Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இனவாத நிகழ்ச்சி நிரலுக்குள் இனப்பிரச்சினை விவகாரம் by A.Nixon - on July 9, 2015 படம் | Buddhika Weerasinghe/ Getty Images, THE HUFFINGTON POST இலங்கையில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றன. இந்த இரண்டு பிரதான கட்சிகள்தான் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி புரிந்தும் வருகின்றன. மக்களின் பிரச்சினைகள் பொதுவானவை என்ற கருத்து இந்த இரு கட்சிகளிடமும் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்களின் 60 ஆண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைப்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் சார்ந்து சர்வதேச ரீதியாக வரக்கூடிய அழுத்தங்கள், யோசனைகளை தவிர்ப்பது. பிரதான நோக்கம்…

  2. ஜனவரி தேர்தலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆகஸ்ட் தேர்தல் by Veeragathy Thanabalasingham - on July 8, 2015 படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS ஜனவரி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிய மக்கள் பேதலித்துப் போய் நிற்கிறார்கள். அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்க ஜனாதிபதி சிறிசேன இணங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜபக்‌ஷவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கையை சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரே…

  3. 2015 பொதுத் தேர்தல்களின் பின்னர் உருவாகும் அரசு எதிர்நோக்கும் சவால்கள் by Lionel Guruge - on July 8, 2015 படம் | BUDDHIKA WEERASINGHE Photo, Getty Images மீண்டும் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்களுக்கான திகதி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு போட்டி போடுகின்றனர். அரசியல் அதிகாரத்திற்காக தேர்தல் இயக்கத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பதே அவர்களுக்கிடையிலான போட்டியாகும். யார் எவ்வாறு அதிகாரத்திற்கு வந்தாலும் புதிய அரசும் ஜனாதிபதியும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் கீழ் செயற்பட வேண்டும். தற்போதைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு எவ்வாறு புத…

  4. உலகத் தமிழர் பேரவையினால் புலம்பெயர் தரப்புக்களை கையாள முடியுமா? யதீந்திரா அண்மையில் இலண்டனில் இடம்பெற்ற கூட்டமொன்று தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் பங்குகொண்டமை தொடர்பில் தமிழ் தரப்பால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் மேற்படி கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பங்குகொண்டமை தொடர்பில் தெற்கில் விமர்சனங்கள் மேலெழுந்தன. தமிழ்ச் சூழலில் எழுந்த சர்ச்சைகளை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று, கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருக்கின்ற போதிலும் குறித்த கூட்டம் தொடர்பிலான தகவல்கள் அவர்கள் மத்தியில் பரிமாறப்பட்டிருக்கவில்லை. ஒரு சிங்கள அமை…

  5. நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ் மக்களின் தெரிவு யார்? முத்துக்குமார் பாராளுமன்றத் தேர்தலுக்குத் திகதி குறித்தாகிவிட்டது. வருமா? வராதா? எனப் பல்வேறு விவாதங்களும் இடம்பெற்ற சூழலில் தேர்தல் வந்துவிட்டது. மைத்திரி அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு தெரிவு மைத்திரிக்கு இருக்கவில்லை. மகிந்தரின் மீள் எழுச்சியை பலவீனப்படுத்துவதற்காகத்தான் மைத்திரி தேர்தலைத் தொடர்ச்சியாகத் தள்ளிப் போட்டார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக மகிந்தர் ஒவ்வொரு நாளும் பலம்பெற்று வருகையில் மேலும் தாமதிப்பது பயன்தராது எனத் தெரிந்து கொண்டார். தென் இலங்கையில் மும்முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. மகிந்தர் அணி எவ்வளவோ முயன்றும் பிரதமர் வேட்பா…

  6. இலங்கையின் அரசியல் அரங்கு களை கட்டிவிட்டது. அரங்காடிகள் எந்த அரங்கில் இணைந்து ஆடி, நடித்து மக்களைக் கவருவதென்பது இம்மாத மத்தியில் தெரிந்துவிடும். ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரசியல் இன்று வியாபாரமாக மட்டுமல்ல விபசாரமாகவும் காணப்படுவதாக உய்த்துணர்ந்தோர் கூறுகின்றனர். அந்த அளவு அரசியலரங்கு அசிங்கப்பட்டுள்ளது. நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தவர்கள் பதவிகளைப் பெற ஒட்டியுறவாடவும் இணைந்து அரங்காடவும் கட்டியணைக்கவும் தயங்காத நிலையைக் காணலாம் . பொதுமக்களை, வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி தமக்குச் சார்பாக புள்ளடியைப் பெற்று அதன் மூலம் பதவிகளைப் பெற்று வளம் பெற்று வாழ எத்தனிப்போரை அரசியல்வாதிகள் என்கின்றோம். இவர்கள் இணைந்த கூட்டை அரசியல் கட்சிகளென்கின்றோம். கடந்தகால அ…

