Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்….திருப்பி அடிப்பேன்! – சீமான் சிறையில் எழுதிய தொடர் – பாகம் 01 * Wednesday, December 15, 2010, 5:41 ‘எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர். தொடரின் முதலாவது பாகம்: ”ஏனடா எரிக்கிறாய் என்றோ, ஏனடா அடிக்கிறாய் என்றோ எவனடா கேட்டீர் அவனை? அடியென அவனுக்குச் சாட்டை கொடுத்தவனும் சுடுவென தோட்டா கொடுத்தவனும் தடை…

  2. Started by வீணா,

    ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக குறையவில்லை. மேலும் கூடியது, உடனே குழந்தைகள் வேண்டாமென்று செய்த முடிவினால். கணவன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவந்தான். ஏற்கனவே லோன் வாங்கி வீட்டையும் கட்டி முடித்து விட்டார்கள். அழகான வீடு. முன்னால் சின்ன ரோஜா தோட்டம். வராண்டாவுக்கு வலதுபுறம் தனியாக ஒரு அறை. வீட்டை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வது ராதாவின் தனித்தன்மை. கணவன் அலுவலகம் சென்ற பிறகு வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு ஏதாவது பத்திரிகையை படித்துக்கொண்டு கட்டிலில் படுத்திருப்பாள். கொஞ்ச நேரம் ரேடியோ கேட்…

  3. அளவோடு ஆசைப்படு......... ஆசையே அலை போல நாமேலாம் அதன் மேலே........ ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டு…

    • 6 replies
    • 1.4k views
  4. டிஜிட்டல் செத்தவீடு! நேரம் அகாலத்தைக் கடந்திருந்தது. இன்னும் சிலமணித்தியாலங்களில் பொழுது பொலபொலவென விடிந்துவிடும். ஆனாலும் சூரியனின் கதிர்கள் பூமியைத் தொடுவதற்கிடையில் வேலை முடிந்துவிட வேண்டும் என்ற அவசரத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பனியைக் குடித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது. அரைமணித்தியாலப் பயணத்தின் பின் ஸ்ரூடியோ ஒன்றின் முன்னால் அந்தமோட்டார் சைக்கிள் தன் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ள, ஸ்ரூடியோவின் கதவு தட்டப்பட்டது. கொலைகளும் கொள்ளைகளும் மலிந்துவிட்ட சூழலில் நள்ளிரவு தாண்டிய பின்னர், இருட்டு வேளையில் கதவு பலமாகத் தட்டப்பட்டதால் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் இருவருக்கும் ஈரற்குலை ஒருநொடியில் தீய்ந்தே போய்விட்டது. நடப்பது நடக்கட்டும் என்ற நினை…

  5. ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை…

  6. வருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது. ஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டால…

    • 41 replies
    • 5.4k views
  7. Started by putthan,

    நான் சிறுவனாக இருக்கும் பொழுதும் சரி,இளைஞனாக இருந்த காலங்களிலும் சரி கோயில் மணியகாரர்(தர்மகர்த்தா) என்றால் அவர்கள்தான் கோயிலை கட்டியவர்கள் என்று எண்ணியிருந்தேன்.அதாவது அந்த கோயிலுக்கு சொந்தகாரர்கள் அவர்கள் தான் என நினைத்திருந்தேன்.அவர்களின் செயற்பாடும் அப்படித்தான் இருக்கும் .ஜயரைவிட அவர்கள்தான் பெரியமனிதர்கள் என்றிருந்தேன்.பெற்றோரும் சொல்லிச்சினம் பரம்பரைபரம்பரையாக அவர்கள்தான் கோயில் சொந்தக்காரர்கள் அதுதான் அவர்களுக்கு முதல்மரியாதை செய்யிறவர்கள் என்று. தேர் திருவிழா போன்ற விசேட நாட்களில் இவர்களுக்குதான் முதல்மரியாதை கொடுக்கப்படும்,அதாவது தெப்பை அணிவித்து மேளதாளத்துடன் கோயிலை சுற்றிவருவார்கள்.அவர்களின் முழுக் குடும்பம்மும் அதில் பங்குபற்றும் ,அடுத்த வாரிசு யார் என்பத…

  8. Started by வீணா,

    புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வேண்டுமென்று தான். அதனால் நண்பர்களை, எடிட்டர்களை, என் நலனில் அக்கறை கொண்டவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முதலில் அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். ஏன் என்றால் அவன்தான் என்னுடைய முதல் எதிரி என்பதால். நாங்கள் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். இலக்கியக் கூட்டங்ளில் சொற்பொழிவு ஆற்றுவோம். அவன் என்னைப் புகழ்ந்து பேசுவான். நான் அவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் உள்ளூர நான் அவனை வெறுத்துக் கொண்டிருந்ததேன். அவனும் என்னை வெறுக்…

