அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றும் வாக்குறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்வதென்றும், அதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்றும் அக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி யும் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகவே கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, மக்களை அவமானப்படுத்துவது எவ்வளவு சுலபமான விடயம் என்பதை, இந்தச் சம்பவத்தைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, அவர் நாட்டுக்கு வழங்கிய பிரதான வாக்குறு…
-
- 0 replies
- 627 views
-
-
40 வருடங்களாக உரிமை மறுக்கப்படும் பிரதேச செயலகம் லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று மார்ச் 25ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதனால் இதுவொன்றும் புதிதல்ல. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படாத காரணத்தினால், அப்பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச …
-
- 0 replies
- 512 views
-
-
1978 நவம்பர் 23ம் திகதி. ஒரு பெருங்காற்று கிழக்கு மண்ணை துகிலுரித்த நாள். குறிப்பாக மட்டக்களப்பு மண்ணை 'சூறாவளி' என்ற அரக்கன் அரைகுறையாக அழித்த சம்பவம் இன்றைக்கும் பலரால் நினைவுகூறப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நவம்பர் 23ம் திகதி இரவு முழுவதும் வீசிய அந்த கொடூரமான புயல்காற்றில் அகப்பட்டு சுமார் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட 250,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமாக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 20சதவீதமான மீன்பிடிப் படகுகள் அழிக்கப்பட்டன. சுமார் 28 ஆயிரம் தென்னஞ்செய்கையில் 90 வீதமானவை முற்றாகவே அழிவடைந்தன. 240 பாடசாலைகள், 90 நெற்களஞ்சியங்கள் சே…
-
- 0 replies
- 543 views
-
-
42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன். முதலாவதாக 83 ஜூலை ஒர் இனக்கலவரம் அல்ல. இனக்கலவரம் என்றால் பரஸ்பரம் மோதிக்கொள்ள வேண்டும். அது இன அழிப்பு.நிராயுத பாணிகளாக இருந்த கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதல். அது திட்டமிடப்பட்டது என்பது முதலாவது. பின்னணியில் அரசு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது இரண்டாவது. எனவே அது தன்னெழுச்சியாக தோன்றவில்லை. அதற்குப்பின் திட்டமிட்டு ஒரு தரப்பு உழைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஒர் உள்நோக்கம் அங்கே இருந்தது. அதோடு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தூண்டப்பட்ட பொறாமையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. இவ்வாறு எல்லாக் காரணிகளும்…
-
- 1 reply
- 309 views
-
-
47 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 47 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர…
-
- 0 replies
- 417 views
-
-
48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின…
-
- 0 replies
- 1.7k views
-
-
5 வருட முயற்சி பலிக்குமா? அன்று காலை நாடு ஒருபரபரப்பான சூழலில் காணப்பட்டது. முழு நாடும் புதிய பிரதமர் பதவியேற்பதையும் புதிய அமைச்சரவை பதவியேற்பதையும் தொலைக்காட்சியூடாக பார்ப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மை பலத்தை பெறாவிடினும் கூடிய ஆசனங்களான 106 எம்.பி.க்களை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டிருந்தது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைப்பார் என்றும் பிரதமராக பதவியேற்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் முழு நாடும் ஏன் சர்…
-
- 0 replies
- 355 views
-
-
