எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3583/interview-wit...-health-service
-
- 1 reply
- 1.7k views
-
-
ஈழத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டுத் தாம் தொன்று தொட்டு வழிவழியாக வாழ்ந்த பாரம்பரிய மண்ணை விட்டு; முற்றிலும் வேறுப்பட்டப் பிறிதொருப் பிரதேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு என்றுக் கூறலாம். ‘புலம்’ என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்ஸிக்கன் அகராதியில் ‘திக்கு’1 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ள அதேவேளையில், ‘பெயர்தல்’ என்பதற்கு ‘இருப்பிடம் விட்டுப் பெயர்தல்’2 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்”3 என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது. புலியூர்க்கேசிகன் தனது உரையில்; “மரக்கலம் மூலம் வருகின்ற செல்வங்களுக்காகத் தம் நாடுவிட்டு நாடு செல்லும் கடலோடிகள் பற்ப்பல நாட்டினருமாக …
-
- 0 replies
- 1.7k views
-
-
போரட்டத்திற்கு பிள்ளைகளினை அனுப்பும் பெற்றோர்கள் தனது மகளை போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை. நிதர்சனம் இணையத்தளத்தில் வந்தசெய்தி. http://www.nitharsanam.com/?art=14948
-
- 3 replies
- 1.7k views
-
-
மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது. தமிழீழத் தேசியத்தலை…
-
- 2 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்வாங்கிச் சென்ற சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தினர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவின் பணவீக்கம் 19.3 வீதமாக அதிகரிப்பு. சிறிலங்காவில் இந்த வருடம் டிசம்பரில் வாழ்க்கைச் சுட்டெண் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.3 வீதம் அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது. www.sankathi.com
-
- 0 replies
- 1.7k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகளைப்(Cap) பற்றியே. இவை ஒவ்வொரு படையணிக்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு தோற்றத்தோடு இருந்தன. மேலும் இவர்களின் சுற்றுக்காவல் தொப்பிகளானவை உலகின் பிற நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆன…
-
- 0 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
- 10 replies
- 1.7k views
-
-
-
ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839 செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022 ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத …
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
அடிமைகளாக்கிய சுதந்திரம். இன்று இலங்கையின் சுதந்திர தினம். 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை தனது சுதந்திரத்தை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. எங்கள் சாம்ராச்சியத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லையென்று பெருமயடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இரண்டாவது உலகமகா யுத்தத்தின் முடிவோடு இனிமேல் உலகைக் கட்டியாள முடியாது. அதற்குரிய ஆட்பலமும் பொருளாதார வலுவும் நம்மிடமில்லையென்ற முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் சனத்தொகைகளோடு ஒப்பிடுகையில் விரல்விட்டு எண்ணத்தக்க ஆங்கிலேய அதிகாரிகளே இருந்தனர். இருந்தும் பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சாமர்த்தியமான நிர்வாகத் திறமையால் லண்டனிலிருந்துகொண்டே தனது ஆட்சியதிகாரத்தை உலக…
-
- 0 replies
- 1.6k views
-
-
விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து) February 20, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — 1999 ஆம் ஆண்டு; மூதூர் கட்டைபறிச்சானில் உள்ள எனது நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறேன். மணமகள் வீட்டில் திருமணம். தாலி கட்டுதல் உட்பட சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவெய்துகின்றன. மதிய உணவு சில்வர் பிளேட்டில் வருகிறது. வெள்ளைக்குத்தரிசிச் சோறு, ஆட்டிறைச்சிக் கறி, பருப்புக்கறி, கரட்சம்பல், கத்தரிக்காய் கறியுடன்கூடிய சுவையான உணவு. ஒரு பிடி பிடித்தேன். செக்கன்ட் சோறு அதாவது இரண்டாம் முறை சோறு தருவார்கள் வாங்கிச் சாப்பிடலாமென நினைக்கிறேன். ஆனால் ஒருவர் வந்து சாப்பிட்ட பிளேட்டைத் தாருங்கள் எனக் கேட்டார். எனக்குச் சோறு போடுங்கள் சாப்…
-
- 10 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிப்பார்களா? நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். “ஆசனப்பதிவுகள் குறைந்து போனதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவுக்கான பல பயணத் திட்டங்களை நாம் நிறுத்தியுள்ளோம். முன்னர் வாரத்தில் 12 சேவைகளை நடத்தி வந்தோம் தற்போது அது 7 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
