கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
மண்மேடாகிற நகரம் ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.---…
-
- 1 reply
- 1.4k views
-
-
மூன்றாம் திருநாள்! மூன்றாம் திருநாள்! சி.முருகேஷ் பாபு ‘‘அ வனை ஏன்டே கூட்டிட்டு வந்தீங்க... படிக்கிற புள்ளைக்கு இதெல்லாம் என்னத்துக்கு..?’’ என்னோடு வந்த முத்துக்குமாரையும் சுப்பிரமணியையும் கடிந்துகொண்டார் சித்தப்பா. எல்லோரும் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தோம். எங்கள் ஊர் அம்மன் கோயிலில் கொடைவிழாவுக்கு காப்புக்…
-
- 1 reply
- 1k views
-
-
என்ன ஆதங்காக்கா ...? இண்டைக்கு இரண்டு போத்தல் தயிர் எடுக்கலாமா, சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த எருமைகளை தா ...தா என்று தள்ளிக்கொண்டு வந்த ஆதமிற்கு இடது காது ஸ்பீக்கர் கொஞ்சம் அவுட், ஆதமும் ங்கே என்று முழுச.. இரண்டு போத்தல் தயிர் ....தயிர் என்று பலங்கொண்டமட்டும் கத்தினார் கணேஸ், கணேசின் கதறலை கேட்டு பக்கத்துவீட்டு ராஜன் தெருவிற்கு வேடிக்கை பார்க்க ஓடிவர, கணேசின் குரல் ரகசியம் பேசுவதை போல் ஆதமிற்கு கேட்டது, எப்படியோ கணேஸ் சொல்லவந்ததை விளங்கிக்கொண்ட ஆதம், ஓவ் ...ஓவ்வ் ...கொண்டாரன்...ஹா என்று விட்டு பட்டியை விட்டு விலக எத்தனித்த எருமை கன்று ஒன்றை கையிலிருந்த இப்பில் கம்பைவைத்து தட்டி மீண்டும் பட்டியை மேய்த்துக்கொண்டு தெரு முனை சந்தியை நோக்கி முழு எருமை பட்டியையும் …
-
- 1 reply
- 1k views
-
-
ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்! சுகுணா திவாகர் ஓவியங்கள் : இளையராஜா, சிவபாலன் ''எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?'' கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன. ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர் நவயுகன்... அவ்வளவுதான். ஓஷோ, பாலகுமாரன் என்று அலைந்து திரிந்து, ஒரு வழியாக எங்கள் இலக்கிய…
-
- 1 reply
- 1k views
-
-
போராளி காந்தா இறுதிச்சமர் முடிவில் தனது பிள்ளைகளோடு இராணுவக்கட்டுப்பாட்டை நோக்கி வந்த நேரம் எறிகணைபட்டு வீரச்சாவடைந்துவிட்டார். கையில் சரிந்த காந்தாவின் உடலை அவரது போராளிக்கணவன் தனது மனைவியின் உடலை நாய்களுக்கு இரையாகாமல் புதைத்துவிட்டு வருவதாக உறவுகளிடம் சொல்லிவிட்டு இரண்டு பிள்ளைகளையும் உறவுகளிடம் கொடுத்தனுப்பிவிட்டு காந்தாவின் உடலைப்புதைத்துவிட்டுப் போகப்போனவர். இன்றுவரையும் திரும்பி வரவில்லை. காந்தாவின் மகளும் மகனும் ஓர் உறவினால் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். தாயையும் தந்தையையும் இழந்த அந்தப்பிள்ளைகளுக்க எல்லாமுமாக அந்த உறவு அவர்களைத் தனது சொந்தப்பிள்ளைகளுக்கும் மேலாக கவனிக்கிறார். காந்தாவின் மகளோடு கதைக்கிற போது காந்தா வெளிநாட்டில் இருப்பதாக நம்புகிற அவளது குழந்தைக் கன…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