    • 0 replies
    • 171 views
  7. நாங்கள் மகிந்தவின் புலனாய்வு அமைப்பு அல்ல! - சம்பந்தனிடம் வித்தியாதரன் [ திங்கட்கிழமை, 06 யூலை 2015, 07:29.12 PM GMT ] முன்னாள் போராளிகள் சிலரை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்தேன், பதில்கள் அனுமதிக்க முடியாது கூட்டமைப்பு திட்ட வட்டம் என்பன தொடர்பில் ஜனநாயக போராளிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் வித்தியாதரன் விபரித்துள்ளார். tamilwin.com

  8. அதிகார பேராசை பிடித்து மகிந்த இராஜபக்சவும் அவருடைய கூஜா தூக்கிகளும் குட்டையைக் குழப்பிக் கொண்டேயிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்களுடைய திட்டங்களையெல்லாம் பொடிப்பொடியாக்குவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பவர் தீட்டக் கூடிய சதித் திட்டங்கள் பலவுண்டு. அதிலொன்றுதான் Giving a long enough rope to hang himself என ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற முறையாகும். அதாவது நல்ல நீட்டான கயிறு திரித்துக்கொடுத்து அக்கயிறைக் கொண்டே ஒருவர் தன்னைத்தானே தூக்கிலிட வைப்பது என இதற்குப் பொருள்படும். மகிந்த இராஜபக்ச மெதமுலனவில் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சித் தலைவர் தனது ஆதரவாளர்களையும் தனக்கு ஆதரவான அமைச்சர்களையும் மகிந்த ஆதரவாளர்களாக பாசாங்கு பண்ணி அனுப்பி வைப்பதி…

    • 0 replies
    • 264 views
  9. கூட்டமைப்பிடம் சில கேள்விகள் நிலாந்தன் 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின், வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு சரியான மதிப்பீடு இருந்தால்தான் அடுத்த …

  10. தமிழ் டயாஸ்பொறா பலமானதா? கலாநிதி சர்வேந்திரா தமிழ் டயாஸ்பொறாவின் பலம் தொடர்பான கருத்துக்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன. எரிக் சூல்கெய்ம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக நிலாந்தன் எழுதிய கட்டுரையில் எரிக் சூல்கெய்ம் வெளிப்படுத்திய கருத்தைக் குறிப்பிட்டு இலண்டன் பேச்சுவார்த்தைகளின் போதும் பின்னும் தமிழ் டயாஸ்பொறா நடந்து கொள்வதைப் பாரத்தால் அப்படியா தெரிகிறது என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார். உண்மையில் தமிழ் டயாஸ்பொறா பலம்மிக்கதுதானா? இதுவே இன்றைய பத்தியின் பேசுபொருள் ஆகிறது. இங்கு பலம் என்பது எதனைக் குறிக்கிறது? வளங்கள் நிறைந்த சமூகம் என்பதையா? அனைத…

    • 3 replies
    • 1.1k views
  11. கடந்த ஜுன் மாதம் 17ந்திகதி அமெரிக்காவை ஒரு கலக்குகலக்கிய சம்பவம் தென் கரோலைனா மாநிலத்தில் சார்ள்ஸ்டன் என்னும் ஊரில் நிகழ்ந்தது. ஒருகிறிஸ்தவ ஆலயத்தில் விவிலிய நூல் வகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒன்பது கறுப்பினத்தவர்களை 21 வயதான வெள்ளை இளைஞன் துப்பாக்கியால் கொன்று குவித்தான். பகிடி என்னவென்றால் அவன் தானும் இந்தவிவிலிய நூல் வகுப்பில் ஒருமணி நேரமாகக் கலந்து கொண்டிருந்தவன். திடீரென்று எழுந்துநீஙங்கள் கறுப்பினத்தவர்கள் எங்கள் நாட்டையே ஆக்கிரமிக்கப் பார்க்கிறீர்கள், எஎங்கள் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறீகள் எனவே உயிர்வாழத் தகுதி அற்றவர்கள் என பெரிய உரையர்ற்றி விட்டுத்தான் தூப்பாக்கியைத் தூக்கி இருக்கின்றான். அங்குவகுப் பெடுத்துக் கொண்டிருந்த பாதிரியும் எட்டுப் பேரு…

