கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கி.நடராசன் அப்துல் ரவூப் சட்டென விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். யாரோ கதவைத் தட்டியது போல இருந்தது. மங்கலான பச்சை ஒளியில் அவரது மனைவியும், குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்தார். குழந்தையின் உடலிலிருந்து இனிய பால்மணம் அந்த அறை எங்கும் தாய்மையை நிரப்பிக் கொண்டு இருந்தது. அப்துல் ரவூப் மணியைப் பார்த்தார். நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி இருந்தது. அப்பொழுது கடப்பாறை கொண்டு வீட்டின் கதவை இடிப்பது போல் பலமாக பலர் சேர்ந்து தட்டுவது கேட்டது. இந்த நடுநிசியில் யார் இப்படி…? கதவை திறக்காவிடில் உடைத்து விடுவார்களோ என்ற பயத்தில் விரைந்து சென்று திறந்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் அப்துல் ரவூப். ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே அங்கே…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரபு (எ) பிரபாகரன்! Wednesday, 17 September 2014 10:52 தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார். செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வேண்டுமென்று தான். அதனால் நண்பர்களை, எடிட்டர்களை, என் நலனில் அக்கறை கொண்டவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முதலில் அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். ஏன் என்றால் அவன்தான் என்னுடைய முதல் எதிரி என்பதால். நாங்கள் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். இலக்கியக் கூட்டங்ளில் சொற்பொழிவு ஆற்றுவோம். அவன் என்னைப் புகழ்ந்து பேசுவான். நான் அவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் உள்ளூர நான் அவனை வெறுத்துக் கொண்டிருந்ததேன். அவனும் என்னை வெறுக்…
-
- 5 replies
- 1.6k views
-
-
பிரம்மலோகத்தில் ஜுவராசிகள் நடிகர்கள் மணியம். எஸ். யேசுரட்ணம் பார்வதி. திருமதி ஆன் அன்ரனி பிரமதேவன். அப்புக்குட்டி ராஜகோபால் நாய் .பி.லோகதாஸ் வெளவால். ஆந்தையாக. திருமதி நவரட்ணராணி சிவலிங்கம் http://www.tamilnews24.com/twr/audio/Naada...iramalogam.smil http://eu-avalam.com/
-
- 5 replies
- 2.2k views
-
-
பிரம்மோபதேசம் சுப்பிரமணியனுக்கு உபநயனம்! அதாவது பூணூல் கல்யாணம் என்கிற பிரம்மோபதேசம். முகூர்த்த நாள் எல்லாம் குறித்தாகிவிட்டது. ஒற்றைப் படை வயதில்தான் பூணூல் போட வேண்டும் என்பது சம்பிரதாயம்! ஏழாவது வயதில் பூணூல் போடுவது சிலாக்கியம். காமம் மனதில் நுழைவதற்கு முன் பூணூல் போட்டு விட வேண்டும். சுப்பிரமணியனுக்கு இப்போது பதின்மூன்று வயது பிறந்திருக்கிறது. கல்யாண முஹூர்த்தம் எளிதில் கிடைத்துவிடும் பூணூலுக்கு முஹூர்த்தம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. "எல்லாருக்கும் சொன்னோம். ஆனால் அண்ணாவுக்கு சொல்ல வேண்டாமா?' என்றாள் அம்மா. அம்மாவின் ஒரே அண்ணா ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் மிகவும் ஆச்சாரமானவர். அடுத்தவர்கள் வீ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிராது மனு - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ஸ்யாம் கொளஞ்சியப்பர் கோயிலுக்குள் வந்த தங்கமணி, சீட்டு கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஓர் ஆளிடம் கேட்டாள். அவன் சொன்ன மாதிரியே நடந்து சீட்டு கட்டுகிற இடத்துக்கு வந்தாள். ஒரு வன்னிமரத்தைச் சுற்றி, ஆள் உயரத்துக்கு இருபது முப்பது சூலங்கள் ஊன்றப்பட்டி ருந்தன. ஒவ்வொரு சூலத்திலும் ஐந்நூறு, ஆயிரம் சீட்டுகள் கட்டப் பட்டிருந்தன. சூலத்தில் இடம் இல்லாததால், கட்டப்பட்டிருந்த சீட்டுகளின் நூலிலேயே கொத்துக்கொத்தாக சீட்டுகள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். தான் கொண்டுவந்திருந்த சீட்டை எந்த சூலத்தில் கட்டுவது எனப் பார்த்தாள். குண்டூசி குத்துகிற அளவுக்குக்கூட காலி இடம் இல்லை. …
-
- 0 replies
- 3k views
-
-
பிரிகூட்டில் துயிலும் விதைகள் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பாப்லோ அறிவுக்குயில், ஓவியங்கள்: ம.செ., சிறு வட்டமாகச் சுழன்று, மெள்ள விரிவடைந்து மேலெழும்பிய 'மூக்கரா காற்றின்’ ஒலியால் மிரண்ட ஆடுகள் எல்லாம், சருகுகளையும் குப்பைக் கூளங்களையும் உள்ளிழுத்தபடியே மிக வேகமாகச் சுழல்வதைக் கண்டு, தலையைத் தூக்கிப் பார்த்த மறுகணமே தீய்ந்துகிடந்த புல்பூண்டுகளைக் கரண்டத் தொடங்கின. தரிசு நிலம் எங்கும் வெயில் கொளுத்தியது. கோவணத்துணியாக விழுந்திருந்த நிழலில் ஒதுங்கிய பெருமாள், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். செம்மறிகள் என்றால் மேய்ப்பதில், வளைப்பதில் இவ்வளவு சிரமம் இருக்காது. இவை யாவும் வெள்ளாடுகள்... சிறிது நேரம் கண்ணயர்ந்தாலோ, தலை மற…
-
- 0 replies
- 2k views
-
-
பிரிந்தது ஓர் உயிர் அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன். காலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது. நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம். நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று …
-
- 12 replies
- 1.4k views
-
-
பிரியம் சமைக்கும் கூடு... உலகின் மிகத்தொன்மையான முதலாவது மனித நாகரீகத்தில் இருந்து இன்றுவரை வீடென்பது மனிதர்களிடமிருந்து இணைபிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மூத்த நாகரீகங்களில் தழைத்திருந்த மனிதர்களிடமும் சொந்தமாக வீடுகள் இருந்திருக்கின்றன.அந்தவீடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்க்காக அவர்களில் பலர் போர்க்களங்களில் போராடி வீழ்ந்திருக்கிறார்கள்.வீடுகளுக்காக உயிர்களைக்கூடக் கொடுக்குமளவிற்க்கு வீடுகள் மனிதர்களின் வாழ்வுடன் மிகமுக்கியமானவையாகப் பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. அப்படித்தான் அவர்களின் உயிரோடும் உணர்வோடும் பின்னிப்பிணைந்திருந்தது அவர்களின் அந்த வீடு… பல ஆண்டுகளின் பின்னர் இப்பொழுதுதான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
பிரியாணி - சிறுகதை மலையாள மூலம்: சந்தோஷ் ஏச்சிக்கானம், தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீஓவியங்கள்: அனில் கே.எஸ் கோபால் யாதவ் செருக்களையில் இருந்து இப்போதுதான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும் மூன்று வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. பஸ் தீயாய்ப் பாய்ந்துவந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும். அதுவரைக்கும் நாம் கலந்தன் ஹாஜியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார், அந்தக் காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது …
-
- 1 reply
- 7.3k views
-
-
கடலும் கடல் சாந்த நிலமும் கொண்ட அந்த நாடுக்கு திருமண்ம பேசி அனுப்ப பட்டவள் தான் வாசுகி . பாஸ்கரனை கைப்பிடித்து வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தார்கள். பாஸ்கரன் அந்நாட்டின் தொடர்பு நிலையத்தில் கணணி தொழில் நுட்ப பிரிவின் அதிகாரியாக பணியாற்றினான். இல்லறம் இன்பமாகவே போனது. இருவரும் தாயகத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றவர்களின் விருப்பப்படி வாசுகி மண ஒப்பந்தமாகி அந்த நாட்டுக்கு சென்றவள். ஆரம்ப காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்த வாழ்வின் பரிசாய் ஒரு பெண குழந்தைக்கு தாயானாள் . தனித்தனியான அவர்கள் வாழ்வு ஒரு குடும்பமானது . காலப்போக்கில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டாவது குழந்தையும் பெண குழந்தையாகியது . காலயில் பணிக்கு செல்லும் பாஸ்கரன் இடைவேளையின் போது த…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரிவு எப்போதும் பிளவு அல்ல .................. கண் நிறைந்த கண் அவனுக்கு (கணவனுக்கு ).......நீ சில நாட்களாக தொடர்பு கொள்ளாத் போதும், எனது தொலைவில் நின்று பேசாத போதும் உன்னை நான் மறக்கவில்லை. மறக்க கூடிய உறவா அது ...பள்ளி பருவத்திலே விழியில் விழுந்து ... இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவல்லவா? ...காலம் உருண்டு ஓடினாலும் கரையாத உறவல்லவா? எத்தனையோ எதிர்ப்பு வந்த போதும் , எதிர் நீச்சல் போட்டு ..உயிரோடு கலந்த உறவல்லவா? வேலை பளுவா? கடன் சுமையா? உடல் நலமின்மையா?...... கண்ணா ஓர் வார்த்தை பேசு ... கண்மணிகள் போல இரு செல்வங்கள் ..கண் அயரும் பொது அப்பா எங்கே என்று ... மனைவீ மக்களுடன் வாழ்ந்து விடுவாள் ... ஆனால் கணவனால் அது முடியாது. இதை உணர்ந்து இருப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே ஆமணக்கு பற்றை என்பன வளர்ந்திருக்கும் இடமாக ஒரு சில ஏக்கர் விஸ்திரணத்தில் இல்லை. அதற்கு மாறாக இது பல கிலோமீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம். யுகலிக்கப்ரஸ் மரங்களில் இருந்துவரும் கற்பூரவள்ளி நறுமணம் நிறைத்…
-
- 0 replies
- 823 views
-
-
1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நடேசன் குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டது காலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர் எனது உதவியாளர். மற்றவர் விருந்தினர் யோசப் மாத்தையா யோசப் மத்தையா. உள்ளே வாருங்கள் – சிங்களத்தில் அழைக்கும் குரல் குளியலறையிலிருந்து தொடர்கிறது. உடனே குளியலறைக்குள் நான…
-
- 1 reply
- 11.2k views
-
-
பிரேமலதா 1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நடேசன் குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டதுகாலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர் எனது உதவியாளர். மற்றவர் விருந்தினர் யோசப் மாத்தையா யோசப் மத்தையா. உள்ளே வாருங்கள் – சிங்களத்தில் அழைக்கும் குரல் குளியலறையிலிருந்து தொடர்கிறது. உடனே குளியலறைக்குள் நான் நு…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிறந்த மண் அப்பா, நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன. இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகதமலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசி நேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை. மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன்தான். …
