Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. [ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 08:39 GMT ] [ நித்தியபாரதி ] வியட்நாம் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய இரு நாடுகள் மீது யுத்தத்தை ஆரம்பிக்குமாறு கடந்த மாதம் சீன கம்யூனிசக் கட்சியால் வெளியிடப்படும் 'Global Times' ஊடகம் சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இவ்வாறு SiliconIndia என்னும் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட போட்டியானது தற்போது கடல் விவகாரத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அண்மைய சமீபத்திய குழப்பநிலையானது ஒரு எச்சரிக்கைக்கான சமிக்ஞையாக இர…

    • 6 replies
    • 1.6k views
  2. ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற்கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்பாடுகளின் வளர்ச்சிகள் மோதல் களாக வடிவெடுக்கின்றன. இந்த மோதல்கள் நிலவும் அடக்குமுறையின் பரிணாமத்துக்கு ஏற்ப அரசியல் ரீதியானதாகவோ ஆயுத வடிவிலான தாகவோ அமைகின்றன. பெரும் அழிவு களை விதைக்கும் போர்கள் கூட இவ்வாறுதான் கருக்கட்டுகின்றன. ஒரு நாடோ, இனமோ அல்லது ஒரு வர்க்கமோ இன்னொரு நாட்டின் மீதோ இனத்தின் மீதோ அல்லது வரக்கத்தின் மீதோ அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து உரிமைப் பறிப்புக்களை மேற் கொள்ளும் போது தவிர்க்க முடியாதபடி முரண்பாடுகள் உருவாகின்றன. இந்த முரண்ப…

  3. மீண்டும் ரஷ்யா vs. மேற்கு ஆனால் இந்த முறை வேறு ஒரு தளத்தில். ரஷ்ய நாட்டு உளவுப் படை மிகத் தேர்ந்த உளவியல் நுட்பங்களை கொண்டு ரஷ்யாவில் பணிபுரியும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை முடக்கத் துவங்கியுள்ளது. தொடர்ச்சியான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள், தங்கள் பணிகளை திறம்பட செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எப்படியெல்லாம் இது செய்யப்படுகிறது? உதாரணத்திற்கு இந்த அதிகாரிகளின் மனைவிகளுக்கு தொடர்ச்சியாக கலவி பொம்மைகளை அனுப்புவது. யார் எங்கிருந்து அனுப்புகிறார் என்ற விவரம் தெரியாமல், இதை எப்படி தவிர்ப்பதென்றும் புரியாமல் இந்த அதிகாரிகள் திண்டாடுகின்றனர். இத்தகைய உளவியல் சிக்கல்களால் பலர் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. மேற்கொண்டு அறிய இந்தக் கட…

    • 5 replies
    • 1.2k views
  4. (திரு.எம்.சி.எம் இக்பால் ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் 2009 ஜூலையில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம் ) 1. அறிமுகம். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் போருக்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்கு ஒரு தீர்வு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை அரசு நிறைவேறற்றும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அண்மையில் ஜனாதிபதி இந்து செய்தி நாள் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறான தீர்வு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் முன்வைக்கப்படும் என்ற கூற்று எதிர்பார்த்து இருந்தவர்களை ஏமாற்றிவிட்டது. இந்தக் கூற்றை அடுத்த கையோடு எனுமாப்போல் விரைவில் ஒரு தீர்வை முன்வைக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக இலங்கையின் இந்தியத…

  5. தமிழ் மக்களது நியாயமான அரசியல் அபிலாசைகளை நிராகரித்த சிங்கள அரசின் பக்கம் நின்று, ஈழத் தமிழர்கள்மீது இன அழிப்பை நிகழ்த்தியதன் தார்மீகப் பொறுப்பிலிருந்து சர்வதேச சமூகம் விடுபட முடியாமல் தவிக்கின்றது. ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான போரை நிகழ்த்திய சிங்கள அரசைத் தடுத்து நிறுத்தாத குற்றத்திற்குப் பரிகாரம் காணும் நோக்கில் உலக நாடுகள் பலவும் சிங்கள அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. இருந்தபோதும், எல்லாவற்றையும் இழந்தேனும், இலங்கைத் தீவை சிங்கள தேசமாக்கும் மகாவம்சக் கனவின் பாதையிலேயே பயணிப்பதையே சிங்கள ஆட்சியாளர்கள் குறியாகக் கொண்டுள்ளார்கள். இறுதிப் போரின் பின்னரான தமிழீழ மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி, தமிழ்ப் பிரதேசங்களினுள் வியாபித்து, அங்கு நிலையாகக் கால்…

