வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
389 topics in this forum
-
+++ கவிஞர் வசீகரனின் சில படைப்புக்கள்:
-
- 7 replies
- 1.8k views
-
-
மூடநம்பிக்கைகள் மூலம் எந்த மக்களையும் ஏமாற்றமுடியுமென்பதற்கு தற்போது வலம்வந்து கொண்டிருக்கும் குபேராசிலை ஒரு உதாரணமாக அமைகின்றது. சீனர்களின் தயாரிப்பான இந்த சிலை வீட்டில் இருந்தால் நீங்கள் வேலைசெய்யாமல் சும்மா இருந்தாலும் பணத்தை அள்ளிக்கொட்டுமாம். நீங்கள் பணத்தை வைக்குமிடத்தில் இந்த சிலையை வைத்தால் பிறகென்ன நீங்களும் குபேரர்கள்தான். அதிலும் மற்றவர்கள் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தால்தான் சிறப்பாக வேலை செய்யுமாம். நான் நினைக்கின்றேன் தற்சமயம் குபேராசிலை இல்லாத தமிழர்வீடுகள் ஐரோப்பாவில் அநேகமாக இருக்காது என்று. வியாபாரிகளிள் விளம்பர தந்திரத்தில் ஏமாறுகின்றவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகின்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும். …
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்கள் வீட்டு கேபிள் டிவியில் நேற்றுதான் 'நான் கடவுள்' படம் போட்டார்கள். அதன் விமர்சனம் கீழே... ஹீரோவாக வரும் கலைஞர் நடிக்கவே இல்லை. வாழ்ந்து காட்டியிருக்கிறார். கடவுள் கிடையாது என்று அடிக்கடி பிதற்றும் ஹீரோ, தானே கடவுள் என்றும் முரணாக நினைத்துக்கொள்கிறார். பிணங்களோடு வாழும் அகோரி போல இவர் பணங்களோடு வாழ்கிறார். சொந்த பந்தம் எல்லாவற்றையும் அறுத்துவிட நினைக்கும் இவர், எல்லா சொந்த பந்தந்துக்கும் செட்டில்மெண்ட் செய்துவிடுகிறார். ஆனாலும் எல்லா நேரத்திலும் கண்கள் பனிப்பதில்லை, இதயம் துடிப்பதில்லை. நானே கடவுள் என்பதை நிரூபிக்க நானே கேள்வி நானே பதில் என வாழ்கிறார்.அதை நிரூபிக்கும் விதமாக, 'நானே கேள்வி, நானே பதில்' என்று அடிக்கடி எழுதுவதாகக் காண்பிப்பது இயக்குநரின் புத்திசாலி…
-
- 0 replies
- 2.2k views
-
-
பிரெஞ்சு நாட்டின் பெருமதிப்பு வாய்ந்த விருதான "செவாலியர்' விருது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். செவாலியர் என்றதும் "சட்' டென்று எமக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஞாபகத்துக்கு வராமல் போகாது! அங்கு வேறு சில பிரமுகர்களும் அவ்விருதைப் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், நமது இலங்கைத் திருநாட்டில்..? இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை. அந்த பெருமைக்குரிய விருதினைப் பெற்ற ஒருவர் நம் நாட்டில் இருக்கிறார் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். அதுவும் அவர் ஒரு தமிழ்ப் பெண் என்றால் மேலும் வியப்படைவீர்கள் யார் இவர்? இவரது பெயர் திருமதி சிவா இராமநாதன் (சிவயோகநாயகி என்ற பெயரின் சுருக்கம்) யாழ். பருத்தித்துறை பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரை அண்மையில் கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு …
-
- 10 replies
- 2.9k views
-
-
1973ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர்... ராஜம் கிருஷ்ணன். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனைகளுடன், அதே நேரம் மக்களின் யதார்த்த வாழ்க்கையை முற்போக்கான 50க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்தவர். 1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும். உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவர…
-
- 6 replies
- 3.8k views
-
-
கவிஞர் சு.வில்வரெத்தினம் காலத்துயரும் காலத்தின் சாட்சியும். யதீந்திரா கவிஞர் சு.வில்வரெத்தினம் மறைந்து இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களில் ஈழ அரசியலில் பல மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளும், ஒருவகையான சோகமும் பெருமளவிற்கு இலக்கியம் சார்ந்த உரையாடல்களை குறைத்திருக்கிறது. யுத்தம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை தன்வசப்படுத்தியிருக்கும் எந்தவொரு இடத்திலும் நேரக் கூடிய ஒன்றுதான் இது. இராணுவ வெற்றிகளே எமக்கான நற்செய்தியாக இருக்கும் சூழல். எவர் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் சமகாலத்தின் உண்மை. உண்மைகளை நிமிர்ந்து எதிர்கொண்டு அதன் சாட்சியாக இருக்கவேண்டிய பொறுப்பு சமகாலத்தின் படைப்பாளிகளுக்கு உண்டு. அப்படியொ…
