கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
சாட்சிகள் எதுக்கடி ? எனும் கதை மார்கழி மாதத்து பனித்துளி எனும் வலைப்பூவில் தாட்சாயணி யால் எழுதப்பட்ட கதை. இதுவரை கவிதை, சிறுகதை தொகுப்பு என பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கதையை வலைப்பதிவில் இருந்து பிரதி எடுத்து இணைக்க முடியாத படி வலைப்பதிவை அமைத்துள்ளார். நேரம் உள்ளவர்கள் வலைப்பதிவில் சென்று படித்துப்பாருங்கள். http://sthadsayanee.blogspot.ca/2012/08/blog-post_21.html
-
- 0 replies
- 464 views
-
-
இந்த மூட்டைப் பூச்சி பற்றிய விடயம் ஒரு சிறியதே என்றாலும், இன்றுவரை அதன் நினைவு என் நெஞ்சை விட்டு அகல மறுத்து ஆழப் பதிந்ததனால் கட்டாயம் இது பற்றியும் எழுத வேண்டும் என்றுமுடிவெடுத்தேன். ஆனால் பலருக்கு மூட்டைப் பூச்சி பற்றித் தெரிந்தே இருக்காது. எங்கள் வீடு மிகச் சுத்தமானது என்பதால் வீடுத் தளபாடங்களும் சுத்தமாகவே இருக்கும். நான் நான் வேம்படிக்குப் படிக்கப் போனதன் பின்னர் எனக்காகப் படிப்பதற்குத் தனி மேசை கதிரை கட்டிலுடன் தனி அறை இருந்தது. அது எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது போன்றது. எனக்குப பல நண்பிகள் இருந்தனர். அவர்கள் வந்தால் நாம் வீட்டு முற்றத்தில் இருந்து கதைப்போம். முற்றத்தில் வேறு யாராவது வந்தால், ஏதாவது பகிடியாகக் கதைப்பதெனில் என் அறைக்குள் போய் இருந்து கதைப்போம…
-
- 13 replies
- 8.3k views
-
-
சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள். புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள்…
-
- 18 replies
- 1.6k views
-
-
தொடர் 1 வதனிக்கு ஒரே குழப்பமாக இருந்தது... இவளுக்கு என்ன நடந்தது... அந்தப் பெண்ணுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு... ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கிறாள்... கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன... மாதுரியையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. நேரம் காலை 10 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது.. வதனியின் பிள்ளைகள் பாடசாலைக்கும், கணவன் வேலைக்கும் போய் விட்டால் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டுக்குள்ளே நிரம்பிக் கொண்டிருந்த குளிர், அறையின் நிசப்தத்தை உறுதிப்படுத்தும் கடிகாரத்தின் துடிப்பொலி, எப்பொழுதும் அந்த வீட்டில் கமழ்ந்து கொண்டிருக்கும் மல்லிகை வாசனை, அந்த அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிய பூங்கொத்துக்கள்... சிறிய மேசை மீது அமைதியாகவே அமர்ந்திருக்கும் சிறி…
-
- 33 replies
- 3.3k views
-
-
