அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
உலகளவில், 2011 ஆம் ஆண்டிற்கான படைத்துறைச் செலவீனம் தென் ஆசியப் பிராந்தியத்தில் மிக உயர்வாக இருப்பதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆய்வு மையம் (SIPRI) தெரிவிக்கிறது. அது பாகிஸ்தானில் மொத்த உள்ளூர் உற்பத்தியின் 2.8 சதவீதமாகவும், இந்தியாவில் 2.7 சதவீத இருக்கும் அதேவேளை, இலங்கையில் 3 சதவீதமாக உள்ளது. ஆகவே, உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்தாலும் இலங்கையின் படைத்துறைச் செலவு அதிகரிப்பதையிட்டு உலக வங்கியோ அல்லது அனைத்துலக நாணய நிதியமோ கேள்வி கேட்பதில்லை. ஆனாலும், இறுதிக் கொடுப்பனவான 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது அனைத்துலக நாணய நிதியம். இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைகிறது. அதே…
-
- 0 replies
- 496 views
-
-
1948 இல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை இனத்திடம்.. ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் கையளித்த நாளில் இருந்து அந்த மண்ணை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் சரி.. மற்றவர்களும் சரி.. இரண்டாம் மூன்றாம் நிலைப் பிரஜைகளாகவே அங்கு வாழ்ந்து வருகின்றனர். இது.. இன்றைய பிரித்தானிய அரசி உட்பட பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் சுரட்டலுக்கு எனி அங்கு அதிக வேலை இல்லை என்பதால்.. சிங்கள பெளத்த பேரினவாதம் தலைகால் புரியாமல் இனவிரோத.. மத விரோத செயற்பாடுகளோடு இலங்கைத் தீவில் சிங்கள பெளத்த மேலாதிக்க ஆட்சி நடத்தி வருவதை ஜனநாயகமாகக் கொண்டு அதனை அங்கீகரித்து நிற்கின்றனர். இதன் விளைவு தமிழர்கள் மீதான அடக்குமுறைகள். இவை இனக்கலவரங்கள்.. இனப் போர்.. இனப்படுகொலை. இனச்…
-
- 4 replies
- 634 views
-
-
இலங்கைக்கு வருகை தந்த இந்திய எம்.பி.க்களுடன் 13 ஆவது திருத்தம் குறித்து கலந்துரையாடப்படவில்லையா? என்ற கேள்வியை சென்னையிலிருந்து வெளியிடப்படும் “இந்து’ பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுப்பியுள்ளது. 2012 ஏப்ரல் 21 இல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் 13+ குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் என்று ஆட்டப்பந்தய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறுவதாகத் தென்படுகிறது என்று இந்து குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டி…
-
- 0 replies
- 441 views
-
-
2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாசிடோனியா மாநிலத்தில் பிறந்தவர் மாவீரர் மகா அலெக்ஸாண்டர். இவர் வாழ்ந்த காலம் [கி.மு:356-323] ஆகும். முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆபிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [surveyors] ஆகியோரையும் அழைத்துச் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் பயணம்? யுத்தத்திற்குப் பிறகு அதிக நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது இலங்கை. உள்நாட்டு யுத்தத்தை முறியடித்த அரசாங்கம், வெளி நெருக்கடிகளை முறியடிக்க முடியாமற் தவிக்கிறது. யுத்தத்தினால் பெற்ற வெற்றியைப்பாதுகாக்க முடியாத ஒரு நிலையை நோக்கிக் கொழும்பு சென்று கொண்டிருக்கிறது. அதனால் சமாதானத்தை எட்டவும் முடியவில்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும் முடியவில்லை. அரசியற் தீர்வை முன்வைக்கவும் இயலவில்லை. எந்தப் பாதையிலும் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் இறுகித் தேங்கிப்போயுள்ளது அரசாங்கம். கடந்த இரண்டாண்டுகளில் கொழும்பு கொண்டாடிய விழாக்களையும் அது அடைந்த பெருமிதங்களையும் நினைத்துப் பாருங்கள். இன்றைய நிலையையும் …