  6. சர்வதேச அரங்கிலும் உள்நாட்டு மீடியாக்களிலும் அதிகம் பேசப்படாத தொடர்ச்சியான உள்நாட்டுப் போர் இந்திய நாட்டில் நடக்கிறது. நக்சலைற்றுகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் இடதுசாரிகள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரை நடத்துகின்றனர். மேற்கு வங்காள நக்சல்பாரி கிராமத்தில் நடந்த கிளர்ச்சி காரணமாக நக்சல், நக்சலைற், நக்சல்வாதி என்ற பெயருடன் நிலமற்றோர், சாதிக் கொடுமைக்கு ஆளானோர், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறையால் பாதிக்கப்பட்டோர், வேலையற்றோர் போன்றவர்களின் கூட்டு நடவடிக்கையாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. நக்சல்பாரி கிராமத்தில் 1967ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்னும் ஒயவில்லை. ஏனென்றால் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்கள் களையப்படவில்லை. அவை கூடுகின்றன ஒழியக் குறையவில்லை. இந…

  7. முள்ளிவாய்காலில் ஈழத்தமிழினம் பேரழிவைச் சந்தித்தன் பின்னர், தமிழினத்தின் இருப்பையும் வாழ்வையும் உறுதிப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதனைதான் தமிழரல்லாத கல்விமான்களும், அரசியல் தலைமைகளும், ஏன் தேர்ந்த தமிழர் தேசிய செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அரசியல் பார்வையாளர்கள் என்ற நிலையில் இருந்து பங்காளிகள், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற நிலையை அடைதல். தாயகத்தில் தேர்தல் களங்களில் இருந்து தம்மை விளக்கிக் கொண்டவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இனக்குழுமமாக தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை. அதனுடன் சேர்த்து பொருளாதாரத்…

  8. (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை) ============== இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம் ============== அறிமுகம் 1. இலங்கையில் நடந்த போர், சச்சரவுகளுக்கு நடுவில் கொடும் துயரத்தில் முடிவடைந்தது. கொடூரங்களுக்குப் பெயர்போன தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 27 ஆண்டு சண்டை முடிவுக்கு வந்ததில் இலங்கை மக்களும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களும் நிம்மதி அடைந்தார்கள். ஆனால், நாட்டின் ஆயுதப்படைகள் இந்த வெற்றியை அடையப் பயன்படுத்திய முறைகளைப் …

  9. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம். சமகாலத்திற்குப் பொருத்தமான பலஸ்தீன போராட்ட அமைப்புகளான பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] இயக்கங்களுக்கிடையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை, அதனுடைய தாக்கம் போன்றவை ஈழத்தமிழர்களுக்கு சொல்லும் பாடம் என்னவென்பதை இம்முறை பத்தியிலே அலசுவோம். தேசிய விடுதலைக்காக போராடும் இனங்களின் ஆயுதங்களும், களங்களும், அந்த இனங்களின் விடுதலைக்காக போராடும் போராட்ட அமைப்புக்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. காலப்போக்கில் இதில் ஒரு மாற்றம் வரலாம், ஆனால், ஆரம்பக் கட்டம் அடக்குமுறையாளர்களாலேயே இது நிர்ப்பந்திக்கப்படுகிறது. இந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பதாக போராட்டங்கள் உருவாகும் போது பிளவுகள…

  10. அமெரிக்காவுடன் அரசாங்கம் இறங்கிப் போக்க் காரணம் என்ன? அரசாங்கம் இந்தளவுக்கு இறங்கிப் போவதற்கு, அமெரிக்காவைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படப் போகும் விவாதம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் தமக்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொள்கின்றது.ஆனாலும் அமெரிக்காவின் செல்வாக்கை அரசாங்கம் அறியாதிருக்க முடியாது. இன்னொரு விடயம், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க இந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்கா பயணமாகவுள்ள ஜனாதிபதி, 23ம் திகதி பொதுச்சபையில் உரையாற்றுவார். இந்தக் கூட்டத்…