ரொறொன்ரோ பெண் - அ.முத்துலிங்கம் முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம். கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.) ‘நான் வசிக்கும் சிறிய வீடு. ஒரு முற்றமும், பூட்டக்கூடிய சாமான் அறையும், வெளியே சமைக்கவும் குளிக்கவும் வசதிகள் கொண்டது. வெள்ளையடித்த உள் சுவருக்கு மேல் சாய்ந்து கிடக்கும் கூரை மழைத் தண்ணீரை முற்றத்தில் கொட்டும். வீட்டின் முழுப்பரப்பும் 18 X 30 அடி இருக்கலாம். தெற்குப…
-
- 1 reply
- 1.5k views
-
-
அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் …
-
- 1 reply
- 1.2k views
-
-
எப்பவும் போல நான் அதே அவசரத்துடன் நடந்து கொண்டிருந்தேன் .என்னைப்போல் பலர் அப்படி.எங்கோ என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன். இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்ப…
-
- 1 reply
- 858 views
-
-
ஊமை! – சிறுகதை ரமேஷுக்கு அன்று முதலிரவு. பால் செம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி பத்மாவை பாசத்தோடு அரவணைத்து தனது அருகில் உட்கார வைத்தான். தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தான். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும், தனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு என்றும், அப்பா ரயில்வேயில் வேலை பார்ப்பதாகவும், அம்மா கொஞ்சம் வாயாடியானாலும் அன்பாவனவர் என்றும் கூறினான். நீ குடும்பத்தில் மூத்த மருமகள் என்பதால் எல்லோரிடமும் அன்பாகவும் – பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து கொள்…
-
- 1 reply
- 3.7k views
-
-
புதுப் பெண்சாதி - அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... புதுப் பெண்சாதி கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்குத் தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும், வ…
-
- 1 reply
- 2.3k views
-
-
‘என்னப்பா எலிப் புழுக்கையோடை அரிசி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள். இதை என்னெண்டு தவத்திறது…?’ என்று புறுபுறுத்தாள் எனது மனைவி. அவளுக்கு, வேலையால் வந்த களை! அத்துடன், சமையலை கெதியாய் முடித்தால்தான், மகளின் படிப்பைக் கவனிக்கலாம். அரிசி பருப்பு போன்ற உணவுப் பண்டங்கள் யாவும், இங்கு கலப்படமின்றி மிகவும் சுத்தமாகக் கடைகளில் கிடைக்கும். கலப்படம் இருந்தால் ‘பாவனையாளர் திணைக்களத்தில்’ புகார் செய்யலாம். கடைக்காரங்களுக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரிகள் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். சுத்தமான அரிசியை இரண்டு தரம் சாட்டுக்கு தண்ணீரில் கழுவியபின் ‘றைஸ் குக்கருக்குள்’ போடும் என் மனைவிக்கு இந்த எலிப்புழுக்கை பெரும் சவாலாக அமைந்தது. ‘சுளகு இருந்தால் தாருங…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு கொலை ராகம்...!!! மண்டல பொறியில் கல்லூரியில் என்னுடைய பேட்ச் மாணவர்களில் நல்ல "மண்டை" யார் என்றால் எல்லோரும் கை காட்டுவது மணிவண்ணனாகத்தான் இருக்கும்...அவன் என்னுடைய அறை நன்பன் என்பதில் எனக்கு இன்றைக்கும் பெருமைதான்.. மண்டை என்றவுடன் மூலையில் உட்கார்ந்து பெரிய பெரிய புத்தகங்களை எப்போதும் மனப்பாடம் செய்துகொண்டிருக்கும் ஒரு "பழம்" உங்கள் சிந்தனையில் வந்து உட்கார்ந்தால்...