அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
மஞ்சள் ஆபத்தும் மஞ்சள் விலை கூடிய ஒரு குட்டித் தீவும் – நிலாந்தன்… November 1, 2020 யார் இந்து சமுத்திரத்தில் கடல்சார் மேலாண்மையை அடைகிறாரோ அவரே அனைத்துலக அரங்கில் முதன்மையான பாத்திரத்தை வகிப்பார்.யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துகிறாரோ அவர் ஆசியாவின் மீது ஆதிக்கத்தைக் கொண்டிருப்பார். இருபத்தியோராம் நூற்றாண்டில் எழு கடல்களுக்குமான திறப்பு இந்து சமுத்திரமே. இந்த எழு கடல்களுமே உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும். அட்மிரல் அல்பிரட் தயர் மகான்- Admiral Alfred Thayer Mahan “சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்காக நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம்.” ஜனாதிபதியின் அலுவவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் பொம்பியோ எழுத…
-
- 0 replies
- 441 views
-
-
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட, இருவருமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரே மேடையில் பேசுவதை தவிர்த்தே வந்தனர், இந்த நிலைமையானது இருவருக்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுடன் அதனையே நம்புமாறும் நிர்பந்தித்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் இலங்கை தமிழரசு கட்சியால் தருணம் சரியல்ல, என்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வில் விக்னேஸ்வரன் பங்குகொண்ட…
-
- 0 replies
- 390 views
-
-
தமிழர் அரசியல் - அமெரிக்க இந்திய காய்நகர்த்தல்களுக்கு இடையில் - யதீந்திரா கடந்த பத்தியில் ஜெனிவை முன்னிலைப்படுத்தி இடம்பெற்றுவரும் சில விடயங்களை அவதானித்திருந்தோம். இப்பத்தியில் மேலும் சில விடயங்களை உற்று நோக்குவோம். சமீபத்தில் ஒரு நண்பர் சற்று வித்தியாசமான அபிப்பிராயம் ஒன்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அது சற்று வித்தியாசமான பார்வையாக இருந்தது. அது எந்தளவிற்கு இன்றைய சூழலில் பொருத்தமாக அமையும் என்பதற்கு அப்பால், இன்றைய சூழலில் எந்தவொரு கருத்தையும் உடனடியாக நிராகரித்துவிட முடியாதவொரு சூழல் நிலவுகிறது என்னும் யதார்த்தத்தையும் நிராகரிக்க முடியவில்லை. அமெரிக்கா, ஜெனிவாவில் மேற்கொண்டுவரும் நகர்வுகள் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானதல்ல, அது இந்திய அரசுக்கு எதி…
-
- 0 replies
- 623 views
-
-
அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான ஒதுக்கீட்டில் இலங்கைக்கான நிதி உதவி பொருளாதாரம் சார்ந்த விடயங்களிலானது, சர்வதேச இராணுவ உதவித் திட்டத்தின் கீழானது என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நிதி உதவிகளை வழக்கம் போலக் கண்ணை மூடிக் கொண்டு இலங்கைக்கு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம் தயாராக இல்லை. http://cdn.virakesari.lk/uploads/medium/file/142379/ddddd.jpg 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசின் செலவினங்களுக்காக, 2.3 ட்ரில்லியன் டொலர் கள் நிதியை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தில் கையெழுத்திட மறுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் அதில் கையெழுத்திட்டுள்ளார். கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில், இலங்கை உள்ளிட்ட ந…
-
- 0 replies
- 551 views
-
-
முதல்வர் கனவோடுதான் கட்சியை தொடங்கினேன் - சீமான் பேட்டி! [Tuesday, 2013-05-07 20:58:12] ஈழம் தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து வேகமாக இயங்கி வரும் தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவர் சீமான். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்துத் திரும்பியவரை புதிய தரிசனத்திற்காகச் சந்தித்தோம். ஆவேசம், சிரிப்பு, கோபம் என்று பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்ட அவரின் பதில்கள் உங்கள் பார்வைக்கு.. சமீப காலமாக முதலமைச்சர் பதவியைக் குறிவைத்தே உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் இருக்கின்றதே. முதலமைச்சர் கனவோடுதான் கட்சியைத் தொடங்கினீர்களா ? நிச்சயமாக..அதில் என்ன சந்தேகம்.. 'அனைத்துத் துன்பப் பூட்டுகளுக்கான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே� என்று புரட்சியாளர…