என் வாழ் நாள் கனவுகளில் ஒன்றை அடையப் போகும்.. எதிர்பார்ப்போடு அந்தப் பயணம்.. வேக வீதியில் 70/80 மைல்/ மணி வேகத்தில்.. காரின் பயணம். அதை விட அதிக வேகத்தில் மூளையில் கணத்தாக்க ஓட்டம்.. கற்பனையில் கேம்பிரிச்.. அழகழகான தோற்றங்களில் எல்லாம் வந்து போகிறது. அட்டைப் படங்களில்.. பெரும் திரைகளில் கண்ட கேம்பிரிச்சை இன்னும் இன்னும் மூளை பல பரிமானங்களில் காட்டுகிறது.. கார் வேக வீதி கடந்து.. "ஏ" த்தர வீதிக்கு ஓடுகிறது. ராம் ராமில் அந்தப் பெண்மணியின் குரலை காது கவனமாக செவிமடுக்கிறது. காடும் காடு சார்ந்த நிலமும்.. குறிஞ்சி என்பார்கள் தமிழில். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்பார்கள்...! கேம்பிரிச் போகும் பாதைகள் இவற்றினை சேர்த்து செய்த கலவைகளாகவே அதிகம் இருந்தன..! …
-
- 45 replies
- 3.4k views
-
-
எனது பன்னிரண்டாவது வயதில் நான் முதல் முதல் அவளைச் சந்தித்தேன். வேம்படியில் அன்றுதான் ஆறாம் வகுப்பில் சேர்கிறேன். என்னோடு ஐந்தாம் வகுப்பில் படித்த இரண்டு மூன்று பேர் வந்திருந்தாலும் புதிதாய்க் காண்பவர்களிடம் கதைப்பதற்குத்தானே மனம் அவாவும். அவள் என்னைப் பார்த்துச் சிரித்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. அவள் என்னைப் பார்த்துச் சிரித்ததும் அவளை நெருங்கி என்ன பெயர் என்று கேட்டேன். யாழினி என்றாள். அவளின் ஊர் பற்றிக் கேட்டு பொதுவாகக் கதைத்துவிட்டு மற்றவளிடம் நகர்ந்துவிட்டேன். இரண்டு மணி நேரத்தில் வகுப்புகள் பிரித்து விட வகுப்பில் முன் வரிசையில் இடம்பிடித்து நான் அமர்ந்தபோது அவளாக எனக்குப் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தாள். நான் சரியான அலட்டல். அலட்டல் என்றால் பல அர்த்தங்க…
-
- 83 replies
- 5.4k views
-
-
இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக் கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும் தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை. இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்…
-
- 13 replies
- 1.4k views
-
-
நம்பிக்கையாளன் – ஜெயமோகன் திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் இருக்கிறது. ‘ ‘ இளைஞன் திடம்பெற்று மெல்ல சொன்னான். அதை அவன் மீண்டும் மீட்டினான். வெறும் ஒலி மட்டும்தான் கேட்டது . ‘ ‘இந்த ஒலியைக்கேட்டு சொற்கத்துக்கா போகப்போகிறாய் ? ‘ என்றார் ஒருவர். பிறர் புன்னகை செ…
-
- 0 replies
- 408 views
-
-
சில வித்தியாசங்கள் – சுஜாதா வாங்குகிற முந்நூற்றுச் சொச்சம் 25 தேதிக்குள் செலவழிந்துவிடுவது சத்தியம். இன்றைய தேதிக்கு என் சொத்து – ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிட்டவள் என் மனைவி. இவளைப் பற்றிக் கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் ‘பட்ஜெட்’டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம்! ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் கணவன் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது…
-
- 10 replies
- 6k views
-
-
அன்று பேஸ்புக்கில் சந்தித்தோம் இன்று பேஸ் ரூ பேஸ் பார்க்க முடியாமல் பிரிந்தோம்..
