கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மனித யந்திரம்-புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 ) 1 ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கர…
-
- 0 replies
- 999 views
-
-
நாணயம் சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில் பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள். மாப்பிள்ளை வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம். பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர். திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட…
-
- 3 replies
- 999 views
- 1 follower
-
-
சபாபதி சார்! ஊரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை. வழக்கமான, மருத்துவ சோதனைக்காக, ஊரிலிருந்து அவர்கள் வந்து இறங்கியதுமே, ஒரு வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது; அது முடிந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின், இப்போது, மாலையில் தான், ஒருவாறு வீட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த நேர…
-
- 0 replies
- 998 views
-
-
உளவுத்துறையும் நானும் -அ.முத்துலிங்கம் இஸ்லாமாபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலை நகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்படடேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். சல்வார் கமிஸ் அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருவர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹோட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் தந்த பேர்ல் கொன்றினென்ரல் என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார். எந்த நாட்டுக்குப் போனாலும் முதல் ஓரு அதிர்ச்சி நடப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த அதிர்ச்சி மூன்று சக்க…
-
- 1 reply
- 998 views
-
-
BY: லதா சரவணன் என் நேர் எதிர் கூடத்தில்தான் நேற்று அவள் இருந்தாள். எத்தனை நாள் பழக்கம் எனக்கும் அவளுக்கும். ஒருவருடம் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அர்த்தமில்லா அறிமுகங்களை தினமும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் முகம், நான் இந்த வீட்டுக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அலங்காரப் பொருள்களில் ஒன்றாகிப்போனேன். ஏனோதானோவென்று என் பசி தீர்க்கப்படும், ஆனால் அவள் வந்த இந்த ஒரு வருடத்திற்குள் நான்தான் எத்தனை பாந்தமாய் இருந்தேன். என்னை குளிக்க வைத்து அவளின் தளிர் விரல்களால் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டிட்டு உச்சியில் இரண்டு துளி பூ வைத்துவிடாமல் அவள் காலை தொடங்கியதே இல்லை. அதன்பிறகு தான் அவள் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வாள். …
-
- 1 reply
- 997 views
-
-
அது ஒரு மிளாகாலம் நம்ம பெரிய மாமா, அம்மாவுக்கு அண்ணன், ராணுவ அதிகாரியாயிருந்தவர். மாமியின் அநியாயமான அகால மரணத்துக்குப் பின்னால் மாமா எல்லையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிவந்து என்ஸிஸி அதிகாரியாய்ப் பதவி வகித்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் ஏரியாவில் மேஜர் ரஹீம் என்றால் ரொம்பப் பிரபலம். மேஜர் ரஹீம் மட்டுமல்லாமல், அவருடைய டீன் ஏஜ் மகள்கள் ரெண்டு பேரும் கூடப் பிரபலம். மேஜர் ரஹீம் லெஃப்ட்டினன்ட் கர்னல் ரஹீமாய் உயர்ந்துவிட்டிருந்த காலத்தில், ஒரு கோடை விடுமுறையில், பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸ் பஸ் ஸ்டாப்பில் மூணாம் நம்பர் பஸ் ஏறி, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறி, சென்னை எழும்பூரில் வந்து இறங்கியபோது தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரோடு மாமா என்னை வரவேற்க வந்திரு…
-
- 1 reply
- 997 views
-
-