    • 5 replies
    • 1.6k views
  9. வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்... Posted by: on Jan 16, 2011 வேலியில போற ஓணானைப் பிடிச்சு, வேட்டியுக்குள்ள விடுகிறன் எண்டு வெளிக்கிட்டுட்டியள்... ''அப்புக்குட்டி... எட அப்புக்குட்டி...'' என்று குரல் கொடுத்தவாறே வந்து சேர்ந்தார் முகத்தார். ''எடி செல்லமணி, முகத்தார் குடும்ப சமேதரராய் வாறதைப் பார்த்தால்... மாட்டுப் பொங்கல் கொண்டாட வாற மாதிரி இருக்கு. நம்மட வீட்டில மாடு இல்லையெண்டு மனுசனுக்குத் தெரியாது போல கிடக்குது... இண்டைக்கு என்ன வில்லங்கத்தோட வாறரரே தெரியாது... நான் ஒளிச்சிருக்கிறன். வெளிய போயிட்டன் எண்டு சமாளி...'' என்றவாறே அப்புக்குட்டி உள்ளே சென்றார். ''இஞ்ச நில்லுங்கோ... நீங்கள் ஒளிக்கிறதும்...…

    • 2 replies
    • 2.2k views
  10. Started by வீணா,

    வணக்கம். என் பெயர் சரேஜா." கைகளை கூப்பிக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். சத்யவதி அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள். "உங்கள் வீட்டில் வாடகைகு போர்ஷன் இருப்பதாய் ... " பாதிலேயே நிறுத்திவிட்டாள். "வாங்க ... வாங்க" என்று வெளியே வந்தாள் சத்யவதி. முன் பக்கத்தில் இருந்த சாமந்தி பூஞ்செடிகளுக்கு நடுவில் இருந்த பாதை வழியாக பக்கத்தில் இருக்கும் போர்ஷனுக்கு அழைத்துப் போனாள். சாத்தியிருந்த தாழ்பாளை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். "மூன்று அறைகள். கடைசியில் இருப்பது சமையல் அறை. கொல்லையில் குழாய் இருக்கு." "வாடகை எவ்வளவு?" சரோஜா கேட்டாள். "அறுநூறு. கரெண்ட் சார்ஜ் தனி." "எனக்குப் பிடித்திருக்கு. நாளைக்கே வந்துவிடுகிறேன்" என்றாள் சரோஜா. சரோஜாவின் பு…

  11. An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began betweentwo countries and spread to otherparts of the world in due course.It quickly developed into a multi-frontal war fought across continents before itended. The war against the Tamils,like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with manymilitarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Mahinda Rajapakse thanked twenty countries for helping SriLanka to win the war.…

  12. ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் புனைவு ! நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். த‌ன‌து நாளேட்டின் த‌லைய‌ங்க‌த்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு‌‌ அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊட‌க‌ நேர…

  13. விசேட இ-மெயில்கள் உருவாக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவுக்கு செயல் வடிவம் கொடுக்க இந்த பதிவை எழுதுகின்றேன். எங்கள் முதலாவது இ-மெயில் ஆக என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, எமது யாழ்கள நண்பர் வானவில் எழுதிய “இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.” என்ற கூற்றுக…

  14. நான் ரசித்த ஒரு அருமையான பதிவு..விண்வெளியின் அதிசயங்களை ஒரு எழுத்தாளனின் பார்வையில் எங்கள் கண்முன் கொண்டுவந்துதந்திருக்கிறார் இந்தக்கட்டுரையாளர்..எல்லைகளற்ற வானம்போலவே மனிதனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் ஏது...பிரபஞசத்தை பற்றி நான் கேட்டு வாசித்து படித்து அறிந்து கொண்டவைகளால் ஏற்பட்ட பிரமிப்பால் வானவியல் சம்பந்தமான பல அறிவியல் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன்..ஆனாலும் தமிழ்ச்சுவையோடு தீட்டப்பட்டுள்ள இந்தக்கட்டுரையை வாசித்து முடித்தபொழுது ஒரு தனி சுகம் இருந்தது... வாசித்து முடித்த பொழுது விண்வெளிக்கு ஒரு இலக்கியப் பயணம் போய் வந்தது போன்றதெரு உணர்வு...இதோ உங்களுக்கும் அவரின் அனுமதியுடன் அந்த அநுபவம் கிடைக்கட்டும்... ஒரு எல்லைகளற்ற பயணம்-கை.அறிவழகன் …

