அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….? -கே.சஞ்சயன் வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் கொண்டுள்ள இறுக்கமான போக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் வலியுறுத்தியிருந்தார். இலங்கையில் இன, மத, மொழி அடிப்படையில் நிர்வாக கட்டமைப்புகள் ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது என்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
The War May Be Over But The Idea Lives On போர் முடிந்திருக்கலாம், ஆனால் அந்தக்கருத்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் "ரெகல்கா" வார இதழ் நிருபர் ஒரு சுற்றுலாப்பயணியாக வேடம்மாறிச் சென்று சேகரித்த தகவல்கள். Disguised as a tourist,Revati Laul travelled through the country’s most war-ravaged districts. She spotlights a story that is rarely told இலங்கையில் 'தனித்தமிழீழம்' என்ற கருத்து செத்துவிடவில்லை. அப்படி அந்தக்கருத்து சாகமறுப்பதற்கு அங்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்தக் கட்டுரை இன்றுவரை அங்கு இடம்பெறும் 'அமைப்புரீதியான இன அழிப்பு' போர்பற்றியது. நடந்துமுடிந்த போருக்குக் காரணமான 'தமிழர் புறக்கணிப்பு' என்பது இப்போது முழுவீச்சுடன் மீண்டும் வந்த…
-
- 1 reply
- 874 views
-
-
சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்! - நக்கீரன் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள - பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று …
-
- 1 reply
- 712 views
-
-
தமிழ்ச் சிந்தனைக் குழாம்... - நிலாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சியும் பெரிய கட்சியுமான தமிழரசுக் கட்சியில் சில மூத்த முன்னாள் பேராசிரியர்கள் உண்டு. தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியலறிஞர்கள். ஆய்வாளர்கள், விமர்சகர்கள் போன்றோருடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவைதவிர தமிழ் புலமைப் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் ரி.என்.ஏ.க்கு ஆதரவான பலர் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு சிந்தனைக் குழாம் - திங் ராங் - (think tank) எனப்படும் அளவிற்கு ஒரு அமைப்பாக காணப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போலவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில ஆய்வாளர்கள், அறிவியல் ஒழுக்கத்துக…
-
- 0 replies
- 741 views
-
-
வெள்ளைக்கொடி - ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: ஆர். சிவகுமார் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, தான் யாரைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அவரையே காட்டிக் கொடுத்த ஆள் காட்டியாக தான் மாறியதை விளக்கிக் கொண்டிருந்தார் அந்தப் பருத்த, குட்டையான தமிழர். அவர் அணிந்திருந்த முக்காடுடன் கூடிய மெல்லிய, கறுப்பு நிற மேல் சட்டைக்குள் தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பதற்றத்துடன் திருப்பினார். அந்தப் பனிக் காலத்தின் மிகக் குளிரான நாள்கள் ஒன்றில் அவர் அணிந்திருந்த மேலாடை வானிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. விக்டோரியா ரயில் நிலையத்தின் உணவகம் ஒன்றில் நாங்கள் காஃபி குடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தின் ஆள் அரவமற்ற ஒரு தாழ்வாரத்தில், திறந்த வெளியில் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உட்க…
-
- 6 replies
- 2.8k views
-
-
போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!! 'இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்! இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.' இவ்வாறு இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அரு…
-
- 0 replies
- 821 views
-
-