-
- 0 replies
- 725 views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு அங்கங்கள் 1 தொடக்கம் 5 வரை வாசிக்க இங்கே சொடுக்கவும் நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 06 சங்கரசிவத்தின் கால்கள் சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டிருந்த போதிலும் அவனின் மனம் கணேசனையே சுற்றிக்கொண்டிருந்தது. அவன் இன்னும் உயிராபத்தான நிலைமையைத் தாண்டாவிட்டாலும் போராளிகளுக்கு இயல்பாகவே உள்ள மனவலிமை அவனைக் காப்பாற்றிவிடும் என சிவம் முழுமையாக நம்பினான். அவன் மடுக்கோவிலைத்தாண்டியபோது வீதிக்கரையில் அமைந்திருந்த அந்தப் பெரிய கட்டுக்கிணற்றில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருபுறமும் நின்று குளித்துக்கொண்டிருந்தனர். அந்த அகதி வாழ்வு பகிரங்கமான இடங்களில் குமர்ப்பிள்ளைகள் கூட நின்று குளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டதை நினைத்த போது நெஞ்சில் ஏதோ…
-
- 29 replies
- 4.8k views
-
-
சுசீலாவுக்கு இன்று கொஞ்சம் மனதுக்கு மகிழ்வாக இருந்தது. ஒரு வருடமாக கொழும்பில் இந்தா அனுப்புறன் அந்தா அனுப்பிறன் என்று சொன்ன வெளிநாட்டு முகவர் இன்றுதான் இரண்டு நாளில் யேர்மனிக்கு அவளையும் மகளையும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளான். கணவனுக்கு இன்று தொலைபேசியில் விடயத்தைச் சொன்ன போது அவனுக்கும் நின்மதியாகத்தன் இருந்தது. இரண்டு மூன்று முறை முகவர்களுக்குக் காசு கட்டி ஏமாந்து இப்பதான் ஒரு நம்பிக்கையான ஆள் கிடைத்துள்ளான். அரைவாசிக் காசு முதல் குடுத்தால் சரி. மிச்சம் மனைவி வந்து சேர்ந்தபிறகுதான். அதுகும் மனைவியின் தாயாரை கொழும்பில் பொறுப்புக்கு விட்டுவிட்டுத்தான் வரவேணும். ஒரு வருடமாக மனிசி கொழும்பில வீடெடுத்துத் தங்கிஇருக்கிற செலவு இனி இல்லை என்று காந்தனுக்கும் சற்று ஆறு…
-
- 30 replies
- 2.1k views
-
-
இன்று நீங்கள் கேட்கப்போவது அளவெட்டியில் பிறந்த நான் மீண்டும் அளவெட்டிக்கு வந்த கதை. ஊடகங்களிலை உள்ள பிடிப்பிலை, நான் கேட்ட கேள்விகளாலை (சினிமா பற்றி மடியிலையிருந்துகொண்டு அம்மா, அப்பாட்டை நாடி தடவிக்கேட்ட கேள்விகள் இன்னொரு செட் இருக்குது அதை பின்னுக்கு இன்னொரு பந்தியிலை வடிவாச் சொல்லியிருக்கிறன்.) நிலைகுலைந்து போனவை எல்லாரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்திச்சினம். பெடியன் ஊடகங்களிலையெல்லோ மூளையை விடுறான். பெடியன்ரை படிப்பெல்லோ கெட்டுக் குட்டிச்சுவராகப்போகுது. இங்கையிருந்தா பெடி குறுக்கை எங்கையாகிலும் போயிடும். யாழ்ப்பாணத்திலை கொண்டுபோய் விட்டாத்தான் சரியென்று முடிவெடுத்திச்சினம். யாழ்ப்பாணம் என்றால் படிப்பு, படிப்பென்றால் யாழ்ப்பாணம் என்றிருந்த பொற்காலமது. இலங்கையின் பல …
-
- 5 replies
- 614 views
-
-
