கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மாசு எனக்கு இன்றைக்கு பள்ளிக்குக் கிளம்பவே மனம் இல்லை. என்னமோ மிகவும் பாரமாகத்தான் இருந்தது. நினைவெல்லாம் மதுவைச் சுற்றியே இருந்தது. ஆனால் கால்கள் மட்டும் பழக்க தோஷத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றன. இன்று உடலுறுப்பு பற்றி ஸ்கூலில், பாடம் நடத்த வேண்டும். எந்த மெட்டீரியலும் தயார் செய்து கொள்ளவில்லை. பஸ் வந்து நின்றது. அவசர அவசரமாய் ஏறிய எனக்கு நல்ல வேளை உட்கார இடம் கிடைத்தது. கொஞ்ச நேரம் டெக்ஸ்ட் புக்கைப் புரட்டினால், இன்று எடுக்கப் போகும் புது பாடத்தின் மெட்டிரியல்களைக் கொஞ்சம் சேகரித்துக் கொள்ளலாம். புத்தகத்தைப் புரட்டி, அதற்கான பக்கத்தையும் எடுத்துப் பிரித்துக் கொண…
-
- 1 reply
- 1.3k views
-
-
அசோகா சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல் ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டு சுவற்றில் …
-
- 1 reply
- 1.3k views
-
-
மாடும் மனிதனும் விந்தன் மயிலைக் காளைகள் இரண்டுக்கும் கோமா என்று கேள்விப் பட்டதிலிருந்து மன்னார்குடி மாணிக்கம் பிள்ளையின் மனம் சரியாகவே இல்லை. பொழுது விடிந்ததும் மாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து, அவற்றுக்கு வேண்டிய சிகிச்சையை அளிக்குமாறு பணித்துவிட்டு வெளியே வந்தார். பத்துப் பன்னிரண்டு பேர் அவருடைய வரவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டு இருந்தனர். "என்னடா பயல்களா, என்ன சேதி?'' "பத்து நாளாப் பட்டினிங்க; பண்ணையிலே ஏதாச்சும்...!'' "வேலைதானே? அதற்குத்தான் இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கேடா!'' "முனியனுக்கு மூணு நாளாக் காய்ச்சல்னு கேள்விப்பட்டோம்...!'' "ஆமாம், அதற்கென்ன இப்போது?'' "அவனுக்குப் பதிலா எங்களில் யாரையாச்சும்...!'' …
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்…
-
- 9 replies
- 1.3k views
-
-
வினை விதித்தவன்... பட்டுக்கோட்டை ராஜா இவர்களின் தெருவில் திறக்கப்பட்டு வெற்றிகரமாய் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கிற கோரிக்கையுடன் இளநகை, வாசு இருவருமாய் அதிகாலை நேரத்திலேயே ஆத்மநாதனைப் பார்க்க வந்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் பிறகு அவரைச் சந்திப்பது கடினம் என்று வாசு எச்சரிக்கை செய்திருந்தான். ஆத்மநாதன் சமூக ஆர்வலர். அதனாலேயே திருமணத்தை மறுத்தவர். ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பவர். இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளின் வயிறு கலங்கும். சார்பதிவு அதிகாரியாய்ப் பதவி உயர்வு பெற்று நல்ல வருமானத்தில் இருந்தவர், தன் அலுவலகத்தில் இருக்கும் ஊழல்பெருச்சாளிகளின் கொட்டம் காணத் தாங்காமல் வேல…
-
- 2 replies
- 1.2k views
-
-
அலி : ஒரு விமர்சகன் சொன்ன கதை அலியிடம் எப்பொழுதாவது அதைக் கேட்டுவிடவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், ‘என்ன மச்சான்… நீயே இப்புடிக் கேக்காய்?’ என்று திருப்பிக்கேட்டுவிடுவானோ என நினைத்து, தவிர்த்துவந்தேன். நிறைய நேரங்களில் அவன் ஜோக்கும் பாட்டும் சிரிப்புமாக இருக்கும்போதெல்லாம் அந்தக்கேள்வி என் அடித்தொண்டை வரை வந்துசெல்லும். அதைத் துப்பிவிடத் தகுந்த சந்தர்ப்பம் நோக்கியிருந்தேன். கூட்டாளிமாருடன் சேர்ந்து எங்காவது முசுப்பாத்தியாகச் செல்வதென்றால் அலியைத் தவறாமல் கூட்டிச்செல்வோம். செல்லுமிடங்களையெல்லாம் மகிழ்ச்சியால் நிறைத்துவிடக்கூடியவன் அவன். சிங்களப்புறத்தில் நீண்டகாலம் வேலைசெய்தவன் என்பதால், சிங்கள் செக்ஸ் ஜோக்குகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. ஒரே ஜோக்கை அவன…