30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு 18 ஏப்ரல் 2013 கலாநிதி எம்.எஸ்.அனீஸ் 30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது. தமிழ் முஸ்லீம் மக்களிடையேயான முரண்பாடுகளுக்கு காரணமான விடயங்கள் குறித்து இந்தக் கட்டுரையுடன் முரண்படுவோர் ஆரோக்கியமான பதில் கட்டுரைகளை radiokuru@yahoo.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் அவற்றையும் குளோபல் தமிழ்ச் செய்திகள் பிரசுரிக்கும். இலங்கையின் முப்பது வருடகால விடுதலை போராட்டமானது ஏற்படுத்திய ஆற…
-
- 1 reply
- 514 views
-
-
http://tamilworldtoday.com/archives/5034 சித்திரைப் புத்தாண்டை கொண்டாடிய இலங்கையர்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியிடமிருந்து வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்தி ஒரு சம்பிரதாயபூர்வமானதாக இருக்கக்கூடும். ஆனால் இரண்டு விடயங்களில் இந்த வாழ்த்துச் செய்தி அசாதாரண நகர்வுகளை வெளிப்படுத்துகின்றது. ஒன்று, கொரிய வளைகுடாவின் அதியுச்சப் பதற்றம் காரணமாக தென்கொரியாவுக்கான அவசரப் பயணத்தை மேற்கொண்ட வேளையிலும்கூட இலங்கைக்கான செய்தியை ஜோன் கெரி முன்னகர்த்தியமை! இரண்டு, இலங்கைத் தீவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலுக்கு இலங்கையுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதான செய்தியும் இலங்கையருக்கான புத்தாண்டு செய்தியுடன் இணைந்தமை! ஆக மொத்தம், இந்து சமூத்தி…
-
- 3 replies
- 867 views
-
-
ஜெனிவாத் தோல்வியும், தமிழக எழுச்சியும் சுயநிர்ணய உரிமைப் பாதையை திறந்து விட்டிருக்கிறதா? முத்துக்குமார் பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஜெனிவாக்களம் பிசுபிசுத்து விட்டது. அமெரிக்காவும், இந்தியாவும் தமது இயலாத்தன்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திவிட்டன. ஜெனிவாவிற்கான அமெரிக்க தூதுவர் தங்களால் செய்யமுடிந்தது இவ்வளவுதான் என தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு நேரடியாகவே கூறிவிட்டார். பிரேரணை நான்கு முறை வீரியக் குறைப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. தமிழக மாணவர் போராட்டம் சற்று முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தால் சிலவேளை பிரேரணை வீரியக் குறைப்பிற்கு உள்ளாகாமல் இருந்திருக்கலாம். உண்மையில் இந்த வருட ஜெனிவாக்களம் ஒரு பண்பு மாற்றத்தினையே வேண்டிநின்றது. அடிப்பது போன்று பிரமையை தோற்று…
-
- 4 replies
- 927 views
-
-
http://tamilworldtoday.com/archives/4860 http://tamilworldtoday.com/home பூகோள அரசியல் சூட்சுமங்களுடன் பின்னிப்பிணைந்த இலங்கைத் தீவுக்காக 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கால அடையாள வர்ணிப்பு அப்படியே சற்று மாற்றிப்போட்டால், 'விக்கிலீக்ஸ்' முதல் கேர்ணல் ஹரிகரன் வரையான புள்ளிகள் பழைய புகுதல் தொடர்பான விடயதானங்களை வழங்குவது புரிகிறது! 87 இல் உருவாக்கப்பட்ட இந்தோ-ஶ்ரீலங்கா ஒப்பந்தத்தின் பின்னணியில் புலிகளுக்கு இந்தியா நிதியுதவி செய்ததாகக் கூறும் விக்கிலீக்சின் செய்தி மற்றும் புலிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்த அளித்த விடயம் குறித்து கோத்தாபயவே விசாரணை நடாத்தலாம் என்ற ஹரிகரனின் எள்ளல் செய்தி வரை சில விடயங்கள் புலப்படுத்தப்படுகின்றன. அதாவது 2009 இற்க…
-
- 0 replies
- 529 views
-
-
இந்தியாவுக்கு வழங்கிய அரசியல் மீளிணக்கப்பாடுகள் மற்றும் அதிகாரப்பகிர்வு வாக்குறுதிகளை சிறிலங்காவை ஆட்சி செய்யும் 'சகோதரர்கள்' இன்னமும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு The Hindu [April 9, 2013] ஆங்கில நாளேட்டில் ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் பிரதிநிதியான HARDEEP S.PURI எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையானது உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டேதயன்றி காரணிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்தியா தற்போது யதார்த்ததை அடிப்படையாகக் கொண்டு தனது வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்காது அரசியல் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகின்றது. இதற்கு சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை…