அவளைநான் பார்க்கவில்லை.எனக்கு தெரியவும் தெரியாது.நிறம் அதுவும் தெரியாது.ஆனாலும் அவளுக்கு நான் வைத்த பெயர் ஓவியா.பதினாறு வருடங்கள் பின் நோக்கிபார்கிறேன். ------------------------------------------------------------------------------------------------------ 1997.எதோ ஒரு மாதத்தின் எதோ ஒருநாள்.விடிகாலை பொழுது.காந்தன் அவளின் வருகை கருதி அழகாய் அமைத்திருந்த தன் வீட்டில் அவளின் கனவுடன்.தொலைபேசி-காதில் வைத்தான். அவளேதான்.அத்தான் நான் உக்ரைன் நாட்டிற்கு வந்திட்டேன்.எனக்கு பிரச்சனை இல்லை.நீங்கள்என்ன செய்கிறிங்கள்.தேன்வந்து பாய்ந்தது காந்தனின் காதிலே .காந்தனுக்கு சிறு வயதில் இருந்தே பேசிவைக்க பட்ட பெண் அவள்.மச்சாள்.சுவிஸ் வந்தநாள் முதல் அவளின் நினைவில்…
-
- 25 replies
- 2.4k views
-
-
ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்? நாளை அவனுக்கென்று ஒருத்தி வந்தால், அவள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், விழிக்கக் கூடாது பாருங்கள். அதற்கு முன்னதாகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்... முடிவு செய்தான் ரமேஷ். இன்று, அம்மாவிடம் கேட்டே விடுவதென்று. அதற்காகவே, இன்று ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, வீட்டிலேயே இருந்தான். அப்பா வெளியில் போகும்வரை பொறுமை காத்தான். ""ஏம்பா ரமேஷ்... இன்னிக்கு ஆபீஸ் போகலையா?'' பார்வதியின் கேள்விக்கு பதிலே சொல்லாமல், காதிலேயே அதை வாங்காதவன் போல், தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான். ""நான் கேட்டுட்டேயிருக்கேன்... ஏம்ப்பா பதிலே சொல்லாம போயிட்டு இருக்கே?…
-
- 6 replies
- 1.2k views
-
-
அழுத்தம் க.சட்டநாதன் புலன்கள் ஒடுங்கி உறைந்த நிலையில் அவன் இருந்தான். கலக்கமுற்றிருந்தவனை எதுவும் நிதானப்படுத்தவில்லை. பதகளிப்பு அவனுடனேயே அசையாது இருந்தது. அவனைப்பார்த்த ஐயா, “என்ன ரமணா…! குட்டி போட்ட பூனை போல வளைய வளைய வாறை… ஏ.எல் சோதனை வெள்ளிக்கிழமை, ஏழாம் திகதி……! இன்னும் மூன்று நாள்தான் கிடக்கு, எழுந்து படியன்ரா….!” ஐயாவின் பேச்சு அவனுக்கு எரிச்சல் தருவதாய் இருந்தது. உயர்தரப்பரீட்சைக்கு இரண்டு முறை படையெடுத்து, அவனுக்கு தோல்விதான் மிஞ்சியது. ‘இன்னுமொரு முறை அந்தத்தொந்தரவா….?’ சலிப்புடன் அவன் புரண்டு படுத்தான். “ அம்மா இருந்திருந்தால் என்னைப்புரிந்து கொண்டு அனுசரணையாக இருந்திருப்பாளோ…? அம்மான்ரை இதமும் பிரியமும் ஏன் ஐயாட்டை இல்லை… சரியான சுடு…
-
- 1 reply
- 736 views
-
-
பனி -இளங்கோ ஓவியம்: கருணா அவன் பழைய கிங்ஸ்டன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற பகுதியில் நடந்து கொண்டிருந்தான். மெல்லியதாகப் பெய்த பனி, அணிந்திருந்த கறுப்பங்கியின் மேல் மல்லிகைப் பூவைப் போல விழுந்து கரைந்து போய்க்கொண்டிருந்தது. வானத்தை மூடியிருந்த கருஞ்சாம்பல் போர்வை ஒருவகையான நெகிழ்வை மாலை நேரத்துக்குக் கொடுக்க, இலைகளை உதிர்த்த மரங்கள் தலைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்பது போலத் தோன்றியது. எல்லா இழைகளும் அறுக்கப்பட்டு தானும் தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவனுக்குள் பரவத் தொடங்கியது. தலைவிரிகோல மரங்களைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய நடமாடும் மரமெனத் தன்னை உருவகித்தும் கொண்டான். இன்னகாரணம் என்றில்லாது கண்களிலிருந்து நீர் கசியத்தொடங்குமளவு…
-
- 10 replies
- 1k views
-
-