-
- 0 replies
- 1.4k views
-
-
MIA என அறியப்பட்ட மாயா அருள்பிரகாசம் அவர்களது Paper Planes
-
- 10 replies
- 4.2k views
-
-
இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர்.மற்றவர் கா.சிவத்தம்பி.தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள்அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும் பரவியிருந்தமொழி எனவும் இலக்கண,இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள்கிரேக்க,உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது,சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் …
-
- 9 replies
- 6k views
-
-
நாச்சிமார்கோயிலடி இராஜன் நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார். வாழ்க்கைச் சுருக்கம் இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது. கலையுலக வாழ்வு இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்…
-
- 37 replies
- 7.8k views
-
-
எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது" - தீபச்செல்வன் பேட்டி: நிந்தவூர் ஷிப்லி ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி நகரம் ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார் தீபச்செல்வன். கவிதைகள், ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், விமர்சனங்கள் என பலதுறையில் இயங்கிவரும் தீபச்செல்வன் முக்கிய கவிஞராக அறியப்பட்டு வருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் பிரக்ஞைபூர்வமாக எழுதி வருகிறார். இவருக்கும் எனக்குமான இரண்டாவது சந்திப்பு இது. இது போன்ற உரையாடல்கள் வழியாக இளைய எழுத்துச்சூழலை செப்பனிடுவதே எங்கள் நோக்கம். 01) நிந்தவூர் ஷிப்லி:- உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை முதலில் தாருங்கள் தீபச்செல்வன் :- நான் ஆனந்தபுரம் க…
-
- 1 reply
- 2.3k views
-
-
கவிஞர் காசி ஆனந்தனுடன் ஒரு சந்திப்பு வாழ்வில் எத்தனையோ நபர்களைத் தினம் தோறும் சந்திக்கிறோம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். நீ யாரையோ பார்த்து பிரமிக்கும் அதே வினாடியில் யாரோ உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள் என்று நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பேன். அவ்வப்போது சந்திக்கும் நபர்களையும், அவர்களுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளையும் வலையேற்றலாமே என்று திடீரென ஒரு சிந்தனை, அந்த சிந்தனையின் விளைவாகத் தான் இந்த முதல் பதிவு. உங்கள் அங்கீகாரம் கிடைத்தால் ஆனந்திப்பேன். விமர்சனங்கள் கிடைத்தால் வளர்வேன். பார்வையில் கூர்மையும், பேச்சில் நேர்மையுமாக புன்னகைக்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். வார்த்தைகளில் வீரியமடிக்க…
-
- 4 replies
- 4.4k views
-
-
"வெட்டப்பட்ட நகங்களை விடுத்து விரல்களைப்பாதுகாப்போம்" நிந்தவூர்ஷிப்லி-தீபச்செல்வன் :சந்திப்பு ஈழத்தின் தென்கிழக்கு நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்கிறார். இதுவரை 3 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். 2002 இல் சொட்டும் மலர்கள் 2006இல் "விடியலின் விலாசம்" 2008 இல் "நிழல் தேடும் கால்கள்".2007 இல் "தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவசியம்" என்ற ஆய்வு தேசிய சமாதான பேரவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிறந்த ஆய்வுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி
-
- 3 replies
- 2k views
-
-
காற்றுவெளியினில் இதுவரை நான்........................ 11வயதில் ஆரம்பித்த பயணம். அழையாவிருந்தாளியாய் இலங்கை வானொலிக்கலையகத்தில் அடியெடுத்து வைத்தேன்.சிறுவர் மலரைப்-பார்க்க, நண்பன் ஜோசப்எட்வர்டுக்கு வந்த அழைப்போடு ஒட்டிக்கொண்ட நாள் அது. பச்சைமலைத்தீவு தொடர் நாடகத்தில் பூதமாக நடித்து வந்த சிறுவனுக்கு, அன்று உடல்நிலை, சரியில்லை. வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களுக்குக் குரல்பரிசோதனை. அடித்தது அதிர்~;டம். தொடர்ந்து எனக்கே வாய்ப்பு. அதனைத் தாரைவார்த்துக் கொடுத்;தவன், பின்னாளில் என் உடன்பிறவாச் சகோதரனான, எஸ்.ராம்தாஸ்(மரிக்கார்). வானொலி மாமாக்களான, எஸÊ.நடராஜன், கருணைரத்தினம், வி.ஏ.கப+ர், சரவணமுத்துமாமா ஆகியோர் மறக்க முடியாதவர்கள். (வானொலி அக்கா பொன்மணி குலசிங…