-
- 1 reply
- 566 views
-
-
தலைவலி இப்போது இந்தியாவுக்கும் தான்! பலத்த சர்ச்சைகளுக்கு நடுவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது. இந்தப் பயணத்துக்கான திட்டம் தயாரிக்கப்பட்ட போது தொடங்கிய பிரச்சினை, முடிந்த பின்னரும் ஓயவில்லை. தமிழ்நாட்டின பிரதான கட்சிகள் இந்தக் குழுவின் பயணத்தால் பயன் ஒன்றுமில்லை என்று தமது பிரதிநிதிகளை விலக்கிக் கொண்டன. இதனால் 16 பேர் வருவதாக இருந்த குழுவில் 12 பேர் மட்டும் வந்தனர். இந்தக் குழுவின் பயணத்தை தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது.அதுவும், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இந்தக் குழுவின் பயணத்தை வைத்து நெருக்கடிகளில் இருந்து மீளலாம் என்று அரசாங்கம் கருத…
-
- 3 replies
- 929 views
-
-
கிழிந்த கொடிகள் மட்டும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன. வாய்ப்புகள் எந்தச் சூழலிலும் ஏற்படும். அவற்றைக் கையாள்வதன் மூலமாகவே வெற்றியும் தோல்வியும் அமைகின்றன. வாய்ப்புகளைக் கையாள்வதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பும் ஆளுமையும் புலப்படும். மேலும் ஒரு சிறப்பான தலைமை தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமுண்டு. அல்லது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தன்னுடைய வெற்றியை அது உறுதி செய்து கொள்ளும். அதுவே வரலாற்றில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கு அந்தத் தலைமை வழங்குகின்ற நன்றிக்கடனும் பங்களிப்புமாகும். அந்தத் தரப்பு மக்களுக்கு அந்தத் தலைமை அளிக்கின்ற கௌரவமுமாகும். மக்கள் எதற்காகத் தங்களுக்கான தலைமைகளை உருவாக்குகிறார்கள்? தங்களுடைய நெர…
-
- 0 replies
- 635 views
-
-
88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது மறவன்புலவு க. சச்சிதானந்தன் தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
மே 17 - கடக்க முடியா நிழல் அக்கினி துக்கத்தின் நினைவுகளைக் கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் 'அழியா நினைவுகள்' அவை. ஏனெனில் அவை 'மரண நனவுகள்'. பசியோடிருந்த வயிறுகளை, மரணக்குழியில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்களை, முடிவேயற்றிருந்த சாவோலத்தை, பார்த்துக்கொண்டிருக்கும்போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை, நம்பிக்கையூட்டுவதற்கு எந்த வார்த்தைகளுமே இல்லாதிருந்த கையறு நிலையை எந்த நிலையில் மறக்க முடியும்? மனித வரலாற்றில் இத்தகைய சிலுவையேற்றம் எத்தனை தடவை நடந்தாலும் இன்னும் முடியாத அவல நாடகம் அதிகார வெறியும் ஒடுக்குமுறையும். மனித மனம் உண்மையில் அத்தனை குரூரமானதுதானா? சட்டங்களும் அறமும் விழுமியங்களும் நீதியும் அன்பும் கருணையும் நம்பி…
-
- 0 replies
- 529 views
-
-
உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது... ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் , ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார். அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று.. உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது ராகு தசை உங்களுக்கு நடக்கும். விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் -…
-
- 0 replies
- 36.3k views
-
-
