Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டெல்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியை பயன்படுத்திய கோலி: ஐ.சி.சி. விதியை மீறினாரா? டெல்லியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். இது ஐ.சி.சி. விதிமுறை மீறலா? என்ற விவாதத்தை எழுப்பியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது வெளியில் இருந்த கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தார். இதை பல செய்தி நிறுவனங்கள் படம் எடுத்தனர்.…

  2. 35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்…

    • 1 reply
    • 517 views
  3. 'சுழல் தமிழன்' அஸ்வின் சாதனை: உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர்: அஸ்வின் சாதனை. | படம்: பிடிஐ. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 1973-ம் ஆண்டு பிஷன் பேடி நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு தற்போது அஸ்வின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகள் அடங்கும். 1973-ம் ஆண்டில் பிஷன் சிங் பேடி நம்பர் 1 இடம் பிடித்த பிறகு இந்திய பவுலர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இ…

  4. IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle கார்த்தி கிறிஸ் கெயில் 41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை. 132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை.…

  5. இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா? சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். கேள்வி – …

  6. தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில் இந்தியா தோற்றதுக்கான விதை... பி.சி.சி.ஐ போட்டது! #SAvsIND 2017 பிப்ரவரி - ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திறங்கியது. 2 வாரங்களுக்கு முன் ஹைதராபாத்தில் வங்கதேசத்தை நசுக்கிவிட்டு ஆஸி அணியை எதிர்கொள்ள ஆயத்தமானது இந்தியா. ரவீந்திர ஜடேஜாவும் ரவிச்சந்திரன் அஷ்வினும் பட்டையைக் கிளப்ப, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா. கேப்டனாக கோலி வானில் பறந்துகொண்டிருந்தார். இலங்கையிடம் வைட்வாஷ், தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வி என வரிசையாக சரிவுகளையே கண்டிருந்த ஸ்மித்மீது எக்கச்சக்க நெருக்கடி. 10 மாதங்கள் முடிந்துவிட்டது. மிகப்பெரிய ஆஷஸ் தொடரை 4-0 என வென்று, தொடரின் நாயகனாகவும் ஜொலித்து டெஸ்ட் அரங்கின் அரசன…

  7. 100 மணி நேரம் சமூக சேவை: குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசி. வீரருக்கு நூதன தண்டனை குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல்லுக்கு 100 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல். 26 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி மது அருந்திய நிலையில் கார் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். ஹாஸ்டிங்ஸ் பகுதியில் வரும்போது போலீசார் இவரது காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அப்போது பிரேஸ்வெல் குடித்திருந்தது தெ…

  8. #இரக்கமற்ற_இரும்பு_மனிதன்... சனத் ஜெயசூர்யவின் பிறந்த நாளையொட்டி பல கட்டுரைகளைப் படித்தேன். அதில் ரொம்பவும் பிடித்திருந்தது விகடனின் இந்தக் கட்டுரை. மீண்டுமொரு முறை அந்தக் காலத்துக்கே சென்றதான உணர்வு. வாசித்துப் பாருங்கள் சனத்தின் இரக்கமில்லா தன்மைகளை… சின்ன வயதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் Pad, ஹெல்மெட்களை அணிந்து விளையாடியவர் என்பதால் தனக்கு செட் ஆகாத பேட்களையும், ஹெல்மெட்டையும் ஒவ்வொரு பந்தையும் அடிக்கும் முன் அட்ஜஸ்ட் செய்வது ஜெயசூர்யாவின் வழக்கமாகியிருக்கிறது. மார்ச் 2, 1996... அது ஒரு சனிக்கிழமை. உலகக்கோப்பையில் இந்தியா விளையாடிய நான்காவது போட்டி. இதற்கு முன்பான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்திருந்தது. ''இலங்கையை ஜெயிக்கிறதெல…

  9. கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இலங்கை வருகிறார்.. சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா நாளை (09.05.2023) இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு பற்றிய குற்றச்சாட்டு குறித்த உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை வரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது அவர் விளையாட்டுத் துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அரசியல் தலையீடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா தலைமையிலான மூவர் கொண்ட குழுவை ஐ.சி.சி நியமித்ததாக கூறப்படுகிறது. …