-
- 2 replies
- 757 views
-
-
பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு. தமிழர்களை 'பாண்டி' என்று இழிசனர்களாக சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது. மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி. அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்றுதான் சொல்வார்கள். பண்டைய சேர நாடுதான் இன்றைய கேளரா என்பதைக்கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்ல மாட்டார்கள். தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக…
-
- 2 replies
- 2.2k views
-
-
"பயங்கரவாதம் குறித்த எனது சொந்தக் கருத்து என்றைக்கும் மாறியதில்லை, இனிமேலும் மாறாது. பயங்கரவாதம் வெல்வதற்கு ஒருக்காலும் இடம் கொடுக்க முடியாது. அப்படி நடந்தால், அது ஜனநாயகத்தின் முடிவாக கருதப்படும். பிரிட்டனைப் போன்று, இலங்கையிலும் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களால், ஜனநாயக வழியிலேயே பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." - மார்கரெட் தாட்சர் (1985 ம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது, விக்டோரியா அணைக்கட்டை திறந்து வைத்து ஆற்றிய உரை.) மார்கரெட் தாட்சர் தனது பிரதமர் பதவிக் காலம் முழுவதும், செல்வந்தர்களின் மீட்பராகவே இருந்தார். ஆனால், பொது மக்களுக்கு முன்னால், மிகவும் எளிமையானவராக காட்டிக் கொண்டார். தொலைக்காட்சி காமெராவுக்கு முன்னால், பொது இடங்களில் குப்பை…
-
- 1 reply
- 674 views
-
-
காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன். திருப்பங்கள் ஏற்படுத்திய நிழற்படங்கள். …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா பெளத்த பேரினவாதிகளின் தற்போதைய இலக்கு முஸ்லீம்கள் - பிறிதொரு இனப்போர் தோற்றம் பெறுமா? [ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:46 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்களால் பல்வேறு வடிவங்களில் எதிர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது தற்போது அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் கொழும்பிற்கு அருகில் உள்ள Fashion Bug மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை உள்ளுர் தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஒளிப்பதிவாக்கியுள்ளது. இதனை ஒளிப்பதிவாக்கிக் கொண்டிருந்த ஒளிப்படவியலாளர் மீது காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். சிறிலங்கா வாழ் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பௌத்த தேசியவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 802 views
-
-
நடு நிசி தாண்டி.. நித்திரையின் நடுவே.. கனவில் ஒரே உற்சாகம்.. சில ஐடியாக்கள் கனவில் உதித்திருந்தது... கனவில் கண்டது நனவானால்.. இன்னும் உற்சாகமாக இருக்கும் என்பதால்... இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.. காலனித்துவத்திற்கு முந்திய எமது ஆட்சிய அதிகாரங்களின் இருப்புக்கான ஆதாரங்கள்.. காலனித்துவத்தின் போதான எமது நில ஆக்கிரமிப்புக்கான ஆதாரங்கள்.. காலனித்துவம் கையளித்த அதிகார மையம் சிங்களத்திடம் போய் சேர்ந்ததற்கான ஆதாரங்கள்.. கடந்த காலங்களில்.. சிங்களம் இனப்படுகொலைகள் மூலம்.. கலவரங்கள் மூலம்.. எமது அரசியல் மற்றும் வாழ்வுரிமையை பறித்த துயரம்... தனிச் சிங்களச் சட்டம்.. சிறீ திணிப்புகள். சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட அரசியல் சமூக.. பொருண்மியப் புறக்கணிப்ப…