மண்டைக்காய் “என்னட்ட இருக்கிற கெட்டித்தனத்துக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிறந்திருந்தா நிலைமையே வேற. போயும் போயும் யாழ்ப்பாணத்தில் போய் பிறந்தனே” என்று அனேகமாக எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருக்கலாம். அதையெல்லாம் மீறி அடுத்தகணமே “தமிழனாய் பிறப்பது பெருமை” என்று உட்டலாக்கடி அடித்தாலும், இவ்வளவு காலத்தில் ஒரு கணம் கூட அந்தவகை சிந்தனை தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு வராமல் போயிருக்காது. “முக்கி முக்கி தமிழில எழுதிறாய், ஏதாவது ரெஸ்போன்ஸ் இருக்கிறதா?” என்று நேற்று பீட்டர் லஞ்ச் டைமில் கேட்டபோதும் இதே அமெரிக்க ஸ்டேட்மெண்டை விரக்தியாய் விட்டேன். சத்தம் போடாமல் ஜோக்கட்டை வழிச்சு முடிச்சுவிட்டு அவன் சொன்னான், “உனக்கு அமெரிக்காவின் அதிபுத்திசாலி யாரு? அவ…
-
- 0 replies
- 648 views
-
-
விடுதலை வேங்கை குயிலி - உலகின் முதல் தற்கொடைப் போராளி கு.ஜக்கையன் இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொடைப் போராளி என்கிறோம். முள்ளிவாய்க்கால் அழிப்பினையொட்டி தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு மிக மிக முக்கியக் காரணி ஈகி முத்துக்குமாரின் தற்கொடைப் போராட்டமே. நாமறிந்த வரையில் தற்கொடைப் போராளிகளுக்கென தனிப்பாசறையை 'கரும்புலிகள்' என்கிற பெயரில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தியாக உணர்வை மென்மேலும் உயர்த்தியது என்றால் மிகையாகாது. எனினும் தற்கொடைப் போராளி களி…
-
- 10 replies
- 9.7k views
-
-
நான் 2005 சமாதான காலத்தில ஊருக்குப் போயிருந்தேன்...பயணம் முடிஞ்சு திரும்பி கொழும்புக்கு வரும் போது எனக்கு ரெயினில் போக வேண்டும் என ஆசையாயிருக்குது ரெயினில் போவோம் என்று அம்மாட்ட சொன்னேன்...அம்மா சொன்னா ரெயினில் போனால் நிறைய நேரம் செல்லும்,தனக்கு காலும் எலாது வான் புக் பண்ணி கொழும்புக்கு போவோம் என சொன்னார்...நான் இல்லை என்று அடம் பிடிச்சு ரெயினில் புக் பண்ணியாச்சு. நான் பயணக்கட்டுரை எழுதலேல்ல...அம்மா சொன்ன மாதிரி ரெயின் சரியான நேரம் எடுத்தது அத்தோடு நின்று,நின்று மெதுவாய்ப் போச்சுது...அம்மாவும்,தம்பியும் என்னைப் பேசி,பேசி வந்தார்கள் நான் காதில போட்டுக் கொள்ளேல்ல வடிவாய் எஞ்ஜோய் பண்ணிக் கொண்டு வாறன் ...சொல்ல மறந்து போனேன் நாங்கள் பயணம் செய்த பெட்டி பூரா முஸ்லீம் ஆட்கள…
-
- 36 replies
- 3.2k views
-
-
பப்படத் தோட்டத்தில் தொடங்கிய என் முதல் ஊடக சகவாசம் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோவை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம் அல்லது கண்டிருக்கலாம். அந்த நாட்களில் கொழும்பில் அனேகமான வீடுகளில் கனெக்ஷ்சன் கொடுத்திருந்தார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அது இருக்கவில்லை. எனக்கு அது பிரச்சனையாகவும் இல்லை. என்னை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியும் புஷ்பா அக்கா வீட்டில் றெடிவிஷன் இருந்தது. இந்த ஊடகம் தொடர்பாக பலரையும் திக்குமுக்காட வைக்கும் மட்டற்ற பல கேள்விகள் பாலகனான என்னிடம் அன்று இருந்தன. அதற்கு வரமுதல் றெடிவிஷனைப் பற்றிக் கொஞ்சம் அறிவோம். இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ இதுதான் றெடிவிஷன் என்கின்ற கேபிள் றேடியோ. முதற் படத்தில் காட்டியவாறு நல்ல பவுத்திரமான இட…