சாரி...நீங்கள் தவறு செய்கிறீர்கள்... எங்களோடு சேர்ந்து ஹாட் அடிப்பான்...கிங்ஸ் அடிப்பான்...வாந்தி எடுப்பான்...சைட் அடிப்பான்..லெட்டர் கொடுப்பான்..ஆனால் பாழாப்போன தேர்வுகள் வந்தால் அன்றைக்கு இரவு மட்டும் சல்லீசாக கிடைக்கும் வில்ஸ் ஸ்மால் ரெண்டு பாக்கெட் - பத்து சிகரெட் மூன்று ரூபாய் - வாங…
-
- 1 reply
- 895 views
-
-
வஸ்திராபகரணம் - ரா. செந்தில்குமார் ரயில் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. வார விடுமுறைக்கு ஊருக்கு வந்து, சென்னைக்குத் திரும்பும் இளைஞர்கள் சிலர், பிளாட்பார்மில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மிளகாய்ப்பொடி தூவிக் கொண்டுவந்திருந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவனிடம் கொடுத்தார். அதிலிருந்து மிளகாய் காரத்துடன் கலந்த நல்லெண்ணெய் வாடை வீசியது. பின்புறம் நிற்கும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறுவதற்கு ஒரு வயதான அம்மா வேகமாக நடக்க முயன்று, மூச்சு வாங்கினார். அவருக்குச் சிறிது தூரம் முன்பு சென்ற அந்தம்மாவின் கணவர், அவ்வபோது நின்று, பின்பக்கம் திரும்பி, ”வேகமா வாங்குறேன்.. ஆடி அசைஞ்சு வந்த…
-
- 1 reply
- 572 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில் மரங்களும் பறவைகளும் இயற்கையும் அரசியலையும் உண்மைகளையும் பேசினால் !!! (யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில் ) அந்த முற்றத்திலே ஒரு நிழல்வாடிமரமும் பூவரசும் ஒன்றையொன்று தமது இலைகளால் தொட்டுப்பேசி கதைத்துகொண்டன , இந்த காற்று அளவாக அடிப்பதனால் நான் உன்னை தொட்டு கதைக்க இலகுவாயிருக்கின்றது என்றது நிழல்வாடி. அது கிடக்கட்டும் இந்த முற்றத்து மண்ணிலே எத்தனை கொடூரம் எங்கள் இருவர் கண்முன்னால் நிகழ்ந்தது அதை என்னால் என்றுமே மறக்க முடியாது என்றது பூவரசு. அதைகேட்டு நிழல்வாடி அழத்தொடங்கியது. பூவரசுவும் அழுதது அப்போது மழை மேலிருந்து துளிர்த்தது இந்தா இருவரும் அழுகிறதை நிறுத்துங்கள் என்றது மழை. இப்படியே அழுது வடிந்து என்ன பயன் வல…
-
- 1 reply
- 1.2k views
-
-
எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை... தமிழ்னா பிறந்தது அவ்வளவு தப்பா>? உலகில் இருக்கும் எல்லா உயிர் இனத்துக்கும் நிம்மதி கிடைத்தாலும் எங்களுக்கு கிடைக்க விட மட்டார்கள் போல.. என விம்மி விம்மி அழுதாள் அமுதா?????? கடவுளுக்கு கூட கண் இல்லை போல... எங்களை மட்டும் மீண்டும் மீண்டும் சோதிக்கிறார்... என்ன பாவம் பண்ணினம்.. இன்றுடன் சாப்பிட்டு எத்தினை நாள் வயதான தாயை பார்த்தாள்..பாவம் வயதான காலத்தில் நிம்மதி கூட இல்லாமல் தெரு தெருவாய் ஒட்டம்... இன்று ஆவாது சாப்பாடு வாங்கி குடுக்க வேணும் என்று நினைத்த படி தன் பழைய நினைவில் நோக்கினாள்.. தனது 20வயதிலையே கல்யாணம் பண்ணிய அமுதா ஒரு வருசம் தன் கணவனுடன் இனியமாக சந்தோசமாக வாழ்ந்தாள்..அவளோட வசந்த காலம் எவ்வளவு இனிமையானது... விட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
