விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
-
இந்திய டெஸ்ட் அணி விபரம் நாளை வெளியாகும் இந்திய டெஸ்ட் அணி விபரம் நாளை வெளியாகும். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விபரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இஷாந் சர்மா அணிக்கு திரும்புவார் என்று நம்பப்படுகின்றது, அத்தோடு லோகேஸ் ராகுல், காம்பிர் ஆகிய வீரர்களும் அணியில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%…
-
- 157 replies
- 8.6k views
-
-
T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது! மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியைய…
-
-
- 121 replies
- 8.6k views
- 1 follower
-
-
வடக்கின் போர் சென்ட்ரல் vs சென் ஜோன்ஸ் பிக் மேட்ச் எதிர்வரும் 10 11 12ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இவ்வருடம் 200வது வருடங்களை நிறைவு கண்டு இருப்பதால் இப்போட்டியும் மிகமுக்கித்துவம் வாய்ந்த ஒன்றாக கருத்தப்படுகிறது. st. Johns படத்தையும் 2 போட்டு இருக்கு. இல்லை என்றால் நிழலியும் பகலவனும் கோவித்து கொள்வார்கள்.. இந்த போட்டி தொடர்பான செய்திகள் தொடரும்
-
- 153 replies
- 8.5k views
- 1 follower
-
-
ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடக்கம்- முன்னேற்றம் காணுமா கொல்கத்தா? செய்திப்பிரிவு ஐபிஎல் டி20 தொடரில் கடந்த சீசனில் தொடக்க ஜோடி, நடுவரிசை, போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரர்ஆகியோர் கண்டறியப்பட்டிருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கொல்கத்தா அணி தடுமாற்றம் அடைந்தது. தொடரின் நடுப்பகுதியில் கேப்டன் மாற்றப்பட்டதும் பலன் கொடுக்கவில்லை. ஆந்த்ரே ரஸ்ஸல் கடந்தசீசனில் பேட்டிங்கில் தடுமாறினார். அதேவேளையில் சுனில்நரேன் பந்து வீச்சு பாணி சர்ச்சைக்குள்ளானது. இவர்களின் பார்ம் ஒட்டுமொத்த அணியின் ஸ்திரத்தன்மையை பதம் பார்த்தது. விளைவு 2-வதுமுறையாக கொல்கத்தா அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.இந்த சீசனில் கொல்கத்தா அணிதனது முதல் ஆட்டத்தில் வ…
-
- 89 replies
- 8.3k views
- 1 follower
-
-
டி-20 உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு! JegadeeshSep 12, 2022 17:56PM ஷேர் செய்ய : ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிகளை பி.சி.சி.ஐ இன்று (செப்டம்பர் 12 ) அறிவித்துள்ளது. இதில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படே…
-
- 167 replies
- 8.2k views
- 1 follower
-
-
ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! டெல்லி: ஏழாவது ஐ.பி.எல். போட்டிகளை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. 16வது லோக்சபா தேர்தலும், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தேர்தல் முடியும் வரை அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! இதனால் 7-வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதில் குழப்பம் நீடித்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவ…
-
- 147 replies
- 8.2k views
-
-
தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்: பும்ரா உள்பட 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியா களம் இறங்குகிறது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா உடன் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடி இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 10-ந்தேதி 17-ந்தேதி வரையும், டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி உடன் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. அதன்பின் இந்திய அணி 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. 30-ந்தேதி ம…
-
- 73 replies
- 8.2k views
-
-
இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் ஆன சனத் ஜெயசூரியா ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தொடர்ந்து ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் கலந்துகொள்வார் என்று தெரியவந்துள்ளது. 2007 இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் கிரிக்கட்டில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வுபெறப்போவதாகவும் சனத் தெரிவித்துதுள்ளார். ஜெயசூரியா ராய்ட்டர் நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், " ரெஸ்ட் போட்டிகளில் விளையாடாது ஒதுங்கியிருப்பது உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடக் கூடியவாறு உடல் நலத்தைப் பேண உதவும்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நிச்சயமாக நான் அச்சுற்றுப் போட்டியின் பின் கிரி…
-
- 46 replies
- 7.9k views
-
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. போட்டியில் பங்கேற…
-
-
- 123 replies
- 7.7k views
- 2 followers
-
-
இலங்கை இந்திய அணிகளிடையேயான 1 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நாக்பூர் நகரில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையில் இம்முறை முதல் தடவையாக 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வருட முற்பகுதியில் இலங்கை இந்திய மேற்கிந்தியத்தீவு அணிகளிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டியில்இ இலங்கைஇ இந்திய அணிகளிடையே நடைபெற்ற முதல் இரு சுற்று ஆட்டங்களிலும்இ இறுதியில் இவ்விரு அணிகளிடையே நடைபெற்ற சாம்பியன் மோதலிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது. தற்போது இந்திய மண்ணில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 7 போட்டிகள் நடைபெற இருப்பதனால்இ இவ்விரு அணிகளுக்குமிடையில் கடும்போட்டி நிலவக்கூடும். இலங்கையி…
-
- 39 replies
- 7.6k views
-
-
வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி: பேட்டிங்கில் 4-ம் நிலையில் இறங்குகிறார்? பெங்களூரு பயிற்சி முகாமில் வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்களை ஆடிய தோனி. | படம்: பிடிஐ. ஆக்ரோஷமான ஷாட்டை ஆடும் தோனி. | படம்: பிடிஐ தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சவாலான நீண்ட தொடரை அடுத்து பெங்களூருவில் தயாரிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஷிகர் தவண், தோனி, மொகமது ஷமி ஆகியோர் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபட்டு கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். புதன் கிழமையன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ஒருநாள் அணி கேப்டன் அடுத்தடுத்து பெரிய பெரிய ஷாட்களை ஆடினார். ரவிசாஸ்திரி அவரது ஆட்டத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நீண்ட நேரம் தோனியுடன் ரவிசாஸ்திரி உரையாடினார். இத்தனையாண்டுகளாக ஒ…
