அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கோட்டாவின் இந்தியாவை கையாளும் வியூகம் - யதீந்திரா இந்தக் கட்டுரை தொடர்பில் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தியை காண முடிந்தது. அதாவது, இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்தமொறகொடவின் பெயர் உயர் பதவிகளை தீர்மானிக்கும் பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி அமைந்திருந்தது. இது பல கேள்விகளை முன்னிறுத்துகின்றது. அண்மைக்காலமாக 13வது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டுமென்னும் குரல்கள் தென்னிலங்கை அரசியலை அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சூழலில், இந்தச் செய்தி அதிக கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால், 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்னும் குரலை …
-
- 0 replies
- 598 views
-
-
(நேர்காணல்: ஆர்.ராம்) பாராளுமன்றில் ஆளும், எதிர் தரப்பால் ஜனநாயக மறுப்பு ஐ.நா.வில் புதிய பிரேரணையால் மட்டும் நன்மை கிட்டாது தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு போலியானது தமிழ் மக்களின் ஆணை தம்மிடமுள்ளதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் விடயத்தில் மேற்குலக, இந்திய நலன்களுக்கு உட்பட்டு அவர்களின் முகவர்களாக செயற்படுகின்றதே தவிர தமக்கு ஆணை வழங்கிய மக்களின் நலன்களில் இறுக்கமாக செயற்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, http://cdn.vir…
-
- 1 reply
- 598 views
-
-
மக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்!! சம்பந்தனுக்குப் பிறகு, வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான தேவையொன்று தமிழர்கள் மத்தியில் எழுமென்பதை எவருமே மறுத்துக்கூற முடியாது. இணைந்த வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.இதையே தமது தாயக பூமியாகவும் அவர்கள் தொன்றுதொட்டுக் கருதி வருகின்றனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களின் இனப்பரம்பல் சிதை…
-
- 0 replies
- 598 views
-
-
ஓரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது? யதீந்திரா புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக நிரூபித்துவிட்டது. அதாவது, அவ்வாறானதொரு அரசியல் யாப்பு ஒன்று வரப்போவதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான நிபுனர் குழு அறிக்கையொன்று வெளியாகியிருக்கிறது. இதனை தாம் நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் பிறிதொரு பங்காளிக் கட்சியியான புளொட்டின் தலைவர் சித்தார்த்தனோ, பல்வேறு சந்தர்ப்பங்களில், புதிய …
-
- 0 replies
- 597 views
-
-
இனப்படுகொலையை மூடிமறைக்கும் சிறிலங்கா – கனடா ஊடகம் [ ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013, 09:18 GMT ] [ நித்தியபாரதி ] 1000 மக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையானது 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு Toronto Star ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் Rosie DiManno எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கண்ணீர்த் துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே சிறிலங்காவாகும். சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விழுந்த கண்ணீர்த் துளிக…
-
- 1 reply
- 597 views
-
-
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணிவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்தும் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமைதி காத்து வருகிறார். இவர் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். இவ்வாறு The Statesman இதழில், பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவைப் பொறுத்தளவில் 2015 என்பது ஒரு அதிசயம் மிக்க ஆண்டாகும். அதாவது 2015 ஜனவரி மாதத்தில் சிறிலங்கா அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினர் வாழ்ந்து வரும் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகள…
-
- 4 replies
- 597 views
-
-
சி.வியும் சிங்கள மொழியும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மாணவர்களிடம் மிக முக்கியமானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளார். தாம் செய்ததைப் போல், சிங்கள மொழியைக் கற்காதிருக்க வேண்டாம் என அவர் கேட்டுள்ளார். யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழா, கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 'இலங்கை வாழ் மக்களிடையே, ஐயமும் சந்தேகமும் மனக் கிலேசமும் அவநம்பிக்கையும் ஆத்திரமும்;, இதுகாறும் ஏற்படக் காரணம் தவறான புரிதலாகும். இரு மொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால், ஒருவர் மொழியை ஒருவர் கற…
-
- 0 replies
- 597 views
-
-
உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார். சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் …
-
- 4 replies
- 597 views
-
-
ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை முன்வைத்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஐந்து தமிழ் தேசியக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கான ஆவணத்திலும் இந்த ஐந்து கட்சிகளினதும் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் முயற்சியையடுத்…
-
- 0 replies
- 597 views
-
-
-
இலங்கையில் வலுவடையும் இந்தியாவின் ஆதிக்கம் இந்தியன் ஒயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எரிபொருள் தாங்கிகள் சிலவற்றை மீளப் பெறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், திருகோணமலைத் துறைமுகத்தை, அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டிருக்கிறார். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புது…
-
- 0 replies
- 597 views
-
-
மீண்டும் இலங்கை அரசியலை சர்வதேச பரப்பில் பேசுபொருளாக்கிய கொமன்வெல்த் 2013 - யதீந்திரா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் மகாநாடு, இறுதியாக 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கான யோசனை சில விவாதங்களின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த யோசனையை முன்மொழிந்த நாடு இந்தியா என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். சர்வதேச பரப்பில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த நிலையில்தான், கொமன்வெல்த் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஆலோசனையை இந்தியா முன்வைத்திருக்கிறது என்பதையும், மேற்படி கூற்றோடு இணைத்து வாசிப்பது அவசியம். அதே இந்தி…
-
- 1 reply
- 596 views
-
-
ஜனாதிபதி தேர்வில் தமிழ்த் தேசிய கட்சிகளின் வெளிப்பாடு புருஜோத்தமன் தங்கமயில் புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றும், மூன்று விதமான தீர்மானங்களை எடுத்திருந்தன. டளஸ் அழகப்பெரும - சஜித் பிரேமதாஸ அணியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரித்திருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரித்திருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, பாராளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தளவில், ராஜபக்ஷர்களின் சுவடு இல்லாத ஆட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசிய கட்சிகள் தீர்மானங்களை மேற்கொள்…
-
- 3 replies
- 596 views
-
-
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், புதிய நகரசபை தலைவருன்கும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பிற்கும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது, ஏற்கனவே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர், தனக்கு தவிசாளர் பதவி தர வேண்டுமென அடம்பிடித்து, அது கிடைக்காத பட்சத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு துரோகமிழைத்தார். அவர் பதவியாசையில் கட்சிதாவியதாக குறிப்பிடப்பட்டது. அதேவேளை, அவரை சமரப்படுத்த, தவிசாளர் தேர்விலன்று காலையில் எம்.கே.சிவாஜிலிங்…
-
- 2 replies
- 596 views
-
-
ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்? நிலாந்தன் 20 ஏப்ரல் 2014 கடந்த வாரம் தமிழ் நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் பாரதீய ஜனதாக் கட்சியின் முதன்மை வேட்பாளராகிய நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கைக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டிருப்பவர்களில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் உண்டு. அதை விமர்சிப்பவர்களும் உண்டு. ஈழத் தமிழர்கள் தரப்பில் குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகளில் ஒரு பகுதியினர் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள புத்திஜீவிகள், படைப்பாளிகள், செயற்பாட்டாளர்களில் ஒரு தொகுதியினர் மோடிக்கு எதிராகவே காணப்பட…
-
- 0 replies
- 596 views
-
-
இந்திய எதிர்ப்பும் தமிழரசு கட்சியின் தீர்மானமும் Jul 09, 20190 யதீந்திரா அண்மையில் இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாடு இடம்பெற்றது. இதன் போது ‘இந்தியாவை நாங்கள் நம்புகிறோம்’ என்னும் அடிப்படையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழரசு கட்சியின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு சம்பவம் முன்னர் எப்போதும் இடம்பெற்றதில்லை. இது தர்க்க ரீதியில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. தமிழரசு கட்சி என்பது இந்தியாவிற்கு சார்பான கட்சி என்பதுதான் பொதுவான பார்வை. தமிழரசு கட்சி மட்டுமல்ல வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்வாறான புரிதலுக்குள் அடங்கும். இதில் விதிவிலக்கான ஒரு கட்சி என்றால், அது கஜேந்திரகுமார…
-
- 0 replies