-
- 2 replies
- 784 views
-
-
முந்தைய பகுதிகள் ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னால் தான் இலங்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. இந்தியாவில் இருந்த பல்லவ பேரரசுவின் எழுச்சியினால் வணிக ரீதியான மாற்றங்கள் மொத்தமும் இலங்கைக்கு சென்றடைந்தது. அப்போது இருந்த கடல் வணிகம் அதனை சாத்தியப்படுத்தியது. தென்னிந்திய வணிகர்கள் மூலம் இலங்கைக்கு தென்கிழக்காசியா, மேற்கிழக்காசியாவுடனும் நெருங்கிய வணிக உறவுகள் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் உருவான கருத்துப் பறிமாற்றங்கள் தான் உள்ளே உள்ள சமூக அமைப்பையும் புரட்டிப்போட்டது. நீர்பாசன வளர்ச்சிகளும், விவசாய முன்னேற்றங்களும் தொடங்கி புதிய முன்னேற்றத்தை உருவாக்கியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிகம் என்ற நோக்கத்தினால் உள்ளே வந்து சேர்ந்தவர்களால் தமிழ் இனக்குழு…
-
- 0 replies
- 921 views
-
-
அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்- 06 ஏப்ரல் 2013 ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் போரில் மிகவும் கொடுமையான முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவாற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மிகக்கொடிய போரினால் ஈழத் தமிழ…
-
- 2 replies
- 699 views
-
-
மாணவர் போராட்டமும் ஈழத் தமிழர்களும் - அ.மார்க்ஸ் - சுமார் மூன்று வாரங்கள் தமிழகத்தைக் குலுக்கிய மாணவர் போராட்டம் ஓய்ந்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா அவையின் மனித உரிமை கவுன்சில் மாநாடு கூட இருந்த தருணத்தில் சானல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட பாலச்சந்திரன் கொலைப் படங்கள் மாணவர் எழுச்சியைப் பற்ற வைத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனைப் (12) பிடித்துப் பங்கரில் வைத்திருந்து பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டும் படங்களை இங்கு ‘இந்து’ நளிதழ் வெளியிட்டது. யாருடைய மனதையும் உலுக்கும் படங்களாக அவை அமைந்தன. 2009 மேயில் நடந்த போர்க்கொடுமைகளில் ஒன்று இது. பாலச்சந்திரனை மட்டுமல்ல பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் இப்படிப் படுகொலை செய்யப்பட்டனர…
-
- 0 replies
- 768 views
-
-
ஈழத் தமிழர் உரிமை - எந்தக் கழகம் முன்னணியில் நிற்கிறது? சந்திர. பிரவீண்குமார் ஈழத் தமிழர் பிரச்சினையைக் காரணம் காட்டி தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலகியதற்கு மறுநாள், 'இத அப்பவே செஞ்சிருந்தா நான் செத்துருக்க மாட்டேன்ல... தாத்தா? உயிரைத் திரும்ப தா... தா...' என்ற சுவரொட்டியை அ.தி.மு.க.வினர் சென்னை முழுக்க ஒட்டியிருந்தார்கள். அதற்கு பதிலடி தரும் விதமாக, 'போர் என்றால் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் என்று நீங்கள் அன்று சொன்னதால்தான் எனக்கு இந்த கதி. என் உயிரைத் திரும்ப தர முடியுமா அம்மா?' என்று தி.மு.க.வினர் மற்றொரு சுவரொட்டியை வைத்தார்கள். விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் பிஞ்சு முகத்தை வைத்து இந்த இரண்டு கழகங்களும் அரசியல் செய…
-
- 1 reply
- 771 views
-
-
ஊமையாகிவிட்ட இந்திய அறிஞரைப் பார்த்து வெட்கித் தலை குனிகிறது உலகு முதலாவது கேள்வி : ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஒரு கோடி மாணவர்கள் தமிழகத்தில் உண்ணாவிரதமிருந்தார்களே அப்போது இந்தியக் கல்வியியலாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்..? அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் திருதராஷ்டிரானாக இருந்த இந்திய நடுவண் அரசின் நடவடிக்கையை கண்டித்து, தகுதி குறைந்த அரசியல் தலைவர்களுக்கு சரியாக வழிகாட்டியிருக்க வேண்டிய கூட்டுப்பணியை இந்திய கல்வியியலாளர்கள் செய்யவில்லை. பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உபகதை கூறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்கள் தம்போன்ற விஞ்ஞானிகளை இணைத்து நாட்டு மக்களுக்கு கூட்டறிக்கை விடத்தவறியது, மாணவர்களுக்கும், தமிழின…