-
- 70 replies
- 7.5k views
-
-
முதல் நாள் பதக்க வரிசை: Country G S B Total CHN 2 0 0 2 GBR 0 1 1 2 USA 0 1 1 2 AUS 1 0 0 1 KOR 0 1 0 1 KAZ 0 0 1 1
-
-
- 119 replies
- 7.5k views
- 2 followers
-
-
முதலாவது டெஸ்ட்: இந்தியாவை 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 134 ஓட்டங்களால் முன்னிலை (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் வெறும் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 1936இல் பெற்ற 36 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸி…
-
-
- 81 replies
- 7.4k views
- 1 follower
-
-
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி யாழில் ஆரம்பம் வடக்கின் பெரும் போர் என வாண்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான துடுப்பாட்டப் போட்டி நேற்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் பூவா தலையா போட்டதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 102 வது தடவையான போட்டி முதல் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ளது. pathivu.com
-
- 38 replies
- 7.3k views
-
-
-
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகை வீழ்த்திய முதல் பந்து வீச்சு வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று சாதனையை, வங்காள தேசதுக்கெதிராக, சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் அன்று அவர் நிகழ்த்தினார். 3ம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடமலேயே, வெற்றி பெறும் வலுவான நிலையில் இலங்கை உள்ளது. நன்றி : http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml
-
- 28 replies
- 6.6k views
-
-
2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஆரம்பம் Published By: SETHU 20 JUL, 2023 | 06:30 AM (ஆர்.சேதுராமன்) 2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமாகின்றது. சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் 9ஆவது தடவையாக நடத்தும் இப்போட்டிகளை அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் திகதி சிட்னி நகரில் நடைபெறவுள்ளது. இம்முறை முதல் தடவையாக 32 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. இதற்கு முன் அதிகபட்சமாக 24 அணிகளே பங்குபற்றின. முதலாவது போட்டியில் நியூஸிலாந்து…
-
- 85 replies
- 6.6k views
- 1 follower
-
-
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெ…
-
- 12 replies
- 6.5k views
-
-
போர்முலா 1 போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. வாகன ஓட்டப் போட்டிகளில் மிகவும் உயர்வானதாகக் கணிக்கப்படும் போர்முலா 1 போட்டிகள் இவ் வருடம் 19 நாடுகளில் நடக்கவுள்ளன (முதலாவது போட்டி Bahrain இல் நடைபெறுவதாக இருந்தது. கலவரங்களினால் அது நடைபெறவில்லை.). 12 கார் நிறுவனங்கள் பங்குகொள்ளும் இப் போட்டிகளில் தலா 2 கார் வீதம் 24 கார்கள் போட்டியிடவுள்ளன. இவ்வருடம் போட்டியிடும் 24 ஓட்டுனர்களில் 5 பேர் வெற்றிவீரர்கள் (World champion) ஆவர். புதிய விதிகளுக்கமைய ஒவ்வொரு நிறுவனமும் தமது கார்களைப் புதிதாக வடிவமைத்துள்ளன. முன்பில்லாதவாறு இப்போதெல்லாம் கார் ஓட்டுனர்களைவிட தொழில்நுட்பத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெரிவுப் போட்டிகளின்போது சுமார் 5 km நீளமுள்ள ஓடுபாதையைச் சுற…
-
- 67 replies
- 6.5k views
-
-
கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவர் வகித்து வந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். http://www.vikatan.com/news/india/76889-dhoni-steps-down-as-captain-of-the-indian-cricket-team.art ஒருநாள், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி திடீர் விலகல் தோனி. | கோப்புப் படம்: சந்தீப் சக்சேனா. …
-
- 26 replies
- 6.5k views
-
-
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது 06 NOV, 2022 | 07:04 AM இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி நேற்றையதினம் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை நாடு திரும்…
-
- 105 replies
- 6.5k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள் பிராட், ஆண்டர்சனுக்கு வயதாகி விட்டது; ஆஸி. 3-1 என்று வெல்லும்: ஸ்டீவ் வாஹ் கருத்து இங்கிலாந்தால் ஆஷஸை வெல்ல முடியாது என்கிறார் ஸ்டீவ் வாஹ். - கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார் பிரிஸ்டல் தெருச்சண்டையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடர் ஆடாததையடுத்து இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வெல்வது மிகக் கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலியில் ஸ்டீவ் வாஹ் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி கூறியதாவது: பென் ஸ்டோக்ஸ் வரவில்லையெனில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியாது எ…
-
- 110 replies
- 6.4k views
-
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஃபார்மில் இல்லாதபோதும் கோலியை கொண்டாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக விராட் கோலி இந்த ஆண்டில் டெஸ்டில் மொத்தமாக 250 ரன்கள் சேர்த்து 22 சராசரி மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில், மோசமான ஃபார்மில் இருந்தும், அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா வந்தவுடன் அவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடுகின்றன. இதற்குக் காரணம் என்ன? கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, தோனி போன்ற பல முக்கியமான வீரர்களை இந்திய கிரிக்கெட் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் விராட் கோலியும் கவனிக்கப்படுக…
-
-
- 106 replies
- 6.2k views
- 1 follower
-
-