Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. (பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். - நன்றி: புதினம் 17.01.2009) "என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. "ஆள் "றெயினா"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனிய…

  2. "என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. "ஆள் 'றெயினா'லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனியே அமைக்கப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் வசிப்பவன். ஜேர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி ஏறக்குறைய இரண்டு வருடங்களாவது இருக்கும். ஜேர்மன் மண்ணை மிதித்த முதல்நாள்.... சோதி வீட்டுத் தொலைபேசி நள்ளிரவில் அலறிய…

    • 14 replies
    • 2k views
  3. Started by Athavan CH,

    பாத்திமா - ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஒரு மௌன இரைச்சல் என் மனதைக் கிழிக்கிறது. பிச்சை எடுப்பவளிடம் இத்தனை தன்னம்பிக்கையை எதிர்பார்த்திராததால் பாத்திமா எங்கள் முதல் சந்திப்பிலிருந்தே எ…

    • 0 replies
    • 2.6k views
  4. Started by கோமகன்,

    " என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?" எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே . "வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ". கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் . "நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ". பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் . "பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்". "என்னகதை ?" "இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்க…

    • 52 replies
    • 6.7k views
  5. பாம்பின் கை பாம்பறியும்! (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்) இளமைக் காலக் குறுகுறுப்புக்களும் கலகலப்புக்களும் மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயங்கள். கிழமை நெருங்கி வரும்போது மன இளமையைக் காத்துக் கொள்ள அவைதான் பெரிதும் உதவுகின்றன. அனுபவங்களின் ஆரம்பப் படிகளில் நின்று கொண்டு, எதையும் எப்படியாவது செய்து விடத் துடிக்கும் துறுதுறுப்பு நிறைந்த அந்தக் காலம்தான் மனித வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை முதல் அத்தியாயமாக நம் ஒவ்வொருவரினதும் சரித்திர நூலில் எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றது. எத்தனையோ விதமான அனுபவங்கள், இன்பங்கள், துன்பங்கள், மன உளைச்சல்கள், சந்திப்புக்கள், இனிமைகள், கவலைகள்! கொஞ்சக் காலமே இருக்கும் அந்தப் பருவம் மாறி, இல் வாழ்க்கை என்…

  6. பாம்பு - சிறுகதை சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம் வாசலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது படக்கெனத் தெரிந்து, பளிச்சென ஒளிர்ந்து, பட்டென மறைந்தது. மின்னல் தெறிப்பின் விநாடி ஒளிர்வு. இமைமூடும் வேகத்தில் அவசர மறைவு. மரப்பலகை அடுக்கின் கீழ் அது விறுவிறுவென ஊர்ந்து போனதை அவரது மூளை தன் ஞாபக ஏட்டில் சட்டெனப் பதித்துக்கொண்டதால், உடனே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார். `அது பாம்புதானே? பாம்புபோலத்தானே இருந்தது... பாம்பாகத்தானே இருக்க வேண்டும்!’ நன்றாகத் தீர்மானித்துக் கொண்ட பிறகே, கறாரான முடிவுக்கு வந்தார். `பாம்புதான். நிச்சயமாக... அது பாம்புதான்.’ அதிர்ந்துபோனார் திவாகரன். விதிர்விதிர்த்துப் போனது தேகம். உ…

  7. பாம்பு படம் காட்டியக் கதை கல்தோன்றி மண் தோன்றாத காலத்து முன்தோன்றிய மூத்தகுடிகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு வளமான தேசத்தின் குடிமக்கள் வர்க்க, இன, மொழி, சாதி, மத ஒடுக்குமுறைகளாலும், சுரண்டல்களாலும் பெரும்துயரில் சிக்குண்டு அவதிப்பட்டுக் கிடந்தனர். அவ்வேளையில் ஒரு நச்சுப் பாம்பு குட்டி ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு படம் காட்டிக் கொண்டிருந்தது. சோசலிசம்… சுதந்திரம்… விடுதலை…என்று விதவிதமாய் படங்கள் காட்டியது. அந்தப் பாம்பு குட்டியை போனால் போகட்டும் என்று மக்கள் காப்பாற்றினார்கள். ஆனாலும் அந்த பாம்பு குட்டி விடாமல் படம் காட்டிக் கொண்டிருந்தது. வேடிக்கைக் காட்டிலால் கூட்டம் கூடத்தானே செய்யும். அந்த பாம்பு குட்டியை வேடிக்கைப் பார்க்க பெரும்கூட்டம் கூடியது. கும…

