விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஆரம்பமும் முடிவும் மும்பையில் ! ஏப்ரல் 7 முதல் மே 27 வரை ஐ.பி.எல். கொண்டாட்டம் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்ப போட்டியும் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ளது. 11 ஆவது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தன. அதில் வீ…
-
- 1 reply
- 246 views
-
-
51 வயதிலும் அதே ஸ்விங்: ஷோயப் மாலிக்கை 2 ரன்களில் வீழ்த்திய வாசிம் அக்ரம் ஷோயப் மாலிக்கை வீழ்த்திய மகிழ்ச்சியில் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சு லெஜண்ட் வாசிம் அக்ரம் ஓய்வு பெற்று 14 ஆண்டுகள் ஆகியிருக்கும். ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட அவர் தன் வயதையும் முறியடித்து 51 வயதில் தன் பழைய ஸ்வின் பவுலிங்கை வெளிப்படுத்தி தற்போது ஆடிவரும் ஷோயப் மாலிக்கை எட்ஜ் செய்ய வைத்தது, ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான முல்டான் சுல்தான் அணிக்காக காட்சிப் போட்டி ஒன்றில் ஆடினார். அப்போது பந்து வீசிய வாசிம் அக்ரம் தன் 51 வயதையும் பொருட்படுத்தாம…
-
- 1 reply
- 430 views
-
-
யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இன்று இலங்கை அபிவிருத்தி அணியை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை தேசிய அணியினர் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். அதேபோன்று, இன்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் சிங்கப்பூர் தேசிய அணி இங்கிலாந்தின் PSTAR கழக அணியினரை இலகுவாக வெற்றி கொண்டனர். சிங்கப்பூர் எதிர் PSTAR இன்றைய முதல் மோதலாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் அனுபவம் கொண்ட சிங்கப்பூர் வீராங்கனைகள் PSTAR அணியினருக்கு பெரும் அழுத்தமாகவே இருந்தனர். போட்டி ஆரம்பித்தது முதல் ஆதிக்கம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கோலியா தோனியா? யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்? எண்கள் கூறுவது என்ன? YouTube தோனி, கோலி. | படம்: விவேக் பென்ரே. டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது இந்திய கேப்டன்களிலேயே பெரிய பெயரை அயல்நாட்டினர் மத்தியிலும் எடுத்ததில் மன்சூர் அலிகான் பட்டவ்டிதான் சிறந்த கேப்டன். இரட்டை அயல்நாட்டு தொடர்களை அடுத்தடுத்து வலுவான மே.இ.தீவுகள், இங்கிலாந்து என்று கொடிநாட்டியவர் அஜித் வடேகர். இது வெற்றி தோல்விகளினால் அல்லாமல் பட்டவ்டியின் கேப்டன்சி திறமையினால் அவருக்கு கிடைத்த நற்சான்றிதழாகும். அதே போல் சவுரவ் கங்குலி கேப்டனான பிறகு அயல்நாடுகளில் இந்திய வீரர்களின் ஆட்டத்தில் புத்தெழுச்சி ஏற்பட்டது. எண்களை விடுத்துப் பார்த…
-
- 1 reply
- 459 views
-
-
மெத்தியூஸ் இல்லாத ஒருநாள் அணியை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள், இருபதுக்கு 20, டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்குமிடையேயான இப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி…
-
- 1 reply
- 707 views
-
-
இறுதி போட்டியில் களமிறங்கும் சென்றலைட்ஸ் vs ஜொலி ஸ்டார்ஸ் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், வருடாந்தம் நடத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் பி.வதூஸனனின் துல்லியமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 27 ஓவர்களில் 78 ஓட்டங்களை மாத்திர…
-
- 1 reply
- 413 views
-
-
கடைசி ஒருநாள் போட்டி - நியூசிலாந்து வெற்றி பெற 253 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா வெல்லிங்டனில் நடைபெற்று வரும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெல்லிங்டன்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி முதல் 3 போட்டியில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. விராட்கோலி இல்லாத அணி 4-வது போட்டியில் 92 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இன்றைய கடைசி போட்டிக்கான அணியில் 3 மாற்றம் இருந்தது. காயத்தில் இருந்து குண…
-
- 1 reply
- 828 views
-
-
பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகள்: காதல் களமானது ஒலிம்பிக் மைதானம் ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்ட் பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை. வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்திற்கு அனுமதி கோரினார். …
-
- 1 reply
- 429 views
-
-
சம்பியன்களுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு - படங்கள் இணைப்பு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் அபார வெற்றிவாகை சூடிய பாகிஸ்தான் அணிக்கு அவர்களின் தாய்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்ப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் நேற்றுமுன்தினம் சம்பியன்ஸ் கிண்ணத்துடன் நாடு திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது. அத்தோடு வீதியோரங்களில் ரசிகர் கூட்டம் பொங்கிவழிய சம்பியன்ஸ் அணி வலம் வந்தது. …
-
- 1 reply
- 351 views
-
-
தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகள் வெற்றிகளைப் பெற்று, தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளன. சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இலங்கை தேசிய அணிக்கு பயிற்சியை வழங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த நட்பு ரீதியிலான தொடரில் இலங்கை தேசிய அணி, சிங்கப்பூர் தேசிய அணி, இலங்கை அபிவிருத்தி …
-
- 1 reply
- 709 views
-
-
ஐபிஎல் 2016: அணிகளிலிருந்து யுவராஜ், மேத்யூஸ், கார்த்திக், சேவாக் விடுவிப்பு கோப்புப் படம். யுவராஜ் சிங், ஆஞ்சேலோ மேத்யூஸ், தினேஷ் கார்த்திக், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், இசாந்த் சர்மா, சேவாக் உள்ளிட்ட வீரர்களை சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளனர். இதனால் இந்த வீரர்கள் வரும் ஏலத்தில் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். ஐபில் கிரிக்கெட்டின் 6 அணிகள் மொத்தம் 101 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 61 வீரர்களை தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளது. அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் முழு விவரம்: டெல்லி டேர் டெவில்ஸ் தக்கவைக்கபட்ட வீரர்கள்: அமித் மிஸ்ரா, ஜெ…
-
- 1 reply
- 611 views
-
-
பிரான்சில் முதன்முறையாக இடம்பெற்றிருந்த தமிழீழ வெற்றிக்கிண்ணத்திற்கான துடுப்பெடுத்தாட்ட போட்டியில், பாகிஸ்தான் வீழத்த்தி வெற்றிக்கிண்ணத்தினை தமிழீழ அணி தனதாக்கி கொண்டுள்ளது. தெரிவு அணிகளாக இடம்பெற்றிருந்த இப்போட்டியில் 11 அணிகள் இரண்டு நாள் ஆகளத்தில் துடுப்பாடியிருந்தன. தமிழர் விளையாட்டு; செயலகம் - பிரான்சு நடத்தியிருந்த இந்நிகழ்வில் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நாகலிங்கம் பாலசந்திரன் , மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை பிரென்சு தேசிய துடுப்பெடுத்தாட்ட தேசிய அணிக்கு ஆறு ஆண்டுகள் அணித்தலைவராக பங்காற்றியிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த சாசீர் அவர்களும் இந்நிகழ்வில் சி…
-
- 1 reply
- 422 views
-
-
100 மீற்றர் ஓட்டத்தில் யொஹான் உலக சம்பியனானார்; உசைன் போல்ட் தகுதி நீக்கம் தென்கொரியாவின் டயீகு நடைபெறும் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் யொஹான் பிளெக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் இறுதிப்போட்டியில் , ஜமைக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரும் நடப்புச் சம்பியனும் உலக சாதனையாளரும் ஒலிம்பிக் சம்பியனுமான உசைன் போல்ட் போட்டியை தவறாக ஆரம்பித்தன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 9.92 விநாடிகளில் யொஹான் பிளெக் ஓடி முடித்தார். அமெரிக்காவின் வால்டர் டிக்ஸ் 10.08 விநாடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் சென் கிட்ஜ் அன்ட் நேவிஸ் நாட்டு வீரர் கிம் கொலின்ஸ் 10.09 விநாடிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
கோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலியின் அபார சதத்தால் அஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. அஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிககளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 6 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 18 ஓட்டங்களுடனும் கவாஜா 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினார…
-
- 1 reply
- 891 views
-
-
326 ரன்கள் விளாசியும் கெவின் பீட்டர்சனுக்கு இங்கிலாந்து வாய்ப்பு மறுப்பு ஓவல் மைதானத்தில் லீசெஸ்டர் அணிக்கு எதிராக சர்ரே அணிக்கு ஆடிய பீட்டர்சன் 326 ரன்கள் குவித்தார். ஆனால் இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு தரப்படமாட்டாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குநராக முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கெவின் பீட்டர்சனும், தனது ஐபிஎல் வாய்ப்பை விடுத்து இங்கிலாந்து சர்ரே அணிக்காக விளையாடி நேற்று 2-ம் நாள் ஆட்ட முடிவில் 326 ரன்கள் குவித்து நாட் அ…
-
- 1 reply
- 524 views
-
-
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ் மீண்டும் சேர்ப்பு! சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ல் தொடங்கி 31-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில், அந்நாட்டுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டியிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்காக இந்திய ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 ஒருநாள் போட்டி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு தோனி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரஹானே, அஷ்வின், ஜடேஜா, மு…
-
- 1 reply
- 648 views
-
-
உலக கோப்பை ஃபைனல் சர்ச்சை எதிரொலி.. அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி.! 2019 உலக கோப்பை இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூப்பர் ஓவரும் டையானால் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்கும் விதி ரத்து செய்யப்பட்டு, புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. 2019 உலக கோப்பை இறுதி போட்டி மாதிரியான, உச்சகட்ட பரபரப்பான ஒரு நாக் அவுட் போட்டியை இதுவரை பார்த்திருக்க முடியாது. இனிமேல் பார்க்கவும் முடியாது என உறுதியாக கூறலாம். அந்தளவிற்கு மிகவும் பரபரப்பான போட்டி அது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சீட் நுனியில் அமரவைத்த போட்டி அது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் அடித்தது. 242 ரன்கள் …