  10. மதுபோதையில் குழப்பம் விளைவித்த மக்ஸ்வெல் வைத்தியசாலையில் அனுமதி; விளக்கம் கோருகின்றது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 10:33 AM அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் ஹோட்டலொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மதுபோதை காரணமாக இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்தே மக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிலெய்டில் பிரெட்லீ கலந்துகொண்ட இசைநிகழ்ச்சியொன்றை பார்வையிடுவதற்கு மக்ஸ்வெல் சென்றிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வேளையே…

  11. Published By: VISHNU 22 APR, 2024 | 08:13 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 16 நிமிடங்கள், 16 செக்கன்களில் நிறைவு செய்த ஒலிம்பிக் சம்பியன் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்ச்சேர்ச்சேர், பெண்கள் மட்டும் (London Marathon Women's only) உலக சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் எதியோப்பியாவின் உலக சாதனையாளர் டிக்ஸ்ட் அசேஃபா முதல் தடவையாக லண்டன் மரதனில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏழு வருடங்கள் நீடித்த பெண்கள் மட்டும் உலக சாதனையை பெரெஸ் செப்ச்சேர்ச்சேர் முறியடித்து பெரும் புகழ்பெற்றார். …

  12. யாழில் கரம் சுற்றுப்போட்டி யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான கரம் சுற்றுப்போட்டி நாளையும் நாளைமறுதினமும் யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகில் இடம்பெறவுள்ளது. இச் சுற்றுப்போட்டியை யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் உடற்கல்வி அலகும் இணைந்து நடத்தவுள்ளன. இப்போட்டிக்கு ஹரிகரன் பிறின்டேர்ஸ் அனுசரணை வழங்குகின்றனர். முதல்நாள் போட்டிகள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும். இச் சுற்றுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய் வலி தென்மேற்குப் பிரதேச சபை செயலாளரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கரம் பெண்கள் அணியின் தலைவியுமாகிய திருமதி. ஜெயந்தா சோமராஜ் கலந்து சிறப்பி…

  13. உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை November 09, 2015 கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை எது தெரியுமா? நியூயோர்க்கில் நடைபெற்ற முதலாவது சகல நட்சத்திரங்களின் ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நட்சத்திரங்களும் கையொப்பமிட்ட இந்த துடுப்புமட்டைதான். நியூயோர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=3224&cat=2

    • 1 reply
    • 880 views
  14. 'மின்னல் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், தான் படித்த பள்ளிக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் 100 மற்றும் 200 ஓட்ட பந்தயங்களில் அசத்தி வருபவர். அண்மையில் பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளத்திலும் உசேன் போல்ட் இந்த இரு பிரிவிலும் தங்கம் வென்று அசததினார். ஐமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்த உசேன் போல்ட் , அங்குள்ள வில்லியம் நிப் என்ற பள்ளியில் படித்தார். இந்த பள்ளிதான் உசேன் போல்ட் சிறந்த தடகள வீரராக உருவாக அடித்தளமிட்டது. தற்போது தடகள உலகின் மன்னனாக திகழும் உசேன் போல்ட், தான் படித்த இந்த பள்ளிக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஈடான பல்வேறு விளையாட…

  15. 12 FEB, 2025 | 12:02 PM (நெவில் அன்தனி) இலங்கையுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் மெத்யூ குனேமானின் பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டுள்ளது. காலியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் குனேமான் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்திற்குரியதென புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஐசிசியின் அங்கீகாரம் பெற்ற நிலையத்தில் சுயாதீன பரிசோதனைக்கு குனேமான் உட்படுத்தப்படவுள்ளார். பெரும்பாலும் பிறிஸ்பேனில் அமைந்துள்ள நிலையத்திலேயே அவரது பந்துவீச்சு பாணி தொடர்பான பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ம…

  16. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக சங்ககார? February 26, 2016 பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவை நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கட் தொடரில் பங்கேற்ற சங்ககார அங்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ரி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சங்ககாரவை ஆலோசகராக நியமிப்பது குறித்து ஷகார்யார் கான் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும்; இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகி…