  11. செங்கொடி - உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்! (முன் குறிப்பு: இது சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தமிழின உணர்வாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. மேலும் எல்லோரும் தீக்குளித்து இறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதல்ல.) மற்றுமொரு நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு தீக்குளிப்பு நடந்துள்ளது. தீக்குளித்தவர் தியாகி ஆகிவிட்டார். 21 வயதே ஆன அவரின் பெயர் தோழர் செங்கொடி. (தோழர் என்று தான் அவர் தன்னை குறிப்பிட்டிருக்கின்றார்). இருந்தாலும் பலருக்கு மகளாகவும், இளைஞர்களுக்கு தங்கையாகவும் ஆகிவிட்டார். இந்த தீக்குளிப்பிற்குப் பின் யார் யார் துரோகம் செய்தார்கள் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. இன்னொருபுறம் தீக்குளிப்பு சரியா? தவறா? என்ற …

  12. இனப்பிரச்சனைக்கான அரசியற் களம்: மாறுபட்ட அணுகுமுறைகளுக்கான தேவை குறித்து... ஈழத் தமிழர்களின் அரசியல் வழிமுறைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவர்களுடைய அரசியற் சிந்தனைகள், அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல் நம்பிக்கைகள் போன்றவற்றைப் பற்றிய ஆய்வுகளுக்கு இன்று மிக அவசியமான ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இதைப் பார்ப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்கும் கடந்தகால இலங்கைத் தமிழர்களின் அரசியல் வழிமுறைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவர்களுடைய அரசியற் சிந்தனைகள், அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல் நம்பிக்கைகள், இவற்றிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியற் செயற்பாடுகள் போன்றவற்றைப் பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் எல்லாம் இன்று அவசியமாக உள்ளன. இதற்கு, கடந்த க…

  13. பிரசுரித்தவர்: admin September 7, 2011 “…………………………………தம்மைப் பொறியில் சிக்கவைக்க மேற்குலகம் முனைகிறது என்பது அரசுக்கு வெளிச்சமாகி விட்டது. இந்தநிலையில் தான், சீனா, ரஸ்யாவின் துணையுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா- நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்குப் பறக்கிறார். அதுமட்டுமன்றி வழக்கத்தை விட வலுவானதொரு அணியை ஜெனிவாவுக்கு இந்த முறை அனுப்பப் போகிறது அரசாங்கம். இதற்கு முன்னர் அதிகாரிகளை நம்பிக் களமிறங்கிய அரசாங்கம், இந்த முறை அமைச்சர்களையே முற்றுமுழுதாக களமிறக்கத் தீர்மா…

  14. யுத்தத்தில் இருந்து மூன்று தசாப்த காலம் எங்கட தமிழ்ச் சனம் ஆமிக்காரனிட்டை வாங்கின அடி இன்னும் குறைவில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்குது பாருங்கோ.ஆமிக்காரனும் தமிழ் மக்களை அடக்கி ஆளவேண்டும் என்று நினைக்கிறான். அதுவும் முடியாமல் போகத்தான் எங்கட சனத்துக்கு உந்த அடி அடிக்கிறான். இதை யார் கேட்க முடியும். தமிழ் மக்களுக்கு ஓர் அரசு இல்லாத போது மாற்றான் அரசான சிங்கள அரசால் என்றைக்குமே தமிழ் மக்களுக்குப் பிரச்சினைதான். அதுதான் இப்பொழுது கிளம்பி இருக்கும் கிறீஸ் பூதம் பாருங்கோ. வடக்கு, கிழக்கு பரந்து எல்லா இடமும் கிறீஸ் பூத விவகாரம் தொடர்ந்த வண்ணம் இருக்குது கிறீஸ்பூதம் ஆமிப் பூதந்தான் என்று நேரடியாகக் கண்ட சனம் சொல்லுது.அப்படியென்றால் தங்குதடையின்றி தாராளமாக நடக்கும் தானே.…