இந்தியருக்கு விளையாட்டு ஈழத்துக்கு சீவன் போகுது! "முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே. அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே" இந்திய தமிழரான யுகபாரதி என்னும் கவிஞர் ராஜபாட்டை என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடலின் சரணத்தில் வரும் வரிகள் இவை. வாசிக்கும் போது கோபம் பொத்துக்கொண்டு வந்ததாக நண்பன் சொன்னான். எனக்கு வரவில்லை. இப்போதெல்லாம் கோபம் ஏனோ வருவதில்லை. அடி வாங்கி அடி வாங்கி மரத்து போய்விட்டது. சின்னவயதில் ஆகாயத்தால் வந்து எங்களுக்கு பருப்பு போட்டீர்கள். எடுத்து தின்றோம். ருசியாக இருந்தது. இன்றைக்கு நாங்கள் திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏழைக்குசேலர்கள் நாங்கள். அவல் தானே தரமுடியும். எடுத்து கொள்ளுங்கள். அட ஒருவர் செய்…
-
- 2 replies
- 996 views
-
-
கூகிள் மப்பும் எனது கனவுகளும்....... ஒரு பதினாறு வருடங்களிருக்கும், எனது தாயகம் என்று மனது பதிந்த வீ திகளை இறுதியாகத் தரிசித்து. அயல் தேசம் வந்தபின்னும் , தாயகம் பற்றிக் கனவுகள் கண்டு, வேர் கொள்ளா ஒரு ஊரில் அடைக்கலமாகி, தமிழ் நெ ட்டும் , புதினமும் எம்வீரர் செயல் கூற, வெல்வோம் இனியென்று விறுமாப்பாய் இருந்துவிட் டேன். 2009 இல் பேரிடிச் செய்தியாய் முள்ளிவாய்க்கால் வீழ்ந்திட, தாயகம் பற்றிய கனவுகளைக் கலைத்தேன். ஆக்கிரமிக்கப்படட என் தேசமும், அடிமை வாழ்வில் என் உறவுகளும் எனக்கு வேண்டாச் செய்தியாக மனதை இறுக்கிக் கொண்டேன் . எதிரியிடம் தாயகம் கிடைக்க, மனம் புரண்டு அழுதது,ஏதாவது செய்ய வேண்டும் என்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள், மகிழ்ச்சியாய்ப் போனேன…
-
- 8 replies
- 996 views
-
-
கதை சொல்லவா? 13/ தமிழ் புத்தன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
-
- 0 replies
- 996 views
-
-
03- oct- 2012 புதன் அவன் மூக்கிற்கும், மேல் உதட்டிற்கும் இடையே உள்ள பகுதியிலும் அவன் பிறப்புறுப்புக்குத் தொட்டடுத்த மேல் பகுதியிலும், புழுதி படிந்தாற் போல பொன்னிற ரோமங்கள் வளரத் தொடங்கியிருந்த காலம்... அம்புலிமாமாவிலிருந்து, அகிலன், கல்கி, மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, எஸ்.கணேசலிங்கம், டொமினிக் ஜீவா, லட்சுமி, சூடாமணி, என அவன் வாசிப்பு வளரத் தொடங்கியிருந்த காலம்... "முத்திரைக்கதை" முக்கியத்துவத்துடன் ஜெயகாந்தன் என்ற இளம் எழுத்தாளரை ஆனந்த விகடன் பிரபலப் படுத்திக் கொண்டிருந்த காலமும் அதுதான்... அவன் அப்பாதான் ஜெயகாந்தனை அவனுக்கு அறிமுகப் படுத்தியிருந்தார். விகடனில் அவன் படித்த முதல் ஜெய…
-
- 1 reply
- 994 views
-
-
இணைய களம்: ஒரு அப்பா, ஒரு பிள்ளை, ஒரு மீனு கதை! இரவில் பாய் விரித்துப் படுத்தவுடன், “அப்பா மீனு கதெ...” என்று ஆரம்பிப்பான் சந்துரு. பிறகு எங்கள் உரையாடல் இப்படிப்போகும். “ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய காடு இருந்துச்சாம்.” “உம்..” “அந்த காட்டுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கொளம் இருந்துச்சாம்.” “உம்..” “அந்தக் கொளத்துல என்ன இருந்துச்சி?” “மீனு.” “என்ன கலர் மீனு?” “வெள்ளை, ஒயிட்டு, கருப்பு, ஆரஞ்சு, புளு.” “அப்ப அந்தக் கொளத்துக்கு யாரு வந்தா?” “ஆனை.” “யானை என்ன செஞ்சுது?” (துதிக்கை போல கையை உயர்த்தியபடி) “தண்ணி குச்ச…
-
- 0 replies
- 993 views
-
-
ஒரு நீதிக்கதை August 30, 2021 முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்கள…
-
- 7 replies
- 993 views
-
-
ஓரு கப் டீ காலையை பின்னுக்குத்தள்ளி மதியத்திற்கு கடிகாரம் நகர்ந்திருந்தது. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கூடிக் கலைந்திருந்தன. அந்த பிரம்மாண்ட மாலில் கூட்டம் ட்யூப்பில் அடைக்கப்பட்ட பேஸ்ட்டைப் போல அடர்த்தியாய் இருந்தது. ஏற்றிவிடுவதும் இறக்கி விடுவதுமாய் எஸ்கலேட்டர் ஓய்வில்லாமல் மடங்கிக் கொண்டிருந்தது. பத்தடிக்கு ஒரு ஜோடி. கமிட் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் கண்களில் கனவு விதைத்து உதடுகளில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். மாலில் நுழைந்த அவன் ஜீன்ஸ் அணிந்திருந்தான். பொருந்தா ஆஃப் ஸ்லாக்கை தாறுமாறாக இன் செய்திருந்தான். ஸாக்ஸ் தவிர்த்து ஷூ அணிந்திருந்தான். செக்யூரிட்டிகளுக்கு நல்ல பிள்ளையாய் கைதூக்கி, மெட்டல் டிடெக்டர்களில் அமைதி காத்து வேகமாய் லானில் ந…
-
- 1 reply
- 992 views
-
-
