எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் – ஒரு தாயின் காத்திருப்பு – பாலநாதன் சதீஸ் June 4, 2021 தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காணாமல் போன தன் இரு பிள்ளைகளுக்கான நீதிக்காக போராடும் தாய், காணாமல் போன தன் தந்தையை தேடும் பிஞ்சு மகனின் ஏக்கங்களுக்கு நீதி கிடைக்குமா? அவர்களின் எதிர்பார்ப்பு தீருமா? வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்ட களத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வசிப்பவர்தான் அரியரத்தினம் அன்னலட்சுமி. இவர் போராட்டக் களத்தில் காணாமல் போன மகன…
-
- 2 replies
- 471 views
-
-
தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை – தாஸ் 36 Views எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்ட எமது தாயகத்திலே நேற்று முழுமையான வளப் பாதுகாப்புடன் ஒவ்வொரு வளத்தினதும் உச்சப் பயன்பாடுகளின் முழுமையான பயனை நாடும் நாட்டு மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் நன்கு திட்டமிடப்பட்ட செயற் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மரம் தறித்தல் மிகவும் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மக்களின் தேவை கருதி வனவள பாதுகாப்பு பிரிவின் ஊடாக மரக்காலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவை நடைமுறையில் இருந்ததுடன், மரநடுகைக்காக பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் பத்து இலட்சம் மரங்கள் தொடர்ச்சியாக பராமரிப்பு செய்யப்பட்டு வந்தன. ஆனால்…
-
- 0 replies
- 439 views
-
-
சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் சமூக சீர்கேடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து எம் இனத்திற்கு பொருத்தமற்ற கலாச்சாரம் சாராத பலவற்றில் இளம் பெண்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர். அண்மைக்காலமாக மொடலிங் எனும் மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் அதிக பெண்களை இழுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கணிசமான அளவு பெண்களும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். தமது வாய்பினை பெற்றுக்கொள்ள தம்மையே அடமானம் வைக்கும் இழிவான நிலைக்கும் இளம் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய சினிமாத்துறையில் இது சாதாரண விடயம் என்ற போதிலும், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான சமூக மாற்றம் பெரும் ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுவொ…
-
- 0 replies
- 386 views
-
-
இதுக்குள்ள எல்லாம் கிடக்குது.. விரும்பினாக்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்தின்ர நாலாயிரம் சிற்றூர்ப்பெயர்கள் என்னட்ட தனியாக இருக்கிறது.. விரும்பினவங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளவும். (ஆனால் அதுவும் இதுக்குளையே கிடக்குது) -->https://testlife.lankagate.gov.lk/LIFe/navigate?active=1&lang=ta
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
வவுனியாவில் ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் குளங்களின் பெயர் கொண்டதாகவே அமைந்துள்ளது.. வன்னி மாவட்டத்தில் மொத்தம் 672 குளங்கள் .இதில் 250 புனரமைக்க வேண்டியது 18 கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதில் குறிப்பிடப் படாத அல்லது காணாமல் போன(?) குளங்கள் பெயர்கள் தெரிந்தால் குறிப்பிடவு ம். 1. அக்கராயன் குளம் 2. அரசடிக் குளம் 3. அழகந்து போட்ட குளம் 4. ஆசி குளம் 5. ஆணை விழுந்தான் குளம் 6. இரணைமடு குளம் 7. இராசேந்திரன் குளம் 8. இறம்பை குளம் 9. ஈச்சங் குளம் 10. ஈரப்பெரிய குளம் 11. ஈரணை னை இலுப்பன் குளம் 12. உக்கிளாங் குளம் 13. உயிலன் குளம் 14. ஏலவாதர் மருதங் குளம் 15. ஓயார் சின்ன குளம் 16. க…