  15. [ செவ்வாய்க்கிழமை, 23 ஓகஸ்ட் 2011, 07:43 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளாதவிடத்து அனைத்துலக விசாரணைக்கான ஆதரவு என்பது மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என அவதானிப்பாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு IPS இணையத்தளத்தில் Amantha Perera எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009 இல் சிறிலங்கா இராணுவத்தால் தமிழ்ப் பிரிவினைவாதிகள் தோற்கடிக்கப்பட்ட போது இடம்பெற்ற பல்வேறு யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றிற்கு சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டும் என…

  16. காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம். துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்த…

  17. கடந்த சில நாட்களாக இங்கு இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை உற்று நோக்கும் போது,சில மர்மங்கள் நெருடலை ஏற்படுத்துகிறது. 1 )இந்தியாவில் மிக முக்கிய அரசியல் பிரச்சனை நடக்கும்போது அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளாராம் சோனியா.இத்தனைக்கும் உலகத்தரத்தில் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் . 2 ) நாடே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை பற்றி ஒரு அறிக்கை கூட வெளிடாத மர்மம். 3 ) இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெறவிருந்த சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் மீதான விவாதமானது,சிறிலங்காவில் போருக்குப்பின்னால் இந்தியா செய்த உதவிகள் தொடர்பாக என்று மாற்றப்பட்டதும் ஒரு மர்…

    • 4 replies
    • 1.1k views
  18. புலம் பெயர்ந்த மனிதர்களின் பொறுப்பு என்ன? – ஒரு முன்மொழிவு! மீராபாரதி புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்களே……. இன்றைய புலத்தின் அதாவது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் நிலைமை என்ன? அந்த மண்ணில் சகல இடங்களிலும் சிறிலங்கா இராணுவத்தின் பிரசன்னம். தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடமும் அதன் இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கின்ற மனிதர்களின் கையறுநிலை. தமது வாழ்வுரிமைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கமுடியாத, போராட முடியாத இராணுவ மயப்பட்ட சூழல். ஜனநாயகமின்மை நிலவுகின்ற அதிகாரமயப்பட்ட சூழல். இவ்வாறான பயம் நிறைந்த சூழலில் வாழ்கின்ற குழந்தைகள் மற்றும…

  19. அல்ஜசீரா இலங்கையில் தமிழர்களின் கலை கலாசராம், அவற்றின் இன்றைய சீர்கேடுகள், அவற்றுக்கான காரணங்கள் பற்றிய ஒரு காணொளி ஒன்றை இலங்கையின் விதவைகள் எனும் பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருந்தது. அதில், கணவன்மார்களை சிறையில் சென்று பார்க்கும் பெண்கள் தொடர்பாக அவர்களில் ஒருவரிடம் கேட்டறிந்தது அல்ஜசீரா. அதில் அப்பெண் தனது கணவனை சிறையில் பார்க்க செல்லும் போது, “உனது கணவருடன் கதைக்க வேண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும்” என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் அப்பெண் கூறியுள்ளார். இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்ற…

  20. ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு தீபச்செல்வன் - 20 AUGUST, 2011 அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரை பௌத்த சங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. யுத்தம் காரணமாக வீடழிந்த மக்கள் தமது காணிகளில் புத்த விகாரைகளை அமைக்க இடமளித்தால் அவர்களுக்கு மிக வசதியாக ஆறு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துத் தருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாக விகாரையும் ராணுவத்தினரும் இதன் அனுசரணையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக நொந்து நலிந்து வீடற்று அழிவின் வெளியில் தவிக்கும் ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. புத்தர் சிலைகளைப் பரவலாக நட்டு பௌத்தத்தைப் பரப்பும் இந்த நடவடிக்கை எத்த…

  21. தமிழர் பிரதேசங்களில் சிங்களக் கடைகள் பல புதிதாகஉருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றிற்கு 5000 வரையான சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தைப் பார்வையிடச் செல்வதை நாம் எமது கண்களால் காணமுடியும். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணையத்தளத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் தொடராக எழுதிவரும் 'சிறிலங்காவின் உள்ளே' என்னும் பத்தியில் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ்மக்கள் சுபீட்சமாக வாழ்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழ் மக்களால் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வளர்க்கப்பட்ட உள்ளுர் பொருளாதாரத்தை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு சிதைத்துவருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள பொருளாதார வளமானது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், இப்பிரதேசங்களில் தற்போது சிங்கள வர்த்தகர்…