-
- 9 replies
- 3.6k views
-
-
நேர்கண்டவர்: தமிழன்பன் (ஐவான்) - எமது விடுதலைப் போராட்டவரலாற்றில் அதிசயமான வியக்கத்தக்க எத்தனையோ சாதனைகள் நடந்திருக்கின்றன. எங்களுடைய தமிழீழ தேசியத் தலைவர் எங்களுடைய இனத்தை ஒரு சமத்துவமான சமதர்மமுடைய நல்ல பலமான ஒரு இனமாக கட்டி வளர்த்து வருகிறார். களங்களையும் புலங்களையும் கண்டு பேனா முனையிலும் துப்பாக்கி முனையிலும் ஏர்முனையிலும் நின்று தன்னை நிலை நிறுத்தி இன்று வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த பெண்மணியைச் சந்திக்கின்றோம். தமிழன்பன் (ஐவான்): ஏகப்பட்ட தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி அயராது உழைத்து நிமிர்ந்து நிற்கும் ஒரு உயர்ந்த இலட்சிய வாதியாகவும் ஒரு போராளியாகவும் இருக்கிறியள். ஒரு எழுத்தாளராக இருக்கிறியள். எழுத்தாளர் எனும்பொழுது சிறுகதை, ந…
-
- 9 replies
- 3.8k views
-
-
பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்களே தவிர பரிதாபப்பட வேண்டியவர்களல்ல (`நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளரான செல்வி சிவராமலிங்கம் யாமினி கவிதை, சிறுகதை எழுவதுதிலும் கணிசமாக பணியாற்றி வருகின்றார். ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வவுனியா மாவட்டத்தில் இருந்து செய்து வரும் யாமினியை `தினக்குரல்'க்காக நேர்கண்டபோது பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.-கனகரவி- ) கேள்வி: நீங்கள் வெளியிட்ட முதல் நாவல் பற்றிக் கூறுங்கள்? பதில்: இது ஒரு சமூக நாவல். இது சமூகத்தில் இருக்கின்ற கண்ணியமற்ற சில ஆண்களினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை முக்கியமாக இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்கின்றது. அத்தகைய ஆண்கள…
-
- 0 replies
- 2.2k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! தாயகத்தில் பிறந்து தற்போது புலத்தில் - நோர்வேயில் வாழ்ந்துவரும் சகோதரர்கள் மே 18, 2008 அன்று கனடாவில் நடைபெறும் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள். தமிழ் ரப் உலகில் புதிய ஒரு அத்தியாயத்தை எழுதும் இவர்களின் பாடல்கள் பலரது அமோக வரவேற்பை பெற்று இருக்கும் அதேசமயம் கனடாவில் நடைபெறும் இவர்களின் இசை நிகழ்ச்சி கொண்டாட்டத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களிற்கு நல்லதொரு இசைவிருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களது பாடல்களை நீங்கள் கீழே பார்த்து மகிழலாம்!
-
- 0 replies
- 1.8k views
-
-
இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்! - த.சிவசுப்பிரமணியம் - ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது. அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின்…
-
- 0 replies
- 1.8k views
-
-
செ.யோகநாதன் செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர். ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் பாராட்டும், பரிசும் பெற்றவர். கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1960, 1964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழுமத்தில் ஒருவர். பின்னர் தமிழகப் பத்திர…
-
- 0 replies
- 1.7k views
-
-
தஞ்சா - புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களின் மகள். வயது 18. ஜெர்மனியில் பிராங்பர்ட்டில் 1989ல் பிறந்தார். குடும்பம் தாண்டிய அனைத்து நிலைகளிலும் ஜெர்மன் மொழியே புழங்கும் மொழியாக, பயில்மொழியாக இருப்பதால் தஞ்சா எழுதவதும் ஜெர்மன் மொழியில். அவருடைய கவிதைகள் சேரன் போன்ற கவிஞர்களின் பாராட்டு பெற்றுள்ளன. இக்கவிதையைத் தமிழ் ஆக்கம் செய்தவா சேரன். தஞ்சா - 'ஈழமண்ணில் ஓர் இந்தியச்சிறை' என்ற நூலை எழுதியவரும், ஈழநாடு, ஈழமுரசு போன்ற நாளிதழ்களில் ஆசிரியராய் இருந்தவருமான எஸ். எம். கோபாலரத்தினத்தின் பெயர்த்தி. எதுவுமே சொல்ல வேண்டாம் துணிவைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் என்னிடம் அது இல்லை காதலைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல…