-
- 4 replies
- 1.6k views
-
-
பிறந்தநாள்: ஒரு நிமிடக் கதை இன்று என் ஒரே மகன் கந்தர்வுக்கு பிறந்த நாள். நாங்கள் ஆனந்தமாக கொண்டாடி மகிழ என் கணவர் இப்போது உடன் இல்லை. வேலை நிமித்தமாய் மும்பை சென்றுள்ளார். “சித்ரா, என்னால கந்து பிறந்தநாளுக்கு வர முடியாது. அதுக்காக அப்படியே விட்டுடாதே... அவனுக்கு பிடிச்ச மாதிரி ரெண்டு, மூணு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்து காலையில மணக்குள விநாயகர் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போ. அப்படியே அன்னை ஆசிரமத்துல இருக்கிற என் அம்மாகிட்டேயும் அவனை அழைச்சுப் போய் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க வை.” “சரிங்க...” “ நான் ஆன்லைன்ல சற்குரு ஹோட்டல்ல நூறு பேருக்கு டின்னர் ஆர்டர் பண்ணியிருக்கேன். வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிறழ்வு ( சிறுகதை ) : ஜீ.முருகன் அது நடிகை மோனிகா பெலூச்சிதான். ஒரு கட்டிலில் அவள் அமர்ந்திருக்கிறாள். மரக்கட்டிலா இரும்புக்கட்டிலா ஞாபகம் இல்லை. மேக்கப் பூசிய அந்த முகம், உதட்டுச் சாயம் சற்றே கலைந்த உதடுகள், வெறுமையான கைகள், கீழாடை விலகி வெளிர்ந்த தொடையுடன் நீண்டிருக்கும் கால்கள்… அதற்குக் கீழே அவன் அமர்ந்திருக்கிறான், ஆமாம் கீழேதான். அவன் சொல்கிறான், “இப்படியும் சில அழகிகள் இருக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் கொஞ்சம் பகட்டாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். இதில் தப்பில்லை…” சற்று தள்ளி முறத்தில் ஏதோ புடைத்துக்கொண்டிருக்கும் அவன் அம்மா சிரிக்கிறாள். மோனிகா பெலூச்சியைப் பார்த்து அவன் கேட்கிறான், “உங்களை முத்தமிட்டுக்கொள்ளலாமா?” அவன் …
-
- 0 replies
- 1.3k views
-
-
பிறை நிலா சிறுகதை பிறை நிலா நியதி வரதன் காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள் அவனை தயார் படுத்த வேண்டும் .மகனை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றி விட்டு ,கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு சற்று ஓய்வாக இருக்கையில் மணி எட்டு என்பதை காட்ட அவள் பரபரப்பு இன்னும் அதிகமானது . சட்டென்று ஒரு குளியலை போட்டு விட்டு கைக்கு கிடைத்த புடவையை கட்டினால் ப…
-
- 1 reply
- 2.6k views
-
-
பிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன் July 1, 2020 அகர முதல்வன் ஓவியம்: வல்லபாய் அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார். “உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின் அடியில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிலோமி டீச்சர் கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, தன்னுள் புதைத்துக் கொள்ளவோ முடியாமலே போகிறது. அதற்கும் மேலே போகலாம் என்றாலும் சூன்யம் தாக்குகிறது. மரணபயம் வந்து