-
- 0 replies
- 1.2k views
-
-
சத்திய போதிமரம்!… ( சிறுகதை ) கே.கணேஷ். November 05, 2018 in: கதைகள் சிறப்புச் சிறுகதைகள் (17) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கே.கணேஷ் எழுதிய ‘சத்திய போதிமரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் ஃபிகராம் ஃபீகர்! ப் ளஸ் டூ படிக்கிற தன் மகன் சுரேஷ§க்கு டெர்ம் ஃபீஸ் கட்டிவிட்டு வெளியே வந்தார் பாஸ்கரன். மாணவி கள் மார்போடு ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
உச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவரும். அம்மா அறைக்குள் அழுதபடி இருந்தார். ஒரு புறம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்ற கவலையாக இருக்கலாம். மறுபுறம் அப்பாவிடம் இரவும் காலையும் வாங்கிய அடியினால் ஏற்பட்ட வலியாகவும் இருக்கலாம். நேற்று இரவு அப்பா காசு கொண்டுவருவார் என நம்பிக்கொண்டு காத்திருந்தோம்.. அவர் காசு கொண்டுவந்தால் காலையும் மதியமும் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என அவாப்பட்டுக்கொண்டும் மனம் அங்காலாய்த்துக்கொண்டும் இருந்தோம். இப்பவெல்லாம் நல்ல சாப்பாடு என்பது காலையில் ஒரு துண்டுப் பாணும் சினியும் அல்லது வாழைப்பழமும் மதியம் பருப்பும் தக்காளிக் குழம்பும் தான். ஆனால் அப்பா காசு கொண…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாணயம் ”நாளைக்கு பீசு கொண்டாரலைன்னா டியூசனுக்கு வர வேண்டாம்னு சார் சொல்லிட்டார்” ஏழு வயது தங்கராசு அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி வருத்தத்தோடு காலண்டரைப் பார்த்தாள். இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல் அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில் அட்வான்சாக இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது. மூன்றாவது வீட்டு எசமான் வேலைக்கு சேரும் போதே அட்வான்ஸ் எல்லாம் கேட்கக் கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார். அவள் கணவன் குடிகாரன். ஜேப்படித் திருடனும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாதமாகும். ஆனால் வந்தும் அவளுக்குப் பெரிய உபகாரமாகப் போகிறதில்லை. அவனுக்கும் சேர்த்து அவள் தான் செலவு செய்ய …
-
- 3 replies
- 1.2k views
-
-
A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே …
-
- 1 reply
- 1.2k views
-
-
சீதை எஸ். ஷங்கரநாராயணன் அவன் பெயர் மாரிமுத்து. அவனுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இல்லை. மாரிமுத்து ஓர் உழவன். ஆற்றுப் பாசனம் பொய்த்த உழவன். எட்டு ஏக்கர் பூமி. இருக்கிற வயல்வெளியில் அவன் பங்கு அதிகம் தான். பூமி வறண்டதால் வானம் வறண்டதா, வானம் வறண்டதால் பூமி வறண்டதா தெரியாது. மழை வரும் வரும் என்று ரேஷன் கடை பாமாயிலுக்குப் போல காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. அது வந்தாமாதிரி வந்து ஒரேநாளில் தீர்ந்துவிட்டதாகச் சொல்லிவிடுகிறார்கள். சிறு தூறல். அத்தோடு வானம் கலைந்து விடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, என்கிறாப் போல. இனியும் வானத்தை எவ்வளவு நம்புவது. வாய்க்காலை நம்பி இனி பிரயோசனம் இல்லை. நம்ம பேரைச் சொல்லி மாநிலமும் மாநிலமும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