  15. மெளனமாய் ஒரு காதல் அந்த பள்ளி நாட்கள் நீண்டு போகாதா என் அங்கலாய்க்கும் ஒரு மாலைபொழுதில் .............. கிராமத்தின் முக்கியமான்( இருபாலாருக்குமான )கலவன் பாடசாலைகளில் ஒன்றில் ராகவன் உயர்வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான். பணி நிமித்தம் இடம் மாற்றலாகி வந்தவர்கள் தான் .கேசவ வாத்தியார் குடும்பம். அவர்களுக்கு அழகான் ஒரே ஒரு பெண . அன்று ஒரு தை திங்கள் முதலாம் வாரம் , இவர்கள் பாட்சாலை யின் அனுமதிக்காக காத்திருந்தார்கள் அப்பாவும் பெண்ணும். தலைமை ஆசிரியர் அன்றைய பணியில் மூழ்கி இருந்ததால் , ராகவன், அவர்களுக்கு உதவும் முகமாக , வரவேற்பறையில் ஒரு ஆசனத்தில் இருத்தி , காத்திருக்கும்படி சொன்னான். அவன் வகுப்புக்கு சென்றுவிடான். சில மணி நேரங்களில் வகுப்பு ஆசிரியரை இ…

  16. Started by Ahasthiyan,

    தவிர்க்க முடியாத திடீர் விஜயம். கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருந்தது. லண்டனில் இருந்து போவர்கள் கட்டுநாயக்காவில் விசாரிக்க படுகிறார்கள். நான் நேராக கொழும்பு செல்லாமல் ஒரு மத்திய கிழக்கு ஆசியா நாடு ஊடாக எனது பயணத்தை தொடர்ந்தேன். கொழும்பு செல்ல அதிகாலை நேரமாக இருந்த படியால் பலர் கடமையில் இல்லை. என்னை விசாரித்தவர் சில சாதாரண கேள்விகளை கேட்டார். எனது பதில்கள் அவரை திருப்தி படுத்தியதால் என்னை உள்ளே அனுமதித்தார். இதிலிருந்து வெளியே வரும் வரைக்கும் பல கழுகு கண்கள் வரும் பயணிகளை நோட்டம் இட்ட படி இருந்தது. நான் ஒருவாறு வெளியில் வந்து எனது பயணத்தை நான் பிறந்த ஊருக்கு தொடர்ந்தேன். பகல் பயணம் ஓமந்தையில் எனது அடையாளத்தை காண்பித்துவிட்டு வன்…

  17. நினைவுகள் நிஜமாகிறது அந்தத் தரிப்பிடத்தையும் கடந்து பஸ் சென்று கொண்டிருந்து வழக்கமாக இந்தப் பஸ்ஸில்தான் அந்தப்பெண்ணும் பயணம் செய்வாள். ஆனால் இன்று அவளைக் காணாதது சந்துருவின் மனதுக்குள் ஏதோ மாதிரியாக இருந்தது. அந்தப் பெண் இந்தப் பயணப்பொழுதுகளில் மிகவும் வாட்டசாட்டமாகவே காணப்பட்டாலும் அவளது உள்ளத்திலே ஏதோ ஒரு சோகம் குடிகொண்டிருப்பதை மட்டும் அவனால் ஊகித்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. தினமும் அவனுடன் பயணம் செய்யும் அப்பெண்ணோடு அவன் இதுவரை கதைத்ததில்லை. ஆனால் கண்கள் கதை பேசி உதடுகள் உண்மை சொல்ல மறுத்து புன்முறுகல் செய்த நாட்கள் பலவுண்டு. ஆயினும் எப்படியாவது அப்பெண்ணுடன் கதைக்கவேண்டும்.. போல் சந்துருவின் மனம் தவித்தது. இருப்பினும் முன்னுக்குப் ப…