-
- 0 replies
- 729 views
-
-
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு - என்.சரவணன் ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 40 ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும். இலங்கையின் இனப்பிரச்சினையில் ஓர் முக்கிய நிகழ்வாக, விளைவுகளை உருவாக்கிய வன்முறையாக அமைந்த யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும். ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்ப்பானத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரித்துச் சாமபலாக்கப்பட்ட சம்பவம் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாக ஆகி விட்டிருக்கிறது. தமது தமிழ் மரபையும், வரலாற்றையும் ஆவணப்பட…
-
- 5 replies
- 1.7k views
-
-
யாழ். நுாலக எரிப்பு நாளை நினைவு கூர்ந்து யாழில் இன்று இரத்த தானம் 9 Views நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் இரத்த தான நிகழ்வுகளை யாழ் மாநகர சபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி ஞானேந்திரன் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜன் தனகோபி ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.ilakku.org/?p=51118
-
- 0 replies
- 329 views
-
-
யாழ் நூலக எரிப்பு என்ற வரலாற்று கொடுமையையும் அதன் பின்புல நிகழ்வுகளையும் பதிவு செய்த, அந்த ஈனச்செயல் நடந்தேறிய சில மாதங்களில் வெளிவந்த நூலின் pdf இணைப்பை கீழே காணலாம். தொகுப்பு: நீலவண்ணன் வெளியீடு: வரதர் படங்கள்: பி டி சாமி & ஏ வி எம் https://noolaham.net/project/95/9487/9487.pdf
-
- 9 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 563 views
-
-
தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம் 42 Views மே மாதம் 25 ஆம் திகதி தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பிறந்த தினம். இத்தினத்தையொட்டி இச் சிறப்புக் கட்டுரை வெளிவருகின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்கு மே 25, 1878இல் பிறந்தவர் சோமசுந்தரர். இவருடன் உடன்பிறந்தவர். க. வேலுப்பிள்ளை. தனது 28ஆவது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு …
-
- 0 replies
- 7.4k views
-
-
எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது! அகரமுதல்வன் யாழ்ப்பாண நூலகம் சிறிலங்காவை ஆள்கிற இருபெரும் சிங்களக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடானது, தமிழின அழிப்பு. இதன் விளைவாக நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் ஏராளம். பிரீமியம் ஸ்டோரி “முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள்” எனும் அறிஞர் Heinrich Heine கூற்று, ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் உண்மையானது. சிங்கள பெளத்த பெருந்தேசியவாத வெறியின் குரூரமான காட்டுமிராண்டித்தனம், யாழ்ப்பாண நூலகத்தை எரியூட்டி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன. தமிழர்களின் அறிவார்த்த முன்னேற்றத்துக்குக் காரணமான நூல்களைச் சாம்பலாக்கி, சிங்கள இனவெறிக்குக் குருதியூட்டிய சிறில் மத்த…
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம் 74 Views ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இடம்பெற்று வருகின்றன. திருக்கோணேஸ்வரம், இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில், உலகப் பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளில் ஒன்றின் உச்சியில் இருக்கின்றது. மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
