Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம் – அகிலன் 6 Views இலங்கையின், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததும், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதுமான கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடக்க, மக்களின் கவனம் அந்த அச்சத்தில் இருக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை ராஜபக்‌ச அரசாங்கம் இலகுவாக முன்னகர்த்தி விட்டது. கொரோனா அச்சம் இதற்காகவே இந்தக் காலப் ப…

  2. வஞ்சிக்கப்படும் தமிழ்மொழி என்.கே. அஷோக்பரன் கொழும்புத் துறைமுக நகரில், காட்சிப்படுத்த -ப்பட்டிருக்கும் ஒரு பெயர்ப்பலகையின் படம், கடந்த நாள்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெயர்ப்பலகையில் சிங்களம், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் மட்டும் எழுதப்பட்டிருந்தது. தமிழ் வழமை போல, வஞ்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில், சமூக ஊடகங்களில் ஏற்பட்ட கண்டனங்களைத் தொடர்ந்து, ‘சப்பைக்கட்டு’ அறிக்கையொன்றை, கொழும்புத் துறைமுக நகரை அபிவிருத்தி செய்யும் சீன நிறுவனம் வௌியிட்டிருந்தது. இது நடந்த சில நாள்களின் பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இலத்திரனியில் நூலகம் ஒன்று, சீனாவின் உதவியுடன் உருவாக்கப…

    • 0 replies
    • 735 views
  3. ஓராண்டுக்கு முன்னர் சரிந்த ஓர் ஆலமரம் ‘ஒருமுகமல்ல, இருமுகமல்ல ஆறுமுகம்; ஓர் ஆலமரம் சாய்ந்ததே, அதன் ஆயுளிலே வீழ்ந்ததே’ என்ற வரிகள் இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர், மலையகமெங்கும் ஒலிக்க விடப்பட்டு, மக்களின் கண்களில் கண்ணீரைக் குளமாய் கட்டியிருந்தது. தங்களுக் எதிரான அடாவடித்தனங்களின் போதெல்லாம், ‘தம்பி சேர்’ இருக்கிறார் என்ற தென்புடன், புளகாங்கிதத்துடன் வாழ்ந்த மலையக மக்களின் வாழ்க்கையில், அந்நாள் இருண்ட நாளெனக் கூறுவதில் தவறில்லை. நேர்மை, தட்டிக்கேட்டல், தட்டிக்கொடுத்தல், இராஜதந்திரம் இவை எல்லாவற்றிலுமே கைதேர்ந்து, அரசியல் காய்களை, மிகச் சரியாகவும் சாதுரியமாகவும் நகர்த்தும் வல்லமையைக்…

    • 0 replies
    • 458 views
  4. இஸ்‌ரேல் மீதான காதலும் நம்மை நாதே நோதலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஒருபுறம் பலஸ்தீனம் தொடர்ந்தும் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், முள்ளிவாய்கால் பகுதி உட்பட்ட முல்லைத்தீவைத் தனிமைப்படுத்துவதாக அரசாங்கம் அறிவிக்கிறது. “காசா பற்றிப் பேசாதீர்கள்; யாழ்ப்பாணம் பற்றிப் பேசுங்கள்” என்று கண்டிக்கிறார் ஒரு தமிழ் ஊடகவியலாளர். அமெரிக்கப் பாணியில், எம்.ஏ. சுமந்திரன் கண்டனம் தெரிவிக்கிறார். இஸ்‌ரேல் மீதான காதலையும் ஒடுக்குமுறை மீதான ஆவலையும் என்னவென்று சொல்வது. இஸ்‌ரேல் மீதான ஈழத்தமிழரின் காதல் புதிதல்ல. இலங்கை தமிழரின் நிலையை இஸ்‌ரேலியருடன் ஒப்பிடுகிற ஒரு வழக்கம், 1960, 1961இல் சத்தியாக்கிரகம் தோல…

