Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. `குறும்படங்கள் தயாரிப்பதற்குப் பொருட் செலவும், தயாரிப்பு நிறுவனங்கள் தரும் நெருக்கடிகளும் அதிகமிருக்கும் சூழலில், ஒரு கைப்பேசியும், தேர்ந்த படத்தொகுப்பாளரும் இருந்தால் போதும் நாம் நினைத்ததை திரையில் கொணர முடியும், அதை உலகம் காணவும் செய்ய முடியும்” என்கிறார் திரு.மதிசுதா. ``ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. ஆனால் ஒரு நாள் நிச்சயம் எல்லாம் மாறும்" என்று ஒரு நேர்காணலில் திரு.மதிசுதா புன்னகைத்தபடி கூறுகிறார். தமிழ் ஈழத் திரையுலகின் முக்கியமான முகங்களுள் ஒன்றாகத் திகழும் இவர், தனது குறும்படங்கள், ஆவணப்படங்கள் மூலமாக ஈழத்தின் வாழ்வியலை, போராட்டக் களத்தை, போர் வன்முறைகளை, ஈழம் இழந்த அடையாளங்களைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். கலையெனும் ஆயுதத்தால் மட்டுமே மனிதனின் உடலை, …

  2. இவ்வார ஆனந்தவிகடனில் "உயிர்த்தெழும் சாட்சியங்கள்" என்ற தலைப்பில் ஈழத்து படைப்புகள் பற்றிய பார்வை (Facebook)

  3. பேசப்படாதவற்றைப் பேசும் ஓவியங்கள்! மதரா சென்னை கவின் கலைக் கல்லூரியின் ஓவியத்துறை மாணவ, மாணவிகள் 10 பேர் இணைந்து லலித் கலா அகாடமியில் கடந்த வாரம் ‘அன் ஸ்போக்கன்’ (Un spoken) என்ற தலைப்பில் தங்களது ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். சமூக நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாக, உள் மனப் போராட்டங்களாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மேல் வைக்கப்படும் கேள்விகளாக, உழைக்கும் மக்களின் மேல் உள்ள அக்கறையின் வெளிப்பாடாக அவர்களது படைப்புகள் அமைந்திருந்தன. தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் நூற்றாண்டு கடந்தும் அங்கே அதே நிலையிலே உள்ளனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என அழைக்கப…

    • 1 reply
    • 3.5k views
  4. பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த ரமேஷ் எனும் ஈழத் தமிழர் சர்வதேச இசையில் சாதனை படைத்துள்ளார். அண்மையில் இவர் உருவாக்கிய பாடல் வீடியோ மிக பிரபலமடைய பல இசை பதிவுசெய்யும் நிறுவனங்கள் இவரை நாடி வருகின்ற போதிலும், பல தமிழ்க் கலைஞர்களை இணைத்து எஸ்,எம்,இ என்ற தனிப்பெயரில் தனி record label ஐ உருவாக்கியுள்ளார், பாடல் வெளியாகியதிலிருந்து இதுவரை யூடியூப்பில் 18000 ஹிட்டுகளை பெற்றுள்ளது. அப்பாடல் இதோ http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/1774-ramesh-every-time

    • 4 replies
    • 1.5k views
  5. பவுடர் வாசனை மிதக்கும் நடிகர் சங்கம் கி.பார்த்திபராஜா நாடக நடிகர்களுக்கென சங்கம் உண்டு. பெரும்பாலான சங்கங்கள் பதாகையில் தவத்திரு சங்கரதாச சுவாமிகளின் திருப்பெயரைத் தாங்கியே நிற்கின்றன. நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நாடக அமைப்பாளர்களுக்காகவும் (ஏஜெண்ட்) சங்கங்கள் இருக்கின்றன. சங்கங்கள் கலைஞர்கள் சங்கமிக்கும் ஒரு இடம். சங்கம் களைகட்டுவது மாலை 6 மணிக்குமேல்தான். நடிகர் நடிகைகளின் வருகை, பேச்சுச் சப்தம், வெற்றிலைநெடி, பவுடர் வாசனை... இத்யாதிகளுடன் ‘சித்தி’ என குழுஉக் குறியால் வழங்கப்படும் மதுவின் நெடியும். ஒரேநாளில் ஏழெட்டு ஊர்களில் நாடகங்கள் இருக்கும். அந்நாடகங்களில் பங்கேற்போர் சங்கத்திற்கு வந்து கூடி, பிறகே நாடகம் நடக்கும் ஊர்களுக்குப் பயணப்படுவார்கள். ஒவ்வ…

