கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அச்சக் காடு - கிருஷ்ணா டாவின்ஸி கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது. படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில்…
-
- 1 reply
- 629 views
-
-
பரமேஸ்வரி - சிறுகதை பரமேஸ்வரியின் மகனுக்கு, மாமனாரின் பெயரைத்தான் சூட்டியிருந்தனர். மரியாதை காரணமாக, எவரும் `உலகநாதன்’ என்று அழைப்பதில்லை. பரமேஸ்வரியின் கணவர் ராமச்சந்திரன், `மணி’ என்றுதான் அழைப்பார். பரமேஸ்வரி, ``என் சர்க்கரைக்கட்டி... என் பூந்திக் குஞ்சே!” என இஷ்டம்போல் கொஞ்சுவாள். கணவர் ராமச்சந்திரனுக்கு, ஊர் ஊராகச் சென்று பிரின்டிங் ஆர்டர் எடுக்கும் வேலை. மாமா உலகநாதன், கலெக்டர் ஆபீஸில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். பரமேஸ்வரி, ராமநாதபுரம் அலையாங்குளத்துக்காரி (அழகன்குளம்தான் அவ்வளவு அழகாக உருமாறியிருக்கு!). சாதுவாக, அப்பிராணியாக இருந்தாலும் போக்குவரத்தெல்லாம் அடிதடிக் குடும்பங்களோடுதான். பேச்சு அதாட்டியமாக இருக்கும், பயப்பட மாட்டாள். ஆண…
-
- 1 reply
- 12k views
-
-
ஸ்பரிசம் - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: செந்தில் சின்னப்பா ரெட்டியாரின் உடல், அவர் எப்போதும் படுத்திருக்கும் அந்த வெளிர் நிற சுமைதாங்கிக் கல்லின் மீதே கிடத்தப்பட்டிருந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அவசரமாய்த் தட்டி எழுப்பிவிட்டதைப்போல, கண்களைச் சிவக்கச் சிவக்கத் தேய்த்துக்கொண்டே எழுந்த சூரியன் ஏரிக்கரையின் பின்னிருந்து மசமசவென முளைக்கத் தொடங்கியிருந்தான். சுற்றிலும் பரவியிருந்த சாயம்போன இருட்டிலும் உடலின் மீது போர்த்தியிருந்த வெள்ளை வேட்டி மட்டும் பளிச்செனத் தெரிந்தது. சுமைதாங்கிக் கல்லைப் பக்கவாட்டில் தாங்கியிருந்த புங்கமரம், வழக்கத்துக்கு மாறாக தன் நீண்ட கிளைகளை விறைப்பாக நீட்டிக்கொண்டு நின்ற…
-
- 1 reply
- 1.8k views
-
-
கள்ளந்திரி சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் “ச்சே... ப்ச்ச்ச்... ச்சே...” மிகுந்த கோபமும் ஆற்றாமையும் அழுகையும் கலந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தார் மூர்த்தி அண்ணன். நமக்கு நேரடியாக பேரிடியே விழுந்தாலும் பிரச்னை இல்லைபோலும். பிறரிடம் சென்று, `உன் அப்பா இறந்துவிட்டார்’ எனச் சொல்லிய பிறகு அவர்களை எதிர்கொள்வதுதான், அந்தக் கணத்தில் வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச சவால் எனத் தோன்றியது எனக்கு. அணைத்துவைத்திருந்த கைபேசியை எடுத்தவர், அதை உயிர்ப்பிக்கும்போதே அழைப்பு வந்தது. எதிர்முனையில் அவரின் அம்மா. அழுகைச் சத்தம் ஸ்பீக்கரில் போடாமலே வெளியில் கேட்டது. ஒன்றும் பேசாமல், போனை கட் செய்தவர், நான் கண…
-
- 1 reply
- 1.3k views
-
-