52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள் – நிலாந்தன் December 23, 2018 ‘மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு நிலைகளை மீளச் சிந்திக்கவும் மீட்டுப் பார்க்கவும் மீள உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.’ – பேராசிரியர்.மைத்ரீ விக்ரமசிங்க(ரணில் விக்ரமசிங்கவின் துணைவி) 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவிற்கு வந்துவிட்டது. இதன் விளைவுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம். முதலாவது விளைவு- மைத்திரியை அது நவீன துக்ளக் மன்னனாக வெளிக்காட்டியிருக்கிறது. இலங்கைத்தீவை இதுவரையிலும் ஆண்ட அனைத்துத் தலைவர்களிலும் அதிகம் பரிகசிக்கப்பட்ட கேவலமாக விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் காணப்…
-
- 0 replies
- 609 views
-
-
54 ஆண்டு கால அன்பர் ஐ. தி. சம்பந்தன் ஐயாத்துரை திருஞானசம்பந்தன் அவர்களை யாராவது அறிவீர்களா? ஐயாத்துரை சோமாக்கந்தமூர்த்தியை அறிவீர்களா? காரைநகரார், சைவத் தமிழ்த் தொண்டர், தொழிற்சங்கத் தலைவர், தமிழ் அகதிகளின் காப்பாளர், சிறை சென்றவர், எண்பதாண்டு அகவையைக் கடந்தவர். தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன், உலகறிந்த அவர் பெயர் ஐ. தி. சம்பந்தன். இலங்கை, தமிழகம், அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, ஆத்திரேலியா எனப் பரந்து வாழும் தமிழரின் நெஞ்சங்களில் அன்பராயும் தொண்டராயும் நிறைந்து நிற்பவர். 1962இல் சிற்பி சரவணபவன், வித்துவான் ஆறுமுகம், புலவர் சிவபாதசுந்தரம் ஆகியோர் கலைச்செல்வி இதழை வெளியிடத் தொடங்கினர். என் தந்தையாரின் ஸ்ரீ காந்தா அச்சகத்தில் முதல் இதழ் அச்சாயிற்று. தொடர்ந்து பல இத…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஸ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கண்டியில் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகியது. ஐந்து நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் கொழும்பில் நிறைவடைய உள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் சமுதாயங்கள் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய ஆர்ப்பாட்டம் என்றவுடன் ஒரு விடயம் நினைவுக்கு வருகின்றது. இதே போன்றதொரு பேரணி கடந்த 60 வருடங்களுக்கு முன் இடம் பெற்றது என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? ஆம், இவ்வாறான எதிர்ப்பு…
-
- 0 replies
- 476 views
-
-
65,000 உலோக வீடுகள்: மக்களுக்கான திட்டமா? மிட்டலுக்கான திட்டமா? படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட உலோக வீடு. சர்ச்சைக்குரிய 65,000 உலோக்கத்திலான வீட்டுத்திட்டதை பற்றி மீண்டும் ஒரு வாக்குவாதம் எழுந்துள்ளது. மார்ச் மாதம் 24ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரிடம் இவ்வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட முறைதவறுகளை சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், இத்திட்டத்தை அமுல்படுத்தப்போகும் நிறுவனமாகிய ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தைப் பற்றி பலவாறு புகழ்ந்து கூறியதோடு, ஊடகங்கள் இவ்வீடுத்திட்டதை பற்றி பிழையான செய்திகளை பரப்பிவரு…
-
- 0 replies
- 758 views
-
-
இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் ‘ஆபிரிக்காவின் சே குவாரா’. 1983ம் ஆண்டு இராணுவ புரட்சி நடவடிக்கை ஒன்றின் மூலம் Burkino Faso நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தோமஸ் சங்காரா கைப்பற்றினான். ஆட்சிக்கு வந்ததும் அவன் கொண்டுவந்த ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
70 வருடங்களை கடந்துவிட்ட நேட்டோ ; அடுத்தது என்ன? பெய்ஜிங் ( சின்ஹுவா ) - வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு (North Atlantic Treaty Organisation -- NATO ) கடந்த வியாழக்கிழமை 70 வருடங்களை நிறைவுசெய்திருக்கிறது. நவீன வரலாற்றில் மிகவும் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒரு இராணுவ கூட்டணி என்ற வகையில் நேட்டோ சற்று நின்று நிதானமாக அதன் பாதை குறித்து சிந்திப்பதற்கான உகந்த நேரம் இதுவாகும்.1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைக்கப்பட்டபோது அன்றைய சோவியத் யூனியனுக்கும் அதன் சார்பு நாடுகளுக்கும் எதிரான ஒரு கூட்டு பாதுகாப்பு அமைப்பாக செயற்பட்டது.பனிப்போரின் ( Cold War ) முடிவையடுத்து அது அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இரு மருங்கிலும் உள்ள நாடுகளுக்கிடையிலான இடையிலான ( Transatla…