  5. கொழும்பு போட் சிற்றியும் புறக்கணிக்கப்படும் தமிழர்களும் நிதி நகரத்தை மையப்படுத்திக் கொழும்பின் புநகர் பகுதியான கோமகமவில் இயங்கும் பல்கலைக்கழகம்– அவுஸ்திரேலியா, பிரிட்டன். அயர்லான்ட். மற்றும் ஆபிரிக்கப் பல்கலைக்கழங்கள் பயிற்சிநெறிக்கான ஒத்துழைப்புகளை வழங்குகின்றன. -அ.நிக்ஸன்- கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள கடல் பிரதேசத்தை மூடி சீன அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின். வருமானங்கள் இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் உள்ளடக்கப்பட்டு வரவு செலவுத்திட்ட அறிக்கையில் காண்பிக்கப்படும் என்பதை நகரத்தின் தாய் நிறுவனமான சைனா கொமினிகேசன் கென்ச…

  6. ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமையை ஏற்று உலகின் பாதுகாப்பையும், அமைதியையும் பேணுக! 78 Views சிறீலங்கா, இலங்கைத் தீவில், இலங்கை மக்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் கட்டுப்படுத்தப்படாத நிலப்பரப்பாக, ஆனால் சீனாவின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் நிலப்பரப்பாக ஒரு நிலப்பரப்பை இந்துமா கடலின் மேல் கொழும்புத் துறைமுக நகரச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இவ்வாரத்தில் உருவாக்கியுள்ளது. அரசியல் மொழியில் கூறுவதானால், இலங்கைத் தீவில் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற அதன் வரலாற்று இறைமையாளர்களைக் கடந்து, சீன இறைமையாளர்களை இன்றைய சிறீலங்கா அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. பில்லியன் கணக்கில் பணத்தை ராஜபக்ச குடும்ப ஆட்சியினர் பெறுவதற்காக இலங்கைத் தீவி…

  7. நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்… May 22, 2021 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வைரஸ் தொற்று இருந்தது. கடந்த ஆண்டு நினைவு கூர்தலை தனிமைப்படுத்தல் சட்டங்களை முன்வைத்து அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த ஆண்டும் அவ்வாறான நிலைமைகள் உண்டு என்பதை ஊகிப்பதற்கு அதிகம் அரசியல் அறிவு தேவையில்லை. அரசாங்கம் ஒன்றில் பயங்கரவாதத் தடைச்சட்டம் அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தினூடாக நிலைமைகளைக் கையாளும் என்பது கடந்த ஆண்டே தெளிவாகத் தெரிந்தது. எனவே நினைவு கூர்தலை அனுஷ்டிக்க இரண்டு வழிகள்தான்இருந்தன. ஒன்று அதை மக்கள் மயப்படுத்துவது. இரண்டு மெய்நிகர் வெளியில் செய்வது. இதை குறித்தும் கடந்த ஆண்டிலும் நான் எழுதினேன் இந்த ஆண்டும் எழுதினேன். இது தொடர்பில் சம்பந்தப்பட…

  8. பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இஸ்‌ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, காஸாவில் இஸ்‌ரேலிய விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருப்பதாக, பதுங்கு குழிகளில் இருந்து பலஸ்தீனிய நண்பர்கள், மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தசாப்தகாலமாக நீடித்த அமைதி, முடிவுக்கு வந்துவிடுமோ என்று அரசியல் அவதானிகள் அஞ்சுகிறார்கள். சர்வதேச தலைவர்கள், இஸ்‌ரேலைத் தடவிக் கொடுத்தபடி கவலை வெளியிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்…

    • 52 replies
    • 5.4k views
  9. யார் அந்த அடுத்த தலைவர்? மக்கள் இன்னமும் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகவே தெரிகிறது. உலக நாடுகளும் இவர்களுடனேயே பேசுகின்றனர். யார் இவர்களின் அடுத்த தலைவர் என்பது முக்கியமானது.