ஐயரின் ஈழப்போராட்டத்தில்எனதுபதிவுகள் – ஆய்விற்கான அவசியம் – பகுதி ஒன்று! தத்துவம்… கோட்பாடு… திட்டமிடுதல்… செயற்பாடு…… ஈழப் விடுதலைப் போராட்டம் தொடர்பான அனுபவங்களின் பதிவுகளாக, நினைவுக் குறிப்புகளாக, புனைவுகளாக, சுயசரிதைகளாக, ஆய்வுகளாக சில நூல்களே வெளிவந்திருக்கின்றன. இவ்வாறு வெளிவந்தவற்றில் பலவற்றை சசீவன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அவையாவன, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர்உலகம், சி. புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து, அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை, நேசனின் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள், சீலனின் புளொட்டில்நான், அன்னபூரணாவின் தேசிய விடுதலைப்போராட்டம் மீளாய்வை நோ…
-
- 1 reply
- 945 views
-
-
சென்ற வாரம் நூலகம் நிறிவனத்தினரின் கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல, "அப்போது எமது நூலகம் ஏண்ணிம நூலகமாக இருந்திருக்குமானால் எரிப்பு ஏற்படுத்திய்இருக்கும் பாதிப்புக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும்". எனினும் அது வேறு காலம். இது வேறுகாலம். என்னையும் என்போன்ற நூற்றுக்…
-
- 1 reply
- 810 views
-
-
1, அதிகார பரவலாக்கல் விடயத்திலும்; இந்தியாவின் பிடி எதிர்காலத்தில் இருகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று ஊகிக்க கூடியதாக இருக்கிறது. 2.அதிகார பரவலாக்கமானது ஒரு வகையில் இந்தியாவுக்கு இலங்கையை கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கிறது. 3. அதிகார பரவலாக்கல் தொடர்பாக இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறது. தேவையெனில் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க இந்தியாவுக்கு அதையும்பாவிக்க முடியும். முறையான அதிகார பரவலாக்கலை எந்தளவிற்கு தட்டிக்கழிக்கலாம்? அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஐ.நா. மனித எரிமை பேரவையில் நிரைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின்படி இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது இன்னமும் தெளிவில்…
-
- 1 reply
- 792 views
-
-
துறவி இராச்சியமாகும் இலங்கை மஹிந்த ராஜபக்ஷ பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார். மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது. இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 04 இல் இலங்கை நாடாளுமன்றில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறெனினும், கற்றுக் கொண்ட பாடங்களுக்க…
-
- 0 replies
- 794 views
-
-
தமிழினத் தலைவர் யார்; முதல்வர் ஜெயலலிதா வகுத்த அதிரடி வியூகம் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் "யார் தமிழின தலைவர்" என்ற போட்டி கடுமையாக நடக்கிறது. ஒவ்வொரு முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதும், "இது தமிழர்களுக்கு எதிரான ஆட்சி" என்று தி.மு.க. தலைவர் பிரசாரம் மேற்கொள்வார். இதை "தமிழுக்காக பணிகளை மேற்கொண்டது நான்தான்" என்று முதல்வர் பதவியில் இருக்கும் ஜெயலலிதா அறிவிப்பார். அதுவும் குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வரின் நடவடிக்கையில் அதிரடியான மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அத்தமிழருக்காக ஆதரவு கொடுக்கும் தமிழக அமைப்புகளே முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி போஸ்டர் போடுகின்றன. இந்நிலையில் இப்போது தமிழர்களின் புத்தாண்டு சித்திரையா? தை மாதமா?…
-
- 0 replies
- 637 views
-
-