காதலர் தினத்திற்காக எழுதிய கதை சற்றுக் காலதாமதாக வருகிறது. வாசிச்சப் போட்டு அப்படியே போகாமல் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள். தெளிவு முற்றத்தில் வேப்ப மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்த றஜீவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். வளர்ப்பு நாய் அவனருகே வந்து தன் முன்னங் கால்களால் சுரண்டி அவனை விளையாட அழைத்தது. வழமை போல அதனுடன் சேர்ந்து விளையாடவோ அல்லது அதன் செயற்பாட்டை ரசிக்கும் மனநிலையிலோ றஜீவன் இல்லை என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படித் தெரியப் போகிறது. தகப்பனார் காலையில் பேசிய விடயம் தொடர்பாக அவன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது குழம்பிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் றஜீவனின் மனத்திரையில் தோன்றிக் கொண்டிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய மனுசி - ஆதிலட்சுமி சிவகுமார் - நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. 'இந்தப் பிஞ்சுகள் ரெண்டும்.. மழையிலையும்.. குளிரிலையும் விறைக்கக் குடாது.." குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாள். பாயைவிட்டு விலகிப்போய் ஓரமாய் தூங்கிக்கொண்டிருந்தார்கள்... மூத்தவள் ஐஸ்வர்யா அச்சில் வார்த்த மாதிரி தகப்பனையே போன்று அகலிகா கொஞ்சம் கறுப்பு. ஆனால் இவளைப்போல கம்பி கம்பியாய் நீளமான தலைமுடி. "மூத்தபிள்ளை சரியாய்த் தேப்பனையே மாதிரி... நல்ல நேரம் பொம்பிளைப் பிள…
-
- 1 reply
- 828 views
-
-
03- oct- 2012 புதன் அவன் மூக்கிற்கும், மேல் உதட்டிற்கும் இடையே உள்ள பகுதியிலும் அவன் பிறப்புறுப்புக்குத் தொட்டடுத்த மேல் பகுதியிலும், புழுதி படிந்தாற் போல பொன்னிற ரோமங்கள் வளரத் தொடங்கியிருந்த காலம்... அம்புலிமாமாவிலிருந்து, அகிலன், கல்கி, மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, எஸ்.கணேசலிங்கம், டொமினிக் ஜீவா, லட்சுமி, சூடாமணி, என அவன் வாசிப்பு வளரத் தொடங்கியிருந்த காலம்... "முத்திரைக்கதை" முக்கியத்துவத்துடன் ஜெயகாந்தன் என்ற இளம் எழுத்தாளரை ஆனந்த விகடன் பிரபலப் படுத்திக் கொண்டிருந்த காலமும் அதுதான்... அவன் அப்பாதான் ஜெயகாந்தனை அவனுக்கு அறிமுகப் படுத்தியிருந்தார். விகடனில் அவன் படித்த முதல் ஜெய…
-
- 1 reply
- 994 views
-
-
அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம் - சிறுகதை கணேசகுமாரன், ஓவியங்கள்: ஹாசிப்கான் என் தந்தை மேல் பிரியமானவருக்கு... என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது... இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது இருக்கலாம். என்னைப் பெற்றவளைவிட ஐந்து வயது குறைவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வயதில், இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதம், ஆச்சர்யமானது மட்டும் அல்ல; அவசியமாகிப்போன துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான். 'கந்தசாமிக்கு, வாரத்துக்கு எட்டு நாள் இருந்தா ரொம்பச் சௌரியமா இருந்திருக்கும். நைனார்குளத்துல நாலு நாளும், தாமரைக்குளத்துல நாலு நாளுமாப் பிரிச்சு வாழ்ந்திருவான். அவ…
-
- 1 reply
- 2.1k views
- 1 follower
-
-