  6. வணக்கம் வலை நண்பர்களே, [size=3]நமது வலை நண்பர்கள், உலகில் உள்ள ஏனைய தமிழ் வலைப்பதிவர்களுடன் இணைந்து ஒரு மாபெரும் வலைபதிவர்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் மூலம் முகமறியா நண்பர்கள் முகமறிந்து மகிழ உள்ளார்கள். காலை முதல் மாலை வரை இடைவிடாமல் நடக்கும் இந்த மாபெரும் விழாவின் அழைப்பிதழை இங்கே இணைத்துள்ளேன். இந்த அழைப்பினை ஏற்று அனைத்து வலை நண்பர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். இனி வருகை தர முடிவெடுத்துள்ள நண்பர்கள், வருகையை கீழ்க்கண்ட நண்பர்களிடம் தெரிவித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தோழர் மதுமதி (98941 24021), மின்னல் வரிகள் கணேஷ் (7305836166), மெட்ராஸ்பவன்…

  7. வாய் தவறிச் செல்லும் வார்த்தைகள் யோ. கர்ணன் கவிஞர் காசியானந்தனை தெரியாத தமிழர்கள் இந்தப் பூமிப்பந்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? அவரது பாடல்கள் மிக நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தும். அவரது பாடல்களினால் உணர்வு நரம்புகள் முறுக்கேறியபடி குளிர்தேசங்களில் எண்ணற்ற இளரத்தங்கள் இன்றும் கொதித்துக்கொண்டுமிருக்கலாம். காசியானந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஆரம்பத்தில் நான் மிகத் தீவிரமாக நம்பியிருந்தேன். ஒரு கையில் துப்பாக்கியும், மறு கையில் பேனாவும் உள்ளதாகவெல்லாம் அப்பாவியாக கற்பனை பண்ணிய காலங்களும் உண்டு. காசியண்ணை என்ற பெயரை உச்சரித்ததும் கண்கலங்கிய பல போராளிகளைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சமயத்திலும், காசியானந்தன் இயக்கமா, எங்கிர…

  8. Started by nunavilan,

    செ.யோகநாதன் செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர். கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். பின்னர் தமிழகப் பத்திர…

    • 0 replies
    • 1.7k views
  9. எல்லோரும் பேசமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்கவில்லை - யோ. கர்ணனுடனான நேர்காணல் இணையத்தின் மூலம் எனக்கு அறிமுகமான யோ கர்ணனை இந்த வருடத்தின் ஆரம்பகாலப் பகுதியில் நான் தாயகம் சென்ற பொழுது நேரிடையாகவே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான இவர், நேரடி சந்திப்பின் பின்பு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவராகிவிட்டார். இங்கிருந்து வெளியாகும் ஆக்காட்டி சஞ்சிகைக்கு ஓர் நேர்காணல் ஒன்று தரமுடியுமா ??என்று நான் கேட்ட பொழுது ,உங்களுக்கு இல்லாத நேர்காணலா என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். மின்னஞ்சல் மூலம், நான் அவரிடம் நடத்திய நேர்காணல். நேசமுடன் கோமகன் ************************************** யோகநாதன் முரளி என்னும் யோ.கர்ணன் ஈழத்துப்…