இந்த அரசியல் குப்பையை கிளறித்தான் ஆகவேண்டுமா என்பது போலிருக்கும், சில சமயம் யார் எக்கேடு கெட்டு போனாலென்ன என்ரை அலுவலை மட்டும் பாத்துக்கொண்டிருப்பம். (இதுதான் என் மனைவி சொல்லும் வேதம்) கடைசி சொல்ல வருவதை ஒருவித நாகரீகத்துடன் சொல்லாம் என்பதும் போலிருக்கும், எதுவாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை அந்த நேரம் சொல்லாமல் விட்டு ,அதுவும் சொல்லப்படவேண்டிய பாணியில் சொல்லாமல் விட்டு காலம் கடந்தபின் சொல்லாமல் வீட்டு விட்டோமே என்று அங்கலாய்ப்பதில் எதுவித பயனுமில்லை. யாழில் பலர் என்னை விட வயதில் குறைந்தவர்கள் என்பதும், அதைவிட அரசியல் அனுபவத்தில் மிக மிக குறைந்தவர்கள் என்றும் எனக்கு தெரியும். நடைமுறையிலும் எந்தளவு செய்தார்கள்,யார் யாரை சந்தித்தார்கள், எவற்றை எல்லா…
-
- 30 replies
- 3.8k views
-
-
'மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் -1' இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை. இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேல…
-
- 0 replies
- 1.4k views
-
-
நந்திக் கடலோரம் .. ஒரு மீள்பயணம் - முல்லை சபா காலம் திரைகளை நிறம் மாற்றி விரிப்பதுண்டு. வரலாற்றிற்தான் எத்தனை விசித்திரங்கள்? கோடையிற் காய்ந்து மாரியிற் துளிர்க்கிற நந்திக்கடலில் இப்பொழுது மயான அமைதி. தன்னுடைய சனங்களை இழந்து போனேன் என்ற துயரத்தில் உறைந்து போன அமைதியா அது? அங்கே கடலில் விளையாடும் கறுத்த, மெலிந்து ஒடுங்கிய சிறுவர்கள் இல்லை. மாரியில் வலை படுக்கின்ற, கோடையில் கரப்புக் குத்துகிற அல்லது தூண்டில் போடுகிற மீனவர்களும் இல்லை. சீசனுக்கு வரும் கடற்பறவைகள் கூட இன்னும் வரவில்லை. உக்கிப் போன அல்லது உறைந்து போன கடந்த காலத்தின் எச்சங்களாகக் கரையோரங்களில் சிதைந்த சிறிய படகுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதைந்து கிடக்கின்றன. சாம்பல…
-
- 1 reply
- 976 views
-
-
அரசின் வியூகத்தை உடைத்த அமெரிக்கா (கே. சஞ்சயன்) ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு பிரிவான – போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல் விவகாரங்களைக் கையாளும் - குற்றவியல் நீதிப் பணியகமே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. குற்றவியல் நீதிப் பணியகத்துக்குப் பொறுப்பான ஸ்டீபன் ராப், கடந்த பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து, 2010 ஓகஸ்ட் 11ம் திகதி சமர்ப்பிக்கப்ப…
-
- 0 replies
- 706 views
-
-
தீர்வை முன்வையுங்கள் என்பதே கோரிக்கையாகும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதாக கூட்டமைப்பினர் கருதக் கூடும். வேறு வழியில்லை. இலங்கையின் இன விவகாரத்தில் சிங்களத் தரப்பு அடிக்கடி முருங்கை மரத்தில் ஏறிக் கொள்வது வழமையாகும். இந்த ஒரு பின்னணியில் ஒரு சரியான விடயத்திற்காகவும் நல்ல நோக்கத்திற்காகவும் நாம் ஏதோ ஒரு மரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும். அது வேறு ஒன்று அல்ல! தமிழ் மக்களின் தீர்வு விடயம் தொடர்பாகவே. ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்களுக்கான தீர்வை தமிழர் தரப்பும் முன்வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக இப்பத்தியில் கோரிக்கை விடுத்து வந்துள்ளோம். ஆனால் தமிழ் தலைமைத்துவங்கள் அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் அல்லது அரசாங்கத்…
-
- 2 replies
- 657 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா எடுத்திருந்தால், தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா தனது ஒத்துழைப்பை ஒருபோதும் வழங்காதிருந்திருக்கலாம். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்டு வெளியாகும் The Hindu ஆங்கில நாளிதழில் நிருபமா சுப்பரமணியன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா தனது கருத்தில் எடுத்துள்ள அதேவேளையில், 2009ல் ஜெனீவாவில் இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது சிறிலங்கா தான் பெற்றுக் கொண்ட வெற்றி மமதையில் செயற்பட்டதை மீளவும் திரும்பிப்…