-
- 1 reply
- 482 views
-
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜுலை 8 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களை அடித்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷனான் கப்ரியல் 4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டாம் பெஸ் 2 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 114 ரன்கள் முன்னிலை உடன் இ…
-
- 1 reply
- 792 views
-
-
வெற்றியுடன் விடைபெற்றார் ஸ்வாஞ்டைகர் ஜேர்மனி தேசிய கால்பந்தாட்ட அணியின் உணர்ச்சிபூர்வமான தலைவரான பஸ்டியான் ஸ்வாஞ்டைகர், வெற்றியுடன் சர்வதேசக் கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். ஜேர்மனி, பின்லாந்து அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியே, 32 வயதான ஸ்வாஞ்டைகரரின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமைந்திருந்த நிலையி, இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின்போது ஸ்வாஞ்டைகர் அழுதிருந்தார். இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் மத்தியகள வீரராகவிருக்கும் ஸ்வாஞ்டைகர், 2004ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். அது முதல் 121 போட்டிகளில் ஜேர்மனிக்காக பங்குகொண்டு 24 கோல்களை ஸ்வாஞ்டைகர் பெற்றார். போட்டியின் 66ஆவது நிமிடத்தில், மாற்று வீரரால் மா…
-
- 1 reply
- 625 views
-
-
சென்னை: ஆசிய தடகள போட்டியை நடத்த முடியாது என, தமிழக அரசு அறிவித்த நிலையில், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான். ஆனால், ஒரு நாட்டில் அளவுக்கு அதிகமான கொடுமைகள் நிகழும் போது, சர்வதேச விளையாட்டு சமூகம் ஒதுக்கி வைக்கிறது. உதாரணமாக இனவெறி சர்ச்சை காரணமாக, தென் ஆப்ரிக்கா சர்வதேச விளையாட்டு அரங்கில் இருந்து சில காலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. கால்பந்துக்கு எதிர்ப்பு: இதே போல, இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கடைசி கட்ட போரில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, "நட்பு' போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இல…
-
- 1 reply
- 533 views
-
-
மீண்டும் அணியில் இணைந்தார் மலிங்க : உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவராக மலிங்க தெரிவுசெய்யப்படுவதற்கான தகுதியும் அவரிடம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/16421
-
- 1 reply
- 372 views
-
-
இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முரளீதரன் பெயர் நீக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI/AFP/GETTY IMAGES Image captionமுத்தையா முரளீதரன் (வலது) இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் அகற்றப்பட்டுள்ளதாக…
-
- 1 reply
- 421 views
-
-
ரொனால்டோ சவுதி அரேபியா சென்றார் 🚨 கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவுடன் 7 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார், வருடத்திற்கு £170 மில்லியன். 💰 கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சேவைகளுக்கான அரசாங்க ஆதரவுடன் அல்-நாசருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துபாய் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் அல்-நாசரின் வீரராகவும், மீதமுள்ள ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கான அதிகாரப்பூர்வ தூதராகவும் மற்றும் அவர்களின் 2030 உலகக் கோப்பை ஏலத்தில். 🇸🇦 கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் சவூதி அரேபியாவுக்குச் சென்று இஸ்லாமிய நாட்டின் மிக உயர்ந்த குடிமக்களில் ஒருவராக மாறினால், சூரிய ஒளியில் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்கள். சவூதி அரேபியாவை மேற்கத்திய பார்வையாளர…
-
- 1 reply
- 354 views
-
-
400 கோலை பதிவுசெய்த மெஸ்ஸி லா லிகா கால்பந்து தொடரில் 400 ஆவது கோலை பதிவு செய்து பார்சிலோனாவின் முன்னணி வீரரான மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார். ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா லீக்கில் விளையாடி வருகிறார். நேற்றுமுன்தினமிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா - எய்பர் அணி மோதின. இதில் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஒரு கோலும், சுவாரஸ் இரண்டு கோலும் அடித்தனர். இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி லா லிகாவில் 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில் ஒரே தொடரில் 400 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். …
-
- 1 reply
- 831 views
-
-
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இலங்கை மேசை பந்து சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். யாழில் மேசைப்பந்தாட்டம் அறிமுகம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 1 reply
- 568 views
-