    • 5 replies
    • 1.2k views
  10. “நட்டுவன் பிள்ளைக்கு நொட்டிக் காட்டத் தேவையில்லை” ”தற்காலத்தில் தேர்களை உருவாக்குவோர் சிற்பங்களுக்கு இருக்கவேண்டிய அளவுப் பிரமாணங்களையோ, தராதரத்தையோ கருத்திற்கொள்வதில்லை. இவர்கள் பொருளீட்டுவதை மாத்திமே பிரதான நோக்கமாகக் கொண்டு- தாமாகவே ஆலயங்களைத் தேடிச் செல்கின்றனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது” நாதஸ்வர சிற்ப வித்தகர் சின்னத்தம்பி அமரசிங்கம் அவர்களுடனான நேர்காணல். -எஸ்.மல்லிகா- “ஆலய வழிபாடுகளில், இசை விழாக்களில், மங்கல வைபவங்களில் நாதமழை பொழியும் நாதஸ்வரக் கலைஞர்களின் புனிதமான கரங்களில் என்னால் உருவாக்கப்பட்ட கருவிகள் இருந்து அவக்களுக்கு வாழ்வளிக்கின்றமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, ஆத்மதிருப்தியைத் தருகிறது” இப்படி கூறுகிறார் சிற்பத்துறை மேதாவியும் நாதஸ…

  11. திருமாவளவன். ஈழத்தின் வளம்பொருந்திய வருத்தலைவிளான் (வலிவடக்கு தெல்லிப்பளை) கிராமத்தின் மண்வாசனையோடுயுத்தம் கனடாவுக்கு தூக்கியெறிந்த ஒரு ஆளுமை. இடதுசாரித்துவ பின்னணியுடன் ஒரு நாடகக் கலைஞனாக கிராமத்தோடு இயைந்திருந்த அவரை கவிஞனாக்கியது புலப்பெயர்வு வாழ்க்கை. பனிவயல் உழவு, இருள்யாழி, அஃதே இரவு அஃதே பகல், முதுவேனில் பதிகம் என்ற நான்கு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், பத்தி எழுத்துகள், அரங்குசார் நிகழ்வுகள் எனத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். இவரின் இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ் அருணோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழையமாணவர். புலம்பெயர் வாழ்வின் துயரப்பொழிவினை ஊடுகடத்தும் கவிதைகள் அதிகம் இருந்தாலும் அவை மெல…

  12. அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை அங்கேதான் பார்க்கக் கிடைத்தது. இன்றும் அதே தோற்றம். முதுமை அவரை அணைத்துக் கொண்டாலும், அவருக்கேயான அடையாளங்கள் எதுவும் அகன்றதாகத் தெரியவில்லை. கம்பீரமாகவே நின்று தனக்கான கௌரவத்தை ஏற்றுக் கொண்டார். ஆம், அவர்தான் ஈழத்தின் சாவகச்சேரி மண் பெற்றெடுத்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞன் திருவாளர் மு…

  13. பார்வையை மாற்றிய பாலகுமாரன் - ஜி.ஏ.பிரபா மாதா, பிதா, குரு என்று சொல்வார்கள். எனக்கு அந்த மாதாவாகவும் நின்றவர் பாலா சார். ஆழ்மனதில் ஒரு எண்ணத்தை அழுத்தமாகப் போட்டு வைத்தால் அதை நிச்சயம் இந்தப் பிரபஞ்சம் நடத்திக் கொடுக்கும் என்பார்கள். அந்த வகையில் பாலா சார், எனக்கு இந்தப் பிரபஞ்சம் தந்தப் பரிசு. நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதோடு குருவாய் நின்று வழிகாட்டும் ஒருவர் வேண்டும் என்று விரும்பினேன். விளையாட்டுப் பெண்ணாய் பிளஸ் டூ படிக்கும்போது சார் எனக்கு மெர்க்குரிப் பூக்கள் கதை மூலம் அறிமுகம். படித்து நாலு பக்கம் விமர்சனக் கடிதம் எழுதினேன். அதற்கு உடனே பதில் வந்தது. “நீ சின்னப் பெண். இப்போது அந்தக…