  8. பாம்புபிடி இனம் கல்பேலியாவும் ரொக்ஸானா என்னும் குழந்தையும்..! - ராஜஸ்தான் கதைகள் முடிவிலிருந்து தொடங்குகிறேன் இந்தப் பயணக் கதையை. பயணம் முடிந்த ஏழாவது நாள் சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் போதே பெரும் மழை கொட்டத் தொடங்கியிருந்தது. சுற்றி ஒரே பரபரப்பு. எல்லோருக்கும் வீட்டுக்குத் திரும்பும் சந்தோஷம். எனக்கு அப்படி ஓர் உணர்வு இல்லை. என் மனம் இன்னும் "ரொக்ஸானா"வின் சிரிப்பிலேயே நிலைத்திருந்தது. முழு பற்கள் முளைத்திடாத அவள் பொக்கை வாயும், அந்தச் சிணுங்கலும், என்னை நோக்கி அவ்வப்போது அவள் நீட்டிய அந்த விரல்களின் மென்மையும், அவள் கண்களின் அழகைப் பெருமளவுக் கூட்டிய அந்த "மை"யும், நடனத்தின் இடையிடையே அவளின் அம்மா சில நிமிடங்கள் வந்து அவளுக்கு ப…

  9. பாம்பும் ஏணியும் கே.எஸ்.சுதாகர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி 2018 இல் முதற் பரிசு பெற்ற சிறுகதை கே.எஸ்.சுதாகரின் 'பாம்பும் ஏணியும்'. நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது. - பதிவுகள் - சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கட…

  10. பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! (ஆனந்த விகடன் - 13.9.1964) "இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!'' என்றார் புதுவை நண்பர். ''இந்த வீதிக்குப் பெயர்..?'' ''ஈசுவரன் கோயில் தெரு!'' கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற் கரையில் போய் முடிகிறது. ''பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு... அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!'' கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற …

  11. Started by நவீனன்,

    பார்ட் டைம் ஜெனரல் பீட்டர்ஸ் சாலையிலிருந்த அந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், கூட்டம் நிறைந்திருந்தது. மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள், தமக்கு தேவையான வண்டியின் ஸ்பேர் பார்ட்சுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடையின் பின்னாலிருந்த கோடவுனிலிருந்து பொருட்கள் பெரிய பெரிய அட்டைப் பெட்டியில் வெளியே வந்து, கடை முன் நிறுத்தப்பட்டிருக்கும் டெம்போ வேன், மினி லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கடையில் ஒரு பக்கமாக உட்கார்ந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. கனஜோராக நடக்கும் வியாபாரத்தைப் பார்த்தால், ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் போலிருந்தது.…

  12. Started by shanthy,

    பார்வதி (2007 ஜூன் 28, குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து) தமிழில் :- ஃபஹீமாஜஹான்- “அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு கச கசா வித்துக்களைப் போட்டு சர்பத் செய்து தந்தாள். மிகவும் அழகான பெண்ணுடல் ஒன்று ஆணின் நடையில் செல்வதை நான் பார்த்திருந்தேன்.” பார்வதிக்கு 36 வயதுதான் ஆகிறது. EPRLF இலிருந்து விலகிய ஒருவரைத் திருமணம் செய்திருந்தாள். அந்தக் காலத்தில் அவள் கோராவலியில் வாழ்ந்தாள். குடும்பி மலையடிவாரத்தில் காணப்படும் ஒரு ஊர் இதுவாகும். 1990 ஆண்டுக் கலவரத்தின் போது வீடுவாசலைக…