சோமசுந்தரம் தன் வீட்டீற்கு விருந்துண்ண வந்த தன் தோழன் நாகலிங்கத்துடன் உரையாடுகின்றார் சோ: வேற என்ன புதினம்?? நா: நீ கேள்விப்பட்டனியா, இங்கு வளர்ந்த ஒரு தமிழ் இளைஞ்யன் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறானாம். 15ந்து வயதிலேயே யேர்மனிக்கு வந்தவனாம். தாயகத்தில,; பின்பு வெளிநாட்டில் தான் பெற்ற அனுபவங்களை பற்றித்தன் யேர்மன் மொழியில் எழுதியிருக்கிறானாம். இது உன்மையிலே ஒரு பாராட்ட வேண்டீய விடயம் தானே, அல்லவா?? சோ: ஓம்மடா, இப்படீப்பட்ட பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த வெளிநாட்டீலே நம் தமிழ் இளைஞ்யர்கள் செய்யும் தவறுகளைப்பற்ரிதான் கூடுதலாக மற்றவர்களுக்கும் சொல்லி கதைக்கின்;றோம்;. நீ சொன்னமாதிரி நல்ல வளியில் செல்லும்; பிள்ளைகளை, நாம் எம்மால் ஏன்றவரை ழுன்னேற உதவவே…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொன்னுலகம் சிவா கிருஷ்ணமூர்த்தி அட்மிரல் பார்க்கினுள் வரும் போதே கழுத்துக் கசகசத்தது. எதிர் சைக்கிள் காரரின் கண்களைத் தொட்டு பரஸ்பரம் தலையசைத்துக்கொண்ட பின் சீட்டின் முன் வந்து சற்றே ஏறி பெடலை மிதித்த போது வியர்வை ஒரு சொட்டு சைக்கிள் பாரில் மோதியது. புன்னகைத்துக்கொண்டேன். சைக்கிள் பாதையில் கவனமாகத் திரும்பி மேட்டில் ஏறி மிதிக்கும் போது அனிச்சையாக வானத்தைப் பார்த்தேன். ஒரு மேகத்துணுக்கு கூட இல்லை. எங்கும் எங்கெங்கும் நீலம். இன்று நிச்சயம் 28 டிகிரியாகவாது இருக்கும். இங்கிலாந்தின் வேனிர் காலமென்பது பெரும்பாலான நாட்களில் வெறும் வானிலை அறிக்கைத்தாளில்தான். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அல்லது அதிகப் பட்சம் மூன்று வாரங்கள் 28-32 டிகிரி இருக்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
எண்ணும்பொழுது - ஜெயமோகன் “தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது. அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டைச் சுழித்து “என்ன பார்வை?”என்றாள் “சும்மா” ”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டைச் சுழித்தாள் “பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?” “பாக்கிறது மட்டுமா?” “பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம…
-
- 1 reply
- 882 views
-
-
எனக்கான முத்தம் - சிறுகதை ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம் ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ''இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது'' என்ற இடத்தில், இப்போது எட்டாம் வகுப்பு B செக்ஷன் செயல்படுவதாக கரும்பலகை சொன்னது. அரை சுவரும் அதற்கு மேல் ஓட்டுக் கூரையுமாகக் கட்டடம் அப்படியே இருந்தது. ''இதுல நீ எங்க உட்காந்திருந்த... ஃபர்ஸ்ட் பெஞ்சா?'' ''அப்பல்லாம் பெஞ்ச் இல்லை, தரையிலதான் உட்காருவோம்.'' ''அப்ப உன் ஃப்ரெண்ட் யாரு?'' எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என் ஞாபகத்திறனின் போதாமையை அவள் அறிவாள். மேற்கொண்டு வற்புறுத்தவில்லை. ''கால் வலிக்குது... போ…
-
- 1 reply
- 3.2k views
-
-
எங்கோ… யாரோ… யாருக்காகவோ….!? … முருகபூபதி. “ சேர்… வவுனியா வந்திட்டுது.” சாரதி அருகில் அரைத்தூக்கத்திலிருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான். அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும்போது, ‘எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் வவுனியாவை வந்தடைந்துவிடலாம்’ என்று சொன்ன சாரதி சொன்னபடி நிரூபித்தும்விட்டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ளவத்தையில் அறிமுகப்படுத்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டார் மூர்த்தி. போர் முடிந்து இரண்டுவருடங்களின் பின்னர் இலங்கை வந்திருந்த மூர்த்திக்கு இலங்கையில் பார்ப்பதற்கு சொந்தபந்தங்கள் என்று குறிப்பிடும்படியாக எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் புகலிடம்பெற்று, கடைகள் நடத்தலாம். சங்கங்களில் இணைந்திருக்கலாம். கோயில…