-
- 8 replies
- 3.1k views
-
-
அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி வ.ஐ.ச.ஜெயபாலன் எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப் பட்டிருக்கும். 1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராட்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்திததில் இருந்து 1999ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்ப்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செளித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே. மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணனிக் காலம்வரைக்கும் சு…
-
- 16 replies
- 4.3k views
-
-
கொழும்பிலிருந்து கோடம்பாக்கம்: ஒரு பாடகரின் பயணம் குண்டுவெடிப்பு சப்தங்களால் கோமா நிலைக்கும்போகும் செவிகளை தனது இன்னிசை மழையில் உயிர்ப்பிக்க செய்யும் உன்னத காரியத்தை செய்து வருபவர் பாடகர் சிவக்குமார். இவரது பூர்வீகம் கொழும்பு. அக்னி சிவக்குமார் என்றால் இலங்கையில் தெரியாத ஆட்களே இல்லையாம். இவர் நடிக்கும் இசைக்குழுவின் பெயர்தான் அக்னி. பள்ளிப்பருவத்தில் ஆரம்பித்த பாட்டு ஆர்வம் இன்று சினிமா பாடகர்வரை வளர்த்துவிட்டுள்ளது. இலங்கை வானொலிகள், தொலைக்காட்சி தொடர்கள் என இவரது பாட்டு பயணம் நெடுந்தொலைவு. 90களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாடகர் மனோதான் சிவாகுமாரின் இன்ஸ்பிரேஷனாம். இவர் நடத்தி வரும் இசைகுழுவில் தமிழ் பின்னணி பாடகர்-பாடகிகள் பலர் பாடியுள்ளனராம். '…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
தமிழீழக்குயில் -- பார்வதி சிவபாதம் தமிழீழக்குயில் - பார்வதி சிவபாதம் வலைப்பதிவு செய்யத் தொடங்கிய போதே இதை எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன். எழுதத் தொடங்கிய சில நாட்களில் திருகோணமலை பற்றிய பதிவை எழுதத் தொடங்கி, அது தொடராக நீண்டதால் இந்தப்பதிவு தாமதமாயிற்று. ஆயினும் இதைப்போல் வேறு சில பதிவுகளும் எழுதுகின்ற எண்ணம் உண்டு. அதற்கான காரணம், எங்கள் கலைஞர்கள் குறித்த ஒர் அக்கறை அல்லது பெருமிதம் எனக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபலமான இளம் கர்நாடக இசைவித்தகி ஒருவரை, வானொலி நிகழ்சிக்காகச் செவ்விகண்டு கொண்டிருந்தேன். அப்போது, இலங்கைக்கலைஞர்கள் பற்றிய கருத்தாடல் வந்தபோது, இலங்கையின் பிரபலமான இசைக்கலைஞர்கள் சிலர் பற்றி நான் குறிப்பிட்டேன். அந்தச் சந்தர…
-
- 3 replies
- 2.9k views
-
-
ஈழத்து இளம் படைப்பாளியான வசீகரன் அண்ணாவுடனான நேர் காணல் யாழ்களதிற்காக அவர் தந்த விசேட செவ்வி................. வணக்கம் தமிழ்வானம் அண்ணா (வசீகரன்) அண்ணா பல வேலை பளுவிற்கு மத்தியிலும் எமது அழைப்பர் ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர்குடும்பத்தின் சார்பாக வணக்கத்துடனான நன்றிகள்.. பேட்டிக்கு செல்வோமா வசீகரன் அண்ணா............. 1)உங்களை பற்றிய சிறிய அறிமுகத்தை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?அத்துடன் யாழ் இணையதளதிற்கு நீங்க வர ஏதுவா அமைந்த விசயம் என்ன?யாழ் இணையதளத்தை பற்றிய உங்கள் பார்வை என்ன? வணக்கம் ஐமுனா(உங்கள் நிஐப்பெயர் இதுதானோ ) என் இனிய இணையத் தமிழ் வணக்கங்கள். முதலில் யாழ் இணைவலையை உருவாக்கிய திரு.மோகன் அண்ணாவிற்கும் மற்றும் அவரு…
-
- 60 replies
- 14.4k views
-
-
"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி வாடும் வயிற்றை என்ன செய்ய காற்றையள்ளித் தின்று விட்டு கையலம்பத் தண்ணீர் தேட...... பக்கத்திலே குழந்தை வந்து பசித்து நிற்குமே...- அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே.......... அதன் பால்வடியும் முகம் அதிலும் நீர் நிறையுமே.........." நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் …
-
- 3 replies
- 3.4k views
-