கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஆன்டன் செகாவ் 'பந்தயம்' மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப் போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது. பந்தயம் பனி பொழியும் ஓர் இரவில் தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
வாழ்க்கை - 1 தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம். ம…
-
- 6 replies
- 1.1k views
-
-
‘என்னப்பா எலிப் புழுக்கையோடை அரிசி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறியள். இதை என்னெண்டு தவத்திறது…?’ என்று புறுபுறுத்தாள் எனது மனைவி. அவளுக்கு, வேலையால் வந்த களை! அத்துடன், சமையலை கெதியாய் முடித்தால்தான், மகளின் படிப்பைக் கவனிக்கலாம். அரிசி பருப்பு போன்ற உணவுப் பண்டங்கள் யாவும், இங்கு கலப்படமின்றி மிகவும் சுத்தமாகக் கடைகளில் கிடைக்கும். கலப்படம் இருந்தால் ‘பாவனையாளர் திணைக்களத்தில்’ புகார் செய்யலாம். கடைக்காரங்களுக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரிகள் இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். சுத்தமான அரிசியை இரண்டு தரம் சாட்டுக்கு தண்ணீரில் கழுவியபின் ‘றைஸ் குக்கருக்குள்’ போடும் என் மனைவிக்கு இந்த எலிப்புழுக்கை பெரும் சவாலாக அமைந்தது. ‘சுளகு இருந்தால் தாருங…
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை... தமிழ்னா பிறந்தது அவ்வளவு தப்பா>? உலகில் இருக்கும் எல்லா உயிர் இனத்துக்கும் நிம்மதி கிடைத்தாலும் எங்களுக்கு கிடைக்க விட மட்டார்கள் போல.. என விம்மி விம்மி அழுதாள் அமுதா?????? கடவுளுக்கு கூட கண் இல்லை போல... எங்களை மட்டும் மீண்டும் மீண்டும் சோதிக்கிறார்... என்ன பாவம் பண்ணினம்.. இன்றுடன் சாப்பிட்டு எத்தினை நாள் வயதான தாயை பார்த்தாள்..பாவம் வயதான காலத்தில் நிம்மதி கூட இல்லாமல் தெரு தெருவாய் ஒட்டம்... இன்று ஆவாது சாப்பாடு வாங்கி குடுக்க வேணும் என்று நினைத்த படி தன் பழைய நினைவில் நோக்கினாள்.. தனது 20வயதிலையே கல்யாணம் பண்ணிய அமுதா ஒரு வருசம் தன் கணவனுடன் இனியமாக சந்தோசமாக வாழ்ந்தாள்..அவளோட வசந்த காலம் எவ்வளவு இனிமையானது... விட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
"நானே வருவேன்" உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, 'நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார் என்று என் அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது ஆனால் இவை எல்லாம் புராணத்தில் தான் காண்கிறோம். இந்த புராணங்கள் வாய் மொழிமூலம் சில நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்து, கி பி இரண்டாம் ஆண்டளவில் அல்லது அதற்குப் பின் எழுத்தில் எழுதப் பட்டவையாகும். நான் ஒரு கிழமைக்கு முன் தான் திருமணம் செய்து, என் மனைவியை, அவளின் சொந்த கிராமத்தில் இருந்து வெளியே, தலை நகரத்துக்கு கூட்டி வந்துள்ளேன். இங்கு, கொழும்பையும் உள்ளடக்கிய மேல் மாகாணத்தில், தமிழ் பேசும் மக்கள் மொத்தமாக [தமிழர் + தமிழ் பேசும் முஸ்லீம்] 15 % தான் வரும். ஆனால் கொழும்பு என்று மட்டும் எ…
-
-
- 4 replies
- 1.1k views
-
-
அந்தப் புதன் கிழமை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒருவரும் சாகவில்லை. ஏறக்குறைய ஆறுமாதத்தில் ஆக அதிர்ஷ்டம் கூடிய நாள் அதுதான். வழக்கமாக நாளுக்கு ஒன்று, இரண்டு, ஐந்து, பத்துப்பேர் என செத்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தீர்மானித்தேன். எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று.’ அகதி ஒரு நாற்காலியில் கைப்பிடிகளில் முட்டாமல் நடுவே ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். அமண்டா ஒரு சோபாவில் காலை நீட்டியபடி அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ரொறொன்ரோவின் லொப்லோஸ் சுப்பர்மார்க்கெட்டுக்கு முன்னே அவனை அமண்டா சந்தித்தாள். அவனுக்கு 25 வயது இருக்கும். ஒரு விளம்பரத் துண்டை அவளிடம் நீட்டினான். அசிரத்தையாக அதைப் படித்தபோது அதில் இப்படி எழுதியிருந்தது. ’நான் ஓர் அக…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நல்ல செய்தி... ஆருயிர் நண்பன் குமார் இறந்த பத்தாம் நாள்... இரவில் தன் பெயர் சொல்லி யாரோ அழைப்பது கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான் தினகர். …