-
- 24 replies
- 3.3k views
-
-
TNA பகிரங்க கோரிக்கை:- யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது. இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் சார்பில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம், பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். கூட்டமைப்பில் அமைய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும்; சுகாதாரத்துறை மேம்பாடென பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பின்னணியில் எல்லாம் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் இருந்ததாக நாம் சந்தேகிக்கின்றோம். ஏனெனில் அவர் தன்னை அமைச்சர் டக்ளஸினது தம்பியென கூறி கட…
-
- 0 replies
- 559 views
-
-
அதிகரிக்கும் நெருக்கடி பொதுமக்களுடைய காணிகளை உள்ளடக்கிய கேப்பாப்புலவு கிராமத்தையும், அதனைச் சூழ்ந்த பிரதேசத்தையும் அடாத்தாகக் கைப்பற்றி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறுவதற்கு கால அவகாசம், பெருந்தொகை நிதி என்பன தேவை என நிபந்தனைகள் விதிப்பது வேடிக்கையாக இருக்கின்றது. நாட்டில் யுத்த மோதல்கள் கிடையாது. தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியான நிலைமைகள் இருக்கின்றன. நெருக்கடியான சூழல் நிலவுகின்றது என்றும் சொல்வதற்கில்லை. இந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வருடந்தோறும் தேசிய பாதுகாப்புக்காக அதிக அளவிலான நிதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படுகின்றது.…
-
- 0 replies
- 243 views
-
-
வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை விடவும், வர்ணப் புகைப்படமொன்று அழகாகவும் இரசனைக்குரியதாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கின்றோம்? நிறங்களின் பன்மைத்துவம்தான் அந்த அழகுக்குக் காரணமாகும். உலகில் வாழும் எல்லோரும் ஒரே முகச்சாயலுடையவர்களாக இருப்பார்களாயின் வாழ்க்கை எப்போதோ, அலுத்துப் போயிருக்கும். அழகு மற்றும் இரசனையின் அடிப்படையாக பன்மைத்துவம் உள்ளது. தனித்த இனமொன்று வாழும் நாட்டை விடவும், பல இனங்கள் வாழும் நாடு இரசனைக்குரியதாகும். ஒவ்வொரு சமூகத்தினதும் மாறுபட்ட இலக்கியம், கலை, கலாசாரம், விழுமியங்கள் மற்றும் மத நம்பிக்கை…
-
- 0 replies
- 419 views
-
-
எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி லக்ஸ்மன் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சம அந்தஸ்தான வாழ்க்கை என்பது, எட்டாக்கனி என்பது நிரந்தரமானதன் பின்னும், ஏன் தமிழ் மக்கள் கிடைக்காத ஒன்றுக்காகப் பிரயத்தனப்படுகிறார்கள் என்றே, நம் போராட்ட வரலாறு தெரிந்தோர் கேள்வி எழுப்புவர். ஐக்கிய நாடுகளின் அமர்வுகள் வருகையில், காலங்காலமாக இலங்கையின் வடக்கு- கிழக்கு தமிழர்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் முடிவுக்கு வந்தவிடும் என்றே ஒவ்வொரு வருடத்திலும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்ற காலங்களைவிடவும் அதிக கைதுகள், அதிக நெருக்குதல்கள் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்…
-
- 0 replies
- 603 views
-
-
சம்பந்தனின் நகர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த புதன்கிழமை மாலை கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. இரண்டு மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் இருதரப்பினருமே இரகசியத்தை பேணி இருந்தபோதிலும் அந்த தகவல் வெளியில் கசிந்ததையடுத்து சந்திப்பு தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சந்திப்பின்போது புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று தான் க…
-
- 0 replies
- 317 views
-
-
மாறாத ஆட்சியாளர்களும் சிந்திக்க வேண்டிய தமிழர்களும்
-
- 0 replies
- 816 views
-
-
கமால் குணரத்னவின் எச்சரிக்கை - புதிய சவால் புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைப் பிளவுபடுத்த முனைகிறவர்கள் தேசத்துரோகிகளே என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும், கடந்த சனிக்கிழமை (21) கம்பஹாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முன்னாள் இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்ட கருத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், அவருக்கு முன்பாகவே, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். “தேசத்துரோகிகளுக்கு 1987-89 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் மரணதண்டனை அளிக்கப்பட்டது. அவர்கள…