'கிட்டு பூங்காவின் வரலாறு" தமிழீழத்தின் இளையத் தலைமுறையினர் பார்க்க வேண்டிய காணொளி இது . யாழ் மாவட்டத் தளபதி கேணல். கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:02.01.1960 - வீரச்சாவு:16.01.1993 நிகழ்வு:சென்னை துறைமுகத்திலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் இந்தியக்கடற்படையினர் கைது செய்ய முற்பட்டவேளை தாம் பயணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவு கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா?தெரியாது!சதாசிவம் கிருஷ்ணகுமார்?தெரியாது!கிட்டுவைத் தெரியுமா?ஓ தெரியுமே!யார் அவர்?கிட்டு மாமா! தமிழீழ சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. ஓகஸ்ட் 1994 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட தளபதி கேணல் கிட்டு சிறுவர் பூங்கா காணொளி இணைப்பு …
-
- 0 replies
- 796 views
-
-
இந்தியப்படையினர் கைப்பற்றிய முகாமை மறுபடியும் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப்புலி வீரர்கள். AdminMay 25, 2021 மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமை இந்தியப்படையினர் கைப்பற்றி வைத்திருந்தநிலையில் தேசியத்தலைவர் அவர்களின் கட்ளையில் அம்முகாமை மறுபடியும் கைப்பற்றிய விடுதலைப்புலிவீரர்கள். 1988.08 முதலாவது வாரத்தில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் முகாம் ஒன்றின் பொறுப்பாளராக மேஐர் ரஞ்சன் அவர்களும்.(வீரச்சாவு. 29.06.1989) கப்டன் மயூரன் அவர்கள். (வீரச்சாவு.11.11.1993) ஆகியோர் உள்ளிட்ட பத்துப் போராளிகள் இருந்தனர் . இம்முகாமானது வெளிப்புறக் கண்காணிப்பு முகாமாகவும் இருந்தது.அந்த நேரத்தில் இவர்களது முகாமிற்கருகில் ஆள் நடம…
-
- 0 replies
- 1.3k views
-
-
வேசுபுக்கில் நோண்டு நோண்டென்டு நோண்டிற்றன்.. ஆனால் எங்கையும் கிடைக்கவில்லை. என்ர நிகழ்பட திரட்டினுள் இருந்த இரண்டு நிகழ்படங்களினுள் இந்தச் சின்னம் இருக்கிறது;தென்படுகிறது. ஆனால் நிகழ்படம் தெளிவாக இல்லையாதலால் என்னால் சின்னத்தை எடுக்கமுடியவில்லை. யாரேனும் எங்கேனும் பெற்றுவிடப் பாருங்கள்.. வரலாறு முக்கியம். என்னால் எடுக்க முடிந்தது இவ்வளவுதான்: 'இதுதான் கிட்டு பீரங்கி படையணியின் சின்னம்' சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது. 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. அது…
-
- 0 replies
- 800 views
-
-
கப்டன் மில்லருக்கு முதலில் நடந்த சக்கையூர்தித் தாக்குதல் 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் தரித்திருந்த சிங்கள படைவெறியர் மீது முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் நடத்திய முதலாவது சக்கையூர்தித் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல் நடத்தப்பட்ட திகதி எனக்குத் தெரியாது. ஆனால் நடத்தியவர் & நடந்த இடம் நானறிவேன். இத்தாக்குதலானது யாழ்ப்பாண நகரத்தில் இருந்த ஒரு பெரிய அஞ்சலகம் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டது. தாக்குதலுக்காக சென்ற புலிமகனிடம் செங்கல் ஒன்றும் கொடுத்தனுப்பப்பட்டது. அதாவது இலக்கு நெருங்கியது கியரினுள் செங்கலை பொறித்துவிட்டு இறங்கி ஓடிவந்துவிட வேண்டும். பின்னர் ஊர்தி தன்பாட்டி…
-
-
- 5 replies
- 1.1k views
-
-
உறவுகளே தாயகத்தில் நடந்துவரும் அடக்குமுறைகளால் எமது புல உறவுகள் ஒரு விளக்கைதானும் ஏற்றி தெய்வங்களாகிபோன எமது இரத்த உறவுகளை நினைவுகூற முடியாது தவித்துவருகையில் , நினைவஞ்சலி செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் எப்படியெல்லாம் நினைவஞ்சலி செலுத்தினோம் என்பதை இங்கே பதிவு செய்வோம், அதன் மூலம் எமது விடுதலை வேட்கை தணியவில்லை, நீறு மட்டுமே பூத்திருக்கிறது என்பதை தெளிவாக முரசறைவோம் சிங்கையில் என்னால் முடிந்த அளவில் என்னுறவுகளுக்காக செலுத்திக்கொண்ட அஞ்சலி
-
- 2 replies
- 790 views
-
-