ப.திருமாவேலன் தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
பதின்மூன்றாம் நூற்றாண்டில் முடிந்து போன சோழ ராச்சியத்தின் கதை போல 2009ம் ஆண்டில் முடிந்துபோன எங்களது இராச்சியமும் இன்று வெறும் பேச்சாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொன்னியின் செல்வனை வாசித்தது போல எங்களது வீரர்களது கதைகளும் கதைகளாக மட்டும் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புலத்தில் பிறந்து வளர்ந்த இளையவர்க்கும் இனி வரும் தலைமுறைகளிற்கும் தியாகங்கள் கதைகளாக முன்வைக்கப்படினும் அத்தியாகங்களை உணர்ந்துகொள்ளும் நேரடி அனுபவம் அற்றவர்களாகவே இச்சந்ததிகள் இருக்கும். தியாகங்களை நேரில் கண்ட எங்கள் தலை முறைக்கும், அத்தியாகங்களின் பெறுபேறாக, சாட்சியாகக் காட்டுவதற்குக் கையில் என்னத்தை வைத்துள்ளோம் என்ற ரீதியில் எழுகின்ற சலிப்புணர்வுகள் ஒரு புறம், இன்னென்ன பிழைகள் விட்டார்கள் என வந்து க…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்நிலையில் தமிழக அகதி முகாம்களின் அவல நிலைக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது சேலம் மாவட்ட அகதி முகாம். சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வசிக்கும் இவர்களது நிலை பரிதாபகரமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி நாகியம்பட்டி அத்திக்காட்டனூர் குருக்கப்பட்டி பவளத்தானூர் சித்தர் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 8 முகாம்களில் 972 குடும்பங்களைச் சேர்ந்த 3746 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை அமைச்சர்களி…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 05:18.59 AM GMT +05:30 ] கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு. தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்.. என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது. பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள இராணுவத்…
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்கள். 1981 மே 31 நள்ளிரவு கொழும்பிலிருந்து அரச வாகனங்களில் இறக்கப்பட்ட குண்டர்களினால் எரியூட்டப்படட்து. அத்துடன் சேர்ந்து யாழ்ப்பாணத்thaவர்கள் சேர்த்து வைத்திருந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. நூலகம் எரிந்த நேரம் நூலகத்திற்கு அருகில் உள்ள விடுதியில் அரசின் இரண்டு மூத்த அமைச்சர்கள் கொழும்பிலிருந்து வந்து தங்கியிருந்தனர். எரிந்த செய்தி கேட்டு தமிழறிஞர் தாவீது அடிகள் மாரடைப்பால் மரணமடைந்தார். கவிஞர் எம். ஏ. நு·மான் எழுதிய ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு: நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஜனநாயகம்; இதன் சொற்பொருள் விளக்கம் என்ன? ஜனநாயகத்திற்கு அமெரிக்க உள்துறை இலாக்காவின் சொற்பொருள் விளக்கம்:- பெரும்பான்மை அரசாட்சியும் அத்தோடு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும். பிரதிநிதிகளால் அமைக்கப்பட்ட மக்களாட்சி. அதாவது, மூதாதையரின் மனப்போக்குகளைக் கொண்ட சமுதாயப்பிரிவு இல்லாதவும், சிறுபான்மையினரின் கருத்துக்களை சகிப்புத்தன்மையோடு பார்க்கின்ற ஒரு நியாயமான நடு நிலை தவறாத மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி. USINFO வெளியீட்டின் படி கீழே தரப்பட்டவை ஜனநாயகத்தின் கொள்கைகளின் அம்சங்கங்கள். 1. பெரும்பான்மை அரசாட்சியும் அத்தோடு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசாங்கதின் கடமை. 2. மக்கள் – இராணுவம் தொடர்புகள் / உறவுகள். 3. அரசியல் கட…
-
- 0 replies
- 1.6k views
-
-
வீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020 வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து இன்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-Part1 தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-1 தமிழீழ, தமிழக நிலங்களின் பண்டைய புவியியல், தொன்மை, வரலாறு மற்றும் வரலாற்றிலே ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக சிங்கள இனவெறியால் பாதிக்கப் பட்டு வரும் தமிழ்க் குமுகத்தின் இன்னல்களை அறியாதவர் குறைவு. புவியியலும், வரலாறும், தொன்மையும் தெரிந்திருக்காவிடிலும் தமிழர் என்ற உறவு உணர்வுகளை என்றும் பாதித்ததில்லை. ஆயினும், தற்காலத்திலே, இந்த உறவுகளின் உணர்வுகள் துளியும் அற்றுப் போகவில்லை என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது பல்வேறு சூழலுக்கு உட்பட்டு இருக்கின்றது என்பதும். தமிழ்நாடு மற்றும் இந்தியா தமிழீழத்துடன் நல்லுறவும் பேருறவும் கொண்டிருந்த காலத்திலும், அப்படியில்…
-
- 3 replies
- 1.6k views
-