-
- 1 reply
- 1.1k views
-
-
புட்டுக்குழல் “மடத்தர டிக்கெட் எறங்கிக்கொள்ளு” “ணங்க் ணங்க் ணங்க்” என்ற மணிச் சத்தத்தோடு ஜலதோசம் பிடித்த கனத்த குரல்.கடைசி இருக்கையில் நெடுஞ்சாண் கிடையாய் நல்ல உறக்கத்தில் இருந்தான் முத்தையா. கடைசி இருக்கைக்கும் அதற்கு முந்தைய இருக்கைக்கும் இடையிலுள்ள இடைவெளியில் பிளாஸ்டிக்,அலுமினிய பாத்திரங்கள் அடங்கிய சாக்குப்பை.சாக்கினுள் புட்டுக்குடம்,புட்டுக்குழல் தவிர மற்ற அனைத்தும் சிறிய சிறிய பாத்திரங்கள்-எதெடுத்தாலும் இருபது ரூபாய். விளக்கொளி கொடுத்த கண்ணெரிச்சலோடு ஆங்காங்கே தலைகள் உருண்டன.மூன்றுமுறை சத்தம் கொடுத்த நடத்துனர் விறுவிறுவென கடைசி இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “ஈ பாண்டி மாருக்கு கண்ணடைச்சா பின்ன தொறக்குல்ல,”முனங்கிக்கொண்டே சென்று வாய் பிள…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: ஐம்பதாயிரம் ராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...!” அதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்?” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள். “அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா. சகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா! எனக்கு கல்யாணம் ஆகிட்ட…
-
- 1 reply
- 3.7k views
-
-
பாகீரதி... பாகீரதி... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: அரஸ் 'சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. 'அடுத்த இஷ்யூ... முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று 'மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்…
-
- 1 reply
- 2.4k views
-
-
[size=5]ஹரியால் எப்பொழுதோ எழுதப்பட்ட கட்டுரை..இப்பொழுதும் நிலைமைகளில் எவ்வித மாற்றமும் இன்றி எமது சமூகக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் இன்றி,எங்கள் அடிமை நிலையில் மாற்றம் இன்றி,சிங்கள மேலாதிக்கதனத்தில் மாற்றமின்றி,எம்மவர்களின் மனங்களில் நிலவும் சாதிய மேலாதிக்க எண்ணங்களில் மாற்றமின்றி..எதுவுமே மாறாமல்..எதையும் மாற்றாமல் எங்கள் போராட்டம்.... [/size][size=5]நங்கள் மாறாததால் எங்கள் போராட்டத்தால் எதையும் மாற்றமுடியவில்லையா..?[/size] [size=5]-முரண்வெளி கூட்டுக்கட்டுரை-நன்றி ஹரி இராசலெட்ச்சுமி... ‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும் எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும் தணலோடும் கோடை வந்திறங்கிற்றெம் மண்மீது மறுபடியும் -தவ.சஜிதரன்- ‘Corpses …
-
- 1 reply
- 889 views
-
-
கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’ அதிகமான சமூக அக்கறை காரணமாகவோ, இந்த சமூகக்கட்டமைப்பின் மீதான திருப்தியீனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமோ தெரியவில்லை, சரவணன் பேச்சில் எப்போதும் இப்படியான ஒருவித கோபம் தெரியும். இரண்டுமே மணல்தான் என்றாலும் வடமராட்சி கிழக்கின் சிலிக்கா வெண்மணலுக்கும் புல்மோட்டை இல்மனைற் கருமணலுக்கும் எவ்வாறு ஒத்த இயல்புகள் எவையும் இல்லையோ அது…
-
- 1 reply
- 1.3k views
-
-
குசலா எங்கே? உ மாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர் விஸ்வம், இரு பிள்ளைகளை உமாவுக்குத் துணையாக விட்டுவிட்டு இறந்துபோனார். அந்தப் பேரிழப்புக்குப் பின்பும் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் கொடுத்ததே அந்த வாரிசுகள்தான்! ஆபீஸ், வீடு, பிள…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் குரல் வானொலியில் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று நாடகம் "உயிர்த்தெழுகை". நாடகத்தை கேட்கும் பொழுது நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகள்வுகள்போல இருக்கின்றன. சில நேரங்களில் மயிர்கூற் செரியவும் வைக்கின்ற ஓர் அற்புத நாடகம். கேட்கத்தவறாதீர்கள் உறவுகளே..
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதை: கடி "என்னது...உடம்பு அரிக்கிறதா....எரிச்சலா...அரிப்பா?" கோமதியிடம் நூறாவது முறையாகக் கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கான ஆரம்பம் நேற்று அவள் சொன்ன சில வார்த்தைகள்...அவை " என்னன்னு தெரியலை... ஒரு வாரமாகவே இரவு முழுவதும் உடல் அரிக்கிறது. தூங்கப் போகும்போது இருப்பதில்லை...." சொல்லிமுடிப்பதற்குள் தலைக்குத்தலை முடிவுகள் சொல்லப்பட்டது.. " கோமதி... வீட்டிலே சுகர் ஹிஸ்டரி இருக்கு...எனக்கென்னவோ இது அதன் அறிகுறி போல்தான் தெரிகிறது" இது கணவர். " அம்மா, எதைச்சாப்பிட்ட....எனக்கென்னவோ அலர்ஜிதான்னு தோணறது..." இது மகன். …
-
- 1 reply
- 1.3k views
-
-
Where are you from? - - வ.ந.கிரிதரன் - "டாக்ஸி கிடைக்குமா?" வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன். "Wher…
-
- 1 reply
- 442 views
-
-
நாவல் பழ இளவரசியின் கதை-பிரபஞ்சன் வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம் அவர்கள் காட்டுக்குள் பிரவேசித்துப் பல யுகங்கள் ஆனாற்போல பெரியவன் உணர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேர். ஒருவன், பெரிய ஆகிருதியும், படர்ந்த பாதங் களையும் கொண்டிருந்தான். எதிர்ப் படும் மரங்களைத் தோள்களால் தள்ளிவிடக்கூடும் எனும்படி முன்னே நடந்து சென்றான். பெரியவனின் மார்புக்கு மட்டில் வளர்ந்தவனாக சின்னவன் இருந்தான். பெரியவன் இழுத்துச் செல்லும் குதிரை; பின்னால், சக்கரங்களில் உருளும் சிறு தேர் போலச் சின்னவன் இருந்தான்.... சின்னவன், பெரியவனின் முதுகைப் பார்த்தபடி நடந்தான். விசாலமான புல் முளைத்த மைதானம் போல அது இருக்கவே, முன்னால் இருந் ததை அவன் பார்க்கக்கூடாமல், பக்கவாட்டில் மட்டு…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறுகதை எப்படி எழுத வேண்டும், அதன் கட்டமைப்பு பற்றி ஒரு வழிகாட்டலை தந்தால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்
-
- 1 reply
- 578 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பேரம் காரிலிருந்தபடியே நடமாடும் காய்கற…
-
- 1 reply
- 4.1k views
-