சுட்ட இடம்: eelamaravar & twitter இரண்டு தகவல்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன ------------------------------- நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…😥 ஒரு போராளியின் குருதியில் இருந்து….. (உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து…
-
- 2 replies
- 1.9k views
-
-
பட்டறிவு கொண்டு படை நடத்திய ‘பால்ராஜ்’ – மருத்துவர் தணிகை 169 Views அசாத்திய திறமைகளால் – எம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய ஆற்றலன் புகழ் சிரஞ்சீவியாக எம் மண்ணில் என்றுமே நிலைத்திருக்கும் எண்பதுகளின் நடுப்பகுதில் ஒரு கெரில்லா(guerrilla) போராட்ட வீரனான முத்திரை பதித்தவர் பால்ராஜ் அவர்கள், அந்த கெரில்லா அணிகளை வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றார். கெரில்லா போராட்ட வடிவம் மரபுவழி வடிவம் பெற்ற போது, அந்த மரபுவழி இராணுவத்தையும் வழிநடாத்தி வெற்றிகளை குவித்த ஒரு தளபதியை தமிழினம் சமர்க்கள நாயகன் என அழைத்தது. ஒரு நவீன மரபுவழிச் சமரானது பல்வேறு வகைப்பட்ட, பல்வேறு வகையான தேர்ச்சி மிக்க வீரர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. நவீன சமர…
-
- 0 replies
- 693 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 1 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம்… ஓலமிட் டழுதோம் ஓடினோம் ஒடுங்கினோம் ஒவ்வோ ரணுவாய்ச் சிதைந்தோம்! காலத் தலைவன் காத்தெமைப் புரந்த கனித்தமி ழீழத்தில் புதைந்தோம்! ஞாலத் தெவரும் நாடினா ரில்லை நாங்கள்ஏன் செத்து மடிந்தோம்! மூலத் தாயக முள்ளி வாய்க்காலில் முடைநாற் றத்திலே கிடந்தோம்! https://www.ilakku.org/?p=49372
-
- 8 replies
- 789 views
-
-
முள்ளிவாய்கால் நினைவேந்தல்: நந்திக்கடல், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் அஞ்சலி 63 Views நாடாளுமன்றத்தில் நினைவேந்தல்….. முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கை அரசின் தடைகளைத் தகர்த்து, தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர…
-
- 0 replies
- 550 views
-
-
வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் - அ .அபிராமி -சிறப்பு காணொளி வலிகளோடும் ஆறாத ரணங்களோடும் - அ .அபிராமி -சிறப்பு காணொளி https://www.thaarakam.com/news/21359e40-dd85-427e-9c1f-02da8ab4e059
-
- 0 replies
- 659 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு நோக்கிய கடற்கரையோர விரைவுப் பாதைகளும் அபிவிருத்தியும் May 16, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — வடக்கு மாகாணத்தின் விரைவான அபிவிருத்திக்காக கிழக்கு மாகாணத்திற்கும், மேல் மாகாணம் கொழும்புக்கும் இரண்டு பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருகோணமலை, கிண்ணியா, மூதூர், கிளிவெட்டி, வெருகல், வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பு வரையான பெருந்தெரு போர் நிறைவு பெற்றதும் உருவாக்கப்பட்ட பெருந்தெரு. யாழ்ப்பாணத்திலிருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று மணலாறு (வெலிஓயா) பிரதேசம் ஊடாகத் திருகோணமலை செல்லும் பாதையொன்று தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்தப் பாதை தூரம் கூடியது. அதற்கு மாற்றாகத் தூரம் குறைந்த பாதையாக முல்லைத…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் போர்க்களத்தில் அணியப்பட்ட தாக்குதல் கஞ்சுகங்கள் பற்றியே. இவை புலிகளிடம் 25 க்கும் மேற்பட்ட விதங்கள் இருந்தன. இவற்றை புலிகள் "கோல்சர்" (Holster) என்ற தற்பவச் சொல்லால் தமிழில் குறிப்பிட்டனர். அவற்றை பொதுவாக 8 வகையாகப் பிரிக்கலாம். அவை ஆவன: RPD & RPK உருள்கலன் தாக்குதல் கஞ்சுகங்கள் -…
-
-
- 4 replies
- 1.9k views
- 1 follower
-