அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எதிர்த்தரப்பா, கைகோர்ப்பா? Editorial / 2018 ஒக்டோபர் 25 வியாழக்கிழமை, மு.ப. 01:22 -அதிரன் புதிய தேர்தல் முறையில், பெரும்பான்மை பெறும் கட்சிகூட, ஆட்சியமைப்பதற்குக் கையேந்தும் சந்தர்ப்பங்கள் தான் அதிகம். கிழக்கில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில், எத்தனை கட்சிகள் போட்டியிடும், யார் யாரிடம் கையேந்துவார்கள் என்பது சுவாரசியமான விடயப்பரப்பு. கிழக்கைப் பொறுத்தவரையில், புதிதாக உருவான கட்சிகளாகட்டும், இடைக்காலத்தில், ஆரம்ப காலத்தில் இருந்து செயற்படும் கட்சிகளாகட்டும், ஒரு சிலவற்றைத் தவிர, எதற்குமே முழுமையான ஆதரவு (வாக்குத்தளம்) இருப்பதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி,…
-
- 0 replies
- 771 views
-
-
எஞ்சியிருந்த ஒரே தீர்வு முகம்மது தம்பி மரைக்கார் / 2018 ஒக்டோபர் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 06:29 எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை, நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வழமை போலவே ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக ஆட்சியமைக்கும் அரசாங்கங்கள் இடைநடுவில் கலைவது போல், இந்த ஆட்சியும் கவிழ்ந்து போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ‘அரசியலில் …
-
- 0 replies
- 687 views
-
-
அமெரிக்க நலனும் இந்தியாவின் சர்வதேச இரட்டைக் கொள்கையும் புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு வன்னி போர் பற்றிய 2010 நிபுணர் குழு அறிக்கையும் காசா படுகொலைகளும் ஐ.நாவுக்குத் தெரியவில்லையா? விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் …
-
- 1 reply
- 754 views
-
-
இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவ விமானமும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலும்
-
- 1 reply
- 519 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்; பிளவு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகி வருகின்றது:- 21 ஜூன் 2015 தமிழில் - குளோபல் தமிழ் செய்திகள்:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அம்பாறையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை அவரிற்கு சண்டே டைம்ஸில் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்த விடயம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த வார சண்டே டைம்ஸில் தினேஸ் புதிய அரசியல் கூட்டணியொன்றை மகிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து தெரிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்திலிருந்து சிறிசேன் தினேஸ் குணவர்த்தனவை உடனடியாக தொடர்புகொண்டு சண்டேடைம்ஸ் பார்த்தீர்களா என கேட்டார்,அதற்கு தினேஸ் இன்னமும் அதனை வாசிக்கவில்லை என்றார், பின்னர் ஜனாதிபதி அதில் …
-
- 0 replies
- 416 views
-
-
சிறகொடிக்கப்பட்ட ஜனநாயகம் கே.ஜி.பி. அருகில் கிடத்தப்பட்டிருந்த கணவரின் சடலத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்த அம்மாவின் கைவிரல்களைத் தன் பிஞ்சுக் கரங்களால் பற்றிக் கொண்டு சிரித்துக் கொண்ருந்தது அந்த இரண்டு வயது பெண் குழந்தை . -ஆண்டு : 1947 புற்றுநோயால் தாம் இறக்கும் முன்பு ஒரே ஒரு முறை தன் மனைவியைப் பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது அவளுடைய கணவருக்கு! -ஆண்டு : 1999 34 வயது அலெக்ஸாண்டர், 30 வயது கிம்-இரண்டு மகன்களும் அயல்நாட்டில்; அவளோ வீட்டுச்சிறையில்! - ஆகஸ்ட் : 2007 அந்தப் பெண்தான் ஆவ்ங்-ஸான்-ஸூ-க்யி-டாவ் ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் பர்மிய வீராங்கனை. 1945 ஜூன் 19 அன்று பிறந்த ஸூ-க்யிவின் தந்தையார் ஆவ்ங்-ஸான்-யூ பர்மிய தேசியத் தலைவர…
-
- 0 replies
- 1.3k views
-
-
எது பேரழிவு? யாருக்குப் பேரழிவு? நிலாந்தன்! ரணில் தேர்தலை வைப்பாரோ இல்லையோ, அவர் என்ன தந்திரங்களைச் செய்வாரோ இல்லையோ,வடக்கில் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.குறிப்பாக,பொது வேட்பாளர் என்ற விடயத்தை மையப்படுத்தி தேர்தல் களம் சூடுபிடித்த தொடங்கிவிட்டது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,பொது வேட்பாளரை எதிர்க்கிறவர்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்குத்தான் தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கப் போகிறார்கள். எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளர் தமிழ் தரப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமரசத்துக்கு தயாராக இருக்கிறாரோ அவருக்கு தமிழ் வாக்குகளை சாய்த்து கொடுப்பது என்று மேற்படி தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படையாக கூறுகிறார்கள். எனவே அவர்கள் தமிழ் வாக்குகளை சாய்த்த…