இனுமு கொறடு... ‘‘ஒரேய் ஸ்ரீதர்! தோ ஒஸ்தானு. எக்கட... ஆ விசறக்கோலு! (விசிறிக்கம்பு) அப்படியே மண்டைல போட்டேனா பாரு...’’ அடிக்க வரும் சின்ன அம்மம்மாவிடமிருந்து தப்பித்து ஓடுவோம் நானும் தம்பி விஜயராகவனும். அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். எங்கள் பாட்டியின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் ரயில்வேயில் இருந்த கணவர் அப்பாய் நாயுடு மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாகுபலி 2 - ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அந்த வீட்டு வாசல் அருகேயிருந்த வேப்ப மரத்தடியில், காரை நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கியவுடன், எனது கிளிப்பச்சை நிற சில்க் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டேன். வேட்டியை இறுக்கிக் கட்டியபடி கார்க் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். கால்வாசி வளர்ந்து, பின்னர் தனது வளர்ச்சியை நிறுத்தியிருந்த மீசையை ஒரு முறை தடவி விட்டுக்கொண்டேன் கழுத்தில் மாட்டியிருந்த செயினிலிருந்த புலிநக(?) டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு, புரோக்கரிடம், “எப்படி இருக்கேன்?” என்றேன். “உங்களுக்கு என்னண்ணே... அப்படியே ‘வின்னர்’ வடிவேலு மாதிரியே இருக்கீங்க...” என்று கூறிய புரோக்கரை முறைத்தபடி, “இந்தப் பொண்ணுக்காச்சும் என்னைப் பிடிக்குமாய்யா?” …
-
- 1 reply
- 2.3k views
-
-
சீதாவனம் – ஜி .விஜயபத்மா சூர்ய அஸ்தமனம் துவங்கி விட்டது… காட்டுக்குள் …இருளுடன் , குளிரும் போட்டி போட்டுக்கொண்டு ….பரவத் துவங்கியிருந்தது . துறவிகளுக்கு வரக்கூடாத கவலை வால்மீகியின் முகத்தில் தென்பட்டது .. அவர் தன்னை தானே சமாதனப்படுத்திகொண்டு , வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார் . அவர் தன் தலையை இருபுறமும் திருப்பி பார்த்தபடி ஆட்டி ,ஆட்டிக்கொண்டு நடக்கும் வேகமும் ,நாலாப்புறமும் துலாவும் கண்களையும் பார்த்தால் காட்டிற்குள் அவர் யாரையோ தேடுகிறார் என்பது புலப்படுகிறது .. கண்களுக்கு எட்டிய வரையில் தூரத்தில் வெயில் விலகிக்கொள்ள ,இருளை விருப்பத்துடன் போர்த்திக் கொள்ளும் பயிர்களின் மங்கலான , கருமஞ்சள் நிறம் தவிர வேறு எதுவும் தெரியவில்லை ..இன்று ஏனோ காட்டின் மொத்த மரங்களும் சத்தி…
-
- 1 reply
- 1.4k views
-
-
http://sinnakuddy1.b...-post_8635.html
-
- 1 reply
- 689 views
-
-
அங்கீகாரம்: ஒரு நிமிடக் கதை இரவு 11 மணி. நல்ல தூக்கத்தில் இருந்த சரவணனுக்கு ஏதோ சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தது. லைட் வெளிச்சம் கூச வைக்க கண்களைக் கசக்கியவாறே பார்த்தான். அருகில் உட்கார்ந்து தபால் கார்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவி லதா "சாரிங்க.." என்று கீழே விழுந்த தண்ணீர் டம்ளரை எடுத்தாள். எரிச்சலுடன் அவளைப் பார்த் தான். இவளுக்கு வேறு வேலை கிடையாது. கடையில் காசு கொடுத்து வாங்கும் வார, இரு வார, மாத இதழ்கள் தவிர அலுவலகத்திலிருந்து அவன் கொண்டு வரும் பத்திரிகைகளை யும் ஒன்றுவிடாமல் படித்து விடுவாள். படிப்பதோடு, அதில் அவளுக்கு பிடித்த விஷயங்களைப் பாராட்டி அந்தப் பத்திரிகைக்கு எழுதிவிட்டுத்தான் ஓய்வாள். …
