அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும்தான் சாதியடக்குமுறை உண்டு என்றும், சிங்கள மக்களிடம் சாதிப் பாகுபாடு இல்லை என்றும், அனேகர் கருதுவது மிகத் தவறானது என கட்டுரையாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தனது கட்டுரையில், இருபகுதியினரிடமும் சாதிப் பாகுபாடு வலுவாக உண்டு எனினும் தமிழ் மக்களிடம் சாதிப்பாகுபாட்டில் தீண்டாமை என்கிற அம்சம் உண்டு. ஆனால் சிங்களவர்களிடம் தீண்டாமை என்பது கிடையாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் சாதி பேதமானது தமிழ் மக்களிடம் இருக்கின்ற சாதி பேதத்தை விடவும் அரசியல் மத ரீதியில் மிக ஆழமானதும் கடுமையானதும் ஆகும். இது பற்றி தெரிந்து கொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் மிகப்பெரும் அரசியல் ரீதியான சமூக ர…
-
- 0 replies
- 500 views
-
-
எந்த முரண்பாடு இருந்தாலும் ஜனாதிபதியும் ஐ.தே.கவும் பிரிந்து வாழ முடியாது தமக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளியிடும் கருத்துகளைப் பற்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் மிகவும் உணர்ச்சிகரமான உரையொன்றை ஆற்றிவிட்டு, அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் எனச் செய்திகள் கூறின. அது, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முறுகல் நிலையின், மிகவும் பாரதூரமான வெளிப்பாடாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜனாதிபதியைப் பற்றி, ஐ.தே.க அமைச்சர்களும் நாடாளுமன்ற உ…
-
- 0 replies
- 250 views
-
-
ஈழத்தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம், சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து, அன்றைய சூழலில் பார்த்தசாரதி, டிக்சிட் போன்ற பெயர்கள், தமிழர் அரசியலில், முக்கிய இடத்தை பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும் பிரபலமாக இருந்திருந்தாலும் கூட, அவை, இயக்கங்கள் மத்தியில் பரவலாக உச்சரிக்கப்பட்டளவிற்கு, ஊடங்களின் கண்களை அதிகம் உறுத்தியிருக்கவில்லை எனலாம். இதற்கு அவ்வாறான சிலர், உளவுத்துறை சார்ந்தவர்களாக இருந்ததும் ஒரு காரணமாகும். பின்னர் இந்திய - இலங்கை ஒப்பந்தம், உறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலே குறிப்பிட்டவாறான பெயர்கள் அனைத்தும் மெதுவாக அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து போயின. இதன் பின…
-
- 2 replies
- 732 views
-
-
அம்பலமான உண்மை முகம் ‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி. அதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதி…
-
- 0 replies
- 610 views
-
-
கோட்டாவின் மீள்வருகையும் குழம்பிய குட்டையும் மொஹமட் பாதுஷா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளமை, இலங்கை அரசியலில் இன்னுமொரு திருப்பத்தை ஏற்படுத்த வழிகோலுமா என்ற கேள்வி, எழுந்துள்ளது. இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் கிளர்ச்சி வெடித்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்துக்கும் ஓடித் தப்பியிருந்தார். இப்போது 50 நாள்களின் பின்னர், நாடு திரும்பிய அவர் வரவேற்கப்பட்டு, வாகனத் தொடரணியாக அழைத்து வரப்பட்டிருக்கின்றார். இது ராஜபக்ஷர்களும் மொட்டு அணியும் மீள்எழுச்சி பெறுவதான தோற்றப்பாட்டையும், குழம்பிய அரசியல் குட்டைக்குள் என்ன நடக்குமோ …
-
- 1 reply
- 426 views
-
-
இலங்கைத்தீவு விவகாரம்- இந்திய அணுகுமுறையும், அமெரிக்க நிலைப்பாடும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கையாளும் அணுகுமுறையோடுதான் அமெரிக்கா ஒத்துச் செல்கிறது. ஜப்பானும் அதற்கு விதிவிலக்கல்ல. 2002 சமாதானப் பேச்சு காலத்திலும் இந்த ஒழுங்குதான் இருந்தது. 13 ஐ இந்தியா சம்பிரதாயபூர்வமாகவே கோருகின்றது என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் அறியாதவர்கள் அல்ல. -அ.நிக்ஸன்- சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்த இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதியை வழங்கவும், மேலதிகமான கடன்களைக் கொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா, இந்தியா மற்று…
-
- 0 replies
- 310 views
-
-
உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது. எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு, ஐரோப்பா எங்கும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது. எரிசக்தியின் அதிக விலை அதிகரிப்புக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள், பெல்ஜியம் முதல் செக் குடியரசு வரை நடத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிரான்ஸ் மக்கள், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் கா…
-
- 0 replies
- 714 views
-
-
உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்? -அதிரன் பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல…
-
- 0 replies
- 544 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முடியுமா? பா.கிருபாகரன் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்க முடியாது. ஏனெனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எதிர்க்கட்சித் தலைவரை பதவி நீக்குவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து நாட்டையும் அரசியலையும் மக்களையும் குழப்பி பிரேரணையிலும் மண்கவ்விய மகிந்த ஆதரவு பொது எதிரணியினர், அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித…