-
- 0 replies
- 310 views
-
-
பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 10 புதன்கிழமை, மு.ப. 03:25 Comments - 0 இலங்கை வரலாற்றில் எந்தவோர் அரசியல்வாதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல், தமது அரசியல் இருப்புக்காக, இவ்வளவு மாற்றுத் திட்டங்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். அவரது சில திட்டங்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவை அனைத்தும் அவரது இருப்புக்காகவே என்பது தெளிவான விடயமாகும். 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அவர், தமது முன்னாள் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரைச் சிறையில் அடைத்து, தமது எதிர்காலத்தைப் பலப்படுத்திக் கொள்ள முயன்றார். ஐக்கிய தேசியக் கட்சி, அத்திட்டத்தை முறியடிக்கவே, அவர் மறுபு…
-
- 0 replies
- 579 views
-
-
மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் அவர்களே, தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் தம் உரிமைகளை துரித கதியில் மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தந்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பேரம்பேசும் சக்தியாக தமிழ் மக்களால் பெரிதும் நம்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் அதன் சில உறுப்பினர்களும் தமது சுயலாப நோக்கங்களிற்காக அரசுக்கும் மேற்கத்தைய சக்திகளிற்கும் துணைபோகின்ற அபாயத்தை நாம் கண்டு வருகின்றோம். இதன் அடிப்படையிலேயே தமிழ் மக்களால் இன்றளவும் மாற்றுத் தலைமையாக பெரிதும் நம்பப்படுகின்ற க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை எழுந்திருக்கின்றது. கடந்த உள்ளுராட்சி சபை…
-
- 2 replies
- 880 views
-
-
விடை தேட வேண்டிய வேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை (தேர்தல் விஞ்ஞாபனம்) தயாரிப்பதற்கு அவசியமான தேர்தல் முன்கள நிலைமை இன்னும் கனியவில்லை. ஆனால் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர்களும், வேட்பாளர்களாவதற்குத் தயாராகி வருபவர்களும் தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாக்குறுதிகளில் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது குறித்து தெளிவான உறுதியான நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. அதுகுறித்து அவர்கள் தமது அதிகாரபூர்வமான தேர்தல் உறுதிமொழிகள் தொடர்பான அறிக்கையில் தெளிவாகக் கூறுவதற்காகக் காத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. …
-
- 0 replies
- 407 views
-
-
அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா? by Rev. M.Sathivel - on November 30, 2015 படம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப் பேராட்டங்கள் அரசியல்வாதிகள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளால் கைவிடப்பட்டன. பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களை முகாம் காவலாளிகளும் காடையர்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவே 28 ப…
-
- 1 reply
- 908 views
-
-
வரலாற்றின் எதிர்பார்ப்பு January 1, 2025 — கருணாகரன் — ‘‘இலங்கையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும்‘‘ என்ற பிரகடனத்தோடு அதிகாரத்துக்கு வந்திருக்கும் அநுரகுமார திசநாயக்கவின் (NPP) அரசாங்கம், என்ன செய்கிறது? நம்பிக்கை தரக்கூடிய முயற்சிகள் ஏதாவது நடக்கிறதா..?‘ என்று பலரும் கேட்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு அந்த மாற்றம் ஆரம்பித்துள்ளதா? அதற்கான பணிகள் நடக்கிறதா? என்ற எதிர்பார்ப்புள்ளது. எவ்வளவுக்கு விரைவாக மாற்றங்கள் நடக்கிறதோ அந்தளவு மக்களுக்கு நன்மையும் மகிழ்ச்சியும் உண்டு. ஆகவே அவர்கள், அந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். புதிய (தேசிய மக்கள் முன்னணி) அரசாங்கம் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகிறது – ஏற்படுத்த…
-
- 0 replies
- 298 views
-
-