    • 0 replies
    • 902 views
  12. எவராலும் கருத்தில் கொள்ளப்படாத புலம்பெயர் மக்களின் உரிமைகள் – பிரான்செஸ் ஹரிசன்Jun 26, 2015 | சிறிலங்காவில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசப்படுகின்றது. ஆனால் இன்னமும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் எவ்வாறான உரிமைகளை இழந்து வாழ்கின்றனர் என ஆராயப்படவில்லை. இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் huffingtonpost ஊடகத்தில், பிரான்செஸ் ஹரிசன் (Frances Harrison* ) எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. தமது சொந்த நாட்டிலிருந்து ஒரு தடவை புலம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பில் ஆதரவளிக்க இயலாதவர்களாகக் கருதப்படுகின்றனர். புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் பிள்ளைகள் த…

  13. திருமலையில் பறிபோகும் தமிழ்நிலங்களும் அழிக்கப்படும் வளங்களும்! திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னக்கரச்சை உப்பளத்தை அவ்விடத்தில் நிறுவாது அம்மக்களின் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கும்புறுபிட்டி மக்கள்கோரிக்கைவிடுத்தனர். இவ்வுப்பளத்தை தனியார்கம்பனி ஆரம்பிப்பதற்கு கடந்த பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. மக்களால் எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுத்து வந்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் உப்பள பணிகள் இழுபறிநிலையில் இருந்து இருகின்றன. இந்நிலையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இச்செயற்றிட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உப்பள உரிமையாளர்களுக்கும் இடையில் கும்புறுப்பிட்டி க…

  14. ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? - குமாரவடிவேல் குருபரன் 15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார…

  15. அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒரு மாயையா? நிலாந்தன்:- 21 ஜூன் 2015 ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 29 ஆவது அமர்வு கடந்த கிழமை தொடங்கியது. அதில் தொடக்க உரையாற்றிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் உள்நாட்டுப் பொறிமுறையை ஆதரித்துப் பேசியிருந்தார். வரும் செப்ரெம்பருக்குள் அவ்வாறான ஓர் உள்நாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரைப் போலவே தமிழ்ப்பகுதிகளுக்கு வந்து போகும் மேற்கத்தேய தூதுவர்களும் இங்கு சந்திக்கும் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் உள்ளாட்டுப் பொறிமுறையை ஆதரித்துக் கதைத்து வருகிறார்கள். அண்மையில் அ…

    • 3 replies
    • 801 views
  16. வசூல்ராஜாக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…??? ஆரம்பகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற போர்வையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றிபெற்ற தமிழ்த்தலைவர்கள் பலர் கட்சிக்குள் ஏற்பட்ட சாதி, சமூக வேறுபாடுகள் காரணமாக பிளவுபட்டனர். இதன் விளைவாக அவர்கள் காலத்திற்கு காலம் புதிய புதிய லேபள்களில் தேர்தல்களைச் சந்தித்து வந்தனர். ஒருகட்டத்தில் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரேநேரத்தில் இலங்கை அரசாங்கத்தினையும், தமிழ்த்தலைவர்களையும் துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவுமில்லை. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சமர்வரை தமிழ்த்த…

  17. 2009 மே க்கு பிறகு நடந்த பல மாற்றங்கள் பல தமிழர்களின் எல்லைகளை மீறிய செயல்கள் என்பது இலங்கை பிரச்சனைகள் கவனிப்பவர்களுக்கு சொல்லாமே விளங்கும் விடையம் ஆகும். அதே போல நாங்களும் மாற்றங்களை எதிர் பார்த்து செய்த கருமங்கள் பல. ஆனால், மாற்றங்கள் என்னவோ சாண் ஏறி முழம் சறுக்கிய கதையாகவே உள்ளது. அத்தோடு கூட்டமைப்பு அரசாங்துடனான பேச்சு, மீள் குடியேற்றம், புலம் பெயர்ந்த உறவுகள் உறவு, சுண்ணாகம் குடி நீர் பிரச்சனைகள்,உட்கட்சி உரசல்கள்.. ....... இன்ன பல விடயங்களில் ஒரு தெளிவற்ற போக்கை கொண்டிருப்பதும் ஒன்றும் மறைவான விடயம் அல்ல. எனது நண்பர்கள் சிலர் - அதே போல் உங்களுக்கும் இருக்க கூடும்; மேற்குறிப்பிட்ட காரணங்களால் கூட்டமைப்பையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வாருவதற்காகவும், கயேந…