    • 0 replies
    • 817 views
  13. பார்வை தாட்சாயணி பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய் வளைந்து இறங்கிய கூடாரம். மழைத்துளிகள் வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இ…

    • 1 reply
    • 1.5k views
  14. நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும், இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ் குடியிருப்பில் வாழ்க்கையை தொடங்கினர். சுகந்தன் …

  15. பாற்கஞ்சி! … சி.வைத்திலிங்கம். June 30, 2018 சிறப்புச் சிறுகதைகள் (5) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – சி.வைத்திலிங்கம் எழுதிய ‘பாற்கஞ்சி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ........ ‘ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி…’ ‘சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.’ ‘இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே’ ‘கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா…

  16. நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத…

    • 1 reply
    • 700 views
  17. Started by nunavilan,

    பாலன் (சிறுகதை) ஆதியிலிருந்து தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கையில் எங்கள் ஊரின் வடக்குப்பகுதியில் காடொன்று தோன்றியதாம்.அபூர்வமாக அங்கு குடியேறிய சனங்கள் மிகுந்த ஆரோக்கியமாக வாழத்தொடங்கினார்கள்.சிறுவர்கள் காட்டுப்பழங்களை உண்டு மகிழ்ந்தார்கள்.மர அணில்களைப் பிடித்து நெருப்பில் வாட்டினார்கள்.முள்ளம்பன்றிகளை வேடிக்கையாக அடித்துக் கொன்றார்கள்.முந்திரியம் பழங்களை ஆய்ந்த சிறுமிகள் அவற்றை ஒரேயொரு கடிகடித்து வனத்தின் பள்ளங்களில் எறிந்தார்கள்.அதனாலேயே காட்டின் பச்சைய சுகந்தத்தில் செழிப்பு இசைந்து கொண்டிருந்தது. அப்போது சிறுமியாகவிருந்த உமையாள் பூப்பெய்தினாள்.அவள் ஏறிநின்று கொண்டிருந்த மரத்தைவிட்டு அச்சத்தோடு கீழே இறங்கி தாயைத் தேடி …

    • 0 replies
    • 857 views
  18. ஊ..ஊ..ஊ... டிங்..டாங்.. ஊ... சங்கு சத்தம், கிலு..கிலு னு உண்டியல் குலுக்குற சத்தம் வேறை வாசல் கதவிலை கனகம்மா வீட்டு நாய் வேறை வாள்..வாள் என்ற நித்திரை முறிச்ச அம்மா சனியனுகள் வந்திட்டிதுகள் விடியக்காலமையே என்ற அம்மான்ரை அர்ச்சனையோடை, ம்ம்ம்ம்... வரச்சொன்னதே நான் தானே அப்பத்தானே விடுவிங்கள் என்று மனசுக்குள்ளையே நினைச்சுக்கொண்டு அம்மா நான் கோயிலுக்கு போட்டுவாறேன் என்றதும் இந்த விடியக்காலமையே வேலை வெட்டி இல்லாம வாய்பார்த்ததுகள்... இதுக்குமேலை நின்றா தாங்க முடியாது ஜீவா எஸ்கேப்புடா என்று அம்மான்ர புறு புறுப்பிலை இருந்து தப்பி ஓடிவந்து பொடியளோடை சேர்ந்து திருவெம்பா பாட்டுக்குள்ளை செந்தமிழும் கலந்து ஜக்கியமாயிட்டம். ஏற்கனவே போட்ட பிளான் இண்டைக்கு மத்தியானம் கோழிப்புக்கை போ…

    • 16 replies
    • 1.1k views
  19. அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி, " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......" எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில் " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, " எண்டு பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப் பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு. இன…

  20. பால்ய பொழுதொன்றில் - குலசிங்கம் வசீகரன் பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன…