Published By: RAJEEBAN 01 AUG, 2025 | 04:01 PM ஜூலை மாத நடுப்பகுதியில் பொதுமக்களை போராளிகளுடன் வித்தியாசப்படுத்தி பார்க்காத காசாவின் சுகாதார அமைச்சு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் வயதினையும் வெளியிட்டது. காசாவின் சுகாதார அமைச்சின் பட்டியல் மாத்திரமே கொல்லப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வமான ஆவணம். மிக நீண்ட இந்த ஆவணத்தில் சிறுவர்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 900க்கும் அதிகமானவர்கள் தங்கள் முதலாவது பிறந்த நாளிற்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள். இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்பினை குறைக்க முயல்வதாக தெரிவிக்கின்றது. ஹமாசின் உறுப்பினர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்படுகின்றனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது, மருத்துவமனைகள், வீடுகள், பாடசாலை…
-
- 1 reply
- 150 views
- 1 follower
-
-
நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன் வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது. இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத் தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அ…
-
- 0 replies
- 150 views
-
-
திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் கூட்டமைப்பில் தேர்தலில் நிறுத்தப்பட போகிறார் என்றவுடன் முல்லை மதி எழுதியது. அம்மா உனக்கு சொன்னால் கேளு வேணாம் இந்த வம்பு. காசும் பணமும் தும்பு மானம் ஒன்றே கொம்பு. ஔவை சொன்தை கேளு நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) ஆனந்தியைக் இழுத்துவந்து அசிங்கப்படுத்தினார் அன்று அடுத்த பெயராய் உன்னையிவர் களங்கப்படுத்துவார் இன்று. குப்பை மேட்டில் வந்து நின்று என்ன தேடுவாய் குண்டுமணியுமில்லை என்ன காணுவாய் சொல்லு ஔவை சொன்தை கேளு நீ ஆரியமானை நம்பு. (அம்மா நீ) கணவன் காத்த நல்ல பெயரை சீரழிக்க கூடாது. கருத்தில்லா கூட்டத்தில் மறந்து உன் காலை வைக்கக் கூடாது. வாக்கு பெறும் இயந்திரமாய் உன்னை நாட்டுவார். வாசலோ விரட்டியடித்து …
-
- 1 reply
- 716 views
-
-
பாராளுமன்ற உறுப்பினராகியுள்ள பிள்ளையான் பிணையில் வெளிவருவது சாத்தியமா? BharatiSeptember 12, 2020 இரா.துரைரத்தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் ரி.எம்.வி.பி கட்சி தலைவர் எஸ். சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் கட்சி சார்ந்தவர்களிடம் காணப்பட்டது. ஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி அறிந்தவர்கள் அந்த நம்பிக்கையை கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு…
-
- 0 replies
- 613 views
-
-
சீன வர்த்தக கூட்டில் அமெரிக்க நண்பர்கள் இதயச்சந்திரன் உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று உருவாகியுள்ளது. சந்தைகளைப் பங்கிடலும், அதன் மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்தலுமே இவ்வகையான ஒப்பந்தங்களின் நோக்கம். அதிலும் ஒரு பிராந்திய அளவில், நேற்றுவரை ஒன்றுக்கொன்று சந்தேகக்கண் கொண்டு பார்த்த, அணிமாறி நின்ற பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளன. நாணயப்போர், வர்த்தகப்போர், தொழில்நுட்பப்போர் என்று விரிந்து சென்ற அமெரிக்க -சீன நவீன ஏகாதிபத்தியப்போர், இனி வேறு வடிவில் நகரப்போவதை இந்த கூட்டு வர்த்தக ஒப்பந்தம் புலப்படுத்துகிறது. 10 ஆசியான் நாடுகளுடன் , சீனா, ஜப்பான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து போன்ற …
-
- 0 replies
- 678 views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். “பனிப்ப…
-
- 14 replies
- 2.3k views
-
-
தமிழ்ச் சிவில் சமூகம் - நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் ஒரு சிவில் சமுகம் உண்டு. வன்னியில் உள்ள சில மாவட்டங்களிலும் பிரஜைகள் குழுக்கள் உண்டு. மேற்படி சிவில் அமைப்புகளின் பின்னணியில் சில கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக பரவலாக ஒரு கருத்து உண்டு. கடந்த ஆண்டு மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் திரு. மனோகணேசனோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டதுபோல மேல் மாகாணத்திலும் ஒரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்பப்போவதாகக் கூறினார். அதற்கு நான் சொன்னேன் யாழ்ப்பாணத்தில் இருப்பது அதன் மிகச் சரியான வார்த்தைகளிற் கூறின் ஒரு பிரமுகர் சமூகம் தான் என்று. அதில் சில சிவில் செயற்பாட்டாளர்கள் உண்டென்றபோதிலும் அது அதிகமதிகம் ஒரு பிரமுகர் சபைதான். அதாவது மேலிருந்து கீழ…