-
- 0 replies
- 316 views
-
-
தனி நாடாக தமிழீழம் - பார்த்தீபன்:- 27 மே 2014 ஈழமும் சிங்கள தேசமும் வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் இரண்டு நாடுகளாகவே இருக்கின்றன. அந்நியர்களால் ஒன்றிணைக்கப்பட்ட இந்த தேசங்கள் இன்னமும் தனித் தனித் தேசமாகவே காணப்படுகின்றன என்பதை அண்மையில் நடந்த நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன. இந்த இரு தேசங்களும் நிலத்தாலும் நிலத்தின் குணத்தாலும் இனத்தாலும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. வடக்கில் பனைகளும் தெற்கில் தென்னைகளும் மாத்திரம் இந்தப் பிரிவை உணர்த்தவில்லை. இந்த நாட்டின் மக்களின் உணர்வுகளும் இரண்டாகவே பிரிந்திருக்கின்றன. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதுதான் இந்த தீவின் அறுபதாண்டுகாலப் பிரச்சினை. ஸ்ரீலங்காவில் நாங்கள் இரண்டாம் தரப…
-
- 0 replies
- 746 views
-
-
திருவுளச்சீட்டு இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், அதற்குப் பின்னரான ஆட்சியமைப்பும் ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்திருக்கின்றது. ‘வென்று விட்டோம்’ என்று பட்டாசு கொழுத்தியவர்கள், ஆட்சியமைப்பதில் தோற்றுவிடுகின்ற நிலையையும் வட்டாரங்களின் அடிப்படையில் தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆட்சியை நிறுவுகின்ற விநோதத்தையும் இந்தப் புதிய தேர்தல் முறைமையின் ஊடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். பல பிரதேசங்களில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை. கூட்டாக ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தைகளும் வெற்…
-
- 0 replies
- 355 views
-
-
இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதைக் கூற முடியும்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா. சமீபத்தில் இவர் எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. மின்ன…
-
- 0 replies
- 938 views
-
-
ஜெனிவாவில் எதிரொலித்த முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்..!
-
- 0 replies
- 807 views
-
-
இலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்? பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை நம்பி ராஜபக்ச குடும்பம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே மு…
-
- 0 replies
- 753 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களை கவனத்தில் கொள்ளுங்கள் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவுமில்லை. நிவாரணங்கள் சரியான முறையில் அந்த மக்களை சென்றடையவுமில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருப்பதுடன் நீதிக்காக தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது முக்கியத்துவமற்றது என யாரும் கருதிவிடக் கூடாது நாட்டின் தற்போதைய நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து…
-
- 0 replies
- 453 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்:தமிழ்மக்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பார்களா? - நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக கணித விஞ்ஞானப் பிரிவுகளைச் சேர்ந்த கல்வி நிலையங்களுக்கு என்னென்ன பெயர்கள் என்று பார்த்தால், விஞ்ஞான மண்டபம்; விஞ்ஞான உலகம்; விஞ்ஞான சமுத்திரம்; விஞ்ஞான நீரோட்டம். விஞ்ஞான மூலை, இணைந்த கணிதத்தில் வெற்றி, மிஸ்டர் பிஸிக்ஸ்,……இப்படியே நீண்டு கொண்டு போகும். இப்பெயர்கள் யாவும் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்கள் தொடர்பான ஒரு சமூகத்தின் அபிப்பிராயங்களைக் காட்டுபவை. இந்நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் முன்னணி தனியார் பாடசாலைகள் சிலவற்றில் கணித அல்லது விஞ்ஞானப் பட்டதாரி ஒருவர்தான் அதிபராகவும் இரு…
-
- 0 replies
- 252 views
-
-