  10. தமிழினம் கலங்கி நிற்க, தென்னிலங்கையில் விழா கொண்டாடியதை இன்றும் மறக்க முடியவில்லை – பா.அரியநேத்திரன் 12 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தாயகத்திலும் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் நாதியற்று கலங்கி நின்ற போது, தென்னிலங்கையும், அதன் ஆதரவு சக்திகளும் பல பத்தாயிரம் மக்களை படுகொலை செய்து நிறைவுக்கு கொண்டு வந்த போரின் மூலம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தியதை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  11. முள்ளிவாய்க்கால் யுத்தம்: கிழக்கு மாகாண மக்களின் மன உணர்வுகள் – மட்டு.நகரான் 4 Views தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்திய சதையும், இரத்தமும் கலந்ததாகவே இருந்து வந்தது. இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். இன்று அபிவிருத்தி பற்றி பேசும் தமிழர்கள், இந்த இழப்புகள் எதற்காக இடம் பெற்றன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மக்கள் பல இழப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்தாலும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மிகவும் மறக்கமுடியாத அல்லது இழப்பின் உச்சமாக அமைந்தது முள்ளிவாய்க்க…

  12. இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன் 31 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின் மனதை அழுத்திய போதும், இது ஒரு பெரும் தமிழ் இன அழிப்பிற்கான அத்திவாரம் என்று அன்று ஈழத் தமிழர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தாய்லாந்து, நோர்வே, யேர்மன், யப்பான் என ஆறு கட்டம் வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும், சமாந்தரமாக ரணில் அவர்களின் தந்திர நகர்வுகள் புலி எதிர்ப…

  13. முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள் புருஜோத்தமன் தங்கமயில் இஸ்‌ரேலும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும், கடந்த சில நாள்களாக ஆயுத முனையில் மீண்டும் பொருதிக் கொண்டிருக்கின்றன. இஸ்‌ரேலை நோக்கி, ஹமாஸ் இயக்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தின் காசாப் பகுதியை இடைவிடாது இஸ்‌ரேல் தாக்கி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இதுவரை 10 இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலிய தாக்குதல்களில் காசாப் பகுதியில், 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமான இந்த மோதல்களின் ஆரம்பம், மேற்குக் கரையின் ஜெருசலேமிலுள்ள பலஸ்தீனியர்களின் பிரதான பள்ளிவாசலில், ந…

  14. ரஷிய- சீனா உறவும் ஈழத்தமிழர் விவகாரமும் இலங்கையைச் சிறிய நாடென்றும் அமெரிக்காவை மாத்திரம் நம்பிக் கொண்டிருப்பதும் இந்திய இராஜதந்திரத்துக்குத் தோல்வியே. -அ.நிக்ஸன்- இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயற்பட்டாலும், சீனாவுடனான மோதலுக்கு அமெரிக்கா இந்தியாவைக் கருவியாக மாத்திரமே பயன்படுத்துகின்றது என்பது கண்கூடு. இந்திய இராஜதந்திரம் இதனை உள்ளூரப் புரிந்து கொண்டாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவை ஒரு பெரிய ஜனநாயக நாடாக ரஷியா புரிந்து கொண்டாலும் சீனாவோடுதான் உறவை வளர்க்க முற்படுகின்றது. சர்வதேச…

  15. மறக்குமா மே 18 கவிஞர் செயற்பாட்டாளர் ஜெயபாலன் மனம் திறக்கிறார்.

    • 0 replies
    • 367 views
  16. மற்றொரு இனப்படுகொலைக்கு திட்டமா? கொரோனா பாதுகாப்பில் காட்டப்படும் பாரபட்சம் எழுப்பியுள்ள கேள்விகள் – அகிலன் 27 Views சென்ற வார மின்னிதழ் கட்டுரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், கொரோனா தொற்றைப் பயன்படுத்தி மற்றொரு இனப்படுகொலைக்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா என்ற கேள்வி தமிழ்த் தரப்பினரால் எழுப்பப்பட்டிருக்கின்றது. கொரோனா தொற்று இலங்கை முழுவதிலும் வேகமாகப் பரவி வருவதற்கு அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் தான் காரணம் என்பதை சிங்கள மக்களும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளமைதான் அரசுக்கு இன்றுள்ள பிரச்சினை. சிங்கள மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ள ஒரு நிலையில்தான், வடக்கில் …