-
- 1 reply
- 747 views
-
-
மரியாதை - ஒரு நிமிடக் கதை திருமண மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் “வாங்க சார்..” என்று வரவேற்ற வேலு வின் மகனைப் பார்த்து லேசாய் எரிச்சலடைந்தேன். பதினாறு வயதிருக்கும். அவன் மட்டும் தனியே நின்று வரவேற்றுக் கொண்டிருந்தான். அருகில் பெரிய மனிதர்கள் யாருமில்லை. ‘வர்றவங்கள வாசல்ல நின்னு வரவேற்கணும்கிற பண்பு தெரியாம என்ன விசேஷம் நடத்துறாங்க... சின்ன பையனை நிறுத்தியிருக்கிறாங்களே’ என்று நினைத்துக் கொண்டேன். “அப்பா எங்கேப்பா..?’’ வேலுவின் மகன் சுரேஷிடம் கேட்டேன். “சாப்பாட்டு கூடத்துல நிக்கிறாங்க சார்’’ என்றான். மேடையில் இருந்த புதுமணத் தம்பதியருக்…
-
- 1 reply
- 2k views
-
-
உதறல்-சப்னாஸ் ஹாசிம் ஓவியம் : எஸ்.நளீம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அச்சமற்ற மனித நடமாட்டத்தை சந்தைக்கூச்சலை வாகன நெரிசலை, பாடசாலை சிறுவர்களை அவர்கள் கண்டிருந்தனர். அநுராதபுரத்தில் ஆங்காங்கே இருந்த புத்தர் சிலைகளைச் சுற்றியிருந்த வெண் அலரிப்பூக்கள் பகலிலும் மணத்துக்கிடந்தன. சில இடங்களில் பாதை தடுப்புகள் போடப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. நீண்ட நாள் பசி, வயிறு ஒட்டி அடியிலிருந்து பிழம்பாய் எரிவது மூக்கு நாசிவரை சுட்டது. வேறு வழியின்றி ஒரு முஸ்லிம் ஹோட்டலை பார்த்து உள்ளே முதலாளியிடம் ஒரு சிலர் நிலைமையைப் புரியவைக்க அவர்களில் ஒருவனுக்கு அவசரமாய் அடைத்துக்கொண்டு வந்திருந்ததில் ஒதுங்கப் போனான். கழிவறையில் மஞ்சள் சுவர் பூச்சு போலக் கசந்து ஒழுகியதும் அந…
-
- 1 reply
- 953 views
-
-
ஏமாற்றம் தன் காதலி மல்லிகாவின் அப்பாவுக்கு தன் நண்பனை விட்டே போன் போடச் சொன்னான் சீனு. ‘‘உங்க பொண்ணு ஒரு பையனோட கேவலமா ஊர் சுத்துறா!’’ என்று சொல்லச் சொன்னவன், இவர்கள் வெளியிடங்களில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டான். ‘‘எந்த அப்பனுக்கும் கோவம் வரும். நிச்சயமா வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடுவார்!’’ - சீனு சொல்லிச் சிரித்தான். ‘‘டேய், மல்லிகாவைப் பிடிச்சுதானே காதலிச்சே? அப்புறம் ஏன்டா இப்படி கழட்டி விடறே?’’ - நண்பன் கேட்டான். ‘‘காதலிக்கப் பிடிச்சுதுடா. கல்யாணம்னா அது பணக்காரப் பொண்ணா இருக்க வேண்டாமா? இந்த அயிரை மீனை ஆத்துலயே விட்டுருவோம். கண்டிப்பா ஒரு விலாங்கு மீன் மாட்டும்!’’ என்றான் வில்லத்தனமாக. அன்று மாலை... சீனு …
-
- 1 reply
- 1.3k views
-
-
பல்லிராஜா February 2, 2023 ஷோபாசக்தி நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்! ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட உபவாசங்களாலும், மற்றைய தினங்களில் ஒருவேளை மட்டுமே உள்ளங்கையளவு உண்ணும் வழக்கத்தாலும் தேரரின் உடல் வற்றிக் கிடக்கிற…
-
- 1 reply
- 1.1k views
-