  22. வடக்கு கிழக்கு விவகாரத்தை உலக நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லலாம் - ச. வி. கிருபாகரன் Posted by: on Aug 20, 2011 இலங்கை தீவின் சுதந்திரத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஏற்க தவறிய காரணத்தினால், தமிழ் மக்கள் 35 வருடகாலமாக ஓர் அகிம்சை போராட்டத்தை நாடத்த வேண்டி ஏற்பட்டது. இப் போராட்டத்தை சிறிலங்காவின் பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக வன்முறை மூலமாக நசுக்கிய காரணத்தினால் அது ஓர் ஆயுதப் போராட்டமாக வெடித்து, தற்பொழுது தமிழிழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் ஓர் மரபு முறை யுத்தமாக மாறியுள்ளது. இலங்கை தீவின் அரசியல் யாதார்த்த நிலைகளை ஓருவர் எந்தவித பாரபட்சம் அற்ற நிலையில் ஆராய்வாரேயானால்,…

  23. ராஜீவ் காந்தி என்றால் என்ன பெரிய பருப்பா. ஈழத்தில் யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் என்பது.. மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று. புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல் நடத்தியதை ஐநா மூவர் குழு மோசமான போர்க்குற்றமாக இனங்காட்டி இருக்கிறது (2011 ஐநா அறிக்கையின் பிரகாரம்). 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகள் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை எந்த முகாந்தரமும் இன்றி படுகொலை செய்ததானது மிக மோசமான போர்க்குற்றம். அது மட்டுமல்ல.. இது போன்ற நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி என்ற போர்க்குற்றவாளி பொறுப்பு. அவை தொடர்பில் எந்த சர்வதேசமும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை…

  24. ஈழமக்களை நம்பவைத்து ஏமாற்றிய புலித்தலைவர் என்கிற ஓர் பதிவு அண்மையில் தமிழ்மணத்தில் கண்ணில் பட்டது. இலங்கைப்பதிவர் நிருபனால் எழுதப்பட்டது. சரி, இப்படி ஈழம் தொடர்பாக எத்தனையோ எழுத்துகளை, மாற்றுக்கருத்துக்களைத் தான் அடிக்கடி படிக்கிறோமே என்று விட்டுத்தள்ளிவிட்டுப் போகலாம் என்று தான் நினைத்தேன். ஏனோ மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஈழம் பற்றி பதிவுலகம் முதல் அல்ஜசீரா, அமெரிக்க சி.என்.என்., பி.பி.சி. வரை தொடங்கி உலகின் முன்னணிப் பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதென்பது தமிழனின் தலையெழுத்து என்று ஆகிவிட்டது. படிப்பதோடு நிற்பதில்லை. எந்தவொரு ஊடகமானாலும் ஈழம் என்று வந்தால் ஜனநாயக கருத்து சுதந்திரத்தை இந்த விடயத்தில் கடைப்பிடிக்கவும் தவறுவதில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக எழுத…

  25. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தைப் பற்றி பல நினைவுரைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இனமதபேதமற்ற முறையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல வெளிவந்துள்ளன. வெளிவராத சிலவற்றை அவரின் இன்றைய 73 ஆவது பிறந்த தினத்தில் வெளிப்படுத்துவது எமது நன்றிக்கடனாகும். தலைநகரில் அடக்கப்பட்ட ஒரு தமிழ்க்குரல் (ஜனவரி 14 2000) தலைநகரில் தமிழர்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த ஒரு தன்மானத் தமிழனின் உயிர் சதிசெய்து பறிக்கப்பட்டது. சர்வதேசம் எங்கும் அடிக்கடி பறந்து சிங்கள அரசின் தமிழர் படுகொலைகளையும் இனப்படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் அம்பலப்படுத்தி வந்த ஒரு தேசப் பற்றாளன் சதிகாரர்களால் அழிக்கப்பட்டுவிட்டான். இந்தப் படுகொலையானது கொழும்புத் தலைநகரில் தமிழருக்காக ஆதரவுக்குரல் எழுப்பக் கூடாது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.