-
- 0 replies
- 1.1k views
-
-
திண்ணை வீட்டுப் பிச்சாயி பாட்டி - ஒரு தலைமுறையின் அடையாளம்! - சிறுகதை #MyVikatan விகடன் வாசகர் பாட்டி ( Representational Image | Pixabay ) வைக்கோலில் வேய்ந்த இந்தத் திண்ணை வீடுதான் இக்கிராமத்தில் தன் அடையாளத்தை இழக்காமல் இன்னும் இருக்கிறது. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! பிச்சாயி பாட்டி வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தாள். சுகமாய் காற்று அடித்துக்கொண்டிருந்தது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் உக்காந்து யோசிப்பாய்ங்களோ?! ‘‘ரெண்டு மாசத்துக்கு மேலாச்சு. இன்னும் ஒரு தகவலும் வரலையே?’’ என்றார் பெருமாள். என் நண்பர் மாணிக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வர்ணகலா by ஷோபாசக்தி இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டே பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய கா…
-
- 4 replies
- 1.1k views
-
-
மனிதாபிமானம் காலை 6.30, ராஜு அவசர அவசரமாக குளித்து விட்டு பூஜை அறைக்கு வந்தான், சாமியை கும்பிட்டுக் கொண்டே “சுக்கலாம் பரதரம் விஷ்ணும் . . . . அம்மா டையம் ஆச்சு சீக்கிரம் டீபன் எடுத்து வை . . .சசிவர்ணம் சதுர்புஜம் . . .” “டேய் சாமி ரூம்ல சாமியை பத்தி மட்டும் நன” என்றாள் அம்மா புன்சிரிப்புடன். வீட்டு ஹாலில் தூக்க கலக்கத்தில் உக்கார்ந்து இருந்த சொந்தகாரர்கள் அனைவரும் சிரித்தனர். ராஜுவும் பொய் கோபத்தோடு “ஏன் சொல்லமாட்டிங்க இன்னைக்கு ஆபிஸ் வேலையா பாண்டி போணும், காலை சீக்கிரம் எழுப்ப சொன்னா எழுப்பாம நக்கல் வேற” என்று சாப்பிட டைய்னிங் டேபிலில் உக்கார்ந்தான். அதுவரை அமைதியாக இருந்த ராஜுவின் தங்கை மதி வந்து “இங்க பார்டா” என்று அவள் தலையை ராஜுவிடம் காட…
-
- 1 reply
- 1.1k views
-
-
விசிறி வீடு: காலத்தின் வாசனை தஞ்சாவூர்க் கவிராயர் நாட்டு மருந்துகளும் பூஜை சாமான்களும் விற்கும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பனை ஓலை விசிறி என் கவனத்தை ஈர்த்தது. நான் அப்படியே ஐம்பது வருடங்கள் பின்னால் போய்விட்டேன். ஆசையாக அதைத் தொட்டேன். என் உடம்பு சிலிர்த்தது. பத்திரமாக அதை வீட்டுக்கு வாங்கி வந்தேன். ஓரத்தில் முக்கோணம் முக்கோணமாகப் பூ பின்னிய விசிறி. பச்சை ஓலை வாசனை இன்னும் விசிறியில் ஒட்டிக்கொண்டிருந்தது. விசிறும்போது ஆஹா.. முகத்தில் மோதும் அந்த பச்சை வாசனை! எங்கள் வீட்டு உறுப்பினர்கள் ஒருவர் கூட எடுத்து விசிறிப் பார்க்கவில்லை. அதற்குத் தேவையும் இல்லை அல்லவா? வீட்டில் எங்கு பார்த்தாலும் மி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார் இளங்கோ-டிசே 'எழுதியதால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்களின் மனைவிகள், பிள்ளைகள் சார்பாக உங்களை இங்கு வரவேற்கின்றோம்' என ஒரு பெண்மணி, காலி இலக்கிய விழாவுக்கு வந்தவர்களுக்கு துண்டுப்பிரசுரம் கொடுத்துக்கொண்டிருந்தார். வசந்த அப்போதுதான் புகையிரத நிலையத்தில் இறங்கி பிரபல்யம் வாய்ந்த காலி கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி நடந்து வந்துகொண்டிருந்தான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அது வசந்த அவனது காதலியைச் சந்திக்கும் நாளாக இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நயோமிக்கு கடல் மீது அளவற்ற விருப்பு இருந்தது. நீர்கொழும்பு, அறுகம்பே, ஹிக்கடுவ, பாசிக்குடா என கடற்கரைகளைத் தேடி அடிக்கடி வசந்தவும், நயோமியும் போய்க்கொண்டிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா "கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே. ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவன், “பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்” என்றான். தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் “நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்” என்றான். மேலும் சிறிது தூரம் சென்ற அவர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அவள் அப்பா இறந்து போன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும் போது அப்பா , அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள் . அப்போது அவளுக்கு வயது எட்டு. அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன. அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை. யாருடைய கட்சி சரியென்று இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான் . காலை ஏழு மணி , பகல் ஒன்றரை மணி , மாலை மூன்று மணி என்று சொல்லிவைத்த மாதிரி தெருமுனைக்குச் சென்று திரும்புவான் . திரும்பி வரும் போது அவனிடமிருந்து ஒரு விநோத வாசனை வரும். ” என்னடா இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள் உமா வரதராஜன் அவள் ஆற்றங்கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள். மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம் மெல்ல மெல்லக் கறுப்பாகிக் கொண்டிருந்தது. கரையோரம் வரிசையாக நின்ற தென்னை, சவுக்கு, கற்றா, போகன்விலா மரங்களின் மறைவில் ஒளித்துக் கொண்டிருப்பது போலவும் மஞ்சள் வெயிலின் வெளிச்சத்துக்குக் கண்கூசும் ஒரு பாதாளச் சிறைக்கைதி போலவும் அவள் தங்கியிருந்த அந்த விடுதி தோன்றியது. அவளுக்கு அந்த நகரம் புதியது. முதல் தடவையாக அங்கே வந்திறங்கியபோது நீரின் நடுவே நிற்பது போல் உணர்ந்தாள். கடலாலும் ஆறாலும் வளைக்கப்பட்ட நீராலான நகரம்போல் அது இருந்தது. கடல் நீரேரிக்குக் குறுக்காக ஆங்காங்கே சில, சிறு நிலத் திட்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனசெல்லாம் மலர்விழி - சுப்ரஜா கிராமமே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை பக்கத்து டவுனில் புதியதாய் தொழில் தொடங்கியிருக்கும் பலசரக்கு மையம் ஒன்று கிராமத்தில் பொங்கல் கோலப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தது. லோக்கல் தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள், துண்டு பிரசுரங்கள் போன்றவை பெண்கள் அனைவரையும் அதில் கலந்துகொள்ள அழைத்துக் கொண்டிருந்தது. பொங்கல் அன்று மாலை ஏழு மணிக்கு வரும் கலெக்டர் அவற்றை பார்த்து சிறந்த கோலங்களை தெரிவு செய்வார். ரொக்கப் பரிசுகளும், பல மாதங்களுக்கான இலவச மளிகை சாமான் கூப்பன்களும் உண்டு. புதுமையான போட்டி. கிராமத்து பெண்களுக்கு கேட்கவா வேண்டும். ஆளாளுக்கு வீட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இவன் ~யானைப்பாகன் (நட்சத்திரன் செவ்விந்தியன்) “இண்டைக்கெப்பிடியும் சைக்கிள் பழகிப் போடோணும்” இப்படி நினைத்துக் கொண்டு தான் இவன் போனான். எண்ணெய் வைத்து உரசிய தலைமயிரை, கையால் பின்னால் கோதியவாறு போனான். கையிலும் எண்ணெய் இருந்திருக்க வேண்டும். காலில் குனிந்து தடவினான். இவன் பழகுகின்ற சைக்கிள் வேலியில் சாத்திக் கிடந்தது இவன் அப்பா காலத்துச்சைக்கிள். இப்போது பழசாகிவிட்டது 'பிறேக்கோ' பின் சில்லு மட்காட்டோ, இல்லாத சைக்கிள். சைக்கிள் என்று சொல்வதற்கு வேண்டிய ஆகக் குறைந்த சாமான்கள் மட்டும் தான். பனி இன்னமும் முற்றாக அகலவில்லை தூரத்தில் மென்நீலப் புகைமாதிரி... அநேகமாக இப்போது ஏழு மணியாக இருக்கலாம். அல்லது நேற்றைய நேரமாக இருக்கலாம். மீண்டும் ஒரு தடவை கை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த வாரம், பனியால் மூடப்பட்ட ஒரு நாள், ரொறொன்ரோ மருத்துவமனை ஒன்றில் ஹெலன் என்ற பெண்மணியை சந்தித்தேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சுப்பர்மாக்கெட்டுக்கு