பல தசாப்தங்களாக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தசாப்தங்களாகவே திட்டமிட்டு இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்றங்கள், இத்தனை தசாப்தங்களான பரிணாம வளர்ச்சி பெற்று தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைத்துள்ளதாக பேரவையின் இணைத் தலைவர் வி.நவனீதன் வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தா…
-
- 3 replies
- 547 views
-
-
பாதுகாப்புப் படைத்தரப்பைச் சேர்ந்தவர்களிள் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரம் உச்ச நிலையைத் தொட்டிருக்கின்றது. இதனைத் தெளிவாகக் கோடிட்டு காட்டுவதாக இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவாகி இருப்பது ஒரு விடயம். லெப்டினன் ஜெனரல் பதவி உயர்த்தப்பட்டு, சவேந்திர சில்வா நாட்டின் இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றிருப்பது இரண்டாவது விடயம். இருவருமே பாதுகாப்புப் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள். ஒருவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர். மற்றவர் இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் பதவி அந்தஸ்து பணியில் இருந்த…
-
- 0 replies
- 538 views
-
-
யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்? உள்ளக ஆக்கிரமிப்பைத் தடுக்க யார் உளர்? தயாளன் கடந்த 30 ஆம் திகதி மாற்றம் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் 'நிலமும் நாங்களும்' எனும் தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு முதல்வரும் கலந்து கொண்டிருந்தார். மீள்குடியேற்றத்துக்கு தடையாகவுள்ள விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் பிரித்தானிய மனித உரிமைகள் குழு 'ஐயமின்றி எம்மால் ஒன்று கூறமுடியும். அரசாங்கமானது தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் குடியிருத்த முனைந்துள்ளது' எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாக முதல்வர் கூறினார். அத்துடன் '1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகாரப் பரவலாக்கலா, அபிவிருத்தியா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:19 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நவம்பர் 18ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்து, 24 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர், அழைப்பின்றியும் ஒரு நாளுக்கு முன்னராவது அறிவிக்காமலும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதேபோல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக, நவம்பர் 29 ஆம் திகதி, இந்தியாவுக்கு விஜயம் செய்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நாடு திரும்பினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம…
-
- 0 replies
- 810 views
-
-
பாகிஸ்தானின் சமாதான முயற்சிகள் - ஜனகன் முத்துக்குமார் பிராந்திய, உலக சமாதானத்துக்கான பாகிஸ்தானின் நகர்வுகள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் அங்கிகாரம் பெறுகின்றது. மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கூட பாகிஸ்தானின் சமாதான முயற்சிகள் பாராட்டப்படுகின்றன. உண்மையில், பாகிஸ்தான் நான்கு தசாப்தங்களாக ஆப்கானிஸ்ஹான் போருக்கு பலியாகி, பெரும் பொருளாதார, அரசியல், சமூக இழப்புகளை சந்தித்தது. அது தொடர்பில் பாகிஸ்தான் தனது கசப்பான அனுபவங்களைப் பகர்ந்து கொள்ளத் தயாராக உள்ளதுடன் உலகளவில் அமைதியை மேம்படுத்துவதற்கு தன்னால் முட…
-
- 0 replies
- 386 views
-
-
ஆப்பை இழுக்குமா ‘குரங்கு’? -றம்ஸி குத்தூஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “புதிய கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன்” என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொழும்புக்கு அழைத்து, மாபெரும் கூட்டமொன்றை, நேற்று முன்தினம் (26) கூட்டி, அவர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார். சஜித் பிரேமதாஸ, இங்கு உரையாற்றுகையில், “கடந்த தேர்தலின்போது, சிறிகொத்தா தலைமையகம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டிருந்தது” என்று வௌிப்படையாகக் குற்றம் சுமத்தினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சில அங்கத்தவர்களுடன் இணைந்து, தனக்கெதிராகச் செயற்பட்…
-
- 0 replies
- 580 views
-