விடுகிறது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் எல்லையை வைத்தது யார்? எல்லோருக்குமே இப்படித்தானா? இல்லை, என்னை மட்டும்தான் அந்த உச்சநிலைக்கு மேல் மரணம் கவ்விக் கொள்ள முயற்சிக்கிறதா? இருட்டு சூழ்ந்து வரும் சமயம் கண்கள் சுழன்று களைத்துப்போய் விடுபட்டு மூச்சு வாங்கிக் கொள்வதுதான் தொடர்ந்து நடக்கிறது! பின் இதற்கா? இதற்குத்தானா? இந்த அசிங்கத்துக்குத்தானா? என்று கலவியின் மீது வெறுப்புப் போர்வை உடனே போர்த்திக் கொள்கிறது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு, காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன…
-
- 14 replies
- 1.7k views
-
-
வருத்தம் தான் ...இப்ப அதிகம் இங்கு எழுதுவது இல்லை என்றாலும் ..பலர் தமிழில் இணையத்தில் எழுதுவதை அண்ணாந்து பார்த்திருக்கிறேன் ,,பார்த்த என்னை தமிழ் எழுத பழக்கியது இந்த யாழ் தான்.. எங்கோ மூலையில் மூணு பெக் அடித்து விட்டு குப்பனெ கிடந்த என்னை எல்லாம் கூட இணையத்தில் தெரிய உதவியது இந்த யாழ் தான் ... மூட படப்போகுது என்ற சிவப்பு விளக்கை பார்க்க கவலையாக தான் இருக்கிறது ,,நடத்துபவர்களுக்கு என்ன என்ன கஸ்டமோ தெரியாது ..இதை கேட்டவுடன் பார்த்தவுடன் மிகவும் கஸ்டமாகவும் இருக்கிறது. இதில் சண்டை பிடித்து இருப்போம் தமாசாக கதைத்து இருப்போம் இது எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாக பதிந்து இருக்கின்றன...நாங்கள் கும்மியடித்த பொற்காலத்தில் இருந்த யாழ் கள நண்பர்களை நினைத்து பார்க்கிறேன் புனை பெய…
-
- 13 replies
- 2k views
-
-
இது எப்ப நடந்தது என்று சரியாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும் எனது பத்து வயதுக்கு உட்பட்ட காலத்தில் தான்.அந்த காலத்தில் நாங்கள் எதாவது குழப்படியோ எங்கள் பாதுகாவலரின் விருப்பத்துக்கு மாறாகவோ செய்தால் பிள்ளை பிடிகாரரிடம் பிடித்து கொடுத்து விடுவோம் என்று வெருட்டுவதுண்டு.சந்திரனை காட்டி சோறு ஊட்டுவதுமுண்டு .இப்படி வெருட்டுவதுமுண்டு.இதன் உண்மை பொய்மை தெரியாததால் மகிழ்வதுமுண்டு வெருள்வதுமுண்டு .பிள்ளை பிடிகாரர் என்று யாரை தெரிவார்களென்றால் கொஞ்சம் குரூரம் ,கொஞ்சம் முரடன் ,பொதுவாக சராசரிகளின் தோற்றமில்லாதவர்களைதான்.றோட்டாலை வலது பக்கம் போகவேணும் இடது பக்கமாக வரணும் கரையாலை போகணொம் வான் பஸ் கார் வரும் கவனம் என்று ஆயிரம் உபதேசம் செய்து பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக…
-
- 7 replies
- 1.3k views
-
-
பிள்ளை மனம் கல்லு "ஏம்மா உனக்கு ஒருதடவ சொன்னா புரியாதா நல்ல மாட்டுக்கு ஒரு சூடு அதான் மாச மாச பெட்ரோல் போட்டு உன்ன பாக்க வரோம்ல நீ ஏன் இப்படி வந்து நிக்கிற காலங்காத்தாலே அழுதுட்டு வந்து நிக்கிற உன் மூஞ்சியை பாத்தா வெலங்குமா என் பொண்டாட்டி காலையிலயே ராமாயணம் பாட ஆரம்பிச்சுட்டா தேவையா எனக்கு உன் வயித்துல பொறந்தேன் பாரு...ச்சே.'' இதை கேட்ட மூத்தவள் பங்கஜத்தின் நெஞ்சம் வெடித்து விடாதா என்று தன் கையாலாகாத நிலையை எண்ணி மருகினாலே தவிர, வேறு ஏதும் செய்ய முடியாத நிலை. பெண்டாட்டி பேச்சை கேட்டு பணம் ஒன்றே பெரிது என்று கருதும் பிள்ளைகளை பெற்ற தன் இழிநிலை. பெண்பிள்ளையின் அருமை இப்போதல்லவா புரிகிறது? எவ்வளவு சந்தோஷத்துடன் பெற்ற இரண்டு…
-
- 0 replies
- 635 views
-