வெளியே சந்தித்து இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவர் முகத்தை மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். முதுகு எலும்பு எக்ஸ்ரே எடுப்பதற்காக வந்திருந்தார். இவருடைய கணவர் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். தீராத முதுகு வலியால் ஹெலன் 24 மணிநேரமும் வேதனை அனுபவிக்கிறார். அதே துப்புரவுத் தொழிலைத்தான் இப்பவும் செய்கிறார். எந்த நேரமும் வேலை போகக்கூடும். ஆனால் பழைய சிரிப்பு இன்னமும் போகவில்லை. இவரிடம் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. *********"**"**""""************************* இத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கார்பொரேட் அலுவலகத்தில் காட்டுப்புலி! காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. நாலாவது நாள்... பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! (ஆனந்த விகடன் - 13.9.1964) "இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!'' என்றார் புதுவை நண்பர். ''இந்த வீதிக்குப் பெயர்..?'' ''ஈசுவரன் கோயில் தெரு!'' கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற் கரையில் போய் முடிகிறது. ''பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு... அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!'' கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற …
-
- 5 replies
- 1.1k views
-
-
நான் கண்ணாடிக்காரன்! "இப்போது நான் கரும்பலகையில் எழுதும் சொற்களுக்கு எதிர்க்கருத்து சொல் எழுதுங்கோ பார்க்கலாம்.. ஒரு பிழைக்கு ஒரு அடி பரிசு" என்று அறிவிப்பு செய்துகொண்டே விறுவிறுவென எழுத ஆரம்பித்தார் ஜீவன் சேர். எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஜீவன் சேரை எங்களில் சிலருக்கு பிடிக்கும், பலருக்கு அவர் பெயரை சொன்னாலே வியர்த்து விடும். அழகாக புது பஷனில் ஜீன்ஸ் அணிந்திருப்பார். அவர் பேசும்போது முகத்திலே துறுதுறுவென மீசை நர்த்தனமாடும். இரத்தம் பாய்ந்து சிவப்பேறிய அவரது கண்கள் அவர் ஒரு பெரிய கோபக்காரர் என்பதை பறைசாற்றும். ஏதாவது தப்பு செய்தால் முதலில் அடிப்பார் பிறகு விலாவரியாக சிறப்பு விசாரணையை தொடங்குவார். அவர் வருகிறார் என்றாலே ஒரு பயலும் இருக்கிற இடத்தினை விட்டு அசைய மாட்ட…
-
- 2 replies
- 1.1k views
-
-
காமாட்சி .......கனகசுந்தரம் தம்பதிகளுக்கு இரு பெண பிள்ளைகள். மூத்தவள் படிப்பு முடிந்ததும் , கனகர் வேலைக்கு விட மறுத்து விடார். இளையவள் தந்தையுடன் போராடி மேற்படிப்புக்காக் யுனிவேர்சிட்டியில் படித்து கொண்டு இருந்தாள். கனகர் அந்த ஊரிலே பெரும் அரிசி ஆலைக்கு சொந்தக் காரர். முப்பது மேற்பட்ட் பணியாளர்களை கொண்டு தொழிலை நடத்தி வந்தார். மாலையில் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க தங்கை மகன் , வாகீசனை துணைக்கு அழைத்தார் . அவனும் மாமன் மீதுள்ள் மரியதையால் ஏற்றுக்கொண்டான். . முன்பு அவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை பார்த்தவன். அவனது கம்பனி , ஒப்பந்தம் முடிந்ததால் , ஊருக்கு வந்து வேறு நிறுவனத்தில் இணைய காத்திருப்பவன். கனகரின் தங்கை விசாலம் , கணவனை இழந்த பின் ஒரே மகன…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: காவிரி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.. அ+ அ- சத்தமாக வைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி. "என்ன ஐபிஎல்தானே..” என்று கேட்டபடி , ரிமோட்டைப்பிடுங்கி "படக்" என்று தொலைக்காட்சியை நிறுத்தினார். "தண்ணீருக்கு போறாடறாங்க , விளையாட்டு இப்ப கேக்குதா?" அய்யப்பனுக்கு வேண்டுதல் போல் கறுப்பு வேட்டி , கறுப்புச்சட்டை. அவர் கைகளில் கறுப்புப்புடவை. "இந்தா, இத கட்டிக்கிட்டு வாக் போகலாம் புறப்படு" மனைவி நடக்க , சகாக்களுடன் மரத்தின் நிழலில் அம…
-
- 0 replies
- 1.1k views
-