  17. மருத்துவ ஊர்தி ஓட்டுநர் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: அகிலன் எத்திராஜன் ஓவியங்கள்: ரோஹிணி மணி கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கால் துருத்திக்கொண்டிருப்பதை அவன் ஓரக் கண்ணால் பார்த்தான். அதில் அசைவு ஏதும் தெரியவில்லை. எனவே அவன் அதற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை. தற்காலிகத் தூக்குப் படுக்கைகளில் உயிரோடிருப்பவர்களை இழுத்துப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அவன் மும்முரமாயிருந்தான். எங்கு பார்த்தாலும் கதறலும், குழப்பமுமாய் இருந்தது. ஆனால் சாவைப் பார்த்துப் பார்த்து உணர்வு மரத்துப்போய் அவன் ஒரு ரோபோ போல இயங்கிக்கொண்டிருந்தான். அவன்கூட, அங்கே எளிதாக அப்படி விழுந்து கிடக்கக்கூடும் என்ற எண்ணம் பணியினூடே அவனுக்கு வந்து போனது. பன்முகத் த…

  18. கொரோனாவிற்கு பின்னரான அரசியல் போக்கும் இலங்கைத் தீவும் - யதீந்திரா கொரேனாவிற்கு பின்னரான அரசியலென்பது, ஒரு உலகளாவிய போக்கு. புதிய உலக ஒழுங்கு தொடர்பான எதிர்வுகூறல்களே மேற்படி, உலகளாவிய போக்கின் அடிப்படையாக இருக்கின்றது. இந்த எதிர்வு கூறல்கள் மூன்று விடயதானங்களை முன்னிலைப்படுத்துகின்றது. ஒன்று, இதுவரை உலகில், மேலாதிக்கம்பெற்றிருந்த உலமயமாக்கல் சூழல் கேள்விக்குள்ளாகின்றது. இரண்டு, முதலில் நாங்கள் (முதலில் எங்களின் நாடு ) என்றவாறான தேசிவாத எழுச்சி. மூன்றாவது, உலக புவிசார் அரசியலில் சீனாவின் எழுச்சி. சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் முன்னணி சிந்தனையாளர்கள் மத்தியில், இது தொடர்பில் பலவாறான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. …

  19. ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும் என்.கே. அஷோக்பரன் இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக, சிங்கப்பூர் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில், சிங்கப்பூர் ஓர் ஆச்சரியான தேசம்தான். எந்த இயற்கை வளங்களும் பெரிதாகக் கிடைக்காத, ஒரு குட்டி நகரம் அது. 1965இல் மலேசியா பாராளுமன்றத்தில் ஓர் எதிர்ப்பு வாக்குக்கூட இல்லாமல், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டபோது, அந்தக் குட்டி நகரம், தனித்ததொரு சுதந்திர நகர அரசாகியது. மலாயர்கள், சீனர்கள், தமிழர்கள் எனப் பல்வேறு இ…

    • 3 replies
    • 888 views
  20. மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! 36 Views “இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் செல்திசை வழியே மாறா உறுதியுடன் பயணித்து முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்படும் வரை எமது உறவுகளின் எண்ணம்-கனவு-இலட்சியம் என யாவுமாக இருந்தது என்னவிலை கொடுத்தேனும் விடுதலையை பெறுவது என்பதாகவே இர…

  21. போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்” பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்…

  22. ஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும் – நிலாந்தன்! May 16, 2021 கடந்த திங்கட்கிழமை வடக்கு கிழக்கிலுள்ள கத்தோலிக்க ஆயர்கள் நால்வர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையானது முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என்று தெரிவிக்கின்றது. மேலும் நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்த மத நிறுவனங்கள் எவ்வாறு முன்னுதாரணமாக செயற்படலாம் என்பதற்குரிய நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறது. இந்த அறிக்கையின் விசேஷ அம்சம் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகந்தான். வடக்கு கிழக்கிலுள்ள நான்கு ஆயர்கள் கூட்டாக இவ்வாறு கூறியிருப்பது இதுதான் முதல்தடவை. அதற்குத் தென்னிலங்கையிலிருந்து என்ன எதிர்வினை வந்திருக்கிறது என்பது இக்கட்டுரை எழுதப்படும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.