-
- 0 replies
- 787 views
-
-
ஆக்கம்: இதயச்சந்திரன் தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் விரிவடைந்து செல்லும் நிலையில், பொதுத் துறையில் உள்ள பல அமைப்புக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன. இப்போராட்டங்கள், ஈழ மக்களின் தேசிய இன விடுதலை போராட்டத்தின் சரியான கருத்தியலை ,அம்மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது என்பதனை மறுக்க முடியாது. வாக்கு வங்கி அரசியலிற்கு அப்பால் நடாத்தப்படும் இந்த எழுச்சி, சிறிதளவு தணிந்து , மறுபடியும் எழக்கூடிய சாத்தியமும் உண்டு. ஆனாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், இங்கு பரந்துபட்ட அளவில் முன் வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை புறம்தள்ளி, அதற்குக் குறைவானதொரு தீர்வினை எவரும் கூற முடியாததொரு நிலையை இந்தத் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மாணவர் ப…
-
- 0 replies
- 649 views
-
-
எதை நோக்கி - சிறீலங்காவுக்கு எதிரான மேற்குலகப் பிரச்சாரம் - ந.மாலதி விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் கொடூரங்களை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டுவரும் மேற்குலகத்தின் பிரசாரத்தை பொதுவாகத் தமிழர்கள் நன்றியுடன் நோக்குகிறார்கள். இத்தமிழர்களில் ஒரு சிறுபான்மையினர் இம்மேற்குலகப் பிரச்சாரம் சிறீலங்கா அரசைத் தமக்குச் சார்பாக மாற்றுவதற்காகவே என்று சந்தேகிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் பெரிதாக ஒரு நன்மையும் அடையப் போவதில்லை என்பது இவர்கள் கருத்து. இன்னுமொரு பகுதியினர் இலங்கைத்தீவில் சிங்களவர்கள் மேற்குலகத்திலிருந்து விலகிப்போக, தமிழர்கள் அங்கே மேற்குலக நண்பனாக இயங்கினால் நன்மைகள் அடையலாம் என்று கருதுகின்றனர். 2009ம் ஆண்டிற்குப் பி…
-
- 0 replies
- 648 views
-
-
சிறிலங்கா அரசின் ஊதுகுழலான கலாச்சார விழா - பிரான்செஸ் ஹரிசன் [ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 08:10 GMT ] [ நித்தியபாரதி ] கொழும்பில் இடம்பெற்ற Colombo scope என்கின்ற கலை விழாவுக்கு அவர்கள் இராணுவச் சீருடையில் வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு இராணுவச் சீருடையில் கலைவிழாவுக்கு வந்ததானது சிறிலங்கா அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அதற்கேதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான நடவடிக்கைகளை துணிச்சலுடன் எதிர்க்கின்ற ஒரு நகர்வாக இது அமைந்திருந்தது. Standard Chartered என்கின்ற வங்கியின் நிதி ஆதரவுடன், பிரிட்டிஸ் கவுன்சில் மற்றும் Goethe நிறுவகம் ஆகியவற்றின்…
-
- 0 replies
- 572 views
-
-
வடக்குத் தேர்தல் அக்னிப் பரீட்சையா? புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013 -கே.சஞ்சயன் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஓர் அக்னிப் பரீட்சையாகவே அமையப்போகிறது என்பதை, இப்போதே உணரக் கூடியளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து போயுள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதில் காணப்படும் இழுபறி நிலை இதனை ஒரு சர்வதேச விவகாரமாக்கியுள்ளது. அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளும், இந்தியா போன்ற நாடுகளும் வடக்கு மாகாணசபைக்கு ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்தி, தமிழ்மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இந்தநிலையில், வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்…
-
- 3 replies
- 681 views
-