- 596 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது. குறிப்பாக, பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கேற்ற வகையில் கடந்த ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது விரிசலடைந்திருந்த மேற்குலக நாடு…
-
- 0 replies
- 596 views
-
-
மைத்திரி காட்டும் பூதம் “விரோதங்கள் வன்முறைகளின் மூலம் என்னைப் பலவீனப்படுத்தினால், தீய சக்திகள் தான் பலம் பெறும்” - கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த தமிழ்மொழித் தின விழாவில் உரையாற்றிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயமே இது. இந்த விழாவில் பங்கேற்க யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கடந்து சென்ற போது, வாகனத்தை விட்டுக் கீழே இறங்கி, அவர்களுடன் பேச்சு நடத்தியிருந்தார் ஜனாதிபதி. அதற்குப் பின்னர், தமிழ்மொ…
-
- 0 replies
- 596 views
-
-
மருத்துவப் போராளி| DR. Tharmaratnam Varman அவர்களுடனான நேர்காணல்
-
- 0 replies
- 596 views
-
-
தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை - நிலாந்தன்:- 09 மார்ச் 2014 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அந்நாட்களில் அனைத்துலக அரசியலில் பேசுபொருளாக மாறியிருந்த ரஷ்ய-ஜோர்ஜிய நெருக்கடி பற்றிய உரையாடல் அது. ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி ரஷ்யா ஜோர்ஜியா மீது பலப்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது பற்றி உரையாடினோம். உரையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் நான் சொன்னேன் ''ஜோர்ஜிய அரசாங்கம் தூரத்தில் இருக்கும் அமெரிக்கப் பேரரசை நம்பி பக்கத்தில் இருக்கும் பிரா…
-
- 1 reply
- 596 views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை விரிவாக்கப் பணிகள் தமிழ் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் இலங்கையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து சென்ற தமிழ் மக்கள் பலரும் அக்காலத்தில் அங்கே ஒரு விகாரை இருந்ததாக தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு விகாரை இருந்ததா? அங்குள்ள பிக்குவும், ராணுவமும், நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரும் இந்த விவகாரம் குறித்து கூறுவது என்ன? இந்த விகாரை சர்ச்சையாவது ஏன்? "தற்போதுள்ள விகாரையை தமிழ் மக்களின் காணிகளிலேயே நிர்மாணித்துள்ளனர். இது தவறான விடயம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வ…
-
- 2 replies
- 596 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி பெரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி…
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
இலங்கையைக் காப்பாற்ற பசிலிடம் உள்ள உபாயம்? – அகிலன் July 7, 2021 ஜனாதிபதியின் சகோதரரும், ஆளும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச அடுத்த வாரம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்க வுள்ளார் என்ற செய்தி தான் கொழும்பு அரசியலில் இந்த வாரப் பரபரப்பு. ராஜபக்ச சகோதரர்களில் அரசியல் அதிகாரப் பதவிகள் எதிலும் இல்லாத ஒருவராக பசில் இருந்தாலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற முறையில், அதிகாரத்துடன் கூடிய ஒருவராகவே அவர் இருக்கின்றார். அதனை விட, ஆளும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற முறையிலும், சக்தி வாய்ந்த ஒருவராக அவர் இருக்கின்றார். ஆனால், இப்போது அரசியல் அதிகாரம் மிக்க பதவி ஒன்றை அவருக்குக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் கட்சிக…
-
- 1 reply
- 596 views
-
-
ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா? மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா?காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும் பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலி…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழன் தமிழனாக நிமிர்ந்து நின்று வாழ்ந்த காலத்தில் வன்னியில் பெரியபெரிய கடைக்காரர்கள் இருந்தார்கள் தலைவர் அவர்களின் போராட்டம் இருந்த காலத்தில் நிறைந்த பணக்காரர்கள் இருந்தார்கள் இன்று அனைவரும் ஓட்டாண்டியாகி தூங்கி சாகின்றார்கள் இது திட்டமிட்ட சிங்கள அரசின் செயற்பாடு என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சியில் போட்டியிடும் வேட்பாளர் பசுபதிப்பிள்ளை தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார். உண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டங்களில் தன்னிறைவான பொருளாதாரத்துடன் மக்கள் வாழ்ந்தார்கள் என்றால் அது பெருமைகொள்ளவேண்டியது இதனை திட்டமிட்டு சிங்கள அரசு அழித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் மாங்குளம் தொடக்கம் பரந்தன் வரை லீசிங்முறையில் கடனுக்கு ஊர்திகள் வட்டிக…
-
- 0 replies
- 595 views
-