  21. அப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன். அம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார். அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று. விடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும்.…

  22. பாவ மன்னிப்பு | சாதனா சகாதேவன் புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒருசிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர்முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார். தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன்அழும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித்தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, …

  23. நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கஜனின் மனதிலும் ஒரு வித பதட்டம் அதிகரித்தது. வழமைக்கு மாறாக இதயம் விரைந்து அடித்துக் கொண்டது. இதயத் துடிப்பின் சத்தத்தை காதுகள் கூட உணர முடிந்தது. கால்களில் ஒரு வித நடுக்கம் பற்றிக் கொண்டிருந்தன. நெற்றியால் வியர்த்து ஊர்த்திக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் மத்தியில் கண்களைக் கூர்மையாக்கி அவள் மிக நெருங்கி வரும் வரை காத்திருந்தான். வெள்ளை வெளீர் என்ற பள்ளி உடையில் உயர்தர மாணவிக்குரிய மிடுக்குடன் பாவனா தோழிகள் சகிதம் நடந்து வந்து கொண்டிருந்தாள். வழமையாக காணும் பாவனாவாக அன்றி அன்று அவளின் முகத்தில் அழகு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நேற்றிரவு முகத்தை பசைகள் தடவி வெளிர்க்க வைத்திருப்பாளோ என்ற எண்ணத்தை மனதில் பறக்க விட்டபடி.. எக்ஸ்கியூஸ் மி.. …

  24. நான் தேடுகிறேன். தொலைந்தது கிடைத்தபின்னும் தொடர்ந்தும் தேடுகிறேன் பொருளை அல்லஅதன் அடையாளத்தை.. எப்போதோ நான் எழுதியது நினைவுக்குள் மீளெழுகிறது. நான் எப்போதுமே இப்படி நிகழும் என்று எண்ணியதேயில்லை. எனது பால்யத்தில் இச்சையின்றித் திரும்பிய எனது வீட்டொழுங்கையைக் கடந்தும் என் கால்கள் நடந்தன. எதுவும் பழகியதாயில்லை. எல்லாம் விலகியிருந்தது. என்னைவிட்டும் தம் ஆன்மாவை விட்டும். என் பதின்ம வயது இரவுகளில் மின்சாரமற்ற தெருக்களினூடே ஏமம் சாமம் பார்க்காமல் திரிந்து விட்டு நடுராத்திரியில் வீடு திரும்புகையில் என்னைக் கேளாமலே என் சைக்கிள் எங்கள் ஒழுங்கையில் திரும்பும். அந்த வீதியின் மேடு பள்ளங்களை என் சைக்கிளின் சக்கரங்கள் இருட்டிலும் விலத்தும். ஆனால் இன்…

    • 12 replies
    • 2.4k views
  25. பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை ஓவியம்: ஸ்யாம் விறுவிறுவென வீசிக்கொண்டிருந்த ஊதக்காற்றோடு போராடி, திமிலர்கள் கரை நோக்கி திமிலைச் செலுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சில வங்கங்களும் வல்லங்களும் நாவாய்களும் கடலில் மிதந்து கொண்டிருந்தன. பரதவ குலப் பெண்கள் இரவு ஆகாரத்துக்காகப் புளியும் மிளகும் சேர்த்துக் குழம்பு செய்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே இருளை விரட்ட தீச்சுளுந்துகள் ஏற்றப்பட்டிருந்தன. கடலோடிவிட்டு வந்த பரதவர் கைகளில் விரால், கனவா, மத்தி மீன்களும், சிலரிடம் சிவப்பு இறால்களும் நிறைந்திருந்தன. இரை தேடிச் சென்ற குருகுப் பறவை கூட்டங்களும், கடலின் மேற்பரப்பில் நீந்திய மீன்குஞ்சுகளைப் பசியாற உண்டுவிட்டு, புன்னைத் தோப்புக்கு விரைந்துகொண்டிருந்தன. ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.