சட்டவிரோதக்குடியேற்றவாசியி
-
- 3 replies
- 1.2k views
-
-
20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி அணியினர் நூற்று இருபது ஓட்டங்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும். பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே …
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=5]மச்சம் - இஸ்மத் சுக்தாய்[/size] உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் தமிழில் – ராகவன் தம்பி “சௌத்ரி… ஓ சௌத்ரி… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். “உஷ்… உஷ்”… “எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?” “எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு” “மரியாதையா சும்மா உட்காரு. இல்லேன்னா…” “இனிமேலும் என்னால உட்கார முடியாது. இங்கே பாரு. உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு. ஹே ராம்” “ச்சு… ச்சு… “எனக்கு அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு” சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை. “இங்கே… தோ… இங்கேதான். இங்கே பின்பக்கமா எறும்பு க…
-
- 0 replies
- 1.2k views
-
-
டேஸ்ட் இதுவரை நன்றாக வியாபாரம் நடந்துகொண்டு இருந்த ஸ்வீட் ஸ்டால், திடீரென சரிவு நிலைக்கு வந்தது எப்படி எனக் குழம்பினார் ஆறுமுகம்.பல வருடங்களாக அங்கே மாஸ்டராக இருப்பவர் மாசிலாமணிதான். ஒரே ஆள். அவரது கைப்பக்குவம்தான் கடையின் வியாபார வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. இப்பொழுதும் அவர்தான் மாஸ்டர். ஆனால் முன்பு இருந்த ஓட்டம், இப்போது இல்லை. இதை மகன் சந்துருவிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, ‘‘நீங்க வீட்ல இருங்கப்பா, நான் பார்த்துக்கிறேன்!’’ என்றான்.அதே மாஸ்டர்தான். ஒரே மாதம்தான். பழைய வியாபாரத்தைவிட அதிகமாகவே கொண்டு வந்துவிட்டான் சந்துரு. ஆறுமுகம் தன் மகனிடம் காரணத்தை கேட்டார். ‘‘அப்பா, நான் மாஸ்டர்கிட்ட பேசினேன். அவருக்கு இப்ப சுகர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கணவரை இழந்த அந்த அம்மாவின் சொந்தமாக இப்போ அந்த வீட்டில் இருப்பது அவளின் கடைசி மகளும், கடைசி மகனை நம்பி ஓடிவந்த மருமகளும் தான். இராணுவ கட்டுப்பாடு பகுதியில், இரவு நேரத்தில் ஆண்கள் வீட்டில் இருந்தாலும் தங்க பயப்படும் காலத்தில், அவர்களுக்கு துணிவும் நம்பிக்கையும் இருந்தமைக்கு அந்த அம்மாவின் கடைசி மகன் தான் காரணம். தங்களுக்கு ஏதும் நடக்க அவன் விடமாட்டான். மூத்த மகன், கொழும்பில் நடந்த காட்டி கொடுப்பில் சிறைபட்டு ஆறுமாதம். இரண்டாவது மகன் புலிசேனையில் அண்ணனுக்கு பக்கபலமாக, ஒரு வருடத்துக்கு இரு முறை தான் பேசுவான். இருந்த ஒரே ஆறுதல் அவவின் கடைசி மகன், கொள்ளி போட கூடவே வைத்திருந்தாள் அந்த அம்மா. அவனோ அண்ணன்கள் வழியில், புலிகளின் மறைமுக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக யாழ் மாவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடன் மஹாத்மன் அமைதி நிலவியது. நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. விழித்துக்கொண்டேன். கண்ணிமைகளை இலேசாய்த் திறந்தபடியே எதிரில் இருப்போரைக் கண்ணோட்டமிட்டேன். அழுக்கு உடைகளைத் தரித்திருந்த ஒரு சீனன் சன்னக் குரலில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நடுவில் பயணி ஒருவர் தன் அகலமான நீண்ட துணிப் பெட்டியின்மீது தலையைக் கவிழ்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். இடது மூலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
என்னுயிர் நீதானே... - ஒரு நிமிடக்கதை சுபாகர் என்னுயிர் நீதானே... ''சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன். …
-
- 1 reply
- 1.2k views
-
-
சற்றே நீண்ட கதை.. நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஞாயிறு காலை பத்து மணிக்கு கைபேசி சிணுங்கியது. அலாரம் என்று நினைத்து அணைத்து விட்டு திரும்பிப் படுத்தேன். மறுபடியும் அழைப்பு. "யா..ழு" "டேய்.. எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்" கணேசனின் குரல் பயங்கர டெசிபலில் கேட்டது. அவ்வளவுதான். தூக்கம் கலைந்து விட்டது. "டேய்.. வேணாம்டா" என்று சொல்ல முயற்சிப்பதற்குள் கணேசன் மறுபடி அலறினான். "ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" வைத்து விட்டான். போச்சு. ஒரு லீவு நாள் அவுட். அதை விடவும் கொடுமை அவனுடன் பெண் பார்க்கப் போவது. விஷம், துப்பாக்கி, தூக்குக் கயிறு, கணேசனுடன் பெண் பார்க்கப் போவது இதில் எது கொடுமை என்றால் கணேசன்! ஒவ்வொரு தரமும் என்னை ஏ…
-
- 4 replies
- 1.2k views
-
-
தீர்ப்பு! ஒரு நிமிடக் கதை தீர்ப்பு! அவசரமாகக் கிளம்பிக்கொண்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறுகதை - இளங்கவி தந்தையை 5 வயதிலேயே இழந்த குடும்பச்சுமை, திருமணமாகத மூன்று சகோதரிகள், ஊரெல்லாம் கடன்பட்டு வளர்த்தெடுத்த அம்மா இப்படிச் சொல்லொண்ணாத் துயரங்களை புலம்பெயர்தேசத்திலே வந்த புதிதில் அனுபவித்துக்கொண்டிருந்தான் கணேஸ். வேலையும் பல மாதங்களாய்க் கிடைக்காமல் இருந்த கஸ்ரத்திலிருந்தவனுக்கு ஓர் வேலை கிடைத்தது ஏதோ கடவுள் செயல் போல இருந்தது... எப்ப முதல் சம்பளம் வரும், கொஞ்சமென்றாலும் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சம்பளமும் வர அதை எவரெவருக்கு எப்படிப் பிரிக்கலாம் என்று கணக்குப் பார்த்து முடிந்து தூக்கத்துக்குப் போனவனுக்கு அதிகாலை வேளை ஓர் தொலைபேசி அழைப்பு. அதிகாலை தொலைபேசியென்றாலே அது இலங்கையில் இருந்துதான் என்று நினைத்து பதறியட…
-
- 6 replies
- 1.2k views
-
-
கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திர…
-
- 2 replies
- 1.2k views
-
-
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயிலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், தெரிய வந்தது. யாரும் வந்து பார்க்கவுமில்லை: மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது…
-
- 2 replies
- 1.2k views
-
-
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். . ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், . “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் …
-
-
- 2 replies
- 1.2k views
-