    • 3 replies
    • 1.9k views
  18. Started by யாழ்கவி,

  19. ஊருக்கு போன காலகட்டத்திலை ஏதோ அலுவலாக யாழ் நகரம் வந்தம் இருந்தம் என்று இல்லாமால் ..ஒரு படம் இங்கு பார்த்தால் என்ன என்று தினவு எடுத்திச்சு ..வெளிநாட்டு தியேட்டர்களில் அல்லது டிவிடிக்களில் பார்க்காத படமா ..அப்படி என்ன பெரிய படமாக பார்த்து கிளிக்க போறம் என்று அலுப்படித்தாலும் பார்த்தே தீருவேன் என்ற உறுதியுடன் அந்த இரண்டு மணி சோ பார்க்க நடையை கட்டினேன் .பார்க்க நான் தேர்ந்த எடுத்த படம் எந்திரன் ..அந்த படம் ராஜா தியேட்டரில் வந்து இரண்டு அல்லது மூன்று கிழமை தான் அப்பொழுது இருக்கும் ....25 வருடங்களின் முன்னர் ஒரு புதுப்படம் வந்து அதுவும் முன்னனி நாயகர்கள் நடித்திருந்தால் ...என்ன கோலாகாலம் என்னனென ஆர்ப்பாட்டங்கள் இருக்கும்.இந்த பிரபல நடிகர்களின் படங்கள் ஓடுவதன் காரணமாக ம…

  20. டேய் தம்பி எப்படியிருக்கிறாய் என்று என்னுடைய முதுகை தட்டினார் ஒருத்தர். திரும்பி பார்த்தேன். எங்கன்ட கந்தர் அண்ணே எப்படி சுகம். கனகாலம் கடைப்பக்கம் காணவில்லை, எங்கே போனயிர்ந்தனீங்கள்?நான் ஊருக்கு போய்விட்டு வந்தனான் உனக்கு சொல்லி போட்டு போகலாம் என்றுதான் இருந்தனான் ஆனால் டிரவல்ஸ்காரன் மலிவாக ஒரு டிக்கட் போட்டுத்தாரன் உடனே வெளிக்கிடுங்கோ என்றான் அதுதான் உனக்கு சொல்லாமல் வெளிகிட்டனான் கோபிக்காதையடா.... எப்படி யாழ்ப்பாணம் இருக்கு என்றதுதான் தாமதம் ,மனுசன் சிட்னியிலிருந்து வெளிக்கிட்டு திரும்பி சிட்னிக்கு வந்த கதை முழுவதும் ஒன்றும்விடாமல் சொன்னார்.அண்ணே நே ரம் போகுது பிறகு கதைப்போம் என்று இடைக்கிடை நான் சொன்னாலும் மனுசன் என்னை விடவில்லை,முழுக்கதையும் சொல்லி முடித்துவிட்டா…

    • 13 replies
    • 2.7k views
  21. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காஅத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கு…

  22. ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும் டிசே த‌மிழ‌ன் நன்றி: 'காலம்' ஜூன் 2007 (இதழ் 25 ) (1) அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல்நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து வயது ஆரம்பிக்க இருந்தது. அன்று பாடசாலை முடிந்து பஸ்ஸைப் பிடிக்க சற்றுத் தாமதமாகியதால், வழமையாக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களும் போய்விட்டிரு…

  23. Started by கிருபன்,

    பவித்ரா அ.முத்துலிங்கம் நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் பெண்ணுக்கு தம்பதியரைப் பார்த்ததும் ஏதோ விசித்திரமாகப்பட்டது. ஆனால் அது என்னவென்று அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரைப் பார்க்க பலதரப்பட்ட மனிதர்கள் வந்துபோவதை அவள் அவதானித்திருக்கிறாள். இதுவும் அதுபோல என்று நினைத்துப் பேசாமலிருந்தாள். அவர்கள் முறை வந்தபோது மருத்துவர், சூடு வெளியே போகாமல் இருக்க கதவை கீறலாகத் திறந்து, ’அடுத்தது’ என்றார். வரவேற்பாளினி தம்பதியரை உள்ளே…

  24. Started by nunavilan,

    காஞ்சனை - புதுமைபித்தன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல…

    • 3 replies
    • 1.3k views
  25. அந்த மாதிரி பொம்பளை மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து என்னைப் பார்த்து கொள்கிறாள். இருந்தும் கோபத்தின் கனலில் மனம் பின்னோக்கி சென்று எண்ணிப் பார்த்தது. எங்கள் தெருவில் வசித்து வந்த பவானி அம்மாள் இறந்து விட்டாள். அம்மாவை விட நான்கைந்து வயது இளையவளாக இருக்கக் கூடும்.என் சிறுவயது பருவத்தில் இதே தெருவில்தான் வசித்து வந்தாள். குழந்தைகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் நானென்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் என் அம்மாவோ, இல்லை மற்ற குழந்தைகளின் அம்மாக்களோ அவளை எப்போதும் அருவெறுப்பாகவே பார்ப்பார்கள். அவள் எங்கள் தெருவில் வரும்போது எங்களுக்கு அதட்டல் விடப்படும். "ஏன்மா அந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.