-
- 0 replies
- 514 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ] ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை. மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிகளிலும் பார்க…
-
- 6 replies
- 654 views
- 1 follower
-
-
77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே(காணொளி இணைப்பு) 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள். என கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து பாராளுமன்றில் ஆற்றிய உரை M.A. சுமந்திரன். 1983ல் திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவே 1983 கலவரம் ஏற்பட்டது. இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள் என்றால், அதற்கு முன் வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லையா? 56ல், 58ல், 61ல், ஆயதம் ஏந்தாத தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இளைஞர்கள் வன்முறையை கையில் எடுக்கவில்லை. இன்னும…
-
- 3 replies
- 786 views
-
-
83 ஜூலை : இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவு – நிலாந்தன்… July 27, 2019 83 ஜூலை தொடர்பில் பசில் பெர்னாண்டோ கொழும்பு டெலிகிராப்பில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அந்த இன அழிப்புக்கு சூத்திரதாரி அப்போது இருந்த அரசுத் தலைவர் ஜெயவர்தனவே என்று குற்றம் சாட்டியுள்ளார்.கொல்லப்பட்ட 13 ராணுவத்தினரின் உடல்களை கொழும்புக்கு கொண்டு வந்து கூட்டாகத் இறுதிக் கிரியைகளை செய்ய வேண்டும் என்று படைத் தரப்பும் ஏனைய சில தரப்புக்களும் கேட்ட பொழுது ஜெயவர்த்தனா அதற்கு சம்மதித்தார். ஆனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அருகருகே வாழும் கொழும்பில் அவ்வாறு கூட்டாக இறுதிக் கிரியைகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதிருந்த கொழும்பு நகர …
-
- 0 replies
- 663 views
-
-
83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் – நிலாந்தன்! August 1, 2021 மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் நாட்டைக் கொஞ்ச நாளைக்கு ஆளக் குடுத்தால்…வடிவா ஆண்டு காட்டுவாரடா ! “ – என்று. தமிழ் மக்கள் ஜூலை 83ஐ நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் ராஜமகேந்திரன் காலமாகியுள்ளார். அவர் ஒரு தமிழ் பெரு முதலாளி. ஒரு ஊடக குழுமத்தில் தலைவர். எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் அவர் ஒரு நம்பிக்கையின் குறியீடு. எப்படியென்றால் 83 ஜூலையில் அவருடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன எரிக்கப்பட்டன. எனினும்,தனது சொத்துக்கள் எரிந்த…
-
- 0 replies
- 424 views
-
-
88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது மறவன்புலவு க. சச்சிதானந்தன் தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
[size=2] [size=4]செப்டெம்பர் 11, 1973 அன்று சல்வடார் அலண்டேயின் ஆட்சி அமெரிக்க அரசாங்கத்தின் துணையுடன் தூக்கியெறியப்பட்டது. அலண்டே ‘மர்மமான முறையில்’ கொல்லப்பட்டார்.[/size][/size][size=2] [size=4]2001ம் ஆண்டு, செப்டெம்பர் 11 அன்று நியூ யார்க், வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களின்மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். [/size][/size] [size=2] [size=4]இரண்டுமே ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள். ஒன்று அமெரிக்காவின் துணையுடன் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது, அமெரிக்காவின்மீதே.[/size][/size] [size=2] [size=4]பரமக்குடியில் சென்ற ஆண்டு செப்டெம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை மற்ற இரு செப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
