்சத ராட்டினத்தின் ஒவ்வொரு இருக்கையும் மெதுவாக நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. காந்திமதி அமர்ந்திருந்த இருக்கை உச்சிக்குச் சென்றது. அங்கிருந்து மொத்த பொருட்காட்சியும் சிறிதெனப்பட்டது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜான்ஸி மலையகம் வாசகத்திற்கு ஏற்பவே சூழவும் மலைகளைக் கொண்டு விளங்கியது. அதிலும் சிறப்பு என்னவென்றால் அம்மலைகள் பார்ப்போர் கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு இன்ப மகிழ்ச்சியையும் அள்ளித்தெளிக்கும் பச்சைப்பசேல என்ற தேயிலைச் செடிகளால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டு இருந்ததுதான். இதனைத் தவிர மரக்கறித் தோட்டங்கள், மெய்சிலிக்கும் நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டங்கள் என பல வகைப் பண்புகளையும் சிறப்புக்களையும் கொண்ட பண்டாரவளையில் அம்பிட்டிய என்பது ஒரு சிறிய தோட்டக் கிராமம். அதில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அதிலும் பெண்கள் தான் பெரும்பான்மையாக இருந்தது. அவர்களின் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! எஸ்.ராமகிருஷ்ணன் ஜி. சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்…
-
- 0 replies
- 784 views
-
-
அது ஒரு நட்சத்திர ஹோட்டல் அறை. அங்குள்ள ஒரே டபிள் பெட்டில் படுத்திருக்கிறேன். குளிர்சாதன இயந்திரம் குளிர்ந்த காற்றை அள்ளித் தாராளமாக வீசிக்கொண்டிருக்கிறது. நான் விழித்தபடி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ பெண்ணொருத்திக்கான காத்திருப்பாக இருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. மனதில் அங்கலாய்ப்பு இருந்தது. அதிக நேரம் காத்திருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல கதவைத் திறந்தபடி அழகான ஐரோப்பிய பெண் ஒருத்தி உள்ளே வருகிறாள். அவளது உடலில் இருந்து வந்த வாசனை அறையெங்கும் நிறைக்கிறது. காற்றில் மெதுவாக அசையும் தீபமென அசைந்து உள்ளே வந்தவள் தனது சொந்த படுக்கையறைபோல் உடைகளை ஒவ்வொன்றாக களைந்து பக்கத்தில் உள்ள கதிரையில் போடுகிறாள். இப்பொழுது அவளது தலையலங்காரத்தை கலைத்த…
-
- 1 reply
- 667 views
-
-
ஜூடோ - ப.தெய்வீகன் அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். பாதி வறண்ட வழிகள், பள்ளத்தில் வற்றிப்போன கன்னங்கள், தடித்த உதடுகள். தனது பெயர் ஜூடோ என்று கூறினான். ரொ…
-
- 2 replies
- 1k views
-
-
ஜூட் - அனோஜன் பாலகிருஷ்ணன் வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு ஏதும் இல்லாத தற்செயலான ஒன்றாகவே கொள்ளமுடியும். அவசரமாக பல…
-
- 0 replies
- 777 views
-