    • 1 reply
    • 665 views
  18. ஆட்சி மாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்? கலாநிதி சர்வேந்திரா ஆட்சி மாற்றம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. சுதந்திரக் கட்சியின் நெருக்கடி ஒரு பிளவை நோக்கிக் கட்சியை இட்டுச் செல்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெருக்கடிக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. இன்னும் சிறிது காலத்தில் இந் நெருக்கடி தனது இயல்பான வளர்ச்சியை அடையும் நிலைமைகளே தெரிகின்றன. ஆட்சி மாற்றத்தின் பின் சுதந்திரக் கட்சிக்குள் உள்முரண்பாடுகள் வளர்வது ஏன்? கூட்டமைப்புக்குள் நெருக்கடிகள் தோற்றம் பெறுவதற்கான காரணங்கள் எவை? இக் கேள்விகளுக்கு ஒரு பதில் தேடும் முயற்சியாகவே இன்றைய பத்தி அமைகின்றது. இதில் சுவாரசியமான விடயம் என்னவ…

  19. மகிந்தவுடனான சமரச முயற்சிகள் வெற்றியளிக்குமா? யதீந்திரா ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலான காலப்பகுதியை உற்றுநோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பான அச்சுறுத்தலிலிருந்து புதிய அரசாங்கத்தால் எந்த வகையிலும் விடுபட முடியவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியாதவொரு சூழல் தெற்கின் அரசியல் அரங்கில் வெளிப்படையாகவே தெரிகிறது. மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்றபோதும் அவரது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லை. கட்சியின் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவுடனேயே இருக்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தி…

  20. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்; பிளவு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகி வருகின்றது:- 21 ஜூன் 2015 தமிழில் - குளோபல் தமிழ் செய்திகள்:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் அம்பாறையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை அவரிற்கு சண்டே டைம்ஸில் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்த விடயம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த வார சண்டே டைம்ஸில் தினேஸ் புதிய அரசியல் கூட்டணியொன்றை மகிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து தெரிவித்திருந்தார். கிழக்கு மாகாணத்திலிருந்து சிறிசேன் தினேஸ் குணவர்த்தனவை உடனடியாக தொடர்புகொண்டு சண்டேடைம்ஸ் பார்த்தீர்களா என கேட்டார்,அதற்கு தினேஸ் இன்னமும் அதனை வாசிக்கவில்லை என்றார், பின்னர் ஜனாதிபதி அதில் …

  21. விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள் ஆக 5, 2013 1 “புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்கமுடியவில்லை. எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களு…

    • 12 replies
    • 1.1k views
  22. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, நிவாரணம் தருகிறோம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு மயங்கி வாக்களிக்க தயாராவார்கள். இந்த வேளையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிட இருக்கும் தமிழ் வேட்பாளர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வடக்கு கிழக்கில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சி…

  23. இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்) தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அது(வும்)தான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போக்கில் தற்போது விரிந்துள்ள புதிய இராஜதந்திரக் களம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தோடு அது, விரைவாக எம்மை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டாலும், சில காலத்துக்குப் பின்னர் …

  24. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண் உறவு முறைச் செல்வாக்கு! [ Wednesday, 10 June 2015 ,11:26:39 ] என்.சரவணன் நிறைவேற்றப்படவிருக்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு அறிவித்துள்ளது. மாகாண சபை வேட்பாளர்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தும் வகையில் அதன் முதற்கட்டம் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில பெண்கள் அமைப்புகள் இது ஒரு மைல்கல் என்று அறிவித்திருப்பது அந்த அமைப்புகளின் இடையறா போராட்டத்தின் வெளிப்பாடே. அதேவேளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று சில அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இல…

  25. அரசியல் விடயங்களில், குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சிலசந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒருஉடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே தெரியப்படுத்தப்பட்டால், வெளிச்சக்திகள் வேறு காரணிகளை உட்புகுத்தி அதனைக் குழப்பிவிடும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. உடன்பாடு கண்டபின்போ ஏனையோர் அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஆயினும், அரசியலில் இரகசியம் காப்பது இன்னொருவகையில் பார்க்கப் போனால் ஆபத்து நிறைந்ததாகும். பொதுமக்களின் பார்வைக்கு அப்பால் பேரங்கள் பேசப்படும்போது, பேசுபவர் ஏதாவதொரு சன்மானத்திற்கு மயங்கி தனது நிலைப்பாட்டினை விட்டுக் கொடுக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அல்லது ஒருவர் மற்றக் கட்சித…

    • 0 replies
    • 381 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.