  14. மேற்குறித்த நாடகத்தனமான தலைப்பு உங்களைப் பிழையாகவழி நடத்த அனுமதிக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் இலங்கைத் தமிழ் நாடகஉலகின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். ”குழந்தை”என்ற பெயரில் அறியப்படும் குழந்தை சண்முகலிங்கம்அவர்கள் பலருக்கு 83 வயதாகும் ஒரு முதியவர். நாடகம் பற்றிய புரிதல்கள் அற்ற வேறு பலருக்கு அவர்ஆரவாரமற்ற தன்னடக்கம் நிரம்பிய ஒருவர். உண்மையிலும் குழந்தை சண்முகலிங்கம் என்ற பெயர்இலங்கைத் தமிழ் நாடக உலகுடன் ஒன்றி விட்ட பெயர். இலங்கைத் தமிழ் நாடக உலகின் கடந்த தசாப்தங்களைஅவரின் பெயரை விட்டு விட்டுப் பேசமுடியாது. புகழ்ச்சியையோ விளம்பரத்தையோ விரும்பாத அவர் இந்தநேர்காணலை ஏற்றுக்கொண்டிருந்தார். எப்படி நீங்கள் “குழந்தை” என்னும் வித்தியாசமானதொரு …

  15. எனது மகளின் நகைச்சுவை நாடகம். எனது மகளின் நாடகக்குழு எங்கள் நகரத்தின் நகரசபை மண்டபத்தில் எதிர்காலத்தில் எங்கள் கனவுகள் என்கிற நகைச்சுவை நாடகம் ஒன்றினை அரங்கேற்றிருந்தார்கள்.நாடகம் 40நிமிடங்கள் அந்த நாடகத்தின் ஒரு பகுதி

  16. அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! தாயகத்தில் பிறந்து தற்போது புலத்தில் - நோர்வேயில் வாழ்ந்துவரும் சகோதரர்கள் மே 18, 2008 அன்று கனடாவில் நடைபெறும் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். தமிழ் ரப் உலகில் புதிய ஒரு அத்தியாயத்தை எழுதும் இவர்களின் பாடல்கள் பலரது அமோக வரவேற்பை பெற்று இருக்கும் அதேசமயம் கனடாவில் நடைபெறும் இவர்களின் இசை நிகழ்ச்சி கொண்டாட்டத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களிற்கு நல்லதொரு இசைவிருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களது பாடல்களை நீங்கள் கீழே பார்த்து மகிழலாம்!

  17. "நிலக்கிளி" தந்த அ.பாலமனோகரன் [size=4]"ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்." - நிலக்கிளி அ. பாலமனோகரன். ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை நாம் இப்போது அவருடன் பகிர்ந்து கொள்வோம்.[/size] [size=4]கானா.பிரபா: வணக்கம் திரு.பாலமனோகரன் அவர்களே முதலில் தங்களின் இலக்கியப் பயணத்தின் தொடக்க காலம் குறித்து சொல்ல முடியுமா? அ.பாலமனோகரன்: என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்தான் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டேன். அப்போது பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி…