  17. லண்டன்: ஒலிம்பிக் தனி நபர் வில்வித்தை போட்டியில், நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி, பிரிட்டன் வீராங்கனையிடம் படுதோல்வி அடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு எலிமினேஷன் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறினார். பிரிட்டன் வீராங்கனை ஆலிவரிடம் 6-2 என்ற செட் கணக்கில் தீபிகா தோல்வி அடைந்தார். இதன் மூலம் வில்வித்தையில் இந்திய ரசிகர்கள் வைத்திருந்த இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. வில்வித்தையில் உலகின் முதல் தரவரசையில் இருந்த தீபிகா படுதோல்வி அடைந்தது இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. vikatan.com

    • 1 reply
    • 639 views
  18. ஆசிய வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள 12ஆவது ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இளம் வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர…

  19. இந்தியாவின் உசைன்போல்ட் என வர்ணிக்கப்படும் கர்நாடகாவின் எருதுகளுடன் ஓடும் ஓட்டப்பந்தய வீரர்சிறீனிவாஸ் கௌடா, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார். கம்பாலா என அழைக்கப்படும்  வயலிற்கு நடுவில் இரண்டு எருதுகளுடன் 142 மீற்றர் ஒடும்போட்டியில் சிறீனிவாஸ் கௌடா கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார். 28 வயது கௌடா துடிப்பாக செயற்பட்டு முதல் 100 மீற்றரை 9.55 வினாடியில் கடந்தார். மொத்த தூரத்தை இவர் 13.62 வினாடிகளில் கடந்தார் இதேவேளை இவர் உசைன் போல்டின் உலக சாதனையையும் முறியடித்தார் இதன் காரணமாகஇவரை இந்திய ஊடகங்கள்இந்திய உசைன் போல்ட்என கொண்டாடுகின்றன. கௌடாவின் வெற்றி சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவு…

  20. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை நடத்த தயாராகவிருப்பதாக இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது. மே மாதம் 03 ஆம் திகதி வரையான இந்தியாவின் நாடு தழுவிய பூட்டல் நடவடிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரை பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் தொடரை ஒத்திவைத்தது. இந் நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதொடர்பான செய்தியொன்று சிங்கள ஊடகத்தில் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அத்துடன் அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்தால் இலங்கையின் இந்த முன்மொழிவு தொடர்பில்…

    • 1 reply
    • 702 views
  21. குசல் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி. இணக்கம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது. இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்…

  22. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு தெரிவாவதில் பாகிஸ்தானுக்கு சிக்கலாம் ஒருநாள் கிரிக் கெட் தர­வ­ரி­சையில் பாகிஸ்தான் இது­வரை இல்­லாத அளவில் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. இதனால் பாகிஸ்தான் தன்­னிச்­சை­யாக 2019 உலகக் கிண்­ணத்­திற்கு தகுதி பெறு­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்து– - பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்­கெட்­தொடர் முடி­வுக்கு வந்­தது. தொடர்ந்து 4 போட்­டி­களை வென்று 4–-0 என இங்­கி­லாந்து முன்­னி­லையில் இருந்­தது. கடைசிப் போட்­டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வைட் வொஷ்ஷை தவிர்த்­தது. இந்த தொடர் த…

  23. தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில…

  24. 06 NOV, 2023 | 08:18 PM சி.சி.என் 2023 உலகக்கிண்ணத் தொடர் பல சுவாரஸ்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கையணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழந்த முறை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆடுகளத்தில் நுழைந்த அவர் தனது தலைக்கவசம் பிரச்சினை கொடுத்ததால் சுமார் மூன்று நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாட தயாராகவில்லை. இதையடுத்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோர ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிகளின் படி TIME OUT முறையில் மெத்யூஸ் ஆட்டமிழந்தவராக கருதப்பட அவர் ஆட்டமிழப்பு தீர்ப்பை வழங்கினார். ஒரு நாள் சர்வதே கிரிக்கெட் போட்டிகளைப்பொறுத்தவரை இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.