-
- 0 replies
- 358 views
-
-
எரிபொருள் விலைக்குள் அரசியல் மோதல் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், அரசியல் சண்டைகள் மாத்திரம் ஓயவில்லை. குறிப்பாக, எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து, பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பென்பது, சாதாரண மக்களைப் பலமாகப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. பஸ் கட்டணத்திலிருந்து சோற்றுப் பொதியின் விலையிலிருந்து, பல பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்திருக்கின்றன. எரிபொருளுக்கான வரியை நீக்கி, எரிபொருளின் விலை நீக்கப்படுமென …
-
- 0 replies
- 308 views
-
-
ஜனநாயக தேர்தல் முறை தடம்புரண்டு செல்கின்றது த. மனோகரன் ஆங்கிலேயர் ஜனநாயகம் என்ற கோட்பாட்டு முறைமையில் நம் நாட்டில் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்திச் சென்றனர். இன்று நாமோ அதிலிருந்து நழுவி படிப்படியாக மக்களுக்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்களாட்சி என்ற நிலையிலிருந்து விடுபட்டு அரசியல் கட்சிகளின் தலைமைகளின் ஆதிக்கத்திற்கு நம்மை உட்படுத்தி வரும் நிலைமை உருவாகிவருவதை உணராதுள்ளோம். மாகாண சபைக்கான தேர்தல் எந்த முறையில் அதாவது ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையிலா அல்லது தொகுதி வாரியாக ஐம்பது வீதமும் பெற்றுக்கொண்ட வாக்குகளினடிப்படையில் ஐம்பது வ…
-
- 0 replies
- 873 views
-
-
எம்.எல்.எம். மன்சூர் ”புத்தரின் போதனைகளில் புனிதப் போர் என்ற கருத்தாக்கம் இல்லை; புத்த தர்மத்தையும், அதைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட போர் புரிவதற்கு அதில் அனுமதியில்லை. இந்தப் பின்னணியில், புத்த தர்மத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கென ஆட்களை கொலை செய்வதனை நியாயப்படுத்த வேண்டுமானால், புத்தரின் போதனைகளுக்கு வெளியில் ஒரு வலுவான புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்டகைமுனுவுக்கும், (இந்து) எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற போரை, சிங்கள அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கென முன்னெடுக்கப்பட்ட ஒரு புனிதப் போராக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் மகாவம்ச ஆசிரியர்…
-
- 1 reply
- 527 views
-
-
தேசியக்கொடி கற்பிதமும் உண்மையும் இலங்கையின் தேசியக் கொடி பற்றிய சர்ச்சை சமகால அரசியல் அரங்கில் மேலோங்கிவிட்டிருப்பதை இந்த நாட்களில் கவனித்திருப்பீர்கள். இந்த போக்கின் பின்னால் உள்ளார்ந்திருக்கும் அரசியல் நலன்கள், பேரினவாதிகளின் பாசிச நலன்கள், அவர்களின் நீண்டகால குறுங்கால தந்திரோபாயங்கள், அவர்களின் திசைவழி என்பன குறித்து அலட்சியப்படுத்திவிட முடியாது. தேசியக் கொடி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் அவ்வளவு அக்கறைக்குரிய ஒன்றாக இல்லாமல் போய் நெடுங்காலம் ஆகிவிட்டாலும் கூட அரசியல் தளத்தில் தேசியக்கொடியை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான ஒரு வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அலட்சியப்படுத்திவிட முடியாது. மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது நிருவனமயப்பட்டது என…
-
- 0 replies
- 586 views
-
-
நல்லதொரு சந்திப்பு. இப்படியான சந்திப்புக்கள் அடிக்கடி நடைபெற்று எமது மக்களின் துயரங்களை எடுத்துச் சொல்லி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக்கால விடுமுறையும் பொய்முகங்களும் – இரா.துரைரத்தினம் Published on September 1, 2015-1:28 pm · No Comments புலம்பெயர் தமிழர்கள் என்ற அடைமொழியுடன் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை பலம்மிக்க சக்தியாகவும், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் மேய்ப்பர்கள் தாமே என்றும் ஒரு கற்பனை உலகிலேயே வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை. உதாரணமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, ஈழத்தமிழர் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒளிவட்டங்களை எல்லாம் கடந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்தெறிந்…
-
- 7 replies
- 646 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா? இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்…
-
-
- 1 reply
- 278 views
- 1 follower
-
-