-
- 0 replies
- 722 views
-
-
தமிழினி அல்லது முன்னால் போராளிகள் வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் பல தவறுகளும், மக்கள் விரோத செயல்களும் செய்தவர்கள் போட்டியிடுவதை விட இறுதிவரைக்கும் களத்தில் நின்ற போராளிகள் போட்டியிடுவது மேல் இல்லை, போட்டியிடுவது பெரும் தவறு - கொண்ட இலட்சியத்துக்கு ஊறு விளைவிப்பது ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன எனக்கொரு கவலை இல்லை இந்தக் கருத்துக்கணிப்பே தவறானது - அவர்களை அவர்கள் பாட்டுக்கு வாழ விடுங்கள் கருத்துக்கணிப்பு: http://www.ampalam.com/
-
- 2 replies
- 788 views
-
-
தாமரைப் பொய்கை பிணக்காடானது எப்படி? ஐந்து பரம்பரையினரை வாழவைத்த அக்கிராமம் தற்போது 32 உயிர்களைக் காவுகொடுத்து நெடுந்துயரில் அழுதுகொண்டிருக்கிறது. தாமரை மலர்ந்த அப்பொய்கையில் அழுக்குகளை அள்ளிக்கொட்டி அழுகுரல்களை ஒலிக்கச் செய்த வஞ்சனைகளுக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் மாத்திரமன்றி சமூகமும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளது. கணப்பொழுதில் பல ஆன்மாக்களை அந்தரத்தில் உலவச்செய்த அக்குப்பை மேட்டை அங்கிருந்து அகற்றுவதற்கு அப்பிரதேசவாசிகள் அனுபவித்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஆனபோதும் அப்போராட்டங்களினால் எவ் விதப்பயனும் கிட்டவில்லை. அதனால் தான் புதிய வருடத்தி…
-
- 0 replies
- 859 views
-
-
கூடவே இருந்து குழி பறிக்க ஆள் தேவை? அண்மையில் வடக்கு மாகாண அரசியல் அரங்கில் அநாவசியமான, அநாகரிமான, அசிங்கமான விடயம் நடந்தேறியுள்ளது. கொடிய போரால் அனைத்தும் இழந்த தமிழ் மக்கள், ‘குடிக்கும் கஞ்சிக்கு உப்பு இல்லையே’ என்று நாளாந்தம் கதறுகின்றார்கள். ஆனால், அவர்களைப் பிரதிநிதித்துவம் ( ? ) செய்யும் அரசியல்வாதிகள் ‘கொண்டைக்கு பூ இல்லையே’ என்று அடம் பிடிக்கின்றனர் என்பது போல, களநிலைவரம் உள்ளது. தற்போதைய வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல் விவகாரமும் அதற்கான தீர்ப்பும் பின்னர் அதன் வழி வந்த போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, முப்படையினரின் காணி அபகரிப்பு, முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள், முழுமை அடையாத …
-
- 2 replies
- 1.1k views
-
-
மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம் - நிலாந்தன் 13 ஏப்ரல் 2014 ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கமாக அவை இலங்கை அரசாங்கத்தைப் பார்த்தன. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவை அவை தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களாகவே பார்த்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கச் சேதங்கள் மனித உரிமை மீறல்களாக மாற்றப்பட்டன. கடந்த மாதம் மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, 'மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய குற்றங்கள''; என்று. ஆனால், தமிழர்களில் ஒரு தரப்பினர் அவை போர்க் குற்றங்கள் என்று கூறுகிறார்கள். அவை …
-
- 2 replies
- 702 views
-
-
ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள் - ஜனகன் முத்துக்குமார் கடந்த வியாழக்கிழமை அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கத்துவ நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவை எதிர்ப்பதாக, மிகப்பெருமளவில் வாக்களித்திருந்தனர். ஒன்பது நாடுகள் ஆதரவாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படட 35 நாடுகள் வாக்களிக்காத நிலையிலும், 128 நாடுகள், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஐ.நாவுக்கான ஐ.அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி, ஐ.அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகள் தொடர்…
-
- 0 replies
- 261 views
-
-
ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி? வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது உலக அரசியலுக்கும் பொருந்தும். எல்லைத் தகராறுகள் எப்போதுமே இக்கட்டானவை. அவை, நாடுகளிடையே நடக்கும் போது, அதன் தீவிரம் மிக அதிகம். உலகின் ஏராளமான போர்கள், தீர்க்கக்கூடிய எல்லைப் பிரச்சினைகளால் மூண்டவை. சில எல்லைப் பிரச்சினைகளுக்கு, நூற்றாண்டு காலப் பழைமையும் பெருமையும் உண்டு. கடந்தவாரம், “எங்களுக்குச் சொந்தமான நிலப்…
-
- 0 replies
- 329 views
-