9/11 | 20 வருட நிறைவு – உலக ஒழுங்கு மாறியதா? – ஒரு மீள்பார்வை சிவதாசன் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்களுள் பயணிகள் விமானங்கள் புகுந்து இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தியாகின்றன. இச்சம்பவங்கள் யாரால், ஏன் நிகழ்த்தப்பட்டந எனப் பொதுமக்கள் அறிவதற்கு இன்னும் இருபது வருடங்கள் எடுக்கலாம். விசாரணைகள் நடைபெற்று முடிவுகள் பெட்டிக்குள் வைத்து மூடிப் பூட்டுக்கள் போடப்பட்டுள்ளன. சட்டத்தின் சாவியைக் கொண்டு ஜநாதிபதி பைடன் அவற்றைத் திறப்பதற்கு ஆணையிட்டுள்ளார் என்கிறார்கள். சுருக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட சில பிரதிகள் வெளிவரலாம். எப்போது? தெரியாது. இச்சமபங்களின் காரணமாக உலகம் புதிய ஒழுங்கிற்குள் போகப்போகிறது (New World Order) என அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட, உலகச் சண்டி…
-
- 0 replies
- 571 views
-
-
9/11 தாக்குதலுக்குப் பிறகு கற்றுக் கொண்ட அல்லது கற்றுக்கொள்ளாத 5 முக்கியப் பாடங்கள் ஃப்ராங்க் கார்டனர் பிபிசி பாதுக்காப்புச் செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத்தினர் 20 ஆண்டு கால, உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போரில் நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டுள்ளோமா? இன்று ஆப்கானிஸ்தான் மீண்டும் அல்-காய்தாவின் ஆதரவு அமைப்பு ஒன்றால் ஆட்சி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது. 2001 செப்டம்பர் 11 அன்று காலையை விட நாம் இப்போது எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளோம்? என்பது குறித்த அலசல் தான் இது. மிக மோசமான பயங்கரவாதத…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
9/11 முதல் 5/19 வரை…:அஸ்வத்தாமா 9 /11க்குப் பின்னரான உலக ஒழுங்கு அரசியல் என்ற சதுரங்கத்தில் நாம் பகடைக்காய்களாக உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. 9/11க்குப் பின், உலகம் புதிய பல வழிகளை கண்டுபிடித்துள்ளது. புதிய போக்குகளைச் சென்றடைந் துள்ளது. நடந்துமுடிந்த போர், அவற்றைப் பற்றிய புரிதலை முள்ளந் தண்டைச் சில்லிடவைக்கும் வகையில் எமக்கு உணர்த்தியிருக்கிறது. 9/11உம் அதையடுத்து ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும் எனும் போது, 9/11ஐ விளங்கிக் கொள்ளல் என்பது மிக முக்கியமானதாகிறது. ஒரு வகையில், 9 /1 என்பது வெறும் குறியீடு மட்டுமே ஆயினும்; அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. “9/11” என்ற சம்பவம் ஏன் நடந்தது?…
-
- 1 reply
- 873 views
-
-
9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 09:12 - 0 - 38 AddThis Sharing Buttons இன்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், உலகையே புரட்டிப் போட்டது. அதன் பின்னரான உலக ஒழுங்கில், உருவான சொல்லாடல்கள் இன்னும் வலிமையானதாக இருக்கின்றன. அத்தாக்குதலின் பின்னர், அமெரிக்கா உருக்கொடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற எண்ணக்கரு, உலகெங்கும் எதிரொலித்தது; விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தின்…
-
- 0 replies
- 478 views
-
-
உலகமா யுத்தம்-2 இல் ரஸ்யாவின் லெனின்கிறாட் Leningrad (இன்று சென்ர் பீற்றேஸ்பேர்க் St-Petersburg) மீது நடந்த முற்றுகைச் சமர் பற்றி தமிழில் ஆக்கங்கள் வந்திருக்கா? இன்றய, எதிர்கால தாயக சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முற்றுகைச் சமர்பற்றி நாம் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அந்த வரலாற்றில் இருந்து நாம் எல்லோரும் படித்துக் கொள்ள பல விடையங்கள் உண்டு. அதன் மூலம் நமது இழப்புகளை குறைக்கலாம். http://en.wikipedia.org/wiki/Siege_of_Leningrad http://www.wellcome.ac.uk/doc_WTX024059.html
-
- 6 replies
- 1.7k views
-
-
911 இன் இரகசிய வரலாறு http://www.youtube.com/watch?v=mhtzWcaZx5A http://www.youtube.com/watch?v=s1ZHUl_PT2M
-
- 0 replies
- 814 views
-