-
- 9 replies
- 769 views
-
-
நான் பிறந்தது ஊர் மக்களால் “கீளிச்சந்தை ஆஸ்பத்திரி” என்று செல்லமாக அழைக்கப்படும், அளவெட்டி அரசினர் மருத்துவமனையில் தான். பின் எனது ஆரம்ப மழலைக் காலங்களில், அப்பாவின் வேலை காரணமாக திருகோணமலை, உப்புவெளி, என முதலிருவருடங்கள் கழிந்தன. பெற்றோர்கள் என்னை சல்லியம்மன் கோவில், கோணேஸ்வரர் கோவில் என்று நேர்த்திக்காக கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனது முதல் பிறந்த நாளிற்கு ஐந்து விரலிற்கும் ஐந்து மோதிரம் போட்டிருக்கின்றார்கள். ஒன்றுமே எனக்கு நினைவில் இல்லை. எல்லாமே அப்பா, அம்மா, மற்றும் என்னை அங்கு வளர்த்தவர்கள், பிற்காலத்தில் சொல்லிய கதைகள். மற்றப்படி திருகோணமலை, என்ன நிறமென்றே எனக்கு இன்றுவரை தெரியாது. போய்ப்பாக்க வேணுமெண்டு ஆசைதான். பார்க்கலாம்! நான் பிறந்த “கீளிச்சந்தை ஆஸ்ப…
-
- 12 replies
- 912 views
-
-
காதலின் விலை எனக்கு ஒரு அண்ணாவும் அக்காவும் இருந்தார்கள்.அண்ணாதான் மூப்பு . அக்காவைவிட எனக்கு பத்து வயது குறைவு.அதனால் நான் வீட்டில் சின்னப்பிள்ளை.எனது அப்புவும் அம்மாவும் பெரிதாக படித்திருக்கவில்லை.எங்களையும் பெரிய படிப்பு படிக்கோணும் என்ற நினைப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.அப்பு தோட்டம் தான்.வருசத்தில ஒருக்கா வயலும் விதைக்கும்.வீட்டில பஞ்சம் இல்லை. ஆனால் அப்பு சரியான பிடிச்சிறாவி. அண்ணனுக்கும் அந்தக்குணம் தொத்தினதோ பிறப்பிலேயோ வந்ததோ தெரியவில்லை. அம்மா ஒரு பாவி. அப்புவுக்கு சரியான பயம். நான் விரும்பி கல்யாணம் கட்டினதால அப்புவும் அண்ணாவும் சேர்ந்து என்ர வீட்டுத்தொடர்பை அறுத்துப்போட்டாங்கள். என்ர மனுசிக்கும் தாய் மட்டும்தான் இருந்தது. அதுவும் தொண்ணூற்றி ஒன…
-
- 15 replies
- 1.5k views
-
-
நந்தியாவட்டை பர்வதம் பாட்டியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. நேற்று காலையில் இருந்து துவங்கிய இந்தத் தொணதொணப்பு நிற்காது போலிருக்கிறது. வயதான காலத்தில் பாட்டிக்கென்று என்ன இருந்து விடப் போகிறது? உடல் நலம் பேணுவதில் ஏதாவது உதவி கேட்பாளாயிருக்கும். “என்ன பாட்டி? இப்படித் தொந்தரவு குடுக்குற ஆளாயிருந்தா, நீ அத்தையோட வீட்லயே இருந்துக்க. இங்க வராத. இப்ப என்ன வேணும் உனக்கு?” “தங்கம், டேய்… இராசா, உங்க தாத்தன் நெனப்பைக் கூட்டியாறப் பொறந்த ஆளுடா நீ. பாட்டிக்குக் கண்ணு ரெண்டும் எதோ மசமசன்னு இருக்குடா. விஜயம்மா வீட்டுக்குப் போயி நாஞ்சொன்னேன்னு சொல்லு, நந்தியாவட்டைப் பூ பறிக்க விடுவாங்க. கொஞ்சம் நிறையவே பறிச்சுட்டு வாடா!” பாட்டிக்காகப் பூப்பறிக்க விஜயம்மா வீட்டுக்குப் போனான்.…
-
- 4 replies
- 920 views
-
-
கைப்பாவை வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான். எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி! அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம். நான் குடியிருக்கும் மி…
-
- 3 replies
- 680 views
-