வெப்பச் சூத்திரம்: சக்கரவர்த்தி ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் “எனது பெயர் ஷாரிகா. எனது அம்மாவின் பெயரைச் சொன்னால் என்னைத் தெரிந்து கொள்ள இன்னும் உங்களுக்கு இலகு. விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் மருத்துவர் ராஜினி திரணகமவின் மகள். ஷாரிகா திரணகம.” பேச்சின் ஊடாக உணர்வுகளைப் பகிர நான் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. மௌனம்தான் எனது ஊடகம். மௌனத்தின் ஊடாக மட்டுமே ஊணர்வுகளை பகிரத் தெரியும். புத்தர்தான் மௌனத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். இரண்டாயித்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் மௌனப் பிரசங்கம் செய்த சோனாலியில், இலைகளின் சலனம் இல்லாத அதே அரச மரத்தடியில் என்னை மட்டும் தனியே அமர்த்தி, இருபத்தைந்து ஆண்டுக…
-
- 6 replies
- 991 views
-
-
காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..? குரு அரவிந்தன் - நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. - எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரு…
-
- 2 replies
- 991 views
-
-
புதிர் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது. இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது. …
-
- 0 replies
- 991 views
-
-
துர்சலை - கணேசகுமாரன் ஓவியங்கள் : செந்தில் இரவுக் காற்றுக்கென்று தனி இசை உண்டு. அது தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது, விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழுமதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத்தொட்டு மீண்டு கொண்டிருந்தது. ‘‘உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால், இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை’’ என்றாள் மாதங்கி. துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழுநீளத் துகில்; அவ்வளவுதான். அதைத்தான் உடல் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம்வரை தன்னிருப்பைப் படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண்சங்கு நிறப் பாதத்தால் நிரடியபடி சொன…
-
- 0 replies
- 991 views
-
-
ஒரு நிமிடக் கதை: சுற்றுலா “மேகலா..! அருணுக்கு லீவு விட்டாச்சு.. அப்பாவுக்கு போன் பண்ணி நாம கிராமத்துக்கு வர்றோம்னு சொல் லிடவா..?” சம்பத் கேட்டார். “ஹையா..! வசந்த் அண்ணாவோட நல்லா விளையாடலாம்..” - என்று அருண் உற்சாகமாய் சொல்ல, மேகலா மட்டும் “யோசிப்போங்க..” என்று பட்டும் படாமல் பேசினாள். “இதுல யோசிக்க என்ன இருக்கு” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினார் சம்பத். கிராமத்தில் சம்பத்தின் வயதான அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள். அண்ணன், விவசாயத் தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் லீவுக்கு அருணை கூட்டிக்கொண்டு அங்…
-
- 1 reply
- 989 views
-
-
வேட்டு - ஜெயமோகன் எருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” என்றான் பழனியப்பன் ஒரு புதிய பிளாண்ட் திறந்திருந்தமையால் ரெமி மார்ட்டின் பதிமூன்றாம் லூயிஸ் ரேர் காஸ்கின் செலவு அவனுடையது. அவன் மெல்லிய ஏப…
-
- 8 replies
- 989 views
-
-
[size=3] ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.[/size] [size=3] அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.[/size][size=3] [/size][size=3] இந்தக் கடுமையான சட்டத்துக்கு ப…
-
- 0 replies
- 988 views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 10) நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும். அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்பட…
-
- 0 replies
- 987 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் தாய்+அம்மா தாயம்மா செத்துட்டா. ஊரே திர…
-
- 0 replies
- 987 views
-
-
“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள…
-
- 5 replies
- 987 views
-
-
வெந்துருதி தி(த்)றைஸ் – ( சிறுகதை ) – கோமகன். முடிவு. ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat): அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக…
-
- 0 replies
- 987 views
-
-
"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர…
-
- 2 replies
- 986 views
-