இது வெறும் போர்வையா? ஒரு பெரிய தேசம். பற்பல மொழிகள், மதங்கள், ஜாதிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், நகராட்சிகள், கிராமங்கள்; இதைப் போல இன்னும் பல பிரிவுகள். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, நான்காவது பெரிய ராணுவம், என்றெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லலாம். ஆனாலும் இந்தியா இப்போது எதிர்நோக்கியுள்ள சிலப் பிரச்சினைகளின் தொகுப்பு. காஷ்மீர் பிரச்சினை சீனாவுடன் எல்லைப் பிரச்சினை ஸ்ரீலங்காப் பிரச்சினை நேபாள மாவோயிஸ்டுகளின் தொல்லை இந்து - முஸ்லீம் - கிருஸ்த்தவ பிரச்சினை [மும்பை, குஜராத், கோயம்புத்தூர், பிரிவினை, இன்னும் சில) காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் பிரச்சினை உள்நாட்டுத் தீவிரவாதிகள் (உல்ஃபா, நக்சலைட்டுகள், ...) மொழிப் பிரச…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:23 இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற மறுதினமே, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்ஷங்கர் இலங்கை விரைந்து, ஜனாதிபதி கோட்டாபயவை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பையும் விடுத்திருந்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்று, சரியாக 11 நாள்களில், ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விஜயமாக, புதுடெல்லி சென்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்திய விஜயத்தின் விளைவாக, இந்தியா, இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க…
-
- 0 replies
- 406 views
-
-
[size=2] [ நிராஜ் டேவிட் ][/size][size=2] ஈழத்தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் முள்ளிவாய்காலில் புரிந்திருந்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரங்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.[/size][size=2] உலகமே ஒன்று திரண்டு தமிழருக்காக பச்சாத்தாபப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் நடுவண் அரசு மாத்திரம் சிங்களம் மேற்கொண்ட அந்தக் கொலைவெறி ஆட்டத்திற்கு ஆரம்பத்தில் வக்காலத்து வாங்கியிருந்தது. இலங்கைப் படைகளின் படுபாதகச் செயல்களைக் கண்டிக்கும் நடவடிக்கையில் மிகுந்த தயக்கத்தையே வெளிப்படுத்தி வந்தது. தமிழ்நாட்டில் இருந்து எழுந்த மிதமிஞ்சிய அழுத்தங்கள், அமெரிக்காவின் இராஜதந்திர அழுத்தங்கள் போன்றனவற்றைத் தொடர்ந்து க…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம் May 2, 2025 11:09 am ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்…
-
- 0 replies
- 181 views
-
-
சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. இலங்கையில் கொரொணா நிலைமையினைச் சமாளிப்பதற்காக அரசும், அரசினுடைய வெவ்வேறு கட்டமைப்புக்களும் பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவத் துறையினைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து இந்நோய்த் தொற்றினைக் கண்டறியும் பணியில் இருந்து, நோயுற்றோரினைக் குணப்படுத்தும் பணி வரை தமது கடமைகளை மிகவும் இடரான சூழலிலே முன்னெடுக்கிறார்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலே பொலிஸார் சட்டம்…
-
- 1 reply
- 489 views
-
-
அமெரிக்காவே ஜப்பானிலிருந்து வெளியேறு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 'தன் கையே தனக்குதவி' என்பது பழமொழி. இதன் நிகழ்நிலை உதாரணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறோம். உதவி என்ற பெயரில் உவத்திரவம் செய்வது உலக அரசியல் அரங்கில் நிறைய உண்டு. உதவிகள் பல்வேறு பெயர்களில் நடந்தேறி முடிவில் புதிய ஆதிக்க வடிவங்களாக நிலைபெறுகின்றன. பாதுகாப்பின் பெயரால் அழைத்தவர்களாலேயே, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமற் போன அவலம் இங்கும் நடந்தது. அந்நிய உதவியைக் கூவி அழைப்பவர்கள் மனங்கொள்ள வேண்டிய விடயமிது. ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படைகளை வெளியேறக் கோரிக் கடந்த சில வாரங்களாக ஜப்பானியர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஊடகங்கள் அவற்றைக் கவனிக்கவில்லை. குறி…
-
- 0 replies
- 671 views
-
-
சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ? - சிவா பரமேஸ்வரன் (முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி. ) இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர். தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர். எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம் 18 மே 2009 அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்…
-
- 0 replies
- 516 views
-
-
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல் “தேச பக்தி என்பது, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம். இந்தத் தேர்தலில், சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும், தமது வெற்றிக்காக இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர், இனவாதச் சாக்கடைக்குள் முடியுமான அளவு உருண்டு, புரண்டு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்கிற முரளிதரன், இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அவர் தனது பிரசார மேடைகளிலெல்லாம், முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி வருகின்றமையை அவதானிக்…
-
- 0 replies
- 515 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு மொஹமட் பாதுஷா இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும் கிழக்கையும் சட்டப்படி இணைப்பது என்றால், அங்கு வாழ்கின்ற சர்வ ஜனங்களின் சம்மதம் இன்றியமையாதது. இதன் பிரகாரம் முஸ்லிம்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான அன்றேல், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பணிகளை தமிழ்த் தேசியம் ஆரம்பித்திருப்பதை காண முடிகின்றது. …
-
- 0 replies
- 350 views
-