    • 0 replies
    • 3.2k views
  18. அம்மா என்றழைத்தாலும்... பெண் இனத்தின் ஒரு பிம்பம் பீடத்தில்- இன்னொன்று மரக்கிளையில். இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? ஏன் இந்த முரண்பாடு? சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அளிக்கப்படும் 'மைல்ஸ் ஃப்ராங்க்ளின் விருது' என்ற மிகச் சிறந்த இலக்கிய விருது, ஆங்கிலேய தந்தைக்கும் ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்த பெண் எழுத்தாளர் ஈவி வைல்டுக்கு அளிக்கப்பட்டது. விருது கிடைத்ததால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இலக்கிய உலகத்தில் இருக்கும் யதார்த்தத்தால் எழுந்த சோகம் தான் அவருக்கு அதிகம். “என்னுடைய வாழ்நாளில், ஒரு ஆண் எழுத்தாளரின் எழுத்து தீவிரமாக எடுத்துக்கொள்ளப் படுவதுபோல எனது எழுத்து நினைக்கப்படும் என்பதை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது.” என்கிறார். “நான் கர்ப்பமாக இருக்கிறேன். எல்லோரும் என்ன …

    • 0 replies
    • 668 views
  19. மு .ஹரிகிருஷ்ணன் - நேர்காணல்-ஷோபா சக்தி நேர்காணல்-ஷோபா சக்தி மு .ஹரிகிருஷ்ணன் - சில வருடங்களிற்கு முன்பு தமிழகத்தின் மேற்குச் சிறு கிரமமான ஏர்வாடியில் நடந்த கூத்துக் கலைவிழாவுக்குச் சென்றிருந்தேன். கிராமத்து மக்கள் , நாட்டுப்புற ஆய்வாளர்கள், நாஞ்சில் நாடன், பொதியவெற்பன் என மூத்த எழுத்தாளர்களிலிருந்து லீனா, சந்திரா, இசை என இளைய தோழர்கள்வரை கூடியிருந்தார்கள். விடிய விடியக்கூத்தும் கட்டப் பொம்மலாட்டமும் கூத்துக் கலைஞர்களை மதிப்புச் செய்தலும் என நிகழ்ந்த அந்த அற்புத இரவின் சூத்திரதாரி ஹரிகிருஷ்ணன். ‘ஒரு அசல் கலைஞனுக்கு பேரனாகவும், ஒரு அசல் இரசனைக்காரிக்கு மகனாகவும் பிறந்த எனக்கு, என்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதைவிடக் கூத்துக் கலைஞன் என்று சொல்லிக்கொள்…

    • 0 replies
    • 2.6k views
  20. ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம். "யாழ் நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல் ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள் காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையா?” என்று ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன். அதன் ஒலிவடிவமும் எழுத…

  21. வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது. காலங்களைக் கடந்து செல்லும் பிரக்ஞைபூர்வமான தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் இயற்கையையும் எதிர் இயற்கையையும் படைக்கிறார் கஜானி. கஜானியின் படைப்புலகம் இயல்பினூடாக ஆச்சரியங்களை உருவாக்கும் தன்மையுடையது. இதனால் அவருடைய படங்கள் ஒருபோது பேரிசையாகவும…

  22. அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் -எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் – குறமகள் 2008 - 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநா…

  23. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் செயல்பட்டு தமிழின் நவீன காலச் சிந்தனைப் போக்குக்கு தொடக்க நிலை பங்களிப்புகளை வழங்கியவர்களுள் ஒருவர் அயோத்திதாசர் (1845 - 1914). அயோத்திதாசர் மறைந்து நூறாண்டை எட்டும் தருணத்தில்,1990-களில்தான் அவரது எழுத்துகள் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டன. 1880முதல் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய அவர் 1907-ம் ஆண்டு தொடங்கி 1914-ம் ஆண்டு வரையிலும் நடத்திய வார ஏடான ‘தமிழன்’ என்கிற இதழில் எழுதிய எழுத்துக்களின் தொகுப்பு மட்டுமே அவரின் சிந்தனைகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர் பெயரும் அவரது அரசியல் பங்களிப்பும் இதுவரை ஒரளவே விவாதிக்கப்பட்டுள்ளன. அவருடைய சிந்தனைகள் விரிவான அளவுக்கு விவாதிக்கப்படவோ விமர்சனபூர்…

    • 0 replies
    • 558 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.