-
- 0 replies
- 469 views
-
-
(சிறிலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கட்டுமானத் திட்டங்களையும் பொருண்மிய மேம்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பறை சாற்றுகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது பொருளாதாரம் இரண்டு முக்கிய தொழில்களில் தங்கியுள்ளது. ஒன்று விவசாயம். மற்றது மீன்பிடி. இதில் வடக்கில் மீன்பிடித் தொழில்பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. சுமித் சாமின்டா (Sumith Chaaminda) என்ற சிங்கள ஆய்வாளர் எழுதிய இக்கட்டுரை த அய்லாந்து நாளேட்டில் ஏப்பிரில் 02 ஆம் நாள் வெளிவந்தது. வட மாகாணத்தில் நலிந்து போயிருக்கும் மீன்பிடித் தொழில்பற்றி முடிந்தளவு பக்கசார்பில்லாது எழுதியுள்ளார். (தமிழழாக்கம் - நக்கீரன்.) யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தொழில்: யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தளவில் மீன்பிடி…
-
- 0 replies
- 556 views
-
-
ஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும் ஆக்கம்: வ.திருநாவுக்கரசு நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையே அரசாங்க உயர் பீடத்தினரின் சொல்லும் செயலும் நன்கு புலனாக்கி வருகின்றன. அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதம் எனப்படுவதைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பு தீர்ந்து விடக்கூடாதென்பதற்காக உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட மக்களைத் திசை திருப்புவதற்காக நான் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன். நான் அதனை அழித்துவிட்டேன். சில நாடுகள் எம்மீது அழுத்தம் கொடுப்பதற்கு முனைந்து வருகின்றனவாயினும் எமக்கு முழுமையான சர்வதேச ஆத…
-
- 0 replies
- 590 views
-
-
ஜெனிவாப் பிரகடனம் தமிழ் அரசியலுக்கு புதிய வழியைத் திறக்குமா? ஜெனிவாப் போரின் முதலாம் கட்டம் ஒருவாறு முடிவடைந்து விட்டது. அமெரிக்கா இவ்வளவு கரிசனையுடன் ஜெனிவாக் களத்தில் செயற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசுடன் தொடர்புடைய பெரிய தலைகள் எல்லாம் களத்தில் நின்றன. 100 வரையான இராஜதந்திரிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இறுதி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் ஹில்லறி கிளின்ரனே களத்தில் நின்றார். நிஜமான சீன- அமெரிக்க இராஜதந்திரப் போர் போலவே களம் தோற்றம் பெற்றது. ஆய்வாளர்கள் சீன- அமெரிக்கப் போரின் தொடக்கப் புள்ளி என இதனை வர்ணிக்கின்றனர். சீனாவின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்திருக்காவிட்டால் இலங்கை மேலும் தோற்றிருக்கும். 15 வாக்குகளை அது ஒருபோதும் பெற்றிருக்காது. ஆசிய…
-
- 1 reply
- 726 views
-
-
மண்டேலாவிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மூலம் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை தவிர்த்துக் கொண்டது என நாம் கடந்த வாரம் கூறினோம். அமெரிக்க பிரேரணை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள் நாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்விணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே அதற்கு காரணமாகும். ஆனால், அதனால் வெளிநாடுகளின் நெருக்குதல் இத்தோடு முடிவடைந்ததாக அர்த்தமாகாது. ஏனெனில் அந்தப் பிரேரணை இலங்கைக்கு சில பொறுப்புக்களையும் வழங்கியிருக்கிறது. இலங்கை அரசாங்…
-
- 0 replies
- 593 views
-